Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. இலங்கை கிரிக்கேட் அணியும் தமிழீழ தேசியத் தலைவரின் திட்டங்களும் 15:16 - By ம.தி.சுதா 0 இப்பதிவு சற்றுப் பெரியது தான் ஆனால் கிரிக்கேட் பற்றிப் பேசும் ஒவ்வொருவரும் அறிய வேண்டிய வரலாறுகள் சிலதை உள்ளடக்கியிருக்கிறேன். தமிழிழம் உருவாக்கப்பட்டால் அதற்கான கட்டமைப்புத் திட்டங்கள் நூலாகவே வெளியிடப்பட்டிருந்தமை அனைவரும் அறிந்ததே. ஆனால் நூலிற்கப்பால் அத்தேசம் சர்வதேசங்களுக்கு நிகராக நிற்பதற்குரிய கனவுகளும் பெரிதாகவே இருந்தது. அதில் ஒன்று தான் கிரிக்கேட் அணியாகும். யுத்தகாலத்தில் கிளிநொச்சியில் மட்டும் 14 கடினப்பந்து கழகங்கள் போட்டிகளில் பங்கு பற்றிக் கொண்டிருந்தன. அதை வ…

  2. தர்ஜினி சிவலிங்கம்: உலகக் கோப்பை வலைப்பந்தாட்ட தொடரில் சாதனை படைத்த ஈழத் தமிழ் பெண் 4 மணி நேரங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைTHARJINI SIVALINGAM/FACEBOOK உலகக் கோப்பை வலைப்பந்தாட்டத் (நெட்பால்) தொடரில் அதிக கோல்கள் அடித்து ஈழத் தமிழ் பெண் தர்ஜினி சிவலிங்கம் சாதனை புரிந்துள்ளார். இலங்கை தேசிய அணியை …

  3. அடுத்த உலகக் கோப்பையில் நீங்கள் பார்க்கும் பாகிஸ்தான் அணி வேறு மாதரியாக இருக்கும் என அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார். உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி அரையிறுதி சுற்றுக்கு கூட தகுதி பெறாமல் லீக் சுற்றுடன் வெளியேறியது. இந்தியா அணிக்கு எதிரான மிகப் பெரிய தோல்விக்கு பின் பாகிஸ்தான் அணி பல விமர்சனங்களை சந்தித்து வருகிறது. டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி, அடுத்த ஆண்டு நடைபெற உள்ள டி20 தொடர்களை கருத்தில் கொண்டு பாகிஸ்தான் அணியில் அதிரடியான மாற்றங்களை ஏற்படுத்த முடிவெடுத்துள்ளனர். ஒரு நாள் போட்டி மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கு தனித்தனி கேப்டனை நியமிக்க முடிவு எடுத்துள்ளனர். மேலும் டி20 உலகக் கோப்பை தொடருக்கு தயராக அந்த அணி மற்ற தொடர்களில் பங்கேற்பதை குறைத்து கொண்…

    • 0 replies
    • 305 views
  4. யாழ்ப்பாணம் தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரியின் முன்னாள் கால்பந்தாட்ட பயிற்றுநர் அரி.பி.பத்மநாதன் ஞாபகார்த்த வெற்றிக் கிண்ணத்துக்கான கால்பந்தாட்டச் சுற்றுத் தொடர் சென்.பற்றிக்ஸ் கல்லூரி அணி கிண்ணம் வென்றது. இறுதியாட்டத்தில் சென்.பற்றிக்ஸ் கல்லூரி அணியை எதிர்த்து நெல்லியடி மத்திய கல்லூரி மோதியது. முதற்பாதி ஆட்ட முடிவில் சென்.பற்றிக்ஸ் கல்லூரி கல்லூரி 2: 1 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது. இரண்டாம் பாதி ஆட்ட முடிவில் இரண்டு அணியினரும் தலா ஒர் கோலைப் பதிவு செய்தனர். மூன்றாம் இடத்திற்…

  5. உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் நியூஸிலாந்து வீரர் கப்தில் வீசிய ஓவர் த்ரோவுக்கு 6 ரன்கள் வழங்கி தவறு செய்துவிட்டேன் என்று கூறிய இலங்கை நடுவர் தர்மசேனா ஆனால் அந்த தவறுக்கு ஒருபோதும் நான் வருத்தம் தெரிவிக்கமாட்டேன் என்று கூறி உள்ளார். இலங்கை சண்டே டைம்ஸ் பத்திரிக்கைக்கு அளித்த நேர்காணலில் அவர் இவ்வாறாக கூறி உள்ளார். உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இங்கிலாந்தும், நியூஸிலாந்தும் மோதின. இதில் இங்கிலாந்து அணி வெற்றி பெற 241 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. இந்த சூழலில் அந்த ஓவரின் 4-வது பந்தில் ஸ்டோக்ஸ் 2 ரன்கள் ஓட முயற்சிக்கும்போது, கப்தில் பீல்டிங் செய்து விக்கெட் கீப்பருக்கு பந்தை எறிந்தார். ஆனால், தனது விக்கெட்டை காப்பாற்றிக்கொள்ளும் நோக்கில், பாய்ந்தபோது அவ…

    • 0 replies
    • 868 views
  6. உலகக் கிண்ண வலைப்பந்தாட்டப் போட்டி – நியூஸிலாந்து ஐந்தாவது முறையாக சம்பியனானது July 22, 2019 உலகக் கிண்ண வலைப்பந்தாட்டப் போட்டியில் அவுஸ்திரேலிய அணியை வீழ்த்தி நியூஸிலாந்து அணி ஐந்தாவது முறையாக சம்பியன் கிண்ணத்தினைக் கைப்பற்றியுள்ளது. 16 நாடுகள் பங்குபற்றும் உலகக் கிண்ண வலைபந்தாட்டப் போட்டி கடந்த 12 ஆம் திகதி இங்கிலாந்தினல் லிவர்பூல் எரினா உள்ளக அரங்கில் ஆரம்பமாகியிருந்தது. இந் நிலையில் நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் நியூஸிலாந்து மற்றும் அவுஸ்திரேலிய அணிகள் போட்டியிட்ட நிலையில் 52-51 என்ற கணக்கில் நியூஸிலாந்து அணி வென்று சம்பியன் கிண்ணத்தினைக் கைப்பற்றியுள்ளது இதேவேளை பிளேஓப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை இங்கிலாந்து 58-42 என்ற…

  7. இலங்கை அணியின் வேக பந்து வீச்சாளர் லசித் மாலிங்க அவுஸ்திரேயாவிற்கு குடிபெயரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர் ஏற்கனவே அவுஸ்திரேலியாவில் நிரந்தர குடியுரிமையை பெற்றுள்ளதாக சர்வதேச விளையாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதற்கமைய எதிர்வரும் பங்களாதேஸ் அணியுடனான தொடரின் பின்னர் தமது குடும்பத்துடன் அவுஸ்திரேலியாவிற்கு குடிபெயரவுள்ளதாக அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன. தற்போது லசித் மாலிங்க அவுஸ்திரேலியாவில் தங்கியுள்ள நிலையில்,பங்களாதேஸ் உடனான தொடரில் பங்கேற்பதற்காக நாளைய தினம் இலங்கை வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை,அவுஸ்திரேலியாவிற்கு குடிபெயரவுள்ள அவருக்கு அங்கு பயிற்றுவிப்பாளர் பதவியும் வழங்கப்படவுள்ளதாக சர்வதேச விளையாட்டு தகவல்கள் மேலும் தெரிவிக்கின்…

    • 2 replies
    • 625 views
  8. மேற்கு இந்திய தீவுகளில் நடைபெறும் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. ஒருநாள் போட்டிகள், டி20, மற்றும் டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. டி20 போட்டிகளுக்கான அணியில் தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தருக்கும், டெஸ்ட் தொடரில் அஷ்வினுக்கும் இடம் கிடைத்துள்ளது. தோனிக்கு இந்த போட்டிகளில் இருந்து ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. விரலில் ஏற்பட்ட காயத்தினால் உலகக் கோப்பை அணியில் இருந்து பாதியில் விலகிய ஷிகார் தவான் மீண்டும் அணியில் இடம் பெற்றுள்ளார். ஆகஸ்டு 3ஆம் தேதி தொடங்கவுள்ள இந்தத் தொடரில் இரண்டு டெஸ்ட் போட்டிகளும், மூன்று ஒருநாள் போட்டிகளும், மூன்று டி20 போட்டிகளும் நடைபெறவுள்ளன. டி20க்கான அணி விராட் கோலி (கேப்டன்),…

    • 0 replies
    • 485 views
  9. எட்டு அணிகள் இடையிலான 4-வது தமிழ்நாடு பிரிமீயர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வரும் 19-ம் தேதி தொடங்குகிறது. சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் உரிமையாளர் பா.சிவந்தி ஆதித்தன், டி.என்.பி.எல். போட்டியின் மூலம் இளம் வீரர்களின் திறமை மேம்பட்டு வருகிறது. மலிங்கா போல் பந்து வீசும் வீரரை நாங்கள் எங்கள் அணிக்கு எடுத்துள்ளோம். அவரது பெயர் பெரியசாமி. 2-வது டிவிசன் போட்டிகளில் விளையாடி வரும் அவரை பற்றி நீங்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை. பயிற்சியின் போது அவர் பந்து வீசிய விதத்தை கண்டு ஆச்சரியப்பட்டு போனேன். இந்த வாய்ப்பை அவர் பயன்படுத்திக் கொள்வார் என்று நம்புகிறேன். டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் கிராமப்புற மாணவர்களுக்கு வாய்ப்பு அளிப்பது குறித்து கேட்கிறீர்கள். எங்கள் அணிக்கு த…

    • 0 replies
    • 1.1k views
  10. மேற்கிந்திய தீவுகளுக்கான இந்திய கிரிக்கட் அணியில், அணியின் முன்னாள் தலைவர் மகேந்திரசிங் தோனி கலந்து கொள்ள மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய பிராந்திய இராணுவத்தின் விசேட தொண்டர் படையணியில் லெப்டினன் கேணல் தரத்தில் உள்ளதனால், அவர் சேவைக்காக அழைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், எதிர்வரும் இரண்டு மாதங்களுக்கு அவர் இராணுவ சேவையில் இருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் ஒருநாள் கிரிக்கட் போட்டிகளில் இருந்து மகேந்திரசிங் தற்போது ஓய்வு பெறப்போவதில்லை என இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபையின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். 350 சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் பங்கு பற்றிய 38 வயதான தோனி, உல…

  11. 2023 இல் இந்தியாவில் இடம்பெறவுள்ள உலக கிண்ண போட்டிகளிற்காக தயாராகும் இலங்கை இங்கிலாந்து பயணித்த பாதையை பின்பற்றவேண்டும் எனகுமார் சங்கக்கார தெரிவித்துள்ளார் கல்ப்நியுசிற்கான தனது வாராந்த கட்டுரையில் குமார் சங்கக்கார இதனை தெரிவித்துள்ளார். 2015 உலக கிண்ணப்போட்டிகளில் ஏற்பட்ட அவமானத்தின் பின்னர் இங்கிலாந்து அணி கடந்துவந்துள்ள பாதை எதிர்காலத்திற்காக திட்டமிட விரும்பும் எந்த அணிக்கும் ஒரு சிறந்த பாடம் என அவர் குறிப்பிட்டுள்ளார். 2019 உலக கிண்ணத்தை வெல்வதற்கு தாங்கள் விளையாடவேண்டிய விதத்தையும் அதற்கான வீரர்களையும் இங்கிலாந்து அணியினர் இனம்கண்டுகொண்டனர் எனவும் குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார். 2023 இல் இந்தியாவில் இடம்பெறவுள்ள உலக கிண்ண போட்டிகளிற்காக த…

  12. ஐ.சி.சி. அதிரடி ; தகுதியை இழந்தது சிம்பாப்வே! சிம்பாப்வே கிரிக்கெட் அணி சர்வதேச கிரிக்கெட் சபையின் (ஐ.சி.சி) உறுப்பு நாடுகள் பட்டியலிலிருந்து இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளது. இதனால் சிம்பாப்வே அணியின் சர்வதேச கிரிக்கெட் சபையின் அங்கத்துவம் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளது. லண்டனில் இடம்பெற்ற ஐ.சி.சி.யின் மாநாட்டின்போது இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின் மூலம் சிம்பாப்வே அணிக்கான ஐ.சி.சி.யின் நிதியும் இல்லாது போவதுடன், சர்வதேச கிரிக்கெட் நிகழ்வுகளிலும், போட்டிகளிலும் கலந்து கொள்ளும் வாய்ப்பினையும் அந்த அணியும், அதன் பிரதிநிதிகளும் இழந்துள்ளதுள்ளனர். சிம்பாப்வே கிரிக்கெட் அணிக்கு அந்நாட்டு அரசாங்கத்தின் தலையீடு இருப்பதை உறுதிப்…

  13. மும்பை : 2019 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் வெற்றியாளர் பவுண்டரி எண்ணிக்கையை வைத்து தேர்வு செய்யப்பட்டது தவறு என பலரும் கூறி வரும் நிலையில், சச்சின் தன் கருத்தை கூறி இருக்கிறார். இரண்டு முறை டை ஆன, அந்த நேரத்தில் என்ன செய்திருக்க வேண்டும் என சச்சின் டெண்டுல்கர் ஐசிசி விதிக்கு மாற்றாக தன் யோசனையை முன் வைத்துள்ளார். மேலும், விளையாட்டில் கூடுதல் நேரம் கொடுப்பதை விட வேறு எதுவுமே முக்கியமல்ல என சுட்டிக் காட்டி ஐசிசிக்கு குட்டு வைத்துள்ளார். இதுவரை எந்த கிரிக்கெட் உலகக்கோப்பையிலும் நடக்காத அதிசயங்கள் 2019 உலகக்கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் நடந்தது. உலகக்கோப்பை இறுதிப் போட்டி இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் மோதிய இறுதிப் போட்டியில் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் இரு …

    • 0 replies
    • 672 views
  14. பங்களாதேஷ் அணியுடனான தொடரின் பின்னர் இலங்கை கிரிக்கெட் அணியின் அனைத்துப் பயிற்சியாளர்களையும் பதவி விலகுமாறு விளையாட்டுத் துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ பணிப்புரை விடுத்துள்ளார். இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும் பங்களாதேஷ் கிரக்கெட் அணியுடன் மூன்று சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடவுள்ளது. முதல் போட்டி எதிர்வரும் 26 ஆம் திகதி கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/60629

    • 0 replies
    • 532 views
  15. இலங்கைக்கான கிரிக்கட் சுற்றுலா பயணத்தினை மேற்கொள்ளவுள்ள பங்களாதேஸ் அணியின் குழாம் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 26 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதி வரை ஒருநாள் சர்வதேச போட்டிகள் 03 இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. குறித்த போட்டி கொழும்பு ஆர் பிரேமதாச விளையாட்டரங்கில் பகல் இரவு போட்டிகளாக இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதற்கமைய பங்களாதேஸ் அணியின் குழாம் விபரங்கள்.. Mashrafe Mortaza Mahmudullah Mohammad Mithun Mosaddek Hossain Mustafizur Rahman Sabbir Rahman Anamul Haque Mehidy Hasan Mohammad Saifuddin Mushfiqur Rahim Rubel Hossain Soumya Sarkar Tamim Iqbal http://www.hirunews.lk/tamil/sports/220438/பங்…

    • 1 reply
    • 516 views
  16. இங்கிலாந்து முதலிடம் ; இலங்கை எட்டாமிடம் ஐ.சி.சி. ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் புள்ளிகள் அடிப்படையில் முதல் இடங்களை பிடித்த அணிகள், பந்து வீச்சாளர், துடுப்பாட்ட வீரர் மற்றும் சகலதுறை ஆட்டக்காரர்களுக்கான பட்டியலை வெளியிட்டுள்ளது. 12 ஆவது சர்வதேச ஒருநாள் உலகக் கிண்ணத் தொடரானது நிறைவடைந்துள்ள நிலையிலேயே மேற்படி பட்டியலை ஐ.சி.சி. வெளியிட்டுள்ளது. அந்தப் பட்டியலில் 125 புள்ளிகளுடன் இங்கிலாந்து அணி முதலில் இடத்திலும், துடுப்பாட்டத்தில் 886 புள்ளிகளுடன் விராட் கோலியும், பந்து வீச்சில் 809 புள்ளிகளுடன் பும்ரா முதலாவது இடத்திலும் உள்ளனர். * ஒருநாள் அணிப் பட்டியில் : 1. இங்கிலாந்து - 125 2. இந்தியா - 122 3. நியூஸிலாந்து - 122…

    • 0 replies
    • 556 views
  17. 2019 - உலகக் கிண்ணத் தொடரில் பதியப்பட்ட முக்கிய சுவடுகள் ‍ ஐ.சி.சி. 12 ஆவது உலகக் கிண்ணத் தொடரானது கடந்த 31 ஆம் திகதி இங்கிலாந்தில் ஆரம்பமாகி நேற்றைய தினம் முடிவடைந்துள்ளது. மொத்தமாக 10 நாடுகள் கலந்துகொண்ட இத் தொடரின் இறுதிப் போட்டியில் இயன் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூஸிலாந்து அணியை வீழ்த்தி முதன் முறையாக சர்வதேச ஒருநாள் உலகக் கிண்ணத்தை கைப்பற்றியுள்ளது. இந்த உலகக் கிண்ணத் தொடரில் இடம்பெற்ற முக்கிய பதிவுகள் பின்வருமாறு : 1. பரிசுத் தொகை * சம்பியன் - இங்கிலாந்து - 4,000,000 அமெரிக்க டொலர்கள் ( இந்திய ரூபாவில் 28 கோடி) * ரன்னர் அப் - நியூஸிலாந்து - 2,000,000 அமெரிக்க டொலர்கள் ( இந்திய ரூபாவில…

  18. 2019 ஐசிசி கிரிக்கெட் உலகக்கோப்பை திருவிழா ஞாயிற்றுக்கிழமை முடிவடைந்த நிலையில் உலகக்கோப்பை அணி பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. பரபரப்பான இறுதிப் போட்டியில் கடும் போராட்டத்திற்கு இடையே நியூசிலாந்தை வீழ்த்தி இங்கிலாந்து முதல் முறையாக கோப்பையை வென்றது. இந்நிலையில் ஐசிசி அணியில் இந்தியாவை சேர்ந்த தொடக்க வீரர் ரோகித் சர்மா மற்றும் வேகப்பந்துவீச்சாளர் பும்ரா ஆகியோர் இடம்பிடித்துள்ளனர். இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ள வீரர்கள் பின்வருமாறு: ஐசிசி அணியில் இடம்பெற்றுள்ள வீரர்கள்: ஜேசன் ராய் ( இங்கிலாந்து) -443 ரன்கள் ரோகித் சர்மா ( இந்தியா) - 648 ரன்கள் கேன் வில்லியம்சன் ( நியூசிலாந்து) - 578 ரன்கள் ஷாகிப் அல் ஹசன் (வங்க தேசம்) - 606 ரன்கள் மற்றும் 11 …

    • 0 replies
    • 866 views
  19. தர்ஜினி சிவலிங்கத்தின் சாதனையுடன் தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளிவைத்தது இலங்கை! உலகக் கிண்ண வலைப்பந்தாட்டப் போட்டியில் சிங்கப்பூர் அணியை 50 – 88 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இலங்கை வலைபந்தாட்ட அணி தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தது. 15ஆவது உலகக் கிண்ண வலைப்பந்தாட்டத் தொடர் ஜுலை 12ஆம் திகதி முதல் 21ஆம் திகதி வரை லிவர்பூலில் நடைபெற்று வருகின்றது. இதில் ஏ குழுவில் இடம்பெற்றுள்ள இலங்கை அணி, உலக வலைப்பந்தாட்ட தரவரிசையில் தொடர்ந்து முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ள அவுஸ்ரேலியா மற்றும் வட அயர்லாந்து, சிம்பாப்வே, சிங்கப்பூர் ஆகிய அணிகளுடன் இடம்பெற்ற தமது குழுநிலைப் போட்டிகள் மூன்றிலும் தோல்வியடைந்த காரணத்தினால் தொடரின் இரண்டாம் சுற்றுக்கு தெரிவாகும் சந்த…

  20. ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனத்தினால் முதல் முறையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 19 வயதுக்குட்பட்டோருக்கான ‘சுப்பர் ப்ரொவென்ஷியல்’ கிரிக்கெட் போட்டித் தொடரில் தமிழ் பேசும் வீரர்கள் 6 பேர் இடம்பெற்றுள்ளனர். இந்த ஆறு பேரில் இருவர் யாழ்ப்பாணத்திலிருந்தும் , மட்டக்களப்பு, கண்டி மற்றும் கொழும்பிலிருந்து தலா ஒருவருமாக அடங்குகின்றனர். யாழ் மத்திய கல்லூரியின் விஜயகாந்த் வியாஸ்காந்த், கமலாராசா இயலரசன், யாழ் சென்.ஜோன்ஸ் கல்லூரியின் தெய்வேந்திரம் தினோசன் ஆகியோர் தம்புள்ளை அணிக்காகவும், கொழும்பு ஸாஹிரா கல்லூரியின் மொஹமட் சமாஸ் கொழும்பு அணிக்காகவும், கண்டி திரித்துவ கல்லூரியின் அபிஷேக் ஆனந்த குமார், மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் எஸ்.ஷகிர்தன் ஆகியோர் …

    • 0 replies
    • 686 views
  21. படத்தின் காப்புரிமை Gareth Copley-IDI/IDI via Getty Images ஜுலை 14, 2019 - இனிவரும் ஆண்டுகளில் கிரிக்கெட் உலகம் எண்ணற்ற முறைகள் நினைவுகூரும் நாளாக அமைய ஏராளமான வாய்ப்புகள் உண்டு. இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற பரபரப்பு மிகுந்த உலகக்கோப்பை இறுதி போட்டி டை ஆனதால், சூப்பர் ஓவர் முறையில் ஆட்டத்தின் முடிவை நிர்ணயிக்க தீர்மானிக்கப்பட்டது. முதலில் பேட் செய்த இங்கிலாந்து 15 ரன்கள் எடுக்க, 16 ரன்கள் எடுத்தால் நியூசிலாந்து உலகக்கோப்பையை வெல்லும் என்ற நிலையில் ரசிகர்கள் மிகவும் ஆவலாக காத்திருந்…

  22. இங்கிலாந்தின் ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் தற்போது புகழின் உச்சியில் இருக்கிறார். 'மனித சக்திக்கு அப்பாற்பட்டவர் பென் ஸ்டோக்ஸ், அவரது பங்களிப்பு அளப்பரியது' என்று இங்கிலாந்தின் கேப்டன் இயான் மோர்கன் புகழ்ந்துள்ளார். சமூக வலைதளங்களிலும் அவர் குறித்த பாராட்டுகளை பரவலாக காணமுடிகிறது. பென் ஸ்டோக்ஸ் சிறந்த ஆல்ரவுண்டர் என்பதும், பல போட்டிகளில் அவர் இங்கிலாந்தின் வெற்றிக்கு காரணமாக இருந்துள்ளார் என்பதும் பலரும் அறிந்த ஒன்றுதான் . ஆனால், கடந்த காலங்களில் ஏராளமான காயங்களையும், தோல்வி பழிகளையும் சுமந்துள்ள பென் ஸ்டோக்ஸ்க்குதான் தெரியும் இந்த வெற்றி எத்தனை இனிமையானது என…

  23. எதிர்வரும் 2023 ஆம் ஆண்டுக்கான ஐ.சி.சி. 13 ஆவது ஆண்களுக்கான சர்வதேச ஒருநாள் உலகக் கிண்ணத் தொடரானது இந்தியாவில் நடைபெறவுள்ளதாக ஐ.சி.சி. தகவல் வெளியிட்டுள்ளது. இத் தொடரானது 2023 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 9 ஆம் ஆரம்பமாகி மார்ச் 26 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதுடன் இறுதிப் போட்டியில் மும்பையில் இடம்பெறும். இந்தியா 1987, 1996 மற்றும் 2011 ஆகிய ஆண்டுகளில் ஆசிய அண்டை நாடுகளுடன் இணைந்து சர்வதேச ஒருநாள் உலகக் கிண்ணத் தொடரை நடத்தியிருந்தது. எனினும் இம்முறை ஏனைய நாடுகளுடன் கைகோர்க்காது தனியாக இத் தொடரை நடத்துவது இதுவே முதற் தடவை என்பதும் குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/60491

    • 0 replies
    • 368 views
  24. ஞாயிறன்று நடந்த 2019 உலகக்கோப்பைத் தொடரில் நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடயேயான பரப்பரப்பான இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணி தோல்வியைக் கண்டு அதிர்ச்சியடைந்ததாக நியூசிலாந்து பிரதமர் ஜெசிண்டா அர்டென் கூறியுள்ளார். தங்கள் நாட்டின் அணியைக் குறித்து பெருமிதம் கொள்வதாக அவர் ஆர்.என்.எஸ். செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளார். சமூக வலைதளத்தில் நியூசிலாந்து அணி போட்டியில் தோற்றாலும் மக்கள் மனதை வென்றுள்ளதாக நிறைய பேர் கருத்து தெரிவித்துள்ளனர். நியூசிலாந்து இந்த போட்டியில் பவுண்டரி கணக்கின் அடிப்படையில் தோல்வியடைந்ததால் இங்கிலாந்து முதல் முறையாக உலகக் கோப்பையை வென்றது. அனைத்து நியூசிலாந்து ரசிகர்களைப்போல நானும் ஆட்டத்தின் முடிவைக் கண்டு அதிர்…

    • 0 replies
    • 343 views
  25. 44 வருடகால கனவை சூப்பர் ஓவரில் நனவாக்கிய இங்கிலாந்து ! நியூஸிலாந்து அணியுடனான இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணி சூப்பர் ஓவரில் வெற்றிபெற்றுள்ளது. ஐ.சி.சி. 12 ஆவது உலகக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டி இன்று மாலை இலங்கை நேரப்படி 3.10 மணியளவில் லண்டன் லோர்ட்ஸ் மைதானத்தில் கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூஸிலாந்து, இயன் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணிகளுக்கிடையே ஆரம்பமானது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நியூஸிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 241 ஓட்டங்களை பெற்றது. 242 என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாட ஆரம்பித்த இங்கிலாந்து அணி சார்பில் ஆரம்ப வீரர்களாக ஜோனி …

    • 6 replies
    • 1.5k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.