விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7840 topics in this forum
-
-
October 22, 2018 இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுசபையின் தலைமை நிதி அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுசபையில்; இடம்பெறவிருந்த பாரிய நிதி மோசடி தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் அவர் இன்று இரவு அவர் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார். இங்கிலாந்து அணியுடன் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற போட்டித் தொடருக்கான ஒளிபரப்பு உரிமத்தை பெற்றுக்கொள்வது தொடர்பில் சுமார் 5 மில்லியன் அமெரிக்க டொலர்களை மோசடி செய்ய முற்பட்டார் எனக் குற்றம் சுமத்தப்பட்டே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்ப…
-
- 0 replies
- 258 views
-
-
கேட்ச்சுக்கு முயன்று மோதியதில் விபரீதம்: பெங்கால் இளம் கிரிக்கெட் வீரர் மரணம் வங்காளத்தைச் சேர்ந்த அங்கிட் கேஷ்ரி என்ற வீரர் கிரிக்கெட் போட்டி ஒன்றில் பந்தை கேட்ச் பிடிக்கச் சென்ற போது சவுரப் மொண்டால் என்ற வீரருரன் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் தலையில் பலத்த அடிபட்டு இன்று காலை, சிகிச்சை பலனின்றி, மரணமடைந்தார். இவருக்கு வயது 20. மைதானத்தில் மயங்கிச் சரிந்த இவரது மூச்சை மீட்க மற்றொரு வீரர் முயற்சி செய்தார். ஆனால் பலனளிக்கவில்லை. உடனடியாக இவர் கடந்த வெள்ளிக்கிழமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலன்ன்றி இன்று (திங்கட் கிழமை) மாரடைப்பால் காலமானார். கடந்த வெள்ளிக்கிழமை வங்காள கிரிக்கெட் லீக் டிவிஷன் 1 போட்டியில் கிழக்கு வங்காள அணியும், பவானிப…
-
- 0 replies
- 279 views
-
-
நாட்டிங்காம்: உள்ளூர் ‘டுவென்டி–20’ போட்டியில் அசத்திய இங்கிலாந்து வீரர் அலெக்ஸ் ஹேல்ஸ், தொடர்ந்து 6 சிக்சர் விளாசி சாதனை படைத்தார். இங்கிலாந்தில் நாட்வெஸ்ட் ‘டுவென்டி–20’ தொடர் நடத்தப்படுகிறது. இதன் லீக் போட்டியில் நாட்டிங்காம்ஷயர், வார்விக் ஷயர் அணிகள் மோதின. வருண் சோப்ரா 80 ரன்கள் விளாச, வார்விக் ஷயர் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 141 ரன்கள் எடுத்தது. ஹேல்ஸ் அபாரம்: பின் களமிறங்கிய நாட்டிங்காம்ஷயர் அணிக்கு வெசல்ஸ் 30 ரன்களில் ஆட்டமிழந்தார். அதிரடி காட்டிய ஹேல்ஸ், ரான்கின் வீசிய 11வது ஓவரின் கடைசி 3 பந்தில் சிக்சர் விளாசினார். பின் ஜாவித் வீசிய அடுத்த ஓவரில் தான் சந்தித்த 3 பந்திலும் வரிசையாக சிக்சர் அடித்தார்…
-
- 1 reply
- 400 views
-
-
'' எனக்கு பின்னால் சுரேஷ் ரெய்னா இருப்பதால் தனி தைரியம் பிறந்தது!'' -தோனி வங்கதேசத்துக்கு எதிராக நடந்த தொடரில் சுரேஷ் ரெய்னா 6வது நிலையில் களமிறங்கினார். இதனால் இந்திய அணிக்கு அந்த இடத்தில் விளையாட ஒரு அனுபவ வீரர் கிடைத்துள்ளதாக கேப்டன் தோனி கூறியுள்ளார். வங்கதேசத்துக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டி முடிந்த பிறகு தோனி செய்தியாளர்களிடம் கூறுகையில், '' என்னை பொறுத்த வரை 4-வது விக்கெட்டுக்கு அதிகமாக களமிறங்கியதில்லை. 5 வீரர்களுக்கு அப்புறமும் அனுபவம் வாய்ந்த ஒரு வீரர் தேவைப்பட்டார்.. இதனால்தான் சுரேஷ் ரெய்னாவை பின்னால் களமிறக்க முடிவெடுத்தோம். இதன் மூலம் 6-ம் நிலையில் ஒரு அனுபவ வீரர் ரெய்னா மூலம் அணிக்கு கிடைக்கிறார். இவரைப் போலவே 7-வது விக்கெட்டாக களமிறங்க நல்ல வீ…
-
- 0 replies
- 270 views
-
-
பெர்த்தில் ஜஸ்டின் லாங்கர், ஜெஃப் மார்ஷிடம் கவுதம் கம்பீர் தீவிர பயிற்சி ஜெப் மார்ஷ், ஜஸ்டின் லாங்கர், கவுதம் கம்பீர். இந்திய அணியில் மீண்டும் நுழைய தீவிரமாக முயற்சி எடுத்துவரும் கவுதம் கம்பீர், இதற்காக, ஆஸ்திரேலியா சென்று ஜஸ்டின் லாங்கர், மற்றும் ஜெஃப் மார்ஷ் மேற்பார்வையில் பயிற்சியில் ஈடுபட்டார். இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படத்துடன் இட்டுள்ள பதிவில், “பெர்த்தில் ஜெஃப் மார்ஷ், மற்றும் லாங்கருடன். மிகச்சிறந்த மனிதர்கள், என்னை வரவேற்றனர். பயிற்சிக்காக நான் இங்கு இருக்கக் காரணமான இருவருக்கும் நன்றி” என்று குறிப்பிட்டுள்ளார். இப்போது ஜஸ்டின் லாங்கர், ஜெஃப் மார்ஷ் மேற்பார்வையில் அவர் தனது பயிற்சி முறைகளில் ஜிம்னாஸ்டிக்ஸ் மற்றும் கலப்பு போர்க்கலைகள…
-
- 0 replies
- 367 views
-
-
நிர்வாக மாற்றத்துடன் சென்னை, ராஜஸ்தான் அணிகள் ஐ.பி.எல்.லில் தொடரும்? தடை விதிக்கப்பட்ட சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகளின் நிர்வாகத்தை மாற்றிவிட்டு ஐ.பி.எல். தொடரில் பங்கேற்கவைக்க ஆலோசிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. சூதாட்ட விவகாராத்தால் சென்னை, ராஜஸ்தான் அணிகளுக்கு 2 ஆண்டுகள் ஐ.பி.எல். போட்டியில் பங்கேற்கத் தடை விதித்து லோதா கமிட்டி உத்தரவிட்டது. இந்த அணிகளுக்கு விதிக்கப்பட்ட தண்டணை குறித்து ஐ.பி.எல். அமைத்துள்ள குழுவினர் ஆராய்ந்து வருகின்றனர். ஐ.பி.எல். தொடரை பொறுத்த வரை சென்னை, ராஜஸ்தான் அணிகள் முக்கிய இடம் வகிப்பவை. இந்த அணிகள் தொடரில் இடம் பெறாவிட்டால் ஐ.பி.எல். தொடரின் மவுசு பாதிக்கப்படும் என்று ஐ.பி.எல். நிர்வாகக் குழு கருதுகிறது. எனவே இந்த இரு அண…
-
- 1 reply
- 243 views
-
-
ஆஸி., அணி அறிவிப்பு சிட்னி: வங்கதேச தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் அறிமுக வீரர்களான ஆன்ட்ரூ பேகேட், கேமிரான் பான்கிராப்ட் இடம் பிடித்துள்ளனர். அடுத்த மாதம் வங்கதேசம் செல்லும் ஆஸ்திரேலிய அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் சிட்டகாங்கில் வரும் அக்., 9ல் துவங்குகிறது. இரண்டாவது டெஸ்ட் மிர்புரில் அக்., 17ல் ஆரம்பமாகிறது. டெஸ்ட் தொடருக்கு முன், ஆஸ்திரேலிய அணி, வங்கதேச கிரிக்கெட் போர்டு லெவன் அணியுடன் மூன்று நாள் (அக்., 3–5) பயிற்சி ஆட்டத்தில் பங்கேற்கிறது. இத்தொடருக்கான 15 பேர் கொண்ட அணியை கிரிக்கெட் ஆஸ்திரேலியா (சி.ஏ.,) நேற்று அறிவித்தது. இதில் அறிமுக வீரர்களான வேகப்பந்துவீச்சாளர் ஆன்ட்ரூ பேகேட், துவக்க வீரர் கேமிரான் பான்கிராப்ட் தேர்வு ச…
-
- 0 replies
- 303 views
-
-
படத்தின் காப்புரிமை Gareth Copley-IDI/IDI via Getty Images ஜுலை 14, 2019 - இனிவரும் ஆண்டுகளில் கிரிக்கெட் உலகம் எண்ணற்ற முறைகள் நினைவுகூரும் நாளாக அமைய ஏராளமான வாய்ப்புகள் உண்டு. இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற பரபரப்பு மிகுந்த உலகக்கோப்பை இறுதி போட்டி டை ஆனதால், சூப்பர் ஓவர் முறையில் ஆட்டத்தின் முடிவை நிர்ணயிக்க தீர்மானிக்கப்பட்டது. முதலில் பேட் செய்த இங்கிலாந்து 15 ரன்கள் எடுக்க, 16 ரன்கள் எடுத்தால் நியூசிலாந்து உலகக்கோப்பையை வெல்லும் என்ற நிலையில் ரசிகர்கள் மிகவும் ஆவலாக காத்திருந்…
-
- 0 replies
- 899 views
-
-
ஹர்பஜன் கிரிக்கெட் விதிகளை மீறுவது இது முதல் தடவையல்ல [31 - January - 2008] [Font Size - A - A - A] இனவெறிக் குற்றச்சாட்டு விவகாரத்தில் இந்திய வீரர் ஹர்பஜன்சிங் அபராதத்தோடு தப்பித்திருக்கிறார். ஆனால் ஹர்பஜன்சிங் ஐ.சி.சி.விதியை மீறுவது இது ஒன்றும் புதிதல்ல. கிரிக்கெட்டை ஆக்ரோஷமாகவும், உணர்ச்சிமயமாகவும் ஆடக்கூடிய வீரர்களில் ஹர்பஜன் சிங்கும் ஒருவர். இதுவே அவருக்கு ஆபத்தையும் விளைவித்து விடுகிறது. 1998 ஆம் ஆண்டு ஏப்ரல் 22 ஆம் திகதி ஷார்ஜாவில் நடந்த அவுஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியின் போது பொண்டிங் விக்கெட்டை வீழ்த்திய அவர் உணர்ச்சியின் வேகத்தில் சில வார்த்தைகளைக் கொட்டி விட்டார். இதற்காக அவருக்கு போட்டி நடுவர் தலாத் அலி 50 சதவீதம் அபராதமும் ஒரு ஒரு நாள் போட்…
-
- 0 replies
- 918 views
-
-
என் வழி தனி வழி.. ரஜினியின் பன்ச் வசனத்தை அடிக்கடி கூறி சிலாகிக்கும் டோணி! சென்னை: கிரிக்கெட் வீரர் டோணி என் வழி தனி வழி என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பஞ்ச் வசனத்தை கூறி வருவதாக பந்து வீச்சாளர் அஷ்வின் தெரிவித்துள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பஞ்ச் வசனங்கள் பலருக்கும் பிடித்திருக்கும். அதில் ஒரு குறிப்பிட்ட வசனம் கிரிக்கெட் வீரர் டோணிக்கு பிடித்துள்ளது தற்போது தான் தெரிய வந்துள்ளது. இது குறித்து பந்துவீச்சாளர் அஷ்வின் கூறுகையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழகத்தில் பெரிய மனிதர். அவரை பலரும் காமெடி சூப்பர் ஸ்டார் என்கிறார்கள். இதை தென்னிந்தியா பக்கம் சென்று கூற முடியாது. உண்மையில் அவர் நல்ல நல்ல விஷயங்களை கூறுபவர். டோணி அடிக்கடி ரஜினியின் பஞ்ச் வசனமான எ…
-
- 0 replies
- 332 views
-
-
இலங்கை அணி முதலில் துடுப்பாட்டம் இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது. இரு அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று காலை கொழும்பு பி. சரவணமுத்து மைதானத்தில் ஆரம்பமாகவிருந்த நிலையில் மழை காரணமாக போட்டியின் நாணயச்சுழற்சி தாமதமாகியது. இன்றைய போட்டியில் இலங்கை அணியின் இளம் சுழற்பந்து வீச்சாளர் அகில தனஞ்ஜயவுக்கு பதிலாக அனுபவ சுழற்பந்துவீச்சாளர் டில்ருவன் பெரேரா இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது . http://www.dailyceylon.com/188267/
-
- 0 replies
- 726 views
-
-
கழகங்களுக்கிடையிலான AIA பிரீமியர் கிரிக்கெட் போட்டி ஆரம்பம் கழகங்களுக்கிடையிலான AIA பிரீமியர் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் கிரிக்கெட் போட்டித் தொடர் எதிர்வரும் 27 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. நாடளாவிய ரீதியில் 14 கழகங்கள் பங்கேற்கும் AIA பிரீமியர் கிரிக்கெட் தொடர் 11 நாட்கள் வெவ்வேறு மைதானங்களில் இடம்பெறுகின்றது. குழுமட்ட போட்டிகள் அனைத்தும் டிசம்பர் மாதம் 16 ஆம் திகதி வரை இடம்பெறும். முதலாவது அரையிறுதிப் ப…
-
- 0 replies
- 473 views
-
-
சங்காவை துரத்தும் டோனி January 18, 2016 விக்கட் கீப்பராக செயல்பட்டடுவரும் டோனி, ஜார்ஜ் பெய்லியை மின்னல் வேகத்தில் ஸ்டம்பிங் செய்து ஆட்டமிழக்க செய்தார். இதன் மூலம் சர்வதேச போட்டிகளில் அதிக ஸ்டம்பிங் செய்த விக்கட் கீப்பர்கள் வரிசையில் டோனி (415 போட்டி, 138 ஸ்டம்பிங்) 2வது இடம்பிடித்தார். இலங்கை அணியின் சங்கக்காரா 594 போட்டிகளில் 139 ஸ்டம்பிங்கள் செய்து முதலிடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்க்கது http://www.onlineuthayan.com/sports/?p=7975
-
- 0 replies
- 469 views
-
-
இலங்கை அணியை கட்டியெழுப்பும் ஆற்றல்மிக்க பயிற்றுநர் கிறஹம் ஃபோர்ட் - ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் திலங்க சுமதிபால சர்வதேச கிரிக்கெட் பயிற்றுநர்கள் பன்னிருவருடன் நடத்திய கலந்தாலோசனைகளின் பின்னர் அதிசிறந்தவரை தெரிவு செய்ததாக, இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்றுநராக கிறஹம் போர்ட் ஃபோர்ட் நியமிக்கப்பட்டமை குறித்து கருத்து வெளியிட்ட ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் திலங்க சுமதிபால தெரிவித்தார். ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் கேட்போர் கூடத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர்களுடான சந்திப்பில் பேசியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார். …
-
- 1 reply
- 265 views
-
-
’’ஓய்வு குறித்து டோனியே முடிவெடுக்க வேண்டும்’’ ரவி சாஸ்திரி February 19, 2016 இந்திய அணித் தலைவர் டோனியின் ஓய்வு குறித்து முடிவெடுக்கும் உரிமை அவருக்கு மட்டுமே உண்டு என பயிற்சியாளரும் இயக்குனருமான ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். ஆசியக் கிண்ணம் மற்றும் 20 ஓவர் உலகக்கிண்ணத்திற்காக இந்திய அணி சிறப்பாக தம்மை தயார்படுத்தி வருவதாக தெரிவித்த ரவி சாஸ்திரி, 6-வது இடத்தில் இருந்து நிலைத்து நின்று ஆடுவது மிக சிரமமான ஒன்று என்றார், ஆனால் அதை சவாலாக ஏற்றுக்கொண்டு திறம்பட ஒருவர் செய்துவருவது மகிழ்ச்சியளிக்கிறது என்றார். சாதனையாளர்களையும் வெற்றிபெற்றவர்களையும் விமர்சிப்பதை விட்டுவிட வேண்டும் என தெரிவித்த அவர், பல ஆண்டுகளாக இந்திய அணியில் 6-வது இடத்தில் நிலைத்த…
-
- 0 replies
- 313 views
-
-
'நியூசிலாந்து அணிக்கு நஞ்சூட்டப்பட்டது' 1995ஆம் ஆண்டு இடம்பெற்ற றக்பி உலகக் கிண்ண இறுதிப் போட்டிக்கு முன்னதாக, நியூசிலாந்து அணி வீரர்களுக்கு நஞ்சூட்டப்பட்டதாக, நெல்சன் மண்டேலாவின் முன்னாள் மெய்ப்பாதுகாவலரொருவர் தெரிவித்துள்ளார். சர்ச்சைகளை ஏற்படுத்திய இந்தப் போட்டி தொடர்பாக, இது மேலும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த இறுதிப் போட்டியில், ஜோனா லொமு தலைமையிலான நியூசிலாந்து அணி, அதிக வெற்றிவாய்ப்புகளைக் கொண்ட அணியாகக் களமிறங்கியிருந்தது. ஆனால், இறுதிப் போட்டியில் வைத்து தென்னாபிரிக்காவிடம் 12-15 என்ற புள்ளிகள் கணக்கில் தோல்வியடைந்திருந்தது. இறுதிப் போட்டிக்கு 48 மணிநேரங்கள் முன்னதாக, நியூசிலாந்து அணி வீரர்களில் பலர், உணவு நஞ்சானதன் காரணம…
-
- 0 replies
- 392 views
-
-
5 ஜாம்பாவான்கள்... அசாத்திய திறமைகள்! நாக் அவுட் நாயகன் முகமது அலி, கிரிக்கெட் பிதாமகர் டான் பிராட்மேன், பீலே, தியான்சந்த் இவர்கள் எல்லாம் ஒருகாலத்தில் கொடிகட்டிப் பறந்தவர்கள். விளையாட்டுத் துறையில் இவர்கள் நுழைந்தது குறித்தும், சாதித்தது குறித்தும் சில நினைவலைகள் இங்கே.... மேஜிக்மேன் தியான்சந்த் இந்திய ஹாக்கியில் எத்தனையோபேர் வந்து சென்றிருக்கலாம். சிலர் எப்போதாவது நினைவுக்கு வரலாம். சிலர் காலப் போக்கில் மறக்கடிக்கப்பட்டிருக்கலாம். ஆனால் தியான் சந்த் பெயர் மட்டும் இன்றளவும் மறக்கப்படாமல் உள்ளது. அவரது பெயரில் இன்றளவும் பல விருதுகள் வழங்கபடுகின்றன. உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்சியில், 1905 ஆகஸ்ட் 29-ம் தேதி, ராணுவக் குடும்பத்தில்…
-
- 0 replies
- 723 views
-
-
ரியோ ஒலிம்பிக்கில், ஆடவர் ரக்பி செவன்ஸ் போட்டியில், பிஜி அணி தங்கம் வென்று அசத்தியுள்ளது. இதில் ஆச்சர்யம் என்னவென்றால், எந்த நாட்டிடம் பல ஆண்டு காலம் அடிமைப்பட்டு கிடந்ததோ, அதே பிரிட்டன் அணியை, 43-7 என்ற புள்ளி கணக்கில் துவைத்து எடுத்தது பிஜி. முதல்பாதியில், பிரிட்டன் அணியை ஒரு புள்ளி கூட எடுக்க விடாமல், 29-0 என்ற புள்ளிக்கணக்கில் பிஜி முன்னிலையில் இருந்தது. இரண்டாவது பாதியில்தான், பிரிட்டன் அணி போராடி 7 புள்ளிகளை பெற்றது. இறுதியில் ஒலிம்பிக்கில் முதல் தங்கப் பதக்கத்தை கைப்பற்றி அசத்தியது பிஜி . கடந்த 1956 ம் ஆண்டு முதல், ஒலிம்பிக்கில் பிஜி பங்கேற்று வருகிறது. 12 ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்றும் ஒரு முறை கூட பிஜி வீரர்கள் 'போடியம் 'ஏறியது கிடையாது. ஆனால் இந்…
-
- 2 replies
- 451 views
-
-
இங்கிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் தொடர்: 20 பேர் கொண்ட பாகிஸ்தான் அணி விபரம் அறிவிப்பு! இங்கிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும் 20 பேர் கொண்ட பாகிஸ்தான் அணி விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது. அசார் அலி தலைமையிலான பாகிஸ்தான் அணியில் பாபர் அசாம், முகமது அப்பாஸ், வஹாப் ரியாஸ், யாசிர் ஷா, சர்பராஸ் அகமது உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர். இதற்கிடையில், மீதமுள்ள ஒன்பது வீரர்கள் ஃபக்கர் சமான், ஹைதர் அலி, இப்திகர் அகமது, இமாத் வாசிம், குஷ்டில் ஷா, முகமது ஹபீஸ், முகமது அமீர், முகமது ஹஸ்னைன் மற்றும் மூசா கான் ஆகியோர் தொடர்ந்து ரி-20 தொடருக்கான அணியுடன் பயிற்சி பெறுவார்கள். முழுமையான அணி விபரம் இதோ. அசார் அலி, பாபர் அசாம், அபிட் …
-
- 0 replies
- 455 views
-
-
ஒருநாள் போட்டிகளில் மிகச்சிறந்த அணித்தலைவர்கள் வரிசையில் 2 ம் இடத்திற்கு முன்னேறினார் டோனி. ஒருநாள் போட்டிகளில் மிகச்சிறந்த அணித்தலைவர்கள் வரிசையில் 2 ம் இடத்திற்கு முன்னேறினார் டோனி. சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் மிகச்சிறந்த ஒருநாள் போட்டி அணித்தலைவர் கள் வரிசையில் 2 ம் இடத்திற்கு டோனி முன்னேறியுள்ளது உள்ளார். நேற்றைய நியூசிலாந்து அணியுடனான போட்டியில் பெற்ற வெற்றியின் மூலமே டோனி இந்த சாதனை படைத்தார். 107 வெற்றிகள் பெற்றிருந்த முன்னாள் அவுஸ்திரேலிய அணியின் தலைவர் அலன் போர்டரின் சாதனையை முறியடித்து டோனி தனது 195 வது போட்டியில் 108 வது வெற்றி பெற்றுக்கொண்டார். இந்தப் பட்டியலில் 230 போட்டிகளுக்கு தலைமை தாங்கிய அவுஸ்திரேலியாவ…
-
- 0 replies
- 374 views
-
-
கிரிக்கெட் போட்டியின் முதல் தமிழ் வர்ணனையாளர் அப்துல் ஜப்பார் காலமானர். வானொலி வர்ணனையால் புகழ் பெற்ற, அப்துல் ஜப்பாருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கின்றனர். கிரிக்கெட் போட்டியின் முதல் தமிழ் வர்ணனையாளராக பணியாற்றி, ரசிகர்களின் மனங்களில் நீங்காத இடம் பிடித்து, புகழ் பெற்ற அப்துல் ஜப்பார் உடல் நலக்குறைவால் காலமானர். அவருக்கு வயது 81. சாத்தான்குளத்தைச் சேர்ந்த அப்துல் ஜப்பாரின் வானொலி வர்ணனையால் ஏராளமானோர் ஈர்க்கப்பட்டனர். அவருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கின்றனர். அவர், தமிழ்நாடு-கேரளா ஆகிய அணிகளுக்கு இடையிலான ரஞ்சி போட்டிக்கு வானொலியில் முதல் வர்ணனை செய்தார். 80-களில் அவரின் வர்ணனை புகழ்பெற்று திகழ்ந்தது. அதனைத் தொடர்ந்து தொலைகாட்சிகளிலும்…
-
- 8 replies
- 1.7k views
-
-
இங்கிலாந்து - இந்திய சமர் இன்று சேப்பாக்கத்தில் ஆரம்பம் இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சென்னையில் இன்று தொடங்குகிறது. இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி நான்கு டெஸ்ட், ஐந்து டி-20 மற்றும் மூன்று ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது. இதில் முதலவதாக நடைபெறும் டெஸ்ட் தொடரின் முதல் போட்டி இன்று சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ளது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்றுள்ள இங்கிலாந்து அணியானது முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கவுள்ளது. கொரோனா பரவலுக்கு பிறகு ஓராண்டு கழித்து இந்தியாவில் நடக்கும் முதல் சர்வதேச கிரிக்கெட் போட்டி …
-
- 7 replies
- 1.1k views
-
-
பாக். சுப்பர் லீக்கில் கலக்கும் குமார் சங்கக்கார (Highlights) இலங்கை அணியின் முன்னாள் துடுப்பாட்ட வீரரும் , அணித்தலைவருமான குமார் சங்கக்கார பாகிஸ்தான் சுப்பர் லீக் இருபதுக்கு-20 போட்டியில் அபார துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். பாகிஸ்தான் சுப்பர் லீக் இருபதுக்கு-20 போட்டியில் கராச்சி கிங்ஸ் அணித் தலைவராக செயற்படும் சங்கக்கார நேற்றைய லாஹுர் கெலண்டர்ஸ் அணிக்கெதிரான போட்டியில் 45 பந்துகளுக்கு முகங்கொடுத்து 65 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். ஒரு ஆறு ஓட்டம் மற்றும் 8 நான்கு ஓட்டம் அடங்கலாகவே இவர் 65 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். எனினும் குறித்த போட்டியில் கராச்சி கிங்ஸ் அணி 7 ஓட்டங்களால் தோல்வியடைந்திருந்தமை…
-
- 0 replies
- 301 views
-
-
லீக் கோப்பை இறுதிப் போட்டி: ஜோஸ் மவுரினோ தலைமையில் மான்செஸ்டர் யுனைடெட் மகுடம் சூடுமா? ஜோஸ் மவுரினோ தலைமையிலான மான்செஸ்டர் யுனைடெட் அணி லீக் கோப்பை கால்பந்து இறுதிப் போட்டியில் வெற்றி பெறுமா? என்ற எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. லீக் கோப்பை கால்பந்து இறுதிப் போட்டி இன்றிரவு 10 மணிக்கு நடக்கிறது. இதில் மான்செஸ்டர் யுனைடெட்- சவுதாம்ப்டன் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. மான்செஸ்டர் அணியின் பயிற்சியாளராக ஜோஸ் மவுரினோ உள்ளார். மான்செஸ்டர்…
-
- 2 replies
- 430 views
-