Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. வடக்கின் மாபெரும் போர் ;ஒருநாள் போட்டியில் சென்.ஜோன்ஸ் கல்லூரி 34 ஓட்டங்களால் வெற்றி யாழ். மத்திய கல்லூரிக்கும் சென்.ஜோன்ஸ் கல்லூரி அணிக்கும் இடையிலான வடக்கின் மாபெரும் போர் போட்டி, சென்.ஜோன்ஸ் அணியின் வெற்றியுடன் முடிவடைந்ததையடுத்து, இரு அணிகளுக்கும் இடையிலான 18 ஆவது வருட ஒருநாள் போட்டி நேற்று 14 ஆம் திகதி சனிக்கிழமை சென்.ஜோன்ஸ் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது, நாணயச் சுழற்சியில் வென்ற யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்ய, முதலில் களமிறங்கிய சென்.ஜோன்ஸ் கல்லூரி அணி, 36.3 ஓவர்களில் 94 ஓட்டங்களுக்குச் சகல விக்கெட்களையும் இழந்தது. துடுப்பாட்டத்தில் தனுஜன் 14, டினோசன் 13 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். பந்துவீச்சில் யாழ்ப்…

  2. கடும் கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் வடக்கின் மாபெரும் போர் துடுப்பாட்டப் போட்டி மதுபானம் அருந்திய நிலையில் வருபவர்கள் மைதானத்துள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனவும் பொலிஸாரின் கடுமையான பாதுகாப்புக்கு மத்தியில் கடும் கட்டுப்பாடுகளுடன் வடக்கின் மாபெரும் போர் துடுப்பாட்டப் போட்டி நடைபெறவுள்ளதாக சென்.ஜோன்ஸ் கல்லூரியின் பிரதி அதிபர் வி.எஸ்.டி.துஸிதரன் தெரிவித்தார். வடக்கின் மாபெரும் போரின் ஏற்பாடுகள் குறித்த ஊடகவியலாளர் சந்திப்பு வெள்ளிக்கிழமை (27) யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் இடம்பெற்ற வேளையில் அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் கூறுகையில், வடக்கின் மாபெரும் போர் எதிர்வரும் மார்ச் மாதம் 5, 6 மற்றும் 7 ஆம் திகதிகளில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் நடைபெறு…

  3. வடக்கிற்கு பயணித்துள்ள ரக்பி விளையாட்டு ‘ரக்பியில் இணைவோம்’ (Get into Rugby) திட்டத்தின் ஐந்தாவது நிகழ்ச்சி யாழ்ப்பாணம் சென் ஜோன்ஸ் கல்லூரி மற்றும் கிளிநொச்சி மத்திய கல்லூரி மைதானங்களில் பெப்ரவரி 14ஆம் மற்றும் 15ஆம் திகதிகளில் நடைபெற்றன. இலங்கையின் அனைத்து பகுதிகளுக்கும் ரக்பி விளையாட்டை விரிவுபடுத்தும் நோக்கில் இடம்பெறும் இந்த நிகழ்ச்சி பாடசாலை மாணவர்களுக்கு அப்பால் பெரியவர்கள் பலரையும் கவர்ந்தது. கடந்த வாரத்தின் ‘ரக்பியில் இணைவோம்’ நிகழ்ச்சியின் முதல் நாள் நிகழ்வாக (14) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நிகழ்வில் இராணுவ அதிகாரிகள், பெற்றோர்கள் மற்றும் இளையவர்கள், பெரியவர்கள் உட்பட 300க்கும் அதிகமானவர்கள் பங்கேற்றனர்.…

  4. இவ்விரு கல்லூரிகளுக்குமிடையில் கடந்த 1917 ஆம் ஆண்டிலிருந்து ஆரம்பிக்கப்பட்ட கிரிக்கெட் போட்டி போர்க்காலங்களைத் தவிர மற்றைய காலங்களில் ஒழுங்காக நடைபெற்று வந்த வேளை கடந்த  2014 ஆம் ஆண்டு இடம்பெற்ற போட்டியின் போது இடம்பெற்ற அசம்பாவிதம் காரணமாக 2014 ஆம் ஆண்டிலிருந்து 2019 ஆம் ஆண்டு வரை போட்டிகள் இடைநிறுத்தி வைக்கப்பட்டு 2019 ஆம் ஆண்டு ராஐன் கதிர்காமர் வெற்றிக்கிண்ணத்திற்கான 50 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்களை கொண்ட போட்டி மாத்திரம் நடைபெற்றது. இவ்வருடம் 2020 இல் 103 ஆவது வருட இரு நாள் போட்டியும் 28 ஆவது தடவையாக ராஐன் கதிர்காமர் வெற்றிக்கிண்ணத்திற்கான 50 மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்களை கொண்ட கிரிக்கெட் போட்டி எதிர்வரும் 07 திகதி மாரச் மாதம் இடம்பெறவுள்ளது. யா…

    • 5 replies
    • 720 views
  5. வடக்கு மாணவி ஆஷிகா பளுதூக்கல் போட்டியில் தேசிய சாதனை Weiterempfehl(நெவில் அன்தனி) விளையாட்டுத்துறை அமைச்சும் விளையாட்டுத்துறை அபிவிருத்தி திணைக்களமும் ஏற்பாடு செய்துள்ள 44ஆவது தேசிய விளையாட்டு விழாவில் ஓர் அம்சமான பெண்களுக்கான பளுதூக்கலில் வடக்கு மாகாணத்தின் விஜயபாஸ்கர் ஆஷிகா மூன்று புதிய தேசிய சாதனைகளை நிலைநாட்டி தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார். இவ் வருட தேசிய விளையாட்டு விழாவில் வடக்கு மாகாணத்துக்கு கிடைத்த முதலாவது தங்கப் பதக்கம் இதுவாகும். மேலும் பெண்களுக்கான பளுதூக்கலில் வடக்கு மாகாணத்துக்கு இரண்டு வெண்கலப் பதக்கங்களும் கிடைத்துள்ளன. பொலன்னுறுவை விளையாட்டுத் தொகுதி உள்ளக அரங்கில் நடைபெற்றுவரும் பளுதூக்கல் போட்டிகளின் ஆரம…

  6. வடக்கு, கிழக்கில் கராத்தே வெற்றியாளர்கள் மட்டக்களப்பில் சர்வதேச பயிற்சியாளர்களினால் நடாத்தப்பட்டுவந்த பயிற்சி முகாம் நிறைவு நிகழ்வு மற்றும் திறந்த கராத்தே போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கான பதக்கங்கள் வழங்கும் நிகழ்வும் நேற்று முன்தினம் நடைபெற்றது. கடந்த 03 ஆம் திகதி தொடக்கம் மட்டக்களப்பு மாவட்ட சோட்டக்கான் கராத்தே சங்கத்தின் ஏற்பாட்டில் சர்வதேச கராத்தே வீரர்களினால் பயிற்சி வகுப்புகள் மட்டக்களப்பு சோட்டாக்கான் கராத்தே சங்க பாடசாலையில் நடைபெற்று வந்தது. இந்த பயிற்சி வகுப்பில் வடக்கு, கிழக்கு மாகாணத்தில் இருந்து சுமார் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டிருந்தனர். இந்த பயிற்சி வகுப்புகளை சர்தேச கராத்தே சாம்பியனும் சர்வதேச கராத்தே சங்கத்…

  7. வடக்கு, கிழக்கில் கால்பந்து நிலைமை எவ்வாறு உள்ளது? இலங்கை தேசிய கால்பந்து அணிக்கு வடக்கு மற்றும் கிழக்கு மாகாண வீரர்களை உள்வாங்குவதற்கான தேர்வு முகாம்கள் (Trials) இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் (FFSL) ஏற்பாட்டில் இரண்டு மாகாணங்களுக்கும் வெவ்வேறு கட்டங்களாக கடந்த வாரம் நடைபெற்று முடிந்திருக்கின்றன. கடந்த காலங்களில் சர்வதேசப் போட்டிகள் எதிலும் பங்கு கொள்ளாத இலங்கை கால்பந்து அணி, FIFA தரவரிசையில் வரலாற்றில் மிகவும் மோசமான பதிவாக தற்போது 200ஆவது இடத்தில் உள்ளது. இவ்வாறான ஒரு நிலையில், இலங்கையின் கால்பந்து விளையாட்டில் பல முன்னேற்றங்களை மேற்கொள்வதற்கான திட்டங்களை வகுத்து இருக்கின்ற இலங்கை கால்பந்து சம்மேளனம், அதன் முதற்க…

  8. வடக்கு, கிழக்கு பிறீமியர் லீக் உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டி 66 போட்டிகள், பிரமாண்டமான பரிசுத் தொகை இலங்கை உதைபந்தாட்டச் சம்மேளனத்தின் அங்கீகாரத்துடன் 'IBC தமிழ்' நிறுவனத்தினால் நடாத்தப்படும் வடக்கு ,கிழக்கு பிறீமியர் லீக் உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டி கடந்த மே மாதம் வெகு விமரிசையாக ஆரம்பாமாகி யாழ்ப்பாணத்தில் நடபெற்று வருகின்றது. ஓகஸ்ட் மாதம் 26ம் திகதி வரை நடைபெறவுள்ள இச்சுற்றுப்போட்டியில் வடக்கு, கிழக்கு மாகாணங்களிலிருந்து மொத்தமாக 12 அணிகள் கலந்து கொள்கின்றன. …

  9. வடமாகாண உதைபந்தாட்ட சுற்றுப்போட்டிகள்! இலங்கை விமானப்படையின் 73 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு வடமாகாணத்தில் உள்ள உதைபந்தாட்ட சங்கங்களிற்கிடையிலான உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி இன்று (10) வைபவ ரீதியாக ஆரம்பமானது. இலங்கை விமானப்படையின் 73 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, இலங்கை விமாப்படைத் தளபதி எயா மார்சல் உதயநி ராஜபக்சவின் ஆலோசனைக்கு அமைவாக "கொமான்டோஸ் கப்" வெற்றிக்கிண்ண நட்புறவு போட்டியின் ஆரம்ப நிகழ்வு இன்று இடம்பெற்றது. 11 அணிகள் மோதிக்கொள்ளும் குறித்த போட்டி எதிர்வரும் மார்ச் மாதம் முதல் வாரத்தில் நிறைவடையவுள்ளது. குறித்த ஆரம்ப நிகழ்வில் இரணைமடு விமானப்படை கட்டளை அதிகாரி குருப் கப்டன் சுலோசன மறப்பன கலந்துகொண்டு ஆரம்பித்து வைத்தா…

  10. இலங்கையை பிரதிபலித்து பாகிஸ்தானில் நடைபெற்ற சர்வதேச கிக் பொக்சிங் குத்துச்சண்டை போட்டியில் வவுனியாவை சேர்ந்த ஏழு வீரர்கள் கலந்து கொண்டு ஏழு பதக்கங்களை இலங்கைக்கு பெற்றுக்கொடுத்துள்ளனர். பாகிஸ்தான் லாகூரில் அமைந்துள்ள கடாபி விளையாட்டு மைதானத்தின் உள்ளக விளை யாட்டு அரங்கில் கடந்த 23 ஆம் திகதி தொடக்கம் 26 ஆம் திகதி வரை நடைபெற்ற சர்வதேச கிக் பொக்சிங் குத்துச்சண்டை போட்டியில் கலந்து கொண்ட வடக்கு மாகாண ஏழு குத்துச் சண்டை வீரர்கள் இலங்கைக்கு நான்கு தங்கப்பதக்கங்களையும் மூன்று வெள்ளி பதக்கங்களையும் பெற்றுக் கொடுத்துள்ளனர். வடக்கு மாகாண கிக் பொக் சிங் குத்துச்சண்டை பயிற்று விப்பாளரும் வடக்கு மாகாண ஏழாம் அறிவு தற்காப்பு கலை சங்கத்தின் தலைவருமான எஸ். நந்தகுமாரினால் பயிற்…

    • 0 replies
    • 300 views
  11. வடமாகாண தடகளப்போட்டிகளுக்கான ஒத்திகை ஆரம்பம் வடமாகாண தடகள போட்டிக்கான ஒத்திகைப் பயிற்சிகள் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளன. எதிர்வரும் 30 ஆம் திகதியிலிருந்து அக்டோபர் மாதம் 2 ஆம் திகதி வரை கோலாகலமாக நடைபெறவுள்ளது இந் நிலையில் யாழ் .துரையப்பா விளையாட்டரங்கில் அதற்கான ஒத்திகைகள் நடைபெற்று வருகின்றன . 30 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ள நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன , பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்மந்தன், வடக்கு முதல்வர் விக்னேஸ்வரன், வடக்கு ஆளுநர் ரெஜினோல்ட் கூரே, வடக்கு கல்வி அமைச்சர் குருகுலராஜா, ஆகியோர் பங்குபற்றி நிகழ்வை ஆரம்பித்து வைக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கத…

  12. வடமாகாண பளுதூக்கும் போட்டியில் வெற்றி பெற்ற வவுனியா வீராங்கனைகள் By T YUWARAJ 05 SEP, 2022 | 04:42 PM K.B.சதீஸ் வடமாகாண ரீதியில் இடம்பெற்ற பளுதூக்கும் போட்டியில் வவுனியா மாவட்ட பெண்கள் பிரிவு இரண்டாம் இடத்தினையும், ஆண்கள் பிரிவு மூன்றாம் இடத்தினையும் பெற்றுள்ளனர். யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் நேற்று (04.09.2022) இடம்பெற்ற பளுதூக்கும் போட்டியில் பெண்கள் பிரிவில் வவுனியாவை சேர்ந்த தி.கோசியா 45 kg எடைப்பிரிவில் 71kg தூக்கி 3ஆம் இடத்தையும், கு.குழவிழி 59kg எடைப்பிரிவில் 83kg தூக்கி 2ஆம் இடத்தையும், பா.செரோண்யா 71kg எடைப்பிரிவில் 90kg தூக்கி 3ஆம் இடத்தையும் பெற்றுள்ளனர். அத…

  13. Published By: VISHNU 12 MAY, 2025 | 07:17 PM 2025 ஆம் ஆண்டுக்கான வட மாகாண விளையாட்டு திணைக்களத்தால் நடத்தப்பட்ட யூடோ போட்டியில் முல்லைத்தீவு மாவட்டத்தின் ஆண்கள் பெண்கள் இரு அணிகளும் 1ஆம் இடத்தை தமதாக்கி சாதனை படைத்துள்ளனர். கிளிநொச்சி உள்ளக அரங்கில் வடமாகாண விளையாட்டு திணைக்களத்தால் 10.05.2025 அன்று நடத்தப்பட்ட வடக்கின் 5 மாவட்டங்களும் பங்குபற்றியதான வட மாகாண யூடோ போட்டியில் முல்லைத்தீவு மாவட்டத்தின் ஆண்கள் அணியும், பெண்கள் அணியும் வட மாகாணத்தில் 1ஆம் இடத்தை பெற்றுக்கொண்டனர். ஆண்கள் பிரிவில் 1ஆம்இடம் முல்லைத்தீவு மாவட்டம் 4தங்கம் 1 வெள்ளி 3வெண்கலம் 2ஆம் இடம் கிளிநெச்சி மாவட்டம் 2தங்கம் 1வெள்ளி 2வெண்கலம் 3ஆம் இடம் வவுனியா மாவட்டம். 1தங்கம்,4வெள்ளி,4வெண்கலம் 4ஆவது ம…

  14. யாழ். சென். ஜோன்ஸ் - குரு­நாகல் புனித ஆனாள் போட்டி வெற்றிதோல்வியின்றி முடிவு யாழ். சென் ஜோன்ஸ் அணிக்கும் குரு­நாகல் புனித ஆனாள் அணிக்கும் இடையில் வார இறு­தியில் நடை­பெற்ற பாட­சாலை கிரிக்கட் போட்டி வெற்­றி­தோல்­வி­யின்றி முடி­வ­டைந்­தது. இந்தப் போட்­டியில் துடுப்­பாட்­டத்தில் எவரும் குறிப்­பிட்டுக் கூறு­ம­ள­வுக்கு பிர­கா­சிக்­கா­த­போ­திலும் செய்ன் ஜோன்ஸ் வீரர்­க­ளான யதுசன் வசந்தன்இ கானா­மிர்தன் அரு­ளா­னந்தம் ஆகிய இரு­வரும் ஓர் இன்­னிங்ஸில் தலா 5 விக்கெட்­டுக்களைக் கைப்­பற்றி பந்­து­வீச்சில் திற­மையை வெளிப்­ப­டுத்­தினர். நத்தார் பண்­டி­கைக்கு முன்னர் கண்டி திரித்­துவ கல்­லூ­ரியை அதிர்ச்சி அடை யச் செய்து வெற்­றி கொண்­டி­ருந்த செய்ன் ஜோன்ஸ…

  15. இரணைமடு வெற்றிக்கிண்ணத்தை கிளிநொச்சி மாவட்ட செயலக அணி தனதாக்கிக் கொண்டுள்ளது. கிளிநொச்சி மாவட்ட நீர்பாசன திணைக்களித்தின் மென்பந்து குழுமத்தினால் முதன் முறையாக நடாத்தப்பட்ட இரணைமடு வெற்றி கிண்ணத்தினை கிளிநொச்சி மாவட்ட செயலக அணியினர் தமதாக்கி உள்ளனர். குறித்த மென்பந்து சுற்றுப்போட்டியின் இறுதி போட்டி நிகழ் நேற்று கிளிநொச்சி உதயதாரகை விளையாட்டு மைதானத்தில் மாலை இடம்பெற்றது. முதலில் களம் இறங்கிய கிளிநொச்சி மாவட்ட நீர்பாசான திணைக்கள அணியினர் பத்து பந்து பறிமாற்றத்தின் இறுதியில் 70ஒட்டங்களை பெற்றனர். தொடர்ந்து களமிறங்கிய கிளிநொச்சி மாவட்ட செயலக அணியினர் பத்து பறிமாற்றத்தின் நிறைவில் 71 ஒட்டங்கள் பெற்றது இரணைமடு வெற்றிகின்னத்தை தமதாக்…

  16. வடமாகாண விளையாட்டு செய்திகள் 2018 யாழ்ப்பாண மத்­திய கல்­லூரி இன்­னிங்­ஸால் வெற்றி யாழ்ப்பாண மத்­திய கல்­லூரி இன்­னிங்­ஸால் வெற்றி இலங்கை பாட­சா­லை­கள் துடுப்­பாட்­டச்­சங்­கம் நடத்­தும் 19 வய­துப்­ப­ிரிவு அணி­க­ளுக்கு இடை­யில் அண்­மை­யில் இடம்­பெற்ற ஆட்­டத்­தில் யாழ்ப்­பா­ணம் மத்­திய கல்­லூரி அணி இன்­னிங்­ஸால் வெற்­றி­பெற்­றது. யாழ்ப்­பா­ணம் மத்­திய கல்­லூ­ரி­யின் மைதா­னத்­தில் இந்த ஆட்­டம் இடம்­பெற்­றது. யாழ்ப்­பா­ணம் மத்­திய கல்­லூரி அணியை எதிர்த்து அக்­கு…

  17. வடமாகாணத்தின் சிறந்த அணியாக சென்.ஜோன்ஸ் கல்லூரி அணி வடமாகாணத்தின் 19 வயதுப்பிரிவு சிறந்த துடுப்பாட்ட அணியாக யாழ். சென். ஜோன்ஸ் கல்லூரி அணி தெரிவு செய்யப்பட்டுள்ளது. சிங்கர் நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்ட மாகாணத்தின் சிறந்த அணிகளுக்கான தெரிவிலேயே சென். ஜோன்ஸ் கல்லூரி அணி வடமாகாணத்தில் சிறந்த அணியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான விருது கடந்த ஜுன் 30 ஆம் திகதி கொழும்பு பி.எம்.ஜ.சி.எச் இல் வைத்து வழங்கப்பட்டுள்ளது. நூற்றாண்டுகள் கடந்த வரலாற்றினைக் கொண்ட வடக்கின் மாபெரும் போர்களில் பங்குபற்றும் அணிகளில் ஒன்றான சென். ஜோன்ஸ் கல்லூரி அணி, இவ்வருடம் இடம்பெற்ற வடக்கின் மாபெரும் போரில் வெற்றிபெற்றிருந்தது. வெளிமாவட்ட அணிகளுக்கிடையிலான போட்டியில் மவுண்டன்லெவினி…

  18. வடமாகாணப் பாடசாலைகளுக்கிடையிலான 16 ஆவது விளையாட்டுத்திருவிழா : மன்னார் புனித சவேரியார் ஆண்கள் கல்லூரி சாதனை படைப்பு 23 AUG, 2025 | 02:26 PM 2025 ஆம் ஆண்டுக்கான வடக்கு மாகாணப் பாடசாலைகளுக்கு இடையிலான 16வது விளையாட்டுத்திருவிழா 16.08.2025 தொடக்கம் 20.08.2025 வரை ஐந்து நாட்கள் வெகு விமர்சையாக நடத்தப்பட்டது. இதில் மன்/ புனித சவேரியார் ஆண்கள் கல்லூரி 05 தங்கப்பதக்கம், 03 வெள்ளிப்பதக்கம், 04 வெண்கலப்பதக்கம், 02 நான்காம் இடம், 03 ஐந்தாம் இடம், 01 ஆறாம் இடத்தினை பெற்று மொத்தமாக 102 புள்ளிகளை பெற்று ஆண்கள் பிரிவில் முதலாவது இடத்தினைப் பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளனர். மேலும் அஞ்சல் ஓட்ட சம்பியன் ஆகவும் 14 வயது மற்றும் 20 வயது பிரிவில் வடமாகாண சிறந்த அணி என்னும் விருதையும் தட்ட…

  19. வட்பேர்ட்டிடம் தோற்றது லிவர்பூல் இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கு இடையிலான பிறீமியர் லீக் தொடரில், வட்பேர்ட்டின் மைதானத்தில் நேற்று இரவு நடைபெற்ற அவ்வணி உடனான போட்டியில் இங்கிலாந்து பிறீமியர் லீக் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் காணப்படுகின்ற லிவர்பூல் தோற்றது. இப்போட்டியின் முதலாவது பாதியில் கோல் பெறும் பல வாய்ப்புகளை வட்பேர்ட் கொண்டிருந்தபோதும், அவ்வணியின் அணித்தலைவரும் முன்களவீரருமான ட்ரோய் டீனியின் கோல் கம்பத்தை நோக்கிய உதையை லிவர்பூலின் கோல் காப்பாளர் அலிஸன் அபாரமாகத் தடுத்த நிலையில் போட்டியின் முதற்பாதி முடிவில் வட்பேர…

    • 0 replies
    • 471 views
  20. வட்மோருக்கு ICCஇல் பதவி வியாழக்கிழமை, 08 மே 2014 பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளராக இருந்து அண்மையில் தனது பதவிக்காலம் நிறைவடைந்ததை அடுத்து பதவியில் இருந்து விலகிய டேவ் வட்மோர், ஆப்கானிஸ்தான், ஐக்கிய அரபு ராஜ்ஜியம், அயர்லாந்து, ஸ்கொட்லாந்து அணிகளின் மேம்படுத்தலில் ஈடுபடுவார் என சர்வதேசக் கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது. சர்வதேசக் கிரிக்கெட் சபையின் அதி உயர் திறமைகளை வெளிக்கொண்டு வருவதற்கான குழுவின் முகாமையாளர் உடன் இணைந்து செயற்ப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2015ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் உலககக் கிண்ணத்திற்கு குறிப்பிட்ட நான்கு அணிகளையும் தயார்ப்படுத்தும் நோக்கிலேயே டேவ் வட்மோர் இந்தக் குழுவில் இணைக்கப்பட்டுள்ளார். 14ஆம் திகதி ஸ்கொட்லாந்தில் தன…

  21. வனிந்து பந்து வீச்சில் மிரட்ட இந்தியாவை வீழ்த்தி தொடரைக் கைப்பற்றியது இலங்கை இந்திய அணிக்கு எதிரான 3 ஆவதும் இறுதியுமான இருபதுக்கு - 20 போட்டியில் இலங்கை அணி 7 விக்கெட்டுகளால் வெற்றிபெற்று 2-1 என தொடரைக் கைப்பற்றியது. இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட இருபதுக்கு - 20 தொடரில் பங்கேற்று விளையாடுகின்றது. இதன் முதல் இரு போட்டிகளில் இலங்கை மற்றும் இந்திய அணிகள் ஒவ்வொரு போட்டியில் வெற்றி பெற்று தொடரில் 1-1 என சமநிலை பெற்றிருந்தன. இந்நிலையில், இரு அணிகளுக்குமிடையிலான 3 ஆவதும் இறுதியுமான இருபதுக்கு - 20 போட்டி நேற்று கொழும்பு ஆர். பிரேமதாஸ மைதானத்தில் இடம்பெற்றது. இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி …

  22. வன்னி பெருநிலப்பரப்பின் சுழற் கேடயம் கிண்ணத்தை சுவீகரித்தது ஐயனார் விளையாட்டுக்கழகம்.! வன்னி பெருநிலப்பரப்பின் சுழற் கேடயத்துக்கான மாபெரும் கடினப்பந்து போட்டி இன்று வவுனியா நகரசபை மைதானத்தில் இடம்பெற்ற போட்டியில் ஐயனார் விளையாட்டுக்கழகம் கிண்ணத்தை சுவீகரித்ததுக் கொண்டது. வன்னி பெருநிலப்பரப்பின் சுழற் கேடயம் கிண்ணத்திற்கான கடினப்பந்து துடுப்பாட்ட போட்டியானது, ஐயனார் விளையாட்டுக் கழகத்திற்கும் ஜங்ஸ்ரார் விளையாட்டுக்கழகத்திற்கும் இடையில் தொடர்ச்சியாக நான்காவது வருடமான இடம்பெற்று வருகின்றது. ஐயனார் விளையாட்டுக்கழகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்று வரும் இப்போட்டியில் நாணயசுழற்சியில் வெற்றிபெற்ற ஐயனார் விளையாட்டுக்கழக அணியின் தலைவர் அனுசன் களத்தடுப்பை தெரிவு செய…

  23. வன்னியின் போரை வென்றது கிளிநொச்சி இன்னிங்ஸ் வெற்றியாகவும் பதிவானது ‘வன்னியின் போர்’ என வர்ணிக்கப்படும் கிளிநொச்சி மகா வித்தியாலய அணிக்கும் புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி அணிக்கும் இடையிலான துடுப்பாட்டத்தில் கிளிநொச்சி மகா வித்தியாலயம் வெற்றிபெற்றது. இந்த ஆட்டம் புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரியின் மைதானத்தில் நேற்று, இன்று என இரு தினங்கள் நடைபெற்றது. நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற கிளிநொச்சி மகா வித்தியாலய அணி களத்தடுப்பை தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி அணி சகல இலக்குகளையும் இழந்து 107 ஓட்டங்களைப் பெற்றது. கபிலன் 48 ஓட்டங்களையும், சுஜீபன் 16 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில…

  24. வம்புக்கு இழுத்த கிப்ஸ்; சூதாட்டத்தில் நான் சம்பாதிக்கவில்லை: அஸ்வின் காட்டம் அஸ்வின், கிப்ஸ் (கோப்புப் படம்) இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வினை கிண்டல் செய்து ட்வீட் செய்து தென் ஆப்பிரிக்க முன்னாள் வீரர் ஹெர்சல் கிப்ஸ் பதிவிட்டதற்கு, கோபமடைந்த அஸ்வின் சரியான பதிலடி கொடுத்து அதிர்ச்சி அடைய வைத்தார். இந்திய ஆல்ரவுண்டர் அஸ்வின் நைக் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அந்த நிறுவனம் அறிமுகம் செய்த புதிய ஷூ குறித்த வீடியோவை ட்விட்டரில் இன்று பதிவிட்டார். அதில், ''நண்பர்களே என்னிடம் புதிய நைக் ஷூ இருக்கிறது. இந்த ஷூவின் வடிவமைப்பு, நிறம், ஃபோம் தொழில்நுட்பத்தின் ம…

  25. வயசானாலும் உன் 'லைனும்... லெங்த்’தும்... வாவ் நெஹ்ரா! நெகிழும் நெட்டிசன்ஸ் #Nehra #AshishNehra தான் செய்யும் தொழிலை நேசிப்பவன், தன் உடல், பொருள், ஆவி எல்லாவற்றையும் அவற்றுக்காக தரத் துணிவான் எனச் சில பெரியோர்கள் சொல்லியிருக்கிறார்கள். அப்படி தனது நாடி, தசை, நாளம், புத்தி எல்லாவற்றிலும் தனது தொழிலை நேசித்த, அதில் வெற்றியடைய முயற்சித்து கொண்டே இருக்கும் ஒரு மகத்தான கிரிக்கெட் வீரர் ஆஷிஷ் நெஹ்ரா. அவரை கிண்டல் செய்யலாம், கேலி பண்ணலாம் ஆனால் புறக்கணிக்கவே முடியாது. ரசிகர்களிடம் எப்போதும் பெரிய வரவேற்பும் இருந்தது இல்லை, ரசிகர் பட்டாளமும் இல்லை, விளம்பர வருவாயும் கிடையாது, ஆனாலும் கிரிக்கெட்டை நேசித்த, அணியை நேசித்த, தேசத்தை நேசித்த பிளேயர் நெஹ்ரா…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.