Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. Published By: SETHU 17 JUL, 2023 | 10:24 AM விம்பிடள்டன் பகிரங்க டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஸ்பானிய வீரர் கார்லோஸ் அல்காரஸ் சம்பியனனார். ஞாயிற்றுக்கிழமை (16) நடைபெற்ற இறுதிப் போட்டியில் சேர்பிய வீரர் நோவாக் ஜோகோவிச்சை 1-6, 7-6 (8/6), 6-1, 3-6, 6-4 விகிதத்தில்அல்காரஸ் தோற்கடித்தார். 20 வயதேயான கார்லோஸ் அல்காரஸுக்கு இது இரண்டாவது கிராண்ட்ஸ்லாம் சம்பியன் பட்டமாகும். 36 வயதான நோவாக் ஜோகோவிச் உலகின் 2 ஆம் நிலை வீரர். ஆண்களில் 23 கிராண்ட்ஸ்லாம் சம்பியன் பட்டங்களை வென்று சாதனை படைத்தவர். இவ்வருடத்தின் அவுஸ்திரேலியஇ பிரெஞ்சு பகிரங்க சுற்றுப்போட்டிகளிலும் அவரே சம்பியனானார். …

  2. நவம்பர் 27 கிரிக்கெட்டின் கறுப்பு தினம்: இளம் வீரர் ஹியூக்ஸ் உயிரை பறித்த பந்து! அன்று வரை கிரிக்கெட் உலகின் பிரசித்தி பெற்ற மைதானமாக விளங்கியது சிட்னி கிரிக்கெட் மைதானம் அன்று வரையிலான அதன் வரலாறு, ஒவ்வொரு கிரிக்கெட் ரசிகனையும் உற்சாகப்படுத்தியதாகவே இருந்தது. ஆனால், அந்நாள் அதன் வரலாற்றில் ஒரு கரும்புள்ளி வைத்தது. அது, நவம்பர் 27, 2014. பவுன்சர் பந்தால் தலையில் காயம்பட்டு சிகிச்சையில் இருந்த ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் பிலிப் ஹியூக்ஸ் தனது ஆயுட்காளத்தை 25 ஆண்டுகளோடு நிறைவு செய்துகொண்ட தினம். இன்று. கிரிக்கெட் வீரர்கள், கிரிக்கெட் விளையாடுபவர்கள் மட்டுமல்லாது கிரிக்கெட் பார்க்கும் ஒவ்வொரு ரசிகனின் கண்ணிலும் ஈரம் படர வைத்தது இத்துயர சம்பவம். தான் மிகவு…

  3. "ஒரு தலை­மு­றை­யையே இலங்கைக் கிரிக்கெட் இழந்­து­விட்­டது" ஆதங்­கத்­துடன் லசித் மலிங்க ஒரு தலை­மு­றை­யையே இலங்கைக் கிரிக்கெட் இழந்­து­விட்­டது என்று லசித் மலிங்க ஆதங்­கத்­துடன் தெரி­வித்­துள்ளார். அதேபோல் மக்­களின் விருப்­பத்­திற்கு புதிய இளம் வீரர்­களை அணியில் சேர்த்து, சேர்­த்த­வர்கள் நல்ல பெயரைப் பெற்­றுக்­கொண்­டார்கள். அணி வீழ்ச்­சியைக் கண்­டு­விட்­டது என்றும் அவர் தனது ஆதங்­கத்தை வெளிப்­ப­டுத்­தி­யுள்ளார். இலங்கைக் கிரிக்கெட் அணி அண்மைக் கால­மாக கண்­டு­வரும் தொடர் தோல்­வி­களால் இலங்கைக் கிரிக்கெட் நிறு­வனம் கடு­மை­யான விமர்­ச­னங்­க­ளுக்கு உள்­ளா­கி­வ­ரு­கின்­றது. அதேபோல் விளை­யாட்­டுத்­துறை அமைச்­சரும் கண்­டு­கொள்­ளாமல் இருக்­கிறார் …

  4. மட்டக்களப்பு வரலாற்றில் முதல் தடவையாக கிரிக்கெட் விளையாடிய அவுஸ்ரேலிய பிறிஸ்பன் A.A.Potoroos அணி மட்டக்களப்பு வரலாற்றில் முதல் தடவையாக அவுஸ்ரேலியா பிறிஸ்பன் A.A.Potoroos கிரிக்கெட் அணி மற்றும் மட்டக்களப்பு மைக்கல்மென் இணைந்து 30 ஓவர் கொண்ட நட்புறவு கிரிக்கெட் சுற்றுப்போட்டியொன்று இன்று நடைபெற்றது. மைக்கல்மென் அணி மற்றும் அவுஸ்ரேலியா அணிகளுக்கிடையில் ஆரம்பமான கிரிக்கெட் போட்டி உத்தியோகபூர்வமாக கிழக்கு பல்கலைகழகத்தின் மைதானத்தில் இடம்பெற்றது. போட்டியின் ஆரம்பத்தில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்ரேலியா அணி களத்தடுப்பை தீர்மானித்தனர். முதலில் துடுப்பெடுத்தாடிய மைக்கல்மென் அணி முப்பது ஓவர் முடிவில் நான்கு பேர் ஆட்டமிழப்பு…

  5. இரண்டாவது முறையாகவும் இடம்பெறவுள்ள கிறாஸ்ஹொப்பேர்ஸ் பிறீமியர் லீக் யாழ்ப்பாணத்தில் யாழ் கிறாஸ்ஹொப்பேர்ஸ் விளையாட்டுக் கழகமானது தமது கழகத்தின் முன்னாள் வீரர்களான ராஜசிங்கம் றொஹான் மற்றும் சிவசங்கர் ஆகியோரது ஞாபகார்த்தமாக நடாத்திவரும் அணிக்கு 06 பேர் விளையாடும் 05 ஓவர்கள் கொண்ட கிறாஸ்ஹொப்பேர்ஸ் பிறீமியர் லீக் (ஜி.பி.எல்) போட்டித் தொடர் இரண்டாவது முறையாக இவ்வருடமும் மிகவும் கோலாகலமாக இடம்பெறவிருக்கின்றது. ரொஹான் மற்றும் சங்கர் ஆகியோர் 1989ஆம் ஆண்டு கிறாஸ்ஹொப்பேர்ஸ் அணிக்காக முரசொலி கிரிக்கெட் கிண்ணத்தினைப் பெற்றுக்கொடுத்ததில் முக்கிய பங்காளிகளாவர். முரசொலி கிரிக்கெட் தொடர் 6 பேர் விளையாடும் 5 ஓவர்கள் கொண்ட போட்டியாகவே அமை…

  6. எப்படி இருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் இப்படி ஆயிடுச்சே..! சென்னை: எப்படி இருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் இப்படி ஆகிவிட்டது.. என்று புலம்பும் நிலையை உருவாக்கிவிட்டனரே என்ற ஆதங்கம் சிஎஸ்கே ரசிகர்களுக்கு ஏற்பட்டுள்ளது. ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டித் தொடர் 2008ம் ஆண்டு முதல் தொடங்கப்பட்டது. மொத்தம் 8 அணிகள் அப்போது களம் கண்டன. 'ஒவ்வொரு அணிக்கும் ஒரு முக்கிய வீரர்' என்ற கணக்கின்படி சென்னைக்கு கிடைத்தவர்தான் மகேந்திரசிங் டோணி. சென்னை அணியின் கேப்டனாக அப்போது முதல் டோணிதான் சென்னையின் கேப்டனாக தொடருகிறார். பவுலிங் மட்டும்தான் வீக்கு இந்திய அணிக்கு பல மகுடங்களை சூட்டிய டோணி, சென்னையையும் டாப் அணியாக கொண்டுவர தவறவில்லை. பவுலிங் எல்லா சீசனிலும் சொதப்பலாகவே அமைந்திருந்தாலும், ம…

  7. ஆஸி., ஓபன் டென்னிஸ் : அசாரெங்கா சாம்பியன் மெல்போர்ன் : ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் பெண்கள் ஒற்றையர் டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டியில் அசாரெங்கா சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். இறுதிப்போட்டியில், மரியா ஷரபோவாவை எதிர்கொண்ட அசாரெங்கா, 6--3, 6-0 என்ற நேர்செட்களில் வென்று சாம்பியன் கோப்பையை கைப்பற்றினார். இவர் வெல்லும் முதல் கிராண்ட் ஸ்லாம் பட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது. http://tamil.yahoo.c...-101400455.html

  8. டெஸ்ட் கிரிக்கெட்டில் 10-வது சதம்: முன்னணி வீரர்களுடன் இணைந்த டேவிட் வார்னர் அடிலெய்ட் டெஸ்ட் போட்டியில் இன்று வார்னர் தனது 10-வது டெஸ்ட் சதத்தை எடுத்தார். 33-வது டெஸ்ட் போட்டியில் 10-வது சதம் கண்ட 4-வது ஆஸ்திரேலிய வீரராக உள்ளார் வார்னர். டான் பிராட்மேன், நீல் ஹார்வி, ஆர்தர் மாரிஸ் ஆகிய ஆஸ்திரேலிய பேட்ஸ்மென்களுக்குப் பிறகு தற்போது 33 டெஸ்ட் போட்டிகளில் வார்னர் 10 டெஸ்ட் சதங்களை எடுத்து சாதனை புரிந்துள்ளார். 33 டெஸ்ட் போட்டிகளில் பிராட்மேன் 18 சதங்களையும் 7 அரைசதங்களையும் எடுத்திருந்தார். நீல் ஹார்வி 12 சதங்களையும், 11 அரைசதங்களையும், ஆர்தர் மாரிஸ் 10 சதங்களையும் 8 அரைசதங்களையும் எடுக்க, வார்னர் 10 சதங்களையும் 13 அரைசதங்களையும் எடுத்து அந்த உயர்மட்ட பட்டியலில் இ…

  9. ஊக்கமருந்துப் பாவனையில் சிக்கிய இலங்கையின் முக்கிய துடுபாட்ட வீரர். கடந்த எல்.பி.எல். போட்டிகளில் ஊக்கமருந்து பயன்படுத்திய குற்றச்சாட்டில் கிரிக்கெட் வீரர் நிரோஷன் திக்வெல்ல அணியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில். எதிர்காலத்தில் அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது. ஊக்கமருந்து பயன்பாடு ஊக்கமருந்து பயன்பாடு தொடர்பான இவ்வாறான அறிக்கை கிரிக்கெட் சபைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக இலங்கை ஊக்கமருந்து தடுப்பு முகவர் அமைப்பின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, ஊக்கமருந்து பயன்படுத்திய குற்றச்சாட்டின் காரணமாக திக்வெல்ல அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் இடைநிறுத்தப்…

  10. அருமை அற்புதம் புங்குடுதீவு தமிழன் கொரியாவில் உலக ஆணழகன் போட்டியில் அங்கம் தர்சன் தியாகராசா என்னும் இலங்கை தமிழன் மிஸ்டர் ஸ்ரீலங்கா தெரிவில் வெற்றி பெற்று தற்போது கொரியாவில் நடைபெற உள்ள உலக ஆணழகன் போட்டியில்பங்கு பற்றவுள்ளார் இவர். புங்குடுதீவு மண்ணின் பரம்பரை சொத்து . யாழ் வெலிங்கடன் திரையரங்கின் முன்னே உள்ள பிரபலமான சைவ உணவகம் முனீஸ்வரகபேயின் உரிமையாளரும் பிரபல சங்கீத வித்துவானும் புங்குடடுதீவு மடத்துவெளியை பிறப்பிடமாகக் கொண்டவருமான கே.வி தம்பு மற்றும் மடத்துவெளி நல்லையா லட்சுமி தம்பதியின் பேரனும் ஆவார் . தியாகராசா தம்பு ,நல்லையா சியாமளா (கனடா ந.தர்மபாலனின் சகோதரி ) ஆகியோர் இந்த திறமை மிக்க இளைஞனின் பெற்றோர் ஆவார் . ஆகியோர் இந்த தி…

  11. விம்பிள்டன் உட்பட பல டென்னிஸ் போட்டிகளில் மோசடி? விம்பிள்டன் போட்டிகள் உட்பட, உலகின் பல முன்னணி டென்னிஸ் போட்டிகளில், பந்தய மோசடி நடைபெற்றுள்ளன என்று சந்தேகப்படுவதற்கான ஆதாரங்கள், பிபிசி மற்றும் பஸ்ஃபீட் நியூஸ் ஆகியவை இணைந்து முன்னெடுத்த விசாரணையில் தெரியவந்துள்ளது. விம்பிள்டன் டென்னிஸ் போட்டியிலும் மோசடி என சந்தேகங்கள் எழுந்துள்ளன என பிபிசி கூறுகிறது. கடந்த பத்தாண்டுகளில்,கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்றவர்கள் உட்பட பலர், பந்தய மோசடியில் ஈடுபட்டு ஆட்டங்களில் தோல்வியடைந்தனர் எனும் சந்தேகத்தின் பேரில், டென்னிஸ் அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளனர் என்று, இரகசிய ஆவணங்கள் மற்றும் கோப்புகள் காட்டுகின்றன. பல விளையாட்டு வீ…

  12. ஃபேஸ்புக், ட்விட்டர், ஜியோ, அமேசான்..ஐ.பி.எல் டிஜிட்டல் உரிமைக்கு கடும் போட்டி! உலகின் முன்னணி கிரிக்கெட் தொடரான ஐ.பி.எல் போட்டிகளை தொலைக்காட்சியில் தற்போது ஒளிபரப்பி வரும், சோனி நிறுவனத்தின் ஒப்பந்த காலம் அடுத்த ஆண்டுடன் முடிகிறது. எனவே அதற்கடுத்த ஆண்டுகளுக்கான ஒளிபரப்பும் உரிமை யாருக்கும் வழங்கப்படும் என எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் ஏற்கெனவே வழங்கப்பட்டுவிட்டன. மொத்தம் 18 முன்னணி நிறுவனங்கள் இந்த உரிமைக்காக போட்டியிடுகின்றன. இந்த ஒளிபரப்பும் உரிமைக்கான ஒப்பந்தங்கள் வரும் 25-ம் தேதி பெறப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கிறது. இத்துடன் இந்…

  13. லிவர்பூல், PSG அணிகளுக்கு எதிர்பாராத தோல்வி By Mohamed Shibly ஐரோப்பிய சம்பியன்ஸ் லீக் தொடரின் 16 அணிகள் சுற்றின் (Round of 16) முதல் கட்டப் போட்டிகள் இலங்கை நேரப்படி இன்று (19) ஆரம்பமாகின. முதல் நாளின் இரண்டு போட்டிகள் நடைபெற்றன. அதன் விபரம் வருமாறு, லிவர்பூல் எதிர் அட்லடிகோ மெட்ரிட் ஐரோப்பிய சம்பியன்ஸ் லீக் நடப்புச் சம்பியனான லிவர்பூல் ஸ்பெயினின் அட்லெடிகோ மெட்ரிட் அணிக்கு எதிரான போட்டியில் 1-0 என்ற கோல் வித்தியாசத்தில் தோற்று பட்டத்தை தக்கவைத்துக் கொள்வதில் நெருக்கடியை சந்தித்துள்ளது. கடந்த முறை இறுதிப் போட்டியில் டொட்டன்ஹாம் ஹொட்ஸ்புர் அ…

  14. நான்காம் நாள் ஆட்டம் நிறைவு: வெற்றியை நோக்கி இந்தியா இந்தியா மற்றும் அவுஸ்ரேலியா அணிகளுக்கிடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டியின், நான்காம் நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்துள்ளது. இதற்கமைய 399 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய அவுஸ்ரேலியா அணி, ஆட்டநேர முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 229 ஓட்டங்களை பெற்றுள்ளது. இதன்படி அவுஸ்ரேலியா அணி வெற்றிபெற வேண்டுமாயின் 170 ஓட்டங்கள் பெற வேண்டியுள்ளது. ஆட்டநேர முடிவில் பெட் கம்மின்ஸ் 40 ஓட்டங்களுடனும், நதன் லியோன் 1 ஓட்டத்துடனும் களத்தில் இருந்தனர். மெல்பேர்ன் மைதானத்தில் கடந்த 26ஆம் திகதி ஆரம்பமான இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இதன்…

  15. டோக்யோ ஒலிம்பிக்: வெண்கலப் பதக்கம் வென்றார் இந்தியாவின் பி.வி. சிந்து ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,PEDRO PARDO/AFP VIA GETTY IMAGES டோக்யோ ஒலிம்பிக்கின் மகளிருக்கான ஒற்றையர் பிரிவு பேட்மிண்டன் போட்டியில் சீனாவின் ஹீ பிங்ஜியவோவை வீழ்த்தி வெண்கலப் பதக்கம் வென்றார் இந்தியாவின் பி.வி. சிந்து 2016 ஒலிம்பிக்கில் வென்ற வெள்ளிப் பதக்கத்துடன் சேர்த்து தனிப்பட்ட வகையில் இரண்டு ஒலிம்பிக் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை ஆகிறார் சிந்து. டோக்யோ ஒலிம்பிக் போட்டியில் தங்கம் மற்றும் வெள்ளி வெல்லும் வாய்ப்பை இழந்த பி.வி. சிந்து இன்று நடைபெற்ற வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் சீனாவின் ஹி பிங்ஜிய…

  16. மகேந்திர சிங் தோனி வருகை: விராட் கோலியுடன் அவர் இணைவதை இந்தியா கொண்டாடுவது ஏன்? 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES ஓராண்டுக்கு முன்பு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற மகேந்திர சிங் தோனியை டி20 உலகக் கோப்பை போட்டிக்காக மீண்டும் அழைத்திருக்கிறது இந்திய அணி. இந்த முறை அவரது ஹெலிகாப்டர் ஷாட்களை ரசிகர்கள் பார்க்க முடியாது. மின்னல் வேக ஸ்டம்பிங்குகளும் காணக் கிடைக்காது. ஆனால் மிஸ்டர் கூல் என்று அழைக்கப்படும் அவரது தலைமைப் பண்பை மட்டும் நிச்சயமாகப் பார்க்க முடியும் என்றே தோன்றுகிறது. ஏனென்றால் இப்போது அவர் அணியில் இடம்பெறவில்லை, இந்திய டி-20 அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டிர…

  17. பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.) தொடர் தொடங்க இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் போதிய அனுசரணையாளர் கிடைக்காத சோகத்தில் உள்ளனர் அணி நிர்வாகிகள். பல்வேறு சர்ச்சைகளை கடந்து, ஏழாவது பிரிமியர் தொடர் ஏப். 16 ஆம் திகதி ஐக்கிய அரபு எமிரேட்சில் தொடங்குகிறது. புனே அணி விலகியதை அடுத்து இம்முறை சென்னை, மும்பை உட்பட மொத்தம் 8 அணிகள் மட்டும் பங்கேற்கின்றன. இதனிடையே டில்லி அணி வீரர்கள் அணியும் ‘ஜெர்சியில்’ இடம்பெற இன்னும் அனுசரணையாளர்கள் கிடைக்கவில்லை. கடந்த ஆண்டில் இருந்த சில தனியார் நிறுவனங்களும் இம்முறை ஆர்வம் காட்டவில்லை. கடந்த முறை 15 ஆக இருந்த பஞ்சாப் அணியின் அனுசரணையாளர் எண்ணிக்கை 4 ஆக குறைந்துவிட்டது. ஐதராபாத் அணிக்கும் 4 அனுசரணையாளர்கள் தான் உள்ளனர். பனசொனிக் நிறுவன இயக்குனர்…

    • 0 replies
    • 613 views
  18. தற்கொலை செய்ய நினைத்தேன் : ரெய்னா அதிர்ச்சி தகவல் இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் சுரேஷ் ரெய்னா தான் தற்கொலை செய்துகொள்ள நினைத்தமை குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். சகலதுறை ஆட்டக்காரரான சுரேஷ் ரெய்னா, இருபதுக்கு - டி20 போட்டியில் சிறப்பாக விளையாடக் கூடியவர். இந்நிலையில் தான் தற்கொலை தற்கொலை செய்ய நினைத்தமை குறித்து ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தெரிவிக்கையில், எனக்கு 13 வயது இருக்கையில் ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தேன். ரயிலில் தூங்கும்போது ஏதோ என் தோளில் பாரமாக இருப்பது போன்ற உணர்வு ஏற்பட்டு கண் விழித்தேன். என் கைகளை கட்டிப்போட்டுவிட்டு ஒரு சிறுவன் என் நெஞ்சு மீது அமர்ந்து என…

  19. அப்ரிதி ஓய்வு எப்போது டிசம்பர் 21, 2014. கராச்சி: பாகிஸ்தான் வீரர் அப்ரிதி, அடுத்த ஆண்டு உலக கோப்பை தொடருக்கு பின், ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக தெரிவித்தார். பாகிஸ்தான் அணியின் ‘ஆல்–ரவுண்டர்’ அப்ரிதி, 34. இதுவரை 27 டெஸ்ட் (1716 ரன், 48 விக்.,), 389 ஒருநாள் (7870 ரன், 391 விக்.,), 77 சர்வதேச ‘டுவென்டி–20’ (1142 ரன், 81 விக்.,) போட்டிகளில் விளையாடி உள்ளார். கடந்த 2010ல் டெஸ்ட் போட்டியில் இருந்து விடை பெற்ற அப்ரிதி, தற்போது ஒருநாள் போட்டியில் இருந்தும் ஓய்வு பெற முடிவு செய்துள்ளார். இதுகுறித்து அப்ரிதி கூறியது: நல்ல நிலையில் இருக்கும் போதே ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற விரும்புகிறேன். எனவே அடுத்த ஆண்டு ஆஸ்திரேலியா, நியூசிலாந்தில் நட…

  20. முதலாமிடத்துக்கு முன்னேறிய பும்ரா சர்வதேச கிரிக்கெட் சபையின் டெஸ்ட் போட்டிகளுக்கான பந்துவீச்சாளர்களின் தரவரிசையில் முதலாமிடத்துக்கு இந்தியாவின் ஜஸ்பிரிட் பும்ரா முன்னேறியுள்ளார். பங்களாதேஷுக்கெதிரான இரண்டாவது போட்டியில் 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றியமையையடுத்தே இரண்டாமிடத்திலிருந்து ஓரிடம் முன்னேறி முதலாமிடத்தை பும்ரா அடைந்துள்ளார். இதேவேளை நியூசிலாந்துக்கெதிரான இரண்டாவது போட்டியில் 9 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய இலங்கையின் பிரபாத் ஜெயசூரிய, எட்டாமிடத்திலிருந்து ஓரிடம் முன்னேறி ஏழாமிடத்தையடைந்துள்ளார். முதல் 10 பந்துவீச்சாளர்களின் தரவரிசை பின்வருமாறு, ஜஸ்பிரிட் பும்ரா, …

      • Like
    • 2 replies
    • 613 views
  21. மைதானத்துக்குள் நுழைந்து செல்பி எடுக்க முயன்ற இளைஞர்: கோபமடைந்த பெடரர் 17 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற உலகின் முன்னணி டென்னிஸ் வீரரான ரோஜர் பெடரர் மைதானத்திற்குள் இருந்த போது மைதானத்துக்குள் அத்துமீறி நுழைந்த இளைஞர் ஒருவர் அவருடன் செல்பி எடுக்க முயன்றதால் ரோஜர் பெடரர் கோபமடைந்துள்ளார். பரபரப்பாக நடைபெற்று வரும் பிரெஞ்சு பகிரங்க டென்னிஸ் போட்டியில் நேற்று ரோஜர் பெடரர் - அலெஜாண்ட்ரோ பல்லா இருவரும் மோதினர். இப்போட்டியில் பெடரர் 6-3, 6-3, 6-4 என்ற செட் கணக்குகளில் அலெஜாண்ட்ரோவை வெற்றி கொண்டார். இந்நிலையில் போட்டி முடிவடைந்ததும், இளம் ரசிகர் ஒருவர் பாதுகாப்பையெல்லாம் மீறி, பெடரர் அருகில் சென்றார். திடீரென அந்த ரசிகர் பெடரருடன் செல்பி எடுக்க முயன்றார். இது, …

    • 6 replies
    • 612 views
  22. வன்னியின் போரை வென்றது கிளிநொச்சி இன்னிங்ஸ் வெற்றியாகவும் பதிவானது ‘வன்னியின் போர்’ என வர்ணிக்கப்படும் கிளிநொச்சி மகா வித்தியாலய அணிக்கும் புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி அணிக்கும் இடையிலான துடுப்பாட்டத்தில் கிளிநொச்சி மகா வித்தியாலயம் வெற்றிபெற்றது. இந்த ஆட்டம் புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரியின் மைதானத்தில் நேற்று, இன்று என இரு தினங்கள் நடைபெற்றது. நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற கிளிநொச்சி மகா வித்தியாலய அணி களத்தடுப்பை தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி அணி சகல இலக்குகளையும் இழந்து 107 ஓட்டங்களைப் பெற்றது. கபிலன் 48 ஓட்டங்களையும், சுஜீபன் 16 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில…

  23. மகளிர் சர்­வ­தேச ஒருநாள் கிரிக்கெட் போட்­டியில் இலங்­கையை துவம்சம் செய்­தது அவுஸ்­தி­ரே­லியா 2016-09-19 10:12:23 அவுஸ்­தி­ரே­லிய, இலங்கை மகளிர் அணி­க­ளுக்கு இடையில் தம்­பு­ள்ளையில் நேற்று நடை­பெற்ற முத­லா­வது மகளிர் சர்­வ­தேச ஒருநாள் கிரிக்கெட் போட்­டியில் 4 விக்­கெட்டு­களால் அவுஸ்­தி­ரே­லிய மகளிர் அணி வெற்­றி­பெற்­றது. பந்து வீச்­சா­ளர்கள் ஆதிக்கம் செலுத்­திய இப் போட்டி 40.3 ஓவர்­களில் நிறை­வு­பெற்­றது. இப் போட்­டியில் முதலில் துடுப்­பெ­டுத்­தா­டிய இலங்கை மகளிர் அணி 24.5 ஓவர்­களில் சகல விக்­கெட்­க­ளையும் இழந்து 76 ஓட்­டங்­களை மாத்­தி­ரமே பெற்­றது. பதி­லுக்கு துடுப்­பெ­டுத்­தா­டிய அவுஸ்­தி­ரே­லிய மகளிர் அணி சிர­மத்­திற்கு மத்…

  24. கால்பந்து சண்டைகள் : லிவர்பூல் - எவர்ட்டன் மோதல் (வீடியோ) இங்கிலீஸ் பிரீமியர் லீக் தொடரில் இன்று ஆக்ரோஷமன மோதல்கள் நடைபெறுகின்றன. மாலை 6 மணிக்கு நடைபெறவுள்ள ஆட்டத்தில் 'மெர்சி சைட் டெர்பி' என்று அழைக்கப்படும் லிவர்பூல்- எவர்ட்டன் அணிகள் களம் காண்கின்றன. இரவு 8.30 மணிக்கு இதே லீக்கில் நடைபெறும் மற்றொரு ஆட்டத்தில் மான்செஸ்டர் யுனைடெட் அணி ஆர்சனல் அணியை எதிர்கொள்கிறது. ஜெர்மன் பந்தஸ்லீகாவில் பலம் வாய்ந்த பேயர்ன்மியூனிச் அணியுடன் போர்சியா டோர்ட்மண்ட் அணி மோதுகிறது. நள்ளிரவு 12 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் ஸ்பானீஷ் லீக்கின் வலிமை வாய்ந்த ரியல்மாட்ரிட் - அத்லெடிகோ மாட்ரிட் அணிகள் மோதுகின்றன. இத்தாலி சீரி 'ஏ' தொடரில் 12.15 மணிக்கு ஏ.சி.மிலனுடன் நேபோலி அணி…

  25. தோனி ஏன் சிறந்த கேப்டன் ? ஜிலீர் திரில்லுடன் விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளது சூப்பர் 10 சுற்று. இந்தியா, நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து ஆகிய அணிகள் அரையிறுதியில் மல்லுகட்டவுள்ளன. சூப்பர் 10 சுற்றில் பல போட்டிகளில் பிபி எகிறவைத்தன. அரையிறுதி போட்டிகள் வரும் புதன் கிழமை முதல் தொடங்கவுள்ளது. சூப்பர் 10 இல் என்ன நடந்தது என ஒரு ஷார்ட் அலசல் பார்வை இங்கே! சோடை போன பாகிஸ்தான் - இலங்கை : - டி20 உலககோப்பை வரலாற்றில் அதிக முறை அரையிறுதிக்கு தகுதி பெற்ற அணிகள் இவ்விரண்டும் தான். இரண்டு அணிகளும் சுழற்பந்தை சிறப்பாக கையாளகூடியவர்கள். ஆனால் பாகிஸ்தான், இலங்கை இரண்டு அணிகளுமே அரையிறுதிக்கு இம்முறை தகுதி பெறவில்லை. வங்கதேசத்தை அபாரமாக வீழ்த்திய பாக…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.