Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. சிட்னி: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸிலேயே நாம் சரிவடைந்து விட்டோம். அதில் நமது பேட்டிங் மிக மோசமாக இருந்ததே தோல்விக்கு காரணம் என்று கேப்டன் டோணி தெரிவித்துள்ளார். சிட்னியில் நடந்த 2வது டெஸ்ட் போட்டியில் ஒரு இன்னிங்ஸ், 68 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா படுதோல்வி அடைந்தது. இதுகுறித்து கருத்துத் தெரிவித்த டோணி கூறுகையில், முதல் இன்னிங்ஸிலேயே இந்தியாவின் பேட்டிங் மோசமாக இருந்தது. ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர் வீசிய சிறந்த பந்துகளில் இந்திய வீரர்கள் விரைவாக விக்கெட்களை பறிகொடுத்து விட்டனர். மேலும் ஆஸ்திரேலியாவின் முதல் இன்னிங்ஸில் கிளார்க், பாண்டிங் உள்ளிட்டோர் சிறப்பாக பேட்டிங் செய்து, ஸ்கோரை உயர்த்தினர். …

  2. அயர்லாந்து அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், 4ஆவது நாளான இன்று தமது முதலாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, 3 விக்கெட்டுக்களை இழந்து 704 ஓட்டங்கள் பெற்றிருந்த நிலையில் இன்னிங்ஸை முடிவுக்கொண்டுவந்தது. இந்தநிலையில், இலங்கை அணி, அயர்லாந்தை விட 212 ஓட்டங்கள் முன்னிலையில் உள்ளது. இலங்கையின் முதல் இன்னிங்ஸில் மொத்தமாக நால்வர் சதங்களை பெற்றதுடன், அவர்களில் இருவர் இரட்டை சதங்களை பெற்றனர். அதன்படி, அணித்தலைவர் திமுத் கருணாரத்ன 115 ஓட்டங்களையும், நிஷான் மதுஷ்க 205 ஓட்டங்களையும், குசல் மெண்டிஸ் 245 ஓட்டங்களையும், எஞ்சலோ மெத்யூஸ் ஆட்டமிழப்பின்றி 100 ஓட்டங்களையும் பெற்றனர். இந்த நிலையில், அயர்லாந்து அணி தமது இரண்டாவது இன்னிங்ஸை காலி மைதானத்தில் த…

  3. முதல் இன்னிங்ஸில் வலுவான நிலையில் இந்தியா அவுஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முதலாம் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸுக்காக 2 விக்கெட்டுக்களை இழந்து 215 ஓட்டங்களை குவித்துள்ளது. அவுஸ்திரேலியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணியானது அவுஸ்திரேலியாவுடன் மூன்று இருபதுக்கு 20, நான்கு டெஸ்ட் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் இருபதுக்கு 20 தொடர் ஏற்கனவே சமநிலையில் முடிவடைந்துள்ள நிலையில், நடைபெற்று முடிந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளும் 1:1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. இந் நிலையில் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டி இன்று மெல்போர்னில் ஆரம்பானது. இப் போட்டியில் …

  4. முதல் இரண்டு தினங்களில் எட்டு புதிய சாதனைகள் வடக்கிற்கு இரண்டு சாதனைகள் சொந்தமாகின கொழும்பு சுக­த­தாஸ விளை­யாட்­ட­ரங்­கிலும் திய­கம மஹிந்த ராஜபக்ஷ விளை­யாட்­ட­ரங்­கிலும் நடை­பெற்று வரும் தேசிய கனிஷ்ட மெய்வல்­லுநர் போட்­டி­களின் முதல் இரண்டு தினங்­களில் சாத­னைகள் பல நிலைநாட்டப்பட்­டுள்­ளன. கொழும்பு சுக­த­தாஸ விளை­யாட்­ட­ரங்கில் நடை­பெற்ற 20 வய­துக்­குட்­பட்ட பெண்களுக்கான கோலூன்றிப் பாய்­தலில் வலல்ல ஏ. ரட்­நா­யக்க வித்தியாலயத்தைச் சேர்ந்த ஹர்­ஷனி மற்றும் தெல்­லிப்­பழை மகா­ஜனா கல்லூ­ரியைச் சேர்ந்த ஜெ. அனிதா ஆகிய இரு­வரும் 3.10 மீற்றர் உயரம் பாய்ந்து புதிய சாத­னை­களை நிலை­நாட்­டினர். எனினும் ஒரே தாவலில் 3.10 மீற்றர் உய­ரத்தைத் தாவிய ஹர்­ஷனி தங்கப் பதக்­கத்தை…

  5. முதல் இளையோர் ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடர் இலங்கையில் இம்மாதம் ஆரம்பம் 19 வயதிற்குட்பட்டவர் களுக்கான இளையோர் ஆசியக் கிண்ணக் கிரிக்கெட் தொடர் இம்மாதம் இலங்கையில் ஆரம்பமாகவுள்ளது. ஆசிய கிரிக்கெட் சம்மே ளனத்தினால் முதல் முறையாக அறிமுகப்படுத்தப்படும் இளையோர்களுக்கான ஆசியக் கிண்ணக் கிரிக்கெட் தொடர் இம்மாதம் 15ஆம் திகதி முதல் 23ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது. இதில் இலங்கை, இந் தியா, நேபாளம், மலேசியா, பாகிஸ்தான், பங்களா தேஷ், ஆப்கனிஸ்தான் மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகள் மோதுகின்றன. இந்தத் தொடரின் போட்டி கள் கொழும்பு, காலி, மாத் தறை, மொறட்டுவை ஆகிய இடங்களிலுள்ள மைதானங்க ளில் நடைபெறவுள்ளன. இதன் இறுதிப்போட்டி மட்டும் கொழும்பு ஆர்.பிரேமதாச சர்வதேச கி…

  6. முதல் ஏ.டி.பி பட்டத்தை வென்றார் முர்ரே! லண்டனில் நடைபெற்ற ஏ.டி.பி டென்னிஸ் இறுதிப் போட்டியில், செர்பியாவின் நோவக் ஜோகோவிச்சை வீழ்த்தி பட்டம் வென்றார் பிரிட்டனின் ஆண்டி முர்ரே. இந்த வெற்றியின் மூலம், உலகத் தரவரிசையின் முதலிடத்தைத் தக்கவைத்துக் கொண்டார் முர்ரே. இறுதிப் போட்டியில் 6-3, 6-4, என்ற நேர் செட்களில் ஜோகோவிச்சை தோற்கடித்து முதல் முறையாக ஏடிபி பட்டத்தை வென்றுள்ளார் முர்ரே . இது பற்றி முர்ரே கூறுகையில், 'இன்று வெற்றி பெற்று, உலக அளவில் முதலிடத்தில் நீடிப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. ஜோகோவிச்சுக்கு எதிராக விளையாடுவது எப்போதுமே சிறப்பு வாய்ந்தது தான்' என்று கூறியுள்ளார். போட்டியில் தோல்வி அடைந்தது பற்றி ஜோகோவிச் கூறுகையில், 'ஆட்டத்த…

  7. முதல் ஒரு நாள் போட்டி ஆப்கானிஸ்தானிடம் வெஸ்ட்இண்டீஸ் அதிர்ச்சி தோல்வி செயிண்ட் லூசியாவில் நடந்த ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி தோல்வி அடைந்தது. செயிண்ட்லூசியா: ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டி கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடுகிறது. இதில் முதல் போட்டி நேற்று செயிண்ட் லூசியாவில் நடந்தது. டாஸ் ஜெயித்து முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் 50 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 212 ரன் எடுத்தது. ஜாவித் ஆட்டி 81 ரன் எடுத்தார். பின்னர் விளையாடிய வெஸ்ட்இண்டீஸ் அணி விக்கெட்டுகளை இழந்து திணறியது. சு…

  8. முதல் ஒருநாள் போட்டி ; ஆப்கானிஸ்தானிடம் பங்களாதேஷ் அதிர்ச்சி தோல்வி (படங்கள் இணைப்பு) பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் போட்டியில் ஆப்கானிஸ்தான் 2 விக்கட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது. இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி சகல விக்கட்டுகளையும் இழந்து 208 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக்கொண்டது. பங்களாதேஷ் அணி சார்பில் மொஷ்டைக் ஹுசைன் 45 ஒட்டங்களை பெற்றுக்கொண்டார். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி 49.4 ஓவர்களில் 212 ஓட்டங்களை பெற்று வெற்றிபெற்றது. ஆப்கானிஸ்தான் அணி சார்பில் அஸ்கார் ஸ்டனிக்ஷாய் 57 ஒட்டங்களை பெற்றுக்கொண்டார். http://www…

  9. முதல் ஒருநாள் கிரிக்கெட்: வெ.இண்டீசை 45 ரன் வித்தியாசத்தில் வீழத்தியது இங்கிலாந்து வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் மோர்கனின் சதத்தால் இங்கிலாந்து அணி 45 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மூன்று போட்டி கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விளையாடுவதற்காக இங்கிலாந்து அணி வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ளது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் போட்டி ஆன்டிகுவாவில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி ராய், பில்லிங்ஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். ராய் 13 ரன்னில் அவுட் ஆனார். அடுத்து வந்த ஜோ…

  10. முதல் ஒருநாள் போட்டியில் இலங்கையை வென்றது பாகிஸ்தான் 2014-08-23 19:01:13 இலங்கை அணியுடனான முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி 4 விக்கெட்களால் வெற்றியீட்டியுள்ளது. ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச கிரிக்கெட் அரங்கில் நடைபெற்ற இப்போட்டியில்முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 45 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 275 ஓட்டங்களைப் பெற்றது. அணித்தலைவர் ஏஞ்சலோ மெத்யூஸ் 65 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 9 பெண்டரிகள் உட்பட 89ஓட்டங்களைம் மஹேல ஜயவர்தன 66 பந்துகளில் 63 ஓட்டங்களையும் பெற்றனர். அஷான் பிரியஞ்சன் அதிரடியாக துடுப்பெடுத்தாடி 15 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 39 ஓட்டங்களையும் குமார் சங்கக்கார 40 பந்துகளில் 25 ஓட்டங்களையும் பெற்றனர். …

  11. முதல் ஒருநாள் போட்டியில் பில்லிங்ஸ் சதம் வீணானது - இங்கிலாந்தை வீழ்த்தியது ஆஸ்திரேலியா ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. 20 ஓவர் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்த ஆஸ்திரேலியா அடுத்து 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஆடுகிறது. இந்நிலையில், இங்கிலாந்து-ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மான்செஸ்டரில் நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து, ஆஸ்திரேலியா அணி களமிறங்கியது. அந்த அணியின் ஸ்டோய்னிஸ் 43 ரன்னில் அவுட்டானார். மிட்செல் மார்ஷ் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தார். அவர் 73 ரன்னில் ஆட்டமிழந்தார். மேக்ஸ்வெல் 59 …

  12. மொராக்கோ ஓப்பன் டெனிஸ் போட்டியில் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டத்தில் இந்திய வீராங்கனை சானியா மிர்சா ஆர்ஜென்டீனா வீராங்கனையிடம் அதிர்ச்சித் தோல்வியடைந்துள்ளார். மொராக்கோவில் சர்வதேச பெண்கள் ஓப்பன் டெனிஸ் போட்டி நடந்து வருகிறது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டத்தில் உலகத் தரவரிசையில் 51 ஆவது இடத்தில் இருக்கும் இந்திய வீராங்கனை சானியா மிர்சா 213 ஆவது இடத்தில் உள்ள ஆர்ஜென்டீனா வீராங்கனை எமிலியா மா சாலெர்னியை எதிர்கொண்டார். காயம் காரணமாக 2 மாதத்துக்கு மேலாக ஓய்விலிருந்து களம் திரும்பிய சானியாவால் தகுதிச் சுற்றில் வெற்றி பெற்று முன்னேறிய ஆர்ஜென்டீனா வீராங்கனைக்கு முதல் செட்டில் ஈடுகொடுத்து ஆட முடியவில்லை. ஆனால், 2 ஆவது மற்றும் கடைசி செட்டில் சானிய…

  13. முதல் டி 20 ஆட்டம் பாகிஸ்தானை வீழ்த்தியது நியூஸிலாந்து: 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி சான்ட்னர் பந்தில் ஸ்டெம்பிங் ஆன பாகிஸ்தான் அணியின் கேப்டன் சர்ப்ராஸ் அகமது. - படம்: ஏஎப்பி பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் டி 20 ஆட்டத்தில் நியூஸிலாந்து அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வெலிங்டனில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 19.4 ஓவர்களில் 105 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. 5.4 ஓவர்களில் 22 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்து கடும் சரிவை சந்தித்தது பாகிஸ்தான் அணி. தொடக்க வீரர்களான பஹர் ஸமான் 3, உமர் அமின் ரன் ஏதும் எட…

  14. முதல் டி20 கிரிக்கெட்: வங்காள தேசத்தை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது நியூசிலாந்து கேன் வில்லியம்சின் அபார ஆட்டத்தால் முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் வங்காள தேசத்தை 6 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது நியூசிலாந்து. வங்காள தேசம் அணி மூன்று வகை கிரிக்கெட் தொடரிலும் விளையாடுவதற்காக நியூசிலாந்து சென்றுள்ளது. ஏற்கனவே முடிவடைந்த இரு அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடரை நியூசிலாந்து 3-0 எனக் கைப்பற்றியது. இந்நிலையில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் இன்று தொடங்கியது. நேப்பியரில் நடைபெற்ற முதல் போட்டியில் வங்காள தேசம் அணி டாஸ் வென்று பேட்டிங் தேர…

  15. முதல் டெஸ்டில் சதம்பெறும் வாய்ப்பை தவறவிட்டார் பாக்கிஸ்தானின் பகர் ஜமான். பாக்கிஸ்தானின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் பகர் ஜமான் தனது முதல் டெஸ்ட் போட்டியில் சதம் பெறும் வாய்ப்பை தவறவிட்டுள்ளார். அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது போட்டியில் பகர் ஜமான் 94 ஓட்டங்களிற்கு ஆட்;டமிழந்தார். அபுதாபியில் ஆரம்பமாகியுள்ள இரண்டாவது டெஸ்டில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாக்கிஸ்தான் அணி தனது முதல் ஐந்து விக்கெட்களையும் 57 ஓட்டங்களிற்குள் இழந்து தடுமாறியது. அவுஸ்திரேலிய அணியின் சுழற்பந்து வீச்சாளர் நதன்லயன் அடுத்தடுத்து நான்கு விக்கெட்களை வீழ்த்தி பாக்கிஸ்தான் அணியை நிலைகுலையச்செய்தார். எனினும் ஆறாவது விக்கெட்டிற்காக இணைந்த பகர் ஜமானும் பாக்கிஸ்தான் அணியின் தல…

  16. முதல் டெஸ்ட் - வங்காள தேசத்தை முதல் இன்னிங்சில் 43 ரன்னில் சுருட்டியது வெஸ்ட் இண்டீஸ் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் 43 ரன்களில் வங்காள தேசம் சுருண்டது. #WIvBAN #TestSeries ஆண்டிகுவா: வங்காள தேசம் வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து இரண்டு டெஸ்ட் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் ஆண்டிகுவா நகரில் இன்று இரவு தொடங்கியது. டாஸ் வென்ற வெ…

  17. முதல் டெஸ்ட் போட்டி பற்றி கிரிக்கெட் வாரியங்கள் முடிவெடுக்க வேண்டும்: சுனில் கவாஸ்கர் பிலிப் ஹியூஸ் மரணத்தை அடுத்து இந்தியா-ஆஸ்திரேலியா மோதும் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடும் மனநிலையில் வீரர்கள் நிச்சயம் இருக்க மாட்டார்கள் என்கிறார் சுனில் கவாஸ்கர். “விளையாடுவது என்பது கடினம். இன்னும் ஒரு வாரம் இருக்கிறது, ஆனாலும் எந்த வீரரும் விளையாடும் எண்ணத்தில் இருக்க மாட்டார்கள். ஒருவருக்கும் விளையாடுவதற்கான மனநிலை இருக்காது. நியூசவுத்வேல்ஸ்-தெற்கு ஆஸ்திரேலியா போட்டி கைவிடப்பட்டது. ஆகவே முதல் டெஸ்ட் போட்டியை ரத்து செய்வதா வேண்டாமா என்பது பற்றி வாரியங்கள் கலந்து முடிவெடுக்க வேண்டும். பிலிப் ஹியூஸ் மரணம் ஆழமான துயரங்களை ஏற்படுத்துகிறது. எந்த ஒரு விளையாட்டு வீரர் பற்றியு…

  18. இந்தியாவுக்கு எதிராக ட்ரென்ட் பிறிட்ஜ் விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் முதலாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியில் இங்கிலாந்தின் ஜேம்ஸ் அன்டர்சன் மற்றும் ஜொனத்தன் ரூட் ஆகியோர் பத்தாவது விக்கட்டுக்கான இணைப்பாட்டத்தில் புதிய பதிவு ஒன்றினை நிலைநாட்டியுளனர். நேற்று ஜூலை 10 இருவரும் இணைந்து 198 ஓட்டங்களைப் பெற்றிருந்தனர். இங்கிலாந்து தனது ஒன்பதாவது விக்கட்டை 298 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது இழந்தது. இறுதியாக அன்டர்சன் ஆட்டமிழந்தபோது இங்கிலாந்து 496 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. இதற்கு முந்தைய பதிவாகச் சரியாக ஒருவருடத்துக்கு (9 ஜூலை 2013) முன்னதாக இதே ட்ரென்ட் பிறிட்ஜ் அரங்கில் இங்கிலாந்துக்கு எதிராக ஆஸியின் அகர் மற்றும் ஹியூஸ் இணை 163 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. பத்தாவது விக்கட் இ…

  19. முதல் டெஸ்ட்: தென் ஆப்பிரிக்காவை 263 ரன்களுக்கு சுருட்டியது நியூஸிலாந்து அற்புதமாக வீசி 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய டிரெண்ட் போல்ட். | படம்: ஏ.எப்.பி. டர்பனில் நேற்று தொடங்கிய தென் ஆப்பிரிக்கா-நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் 2-ம் நாளான இன்று தென் ஆப்பிரிக்கா தனது மீதமுள்ள 2 விக்கெட்டுகளையும் இழந்து 263 ரன்களை எடுத்துள்ளது. நேற்று போதிய வெளிச்சமின்மையால் 77.4 ஓவர்களில் ஆட்டம் முடிக்கப்பட்ட போது தென் ஆப்பிரிக்கா 236/8 என்று இருந்தது, இன்று காலை வந்தவுடனேயே டேல் ஸ்டெய்ன் 2 ரன்களில் சவுதி பந்தில் பவுல்டு ஆனார். ரபாதா 32 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாக திகழ பியட் 9 ரன்களில் போல்ட்டிடம் வீழ்ந்தார். 87.4 ஓவர்களில் 263 ரன்களுக்கு தென் …

  20. முதல் டெஸ்ட்டிற்கு தோனி இல்லை: ஆஸி. தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தோனி விளையாடவில்லை. இந்த டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கபட்டுள்ளது. பிரிஸ்பன் டெஸ்ட் போட்டியில் விராட் கோலி கேப்டனாக செயலாற்றுவார். வலது கை மணிக்கட்டு காயம் காரணமாக இலங்கைக்கு எதிராக முதல் 3 போட்டிகளில் விளையாடாத தோனி, பிறகு கடைசி 2 போட்டிகளிலும் விளையாட முடியாத நிலை ஏற்பட்டது இந்த நிலையில் டிசம்பர் 4-ஆம் தேதி பிரிஸ்பன் மைதானத்தில் தொடங்கும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தோனி விளையாடமாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆஸி. தொடருக்கான இந்திய டெஸ்ட் அணி: தோனி (கேப்டன்), விராட் கோலி, ஷிகர் தவன், முரளி விஜய், கே.எல். ராக…

  21. 07 SEP, 2023 | 10:16 AM இங்கிலாந்து மகளிர் அணிக்கு எதிரான மூன்றாவதும் இறுதியுமான இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியில் இலங்கை மகளிர் அணி 7 விக்கெட்டுக்களால் முதல் தடவையாக இங்கிலாந்தை வென்றுள்ளது. இங்கிலாந்தில் இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை மகளிர் அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது. அதற்கமைய, முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து மகளிர் அணி, 19 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 116 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இந்த நிலையில், 117 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை மகளிர் அணி 17 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுகளை இழந்து வெற்றியிலக்கை அடைந்தத…

  22. முதல் தர 20 க்கு 20 கிரிக்கட் போட்டிகளில் இலங்கையர் சாதனை ..! முதல் தர 20 க்கு 20 கிரிக்கட் போட்டிகளில் இலங்கையர் ஒருவர் சாதனை படைத்துள்ளார். அதிகளவான பதினாறு 6 ஓட்டங்களை பெற்றதன் மூலம் இந்த சாதனை ஏற்படுத்தப்பட்டுள்ளது. சிங்கள விளையாட்டுக் கழகம் சார்பாக துடுப்பெடுத்தாடிய தசுன் ஷானக என்ற வீரர் சராசன்ஸ் விளையாட்டுக் கழகத்திற்கு எதிராக இந்த சாதனையை புரிந்துள்ளார். இதன்படி. 46 பந்துகளில் 123 ஓட்டங்களை பெற்றார். இதன் மூலம் 20 ஓவர்களில் சிங்கள விளையாட்டுக் கழகம் ஆறு விக்கட் இழப்பிற்கு 251 ஓட்டங்களை பெற்றது. இதேவேளை. தசுன் ஷானகவின் சாதனை உலக நிலையில் முதல் தர 20 க்கு 20 …

  23. முதல் தர போட்டியிலாவது அனுமதியுங்கள்: கெஞ்சும் சல்மான் பட் பாகிஸ்தான் கிரிக் கெட் அணி 2010-ஆம் ஆண்டு இங்­கி­லாந்திற்கு சுற்­றுப்­ப­யணம் செய்­தது. அப்­போது மேட்ச் பிக்­சிங்கில் ஈடு­பட்­ட­தாக சல்மான் பட், முக­மது ஆசிப் மற்றும் முக­மது சமி ஆகியோர் மீது குற்­றம்­சாட்­டப்­பட்­டது. இந்த குற்­றச்­சாட்டு நிரூ­பிக்­கப்­பட்­டதால் அவர்­க­ளுக்கு ஐந்து வரு­டங்கள் கிரிக்கெட் விளை­யாட தடை விதிக்­கப்­பட்­டது. இந்த தடை இன்­றுடன் முடி­வ­டை­கி­றது. இவர்கள் மூன்று பேரும் உட­ன­டி­யாக சர்­வ­தேச அணியில் சேர்த்­துக்­கொள்ள தகுதி பெற­மாட்­டார்கள் என்று கடந்த புதன்­கி­ழமை பாகிஸ்தான் கிரிக்கெட் சபை அறி­வித்­தது. மேலும், அவர்­க­ளுக்­கான விரி­வான நட­வ­டிக்கை திட்­டத்­தையும் அறி­வித்­தது. அ…

  24. முதல் பத்து இடங்களுக்குள் ஆப்கானிஸ்தான் சர்வதேச கிரிக்கெட் சபையின் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளுக்கான தரவரிசைப் பட்டியலில் முதற்தடவையாக முதற் பத்து இடங்களுக்குள் ஆப்கானிஸ்தான் அணி நுழைந்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை (25), சிம்பாப்வேக்கு எதிரான முதலாவது ஒருநாள் சர்வதேசப் போட்டியில் வெற்றியடைந்ததைத் தொடர்ந்தே, பத்தாவது இடத்திலுள்ள சிம்பாப்வேயை ஆப்கானிஸ்தான் பிரதீயீடு செய்துள்ளது. எனினும் தற்போது இடம்பெற்றுக் கொண்டிருக்கும் சிம்பாப்வேக்கு எதிரான ஐந்து ஒருநாள் சர்வதேசப் போட்டிகள் கொண்ட தொடரில் வெற்றி பெற்றால் மட்டுமே ஆப்கானிஸ்தான் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளுக்கான தரவரிசையில் பத்தாவது இடத்தில் நீடிக்க முடியும். இந்தத் தொடரில் தோல்வியடையும் சந்தர்ப்பத்தில்…

  25. முதல் பந்திலிருந்தே அடிக்க வேண்டும் என்றாலும் தயார்: முரளி விஜய் முரளி விஜய். | கோப்புப் படம். டெஸ்ட் போட்டிகளில் வேறொரு தளத்துக்கு உயர்ந்துள்ள முரளி விஜய், தற்போது ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். தனது தேர்வு குறித்து மகிழ்ச்சி தெரிவித்த முரளி விஜய், ஈ.எஸ்.பி.என்.-கிரிக் இன்போ இணையதள பேட்டியில் கூறும் போது, “அந்தந்த கிரிக்கெட் வடிவத்துக்குத் தக்கவாறு என்னை வெளிப்படுத்திக் கொள்ள போகிறேன், டெஸ்ட் போட்டிகளில் இயல்பான ஆட்டத்தை கட்டுப்படுத்திக் கொள்வேன் என்று ஏன் கூறினேன் என்றால், அங்கு எதிரணியினருக்கு நிரூபிக்க வேண்டிய தேவை எதுவும் இல்லை. சீரான முறையில் ரன்களை எடுக்க வேண்டும் என்பதே டெஸ்டில் குறிக்கோள். அதற்காக எனது இயல்பான ஆட்டத…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.