விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7840 topics in this forum
-
உலகில் வேகமாகக் கார் ஓட்டும் பெண் எனப் பெயர்பெற்ற ஜெஸிகா கோம்ப்ஸ் விபத்தில் சிக்கி உயிரிழந்தார். அமெரிக்காவைச் சேர்ந்த 39 வயதான ஜெஸிகா, ஜெட் விமானத்தின் இயந்திரத்தைப் பொருத்தி கார் ஓட்டுவதில் சிறந்தவராக உள்ளார். இதன் காரணமாகவே உலகில் வேகமாகக் கார் ஓட்டும் பெண் எனப் பெயரெடுத்தவர். கடந்த 2013ஆம் ஆண்டு மணிக்கு 641 கிலோ மீற்றர் (398 mph) வேகத்தில் காரை ஓட்டி சாதனை செய்தார். இதனைத் தொர்ந்து 824 கிலோ மீற்றர் (512 mph) வேகத்தில் காரை இயக்கி தனது சாதனையை தானே முறியடித்தார். இந்நிலையில் இந்தச் சாதனையையும் முறியடிக்க அவர் தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். இதற்காக தென்மேற்கு ஓரேகான் பகுதியில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது கார் விபத்துக்குள்ளானதில் ஜெஸிகா உயிரிழந்ததாகத…
-
- 0 replies
- 666 views
-
-
உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதலில் தமிழகத்தைச் சேர்ந்த இளவேனில் வளரிவான் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். பிரேசிலின் ரியோ டி ஜெனேரியோவில் ஐ.எஸ்.எஸ்.எஃப் உலகக் கோப்பை சுடுதல் போட்டி நடந்து வருகிறது. இதில் பெண்களுக்கான துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார் இளவேனில் வளரிவான் . 10 மீட்டர் ஏர் ரைஃபில் பிரிவில் இளவேனில் 251.7 புள்ளிகள் எடுத்து முதலிடத்தை பிடித்திருக்கிறார். படத்தின் காப்புரிமைELAVENIL VALARIVAN இவருக்கு அடுத்தபடியாக பிரிட்டனைச் சேர்ந்த மெக்கின்டோஷ் சியோனைட் 250.6 புள்ளிகள் எடுத்து இரண்டாமிடம் பிடித்து வெள்ளிப்பதக்கம் வென்றார். தைவானைச் சேர்ந்த லின் யிங்-ஷின் 229.9 புள்ளிகள் எடுத்து மூன்றாமிடம் பிடித்தார் . …
-
- 2 replies
- 1.2k views
-
-
அடுத்தடுத்து இரு உலகக் கிண்ணம் 2020, 2021 என இரு ஆண்டுகளிலும் அடுத்தடுத்து இருபதுக்கு 20 உலக கிண்ணத் தொடரை நடத்த ஐ.சி.சி. திட்டமிட்டுள்ளது. இந்த ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்று முடிந்த 50 ஓவர்கள் உலகக் கிண்ணத் தொடரில் தொடக்கத்தில் மழை தான் அதிகளவு விளையாடியது. மழையால் போட்டி பாதிப்பு, ஆட்டம் ரத்து என்ற செய்திகள் அதிக விமர்சனத்தை எழுப்பியது. மழையால் தொடக்கத்தில் பாதிக்கப்பட்டாலும் இறுதியில் சுவாரசியமாக முடிவடைந்தது. அதனை தொடர்ந்து 2020ஆம் ஆண்டு 2021 ஆகிய இரண்டு ஆண்டுகளும் இருபதுக்கு 20 உலகக் கிண்ணத்தை நடத்த ஐ.சி.சி. திட்டமிட்டுள்ளது. மேலும் ஒரு இருபதுக்கு 20 அடுத்தாண்டு அதாவது 2020இல் அவுஸ்திரேலிய நாட…
-
- 2 replies
- 968 views
- 1 follower
-
-
ஆஸி.யின் வெற்றியை தட்டிப் பறித்த பென் ஸ்டோக்ஸ் பென் ஸ்டோக்கின் பொறுப்பான மற்றும் அதிரடியான ஆட்டத்தினால் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டியில் இங்கிலாந்து அணி ஒரு விக்கெட்டினால் வெற்றிபெற்றுள்ளது. இங்கிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள டிம் பெய்ன் தலைமையிலான அவுஸ்திரேலிய அணி ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்து அணியுடன் ஐந்து போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் பேர்மிங்கமில் இடம்பெற்ற முதல் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 251 ஓட்டத்தினால் அபார வெற்றிபெற்றது. அதன் பின்னர் லண்டன் லோர்ட்ஸ் மைதானத்தில் இடம்பெற்ற இரண்டாவது போட்டி வெற்றி தோல்வியின்றி நிறைவடைந்தது. இந் நிலையில் கடந்த 22 ஆம் திகதி லீட்ஸ் ம…
-
- 1 reply
- 1.2k views
-
-
இலங்கையில் உருவாகும் ஒரு தமிழ் கிரிக்கெட் வீரன். சாதிக்கத்துடிக்கும் தமிழ் இளைஞனின் வாக்குமூலம். "இலங்கை அணிக்குள் சகல துறை வீரனாக களம் புகுவேன்" இலங்கையின் இளம் வேகப்பந்து வீச்சாளன் அருண் பிரகாஷுடனான நேர் காணல்.
-
- 2 replies
- 1.1k views
-
-
இலங்கை அணியின் வீரர்கள் சொதப்பல்: நியூஸிலாந்து அணி இன்னிங்ஸ் வெற்றி! இலங்கை மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில், நியூஸிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 65 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம், இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை, நியூஸிலாந்து அணி 1-1 என்ற கணக்கில் சமநிலைப் படுத்தியுள்ளது. கொழும்பு பி சாரா ஓவல் மைதானத்தில் 22ஆம் திகதி ஆரம்பமான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற, இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி முதல் இன்னிங்ஸிற்காக 244 ஓட்டங்களை பெற்றது. இதன்போது, இலங்கை அணியின் அதிகபட்ச ஓட்டங்களாக தனஞ்சய டி…
-
- 0 replies
- 562 views
-
-
பி.வி.சிந்து: உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்று சாதனை ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்றுள்ளார் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து. ஜப்பானை சேர்ந்த நசோமி ஒகுஹாராவை 21-7, 21-7 என்ற கணக்கில் வீழ்த்தி உலக பேட்மிண…
-
- 0 replies
- 466 views
- 1 follower
-
-
ஜந்து நாள் தொடரில் இங்லாந் அணி முதலாவது இனிங்சில் 67 ஓட்டம் all out , ஒரு பலமான அணி இப்படி சுதப்பி விளையாடுவது வெக்கக் கேடு , அவுஸ்ரேலியா இரண்டாவது வெற்றியையும் பெற போகுது , சிமித் அணியில் இல்லாம விளையாடியும் அவுஸ்ரேலியா நல்ல நிலையில் நிக்குது , அவர்களின் வெற்றி உறுதி , அவுசின் பந்து வீச்சை இங்லாந் வீரர்களால் சமாளிக்க முடியல / தடுமாற்றம் நிலைச்சு நின்று விளையாடினம் இல்லை இங்லாந் வீரர்கள் 😉😁😂 /
-
- 0 replies
- 436 views
- 1 follower
-
-
இலங்கை தொடரிலிருந்து வெளியேறுகிறார் வில்லியம்ஸன் இலங்கை அணிக்கெதிராக நடைபெறவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட டீ டுவென்டி தொடரில் நியூசிலாந்து அணித்தலைவர் கேன் வில்லியம்ஸனுக்கு ஒய்வு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி குறித்த டீ டுவென்டி தொடரின் அணித்தலைவராக டிம் சவுதி நியமிக்கப்பட்டுள்ளார். அதேவேளை கேன் வில்லியம்ஸனுடன் நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ட்ரெண்ட் போல்டுக்கும் டீ டுவென்ட்டி தொடரில் ஒய்வு வழங்கப்பட்டுள்ளது. அதேவேளை இலங்கைக்கெதிரான நியூசிலாந்து டீ டுவென்டி அணி விபரம் வெளியிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. http://www.dailyceylon.com/188138/
-
- 1 reply
- 632 views
-
-
இலங்கை அணி முதலில் துடுப்பாட்டம் இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது. இரு அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று காலை கொழும்பு பி. சரவணமுத்து மைதானத்தில் ஆரம்பமாகவிருந்த நிலையில் மழை காரணமாக போட்டியின் நாணயச்சுழற்சி தாமதமாகியது. இன்றைய போட்டியில் இலங்கை அணியின் இளம் சுழற்பந்து வீச்சாளர் அகில தனஞ்ஜயவுக்கு பதிலாக அனுபவ சுழற்பந்துவீச்சாளர் டில்ருவன் பெரேரா இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது . http://www.dailyceylon.com/188267/
-
- 0 replies
- 726 views
-
-
சாதனை படைத்த மட்டக்களப்பு வீரர்கள் ! தேசிய போட்டி விளையாட்டு நிகழ்வுகளில் பங்குகொண்டு மட்டக்களப்பு மாவட்ட விளையாட்டு வீரர்கள் சாதனை படைத்துள்ளனர். தேசிய ரீதியான மல்யுத்த போட்டிகளில் மட்டக்களப்பு மாவட்ட வீரர்கள் தொடர்ச்சியான சாதனைகளை பதிவுசெய்துவருகின்றனர். இதன்கீழ் கடந்த 17,18ஆம் திகதிகளில் விளையாட்டு அமைச்சின் விளையாட்டு உள்ளரங்கில் நடைபெற்ற பாடசாலை மட்ட மற்றும் கழகங்களுக்கிடையிலான போட்டிகளில் கிழக்கு மாகாண ரீதியாக கலந்துகொண்ட மட்டக்களப்பு வீரர்கள் கலந்துகொண்டு சாதனை படைத்துள்ளனர். மட்டக்களப்பு இந்துக்கல்லூரியின் மாணவன் சிவநாதன் அனோஜன் 20வயது 74 கிலோவுக்கான பிரிவில் கலந்துகொண்டு தங்கப்பதக்கம் பெற்று மாவட்டத்திற்கு பெருமைசேர்த்துள்ளார். அதேபோன்…
-
- 0 replies
- 481 views
-
-
சர்வதேச கிரிக்கெட் சபையின் டெஸ்ட் போட்டிகளுக்கான துடுப்பாட்டவீரர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் இரண்டாமிடத்துக்கு, அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் தலைவர் ஸ்டீவ் ஸ்மித் முன்னேறினார். இங்கிலாந்துக்கெதிரான இரண்டாவது ஆஷஸ் டெஸ்டில் 92 ஓட்டங்களைப் பெற்றதைத் தொடர்ந்தே, மூன்றாமிடத்திலிருந்து ஓரிடம் முன்னேறி இரண்டாமிடத்தை ஸ்மித் அடைந்துள்ளார். இதேவேளை, நியூசிலாந்துக்கெதிரான முதலாவது டெஸ்டில் 161 ஓட்டங்களைப் பெற்றிருந்த இலங்கையணியின் தலைவர் திமுத் கருணாரத்ன, 12ஆம் இடத்திலிருந்து நான்கு இடங்கள் முன்னேறி எட்டாமிடத்தைப் பிடித்துள்ளார். இந்நிலையில், இலங்கைக்கெதிரான முதலாவது டெஸ்டில் நான்கு ஓட்டங்களையே பெற்றிருந்த நியூசிலாந்தின் அணித்தலைவர் கேன் வில்லியம்சன், இரண…
-
- 0 replies
- 451 views
-
-
இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலியா அணிகள் மோதும் ஆஷஸ் தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டி வெற்றி தோல்வியின்றி சமநிலையில் முடிவடைந்துள்ளது. ஆஷஸ் தொடரின் 2 ஆவது போட்டி லண்டன் லோர்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 258 ஓட்டங்களையும் அவுஸ்திரேலிய அணி 250 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டன. இந்நிலையில, 8 ஓட்டங்கள் முன்னிலையுடன் இங்கிலாந்து தனது 2 ஆவது இன்னிங்சை ஆரம்பித்தது. 4 ஆவது நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 4 விக்கெட் இழப்பிற்கு 96 ஓட்டங்களை எடுத்திருந்தது. பென் ஸ்டோக்ஸ் 16 ஓட்டங்களுடனும் ஜோஸ் பட்லர் 10 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர். நேற்று ஐந்தாவது நாள் ஆட்டம் ஆரம்பமாகியது. பென் ஸ்டோக்ஸ் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார்.…
-
- 0 replies
- 499 views
-
-
97 ஆவது தேசிய மெய்வல்லுநர் போட்டியின் 10 ஆயிரம் மீற்றர் ஓட்டப்போட்டியில் அட்டனைச் சேர்ந்த குமார் சண்முகேஸ்வரன் முதலிடம் பிடித்து தங்கப் பதக்கத்தினை சுவீகரித்தார். ஆண்களுக்கான 10 ஆயிரம் மீற்றர் ஓட்டப் போட்டியில் பங்கேற்ற இராணுவத்தைச் சேர்ந்த குமார் சண்முகேஸ்வரன், போட்டித் தூரத்தை 31.47 நிமிடங்களில் ஓடி முடித்து முதலிடம் பிடித்தார். இதன்மூலம் நேபாளத்தில் நடைபெறவுள்ள தெற்காசிய விளையாட்டு விழாவுக்கு தகுதி பெற்றுள்ளார். தனது வெற்றி குறித்து ‘வீரகேசரி வாரவெளியீட்டு’ க்கு பிரத்தியேகமாக கருத்து தெரிவிக்கையில், “இந்த வெற்றி எனக்கு மிகுந்த உத்வேகத்தை தந்தது. தெற்காசியப் போட்டியில் பங்குகொண்டு இலங்கை…
-
- 1 reply
- 811 views
-
-
நியூஸிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் போட்டியில் அணித் தலைவரின் நிதான ஆட்டத்துடன் கூடிய சதம் கைகொடுக்க, இலங்கை அணி 6 விக்கெட்டுகளால் வெற்றிபெற்று 2 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது. இலங்கைக்கு விஜயம் செய்துள்ள நியூஸிலாந்து கிரிக்கெட் அணியானது இலங்கை கிரிக்கெட் அணியுடன் 2 டெஸ்ட், 3 இருபதுக்கு - 20 சர்வதேச கிரக்கெட் போட்டிகளில் விளையாடி வருகிறது. இந்நிலையில், காலியில் இடம்பெற்ற டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற நியூஸிலாந்து அணியானது முதலில் துடுப்பெடுத்தாடி அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 249 ஓட்டங்களை பெற்றது. நியூசிலாந்து அணி சார்பாக துடுப்பாட்டத்தில் டெய்லர் 86 ஓட்டங்களையும் நிக்…
-
- 0 replies
- 470 views
-
-
57 வயதான சந்திரசேகர் தமிழக அணியின் கேப்டனாகவும், தமிழக அணியின் பயிற்சியாளராகவும் இருந்தவர். முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் விபி.சந்திரசேகரின் திடீர் மரணம் கிரிக்கெட் வட்டாரத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. 57 வயதான சந்திரசேகர் தமிழக அணியின் கேப்டனாகவும், தமிழக அணியின் பயிற்சியாளராகவும் இருந்தவர். மாரடைப்பால் சந்திரசேகர் இறந்ததாக தமிழக கிரிக்கெட் அசோசியேஷன் அதிகாரிகள் தெரிவித்தனர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடங்கப்பட்டபோது அதன் நிர்வாகத்தில் மிக முக்கியமானவராக இருந்தவர் சந்திரசேகர். இவர்தான் தோனியை அணிக்குள் கொண்டுவரும் யோசனையை அளித்தவர். மாரடைப்பால் சந்திரசேகர் இறந்ததாக தமிழக கிரிக்கெட் அசோசியேஷன் அதிகாரிகள் த…
-
- 2 replies
- 786 views
-
-
Ravi Shastri: இந்தியா அணியின் பயிற்சியாளராக ரவி சாஸ்திரி தொடர்ந்தால் மகிழ்ச்சி என விராத் கோலி சமீபத்தில் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் அவரே பயிற்சியளராக தொடர்கிறார். இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக ரவி சாஸ்திரி (Ravi Shastri) மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் 2021 உலகக்கோப்பை டி20 தொடர் வரை பொறுப்பில் இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா ஆண்கள் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த ரவி சாஸ்திரியின் (Ravi Shastri) ஒப்பந்த காலம் உலகக்கோப்பை தொடருடன் முடிந்தது. அதன் பின் அவருக்கு 45 நாட்கள் நீடிப்பு வழங்கப்பட்டது. இதையடுத்து புதிய பயிற்சியாளரை தேர்வு செய்வது தொடர்பாக கபில்தேவ், அன்சுமான் கெக்வாத், சாந்தா ரங்…
-
- 1 reply
- 756 views
-
-
ஒருநாள் தொடரும் இந்தியா வசம் மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுக்களினால் வெற்றிபெற்று தொடரை 2:0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி மழையால் கைவிடப்பட்டதை தொடர்ந்து, இரண்டாவது போட்டியில் 59 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிப் பெற்றது. தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னணியில் உள்ள இந்திய அணி, நேற்றைய போட்டியில் வெற்றி பெற்று இருபதுக்கு - 20 தொடரை போலவே ஒருநாள் தொடரையும் கைப்பற்றும் முனைப்பில் களமிறங்கியது. அதன்படி குயின்ஸ் பார்க் ஓவல் மைதானத்தில் நேற்றையதினம் இரவு 7.00 மணிக்கு இப் போட்டி ஆரம்பாமனது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மேற்…
-
- 1 reply
- 640 views
- 1 follower
-
-
இந்தியர்கள் பலமாக இருக்கும் போட்டியான துப்பாக்கி சுடுதல் நீக்கப்பட்டுள்ளது. கடந்த 2018 காமன்பெல்த் போட்டிகளில் இந்தியா 16 பதக்கங்களை வென்றிருந்தது. காமன்வெல்த் போட்டிகளின் தலைவர் லூயிஸ் மார்டின் 2022ல் நடக்கும் காமன்வெல்த் போட்டிகளில் துப்பாக்கிச்சுடுதல் போட்டி இடம்பெறாது என்று கூறியுள்ளார். இந்தியா இந்த பர்மிங்ஹாமில் நடைபெறும் இந்த தொடரை புறக்கணிக்கவுள்ளது. இந்தியாவின் புறக்கணிப்புக்கு போட்டிகளின் விதிமுறைகளில் கொன்டு வரப்படும் மாற்றமே காரணம் என்று கூறப்பட்டுள்ளது. காமன்வெல்த் போட்டிகளின் தலைவர் இங்கிலாந்து நாளேட்டுக்கு அளித்த பேட்டியில் 1974ம் ஆண்டிலிருந்து நடைபெற்ரு வரும் இந்த போட்டியில் முதல்முறையாக துப்பாக்கி சுடுதல் நிறுத்தப்படவுள்ளதாக கூறினார். இந்தியர்கள் பல…
-
- 0 replies
- 677 views
-
-
எதிர்வரும் 2028 ஆம் ஆண்டு அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளில் கிரிக்கெட்டும் இணைத்துக் கொள்ளப்படலாம் என எம்.சி.சி.யின் சர்வதேச கிரிக்கெட் நிறுவன தலைவர் மைக் கேட்டிங் தெரிவித்துள்ளார். ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டை சேர்ப்பது குறித்து ஐ.சி.சி நடவடிக்கைகளை எடுத்துக்கொண்டிருப்பதாகவும், இது உலகெங்கிலும் இருக்கும் கிரிக்கெட் ரசிகர்களுக்கு மிகப்பெரிய சந்தோசத்தை தரும் எனவும் அவர் கூறியுள்ளார். மகளிர் கிரிக்கெட் அண்மையில் 2022 காமன்வெல்த் விளையாட்டு பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதும், இந்த ஆண்டின் தொடக்கத்தில், சச்சின் டெண்டுல்கரும் ஒலிம்பிக் போட்டிகளில் கிரிக்கெட்டை சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தியதும் குறுப்பிடத்தக்கது. https://w…
-
- 0 replies
- 660 views
-
-
ஸ்மார்ட் பந்துகளை அறிமுகப்படுத்திய கூக்கபுரா அவுஸ்திரேலியாவின் கிரிக்கெட் பந்து தயாரிப்பு நிறுவனமான கூக்கபுரா மைக்ரோ சிப் பொருத்தப்பட்ட ஸ்மார்ட் பந்துகளை கிரிக்கெட் உலகிற்கு அறிமுகப்படுத்தவுள்ளது. இந்த மைக்ரோ பொருத்தப்பட்ட ஸ்மார்ட் பந்துகள் அவுஸ்திரேலியாவில் நடக்கும் பிக் பாஷ் இருபதுக்கு - 20 கிரிக்கெட் தொடரில் பயன்படுத்தப்படவுள்ளன. இதில் வெற்றிகரமாகப் பயன்படுத்தப்பட்டால், அதன்பின் சர்வதேசப் போட்டிகளுக்கு பரிந்துரைக்கப்படும். இதேவேளை இந்த ஸ்மார்ட் பந்துகள் சோதனை முயற்சியில் இருப்பதால், விரைவில் பிரதான கிரிக்கெட் போட்டிக்குள் வரும்போது, மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அவுஸ்திரேலிய முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் மைக்கேல் காஸ்புரோவிக் தெரிவித்துள்ளார…
-
- 0 replies
- 709 views
-
-
திருவள்ளுவரை வணங்கிய அஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்..! வள்ளுவர் கிரேட் என புகழ்ச்சி...! ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டரும் அதிரடி பேட்ஸ்மேனுமாகிய ஷேன் வாட்சன் கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலையின் பாதங்களைத் தொட்டு வணங்கி உள்ளார். தமிழகத்தில் நடைபெற்று வரும் டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டியில் விளையாடும் வீரர்களையும் அதன் ரசிகர்களையும் உற்சாக படுத்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் அதிரடி பேட்ஸ்மேன்களில் ஒருவரான ஷேன் வாட்சன் தமிழகம் வந்துள்ளார் அவருடன் இன்னும் பல கிர்க்கெட் வீரர்களும் வருகை தந்துள்ளனர் இந்நிலையில் திருநெல்வேலியில் நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் திண்டுக்கல் ட்ரேகன் அணிகளுக்கு இடையேயான போட்டியில் கலந்து கொண்ட வாட்சன்…
-
- 1 reply
- 724 views
-
-
இந்திய மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான 2வது ஒருநாள் சர்வதேச போட்டி இன்று போர்ட் ஒப் ஸ்பெயின் மைதானத்தில் நடைபெறுகிறது. குறித்த போட்டியானது மேற்கிந்திய தீவுகள் அணியின் நட்சத்திர வீரரான கிரிஸ் கெய்ல் விளையாடும் 300வது போட்டியாகும். இந்த போட்டியில் அவர் 9 ஓட்டங்களை பெறும் பட்சத்தில், மேற்கிந்திய தீவுகள் அணியின் சாதனை வீரரான பிரையன் லாராவின் 10,405 என்ற இலக்கை முறியடிக்க முடியும். அதேவேளை, இன்றைய போட்டிக்கு முன்னதாக, கனடாவில் இடம்பெற்ற குளோபல் இருபதுக்கு இருபது தொடரில் கெய்ல் ஆட்டமிழக்காமல் 122 ஓட்டங்களையும் 94 ஓட்டங்களையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதனூடாக இந்திய தொடரில் அவர் முழு அளவில் ஆதிக்கம் செலுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேவேளை, …
-
- 2 replies
- 540 views
-
-
மேற்கிந்தியத்தீவுகளை 'வைட் வோஷ்' செய்த இந்தியா! இந்தியா மற்றும் மேற்கிந்தியத்தீவுகள் அணிகளுக்கிடையேயான மூன்றாவதும் இறுதியுமான இருபதுக்கு - 20 போட்டி நேற்றைய தினம் கயானவில் இடம்பெற்றது. தொடரில் ஏற்கனேவ கைப்பற்றிய நிலையில் இப் போட்டியில் இந்திய அணியில் ரோகித் சர்மா, ரவீந்திர ஜடேஜாவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டதுடன், கலீல் அகமதுவும் நீக்கப்பட்டார். அவர்களுக்கு பதிலாக லோகேஷ் ராகுல், சகோதரர்கள் தீபக் சாஹர், ராகுல் சாஹர் சேர்க்கப்பட்டனர். இதில் சுழற்பந்து வீச்சாளரான 20 வயதான ராஜஸ்தானைச் சேர்ந்த ராகுல் சாஹருக்கு இதுவே முதல் சர்வதேச போட்டியாகும். மழை மற்றும் ஆடுகளம் ஈரப்பதம் காரணமாக ஆட்டம் தொடங்குவதில் 1 மணி 10 நிமிடங்கள் தாமதம் ஏற்பட்டது. இதன் பின்னர் போட்டியில் நா…
-
- 0 replies
- 715 views
-
-
அஷ்வின்: “இந்தி பேச தெரியாததால் இந்திய அணியில் நுழைந்தபோது தனிமைப் படுத்தப்பட்டேன்” 2 மணி நேரங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGREG WOOD திண்டுக்கல் மாவட்ட கிரிக்கெட் கிளப் சார்பில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசளிப்பு விழா திண்டுக்கல்லில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் நடைப…
-
- 5 replies
- 1.4k views
- 2 followers
-