விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7840 topics in this forum
-
புஜாராவின் சதத்தால் சரிவிலிருந்து மீண்டது இந்தியா அவுஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் புஜாராவின் சதத்தின் துணையுடன் இந்திய அணி பெரும் சரவிலிருந்து மீண்டு 9 விக்கெட்டுக்களை இழந்து 250 ஓட்டங்களை குவித்துள்ளது. அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள விராட் கோலி தலைமையிலான இந்திய அணி அவுஸ்திரேலியாவுடன் மூன்று இருபதுக்கு 20 போட்டி, நான்கு டெஸ்ட் போட்டி மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் இருபதுக்கு 20 தொடர் சமநிலையில் முடிவடைந்த நிலையில் இன்று அடிலெய்டில் இவ் விரு அணிகளுக்கிடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி ஆரம்பமானது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணித் தலைவர் விராட் கோலி முதலில் துடுப்ப…
-
- 1 reply
- 1k views
-
-
இலங்கையை வீழ்த்தத் திட்டமிடும் முரளி இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலிய அணிக்கும் இலங்கைக்குமிடையிலான கிரிக்கெட் தொடரின் தயார்படுத்தல்களில், அவுஸ்திரேலிய அணி ஈடுபட்டுவரும் நிலையில், அவ்வணிக்கான சுழற்பந்துவீச்சு ஆலோசகராகச் செயற்பட்டுவரும் இலங்கையின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன், தனது பணியை நியாயப்படுத்தியுள்ளார். இலங்கை அணியின் முன்னாள் வீரர்கள் பலர், வெளிநாடுகளைச் சேர்ந்த அணிகளால் ஒப்பந்தம் செய்யப்படுவதொன்றும் புதிதன்று. குறிப்பாக, இலங்கை கிரிக்கெட் சபை மீது முன்னாள் வீரர்களுக்கு இன்னமும் காணப்படுவதாகக் கூறப்படும் எதிர்ப்பு அல்லது நம்பிக்கையின்மை காரணமாக, வெளிநாட்டு அணிகளோடு இணைந்து செயற்படுவதற்கு, அவ்வ…
-
- 1 reply
- 438 views
-
-
துபாயில் மனைவி, குழந்தைகள் தவிப்பு: எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் மீது தவான் குற்றச்சாட்டு தவானின் மனைவி மற்றும் குழந்தைகளை தென்ஆப்பிரிக்கா செல்ல எமிரேட்ஸ் ஏர்லைன் மறுத்துவிட்டது. மனைவி, குழந்தைகள் துபாயில் தவிப்பதால் தவான் குற்றம்சாட்டியுள்ளார். #INDvSA #EmiratesAirline இந்தியா - தென்ஆப்பிரிக்கா இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வருகிற 5-ந்தேதி கேப் டவுனில் தொடங்குகிறது. இதற்காக விராட் கோலி தலைமையிலான இந்திய அணி நேற்று முன்தினம் (27-12-2017) நள்ளிரவு மும்பையில் இருந்து எமிரேட்ஸ் ஏர்லைன் மூலமாக துபாய் சென்றது.…
-
- 1 reply
- 392 views
-
-
யாழின் தேவையை நிறைவேற்றவுள்ள துரையப்பா மைதானம் திங்கட்கிழமை, 22 டிசெம்பர் 2014 யாழ்ப்பாணத்தின் தேவையாக இருந்த நவீன வசதிகளைக்கொண்ட விளையாட்டுமைதானம், தற்போது யாழ். துரையப்பா மைதானத்தின் புனரமைப்பு மூலம் நிறைவேறவுள்ளது. யாழ்ப்பாணத்தின் மத்தியில் அனைவருக்கும் ஏற்றவிதத்தில் பொது மைதானமாக யாழ். துரையப்பா விளையாட்டரங்கு விளங்குகின்றது. கழகங்கள் நடத்தும் விளையாட்டுப்போட்டிகள் தொடக்கம் தேசிய மட்ட விளையாட்டுப்போட்டிகள் வரை துரையப்பா மைதானத்தில் நடத்தப்படுகின்றன. விளையாட்டுப்போட்டிகள், கால்பந்தாட்ட போட்டிகள், ஹொக்கி போட்டிகள், களியாட்ட நிகழ்வுகள் என்பன இந்த மைதானத்தில் நடத்தப்படுகின்றன. இந்த மைதானத்தின் தேவைகள் அதிகமாக இருந்தாலும் அதனுடைய தரம் உரிய முறையில் பேணப்படவில்லை…
-
- 1 reply
- 556 views
-
-
ஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக்ஸில் இந்தியப் பெண் இந்தியாவின் முன்னணி ஜிம்னாஸ்டிக் வீராங்கனை தீபா கர்மாகர், ரியோ டி ஜெனீரோ ஒலிம்பிக் போட்டியில் பங்குபெற தகுதி பெற்றுள்ளார். ரியோ போட்டிக்கு தகுதிபெற்றுள்ள தீபா கர்மாகர் ஓலிம்பிக் ஒன்றில் ஜிம்னாஸ்டிக் போட்டியில் பங்கேற்க தகுதி பெற்ற முதல் இந்திய பெண் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். இவர் கிளாஸ்கோவில் கடந்த 2014ல் நடைபெற்ற காமன்வெல்த் போட்டிகளிலும் அவர் பதக்கம் ஒன்றை வென்றிருந்தார். ரியோ ஒலிம்பிக் போட்டிக்கு அவர் தகுதி பெற்றுள்ள செய்தி இந்தியாவில் சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்படுகிறது. இந்திய அரசாங்கம் ஜிம்னாஸ்டிக் விளையாட்டுக்கு குறிப்பிடத்தக்க அளவு நிதி வழங்காத சூழலில…
-
- 1 reply
- 825 views
-
-
ஐஎஸ்எல் கால்பந்து தொடர் நவம்பர் 17-ல் தொடக்கம்: முதல் ஆட்டத்தில் கொல்கத்தா - கேரளா மோதல் ஐஎஸ்எல் கால்பந்து தொடரின் 4-வது சீசன் வரும் நவம்பர் 17-ல் தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் இரு முறை சாம்பியனான அட்லெடிகோ டி கொல்கத்தா, கடந்த முறை 2-வது இடம் பிடித்த கேரளா பிளாஸ்டர்ஸ் அணியுடன் மோதுகிறது. இந்த ஆட்டம் கொல்கத்தாவில் நடைபெறுகிறது. இம்முறை பெங்களூரு எப்சி, ஜாம்ஷெட்பூர் எப்சி ஆகிய இரு அணிகள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளன. இதனால் அணிகளின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. மொத்தம் 90 லீக் ஆட்டங்கள் நடைபெறும். அரை இறுதி ஆட்டங்கள் 2018-ம் ஆண்டு மார்ச் மாதம் 2-வது வாரம் நடைபெறுகிறது. இதற்கான தேதி மற்றும் இடங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட…
-
- 1 reply
- 614 views
-
-
தினம், தினம் நரக வேதனை: ஸ்ரீசாந்த் புலம்பல் டிசம்பர் 07, 2014. ‘‘கிரிக்கெட் சூதாட்ட புகாரின் பேரில் எனது கிரிக்கெட் வாழ்க்கையை ஐந்து நிமிடத்தில் பி.சி.சி.ஐ., முடித்து விட்டது’’ என, புலம்பியுள்ளார் ஸ்ரீசாந்த். ஆறாவது ஐ.பி.எல்., தொடரில் ராஜஸ்தான் அணிக்காக பங்கேற்றார் இந்திய வேகப்பந்துவீச்சாளர் ஸ்ரீசாந்த், 31. இவர் ‘பிக்சிங்’ செய்தது அம்பலமாக, டில்லி போலீசாரால் கைது செய்யப்பட்டு, தற்போது ஜாமினில் உள்ளார். இவருக்கு இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) வாழ்நாள் தடை விதித்தது. அதேநேரம், சூதாட்டம் குறித்து சுப்ரீம் கோர்ட் தனியாக விசாரிக்கிறது. தோனி, ரெய்னா உள்ளிட்ட 13 பேர் மீது புகார் உள்ளதாக தெரிகிறது. தவிர, சென்னை அணி உரிமையாளர் குருநாத் மெய்யப்பன், ராஜஸ்தானின் ரா…
-
- 1 reply
- 612 views
-
-
மாலிங்க இறுதிப்போட்டியில் விளையாடலாம்: மைக்கேல் டி சொய்சா நியூசிலாந்துக்கு எதிரான இறுதிப்போட்டியில் இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் லசித் மாலிங்க விளையாட கூடிய சாத்திய கூறுகள் இருப்பதாகவும் எனினும் அதனை உறுதியாக கூறமுடியாது எனவும் அணியின் மேலாளர் மைக்கேல் டி சொய்சா தெரிவித்தார். இதுதொடர்பில் கருத்து தெரிவித்த அவர், லசித் மாலிங்க வலைப் பயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்றார். உலகக் கிண்ணத் தொடருக்கு முன்னர் பயிற்சி போட்டிகளில் விளையாடுவார். இதேவேளை 29 ஆம் திகதி வெலிங்கடனில் நடைபெறவுள்ள நியூசிலாந்துக்கு எதிரான இறுதிப்போட்டியில் விளையாட கூடிய சாத்தியகூறுகள் உள்ளன. எனினும் அவரை நாங்கள் தொந்தரவு செய்யமாட்டோம். மேலும் அவர் விரைவாக சுகம் பெறுவதற்க…
-
- 1 reply
- 359 views
-
-
யாழ்ப்பாணம் மாவட்ட பிரதேச இளைஞர் கழகங்களுக்கு இடையிலான பெண்களுக்கான வலைப்பந்தாட்டத் தொடரில் தெல்லிப்பழை பிரதேச இளைஞர் அணி சம்பியன் பெற்றது. இதன் இறுதியாட்டம் தெல்லிப்பழை யூனியன் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. இறுதியாட்டத்தில் தெல்லிப்பழைபிரதேச இளைஞர் அணியை எதிர்த்து உடுவில் பிரதேச இளைஞர் அணி மோதியது.https://newuthayan.com/story/11/வலைப்பந்தாட்டத்-தொடரில-2.html
-
- 1 reply
- 629 views
-
-
சிறந்த விளையாட்டு நட்டசத்திரமாக ஞானரூபன் தெரிவு மொறட்டுவைப் பல்கலைக்கழகத்தால், இலங்கையிலுள்ள பல்கலைக்கழங்களில் சிறந்த விளையாட்டு வீரருக்கான தெரிவுக்கான இடம்பெறும் இணைய வாக்கெடுப்பில் யாழ்ப்;பாணப் பல்கலைக்கழக கால்ப்பந்தாட்ட வீரனும் தேசிய கால்ப்பந்தாட்ட அணியில் இடம்பிடித்துள்ளவருமான செபமாலைநாயகம் ஞானரூபன் முதலிடம் பெற்றுள்ளார். ஞானரூபனுக்காக 5481 பேர் வாக்களித்தனர். மொத்தம் 16 வீரர்கள் தெரிவு செய்யப்பட்டு, அவர்களில் சிறந்த விளையாட்டு வீரனைத் தெரிவு செய்வதற்காக hவவி:ஃஃளிழசவள.அழசயளிசைவை.உழஅஃஎழவந.pரி?சநகஸ்ரீ2சூ_ஸ்ரீ_என்னும் இணையத்தளத்தில் இந்த வாக்கெடுப்பு நடைபெற்றது. இணைய வாக்கெடுப்பின் கடைசி திகதி 10 திகதி …
-
- 1 reply
- 467 views
-
-
எனது வெற்றியை என்னுடைய மக்களுடன் பகிர்கிறேன்: ரியோவில் சாக்ஷி மகிழ்ச்சி பதக்கத்துடன் சாக்ஷி மாலிக் | படம்: ஏஎஃப்பி '12 ஆண்டு உழைப்பின் பலன்' ரியோவில் இந்தியாவுக்கு பெருமை சேர்த்த சாக்ஷி மாலிக் மகிழ்ச்சி "ஒலிம்பிக் மல்யுத்த போட்டிகளில் இந்தியாவுக்கான முதல் பதக்கத்தை நான் வென்றெடுப்பேன் என சற்றும் எதிர்பார்க்கவில்லை!" ஒலிம்பிக் போட்டியில் மல்யுத்த விளையாட்டில் வெண்கலப் பதக்கம் வென்ற சாக்ஷி மாலிக், தனது 12 ஆண்டு கடின உழைப்பின் பலனாக வெற்றி கிட்டியுள்ளதாகக் கூறியுள்ளார். ரியோ ஒலிம்பிக் 2016-ல் இந்தியா தனது முதல் பதக்கத்தை வென்று கணக்கைத் தொடங்கியுள்ளது. மகளிர் 58 கிலோ ஃப்ரீஸ்டைல் எடைப் பிரிவு மல்யுத்தப் போட்டியில் சாக்ஷி மாலிக் வெண்…
-
- 1 reply
- 341 views
-
-
கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு கொரோனா போர்த்துக்கல் நாட்டின் கால்பந்து வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கிறிஸ்டியானோ ரொனால்டோ (Cristiano Ronaldo) மிகப்பெரிய கால்பந்து வீரர்களில் ஒருவர். ரொனால்டோ ஒரு பல்துறை திறன் கொண்ட தாக்குதல் வீரர், அவரது அதி வேகம், அத்துடன் பலமாக பந்தை உதைக்கும் ஆற்றல் மற்றும் ஆழமான அடிச்சுவடுகள் ஆகியவற்றிற்காக மற்றைய வீரர்களில் இருந்து தனித்து நிற்கிறார். ரொனால்டோ பல நாடுகளில் லீக் பட்டங்களை வென்றுள்ளார். ரொனால்டோ பங்குபற்றிய 292 விளையாட்டுகளில் 311 கோல்களை அடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. http://tamil.adaderana.lk/news.php?nid=135112
-
- 1 reply
- 671 views
-
-
‛சாஹலிடம் முடியாது என்ற வார்த்தையே வராது!’ - கோஹ்லி புகழாரம் இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதிய கடைசி டி-20 போட்டி பெங்களுரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நேற்று நடந்தது. இரு அணிகளும் 1-1 என சமநிலையில் வெற்றிபெற்றிருந்ததால், இந்த ஆட்டம் முக்கியமானதாக கருதப்பட்டது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பவுலிங்கை தேர்ந்தெடுத்தது. முதலில் பேட் செய்தது இந்திய அணி. ஓபனிங் பேட்ஸ்மேன் விராத் கோஹ்லி ரன் அவுட்டானது ஏமாற்றத்தை அளித்தாலும், அடுத்து களமிறங்கிய சுரேஷ் ரெய்னா அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 45 பந்துகளில் 63 ரன்கள் விளாசினார். இந்தமுறை தோனி விஸ்வரூபம் எடுத்திருந்தார். அவர் சந்தித்த 36 பந்துகளில் 5 பவுண்டரி, 2 சிக்ஸர்களுடன் 56 ரன்கள் சேர்த்தார். இது சர்வதேச டி-20…
-
- 1 reply
- 460 views
-
-
கனடா T20 லீக்கில் முன்னணி வீரராக மாலிங்க இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராகத் திகழ்ந்த லசித் மாலிங்க, இலங்கை அணியில் இருந்து தொடர்ச்சியாக புரக்கணிக்கப்பட்டு வருகின்ற நிலையில், இவ்வருடம் க்ளோபல் T20 கனடா லீக் தொடரில் முன்னணி வீரர்களில் ஒருவராக பங்கேற்கவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அதேபோன்று, அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபையால் தடை விதிக்கப்பட்டுள்ள ஸ்டீவ் ஸ்மித்தும் எதிர்வரும் ஜுன் 28 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள க்ளோபல் T20 கனடா லீக் தொடரில் பங்கேற்கவுள்ளதன்மூலம் அவர் மீண்டும் கிரிக்கெட் போட்டிகளுக்கு திரும்பவுள்ளார். கேப்டவுனில் நடந்த பந்தை சேதப்படுத்திய சம்பவத்தை அடுத்து 12 மாதங்கள் போட்டித் தட…
-
- 1 reply
- 555 views
-
-
அம்பு எய்துவதில் கின்னஸ் சாதனையை நாட்டியதமிழக சிறுமி… தமிழகத்தின் சென்னையை சேர்ந்த மூன்று வயதான சிறுமி சஞ்சனா மூன்றரை மணித்தியாலத்தில் ஆயிரத்து 111 அம்புகளை எய்தி உலக சாதனைக்கு முயன்று மூலம் தமிழகத்திற்குப் பெருமை சேர்த்துள்ளார். வில்வித்தையில் ஆர்வம் கொண்ட சிறுமி சஞ்சனா தனது 3 வயதிலேயே கின்னஸ் சாதனைக்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளார். சென்னை அரசு மருத்துவமனையில் பணிபுரியும் பிரேம்நாத் என்பவரின் மகளான சஞ்சனா பிரபல கராத்தே வீரரும், வில் வித்தை பயிற்சி அளித்து வருபவருமான ஷிஹான் ஹுசேனியிடம் பயிற்சி பெற்று வருகின்றார். இச் சிறுமி ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வதை வாழ்வின் இலட்சியமாக கொண்டுள்ளார். சமீபத்தில் செ…
-
- 1 reply
- 431 views
-
-
உலகக் கோப்பையை வென்றால் 1 மில்லியன் டாலர்கள் போனஸ்; இலங்கை அரசு அறிவிப்பு உலகக் கோப்பையை வென்றால் இலங்கை அணி வீரர்களுக்கு 1 மில்லியன் டாலர்கள் போனஸாக அளிக்கப்படும் என்று இலங்கை அரசு அறிவித்துள்ளது. அரசுச் செய்தித் தொடர்பாளர் ரஜித சேனரத்ன கூறும்போது, “உலகக் கோப்பையை மீண்டும் வெற்றி பெற்று நாட்டுக்குக் கொண்டு வந்து பெருமை சேர்த்தால் இலங்கை அணிக்கு 1 மில்லியன் டாலர்கள் போனஸாக வழங்கப்படும்.” என்றார். 1996-ஆம் ஆண்டு இலங்கை அணி உலகக் கோப்பையை அர்ஜுனா ரணதுங்கா தலைமையில் வென்றது. அதன் பிறகு 2007 மற்றும் 2011-ஆம் ஆண்டு உலகக் கோப்பை போட்டிகளில் இறுதிக்கு தகுதி பெற்றது. 1996ஆம் ஆண்டு உலகக் கோப்பையை இலங்கை வென்றபோது, அந்த அணி வீரர்களுக்கு கார்கள், வீடுகள் மற்றும் நிலம் வழங…
-
- 1 reply
- 512 views
-
-
பங்களாதேஷ் சுற்றுப்பயணத்திற்கான இங்கிலாந்து அணி விபரம் அறிவிப்பு – டெஸ்ட் அணியில் மூன்று புது முகங்கள். பங்களாதேஷ் சுற்றுப்பயணத்திற்கான இங்கிலாந்து அணி விபரம் அறிவிப்பு – டெஸ்ட் அணியில் மூன்று புது முகங்கள். அடுத்த மாதம் இங்கிலாந்து அணி, மூன்று ஒருநாள் சர்வதேச போட்டி மற்றும் இரு டெஸ்ட் போட்டிகளில் பங்கெடுக்க பங்களாதேஷ்க்கு செல்ல உள்ளது. இந்நிலையில் பங்களாதேஷ் தொடருக்கான இங்கிலாந்து அணியின் டெஸ்ட் மற்றும் ஒரு நாள் சர்வதேச போட்டிகளுக்கான அணி விபரங்களே அறிவிக்கப்பட்டுள்ளது. டெஸ்ட் போட்டிகளுக்காக 17 பேர் கொண்ட அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் இளம் வீரர்களான அன்சாரி, பென் டக்கட், ஹசீப் ஹமீத் போன்ற இளம் வீரர்களுக்கு இடம் வழங்கப்பட்டுள்ளது. 2…
-
- 1 reply
- 354 views
-
-
ரியல் மாட்ரிட் அணிக்காக 400 கோல்கள் அடித்து ரொனால்டோ சாதனை செவிலா அணிக்கெதிராக இரண்டு கோல்கள் அடித்ததன் மூலம் கிறிஸ்டியானோ ரொனால்டா ரியல் மாட்ரிட் அணிக்காக 400 கோல்கள் அடித்து சாதனைப் படைத்தள்ளார். போர்ச்சுக்கல் நாட்டின் தலைசிறந்த கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. மான்செஸ்டர் அணிக்காக விளையாடிய ரொனால்டோ, 2009-ம் ஆண்டு 94 மில்லியன் யூரோவிற்கு டிரான்ஸ்ஃபர் ஆனார். ரியல் மாட்ரிட் அணிக்காக அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அந்த அணியின் நட்சத்திர ஸ்ட்ரைக்கராக விளங்கி வருகிறார். லா லிகாவில் நேற்று ரியல் மாட்ரிட் அணி செவிலாவை எதி…
-
- 1 reply
- 434 views
-
-
தமிழில் வர்ணனை செய்து உலகின் பல மில்லியன் மக்களின் மனதை வென்ற ரசல் ஆர்னல்ட் இலங்கை அணியின் முன்னாள் இடதுகை துடுப்பாட்ட வீரரும் தற்போதைய பிரபல கிரிக்கெட் வர்ணனையாளருமான ரசல் ஆர்னல்ட் இலங்கை இந்திய டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் தமிழில் கள அறிக்கை (pitch report) வழங்கியதன் மூலம் உலகம் பூராகவும் உள்ள தமிழ் மக்களின் மனதை வென்றுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. https://twitter.com/SriniMama16/status/934350376219828224 இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான 3 டெஸ்ட், 3 ஒரு நாள் மற்றும் 3 …
-
- 1 reply
- 3.3k views
-
-
இறுதிப் போட்டிக்கு முன்னேறிய பயன் மியூகின் (FC Bayern München ) அணி! ஜேர்மன் கிண்ண கால்பந்தாட்ட தொடரின் இறுதிப் போட்டிக்கு பயன் மியூகின் அணி முன்னேறியுள்ளது. ஜேர்மன் கிண்ண கால்பந்தாட்ட தொடர் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. இப் போட்டியில் நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில், லெவகுசன் கழகத்தை 6 க்கு 2 என்ற கோல் கணக்கில் பயன் மியூனிக் கழகம் வெற்றிகொண்டது. இந்தப் போட்டியின் முதல் பாதியில் 3 மற்றும் 9 ஆவது நிமிடங்களில், ரெபேர்ட் லவண்டொஸ்கி இரண்டு கோல்களைப் போட்ட நிலையில், பயன்மியூனிக் கழகம் முன்னிலை பெற்றது. 16 ஆவது நிமிடத்தில் வெலகுசன் கழகம் சார்பில் கோல் ஒன்று போடப்பட்ட போதிலும், முதல் பாதியில் 2 க்கு 1 என்ற கோல் கணக்கி…
-
- 1 reply
- 801 views
-
-
100 ரன்களை வாரி வழங்கி மோசமான சாதனை படைத்த நியூசி. வீரர்! இந்தியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி பந்துவீச்சாளர் ஜேக்கப் டஃப்பி(jacob duffy), 10 ஓவர்களில் 100 ரன்களை வழங்கி சாதனை படைத்துள்ளார். கடைசி ஒருநாள் போட்டி நியூசிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையே நேற்று மத்தியப்பிரதேசம் இந்தூரில் 3ஆவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நடைபெற்றது. ஏற்கெனவே முதல் இரண்டு போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்றிருந்ததால் இன்றைய போட்டியிலும் வெல்லும் முனைப்புடன் களமிறங்கியது. ஆறுதல் வெற்றியையாவது பெற வேண்டும் என்ற நோக்கில் நியூசிலாந்து களம் கண்டது. இதையடுத்து, நாணய சுழற்சியில் வென்ற நியூசிலாந்து முதலில் பந்துவீச்சைத் தேர்ந்தெடுத்தது. அதன்படி, ம…
-
- 1 reply
- 750 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சீனாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டு கிரிக்கெட் போட்டியில் நேபாள கிரிக்கெட் அணி வரலாற்றுச் சாதனைகளைப் படைத்துள்ளது. 42 நிமிடங்களுக்கு முன்னர் இப்படி ஒன்று இதுவரை நடந்ததும் இல்லை, இனி நடக்குமா என்றும் தெரியாது என்று கூறும் வகையில் நேபாள கிரிக்கெட் அணி வீரர்கள் தங்களது உக்கிரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளனர். சீனாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டு கிரிக்கெட் போட்டியில் நேபாள கிரிக்கெட் அணி வரலாற்றுச் சாதனைகளைப் படைத்துள்ளது. அதிக வேகமான அரைச் சதம், அதி வேகமான சதம் என, டி20 போட்டியில் 300 ரன்கள் என அந்த அணி படைத்த உலகச் சாதனைகள் கிரிக்கெட் உலகை பிரமிக்க வைத்திருக்கின்றன. …
-
- 1 reply
- 342 views
- 1 follower
-
-
கிரிக்கெட் துறையில் சிக்கல்களைத் தீர்ப்பதற்கு இதுவே தருணம் முரளிதரன், மஹேலவும் ஒத்துழைப்பு வழங்க முன்வந்துள்ளனர் - புதிய இடைக்கால நிர்வாகக் குழுத்தலைவர் சிதத் வெத்தமுனி கூறுகிறார் ''கிரிக்கெட் விளையாட்டிலிருந்து ஓய்வு பெற்று பல்லாண்டுகளாக மகிழ்ச்சியுடன் பொழுதைக் கழித்துவரும் என்னிடம் இடைக்கால நிர்வாக சபைத் தலைமைப் பொறுப்பை ஏற்குமாறு அமைச்சர் கேட்டபோது நான் சற்று தயங்கினேன். ஆனால் கிரிக்கெட் விளையாட்டின்மீது அவர் கொண்டுள்ள அக்கறையானது என்னை மிகவும் கவர்ந்தது. அவரது தந்தையைப் போன்றே (முன்னாள் அமைச்சர் மறைந்த காமினி திசாநாயக்க) அவரிடம் கிரிக்கெட் விளையாட்டுத்துறையின் மீது காணப்படும் அக்கறை என்னை மிகவும் கவர்ந்தது. கிரிக்…
-
- 1 reply
- 398 views
-
-
இங்கிலாந்தில் சங்கா சதம் இங்கிலாந்தின் சரே பிராந்திய அணிக்காக நேற்று களமிறங்கிய குமார் சங்கக்கார ஆட்டமிழக்காமல் 112 ஓட்டங்களை பெற்றுள்ளார். சரே பிராந்திய அணிக்காக ஒப்பந்த அடிப்படையில் விளையாடிவரும் சங்கா, கிளமோர்கன் அணிக்கெதிரான போட்டியிலேயே சதம் அடித்துள்ளார். இதே அணிக்காகவே கெவின் பீட்டர்சன் தன் மீள் வருகைக்காக விளையாட ஆரம்பித்துள்ளார். அவர் 19 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். இந்தப் போட்டியில் சரே அணி, முதல் நாள் நிறைவில் 3 விக்கெட்களை இழந்து 363 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. 109 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்றுள்ள ஸ்டீவன் டேவிஸ் மற்றும் குமார் சங்ககார ஆகியோர் இணைந்து 213 ஓட்டங்களை பெற்றுள்ளனர். - See more at: http://www.tamilmirror.lk/144318#sthash.O5…
-
- 1 reply
- 394 views
-
-
இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரில் தென்னாபிரிக்காவை அவுஸ்திரேலியா வீழ்த்தியது. மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதலாவது போட்டியை அவுஸ்திரேலியாவும், இரண்டாவது போட்டியை தென்னாபிரிக்காவும் வென்றிருந்த நிலையில், கேப் டெளணில் நேற்றிரவு நடைபெற்ற தீர்மானமிக்க மூன்றாவது போட்டியை அவுஸ்திரேலியா வென்றதன் மூலமே தொடரைக் கைப்பற்றியது. ஸ்கோர் விவரம்: நாணயச் சுழற்சி: தென்னாபிரிக்கா அவுஸ்திரேலியா: 193/5 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: டேவிட் வோணர் 57 (37), ஆரோன் பின்ஞ் 55 (37), ஸ்டீவ் ஸ்மித் ஆ.இ 30 (15), மிற்செல் மார்ஷ் 19 (16) ஓட்டங்கள். பந்துவீச்சு: தப்ரையாஸ் ஷம்சி 1/25 [4], லுங்கி என்கிடி 1/33 [4], டுவைன் பிறிட்டோறியஸ் 1/42 [4], ககிஸோ றபாடா 1/42 [4], அன்றிச் நொர…
-
- 1 reply
- 640 views
- 1 follower
-