விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7879 topics in this forum
-
இலங்கையின் ஒரு நாள் அணியின் தலைவர் திமுத் கருணாரட்ண ரி20 அணியின் தலைவர் லசித் மலிங்க உட்பட முக்கிய வீரர்கள் பாதுகாப்பு காரணங்களிற்காக பாக்கிஸ்தான் செல்வதற்கு மறுத்துள்ளனர் என இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை தெரிவித்துள்ளது. திமுத் கருணாரட்ன தினேஸ் சந்திமல் அஞ்சலோ மத்தியுஸ் சுரங்க லக்மால் நிரோசன் டிக்வெல குஜால் ஜனித் பெரோ தனஞ்செய சில்வா திசார பெரேரா லசித்மலிங்க அகில தனஞ்செய ஆகிய வீரர்களே பாதுகாப்பு காரணங்களிற்காக பாக்கிஸ்தான் செல்ல மறுத்துள்ளனர் என இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை தெரிவித்துள்ளது. பாக்கிஸ்தானிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்காக தெரிவுசெய்யப்பட்டுள்ள அணியின் வீரர்களை இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை அதிகாரிகள் இன்று சந்தித்துள்ளனர். …
-
- 1 reply
- 546 views
-
-
கால்பந்து விளையாடிக் கொண்டிருந்தபோது ஏற்பட்ட காயம் காரணமாக, தனது ஒரு காலை இழந்த இளைஞர் ஒருவர், இலங்கை தேசிய பாராலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் மூன்று தங்கப் பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளார். இலங்கை கிழக்கு மாகாணம் - காத்தான்குடியைச் சேர்ந்த 18 வயதான இளைஞர்தான் அனீக். 2018ஆம் ஆண்டு இவர் தனது இடது காலை இழந்தார். கால்பந்து விளையாடிக் கொண்டிருந்தபோது ஏற்பட்ட காயம், புற்றுநோயாக மாறியதால் அவரது காலை அகற்ற வேண்டியதாயிற்று. தனது 10 வயதில் தாயையும், 16 வயதில் தந்தையையும் இழந்த அனீக், தற்போது மாமாவோடு (தாயின் தம்பி) வசித்து வருகின்றார். இவருக்கு 14 வயதில் ஒரு தம்பியும் இருக்கிறார். மாற்றுத் திறனாளிகளுக்காக நடத்தப்படும் தேசிய பாராலிம்பிக் விளையாட்டுப் போட்டி, க…
-
- 0 replies
- 503 views
-
-
இங்கிலாந்து- ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் தொடரின் 4வது டெஸ்ட் போட்டியில், 185 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி தொடரையும் தக்கவைத்துக் கொண்டது. மான்செஸ்டரின் ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்று பேட் செய்த ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 8 விக்கெட் இழப்புக்கு 497 ரன்கள் குவித்தது. தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து 301 ரன்கள் சே ர்த்தது. இரண்டாவது இன்னிங்சில் 6 விக்கெட் இழப்பிற்கு 186 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்த ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்துக்கு 383 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது. ஆனால்,197 ரன்களுக்கு இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியடைந்தது. பாட் கம்மின்ஸ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்த வெற்றி…
-
- 0 replies
- 717 views
-
-
கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் ஸ்பெயின் வீரர் ரஃபேல் நடால் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார். நியூயார்க் நகரில் நடைபெற்று வந்தப் போட்டியில் இறுதி ஆட்டத்தில் நடாலுடன், ரஷ்ய வீரர் மெட்வதேவ் மோதினார். நான்கு மணி 50 நிமிடம் நடைபெற்ற விறுவிறுப்பான ஆட்டத்தில் இரு வீரர்களும் சமபலத்துடன் விளையாடினர். இருவரும் தலா 2 செட்களை வென்ற 5வது செட்டை நடால் கடுமையாகப் போராடி கைப்பற்றினார். இறுதியில் 7-5, 6-3, 5-7, 4-6, 6-4 என்ற செட் கணக்கில் நடால் வெற்றி பெற்றார். நடாலுக்கு வெற்றிக் கோப்பையுடன் 3.85 மில்லியன் டாலர் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது. அவருடன் மோதிய மெட்வதேவ் 1.9 மில்லியன் டாலர் பரிசுத்தொகையைப் பெற்றார். கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் 1…
-
- 0 replies
- 470 views
-
-
Canada, Ontario, Mississaugaஐச் சேர்ந்த 19 வயது Bianca Andreescu மகளிருக்கான US Open Tennis போட்டியில், தனிநபர் Grand Slam பட்டத்தை வென்ற முதல் கனேடியராகியுள்ளார். இன்று நடந்த இறுதிப்போட்டியில் உலகின் முதல்தர மற்றும் அதிகூடிய 39 Grand Slam பட்டங்களை வென்ற, 37 வயதான Serena Williamsஐ, 6-3, 7-5 என்ற செட்களில் தோற்கடித்து வெற்றிபெற்றுள்ளார். இந்த வெற்றியின் மூலம், WTA தரவரிசையில் 15வது இடத்தில் இருந்த Bianca, 5வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். அத்துடன் US$3.85million பரிசுப் பணமும் கிடைத்துள்ளது. இந்த வெற்றிக்காக கடுமையாக உழைத்த Bianca, இந்த நிமிடத்துக்காகவே காத்திருந்ததாகவும், வார்த்தைகளால் விபரிக்க முடியாவிட்டாலும், தனது கனவு நனவான நாள் …
-
- 0 replies
- 921 views
-
-
புதிய மகுடம் சூடிய, செரீனா வில்லியம்ஸ்.. அமெரிக்க ஓபனில் 100 வெற்றிகளை எட்டினார்! அமெரிக்க டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் 100 வெற்றிகளை பெற்று சாதனை புரிந்தார். மேலும், தன் நூறாவது வெற்றி மூலம், 2019 அமெரிக்க ஓபன் தொடரின் அரையிறுதி சுற்றுக்குள் நுழைந்தார்.சீனாவின் வாங் கியாங்-கை கால் இறுதி சுற்றில் சந்தித்தார் செரீனா வில்லியம்ஸ். செரீனாவின் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாத அவர் 44வது நிமிடத்திலேயே தோல்வி அடைந்தார். 6 - 1, 6 - 0 என்ற நேர் செட்களில் எளிதான வெற்றியை பெற்றார் செரீனா வில்லியம்ஸ். இந்த வெற்றி மூலம் அரை இறுதியில் செரீனா வில்லியம்ஸ், உக்ரைனின் எலினா விட்லோனாவை சந்திக்கிறார். இது வரை மூன்று சீன வீரர் அல்ல…
-
- 4 replies
- 1k views
-
-
இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இருபதுக்கு 20 தொடரின் மூன்றாவதும் இறுதியுமான போட்டியில் இலங்கை அணி 37 ஓட்டங்களால் வெற்றிப்பெற்றுள்ளது. கண்டி பல்லேகல மைதானத்தில் இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பாடியது. இதற்கமைய இலங்கை அணி, இருபது ஓவர்கள் நிறைவில் 8 விக்கட்டுக்களை இழந்து 125 ஓட்டங்களை பெற்றது. அணி சார்பில் தனுஸ்க குணதிலக்க அதிகூடுதலாக 30 ஓட்டங்களையும், நிரோசன் திக்வெல்ல 24 ஓட்டங்களையும், லஹிரு மதுசாங்க 20 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். பதிலுக்கு துடுப்பாடிய நியூசிலாந்து அணி 16 ஓவர்கள் நிறைவில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 88 ஓட்டங்கள் மாத்திரமே பெற்றது. போட்டியில் இலங்கை அணியின் இருபதுக்கு 20…
-
- 2 replies
- 529 views
-
-
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் முதல் சதத்தைப் பெற்ற வீரர் என்ற வரலாற்று சாதனையை ரஹமத் ஷா நிகழ்த்தியுள்ளார். தற்போது நடைபெற்றுவரும் பங்களாதேஷிற்கு எதிரான டெஸ்ட் போட்டியின் போதே ரஹ்மத் ஷா ஆப்கானிஸ்தானின் கன்னிச் சதத்தைப் பெற்றுள்ளார். 2018 ஆம் ஆண்டு முதன்முதலாக டெஸ்ட் அரங்கில் அடியெடுத்து வைத்த ஆப்கானிஸ்தான் அணி தனது முதல் போட்டியில் இந்திய அணியை எதிர்த்தாடியது. அதன்பிறகு தனது இரண்டாவது போட்டியாக தற்போது பங்களாதேஷ் அணியுடன் ஆப்கானிஸ்தான் விளையாடி வருகின்றது. பங்களாதேஷில் இன்று ஆரம்பமான இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. இதி…
-
- 0 replies
- 413 views
-
-
பாகிஸ்தான் அணியின் பயிற்றுவிப்பாளராக மிஸ்பா உல் கஹ் நியமனம் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பிரதான பயிற்றுவிப்பாளராக முன்னாள் தலைவர் மிஸ்பா உல் ஹக் நியமிக்கப்பட்டுள்ளார். அதேவேளை பாகிஸ்தான் அணியின் தெரிவுக்குழு தலைவராகவும் மிஸ்பா உல் ஹக் நியமிக்கப்பட்டுள்ளார். அதன்படி எதிர்வரும் மூன்று வருடங்களுக்கு பாகிஸ்தான் அணியின் பயிற்றுவிப்பாளராகவும் தெரிவுக்குழு தலைவராகவும் மிஸ்பா உல் ஹக் செயற்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது http://www.dailyceylon.com/188848/
-
- 0 replies
- 383 views
-
-
இலங்கைக்கு எதிரான இரண்டாவது சர்வதேச இருபதுக்கு -20 கிரிக்கெட் போட்டியில் 4 விக்கெட்டுக்களினால் வெற்றிபெற்ற நியூஸிலாந்து தொடரை கைப்பற்றியுள்ளது. மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு - 20 கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் நியூஸிலாந்து அணி 5 விக்கெட்டுக்களினால் வெற்றிபெற்றுள்ள நிலையில், இரண்டாவது போட்டி இன்றைய தினம் இரவு 7.00 மணிக்கு கண்டி பல்லேகல மைதானத்தில் ஆரம்பமானது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 161 ஓட்டங்களை பெற்றது. 162 என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்குத் துடுப்பெடுத்தாட ஆரம்பித்த நியூஸிலாந்து அணி 19.4 ஓவரில் 6 விக்கெட்டுக்களை மாத்…
-
- 0 replies
- 539 views
-
-
குணசேகரன் சுரேன் 2019 செப்டெம்பர் 02 திங்கட்கிழமை, பி.ப. 06:14 யாழ்ப்பாண மாவட்ட பாடசாலைகள் கிரிக்கெட் சங்கத்தின் ஏற்பாட்டில், பாடசாலைகளின் 17 வயதுக்குட்பட்ட அணிகளுக்கிடையிலான 50 ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் தொடரில் சென். ஜோன்ஸ் கல்லூரி சம்பியனானது. சென். பற்றிக்ஸ் கல்லூரி மைதானத்தில் நேற்று நடைபெற்ற குறித்த தொடரின் இறுதிப் போட்டியில் கொக்குவில் இந்துக் கல்லூரியை வென்றே சென். ஜோன்ஸ் கல்லூரி சம்பியனானது. இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய சென். ஜோன்ஸ் கல்லூரி, 42.2 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 167 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில், பிரணவன் 36, டினோசன் 30, சங்கீர்த்தனன் 29, வினோஜன் 17 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவ…
-
- 0 replies
- 586 views
-
-
அப்ரிடியின் சாதனையை முறியடித்தார் மாலிங்க நியூசிலாந்து அணியுடன் பல்லேகலை மைதானத்தில் இடம்பெற்ற முதலாவது சர்வதேச ரி20 போட்டியில் நியூசிலாந்து அணி 5 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றுள்ளது. இன்றையதினம் (01) இரவு நேர போட்டியாக இடம்பெற்ற இப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி, முதலில் துடுப்பெடுத்தாடி 4 விக்கெட்டுகளை இழந்து 174 ஓட்டங்களை பெற்றது. ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய குசல் மெண்டிஸ் 79 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்ததோடு, நிரோஷன் திக்வெல்ல ஆட்டமிழக்காது 33 ஓட்டங்களையும், இசுறு உதான ஆட்டமிழக்காது 15 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர். நியூசிலாந்து அணி சார்பில் அவ்வணியின் தலைவர் ரிம் செளதி 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அதற்கமைய, ச…
-
- 1 reply
- 546 views
-
-
உலக குத்துச்சண்டை சம்மேளனம் சார்பில் சூப்பர் வெல்டர்வெயிட் போட்டியில் கியூபாவின் எரிஸ்லேன்டி லாரா சம்பியன் பட்டம் வென்றுள்ளார். முன்னாள் உலக சாம்பியன் லாராவுக்கும், ராமோன் அல்வரேஸுக்கும் இடையே மின்னியாபொலிஸ் நகரில் சாம்பியன் பட்டத்துக்கான இறுதிப் போட்டி நேற்றுமுன்தினம் இடம்பெற்றது. தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய லாரா, 2 ஆவது சுற்றில் விட்ட சரமாரி குத்துகளால் நிலைகுலைந்த அல்வரேஸ் கீழே விழுந்தார். கடந்த 2018 இல் இழந்த உலக சாம்பியன் பட்டத்தை மீண்டும் பெற்றார் லாரா. https://www.virakesari.lk/article/63873
-
- 0 replies
- 471 views
-
-
உலகில் அதிக எடையுள்ள டெஸ்ட் கிரிக்கெட் வீரராக மேற்கிந்தி தீவுகளின் புதிய சகலதுறை வீரர் ரகீம் கோர்ன்வோல் பதிவாகியுள்ளார். இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையில் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் ஆட்டத்தில் இந்தியா வென்ற நிலையில், இரண்டாவது ஆட்டம் கிங்ஸ்டனில் நடைபெற்று வருகிறது. இதில் மேற்கிந்திய தீவுகள் அணிக்காக ரகீம் கோர்ன்வோல் களமிறக்கப்பட்டுள்ளார். சகலதுறை வீரரான கோர்ன்வோல் தனது முதல் ஆட்டத்திலேயே புஜாராவை ஆட்டமிழக்கச் செய்தார். புதிய வீரரான கோர்ன்வோல் 6.5 அடி உயரம் கொண்டவர். அவரது மொத்த எடை 140 கிலோ ஆகும். இதற்கு முன்னர் அவுஸ்திரேலிய முன்னாள் அணித்தலைவர் வார்விக் ஆம்ஸ்ட்ரோங் 133–139 கிலோ எடையுடன் ஆடினார். அவரது எடையை…
-
- 0 replies
- 728 views
-
-
உலகில் வேகமாகக் கார் ஓட்டும் பெண் எனப் பெயர்பெற்ற ஜெஸிகா கோம்ப்ஸ் விபத்தில் சிக்கி உயிரிழந்தார். அமெரிக்காவைச் சேர்ந்த 39 வயதான ஜெஸிகா, ஜெட் விமானத்தின் இயந்திரத்தைப் பொருத்தி கார் ஓட்டுவதில் சிறந்தவராக உள்ளார். இதன் காரணமாகவே உலகில் வேகமாகக் கார் ஓட்டும் பெண் எனப் பெயரெடுத்தவர். கடந்த 2013ஆம் ஆண்டு மணிக்கு 641 கிலோ மீற்றர் (398 mph) வேகத்தில் காரை ஓட்டி சாதனை செய்தார். இதனைத் தொர்ந்து 824 கிலோ மீற்றர் (512 mph) வேகத்தில் காரை இயக்கி தனது சாதனையை தானே முறியடித்தார். இந்நிலையில் இந்தச் சாதனையையும் முறியடிக்க அவர் தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். இதற்காக தென்மேற்கு ஓரேகான் பகுதியில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது கார் விபத்துக்குள்ளானதில் ஜெஸிகா உயிரிழந்ததாகத…
-
- 0 replies
- 670 views
-
-
உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதலில் தமிழகத்தைச் சேர்ந்த இளவேனில் வளரிவான் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். பிரேசிலின் ரியோ டி ஜெனேரியோவில் ஐ.எஸ்.எஸ்.எஃப் உலகக் கோப்பை சுடுதல் போட்டி நடந்து வருகிறது. இதில் பெண்களுக்கான துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார் இளவேனில் வளரிவான் . 10 மீட்டர் ஏர் ரைஃபில் பிரிவில் இளவேனில் 251.7 புள்ளிகள் எடுத்து முதலிடத்தை பிடித்திருக்கிறார். படத்தின் காப்புரிமைELAVENIL VALARIVAN இவருக்கு அடுத்தபடியாக பிரிட்டனைச் சேர்ந்த மெக்கின்டோஷ் சியோனைட் 250.6 புள்ளிகள் எடுத்து இரண்டாமிடம் பிடித்து வெள்ளிப்பதக்கம் வென்றார். தைவானைச் சேர்ந்த லின் யிங்-ஷின் 229.9 புள்ளிகள் எடுத்து மூன்றாமிடம் பிடித்தார் . …
-
- 2 replies
- 1.2k views
-
-
அடுத்தடுத்து இரு உலகக் கிண்ணம் 2020, 2021 என இரு ஆண்டுகளிலும் அடுத்தடுத்து இருபதுக்கு 20 உலக கிண்ணத் தொடரை நடத்த ஐ.சி.சி. திட்டமிட்டுள்ளது. இந்த ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்று முடிந்த 50 ஓவர்கள் உலகக் கிண்ணத் தொடரில் தொடக்கத்தில் மழை தான் அதிகளவு விளையாடியது. மழையால் போட்டி பாதிப்பு, ஆட்டம் ரத்து என்ற செய்திகள் அதிக விமர்சனத்தை எழுப்பியது. மழையால் தொடக்கத்தில் பாதிக்கப்பட்டாலும் இறுதியில் சுவாரசியமாக முடிவடைந்தது. அதனை தொடர்ந்து 2020ஆம் ஆண்டு 2021 ஆகிய இரண்டு ஆண்டுகளும் இருபதுக்கு 20 உலகக் கிண்ணத்தை நடத்த ஐ.சி.சி. திட்டமிட்டுள்ளது. மேலும் ஒரு இருபதுக்கு 20 அடுத்தாண்டு அதாவது 2020இல் அவுஸ்திரேலிய நாட…
-
- 2 replies
- 985 views
- 1 follower
-
-
ஆஸி.யின் வெற்றியை தட்டிப் பறித்த பென் ஸ்டோக்ஸ் பென் ஸ்டோக்கின் பொறுப்பான மற்றும் அதிரடியான ஆட்டத்தினால் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டியில் இங்கிலாந்து அணி ஒரு விக்கெட்டினால் வெற்றிபெற்றுள்ளது. இங்கிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள டிம் பெய்ன் தலைமையிலான அவுஸ்திரேலிய அணி ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்து அணியுடன் ஐந்து போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் பேர்மிங்கமில் இடம்பெற்ற முதல் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 251 ஓட்டத்தினால் அபார வெற்றிபெற்றது. அதன் பின்னர் லண்டன் லோர்ட்ஸ் மைதானத்தில் இடம்பெற்ற இரண்டாவது போட்டி வெற்றி தோல்வியின்றி நிறைவடைந்தது. இந் நிலையில் கடந்த 22 ஆம் திகதி லீட்ஸ் ம…
-
- 1 reply
- 1.2k views
-
-
இலங்கையில் உருவாகும் ஒரு தமிழ் கிரிக்கெட் வீரன். சாதிக்கத்துடிக்கும் தமிழ் இளைஞனின் வாக்குமூலம். "இலங்கை அணிக்குள் சகல துறை வீரனாக களம் புகுவேன்" இலங்கையின் இளம் வேகப்பந்து வீச்சாளன் அருண் பிரகாஷுடனான நேர் காணல்.
-
- 2 replies
- 1.1k views
-
-
இலங்கை அணியின் வீரர்கள் சொதப்பல்: நியூஸிலாந்து அணி இன்னிங்ஸ் வெற்றி! இலங்கை மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில், நியூஸிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 65 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம், இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை, நியூஸிலாந்து அணி 1-1 என்ற கணக்கில் சமநிலைப் படுத்தியுள்ளது. கொழும்பு பி சாரா ஓவல் மைதானத்தில் 22ஆம் திகதி ஆரம்பமான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற, இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி முதல் இன்னிங்ஸிற்காக 244 ஓட்டங்களை பெற்றது. இதன்போது, இலங்கை அணியின் அதிகபட்ச ஓட்டங்களாக தனஞ்சய டி…
-
- 0 replies
- 565 views
-
-
பி.வி.சிந்து: உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்று சாதனை ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்றுள்ளார் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து. ஜப்பானை சேர்ந்த நசோமி ஒகுஹாராவை 21-7, 21-7 என்ற கணக்கில் வீழ்த்தி உலக பேட்மிண…
-
- 0 replies
- 472 views
- 1 follower
-
-
ஜந்து நாள் தொடரில் இங்லாந் அணி முதலாவது இனிங்சில் 67 ஓட்டம் all out , ஒரு பலமான அணி இப்படி சுதப்பி விளையாடுவது வெக்கக் கேடு , அவுஸ்ரேலியா இரண்டாவது வெற்றியையும் பெற போகுது , சிமித் அணியில் இல்லாம விளையாடியும் அவுஸ்ரேலியா நல்ல நிலையில் நிக்குது , அவர்களின் வெற்றி உறுதி , அவுசின் பந்து வீச்சை இங்லாந் வீரர்களால் சமாளிக்க முடியல / தடுமாற்றம் நிலைச்சு நின்று விளையாடினம் இல்லை இங்லாந் வீரர்கள் 😉😁😂 /
-
- 0 replies
- 440 views
- 1 follower
-
-
இலங்கை தொடரிலிருந்து வெளியேறுகிறார் வில்லியம்ஸன் இலங்கை அணிக்கெதிராக நடைபெறவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட டீ டுவென்டி தொடரில் நியூசிலாந்து அணித்தலைவர் கேன் வில்லியம்ஸனுக்கு ஒய்வு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி குறித்த டீ டுவென்டி தொடரின் அணித்தலைவராக டிம் சவுதி நியமிக்கப்பட்டுள்ளார். அதேவேளை கேன் வில்லியம்ஸனுடன் நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ட்ரெண்ட் போல்டுக்கும் டீ டுவென்ட்டி தொடரில் ஒய்வு வழங்கப்பட்டுள்ளது. அதேவேளை இலங்கைக்கெதிரான நியூசிலாந்து டீ டுவென்டி அணி விபரம் வெளியிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. http://www.dailyceylon.com/188138/
-
- 1 reply
- 641 views
-
-
இலங்கை அணி முதலில் துடுப்பாட்டம் இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது. இரு அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று காலை கொழும்பு பி. சரவணமுத்து மைதானத்தில் ஆரம்பமாகவிருந்த நிலையில் மழை காரணமாக போட்டியின் நாணயச்சுழற்சி தாமதமாகியது. இன்றைய போட்டியில் இலங்கை அணியின் இளம் சுழற்பந்து வீச்சாளர் அகில தனஞ்ஜயவுக்கு பதிலாக அனுபவ சுழற்பந்துவீச்சாளர் டில்ருவன் பெரேரா இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது . http://www.dailyceylon.com/188267/
-
- 0 replies
- 729 views
-
-
சாதனை படைத்த மட்டக்களப்பு வீரர்கள் ! தேசிய போட்டி விளையாட்டு நிகழ்வுகளில் பங்குகொண்டு மட்டக்களப்பு மாவட்ட விளையாட்டு வீரர்கள் சாதனை படைத்துள்ளனர். தேசிய ரீதியான மல்யுத்த போட்டிகளில் மட்டக்களப்பு மாவட்ட வீரர்கள் தொடர்ச்சியான சாதனைகளை பதிவுசெய்துவருகின்றனர். இதன்கீழ் கடந்த 17,18ஆம் திகதிகளில் விளையாட்டு அமைச்சின் விளையாட்டு உள்ளரங்கில் நடைபெற்ற பாடசாலை மட்ட மற்றும் கழகங்களுக்கிடையிலான போட்டிகளில் கிழக்கு மாகாண ரீதியாக கலந்துகொண்ட மட்டக்களப்பு வீரர்கள் கலந்துகொண்டு சாதனை படைத்துள்ளனர். மட்டக்களப்பு இந்துக்கல்லூரியின் மாணவன் சிவநாதன் அனோஜன் 20வயது 74 கிலோவுக்கான பிரிவில் கலந்துகொண்டு தங்கப்பதக்கம் பெற்று மாவட்டத்திற்கு பெருமைசேர்த்துள்ளார். அதேபோன்…
-
- 0 replies
- 491 views
-