Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. நெதர்லாந்து கால்பந்து வீரர் ராபின் வேன் பெர்ஸி கண்ணில் காயம் (வீடியோ) ராபின் வேன் பெர்ஸி நினைவிருக்கிறதா? பிரேசில் நாட்டில் 2014ல் நடந்த உலக கோப்பையில் ஸ்பெயின் அணிக்கு எதிராக அந்தரத்தில் பறந்து தலையால் முட்டி கோல் அடித்தாரே... யார் கண் பட்டதோ இப்போது அவர் கண்ணுக்கு சிக்கல். மான்செஸ்டர், ஆர்சனல் கிளப்களின் முன்னாள் வீரரான ராபின் தற்போது, துருக்கியில் உள்ள பெனர்பேஸ் அணிக்காக விளையாடி வருகிறார். ஞாயிற்றுக்கிழமை நடந்த லீக் போட்டியின்போது பெனர்பேஸ் - அகிசர் அணிகள் மோதின. பெனர்பேஸ் அணியின் முதல் கோலை ராபின் அடித்தார். ஆட்டத்தின் 37-வது நிமிடத்தில், பெனால்டி பாக்ஸில் வைத்து அகிசர் அண…

  2. ஒரே வருடத்தில் 3 இரட்டை சதங்கள்: சாதனைப் படைப்பாரா விராட் கோலி ஒரே வருடத்தில் 3 இரட்டை சதங்கள் அடித்த முதல் இந்தியர் என்ற சாதனையை விராட் கோலி படைப்பாரா? என்ற எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி இன்று விசாகப்பட்டினத்தில் தொடங்கியது. முதல் நாள் ஆட்டம் முடிவில் இந்தியா 4 விக்கெட் இழப்பிற்கு 317 ரன்கள் குவித்துள்ளது. இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 151 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் உள்ளார். நாளை 2-வது நாள் ஆட்டத்தில் மேலும் 49 ரன்கள் எடுத்தால் விராட் கோலி இரட்டை சதம் அடிப்பார். அப்படி இரட்…

  3. 2019 வரை மெத்தியூஸே அணித் தலைவர் ; திலங்க சுமதிபால இலங்கை அணித் தலைவரை மாற்றுவது தொடர்பில் கலந்தாலோசிக்கவில்லை. அடுத்த உலகக்கிண்ணம் வரை அஞ்சலோ மெத்தியூஸ் தான் அணித்தலைவரென இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் திலங்க சுமதிபால தெரிவித்தார். இலங்கை கிரிக்கெட் சபையின் கோட்போர் கூடத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், இலங்கை அணித் தலைவர் அஞ்சலோ மெத்தியூஸை மாற்றுவது தொடர்பில் நாம் கலந்துரையாடவில்லை. அணியில் தற்போது இருக்கும் குறைநிறைகளை பற்றியே நாம் ஆராய்ந்தோம்…

  4. சங்கக்கார சதம், குலசேகர அதிரடியால் இலங்கை அபார வெற்றி! ​செம்பியன்ஸ் கிண்ண போட்டியில் இலங்கை மற்றும் இங்கிலாந்து மோதிய நேற்றைய ஆட்டத்தில் இலங்கை அணி 7 விக்கெட்களால் அபார வெற்றிபெற்றுள்ளது. போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற இலங்கை முதலில் இங்கிலாந்து அணியை துடுப்பெடுத்தாட அழைத்தது. அதன்படி இங்கிலாந்து முதலில் துடுப்பெடுத்தாடி 50 ஓவர்கள் நிறைவில் 07 விக்கெட்களை இழந்து 293 ஓட்டங்களைப் பெற்றது. இங்கிலாந்து சார்பில் ஜொனதன் டிரொட் 76 ஓட்டங்களையும் ரூட் 68 ஓட்டங்களையும் குக் 59 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் மலிங்க, எரங்க, ஹேரத் ஆகியோர் தலா இவ்விரு விக்கெட்களை வீழ்த்தினர். 294 என்ற வெற்றியிலக்கோடு களமிறங்கிய இலங்கை அணி குமார் சங்கக்காரவின் அபார சதம் ம…

    • 11 replies
    • 1.9k views
  5. 'இந்திய கிரிக்கெட்டில் யுவராஜ், தோனியின் நிலை என்ன?' - கேள்வி எழுப்பும் டிராவிட்! 'இன்னும் இரண்டு ஆண்டுகளில் உலகக் கோப்பை வரப் போகிறது. அதற்கு முன் இந்திய அணியில் இருக்கும் சீனியர் கிரிக்கெட் வீரர்களான யுவராஜ் சிங் மற்றும் தோனி குறித்து ஒரு முடிவு எடுக்கப்பட வேண்டும்' என்று கூறியுள்ளார் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட். சாம்பியன்ஸ் டிராபி போட்டிகளின்போது இந்திய அணியில் இடம் பெற்றிருந்த சீனியர் கிரிக்கெட் வீரர்களான யுவராஜ் சிங் மற்றும் தோனி, பெருமளவு சோபிக்கவில்லை. குறிப்பாக, இறுதிப் போட்டியில் அவர்கள் சாதிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இருவருமே சொற்ப ரன்களுக்கு அவுட்டாகி வெளியேறினர். இதையடுத்து, அணியில் அவர்கள் இடம் குறி…

  6. இலங்கையின் உலகக் கிண்ண வாய்ப்பை உறுதி செய்த இங்கிலாந்து 2019ம் ஆண்டு உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளுக்கு இலங்கை அணி தகுதி பெற்றுள்ளது. ஒருநாள் போட்டி தரவரிசையில் முதல் எட்டு இடங்களைப் பிடிக்கும் அணிகளே உலகக் கிண்ணத்தில் விளையாட தகுதி பெறும். இந்த நிலையில், இந்தியாவுடன் இடம்பெற்ற ஒருநாள் போட்டித் தொடரில் தோல்வியைத் தழுவிய இலங்கை அணி, உலகக் கிண்ணப் போட்டிகளில் விளையாடுவது உறுதியற்றதாக இருந்தது. எனினும், நேற்று இங்கிலாந்துடன் இடம்பெற்ற ஒருநாள் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி தோல்வியடைந்து தரவரிசையில் பின்தள்ளப்பட்டதால், இலங்கை அணி உலகக் கிண்ணப் போட்டிகளுக்கு தகுதி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, அவுஸ்திரேலியா, பங்களாதேஷ…

  7. பரிஸ் ஸா ஜெர்மனை வென்றது பெயார்ண் மியூனிச் ஐரோப்பிய கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான சம்பியன்ஸ் லீக் குழுநிலைப் போட்டிகளில், நேற்று இடம்பெற்ற போட்டிகளில், பெயார்ண் மியூனிச், பார்சிலோனா, ஜுவென்டஸ், மன்செஸ்டர் யுனைட்டெட், றோமா ஆகிய அணிகள் வென்றதோடு, செல்சி, அத்லெட்டிகோ மட்ரிட் ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டி சமநிலையில் முடிவடைந்தது. ஜேர்மனிய புண்டெலிஸ்கா கழகமான பெயார்ண் மியூனிச், 3-1 என்ற கோல் கணக்கில் பிரெஞ்சு லீக் 1 கழகமான பரிஸ் ஸா ஜெர்மனை வென்றது. பெயார்ண் மியூனிச் சார்பாக, கொரென்டின் டொலிஸோ இரண்டு கோல்களையும் றொபேர்ட் லெவன்டோஸ்கி ஒரு கோலையும் பெற்றனர். பரிஸ் ஸா ஜெர்மைன் சார்பாகப் பெறப்பட்ட கோலை கிலியான் மப்பே …

  8. இருபதுக்கு - 20 ஆசியக் கிண்ண கிரிக்கெட்டில் சம்பியனாகுவதற்கு முயற்சி - இலங்கை மகளிர் அணித் தலைவி By DIGITAL DESK 5 28 SEP, 2022 | 03:00 PM (நெவில் அன்தனி) பங்களாதேஷில் நடைபெறவுள்ள மகளிர் இருபது 20 ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியில் மிகத் திறமையாக விளையாடி சம்பியனாவதற்கு முயற்சிப்பதாக இலங்கை மகளிர் அணித் தலைவி சமரி அத்தப்பத்து தெரிவித்தார். பங்களாதேஷில் அக்டோபர் 1ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள மகளிர் இருவது 20 ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியில் பங்குபற்றுவதற்காக ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்திலிருந்து இன்று புதன்கிழமை (28) அதிகாலை புறப்படுவதற்கு முன்னர் செய்தியாளர்களிடம் பேசியபோதே அவர் இதனைத் தெரிவித்தார…

  9. 2018 ஆம் ஆண்டு உலககிண்ணக் கால்பந்தாட்டச் சுற்றுப்போட்டிகளை நடத்துவதற்கான உரிமையை ரஷ்யா வென்றுள்ளது. சுவிட்ஸர்லாந்து தலைநகர் சூரிச்சிலுள்ள சர்வதேச கால்பந்தாட்டச் சம்மேளனத்தின் (ஃபீஃபா) தலைமையகத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில் ரஷ்யா வெற்றி பெற்றுள்ளது. இப்போட்டிகளை நடத்துவதற்கு ரஷ்யாவுடன் இங்கிலாந்தும் போட்டியிட்டது. அதேவேளை இப்போட்டிகளை இணைந்து நடத்துவதற்கு ஸ்பெய்ன் -போர்த்துகல் முயற்சித்தன. இதேபோல் நெதர்லாந்து- பெல்ஜியம் ஆகியனவும் இணைந்து நடத்த முயற்சித்தன. இவற்றில் ரஷ்யா தெரிவு செய்யப்பட்டதாக ஃபீஃபா தலைவர் ஸெப் பிளாட்டர் அறிவித்தார். >இதேவேளை 2022ஆம்ஆண்டு உலககிண்ண கால்பந்தாட்டப் போட்டிகளை நடத்துவதற்கான அனுமதியை மத்திய கிழக்கு நாடான கட்டார் பெற்றுள்ளது. …

  10. வங்கதேசத்தை மூழ்கடித்த ராம்தின், டேரன் பிராவோ சாதனை சதங்கள் செயிண்ட் கிட்ஸ் மைதானத்தில் நேற்று நடைபெற்ற 3வதும், இறுதியுமான ஒரு நாள் போட்டியில் மேற்கிந்திய அணியின் பேட்டிங் வங்கதேசத்தை மூழ்கடித்தது. முதலில் பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 338 ரன்கள் விளாச, வங்கதேசம் 247 ரன்களை மட்டுமே எடுத்து படுதோல்வி தழுவியது. இதன் மூலம் 3 ஒருநாள் போட்டிகளிலும் தோல்வி அடைந்தது வங்கதேசம். வெஸ்ட் இண்டீஸ் அணியின் தினேஷ் ராம்தின், டேரன் பிராவோ இணைந்து 3வது விக்கெட்டுக்காக 258 ரன்கள் சேர்த்தது. புதிய ஒருநாள் சாதனையாகும். இதற்கு முன்னர் தென் ஆப்பிரிக்க ஜோடி ஹஷிம் ஆம்லா, ஏ.பி.டிவிலியர்ஸ் பாகிஸ்தானுக்கு எதிராக 3வது விக்கெட்டுக்காகச் சேர்த்த 238 ரன்களே உலக சாதனைய…

  11. களத்தில் அதிரடியாக ஆடும் ஹெர்ஷல் கிப்ஸ், கிரிக்கெட் சூதாட்ட விசாரணையின் போது மிரண்டு போயுள்ளார். டில்லி பொலிஸார் இவரிடம் 100க்கும் அதிகமான கேள்விகளை கேட்டு மடக்கியுள்ளனர். மிகுந்த பதற்றமாக இருந்த கிப்ஸ், சில கேள்விகளுக்கு `மறந்து விட்டேன்', `நினைவுக்கு வரவில்லை' என்று கூறி சமாளித்துள்ளார். 2000 ஆம் ஆண்டில் தென் ஆபிரிக்க அணி இந்தியா வந்த போது கிரிக்கெட் சூதாட்ட சர்ச்சை வெடித்தது. இதில் அப்போதைய கப்டன் குரோஞ்ஞே, கிப்ஸ், சுழற்பந்து வீச்சாளர் நிக்கி போஜே சிக்கினர். குரோஞ்ஞே மரணமடைய, மற்ற இருவர் மீதான வழக்கு நிலுவையில் உள்ளது. இது தொடர்பாக கைது செய்யப்படும் அபாயம் இருந்ததால் இந்தியப் பயணத்தை கிப்ஸ் தவிர்த்து வந்தார். இந்தச் சூழலில் இவர் மினி உலகக் கிண்ணத் தொடரில…

  12. கால்பந்து வீரருக்கு மரண தண்டனை: பெரும் அதிர்ச்சியில் ரசிகர்கள் உலகக் கிண்ண கால்பந்தாட்ட போட்டித் தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இந்நிலையில் கால்பந்து வீரர் அமீர் நசீருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளமை சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈரான் தேசிய கால்பந்தாட்ட அணியில் இடம்பெற்றுள்ள அமீர் நசீர் அந்நாட்டின் பீரிமியர் லீக் போட்டிகளிலும் விளையாடி வருகிறார். இந்நிலையில் ஈரானில் மாஷா அமினி என்ற இளம்பெண்ணின் மரணத்தைத் தொடர்ந்து ஈரானில் ஹிஜாப் எதிர்ப்புப் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. பொது வெளியில் தூக்குத் தண்டனை இந்த ஹிஜாப் எதிர்ப்பு போராட்டத்தில் அமீர் நசீர் கலந்துக்கொண்டுள்ளார். இதன்போது ‘கடவுளுக்கு எதிரான போ…

  13. வேயன் ஸ்மித்தின் கனவைத் தகர்த்த இந்தியா...! டெல்லி: நீதிமன்றம் கண்டிராத விசித்திரம் இது என்று பராசக்தியில் வசனம் வரும். அப்படித்தான் ஆகியுள்ளது மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் வீரர் வேயன் ஸ்மித்தின் நிலையும். கடந்த 10 வருடமாக அவர் கிரிக்கெட் ஆடி வருகிறார். 92 ஒரு நாள் போட்டிகளில் ஆடி விட்டார். ஆனால் இதுவரை ஒரு சதம் கூட போட்டதில்லை. நேற்று டெல்லியில் நடந்த இந்தியா, மேற்கு இந்தியத் தீவுகள் இடையிலான 2வது ஒரு நாள் போட்டியில் பிரமாதமாக ஆடிய ஸ்மித், 97 ரன்களில் பரிதாபமாக அவுட்டாகி விட்டார். அவரது 10 வருட சதக் கனவு நேற்றும் கை கூடாமல் போய் விட்டது. நேற்று ஸ்மித் ஆடியது அவரது 93வது ஒரு நாள் போட்டியாகும். இதுவரை ஒரு சதம் கூட போடாமல் கிட்டத்தட்ட 100 ஒரு நாள் போட்டிகளை நெருங…

  14. இந்தியா-ஆஸ்திரேலியா டெஸ்ட் போட்டி ஒன்றில் ஸ்பாட் பிக்சிங்: அல்ஜசீரா வீடியோவால் பரபரப்பு படம். | ஏ.பி. இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையே 2017-ல் ராஞ்சியில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் ஸ்பாட் பிக்சிங் நடந்ததாக அல் ஜஸீரா தொலைக்காட்சி வெளியிட்ட வீடியோவினால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து ஈஎஸ்பிஎன் கிரிக் இன்போவில் வெளியான செய்தியில் கூறப்பட்டிருப்பதாவது: அல்ஜஸீரா டிவி சேனல் ஆவண வீடியோ ஒன்றில் ராஞ்சியில் இந்தியா-ஆஸ்திரேலியா 2017 தொடரில் ஆடிய டெஸ்ட் போட்டி பற்றி காட்டப்பட்டது. இந்த டெஸ்ட் போட்டியின் ஒரு கட்டத்தில் இரண்டு ஆஸ்திரேலிய வீரர்கள் சூதாட்டக்காரர்களின் நலன்களுக்காக ஸ்கோர் செய்தத…

  15. வருடத்தின் அதிசிறந்த ஐ.சி.சி. கிரிக்கெட் வீரர் பாபர் அஸாம் ! வீராங்கனை நட்டாலி சிவர் By VISHNU 26 JAN, 2023 | 03:37 PM (என்.வீ.ஏ.) வருடத்தின் அதிசிறந்த ஐ.சி.சி .கிரிக்கெட் வீரருக்கான சேர் ஜோன் கார்பீல்ட் விருதை பாகிஸ்தான் அணித் தலைவர் பாபர் அஸாம் வென்றெடுத்தார். வருடத்தின் அதிசிறந்த ஐ.சி.சி. கிரிக்கெட் வீராங்கனைக்கான ரஷேல் ஹேவோ விருது இங்கிலாந்தின் நட்டாலி சிவருக்கு கிடைத்துள்ளது. வருடத்தின் அதிசிறந்த ஐசிசி ஒரு நாள் கிரிக்கெட் வீரருக்கான விருதை பாகிஸ்தான் அணித் தலைவர் பாபர் அஸாம் இர்ணடாவது தொடர்ச்சியான தடவையாக வென்றெடுத்துள்ளார். வருடத்தின் அதிசிறந்த ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் வீரருக்…

  16. ஆறு மாதங்களில் இலங்கை சிறந்த அணியாக உருவெடுக்கும் – ஹத்துருசிங்க எதிர்வரும் ஆறு மாதங்களுக்குள் இலங்கை அணி சிறந்த நிலைக்கு வந்துவிடும் என தெரிவித்துள்ள இலங்கை அணியின் பயிற்றுவிப்பாளர் சந்திக்க ஹத்துருசிங்க, அடுத்த வருடம் இங்கிலாந்தில் நடைபெறவுள்ள உலகக் கிண்ணப் போட்டிகள் வரை பொறுமையுடன் இருக்குமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேற்கிந்திய தீவுகள் அணியுடனான டெஸ்ட் தொடரின் பிறகு அங்கு சென்றுள்ள இலங்கை ஊடகவியலாளர்களுக்கு சந்திக்க ஹத்துருசிங்க பிரத்தியேக நேர்காணல் ஒன்றை வழங்கியிருந்தார். அதில் இலங்கை அணி பெற்றுக்கொண்ட வரலாற்று வெற்றி குறித்து அவர் கருத்து வெளியிடுகையில், ”மேற்கிந்திய தீவுகளுக்கு நாங்கள் வந்தபோ…

  17. உளவியல் ரீதியாக அச்சுறுத்த வேண்டும் : மிட்செல் ஜான்சன் எதிரணியை அச்சுறுத்த உளவியல் ரீதியான போர்முறை அவசியமானது என்று ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஜான்சன் கூறியுள்ளார். ‘மிட்சல் ஜான்சன்: பவுன்சிங் பேக்’ என்கிற புதிய டிவிடியில் வேகப்பந்து வீச்சின் உத்திகள் பற்றி ஜான்சன் விளக்கியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: சிலநேரங்களில் ஆடுகளங்களில் மோசமாகப் பேசிவிடுகிறோம். சிலநேரங்களில் நாம் பேசுவது பேட்ஸ்மேனிடம் சிறிது தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அவர்களுடைய கால்நகர்த்தல்களைப் பற்றி யோசிக்கவைக்கிறோம், அல்லது ஷார்ட் பந்து வீசுவதை அவர்கள் அறியும்படி செய்கிறோம். இவை எல்லாமே மனஉறுதியை தீர்மானிக்கும் விளையாட்டு. சிலநேரங்களில் தொலைக்காட்சியில் பார்க்கும்போது ஒருவருக்…

  18. உலக கோப்பையில் எதிர்பார்ப்பை எகிற வைக்கும் டாப்-10 பேட்ஸ்மேன்கள்! சென்னை: வரும் 14ம்தேதி உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தொடங்க உள்ள நிலையில், பல நாட்டு ரசிகர்களும் தங்களது ஃபேவரைட் ஹீரோ பேட்ஸ்மேன்கள் மீது ஏகத்துக்கும் எதிர்பார்ப்பை வைத்து காத்திருக்கின்றனர். இந்த உலக கோப்பையில் ஜொலிக்க வாய்ப்புள்ள கிரிக்கெட் வீரர்களில் முக்கியமான பத்து பேரின் பெயர்களையும், அதற்கான காரணங்களையும் இப்போது பார்க்கலாம். ஏபிடி வில்லியர்ஸ் ஒருநாள் கிரிக்கெட் போட்டி தரவரிசையில் முதலிடத்தில் கம்பீரமாக அமர்ந்திருப்பவர் தென் ஆப்பிரிக்காவின் ஏபிடி வில்லியர்ஸ். டெஸ்ட் போட்டியிலும் 2வது ரேங்க் இவருக்கு என்பதில் இருந்து எத்தனை திறமையான மனிதர் என்பதை புரிந்துகொள்ள முடியும். தொடர்ந்து 78 டெஸ்ட்…

  19. "ராக்கெட்" கெய்லின் செம ரெக்கார்ட்... 500 சிக்ஸ் அடித்து உலக சாதனை! பெங்களூர்: டுவென்டி 20 போட்டிகளில் 500 சிக்ஸர்களை விளாசி புதிய உலக சாதனை படைத்துள்ளார் கிறிஸ் கெய்ல். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக தற்போது ஆடி வரும் கெய்ல், இதுவரை ஆடியுள்ள டுவென்டி 20 போட்டிகளில் மொத்தமாக 500 சிக்ஸர்களைக் குவித்து புதிய வரலாறு படைத்துள்ளார். நேற்று நடந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் போது தனது 500வது சிக்ஸரை விளாசினார் கெய்ல். இது கெய்லுக்கு 201வது டுவென்டி 20 போட்டியாகும். இவருக்கு அடுத்த இடத்தில் சக மேற்கு இந்தியத் தீவுகள் அணி வீரரான கீரன் போலார்ட் உள்ளார். அவர் இதுவரை 348 சிக்ஸர்களை விளாசியுள்ளார். ஐபிஎல் வரலாற்றிலும் அதிக சிக்ஸர்களை விளாசியவர் கெய்ல்தான்.…

  20. இந்தியா-வங்கதேசம் போட்டி அட்டவணை இந்திய கிரிக்கெட் அணி வரும் ஜூன் மாதம் வங்கதேசத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்நாட்டு அணியுடன் ஒரு டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. இந்திய அணி ஜூன் 7-ம் தேதி வங்கதேசத்துக்கு புறப்படுகிறது. டெஸ்ட் போட்டி ஜூன் 10-ம் தேதி ஃபதுல்லாவில் நடைபெறுகிறது. 9 ஆண்டுளுக்குப் பிறகு ஃபதுல்லா மைதானத்தில் டெஸ்ட் போட்டி நடைபெறவுள்ளது. டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக ஒரு பயிற்சி போட்டியிலும் இந்திய அணி விளையாடுகிறது. மூன்று ஒருநாள் போட்டிகள் முறையே ஜூன் 18, 21, 24 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. வங்கதேசத்தில் அடுத்த மாதம் மழைக்காலம் என்பதால் ஒருநாள் போட்டி மழையால் தடைபட வாய்ப்புள்ளது. ஒருவேளை போட்டி தடைபடுமானால் அடுத்த நாளில் நடத…

  21. இங்கிலாந்துக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 381 ஓட்ட வித்தியாசத்தில் மேற்கிந்திய தீவுகள் வெற்றி : January 27, 2019 பிரிட்ஜ்டவுனில் நடைபெற்ற இங்கிலாந்துக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 381 ஓட்ட வித்தியாசத்தில் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றியீட்டியுள்ளது. நாணயச்சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணி முதலில் களத்தடுப்பினை தெரிவு செய்த நிலையில் முதல் துடுப்பாட்டத்தினை மேற்கொண்ட மேற்கிந்திய தீவுகளுகள் அணி முதல் இன்னிங்சில் 289 ஓட்டங்களை எடுத்த அதே வேளை இங்கிலாந்து 77 ஓட்டங்களை மாத்திரமே பெற்றிருந்தது. இதனையடுத்து 212 ஓட்டங்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய மேற்கிந்திய தீவுகள் 6 விக்கெட் இழப்பிற்கு 415 ஓட்டங்கை பெற்ற நிலையில் விளையாட்டினை நி…

  22. மைக்கேல் கிளார்க்கின் டாப்-5 வீரர்கள் பட்டியலில் சச்சின் டெண்டுல்கர் தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்வில் தன்னுடன் ஆடிய 5 மிகப்பெரிய கிரிக்கெட் வீரர்கள் பட்டியலில் சச்சின் டெண்டுல்கர் பெயரை சேர்த்துள்ளார் மைக்கேல் கிளார்க், ட்விட்டரில் ரசிகர்களுடன் உரையாடல் நடத்திய ஆஸி. டெஸ்ட் கேப்டன் மைக்கேல் கிளார்க் தன் காலத்திய மிகச்சிறந்த வீரர்களாக 5 வீரர்களின் பெயர்களை வெளியிட்டார். இதில் சச்சின் டெண்டுல்கரை அவர் குறிப்பிட்டுள்ளார். ஷேன் வார்ன், கிளென் மெக்ரா, தென் ஆப்பிரிக்க ஆல்ரவுண்டர் ஜாக் காலிஸ், மற்றும் மே.இ.தீவுகளின் பிரையன் லாரா ஆகியோர் கிளார்க்கின் டாப்-5-ல் இடம்பெற்ற மற்ற வீரர்களாவர். தான் எதிர்கொண்ட அதிவேகப்பந்து வீச்சாளர் யார் என்ற கேள்விக்கு பாகிஸ்தானின் 'ர…

  23. சர்வதேச கிரிக்கெட்டில் முன்னணி வீரர் விராட் கோலி. இந்திய அணிக்காக விளையாடி வரும் விராட் கோலி பொலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மாவை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில், விராட் கோலி – அனுஷ்கா ஷர்மா தம்பதிக்கு இரண்டாவதாக அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனை அத்தம்பதி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது தொடர்பாக அனுஷ்கா ஷர்மா தனது இன்ஸ்டாகிராம் அக்கவுண்டில் பதிவிட்டுள்ளார். அதில், “பெப்ரவரி 15 ஆம் திகதி எங்கள் ஆண் குழந்தை அகாயையும், வமிகாவின் சிறிய சகோதரனையும் இந்த உலகிற்கு வரவேற்றோம் என்பதை மிகுந்த மகிழ்ச்சி மற்றும் மனம் முழுக்க அன்புடன், உங்களிடம் பகிர்ந்து கொள்கிறோம். எங்கள் வாழ்க்கையில் மிகவும் அழகான இந்த நேரத்தில் உங்கள் அனைவர…

  24. அப்துல் கலாம் மறைவுக்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் மவுன அஞ்சலி! சென்னை:குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாம் மறைவை முன்னிட்டு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்திய, ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் மவுனஅஞ்சலி செலுத்தினர். சென்னை சேப்பக்கம் மைதானத்தில் இந்திய -ஆஸ்திரேலிய 'ஏ ' அணிகளுக்கிடையேயான 2வது டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் செய்யத் தீர்மானித்தது. முன்னதாக இந்த போட்டி தொடங்கும் முன், மறைந்த குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாமின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், 2 நிமிடம் மவுனஅஞ்சலி கடைபிடிக்கப்பட்டது. அதோடு இரு அணி வீரர்களும் கறுப்பு பட்டையை கையில் அணிந்தவாறு விளையாடினர். இந்திய அணி 45 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து வ…

  25. 1987 இல் இடம்பெற்ற 4 ஆவது உலகக்கிண்ணத் தொடர் ; ஒரே பார்வையில்... கடந்த 1987 ஆம் ஆண்டு இடம்பெற்ற நான்காவது சர்வதேச ஒருநாள் உலகக் கிண்ணத் தொடரில் இங்கிலாந்தை தோற்கடித்து அவுஸ்திரேலியா கிண்ணத்தை தனதாக்கியது. * இந்தியா, பாகிஸ்தான் நாடுகளில் 1987 ஆம் ஆண்டு ஒக்டோபர் 8 ஆம் திகதி முதல் நவம்பர் 8 ஆம் திகதி வரை நடைபெற்றது. இதன் மூலம் இங்கிலாந்துக்கு வெளியில் உலகக் கிண்ணத்தை நடத்திய முதல் நாடுகளாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் பதிவாயின. எனினும் ஐ.சி.சி.யின் ஆதிக்க சக்திகளாக இருந்த இங்கிலாந்து மற்று அவுஸ்திரேலியா ஆசிய கண்டத்தில் உலகக் கிண்ணத்தை நடத்துவதற்கு எதிர்ப்பின‍ை வெளிப்படுத்தின. எனினும் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளின் பின்னர் தொடரை பாகிஸ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.