விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7834 topics in this forum
-
அவுஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் டீன் ஜோன்ஸ் காலமானார் அவுஸ்திரேலியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் டீன் ஜோன்ஸ் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். அவர் இறக்கும் போது அவருக்கு வயது 59 ஆகும். ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைகாட்சியின் கிரிக்கெட் வர்ணனைக் குழுவில் ஒருவராக பணியாற்றும் ஜோன்ஸ் உயிரிழந்த தருணம் மும்பையில் உள்ள ஏழு நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருந்துள்ளார். டீன் ஜோன்ஸ் ஒரு தீவிர கிரிக்கெட் ஆய்வாளராகவும் வார்ணனையாளராகவும் இருந்துள்ளார். தற்போது ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இடம்பெற்று வரும் இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்.) 2020 போட்டித் தொடரின் வர்ணனைக்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளார். ஜோன்ஸ் இந்திய ஊடகங்களில் பிரபலமான நபராக அறியப்பட்டுள்ள நிலை…
-
- 2 replies
- 855 views
-
-
இலங்கை கபடி அணியின் எட்டு பயிற்றுவிப்பாளர்களில் 2 தமிழர்கள்! சர்வதேச ரீதியில் நாடுகளுக்கு இடையே இடம்பெறும் போட்டிகளில் கலந்து கொள்ளும் இலங்கை கபடி அணியினை பயிற்றுவிக்கும் பணிகளுக்காக மட்டக்களப்பு மாவட்டத்தினை சேர்ந்த இரு தமிழர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். கபடி போட்டிகளில் பங்கு பற்றி பல சாதனைகளை நிலைநாட்டிய மட்டக்களப்பு மாநகர சபையின் உறுப்பினர் துரைசிங்கம் மதன் இலங்கை கபடி ஆண்கள் அணிக்கான பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளதோடு, துரைசாமி மதன்சிங் இலங்கை கபடி பெண்கள் அணிக்கான பயிற்றுவிப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். தேசிய கபடி அணிக்கான பயிற்றுவிப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள குறித்த வீரர்கள் பாகிஸ்தானில் இடம்பெற்ற ஆசிய விளையாட…
-
- 0 replies
- 887 views
-
-
யாழ் மத்திய கல்லூரியின் அடையாளம் திரு.போல் பிரகலாதன்
-
- 1 reply
- 1.2k views
-
-
முதல் ஒருநாள் போட்டியில் பில்லிங்ஸ் சதம் வீணானது - இங்கிலாந்தை வீழ்த்தியது ஆஸ்திரேலியா ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. 20 ஓவர் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்த ஆஸ்திரேலியா அடுத்து 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஆடுகிறது. இந்நிலையில், இங்கிலாந்து-ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மான்செஸ்டரில் நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து, ஆஸ்திரேலியா அணி களமிறங்கியது. அந்த அணியின் ஸ்டோய்னிஸ் 43 ரன்னில் அவுட்டானார். மிட்செல் மார்ஷ் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தார். அவர் 73 ரன்னில் ஆட்டமிழந்தார். மேக்ஸ்வெல் 59 …
-
- 1 reply
- 1.2k views
-
-
தர உயர்வு பெற்ற 66 நடுவர்கள் என். ஜெயரட்ணம் இலங்கை கரப்பந்தாட்ட சம்மேளனத்தால் நடத்தப்பட்ட, கரப்பந்தாட்ட நடுவர்களின் தரப்படுத்தலுக்கான தகுதி காண் போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்து, தர உயர்வு பெற்ற 66 நடுவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் வைபவம், கடந்த ஓகஸ்ட் மாதம் 31ஆம் திகதி, தேசிய விளையாட்டு நிறுவனத்தில், இலங்கை கரப்பந்தாட்ட சம்மேளனத்தின் உப தலைவர் காஞ்சன ஜயரத்ன தலைமையில் நடைபெற்றது. இதன் அடிப்படையில், "சீ" தரத்தில் இருந்து "பீ" தரத்துக்கு சித்தியடைந்த நடுவர்கள் 32 பேருக்கும் "பீ" தரத்தில் இருந்து …
-
- 0 replies
- 731 views
-
-
வன்னி பெருநிலப்பரப்பின் சுழற் கேடயம் கிண்ணத்தை சுவீகரித்தது ஐயனார் விளையாட்டுக்கழகம்.! வன்னி பெருநிலப்பரப்பின் சுழற் கேடயத்துக்கான மாபெரும் கடினப்பந்து போட்டி இன்று வவுனியா நகரசபை மைதானத்தில் இடம்பெற்ற போட்டியில் ஐயனார் விளையாட்டுக்கழகம் கிண்ணத்தை சுவீகரித்ததுக் கொண்டது. வன்னி பெருநிலப்பரப்பின் சுழற் கேடயம் கிண்ணத்திற்கான கடினப்பந்து துடுப்பாட்ட போட்டியானது, ஐயனார் விளையாட்டுக் கழகத்திற்கும் ஜங்ஸ்ரார் விளையாட்டுக்கழகத்திற்கும் இடையில் தொடர்ச்சியாக நான்காவது வருடமான இடம்பெற்று வருகின்றது. ஐயனார் விளையாட்டுக்கழகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்று வரும் இப்போட்டியில் நாணயசுழற்சியில் வெற்றிபெற்ற ஐயனார் விளையாட்டுக்கழக அணியின் தலைவர் அனுசன் களத்தடுப்பை தெரிவு செய…
-
- 0 replies
- 764 views
-
-
`பார்சிலோனா`அணியிலிருந்து விலக மெஸ்ஸி முடிவு! August 26, 2020 பிரபல காற்பந்தாட்ட வீரர் லியோனல் மெஸ்ஸி (Lionel Messi) தனது ஆஸ்தான அணியான பார்சிலோனாவிலிருந்து (Barcelona) விலக விருப்பம் தெரிவித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அண்மையில் இடம்பெற்ற ஐரோப்பிய காற்பந்தாட்தத் தொடரில் மெஸ்ஸி தலைமையில் களமிறங்கிய பார்சிலோனா அணி காலிறுதிப் போட்டியில் பேயர்ன் முனிச்சிடம் 8க்கு 2 என்ற கணக்கில் தோல்வி அடைந்து தொடரிலிருந்து வெளியேறியது. இந்நிலையில், இவ் வார இறுதியில் நடைபெறவுள்ள கொரோனா பரிசோதனைக்கு தான் வரப்போவதில்லை எனவும், அணியிலிருந்து உடனடியாக விலக விரும்புவதாகவும் பார்சிலோனா அணியின் நிர்வாகத்திடம், மெஸ்ஸி தெரிவித்துள்ளார். இது குறித்து ஆலோசித்து முடிவ…
-
- 1 reply
- 834 views
-
-
-
- 0 replies
- 693 views
- 1 follower
-
-
தோல்வியின் விரக்தி: தலைநகர் பரிஸில் வாகனங்கள் பி.எஸ்.ஜி. இரசிகர்களால் எரிப்பு! சம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில் பிரான்ஸின் பரிஸ் செயிண்ட் ஜேர்மைன் அணி, தோல்வியடைந்ததை பொறுத்துக் கொள்ள முடியாத இரசிகர்கள், தலைநகர் பரிஸில் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். டா லூஸ் விளையாட்டரங்களில் உள்ளூர் நேரப்படி இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற மகுடத்திற்கான இறுதிப் போட்டியில், முதல்முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறிய பரிஸ் செயிண்ட் ஜேர்மைன் அணி, ஐந்து முறை சம்பியன் பட்டம் வென்ற ஜேர்மனியின் பேயர்ன் முனிச் அணியை எதிர்கொண்டது. பரபரப்பாக நகர்ந்த இப்போட்டியில், ஜேர்மனியின் பேயர்ன் முனிச் அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது. இந்த நிலையில், தலைநகரில் இப்போட்டியைக் காணுவதற்கு ஒன…
-
- 2 replies
- 530 views
-
-
ரோகித் சர்மா, மாரியப்பன் உள்பட 5 பேருக்கு கேல் ரத்னா விருது அறிவிப்பு மத்திய அரசு சார்பில், ஆண்டுதோறும் சர்வதேச விளையாட்டு போட்டிகளில் சிறந்து விளங்கும் வீரர், வீராங்கனைகளுக்கு ‘ராஜீவ் காந்தி கேல் ரத்னா’, ‘அர்ஜூனா’, ஆகிய விருதுகளும், சிறந்த வீரர்களை உருவாக்கும் பயிற்சியாளர்களுக்கு ‘துரோணாச்சார்யா’ விருதும், விளையாட்டு வளர்ச்சிக்கு பங்களிக்கும் வாழ்நாள் சாதனையாளர்களுக்கு ‘தயான் சந்த்’ விருதும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது தமிழக வீரர் மாரியப்பனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2016- ஆம் ஆண்டு நடைபெற்ற ரியோ ஒலிம்பிக் போட்டியில் மாரியப்பன் தங்கம் வென்றார். அதேபோல், கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மா, டேபிள் டென்னிஸ் வீராங்க…
-
- 0 replies
- 528 views
-
-
தேசிய விளையாட்டு சபையின் தலைவராக மஹேல ஜயவர்தன தேசிய விளையாட்டு சபையின் தலைவராக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தன நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் மேலும் 13 பேர் குறித்த சபையின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சில் வைத்து அமைச்சர் நாமல் ராஜபக்ஷவினால் இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளது. குறித்த குழுவின் உறுப்பினர்களாக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார, இராணுவத்தளபதி ஷவேந்திர சில்வா, ஜூலியன் போலிங், திலந்த மலகமுவ, கஸ்தூரி செல்லராஜா வில்சன், சுபுன் வீரசிங்க, ரொஹான் பெர்னாண்டோ, ருவன் கேரகல, சஞ்சீவ விக்ரமநாயக்க, மேஜர் ஜெனரல் ரா…
-
- 0 replies
- 548 views
-
-
https://www.google.co.uk/amp/s/tamil.oneindia.com/amphtml/news/delhi/mahendra-singh-dhoni-announces-retirement-from-international-cricket-394621.html
-
- 10 replies
- 967 views
-
-
8-2 என பார்சிலோனாவை துவம்சம் செய்த பேயர்ன் முனிச்: கால்பந்து வரலாற்றில் மெஸ்சி கண்டிராத தோல்வி யூரோப்பியன் சாம்பியன்ஸ் லீக்கின் காலிறுதி ஆட்டம் ஒன்றில் ஸ்பெயின் நாட்டின் தலைசிறந்த அணியான பார்சிலோனாவும், ஜெர்மனியின் பேயர்ன் முனிச் அணிகளும் விளையாடின. இந்திய நேரப்படி இன்று அதிகாலை போட்டி நடைபெற்றது. ஆட்டம் தொடங்கிய 4-வது நிமிடத்தில் பேயர்ன் முனிச் அணியின் தாமஸ் முல்லர் முதல் கோலை பதிவு செய்தார். 7-வது நிமிடத்தில் பார்சிலோனாவுக்கு ஓன் கோல் மூலம் ஒரு கோல் கிடைத்தது. இதனால் இரு அணிகளும் 1-1 என சமநிலைப் பெற்றன 21-வது நிமிடத்தில் பேயர்ன் முனிச் அணியின் இவான் பெரிசிக் ஒரு கோலும், 27-வது நிமிடத்தில் செர்ஜ் காப்ரி ஒரு கோலும், 31-வது நிமிடத்தில் தாமஸ் மு…
-
- 0 replies
- 510 views
-
-
பாகிஸ்தான் அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட்: 14பேர் கொண்ட அணியில் ஒல்லி ரொபின்சனுக்கு வாய்ப்பு பாகிஸ்தான் அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடும், எதிர்பார்ப்பு மிக்க 14பேர் கொண்ட இங்கிலாந்து அணி விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, எஞ்சியுள்ள இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் இருந்து விலகிய சகலதுறை வீரர் பென் ஸ்டோக்ஸ்க்கு பதிலாக, ஒல்லி ரொபின்சன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இப்போட்டியில் விளையாடவுள்ள முழுமையான அணி விபரத்தை பார்க்கலாம், ஜோ ரூட் தலைமையிலான அணியில் ஜேம்ஸ் எண்டரசன், ஜொஃப்ரா ஆர்சர், டொமினிக் பெஸ்,ஸ்டூவர்ட் பிராட், ரொறி பர்ன்ஸ், ஜோஸ் பட்லர், ஸெக் கிராவ்லி, சேம் கர்ரன், ஒல்லி போப், ஒல்லி ரொபின்சன், டொம் சிப்ல…
-
- 0 replies
- 631 views
-
-
அரையிறுதியில் இன்டர், யுனைட்டெட் ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் ஒன்றியத்தின் யூரோப்பா லீக் தொடரின் அரையிறுதிப் போட்டிக்கு, இத்தாலிய சீரி ஏ கழகமான இன்டர் மிலன், இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான மன்செஸ்டர் யுனைட்டெட் ஆகியன தகுதிபெற்றுள்ளன. ஜேர்மனியின் புண்டெலிஸ்கா கழகமான பயேர் 04 லெவர்குசனை தமது காலிறுதிப் போட்டியில் இன்டர் மிலனும், டென்மார்க் கழகமான கொப்பென்ஹகனை தமது காலிறுதிப் போட்டியில் மன்செஸ்டர் யுனைட்டெட்டும் வென்றே அரையிறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றுள்ளன. ஜேர்மனியின் டுஸல்ஃபோர்ட்டில் இன்ற…
-
- 0 replies
- 644 views
-
-
‘டொட்டமுண்டில் ஜடோன் சஞ்சோ தொடரவுள்ளார்’ அடுத்த பருவகாலத்திலும் ஜேர்மனிய புண்டெலிஸ்கா கால்பந்தாட்டக் கழகமான பொரூசியா டொட்டமுண்டிலேயே அக்கழகத்தின் முன்களவீரரான ஜடோன் சஞ்சோ தொடரவுள்ளார் என அக்கழகத்தின் விளையாட்டுப் பணிப்பாளர் மைக்கல் ஸொர்க் தெரிவித்துள்ளார். சுவிற்ஸர்லாந்தில் நடைபெறவுள்ள இவ்வார பயிற்சி முகாமுக்கான பொரூசியா டொட்டமுண்ட் குழாமில் 20 வயதான ஜடோன் சஞ…
-
- 0 replies
- 749 views
-
-
2021-ம் ஆண்டு 20 ஓவர் உலககோப்பை போட்டி இந்தியாவில் நடைபெறும்- ஐ.சி.சி. கூட்டத்தில் முடிவு துபாய்: 7-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடத்த முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால் தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா வைரசின் கோரதாண்டவத்தால் இந்த போட்டி வேறுவழியின்றி தள்ளிவைக்கப்பட்டது. 2021-ம் ஆண்டு 20 ஓவர் உலக கோப்பை போட்டியை நடத்தும் உரிமத்தை இந்தியா பெற்றுள்ளது. இந்த தொடரை நடத்தும் வாய்ப்பை தங்களுக்கு மாற்றித் தர வேண்டும் என்று ஆஸ்திரேலியா வலியுறுத்தியது. ஆனால் 2021-ம் ஆண்டு உலக கோப்பை போட்டியை நடத்தும் உரிமையை விட்டுக்கொடுக்க இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு விருப்பம் இல்லை. ஏனெனில், 2022-ம் ஆண்டில் 2…
-
- 0 replies
- 479 views
-
-
ஸ்டெம்பை தெறிக்கவிட்ட முகமது அப்பாஸ் - திகைத்துப்போன பென் ஸ்டோக்ஸ் இங்கிலாந்து - பாகிஸ்தான் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் நேற்றுமுன்தினம் தொடங்கியது. டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது. அந்த அணியின் மசூத், பாபர் அசாம் மற்றும் சதாப்கான் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இறுதியில் பாகிஸ்தான் அணி தனது முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 326 ரன்கள் எடுத்தது. சிறப்பாக ஆடிய மசூத் அதிகபட்சமாக 156 ரன்கள் குவித்தார். இதையடுத்து, இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களான ரோய் பொர்ன்ஸ் மற்றும் டொமினிக் சிப்லி களமிறங்கினர். ரோய் 4 ரன்னிலும், சிப்லி 8 ரன்னிலும் ஷாகின் அப்ரிடி மற்றும் முகமத…
-
- 0 replies
- 542 views
-
-
ஐ.பி.எல். 2020 லீக் செப்டம்பர் 19 ஆம் திகதி முதல் நவம்பர் 10 வரை ஒத்திவைக்கப்பட்ட இந்தியன் பிரீமியர் லீக்கை (ஐ.பி.எல்) ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடத்துவதற்கு இந்திய விளையாட்டு அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது. மேலும் மத்திய உள்துறை அமைச்சகத்தின் இறுதி அனுமதி விரைவில் வரும் என்று ஐ.பி.எல். நிர்வாக சபைக் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது. அதன்படி இப் போட்டிகள் இது செப்டம்பர் 19 முதல் நவம்பர் 10 வரை துபாய், அபுதாபி மற்றும் ஷார்ஜாவில் நடைபெறும் என ஐ.பி.எல் தலைவர் பிரிஜேஷ் பட்டேல் தெரிவித்திருந்தார். எனினும் இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஆகஸ்ட் 2 ஆம் திகதி (நேற்று) நடைபெறும் ஐ.பி.எல் ஆட்சி மன்றக் குழுவில் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. இன்று ஐ.பி.…
-
- 0 replies
- 534 views
-
-
ஓய்வு காலத்தை நெருங்கியுள்ளேன் - ரொஜர் பெடரர் டென்னிஸ் போட்டியிலிருந்து ஓய்வு பெறும் காலத்தை நெருங்கி விட்டதாக டென்னிஸ் ஜாம்பவானான ரொஜர் பெடரர் தெரிவித்துள்ளார். சர்வதேச டென்னிஸ் அரங்கில் அதிக கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்ற வீரராக திகழும் சுவிட்ஸர்லாந்தின் ரொஜர் பெடரர், இதுவரை 20 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார். இதில் 8 விம்பிள்டன் பட்டங்கள் அடங்கும். டென்னிஸ் தரவரிசையில் 310 வாரங்கள் தொடர்ச்சியாக முதல் இடத்தை அலங்கரித்த சாதனையாளராகவும் திகழ்கிறார். சில மாதங்களுக்கு முன்பு அவரது வலது முழங்கால் முட்டியில் ஏற்பட்ட உபாதைக்கு சத்திர சிகிச்சை செய்து கொண்ட பெடரர், இவ்வாண்டு எஞ்சிய போட்டிகளில் விளையாடமாட்டேன் என்றும், அடுத்த ஆண்டில் புத்துணர்ச…
-
- 0 replies
- 913 views
-
-
240 பக்க புத்தகம்.. எல்லோரும் இதை பின் பற்றியே ஆகணும்.. ஐபிஎல் அணிகளுக்கு பிசிசிஐ கிடுக்கிப்பிடி.! மும்பை : 2020 ஐபிஎல் தொடர் வரும் செப்டம்பர் மாதம் துவங்க உள்ளது. பிசிசிஐ அதற்கான பணிகளில் தீவிரமாக இறங்கி உள்ளது கொரோனா வைரஸ் பாதிப்புக்கு நடுவே நடக்க உள்ள ஐபிஎல் தொடர் என்பதால் பிசிசிஐ கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது. குறிப்பாக வீரர்கள் மற்றும் ஊழியர்களின் உடல்நலனை பாதுகாக்க வேண்டிய கடமையும் உள்ளது. முன்னெச்சரிக்கை பெருந்தொற்று நோயான கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படாமல் தடுக்க முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம். அனைத்து ஐபிஎல் அணிகள், வீரர்கள், ஊழியர்கள் என அனைவரும் பின்பற்ற வேண்டிய முன்னெச்சரிக்கை விதிமுறைகளை வகுத்து வருகிறது பிசிசிஐ. …
-
- 1 reply
- 754 views
-
-
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் உப தலைவர் பதவியிலிருந்து மதிவாணன் திடீர் இராஜினாமா.! இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் உப தலைவர் பதவியிலிருந்து விலகிய கே. மதிவாணனின் இடத்திற்கு, இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ஜயந்த தர்மதாஸ நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை கிரிக்கெட்டின் முன்னாள் உப தலைவர் மதிவாணன் தனது பதவியை இன்று (29) இராஜினாமா செய்ததோடு, அது தொடர்பான கடிதத்தை இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் செயலாளர் மோகன் டி சில்வாவிடம் ஒப்படைத்தார். இந்நிலையில், கே. மதிவானனின் இராஜினாமாவை ஏற்றுக்கொள்வதற்கும், இலங்கை கிரிக்கெட் நிறுவன சட்டத்தின் விதிகளின்படி உருவாக்கப்பட்ட வெற்றிடங்களை நிரப்ப, துணைத் தலைவரை நியமிப்பதற்கும் இலங்கை கிரிக்கெட்டின் செயற்குழு இன்…
-
- 0 replies
- 775 views
-
-
பாகிஸ்தான் வீரர் உமர் அக்மல் மீது விதிக்கப்பட்ட தடை 18 மாதங்களாக குறைப்பு! by : Anojkiyan பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் விக்கெட் காப்பாளரான உமர் அக்மல் மீது விதிக்கப்பட்ட தடை குறைக்கப்பட்டுள்ளது. அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் மூன்று ஆண்டுகள் விளையாடுவதற்கு விதிக்கப்பட்ட தடை தற்போது 18 மாதங்களாக குறைக்கப்பட்டுள்ளது. தடையை எதிர்த்து உமர் அக்மல் மேன்முறையீடு செய்து இருந்த மனுவை விசாரித்த ஓய்வு பெற்ற நீதிபதி பாகிர் முகமது கோக்ஹர், உமர் அக்மலுக்கு விதிக்கப்பட்டு இருந்த 3 ஆண்டு கால தடையை 18 மாதங்களாக குறைத்து உத்தரவிட்டார். கருணையின் அடிப்படையில் இந்த தண்டனை குறைப்பு செய்யப்…
-
- 1 reply
- 860 views
-
-
இங்கிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் தொடர்: 20 பேர் கொண்ட பாகிஸ்தான் அணி விபரம் அறிவிப்பு! இங்கிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும் 20 பேர் கொண்ட பாகிஸ்தான் அணி விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது. அசார் அலி தலைமையிலான பாகிஸ்தான் அணியில் பாபர் அசாம், முகமது அப்பாஸ், வஹாப் ரியாஸ், யாசிர் ஷா, சர்பராஸ் அகமது உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர். இதற்கிடையில், மீதமுள்ள ஒன்பது வீரர்கள் ஃபக்கர் சமான், ஹைதர் அலி, இப்திகர் அகமது, இமாத் வாசிம், குஷ்டில் ஷா, முகமது ஹபீஸ், முகமது அமீர், முகமது ஹஸ்னைன் மற்றும் மூசா கான் ஆகியோர் தொடர்ந்து ரி-20 தொடருக்கான அணியுடன் பயிற்சி பெறுவார்கள். முழுமையான அணி விபரம் இதோ. அசார் அலி, பாபர் அசாம், அபிட் …
-
- 0 replies
- 453 views
-
-
ஐ.பி.எல். தொடரில் விளையாடுவதற்கு நியூஸிலாந்து வீரர்களுக்கு அனுமதி! by : Anojkiyan இந்தியாவில் நடைபெறவுள்ள ஐ.பி.எல். ரி-20 கிரிக்கெட் லீக் தொடரில் விளையாடுவதற்கு வீரர்களுக்கு தடையில்லா சான்றிதழ் வழங்க தயாராக உள்ளோம் என நியூசிலாந்து கிரிக்கெட் கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது. கிரிக்கெட் சபையின் செய்தி தொடர்பாளர் ரிச்சார்ட் ப்ரூக் இதுகுறித்து கூறுகையில் ”ஐபிஎல் தொடரில் விளையாடும் வீரர்களுக்கு நாங்கள் தடையில்லா சான்றிதழ் வழங்க வேண்டும். அவர்கள்தான் இதுகுறித்து முடிவு செய்ய வேண்டும். தடையில்லாத சான்றிதழ் ஒவ்வொரு நடைமுறையையும் கருத்தில் கொண்டுதன் வழங்க ஆலோசிக்கப்படும். ஆனால், வீரர்கள் மறுப்பது அபூர்வம். எனி…
-
- 0 replies
- 635 views
-