Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை ஆரம்பம்! ஜப்பானில் எதிர்வரும் 2020ஆம் ஆண்டு நடைபெறவுள்ள கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை ஆரம்பமாகியுள்ளது. 33 விளையாட்டுகளுக்கு டிக்கெட் கட்டணம் குறைந்தபட்சம் முதல் அதிகபட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 2,500 யென் தொடங்கி 3,00,000 யென் வரை டிக்கெட் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளைச் சேர்ந்த இரசிகர்கள் அடுத்த ஆண்டு ஜூன் 15ஆம் திகதி முதல் அங்கீகாரம் பெற்ற விற்பனையாளர்கள் மூலம் தங்கள் நாட்டிலேயே டிக்கெட் பெற்றுக் கொள்ளலாம். www.ticket.tokyo2020. org என்ற இணையதளத்தில் டிக்கெட் விற்பனை தொடர்பாக விபரங்களை இரசிகர்கள் பார்க்கலாம். … கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகள்,…

  2. ஜோகோவிச்சை வீழ்த்தி சம்பியனானார் நடால் பிரான்ஸ் ஓபன் (பகிரங்க) டென்னிஸ் தொடரின் ஆடவர்க்கான ஒற்றையர் பிரிவின் இறுதிப் ஜோகோவிச்சை தோற்கடித்து நடால் சம்பியன் பட்டம் வென்றுள்ளார். பிரான்ஸ் தலைநகர் பாரிசில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் உலகத் தரவரிசையில் முதல் இரு இடத்தில் உள்ள செர்பியாவின் நோவக் ஜோகோவிச்சும், ஸ்பெயினின் நடால் மோதினர். இந்த ஆட்டத்தின் முடிவில் நடால் 6-0, 6-2, 7-5 என்ற செட் கணக்கில் ஜோகோவிசை வீழத்தி கிரண்ட்ஸலாம் பட்டம் வென்றார். இது நடால் வெற்றி கொள்ளும் 20 ஆவது கிராண்ட்ஸ்லாம் பட்டம் என்பதுடன் 13 ஆவது பிரான்ஸ் ஒபன் பட்டமும் ஆகும். https://www.virakesari.lk/article/91869

  3. டிஎன்பிஎல் கிரிக்கெட் இறுதிப் போட்டியில் மதுரை - திண்டுக்கல் அணிகள் இன்று மோதல்: பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.1 கோடி பரிசு சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு வழங்கப்பட உள்ள கோப்பை. சங்கர் சிமெண்ட் டிஎன்பிஎல் தொடரின் 3-வது சீசன் இறுதிப் போட்டியில் இன்று திண்டுக்கல் டிராகன்ஸ் - சீசெம் மதுரை பாந்தர்ஸ் அணிகள் மோதுகின்றன. சென்னை சேப்பாக்கம் மைதானத் தில் இரவு 7.15 மணிக்கு நடை பெறும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 தமிழ் சானல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. திண்டுக்கல் அணியின் பேட்டிங் வலுவாக உள்ளது. கேப்டன் என்.ஜெகதீசன் இந்த சீசனில் 345 ரன்கள் சேர்த்துள்ளர். தொடக்க வீரரான ஹரி நிஷாந்த், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஆர்.விவேக் …

  4. பெண்களுக்கான ஐந்தம்ச (பென்டத்லன்) போட்டியில் நஃபிசாடோ தியாம் உலக சாதனை Published By: SETHU 06 MAR, 2023 | 11:38 AM பெண்களுக்கான ஐந்தம்ச போட்டியில் (பென்டத்லன்) பெல்ஜியத்தின் நஃபிசாடோ தியாம் புதிய உலக சாதனை படைத்துள்ளார். துருக்கியில் நடைபெறும் ஐரோப்பிய உள்ளக மெய்­வன்மை விளையாட்டு விழா­வில், நேற்றுமுன்தினம் தியாம் 5,055 புள்ளி­களுடன் தங்கப்பதக்கம் வென்றார். இது ஐந்தம்ச போட்டி­களில் புதிய உலக சாதனை­யாகும். 2012 ஆம் ஆண்டு உக்ரே­னின் நடாலியா டோபிரின்ஸ்கா 5,013 புள்ளி­களைப் பெற்றிருந்தமையே மகளிர் ஐந்தம்ச போட்டிகளில் முந்‍தைய உலக சாதனையாக இருந்தது. இவ்வருட ஐரோப்பிய உள்ளக விளை­யாட்டு …

  5. எம்பாப்பேவை வீழ்த்தி சிறந்த ஃபிஃபா வீரரான மெஸ்ஸி பட மூலாதாரம்,GETTY IMAGES 2 மணி நேரங்களுக்கு முன்னர் 2022ஆம் ஆண்டுக்கான சிறந்த கால்பந்து வீரர்களுக்கான விருதை சர்வதேச கால்பந்து அமைப்பான ஃபிஃபா அறிவித்துள்ளது. ஆண்கள் பிரிவில் சிறந்த கால்பந்து வீரர், சிறந்த கோல் கீப்பர், சிறந்த பயிற்சியாளர் விருதுகளை கால்பந்து உலககோப்பையை வென்ற அர்ஜென்டினா அணி வீரர்கள் வென்றுள்ளனர். சிறந்த வீரரான மெஸ்ஸி 2022-ம் ஆண்டுக்கான சிறந்த கால்பந்து வீரருக்கான விருதுக்கு அர்ஜெண்டினா மற்றும் பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணியின் முன்கள வீரரான லியோனெல் மெஸ்ஸி தேர்வு செய்யப்பட்டுள்ளார். சிறந்த வீரருக்கா…

  6. பெரிய அணிகளுடன் விளையாடுவதற்காக கதறி வருகிறோம்: அயர்லாந்து கேப்டன் 2019 உலகக் கோப்பை போட்டிகளில் 10 அணிகள் மட்டுமே இடம்பெறுவதான ஐசிசி முடிவை கடுமையாக எதிர்த்து வரும் அயர்லாந்து கேப்டன் போர்ட்டர்ஃபீல்ட், முன்னிலை அணிகளுடன் தங்கள் அணி விளையாடுவதற்காக ‘கதறி’ வருவதாக தெரிவித்தார். ஈஎஸ்பிஎன் கிரிக் இன்போ இணையதளத்திற்கு அவர் அளித்த பேட்டியில் தங்களது நிலை பற்றி விளக்கினார்: ஆம். 10 அணிகள் கொண்ட உலகக் கோப்பை என்பது ஒரு தீங்கான முடிவுதான். 2007 உலகக் கோப்பை போட்டிகளில் நாங்கள் தகுதி பெறாமல் போயிருந்தால், அயர்லாந்தில் கிரிக்கெட் இப்போது இருக்கும் நிலையில் நிச்சயம் இருக்க முடியாது என்று நான் உறுதியாகக் கூறுவேன். அயர்லாந்தில் மிகவும் வேகமாக வளர்ந்து வரும் விளையாட்டு …

  7. 2017: மறக்க முடியுமா? - விளையாட்டு ஜனவரி ஜன. 4: ஒரு நாள் டி20 கிரிக்கெட் கேப்டன் பதவியிலிருந்து எம்.எஸ்.தோனி விலகினார். பிப்ரவரி பிப். 20: ஐ.பி.எல். ஏலத்தில் இங்கிலாந்து ஆல்ரவுண்டர் பென்ஸ்டோக்ஸை ரூ.14 கோடிக்கு புனே அணி ஒப்பந்தம்செய்தது. ஏப்ரல் ஏப். 30: சென்னையில் நடந்த ஆசிய ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டி மகளிர் ஒற்றையர் பிரிவில் தீபிகா பல்லிக்கல் சாம்பியன் பட்டம் வென்றார். மே மே. 21: ஹைதராபாத்தில் நடந்த ஐபிஎல் இறுதிப் போட்டியில் மும்பை அணி புனே அனியை ஒரு ரன்னில் வீழ்த்தி 3-வது முறையாகக் கோப்பையை வென்ற…

  8. உலகின் தலைசிறந்த கால்பந்தாட்ட வீரருக்கு வழங்கப்படும் பல்லோன் தோர் (Ballon d'Or) தங்கப் பந்து விருதை தொடர்ந்து நான்காவது ஆண்டாக அர்ஜெண்டினா வீரர் லியோனெல் மெஸ்ஸி வென்றுள்ளார். பார்சலோனா கால்பந்தாட்டக் கழகத்துக்கு விளையாடிவரும் மெஸ்ஸி, அந்த அணிக்காக விளையாடும் இத்தாலியின் அந்த்ரெஸ் இனியஸ்தாவையும், ரியல் மட்ரிட் கழகத்துக்காக விளையாடும் போர்ச்சுகல் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஆகியோரை முந்திக்கொண்டு இவர் இந்த விருதைப் பெற்றுள்ளார். 2012ஆம் ஆண்டில் மட்டுமே 91 கோல்களை மெஸ்ஸி அடித்துள்ளார். சுவிட்சர்லாந்தின் ஸுரிச் நகரில் நடந்த வைபவத்தில் மெஸ்ஸியே விருதுக்குரியவர் என்பது அறிவிக்கப்பட்டது. பல்லோன் தோர் விருதை தொடர்ந்து நான்கு முறை வெல்லும் முதல் வீரர் என்ற சாதனையைய…

  9. இரண்டு இன்னிங்சிலும் சதம் அடித்த 5வது இந்திய வீரர் December 06, 2015 தென் ஆபிரிக்கா மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான கடைசி மற்றும் நான்காவது டெஸ்ட் போட்டி டெல்லியில் தற்போது நடைப்பெற்று வருகின்ற நிலையில், இரண்டு இன்னிங்சிலும் சதமடித்த அஜின்கியா ரஹானே, இரண்டு இன்னிங்சிலும் சதம் அடித்த 5வது இந்திய வீரர் என்ற பெருமையை தன்வசப்படுத்தினார். முதல் இன்னிங்சில் 127 ஓட்டங்களுடனும், இரண்டாவது இன்னிங்சில் ஆட்டமிழக்காது 100 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டார். டெஸ்டில் இரண்டு இன்னிங்சிலும் சதம் அடித்த இந்திய வீரர்கள் வருமாறு 1. விஜய் ஹசாரே (1948, அவுஸ்திரேலியாவுக்கெதிராக) – 116 மற்றும் 145 ஓட்டங்கள் 2. கவாஸ்கர் (1971, மேற்கிந்திய தீவுகளுக்கெதிராக) – 1…

  10. ஒலிம்பிக் போட்டித் தொடரில் சிங்கப்பூர் நீச்சல் வீரர் வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார். 21 வயதான Joseph Schooling பட்டர்பிளைய் 100 மீற்றர் நீச்சல் போட்டியில் வெற்றியீட்டி சாதனை படைத்துள்ளார். சிங்கப்பூருக்கு கிடைத்த முதலாவது தங்கப் பதக்கம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் போட்டியில் அமெரிக்க நட்சத்திர நீச்சல் வீரர் மைக்கல் பெல்ப்ஸை, Joseph Schooling பெதோற்கடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதேவேளை, 22 தங்கப் பதக்கங்களை வென்றுள்ள பெல்ப்ஸ் இனி ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கப் போவதில்லை என அறிவித்துள்ளார். http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/134896/language/ta-IN/article.aspx …

  11. ”கிரிக்இன்போ’ விருதை வென்றார் ரோஹித் சர்மா இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி வீரரான ரோஹித் சர்மா தொடர்ச்சியாக 3வது முறையாக ’கிரிக்இன்போ’ விருதை பெற்றுள்ளார். கடந்த வருடம் அக்டோபர் மாதம் தரம்சாலாவில் நடந்த தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 போட்டியில் ரோஹித் சர்மா 66 பந்தில் 106 ஓட்டங்கள் குவித்தார். இந்த சிறந்த இன்னிங்சிற்காக அவருக்கு விருது வழங்கப்பட்டுள்ளது. இதனை இலங்கை அணியின் முன்னாள் தலைவரான ஜெயவர்த்தனே பரிந்துரை செய்தார். இவருடன் முன்னாள் தலைவர்களான வாலஷ் (மேற்கிந்திய தீவுகள்), ஜான் ரைட் (நியூசிலாந்து) ஆகியோரும் அந்த விருது வழங்கும் தெரிவு குழுவில் இடம்பெற்றிருந்தனர். மேலும் ஆண்டின் சிறந்த தலைவருக்கான விருது சமீபத்தில் ஓ…

  12. மரியா ஷரபோவாவுக்கு 2 வருடத் தடை உலகின் முன்னிலை டென்னிஸ் வீராங்கனைகளில் ஒருவரான மரியா ஷரபோவா போட்டிகளில் பங்குபற்ற 2 வருட கால தடை விதிக்கப்பட்டுள்ளது. தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்தை பயன்படுத்திய குற்றச்சாட்டிலேயே அவருக்கு சர்வதேச டென்னிஸ் சம்மேளனம் இன்று இத்தடையை விதித்துள்ளது. ரஷ்யாவைச் சேர்ந்த 29 வயதான மரியா ஷரபோவா, இவ்வருடம் நடைபெற்ற அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் போட்டிகளில் பங்குபற்றியபோது அவரிடம் பெறப்பட்ட மாதிரிகள் மூலம், அவர் மெல்டோனியம் எனும் தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்தை பயன்படுத்தியதாக தெரியவந்துள்ளது. - See more at: http://www.metronews.lk/article.php?category=spo…

  13. ஒலிம்பிக் தடகளத்தில் இன்று ஆண்கள் 100 மீ., ஓட்டத்தின் தகுதி சுற்று போட்டிகள் நடக்கிறது. இதில் மின்னல் மனிதன் ஜமைக்காவின் உசைன் போல்ட், அசத்தலை தொடர்வார் எனத் தெரிகிறது. இங்கிலாந்து தலைநகர் லண்டனில், 30வது ஒலிம்பிக் போட்டி நடக்கிறது. இதில் நேற்று முதல் தடகள போட்டிகள் துவங்கின. இன்று நடக்கும் 100 மீ., ஓட்டத்தில், பீஜிங்கில் (9.69 வினாடி) தங்கம் வென்ற ஜமைக்காவின் உசைன் போல்ட், மீண்டும் சாதிக்கும் நோக்கத்துடன் களமிறங்குகிறார்.தவிர, பெர்லினில் நடந்த உலக சாம்பியன்ஷிப் போட்டியில், 9.58 வினாடியில் வந்து உலக சாதனை படைத்துள்ளார். இன்றும் இவர் சிறப்பாக செயல்படலாம். இருப்பினும், இவரது சக வீரர் யோகன் பிளேக், சமீபத்தில் நடந்த உள்ளூர் போட்டியில், போல்ட்டை போல்டு செய்துள்ளார்…

    • 1 reply
    • 673 views
  14. திரும்ப வந்துட்டேன்னு சொல்லு...‘அம்மா’ செரீனாவின் அட்டகாச கம்பேக்! பாரிஸ் நகரம் – செரீனா வில்லியம்ஸ் கடைசிமுறை இங்கு கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்றதன் பிறகு, அவருடைய வாழ்க்கை இப்போது நிறையவே மாறியிருக்கிறது. பெர்சனல் வாழ்வில் எவ்வளவோ மாறினாலும், விளையாட்டில் அவருடைய ஆளுமை துளியும் மாறவில்லை என சமீபத்தில் நிரூபித்தார் செரீனா. கறுப்பு நிற catsuit, இடுப்பில் சிவப்பு நிற பெல்ட் சகிதமாக ஃபிரெஞ்ச் ஓப்பன் நடந்த மைதானத்தில் அவர் நுழைந்தபோது, ஒரு சூப்பர் ஸ்டாரின் வருகைபோலவே இருந்தது அது. முதல் சுற்றில் செக் குடியரசின் கிறிஸ்டினா ப்ளிஸ்கொவாவை 7-6 (4), 6-4 என்ற செட் கணக்கில் வீழ்த்தியபிறகு, ``இந்த ஆடை ஒரு அடையாளமாக இன்று இருக…

  15. உலக இரும்பு மனிதன் போட்டி: வெள்ளிப் பதக்கம் வென்ற குமரி ஸ்ட்ராங் மேன் கட்டுரை தகவல் எழுதியவர்,பிரபுராவ் ஆனந்தன் பதவி,பிபிசி செய்தியாளர் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் உலக இரும்பு மனிதன் போட்டியில் கலந்து கொண்ட குமரி மாவட்டத்தை சேர்ந்த ஸ்ட்ராங் மேன் கண்ணன் இரண்டாம் இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றார். உலக அளவில் மிகவும் பிரபலமான விளையாட்டு போட்டிகளில் ஸ்ட்ராங் மேன் போட்டிகள் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த போட்டியில் சர்வதேச அளவில் பங்கேற்கும் வீரர்கள் சாதாரணமாக இல்லாமல், தங்கள் உடல் எடையை விட பல மடங்கு எடை கொண்ட பொருட்களை தூக்கி சாதனை படைத்து வருகின்றனர். …

  16. [size=4]ஒலிம்பிக் போட்டிகளில் விளையாடும் 81 இந்திய வீரர்களில் தமிழ்நாட்டிலிருந்து ஒரு வீரர் கூட கிடையாது. தமிழக விளையாட்டுத்துறை தலைகுனிந்து முகத்தை மூடிக்கொண்டு மூலையில் உட்கார்ந்திருக்கிறது. நம்மிடம் திறமையான வீரர்களுக்கு பஞ்சமில்லை. பயிற்சியாளர்களுக்கும் குறைவில்லை. இருந்தும் விளையாட்டில் எப்போதும் நமக்கு கடைசி ரேங்க்தான்! மிகச்சிறிய மாநிலமான மணிப்பூர் கூட தன் பங்குக்கு 6 பேரை ஒலிம்பிக்கிற்கு அனுப்பியிருக்கிறது. நம் அருகாமை மாநிலமான கர்நாடகவிலிருந்து 9பேர் ஆந்திராவிலிருந்து 8பேர் என அசத்துகின்றனர். ஆனால் நாமோ ஒரே ஒரு வீரரை கூட இந்தியா சார்பாக அனுப்பவில்லை. ஒலிம்பிக்கில் தமிழ்நாட்டிலிருந்து ரெஞ்சித் மகேஸ்வரி,ருஷ்மி சக்ரவர்த்தி,ஸ்ரீஜேஸ் என மூன்று பேர் சென்று இ…

  17. நெய்மருக்கு ரூ.76 லட்சம் அபராதம் January 31, 2016 வரி ஏய்ப்பு விவகாரத்தில் பிரேசில் கால்பந்து அணியின் தலைவர் நெய்மருக்கு ரூ.76 லட்சம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. பிரேசில் தேசிய கால்பந்து அணியின் தலைவரும், நட்சத்திர வீரருமான நெய்மர் 2007 மற்றும் 2008ம் ஆண்டு வரி ஏய்ப்பு செய்து வந்ததாக குற்றசாட்டு எழுந்தது. இந்நிலையில் அவர் மீதான இந்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு ரூ.76 லட்சம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிராக அவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. http://www.onlineuthayan.com/sports/?p=8627&cat=11

  18. உலகில் உள்ள பெரும்பான்மையான உடல் வலிமை சார்ந்த விளையாட்டுப் போட்டிகளில், பல ஆண்டுகள் கோலோச்சும் வீரர்கள் கூட 35, 40 வயதில் ஓய்வு அறிவித்துவிடுவார்கள். அந்த வீரர்கள் விளையாடும்போது எவ்வளவு கட்டுமஸ்தாக இருந்திருந்தாலும் ஓய்வுக்குப் பின்னர் கிடைக்கும் அதீத விடுப்பினாலும், வாழ்க்கை முறை மாற்றத்தாலும் அடையாளம் தெரியாத அளவுக்கு உடல் எடை அதிகரிப்பதைப் பார்த்திருப்போம். ஆனால், ருக்மணி தேவி, 64 வயதிலும் தடகளப் போட்டிகளில் கலக்கி வருகிறார். அடுத்ததாக ‘மாஸ்டர்ஸ் வேர்ல்டு மீட்' என்று சொல்லப்படும் 35 வயதுக்கு மேற்பட்டோருக்கான உலக விளையாட்டுப் போட்டிகளுக்காகத் தயாராகி வரும் ருக்மணி தேவியை, பயிற்சி எடுக்கும் இடத்திற்கே சென்று சந்தித்தோம். ஜாவ்லின் த்ரோ, ஹாம்மர் த்ரோ, லா…

    • 0 replies
    • 672 views
  19. எதிர்வரும் 2028 ஆம் ஆண்டு அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளில் கிரிக்கெட்டும் இணைத்துக் கொள்ளப்படலாம் என எம்.சி.சி.யின் சர்வதேச கிரிக்கெட் நிறுவன தலைவர் மைக் கேட்டிங் தெரிவித்துள்ளார். ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டை சேர்ப்பது குறித்து ஐ.சி.சி நடவடிக்கைகளை எடுத்துக்கொண்டிருப்பதாகவும், இது உலகெங்கிலும் இருக்கும் கிரிக்கெட் ரசிகர்களுக்கு மிகப்பெரிய சந்தோசத்தை தரும் எனவும் அவர் கூறியுள்ளார். மகளிர் கிரிக்கெட் அண்மையில் 2022 காமன்வெல்த் விளையாட்டு பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதும், இந்த ஆண்டின் தொடக்கத்தில், சச்சின் டெண்டுல்கரும் ஒலிம்பிக் போட்டிகளில் கிரிக்கெட்டை சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தியதும் குறுப்பிடத்தக்கது. https://w…

    • 0 replies
    • 672 views
  20. ஐபிஎல் 2019: ரஸ்ஸலை விடவும் அதிகச் சம்பளம் பெறும் ஐபிஎல் வீரர்கள்! நேற்று, ரஸ்ஸல் ஆடிய ஆட்டத்தைப் பார்த்தீர்கள் தானே! அவருடைய திறமைக்கும் பங்களிப்புக்கும் ஏதாவது ஒரு விலை வைக்கமுடியுமா? விலைமதிப்பில்லாத ஆட்டமல்லவா அவை! இந்தமுறை கொல்கத்தா அணியில் ரஸ்ஸலுக்கு அளிக்கப்பட்டுள்ள சம்பளம் ரூ. 8.50 கோடி. ஆனால் இந்தத் தொகையை விடவும் அவருடைய பங்களிப்பு மிக அதிகமாக உள்ளது. முதல் ஆட்டத்தை சன்ரைசர்ஸ் அணிக்கு எதிராக கொல்கத்தா வென்றதற்குக் காரணம் ரஸ்ஸல்தான். 19 பந்துகளில் 4 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் ஆட்டமிழக்காமல் 49 ரன்கள் எடுத்தார். ப…

    • 0 replies
    • 672 views
  21. போட்டிகளின் முடிவுகளை புரட்டி போடும் 'அம்பயர் கால்'! உலக கோப்பை கிரிக்கெட்டில் வெடித்த சர்ச்சை!! மெல்போர்ன்: டிஆர்எஸ் எனப்படும் நடுவரின் முடிவை மறு பரிசீலனை செய்யும் நடைமுறை குறித்து பெரும் சர்ச்சை வெடித்துள்ளது. டிஆர்எஸ் நடைமுறைக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் எதிர்ப்பு தெரிவிப்பது சரிதான் என்ற பேச்சு பரவலாக எழுவதற்கு, இந்த சர்ச்சைகளே காரணமாக அமைந்துள்ளன. கிரிக்கெட் ஆட்டத்தில் களத்திலுள்ள இரு நடுவர்களுக்கும், பேட்ஸ்மேன் அவுட் விவகாரத்தில் சந்தேகம் ஏற்பட்டால், மூன்றாவது நடுவரை தொடர்பு கொண்டு கேட்பது நடைமுறை. மூன்றாவது நடுவர் தொலைக்காட்சியில் மீண்டும் அந்த காட்சியை போட்டு பார்த்து முடிவை அறிவிப்பார். சிவப்பு விளக்கை ஆன் செய்தால், பேட்ஸ்மேன் அவுட் என்றும், பச்சை விளக்…

  22. அவுஸ்திரேலிய சுழல் பந்துவீச்சாளர் ஷேன் வோர்ண் 52 வயதில் மாரடைப்பால் மரணம் Shane Warne: Australia legend dies aged 52 Legendary Australia leg-spinner Shane Warne, one of the greatest cricketers of all time, has died of a suspected heart attack aged 52. Warne took 708 Test wickets, the second most of all time, in 145 matches across a stellar 15-year international career. He had been found unresponsive in his villa on the Thai island of Koh Samui on Friday, said his management company. "It is with great sadness we advise that Shane Keith Warne passed away of a suspected heart attack," they added. "Despite the best efforts of medical st…

  23. டுவென்டி 20 போட்டிகளில் அதிக விக்கெட்களை வீழ்த்தி அப்ரிதி புதிய சாதனை l டெல்லி: பாகிஸ்தான் ஆல்ரவுண்டர் ஷாஹித் அப்ரிதி டுவென்டி 20 போட்டிகளில் அதிக விக்கெட்களை வீழ்த்தி புதிய சாதனை படைத்துள்ளார். பாகிஸ்தான் கண்டெடுத்த அபாரமான கிரிக்கெட் வீரர்களில் அப்திரிக்கு முக்கியத்துவம் உண்டு. எதிரணியினரும் மதிக்கக் கூடிய திறமையாளர் அப்ரிதி. தற்போது தனது 86வது டுவென்டி 20 போட்டியில் அவர் ஒரு புதிய சாதனை படைத்துள்ளார். இப்போட்டியில் அவர் டுவன்டி 20 போட்டிகளில் 86 விக்கெட்களைச் சாய்த்து டுவென்டி 20 போட்டிகளில் அதிக விக்கெட்களை வீழ்த்தியுள்ள வீரராக உருவெடுத்துள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான போட்டி துபாயில் இங்கிலாந்துக்கு எதிரான 2வது டுவென்டி 20 போட்டியில்தான் இந்த …

  24. சென்னையிலுள்ள கோவளம் மீனவக் கிராமத்தைச் சேர்ந்த மூர்த்தி தலைமையிலான இந்திய சர்ஃபிங் (கடலலைச் சறுக்கல்) அணியினர், இலங்கையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஆண்களுக்கான உலக சர்ஃபிங் தரப்படுத்தல் போட்டியில் பங்கேற்றனர். மீனவக் குடும்பத்தைச் சேர்ந்த தமிழர் ஒருவர் தலைமையில் இந்திய அணி இதில் பங்கேற்றது. World Surf League Qualifying Series (QSL3000) என அழைக்கப்படும் சர்ஃபிங் போட்டி, இலங்கையின் அறுகம்பே எனும் இடத்தில் நடந்து வருகிறது. கடந்த 25ஆம் தேதி ஆரம்பித்த இந்தப் போட்டித் தொடர், 29ஆம் தேதி வரையில் நடைபெறவுள்ளது.25 நாடுகள் பங்கேற்கும் இந்தத் தொடரில், 100க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்து கொள்கின்றார்கள். தெற்காசியாவில் இருந்து இலங்கை, இந்தியா மற்றும் மாலத்த…

    • 0 replies
    • 672 views
  25. சாம்பியன்ஸ் டிராபியை இங்கிலாந்தில்தானே ஆடினோம்... வங்கதேசத்தில் இல்லையே?- விராட் கோலியின் விகடம் இங்கிலாந்து தொடருக்கு முன்பான செய்தியாளர்கள் சந்திப்பில் சாஸ்திரி, விராட் கோலி. இங்கிலாந்தில் மிக நீண்ட தொடருக்குச் செல்லும் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி செய்தியாளர்கள் சந்திப்பில் கவுண்டி கிரிக்கெட்டில் ஆடப்போயிருந்தால் கூட நான் இவ்வளவு ஃபிட் ஆக இருந்திருக்க மாட்டேன் என்று தெரிவித்துள்ளார். விராட் கோலி 2014 தொடரில் ஒரு அரைசதம் கூட எடுக்காமல் ஜேம்ஸ் ஆண்டர்சனின் செல்லப்பிள்ளையாக அவரிடமே விக்கெட்டைப் பறிகொடுத்தது பற்றி மீண்டும் மீண்டும் கேள்விகளை எழுப்ப கொஞ்சம் சீரியசாக ஆனால் நிறைய விகடத்துடன் பதிலளித்தார் விராட் க…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.