விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7859 topics in this forum
-
போதைப்பொருள் குற்றச்சாட்டில் முன்னணி வீராங்களை மரியா ஷரபோவா தற்காலிக நீக்கம் முன்னாள் முதல்தர டென்னிஸ் வீராங்கனையான ரஷ்யாவின் மரியா ஷரபோவா(28) போதைப்பொருள் பயன்படுத்தியது உறுதியானதையடுத்து தற்காலிகமாக நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் கலந்து கொள்ளவிருந்த நிலையில் அவருக்கு போதைப் பொருள் சோதனை நடத்தப்பட்டது. அதில் மரியா ஷரபோவா தோல்வியுற்றுள்ளார். ஷரபோவா போதைப் பொருள் பயன்படுத்தியது சோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. விதிமுறைகளுக்கு எதிரான அளவு அதிகமாக மெக்னீசியம் எடுத்துக் கொண்டமை கண்டறியப்பட்டுள்ளது. கடந்த 10 வருடங்களாக அவர் போதைப் பொருள் பயன்படுத்தி வந்துள்ளார் என்பது சோதனையில் தெரியவந்துள்ளது. இதனைய…
-
- 4 replies
- 750 views
-
-
விடைபெற்றார் கால்பந்து நட்சத்திரம் ககா பிபாவின் 2002ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தை வென்ற பிரேசில் அணியில் இடம்பிடித்தவரும் AC மிலான் மற்றும் ரியல் மெட்ரிட் ஆகிய பிரபல அணிகளின் முன்னாள் மத்தியகள வீரருமான ரிகார்டோ ககா கால்பந்து போட்டிகளில் இருந்து தனது ஓய்வை அறிவித்துள்ளார். தற்பொழுது 35 வயதுடைய ககா பிரேசிலின் சாவோ போலோ அணிக்காக தனது கால்பந்து வாழ்வை ஆரம்பித்தார். மிக அண்மை வரை ஓர்லான்டோ சிட்டி MLS கழகத்திற்காக அவர் ஆடினார். கடந்த ஒக்டோபரில் முடிவடைந்த ஓர்லான்டோ பருவகால போட்டிகளிலேயே ககா கடைசியாக கால்பந்து போட்டிகளில் ஆடியிருந்தார். அது போன்றே AC மிலான் கழக இயக்குனர் பதவி ஒன்றுக்கு தான் அழைக்கப்பட்டதை கடந்த நவம்பரில் க…
-
- 1 reply
- 749 views
-
-
சோதனைகளில் சாதித்த இம்ரான் கான் - சிறப்பு பகிர்வு.. உலகக்கோப்பையில் ஆசிய அணிகளின் ஆதிக்கத்தை கபில் தேவ் துவங்கி வைத்தார் என்றால் அதை அடுத்த கட்டத்துக்கு கொண்டு சென்றவர் இம்ரான் கான். அவரின் பிறந்த தினம் நவம்பர் 25. 92 ஆம் வருடம் உலககோப்பையை பாகிஸ்தான் அணி வென்றதே எதோ ஒரு தேவதைக்கதை போல மாயங்களும்,அதிர்ஷ்டங்களும்,அற்புதமான சுவாரசியங்களும் நிரம்பியது. இம்ரான் கான் தான் அணியின் தலைவர். அம்மாவுக்கு கேன்சர் வந்து இறந்து போயிருக்க அவரைப்போல துன்பப்படும் எண்ணற்ற பிரஜைகளுக்கு உதவும் மருத்துவமனையை கட்டிக்கொண்டு இருந்தார் அதற்கு பணம் தேவைப்பட்டது. நாற்பது வயதில் அணியின் கேப்டனாக அந்த ஆசையோடு பொறுப்பேற்றுக்கொண்டார். வேகப்புயல் வக்கார் யூனிஸ் போட்டிக்கு சில வாரங்கள…
-
- 0 replies
- 749 views
-
-
159 பந்துகளில் 160 நாட் அவுட்: நிறுத்த முடியாத கோலி சதம் எண் 34; இந்தியா 303 ரன்கள் குவிப்பு 3-வது ஓருநாள் போட்டியில் 34-வது சதம் எடுத்த விராட் கோலி. - படம். | கெட்டி இமேஜஸ் கேப்டவுனில் நடைபெறும் 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி 160 ரன்களைக் குவித்து நாட் அவுட்டாகத் திகழ இந்திய அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 303 ரன்கள் என்று தன் 50 ஓவர்களை முடித்துள்ளது. தென் ஆப்பிரிக்க அணியினால் முதலில் பேட் செய்ய அழைக்கப்பட்ட இந்திய அணியின் 303 ரன்களில் பாதிக்கும் மேல் ரன்களை விராட் கோலி எடுத்துள்ளார். ரோஹித் சர்மா மட்டையின் உள்விளிம்பில் பட்டு ரபாடா பந்தி…
-
- 4 replies
- 749 views
-
-
கேப்டனாக கோஹ்லிக்கு ஆதரவு அதிகரிப்பு: தோனி பதவி பறிபோகுமா டிசம்பர் 14, 2014. புதுடில்லி: அடிலெய்டு டெஸ்டில் துணிச்சலாக போராடிய இந்தியாவின் விராத் கோஹ்லிக்கு ஆதரவு பெருகுகிறது. டெஸ்ட் போட்டிகளில் இவரையே முழுநேர கேப்டனாக நியமிக்க வேண்டுமென ஆஸ்திரேலியாவின் இயான் சாப்பல் உள்ளிட்ட பலரும் வலியுறுத்தியுள்ளனர். ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. அனுபவ தோனி காயத்தால் அவதிப்பட்டதால், அடிலெய்டில் நடந்த முதல் டெஸ்டில் இளம் விராத் கோஹ்லி தலைமையில் இந்தியா களமிறங்கியது. இதில், வெற்றி நழுவினாலும் கடைசி வரை போராடியது. இரண்டு இன்னிங்சிலும் சதம் அடித்தார் கோஹ்லி. இது, இவரது துணிச்சலான செயல்பாட்டுக்கு உதாரணமாக அமைந்தது. அறிமுக …
-
- 0 replies
- 749 views
-
-
கால்பந்து ரசிகர்களுக்கு இதைவிட பெரிய சந்தோஷம் தேவையில்லை. கிறிஸ்டியானோ ரொனால்டோ தனி ஆளாக ஆட்சிபுரியும்போது கிடைக்கும் மகிழ்ச்சியைவிட பெரிய ஆனந்தம் என்ன இருந்துவிடப் போகிறது? உலகக் கோப்பையின் முதல் போட்டியிலேயே, அதுவும் ஸ்பெயினுக்கு எதிராக, தான் யார் என்பதை நிரூபித்துள்ளார் ரொனால்டோ! இந்த ஆட்டத்தை போர்ச்சுகல் vs ஸ்பெயின் என்று ஃபிஃபாவின் ரெக்கார்டுகள் சொல்லும். ஆனால், இதை ரொனால்டோ vs ஸ்பெயின் என்றுதான் வரலாறு சொல்லும். உலகக் கோப்பை அட்டவணை அறிவ…
-
- 0 replies
- 748 views
-
-
ஜேர்மன் கால்பந்தாட்ட கழக அணியில் பிரகாசிக்கும் இலங்கை வீரர் வசீம் ராசிக் இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து சென்று உலக நாடுகளில் தங்களது திறமைகளை நிரூபித்து சாதனைகளை நிலைநாட்டும் இலங்கையர்கள் அநேகம். அந்தவகையில் அண்மையில் ேஜர்மன் சென்றிருந்தபோது இலங்கையைச் சேர்ந்த தமிழ் பேசும் நபரொருவரைச் சந்திக்க வாய்ப்பு கிடைத்தது. அவர் தான் இலங்கையிலிருந்து சென்று ஜேர்மனில் கால்பந்தாட்டக்கழகமொன்றுக் குத் தெரிவாகி அங்கு கலக்கி வரும் வசீம் ராசிக். அவர், தனது அனுபவங்கள், சாதனைகள், சவால்களில் சிலவற்றைப் பற்றி பகிர்ந்துகொண்டார். இவர் ஜேர்மனின் தலைநகர் பேர்லினில் தனது பெற்ற…
-
- 0 replies
- 748 views
-
-
'சுழல் தமிழன்' அஸ்வின் சாதனை: உலக டெஸ்ட் பந்துவீச்சு தரவரிசையில் முதலிடம் நம்பர் 1 பவுலர், ஆல்ரவுண்டர்: அஸ்வின் சாதனை. | படம்: பிடிஐ. ஐசிசி டெஸ்ட் பந்துவீச்சு மற்றும் ஆல்ரவுண்டர் தரவரிசைகளில் அஸ்வின் முதலிடம் பிடித்து சாதனை நிகழ்த்தியுள்ளார். 1973-ம் ஆண்டு பிஷன் பேடி நம்பர் 1 இடத்தைப் பிடித்த பிறகு தற்போது அஸ்வின் நம்பர் 1 இடத்தைப் பிடித்தது குறிப்பிடத்தக்கது. 2015-ம் ஆண்டு 9 டெஸ்ட் போட்டிகளில் 62 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார் அஸ்வின். இதில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 4 டெஸ்ட் போட்டிகளில் 31 விக்கெட்டுகள் அடங்கும். 1973-ம் ஆண்டில் பிஷன் சிங் பேடி நம்பர் 1 இடம் பிடித்த பிறகு இந்திய பவுலர் ஒருவர் நம்பர் 1 இடத்தைப் பிடிப்பது இ…
-
- 1 reply
- 747 views
-
-
இலங்கை வலைப்பந்தாட்டத்தின் சொத்து தர்ஜினி என்கிறார் அவுஸ்திரேலிய உதவி பயிற்றுநர் Published By: DIGITAL DESK 5 15 MAR, 2023 | 03:36 PM (நெவில் அன்தனி) இலங்கை வலைபந்தாட்டத் தின் சொத்து தர்ஜினி சிவலிங்கம் என்பதை அனைவரும் ஒப்புக்கொள்ள வேண்டும். எனவும் தென் ஆபிரிக்காவில் இந்த வருடம் நடைபெறவுள்ள உலகக் கிண்ண வலைபந்தாட்டப் போட்டியில் இலங்கை அணி சாதிப்பதற்கு அவரது பிரசன்னம் மிகவும் அவசியம் எனவும் 'வீரகேசரி'க்கு அவுஸ்திரேலிய வலைபந்தாட்ட உதவிப் பயிற்றுநர் நிக்கோல் றிச்சர்ட்ஸ்சன் தெரிவித்தார். அவருடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு தர்ஜினியின் வலைபந்தாட்டத் திறன் குறித்து கேட்டபோதே அவர் இந்தப் பதிலைக் கூறினார். …
-
- 0 replies
- 747 views
- 1 follower
-
-
சிம்பாப்வேயை பழிதீர்த்தது ஆப்கானிஸ்தான் October 23, 2015 சிம்பாப்வே, ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 5 ஆட்டங்களைக் கொண்ட தொடரின் நான்காவது ஒருநாள் ஆட்டத்தில் 3 இலக்குகளால் ஆப்கானிஸ் தான் அணி வெற்றி பெற்றுள்ளது. இதனால் தொடர் 2:2 என்று சமநிலையாகியுள்ளது. நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற சிம்பாப்வே முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது. சிம்பாப்வேயின் முன்னணி வீரர்கள் எவருமே பெரிதாகப் பிரகாசிக்கவில்லை. சிப்கபா மட்டும் சிறிது நிதானித்து 26 ஓட்டங்களைப் பெற்றார். ஒரு கட்டத்தில் சிம்பாப்வே 82-6 என்று தத்தளித்துக் கொண்டிருந்த நிலையில் அணியை மீட்கும் நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டார் ரசா. பின்வரிசை வீரர்களின் ஆட்டம் எடுபடாமல் போக 50 பந்துப் பரிமாற்றங்கள் நிறைவில் சிம்பாப்வே 1…
-
- 4 replies
- 747 views
-
-
16 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவு உயரம் பாய்தல்: மன்னார் மாணவன் தேசிய மட்ட போட்டிக்கு தெரிவு! மன்னார்- உயிர்த்தராசன்குளம் றோ.க.த.க பாடசாலை மாணவன் சி.விஜய், 16 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவு உயரம் பாய்தலில் தேசிய மட்ட போட்டிக்கு தெரிவாகியுள்ளார். யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற வடமாகாண மட்ட மெய்வல்லுனர் திறனாய்வு போட்டியில் வெற்றிபெற்று, தேசிய மட்ட போட்டிக்கு தெரிவானார். பயிற்றுவிப்பாளர் திரு.ஆ.கு.ரொசேன் செரூபா பீரிஸ், பாடசாலையின் அதிபர் வு.ஆனந்தன் மன்னார் வலயக்கல்விப் பணிப்பாளர் மற்றும் விளையாட்டுத்துறை பிரதிக் கல்விப்பணிப்பாளர் ஆகியோர், தேசிய மட்ட போட்டிக்கு தெரிவாகியுள்ள மாணவன் சி.விஜய் வாழ்த்த…
-
- 4 replies
- 747 views
-
-
களத்தில் தல டோனி... தளபதி யுவி... இப்போ வாங்க பங்காளிகளா..! இந்திய அணி வென்ற மிகச் சிறந்த சரித்திரம் முக்கியத்துவம் வாய்ந்த கிரிக்கெட் போட்டிகள் என பட்டியலிட்டால், அதில் பல போட்டிகளில் துருப்புச்சீட்டாக யுவராஜ் சிங் கண்டிப்பாக இருந்திருப்பார். 1983-ம் ஆண்டு இந்திய அணி உலக கோப்பையை வென்ற பின்னர், கிட்டத்தட்ட 19 ஆண்டுகளாக இந்திய அணி, அயல்மண்ணில் இறுதி போட்டிகளில் தொடர் தோல்வியை சந்தித்த சமயம் அது. 2002 -ம் ஆண்டு நடந்த நாட்வெஸ்ட் கோப்பைக்கான முத்தரப்பு போட்டியின் இறுதி போட்டியில், இந்தியாவுக்கு 326 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இங்கிலாந்து. ஷேவாக், கங்குலி, டெண்டுல்கர், மோங்கியா, டிராவிட் என முன்னணி பேட்ஸ்மேன்கள் அனைவரும் ஆட்டமிழக்க, 24 ஓவர…
-
- 0 replies
- 746 views
-
-
ஜோஸ் பட்லரை, தோனி, டிவில்லியர்ஸ், கில்கிறிஸ்ட்டுடன் ஒப்பிடும் இங்கிலாந்து ஊடகம் டெஸ்ட், ஒருநாள், டி20 என்று சமீபத்தில் அசத்தி வரும் இங்கிலாந்து விக்கெட் கீப்பர் / பேட்ஸ்மென் ஜோஸ் பட்லரை மற்ற அதிரடி விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மென்களான டிவில்லியர்ஸ், கில்கிறிஸ்ட், தோனி ஆகியோருடன் ஒப்பிட்டுள்ளது இங்கிலாந்து ஊடகம். நியூஸிலாந்துக்கு எதிராக கடந்த வாரம் முடிந்த டெஸ்ட் தொடரின் 2-வது போட்டியில் 3 மணி நேரங்களில் 73 ரன்கள் எடுத்தார் ஜோஸ் பட்லர். டி20 போட்டியில் நியூஸிலாந்துக்கு எதிராக 35 பந்துகளில் 71 ரன்கள் விளாசித் தள்ளினார். பிறகு அன்று நியூஸிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 77 பந்துகளில் 129 ரன்களை விளாசி அந்தத் தருணத்தில் சரிவிலிருந்த இங்கிலாந்தை மீட்டு நிய…
-
- 0 replies
- 746 views
-
-
கேப்டன் கோலிக்கும் பயிற்சியாளர் கும்ப்ளேவுக்கும் இடையே மோதல்? பயிற்சியாளர் அனில் கும்ப்ளேவுடன் கேப்டன் விராட் கோலி. (கோப்பு படம்) இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் அனில் கும்ப்ளேவை திடீரென மாற்றுவதற்கான நடவடிககைகளில் பிசிசிஐ இறங்கியிருப்பதன் பின்னணியில் கேப்டன் கோலிக்கும் கும்ப்ளேவுக்கு இடையே ஏற்பட்ட மோதலே காரணம் என்று தெரிகிறது. அனில் கும்ப்ளேவுக்கு எதிராக விராட் கோலி தண்டத்தை உயர்த்தினாரா என்று கேள்வி எழுப்பினால் அதற்கான பதில் ‘மிகப்பெரிய அளவில் ஆமாம்’ என்பதே. இது குறித்து பிசிசிஐ முக்கியஸ்தர்களிடம் விராட் கோலி புகார் எழுப்பியதாகத் தெரிகிறது, அதாவது அணி…
-
- 3 replies
- 746 views
-
-
2 ஆயிரம் ஓட்டங்களைக் கடந்து மிதாலி ராஜ் சாதனை இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வீராங்கனை மிதாலி ராஜ் சர்வதேச இருபதுக்கு- 20 போட்டிகளில் 2 ஆயிரம் ஓட்டங்களைக் கடந்த முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை படைத்துள்ளார். மிதாலி ராஜ், இந்திய மகளிர் அணியின் டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணித் தலைவியாக செயற்பட்டு வருகின்றார். மிதாலி ராஜ், அனைத்த வகையான கிரிக்கெட் போட்டிகளுக்கும் சிறந்த மகளிர் துப்பாட்ட வீராங்கனையாக கருதப்படுகின்றார். இந்நிலையில், மிதாலி ராஜ் புதிய சாதனையொன்றை தற்போது படைத்துள்ளார். இலங்கை அணிக்கு எதிராக நடைபெற்ற மகளிர் ஆகியக் கிண்ண லீக் போட்டியில் மிதாலி ராஜ் 23ஓட்டங்களை பெற்றபோது, சர்வதேச டஇருபதுக்கு - 20 போட்டிகளில் 2 ஆயி…
-
- 0 replies
- 746 views
-
-
ஜெய் ஸ்ரீராம் முழக்கம்: ஷமி, சிராஜூக்கு இதற்கு முன்பு என்ன நடந்தது? கோலி, ரஹானே என்ன செய்தார்கள்? பட மூலாதாரம்,GETTY IMAGES 9 மணி நேரங்களுக்கு முன்னர் "ஒருவர் சார்ந்த மதத்தின் அடிப்படையில் அவரை விமர்சிப்பது ஒரு மனிதன் செய்யக் கூடிய மிகவும் பரிதாபமான செயல். அவர்கள் முதுகெலும்பில்லாதவர்கள். அவர்கள் மீது கவனம் செலுத்தி வாழ்க்கையில் ஒரு நிமிடத்தைக் கூட வீணாக்க விரும்பவில்லை" - இவை 2021-ம் ஆண்டு இருபது ஓவர் உலகக்கோப்பைப் போட்டி ஒன்றில் பாகிஸ்தானிடம் இந்தியா தோல்வியுற்ற போது, அணியில் இடம் பெற்றிருந்த முகமது ஷமியை சமூக ஊடகங்களில் ரசிகர்கள் விமர்சித்த போது அப்போதைய கேப்டன் விராட் கோலி உதிர்த்த வார்த்தை…
-
- 0 replies
- 745 views
- 1 follower
-
-
சங்கா தவறவிட்ட சாதனை 28-12-2014 ஒரு வருடத்தில் அதிகூடிய ஓட்டங்களைக் குவித்த வீரர் என்ற சாதனையை 21 ஓட்டங்களால் இலங்கை அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் குமார் சங்கக்கார தவறவிட்டுள்ளார். குறித்த சாதனை தற்சமயம் அவுஸ்திரேலியாவின் ரிக்கி பொன்டிங்கிடம் இருக்கிறது. ஒரு வருடத்தில் அனைத்துவிதமான போட்டிகளிலும் 2,833 ஓட்டங்களை 2005ஆம் ஆண்டு ரிக்கி பொன்டிங் பெற்றுக்கொண்டமையே இதுவரை சாதனையாக இருந்து வருகிறது. இந்த சாதனையை குமார் சங்கக்கார முறியடிப்பார் என எதிர்பார்த்த வேளையில், 1 ஓட்டத்துடன் ஆட்டமிழந்தார். 2,813 ஓட்டங்களை இதுவரை சங்கக்கார பெற்றுள்ளார். இன்னமும் 21 ஓட்டங்கள் பெற்றிருந்தால் பொன்டிங்கின் சாதனையை சங்கக்கார முறியடித்திருப்பார். இலங்கை - நியூஸிலாந்து அணிகளுக்கிடைய…
-
- 0 replies
- 745 views
-
-
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவோம்: அஸ்வின், விஜய் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் முடிந்தவுடன் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்வோம் என்று இந்திய அணி வீரர்களான அஸ்வின் மற்றும் முரளி விஜய் தெரிவித்தனர். பிசிசிஐ.டிவி இணையதளத்தில் இது குறித்த செய்திப் பதிவில் அஸ்வின் கூறியிருப்பதாவது: இந்த பேரிடரிலும் மக்கள் ஒருவருக்கொருவர் உதவிக்கரம் நீட்டியிருப்பது குறித்து பெருமையாக உள்ளது. மக்களில் பலர் ஒருவருக்கொருவர் உதவிக்கரம் நீட்டியிருப்பது நல்ல விஷயம். களப்பணியில் ஈடுபட்ட எனது நண்பர்கள் நடிகர் சித்தார்த் மற்றும் ஆர்.ஜே.பாலாஜி ஆகியோருக்கு எனது நன்றி. அவர்கள் மக்களுக்கு உதவ களமிறங்கியுள்ளனர். சென்னையின…
-
- 0 replies
- 745 views
-
-
இங்கிலாந்து கால்பந்துப் போட்டிகளை முன் கூட்டியே நிர்ணயித்து ஆடும் "மேட்ச் பிக்ஸிங்" என்ற மோசடிக் குற்றச்சாட்டுகளை விசாரித்துக்கொண்டிருக்கும் பிரிட்டிஷ் போலிசார் ஆறு பேரைக் கைது செய்திருக்கின்றனர். கைது செய்யப்பட்டவர்களில் குறைந்தது மூன்று பேர் கால்பந்து விளையாட்டு வீரர்கள். ஆனால் இவர்களில் எவரும் தொழில்முறை கால்பந்து கிளப்புகளுடன் தொடர்பு கொண்டவர்கள் இல்லை என்று பிபிசிக்கு தெரிய வந்திருக்கிறது. இந்த நடவடிக்கையின் கவனம் ஒரு சர்வதேச சட்டவிரோத சூதாட்டக் குழுவினரே என்று போலிசார் கூறுகின்றனர். பிரிட்டனிலிருந்து வெளியாகும் "டெய்லி டெலெகிராப்" பத்திரிகை ரகசியமாக நடத்திய புலன் விசாரணையினை அடுத்து இந்தக் கைதுகள் வருகின்றன. ஆசியாவில் இருந்து இயங்கும் இந்தப் பந்தயச் சூதாடிகள்…
-
- 3 replies
- 745 views
-
-
யாழ் அருணோதயா கல்லூரி நட்சத்திரங்ககளுடன் ஒரு நிமிடம் கோலூன்றிப் பாய்தலில் தேசிய மட்டத்தில் ஆதிக்கம் செலுத்திய யாழ்.அளவெட்டி அருணோதயா கல்லூரி மாணவர்கள், தமது வெற்றியின் பின் ஒரு சில நிமிடங்கள் எம்மோடு இணைந்த வேளை
-
- 1 reply
- 745 views
-
-
அவுஸ்திரேலியாவின் முதலிடத்திற்கு ஆபத்து தென்னாபிரிக்க அணி நெருங்கிவிட்டது [04 - February - 2008] ஒருநாள் போட்டித் தரவரிசைப் பட்டியலில் அவுஸ்திரேலிய அணி தனது முதல் இடத்தை இழக்கக் கூடிய வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. சர்வதேச கிரிக்கெட் சபையின் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டி தரவரிசைப் பட்டியலில் அவுஸ்திரேலியா தொடர்ந்து முதலிடம் வகிக்கிறது. டெஸ்ட் போட்டியில் மற்ற அணிகளை விட அவுஸ்திரேலியா கூடுதல் புள்ளிகள் பெற்று முதலிடத்தில் இருக்கிறது. ஆனால், ஓரு நாள் போட்டித் தரவரிசையைப் பொறுத்தவரை தென்னாபிரிக்க அணி அவுஸ்திரேலிய அணியை நெருங்கிக் கொண்டிருக்கிறது. தற்போது அவுஸ்திரேலியா 130 புள்ளிகளோடு முதலிடத்தில் உள்ளது. ஆனால், தென்னாபிரிக்க அணி தற்போது நடைபெற்று வரும…
-
- 0 replies
- 745 views
-
-
பெண் தொலைக்காட்சி நிருபரிடம் ‘மரியாதைக் குறைவாக’ நடந்து கொண்ட கிறிஸ் கெயில் படம்: ட்விட்டர். ஆஸ்திரேலியாவில் பிக்பாஷ் டி20 லீகில் மெல்போர்ன் ரெனகேட்ஸ் அணிக்காக ஆடிவரும் கிறிஸ் கெயில் இன்று தனது இன்னிங்ஸ் முடிந்த பிறகு பேட்டி கண்ட சானல் 10 பெண் நிருபரிடம் மரியாதைக் குறைவாக நடந்து கொண்டதாக பிக்பேஷ் லீக் கடுமையாக சாடியுள்ளது. இன்று முடிந்த ஹோபார்ட் ஹரிகேன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கெயில் ஆடும் மெல்போர்ன் ரெனகேட்ஸ் அணி வெற்றி பெற்றது. இதில் கெயில் 15 பந்துகளில் கெயில் 41 ரன்களை விளாசி ஆட்டமிழந்தார். ஆட்டமிழந்த பிறகு சேனல் 10 தொலைக்காட்சி செய்தியாளர் மெல் மெக்லாஃப்லின் கெயிலை பேட்டி கண்டார், அப்போது கெயில், “நானே உங்களிடம் வந்து பேட்…
-
- 4 replies
- 744 views
-
-
இலங்கை - தென்னாபிரிக்க முதல் டெஸ்ட் இன்று ஆரம்பம் : தென்னாபிரிக்கா துடுப்பெடுத்தாடுகிறது இலங்கை-தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டி இன்று காலியில் ஆரம்பமாகியுள்ள நிலையில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாபிரிக்க துடுப்பெடுத்தாடுகின்றது. இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாபிரிக்க அணிக்கும் இலங்கை அணிக்குமிடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நிறைவடைந்த நிலையில் இன்று இரு அணிகளுக்குமிடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆரம்பமாகியது. ஒருநாள் தொடரை தென்னாபிரிக்க அணி 2-1 என வெற்றி கொண்டிருந்த நிலையில் இன்று இரு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் தொ…
-
- 17 replies
- 744 views
-
-
தர உயர்வு பெற்ற 66 நடுவர்கள் என். ஜெயரட்ணம் இலங்கை கரப்பந்தாட்ட சம்மேளனத்தால் நடத்தப்பட்ட, கரப்பந்தாட்ட நடுவர்களின் தரப்படுத்தலுக்கான தகுதி காண் போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்து, தர உயர்வு பெற்ற 66 நடுவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் வைபவம், கடந்த ஓகஸ்ட் மாதம் 31ஆம் திகதி, தேசிய விளையாட்டு நிறுவனத்தில், இலங்கை கரப்பந்தாட்ட சம்மேளனத்தின் உப தலைவர் காஞ்சன ஜயரத்ன தலைமையில் நடைபெற்றது. இதன் அடிப்படையில், "சீ" தரத்தில் இருந்து "பீ" தரத்துக்கு சித்தியடைந்த நடுவர்கள் 32 பேருக்கும் "பீ" தரத்தில் இருந்து …
-
- 0 replies
- 743 views
-
-
மேற்கிந்தியாவிற்கு எதிரான 2 ஆவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி இனிங்ஸ் மற்றும் 283 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இங்கிலாந்து - மேற்கிந்திய கிரிக்கெட் அணிகளிடையிலான 2 ஆவது டெஸ்ட் போட்டி ஹெடிங்லீயில் நடந்தது. இங்கிலாந்து அணி முதல் இனிங்ஸில் 7 விக்கெட் இழப்புக்கு 570 ரன்கள் குவித்து `டிக்ளேர்' செய்தது. இதைத் தொடர்ந்து தனது முதல் இனிங்ஸை விளையாடிய மேற்கிந்திய அணி 146 ஓட்டங்களுக்கு சுருண்டு `பொலோ-ஒன்' ஆனது. இதையடுத்து, 2 ஆவது இனிங்சையும் தொடர்ந்து ஆடிய மேற்கிந்திய அணி 2 ஆம் நாள் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 22 ஓட்டம் எடுத்திருந்தது. 3 ஆம் நாள் ஆட்டம் மழை காரணமாக நடைபெறவில்லை. இந்த நிலையில் நேற்று முன்தினம் 4 ஆம் நாள் ஆட்டத்திலும் மழை குறுக்கீட…
-
- 1 reply
- 743 views
-