எங்கள் மண்
தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்
எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.
3784 topics in this forum
-
ஜெயந்தன் படையணியின் போர்க்குணத்தால் நடுங்கிய எதிரிகளும் துரோகிகளும்.! Last updated May 3, 2020 தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு படைத்துறை ரீதியில் செயற்திறண்மிக்க, வலுவானதொரு போரிடும் சக்தியாகத் திகழ்கின்றது. ஒரு தேசத்தின் படைக் கட்டுமாணத்திற்கு நிகரான படைத்துறைசார் நியமங்களை தன்னகத்தே கொண்டதாக அது தன்னை தகவமைத்துக் கொண்டுள்ளது. ஒப்பிட முடியாதளவு ஆட் பல மேலாண்மையையும், போர்க்கல மேலாண்மையையும் கொண்ட சிறிலங்காவில் முப்படைகளுக்கெதிராக தாக்கமான சமர்க்கள வெற்றிகளை விடுதலைப்புலிகள் அமைப்பு ஈட்டிவருகின்றது. சிறிலங்காவின் படைத்துறை இயந்திரத்தைச் செயலிழக்க வைக்கக்கூடிய தனது வலுவாற்றலை அது இந்தப் போர்நிறுத்த உடன்பாட்டிற்கு முன்னான சமர்க்களங்களில் சாதித்துக் காட்ட…
-
- 26 replies
- 3.8k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு இன்று அகவை 44! Last updated May 5, 2020 புதிய தமிழ்ப் புலிகள் இயக்கம், 1976 வைகாசி 5ம் நாள் ‘தமிழீழ விடுதலைப் புலிகள்” என்ற புதிய பெயரை சூட்டிக் கொண்டது. இதன் அரசியல் தலைவராகவும், இராணுவத் தளபதியாகவும் தலைவர் பிரபாகரன் அவர்களே இருந்தார். ~புதிய தமிழ்ப் புலிகள்~ இயக்கத்தில் இருந்த மிகக்கடுமையான சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, முழுத் தமிழீழ மக்களும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்கக் கூடிய முறையில், சட்ட திட்டங்கள் மாற்றப்பட்டு தலைவர் பிரபாகரனால் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டன. அத்துடன் தலைவர் பிரபாகரனால், இவ்வமைப்பு நகர்ப்புறக் கெரில்லா அமைப்பாக உருவாக்கப்பட்டுத் தேசிய விடுதலைக்கான நீண்டக…
-
- 0 replies
- 844 views
-
-
இந்த உண்மையை பலரும் பல்வேறு வடிவங்களில் திரிக்கின்றனர். அதன் உச்சமாக சுமந்திரன் என்பவர் இனச்சுத்திகரிப்பும் என்றார். அதற்கும் இங்கு வாக்காளத்து வாங்கியோர் உண்டு. பிபிசி :முஸ்லிம் மக்கள் குறித்து உங்கள் நிலைப்பாடு என்ன ? பிரபாகரன் பதில் : முஸ்லிம் மக்கள் தனித்துவப் பண்பாடுடைய ஒரு இனக்குழு என்ற வகையில் அவர்களது பிரச்சினை அணுகப் படவேண்டும் . முஸ்லிம் மக்களின் தனித்துவம் , நில உரிமைப்பாடு பேணப்படும் அதே வேளை , அவர்கள் தமிழ்மக்களுடன் ஒன்றிணைந்து வாழ்வதே அவர்களது சமூக , அரசியல் பொருளாதார வாழ்வை சிறப்பிக்கும் என நாம் கருதுகிறோம் . சிங்களப் பேரினவாதிகளும் , சுயநலம் கொண்ட முஸ்லிம் அரசியல்வாதிகளும் தமிழ் - முஸ்லிம் மக்களிடையே வேற்றுமை யையும் விரோதத்தையும் வளர்த்…
-
- 0 replies
- 1.1k views
-
-
1955ம் ஆண்டு நான் எனது 6 வகுப்பு கல்வியை உடுப்பிட்டி அமெரிக்கன் மிசன் கல்லூரியில் ஆரம்பித்த போது அது எனக்கு அவ்வளவு சுலபமானதாக இருக்கவில்லை. அந்தக் கல்லூரி எங்கள் வீட்டில் இருந்து வெகு தொலைவில் இருந்தது. மந்திகை சந்தியில் இருந்து பருத்தித்துறைக்கு அல்லது மாலிசந்திக்கு ஒரு பேருந்தில் சென்று பின்னர் அங்கிருந்து உடுப்பிட்டிக்கு வேறு ஒரு பேருந்தில் செல்லவேண்டி இருந்தது. இதற்காக வீட்டிலிருந்து 6 மணிக்கு புறப்பட வேண்டி இருந்தது.10 வயது சிறுவனான என்னால் அவ்வளவு தூரம் தனியாக பயணம் செய்ய பயமாக இருந்தது. எனது பெற்றோரும் அதை விரும்பவில்லை.அதனால் எனது அப்புவை(தாத்தாவை) என்னுடன் கூட அனுப்புவார்கள். அப்போது எங்கள் வீட்டில் இருந்து உடுப்பிட்டிக்கு செல்வதற்கு சிறுவனான எனக்கு …
-
- 7 replies
- 1.8k views
-
-
-
- 1 reply
- 769 views
-
-
புலிகளின் புகழை ஆங்கிலத்தில் எழுதி உலகறிய செய்த சிவராம் - தீபச்செல்வன். ஏப்ரல் 28 ஆம் திகதி, ஈழத்தில் ஒரு ஊடகப் பெருங்குரல் நசிக்கப்பட்ட நாள். ஈழத் தமிழ் சூழலின் ஊடக அறிவாளுமை ஒன்றை நாம் இழந்த துயர நாள். இலங்கையின் தலை நகர் கொழும்பில் மிகுந்த பாதுகாப்பான இடத்தில், இராணுவ உயர் பாதுகாப்பு வலயத்தில், இலங்கை பாராளுமன்றத்தின் அருகே, ஈழத்தின் தனிப் பெரும் ஊடக ஆளுமை தராகி என அழைக்கப்படும் டி. சிவராம் கொலை செய்யப்பட்ட நாள். தராகி கொல்லப்பட்டு, ஏப்ரல் 28ஆம் நாளுடன் 15 ஆண்டுகள் ஆகின்றன. இலங்கையில் தராகி சிவராம் கொல்லப்பட்டபோதுதான் ஊடகவியலாளர்கள் படுகொலை தொடங்கவில்லை. அது 1985ஆம் ஆண்டில் இருந்தே ஆரம்பிக்கப்பட்டுவிட்டது. சிங்களப் பேரினவாத அடக்குமுறைக்கு எதிராக ஈழத் தமி…
-
- 0 replies
- 794 views
-
-
ஈழத்தமிழரின் வாழ்விற்காய் குரல்கொடுத்தும், அரசியல் ரீதியாக பல முன்னெடுப்புக்களை தலைமை தாங்கி வழிநடத்தியவரு ம் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நிறுவனரும் தலைவருமாகிய தந்தை செல்வா (சா. ஜே. வே. செல்வநாயகம்) அவர்களின் (31.03.1898 – 26.04.1977) நினைவு வணக்கநாள் இன்றாகும். ஒப்பற்ற தலைவர் தந்தை செல்வநாயகம் (செல்வா) , தொல்புரத்தைச் சேர்ந்த சாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளைக்கும் அன்னம்மா கணபதிப்பிள்ளைக்கும் மூத்த மகனாக எமது செல்வநாயகம் மலேசியாவின் மிகவும் தூய்மையான நகரமான இல்போ நகரில் 1898ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31ஆம் திகதி பிறந்தார். அவருக்குப் பின் வேலுப்பிள்ளை தம்பதியருக்கு இரண்டு புத்திரர்களும் ஒரு மகளும் பிறந்தார்கள். வேலுப்பிள்ளை தம்பதியினர் தமது மழலைச் செல்வங்கள் …
-
- 3 replies
- 1.5k views
-
-
எங்கள் கதைகளை எழுதுவதே எனக்குப் பிடித்தமான எழுத்துப் பணி : வெற்றிச்செல்வியுடன் சில நிமிடங்கள்.. எழுத்திலும் சரி, வாழ்விலும் சரி, போராட்டத்திலும் சரி முன்னூதாரணமாக இருப்பவர் போராளி வெற்றிச்செல்வி. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் 18 வருடங்கள் போராளியாக செயற்பட்ட வெற்றிச்செல்வி வெடி விபத்தொன்றில் ஒற்றை கையையும் கண்ணையும் இழந்த மாற்றுத்திறனாளி. நாவல், கவிதை, சிறுகதை என ஆக்க இலக்கியங்களை படைத்து வரும் இவர், இப்போது கொரோனா பேரிடர் காலத்தை எப்படி கடந்து வருகிறார் என வினாவினோம். வணக்கம் லண்டனுக்கு போராளி வெற்றிச்செல்வி அளித்த சிறு நேர்காணல் இது. -ஆசிரியர் கொரோணா காலத்தை எப்படிக் கடக்கிறீர்கள்? பெருமளவான காலம் வீட்டில் இருக்கக் கிடைத்ததை நல்லதொரு…
-
- 0 replies
- 985 views
-
-
தீச்சுவாலை முறியடிப்புச் சமர் வெற்றி கொள்ளப்பட்ட நாள்! Last updated Apr 25, 2020 தீச்சுவாலை முறியடிப்புச் சமர் வெற்றி கொள்ளப்பட்ட நாள் 25-04-2001. தமிழீழ விடுதலைப் புலிகள் யாழ். குடாநாட்டின் கணிசமான பகுதிகளைக் கைப்பற்றி கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த காலம். சாவகச்சேரி, கைதடி அரியாலை என்று அவர்கள் கைப்பற்றி யாழ் நகர்ப்பகுதியிலிருந்து வெறும் 3 மைல் தொலைவில் நின்றிருந்த நேரம். அந்த நேரம் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த பகுதிகளை வரைபடத்தில் பார்த்தால், இந்தா யாழ்ப்பாணம் இன்னும் ரெண்டு நாளில விழுந்திடும் என்ற நிலைதான். அதைவிட யாழின் எந்த மூலைக்கும் தமது எறிகணைகளைச் செலுத்தக்கூடிய நிலைக்கு புலிகள் வந்துவிட்டிருந்தார்கள். இந்த நிலையில் யாழ்…
-
- 1 reply
- 1.4k views
-
-
பூமியை நேசித்த புலிகள் : கவிஞர் தீபச்செல்வன். நாம் வாழுகின்ற பூமிக்கு நம் வாழ்வில் ஒருமுறையாவது ஒரு நன்மையையாவது செய்கிறோமா என்று ஒவ்வொருவரும் கேட்டுக்கொள்ள வேண்டும். ஏனென்றால் நாம் இயற்கைக்கு எதிராக செய்த ஒவ்வொரு வினைகளுக்கும் இப்போது அறுவடை செய்து கொண்டிருக்கிறோம். அப்படி ஒரு பயங்கரமாகத்தான் கொரோனா போன்ற வைரஸ் தொற்றுக்களும் ஏற்பட்டுள்ளனவா என்றும் சந்தேகம் ஏற்படுகின்றது. இன்றைய சூழலில் பூமியின் உயிர்கோளத்தை பாதுகாக்கும் ஒரு வாழ்வை நாம் வாழ்கிறோமா என சிந்திப்பது அவசியமானது. கடந்த சில வருடங்களின் முன்னர், இலங்கையின் அன்றைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இலங்கையில் வடக்கு கிழக்கு பகுதிகளில் மாத்திரமே காடுகள் இயற்கையாக 100 வீதமாக காணப்படுவதாக கூறியிருந்தார…
-
- 1 reply
- 756 views
-
-
யாழ்ப்பாண மாட்டுச்சவாரியின் கதை April 17, 2020 (By த. சண்முகசுந்தரம்)சவாரி மாட்டைப் பராமரித்தல் ஒரு தனிக் கலை. அதற்கு உணவு ஊட்டுதல், தட்டிக் கொடுத்தல், கால் பிடித்தல் எல்லாம் தனிக்கலை. "மாட்டின் வெற்றி அதன் உணவில் ' என்பர். பனம் ஒலை வைத்தால் மாட்டின் கால் உழைவைக் கூட்டும் என் பது நம்பிக்கை. அரிசி, கடலை, கொம்புப் பயறு, உழுந்து, சிவப்புத் தவிடு, எள்ளுப்பிண்ணுக்கு என்பன முக்கியமான உணவுகள். சவாரிக்கு முதல் நாள் மாட்டின் ஏரியைத் தட்டி, உடலை உருவி, காலைத் தடவிவிடுவார்கள், சவாரி முடிந்ததும் துணியைச் சுடுநீரில் நனைத்து " ஒத்தணம் ' பிடிப்பர். பச்சைத் தேங்காய் மட்டையைச் சூடாக்கி உருவி விடுவர். சவாரியின் போது மாடுபட்ட அடிகாயத்தை ஆறவைக்க வேப்ப நெய், இருப்பை நெய், தேங்காய்…
-
- 0 replies
- 534 views
-
-
ஆனையிறவுப் படைத்தளம் வெற்றி கொள்ளப்பட்ட நாள் இன்று! ஆனையிறவுப் படைத்தளத் தாக்குதல் ஆனது, இலங்கை இராணுவத்தினரின் ஆனையிறவு ஆக்கிரமிப்பிற் கெதிராக 2000 ஆம் ஆண்டு மார்ச் 26 ஞாயிற்றுக்கிழமை மாலை நேரம் அளவில் தமிழீழ விடுதலைப் புலிகளால் தொடுக்கப்பட்ட தாக்குதல் ஆகும். ஓயாத அலைகள் மூன்று என்ற நடவடிக்கை மூலம் ஆனையிறவுப் படைத்தளம் தமிழீழ விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டது. 35 நாட்களின் பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகளின் முழுக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்ட ஆனையிறவுப் படைத்தளமானது, பத்தாயிரத்திற்கும் அதிகமான இலங்கை இராணுவத்தினரின் பாதுகாப்பில் அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது. குடாரப்புவில் தரையிறக்கப்படுவதற்கென வெற்றிலைக…
-
- 1 reply
- 2.7k views
-
-
மெளனிக்கப்பட்ட “கல்வித் தந்தை” பிரான்சிஸ் ஜோசப் அடிகளார்! On Apr 17, 2020 வணக்கத்துக்குரிய பிரான்சிஸ் ஜோசப் அடிகளார். இன்று உலகின் எங்கோ ஒரு மூலையிலாவது இவரைப்பற்றி பேசிக்கொண்டோ சிந்தித்துக்கொண்டோ இருக்கும் தமிழர்கள் இருக்கிறார்கள். மிகப் பெரியளவில் பேசப்பட்டுக் கவனயீர்ப்பைப் பெற்றிருக்க வேண்டிய அடிகளாரின் விடயம் பத்தோடு பதினொன்றாக சிறிதளவே பேசப்பட்டு வந்துள்ளது. ஆனால் பிரான்சிஸ் ஜோசப் அடிகளாரைத் தெரியாமல் வன்னியில் யாரும் இருந்ததில்லை. அவ்வளவு தூரத்துக்கு வன்னியின் சமூக மேம்பாட்டுக்காக அயராது உழைத்திருந்தார் அடிகளார். யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரியின் அதிபராகக் கடமையாற்றி ஓய்வு பெற்றபின்னர் முழுநேரமாக தமிழ்ச் சமூகத்தின் கல்வி மேம்பாட்டுக்காக…
-
- 2 replies
- 1.2k views
-
-
இராமநாதனை அரசியலுக்கு கொண்டு வர நாவலர் போட்ட திட்டம்: என்.சரவணன்.. 1879ஆம் ஆண்டு என்பது முக்கிய வரலாற்று நிகழ்வுகள் நிறைந்த வருடம். குறிப்பாக தமிழர் வரலாற்றில். அதற்கு முந்திய மூன்று வருடங்களாக யாழ்ப்பாணத்தில் பரவியிருந்த கொலரா நோயினால் ஏறத்தாள 7000பேர் இறந்தனர். கொலரா எதிர்ப்பு – நிவாரண நடவடிக்கையின் விளைவாக பல தமிழ் பிரமுகர்கள் சாதி மத பேதமின்றி ஒன்றுபட்டார்கள். 1879 அளவில் கொலரா நோய் நின்று நிலைமை வழமைக்குத் திரும்பியது. இந்த ஆண்டு தான் ஆறுமுக நாவலர் இறந்தார். சேர் முத்துக்குமாரசுவாமியும் இறந்தார். சேர் பொன்னம்பலம் இராமநாதனின் அரசியல் பிரவேசம் நிகழ்ந்தது. சேர் முத்துக்குமாரசாமி; இராமநாதனின் தாய்மாமனான முத்துக்குமாரசாமியின் அரவணைப்பில் வளர்ந்தவர் தான் இராமநா…
-
- 1 reply
- 1.5k views
-
-
16.04.2020 மதிப்புக்குரிய ஐயா முன்னாள் மன்னார் மறை மாவட்ட ஆயர் இராயப்பு யோசப்பு அவர்களின் 79 அகவை நாள். அவரின் நீண்ட ஆயுளுக்காக பிரார்த்திப்பதை விட எதுவும் தோன்றவில்லை... 16.04.1940 ஆம் ஆண்டு நெடுந்தீவில் அவதரித்த அவர் "ஆயர்" என்ற அடைமொழிக்கு பொருத்தமானவர். அவருடன் சந்திக்கும் வாய்ப்பை காலம் தந்திருந்தது. அது வரமாக இருக்கும். மிகவும் அருமையான சிறு கண்டிப்பான மனிதர். தமிழீழ விடுதலை மீதும் மிகுந்த ஆர்வம் கொண்டவர். ஈழப்போராட்டத்தில் அவர் ஒரு அத்தியாயம். இறுதி யுத்தத்தில் படுகொலை செய்யப்பட்டவர்கள் காணாமல் போனோர் மற்றும் படுகொலை செய்யப்பட்டவர்களின் உறுதியான தகவலை இலங்கை அரசின் மக்கள் தொகை கணிப்பீட்டின் அடிப்படையாக கொண்டு 146679 என உலக நாடுகளுக்கு தெரியப்படுத்திய…
-
- 0 replies
- 615 views
-
-
மரியநாயகம் குரூஸ் அவர்கள் ‘‘நாட்டுப்பற்றாளர்’’ என மதிப்பளிப்பு On Apr 13, 2020 12.04.2020 மரியநாயகம் குரூஸ் அவர்கள் “நாட்டுப்பற்றாளர்” என மதிப்பளிப்பு. சர்வதேச சமூகத்தின் அனுசரணையுடன் உருவாக்கப்பட்ட சிறிலங்கா போர்நிறுத்தக் கண்காணிப்புக்குழுவின் தமிழீழ விடுதலைப்புலிகளின் மன்னார் மாவட்டப் பிரதிநிதி திரு. ப. மரியநாயகம் குரூஸ் அவர்கள் 09.04.2020 அன்று சாவடைந்தார் என்ற செய்தி தமிழ்மக்கள் அனைவரையும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. தன் வாழ்வுக்காலத்தில் தமிழ்மக்களின் விடுதலையில் பற்றுறுதி கொண்டிருந்ததோடு, போர்க்காலங்களிலும், போர்நிறுத்தக் காலங்களிலும் தமிழ்மக்களுக்காகத் தொடர்ந்தும் குரல்கொடுத்தவர். அரச பள்ளி முதல்வராகவும், பின்னர் ஆங்கிலமொழிக் கல்விக்…
-
- 1 reply
- 750 views
-
-
23-10-1998ம் ஆண்டு காலப்பகுதி அது. விடுதலைப்புலிகளின் சிறுத்தைப் படையணி எனப்படும் சிறப்பு கொமாண்டோ படைப்பிரிவைச் சேர்ந்த எட்டு போராளிகள் மன்னார் பகுதியில் பதுங்கித்தாக்குதல் ஒன்றினை நடத்துவதற்காக திட்டமிட்டனர். மன்னாரில் இருந்து வவுனியா நோக்கி அடிக்கடி ஸ்ரீலங்கா இராணுவ வாகனங்கள் செல்வது வழமை.ஆனால் பலத்த பாதுகாப்போடு தான் வாகன அணி செல்லும். சிறுத்தைப் படையணி போராளிகளும் தாக்குதலுக்கு தயாராகினர். அதாவது மன்னாரில் இருந்து வவுனியா நோக்கி செல்லும் இராணுவ பஸ்ஸினை இடைமறித்து தாக்குதல் நடத்துவது தான் திட்டம். போராளிகள் தாக்குதலுக்காக பதுங்கியிருந்தனர். இராணுவ தொடரணி அன்று வரவில்லை.மாறாக ஒரு பஸ்ஸில் மட்டும் இராணுவத்தினர் வந்துகொண்டிருந்தனர். அந்த வாகனத்தின் மீதி ஆர…
-
- 3 replies
- 1.3k views
-
-
உள்ளூர் அறிவு உற்பத்திகளின் தேவைப்பாடு – கொரோனா புலப்படுத்தும் செய்தி.! இ.குகநாதன். கண்ணுக்கு புலப்படாத நுண்ணுயிர்களுடன் இன்று உலகம் யுத்தம் செய்து மனித உயிர்களை பாதுகாப்பதற்காக பல்வேறு வியூகங்கள் வகுத்து மிகத்தீவிரமாக செயற்பட்டு நடைமுறைப்படுத்தும் இந்த சமகால சூழலில் உள்ளூர் அறிவின் மீளுருவாக்கம் சார்ந்து அனைவரும் திரும்பி பார்த்து சிந்தித்துக் கொண்டிருக்கும் பேசு பொருள், பொதுவெளி உரையாடலில் செயல்முறை ரீதியாக சகல மட்டங்களிலும் மீண்டும் இதனை கொண்டு வருதலென்பது கொரானா கற்றுத்தந்த பாடமாகும். நம் முன்னோர்கள் எதிர்கால தேவை கருதி சமூக நன்மைக்காக உருவாக்கிய உள்ளூர் விவசாயம் பொருளாதாரம்,வைத்தியம், கல்வி அனைத்தும் கைத்தவறி போனவையாக நகரமயமாக்கத்தின் ஆதிக்கத்தில் உள்…
-
- 6 replies
- 1.3k views
-
-
சர்வதேசத்தை அதிரவைத்த தமிழர் சேனையின் மாபெரும் தரையிறக்க நடவடிக்கை.! குடாரப்பு தரையிறக்கம் 26.03.2000 தமிழர் சேனையின் மாபெரும் தரையிறக்க நடவடிக்கை நாள்..! ஆனையிறவுப் படைத்தளத் தாக்குதல் இலங்கை இராணுவத்தினரின் ஆனையிறவு ஆக்கிரமிப்பிற்கெதிராக 2000 ஆம் ஆண்டு மார்ச் 26, ஞாயிற்றுக்கிழமை மாலை நேர அளவில் தமிழீழ விடுதலைப் புலிகளால் தொடுக்கப்பட்ட தாக்குதல் ஆகும். ஓயாத அலைகள் மூன்று என்ற நடவடிக்கை மூலம் ஆனையிறவுப் படைத்தளம் தமிழீழ விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டது. 35 நாட்களின் பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகளின் முழுக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்ட ஆனையிறவுப் படைத்தளமானது பத்தாயிரத்திற்கும் அதிகமான இலங்கை இராணுவத்தினரின் பாதுகாப்பில் அமைந்திருந்தது குறிப்பிடத…
-
- 2 replies
- 1.4k views
- 1 follower
-
-
மரபுரிமைச் சின்னமாக புங்குடு தீவு பெருக்கு மரம்: பேராசிரியர் புஷ்பரட்ணம் (மக்களிடம் கையளிப்பதை பெரும் நிகழ்வாக நடாத்த புங்குடுதீவு மக்கள் திட்டமிட்டிருந்தனர். ஆனால் நாட்டின் அசாதாரண சூழ்நிலைக் கருத்தில் கொண்டு அந்நிகழ்வு குறைந்த மக்களின் பங்களிப்புடன் இன்று (20.03.2020) நடைபெற உள்ளது. அதையொட்டியே இக்கட்டுரை வெளிவருகின்றது) சமகாலத்தில் தமிழ் மக்களின் மரபுரிமைச் சின்னங்களைப் பாதுகாக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு முன்பொருபோதும் இல்லாத அளவிற்கு தமிழ் மக்களிடையே வெளிக்கிழம்பியிருப்பதைக் காணமுடிகிறது. இதைத் தொடக்கி வைத்ததில் புலம்பெயர்ந்து வாழும் எமது உறவுகளுக்கும் முக்கிய இடமுண்டு. 2017 ஆம் ஆண்டு சுவிஸ் தமிழ்க் கல்விச்சேவை இணைப்பாளர் திரு. கந்தசாமி பார்த்தி…
-
- 0 replies
- 2.3k views
-
-
#இறுதிக்_கட்டப்_போர் இதுதான் இயக்கம்எங்கட பிள்ளைகள வித்துத்தான் அபிப்பிராயம் பெறனும் என்டா இயக்கம் அழிஞ்சாலும் பரவாயில்லை- பா நடேசன் LTTEs Political Chief
-
- 3 replies
- 1.9k views
- 1 follower
-
-
தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் எண்ணத்தில் உதித்த ஜொனி மிதி வெடிகள்.! Last updated Mar 12, 2020 1987 ஐப்பசி 10. இந்தியப் படையுடன் போர் தொடங்கிவிட்டது. அடுத்தநாள்; கொக்குவில் பிரம்படி வீதியில் இருந்த தலைவரின் பாசறையை இலக்கு வைத்து, இந்தியப் படையின் சிறப்புக் கொமாண்டோக்கள் தாக்குதலைத் தொடுத்தனர். அவர்களின் முயற்சி வெற்றிபெறவில்லை. ஆனாலும் தலைவர் தனது பாசறையை இடம் மாற்றிக்கொண்டார். ‘ஒப்பறேசன் பவான்’ என்ற பெயரில் புகழ் பெற்ற யாழ்ப்பாணச் சமரை இந்தியப் படைகள் தொடர்ந்தன. “ஓரிரு நாட்களுக்குள் எல்லாம் முடிந்து விடும்” என்றார்கள் இந்தியத் தலைவர்கள். ஆனால் ‘யாழ்ப்பாணச் சமர்’ ஒரு மாதம் நீடித்தது. போரைத் தொடர்ந்து வழிநடாத்துவதற்காக தலைவர் தளத்தை …
-
- 0 replies
- 838 views
-
-
பொழுது போக்கிகளின் காலத்தில் தேசமாகத் திரள்வது: நிலாந்தன் அண்மையில் நிமிர்வு ஊடகத்தால் வெளியிடப்பட்ட ஒரு காணொளியை பார்த்தேன். அது யாழ்ப்பாணத்தில் கந்தர்மடம் பழம் வீதியில் அமைந்திருக்கும் பண்பாட்டு மலர்ச்சிக் கூடத்தை பற்றிய ஒரு காணொளி. பண்பாட்டு மறுமலர்ச்சி கூடத்தின் நிறுவுனர் கலாநிதி க.சிதம்பரநாதன் அதில் கதைக்கும் போது ஒரு விடயத்தை சுட்டிக்காட்டினார். “நாங்கள் கிராமங்களுக்குள் இறங்கிய பொழுது அங்கே தெருக்களில் மக்களை காணவில்லை. முன்னைய காலங்களில் நமது கிராமத்து தெருக்களில் எப்பொழுதும் சனங்களை காணலாம். ஆனால் இப்பொழுதோ சனங்கள் தங்கள் வீடுகளுக்குள் முடங்கிக் இருக்கிறார்கள் ” என்று. காணொளியை பார்த்தபின் அவரிடம் நான் கேட்டேன் “ சனங்கள் வீடுகளுக்குள் முடங்கக்…
-
- 0 replies
- 900 views
-
-
அம்மாச்சி போனேன்: தமிழகப் பேராசிரியர் அ. ராமசாமி. இருபது நாட்கள் பயணத்தில் 11 ஆவது நாளில் யாழ்ப்பாணத்தில் இறங்கினேன். அதிகாலை நான்குமணிக்கு இறங்கிய உடனே எனது தொலைபேசியில் அழைப்பு விடுத்தபோது என்னருகில் தலைக்கவசம் அணிந்து இருசக்கர வாகனத்தில் இருந்தவர் எடுத்தார். உடனே அணைத்துவிட்டு ‘நான் சீலன்…’ என்று கையை நீட்டினார். நானும் ‘வணக்கம் சீலன்’ என்று சொல்லிக் கையைக் கொடுத்துவிட்டுத் தயங்கினேன். சீலனைப் புகைப்படமாகப் பார்த்திருக்கிறேன். யாழினி யோகேஸ்வரன் அனுப்பியிருந்தார். கையைப் பிடித்தவர், நான் சீலன் இல்லை; அவர்தான் என்னை அனுப்பிவைத்தார். காலையில் அவர் வந்து சாப்பிட அழைத்துப் போவார் என்று சொன்னார். இப்போது கையிலிருந்த தலைக்கவசத்தை என்னிடம் கொடுத்துப் போட்டுக்…
-
- 1 reply
- 1.3k views
-
-
இருளில் சாதி இல்லை. . அரைநூற்றாண்டுகளுக்கு முன்னம் மாவிட்டபுரம் முருகன் கோவிலில் ஆலயபிரவேச போராட்டத்தின்போது நடந்த உண்மை சம்பவம் ஒன்றை போராட்டத்தில் கலந்துகொண்ட தோழர்கள் சொல்லக் கேழ்விப்பட்டேன். அந்த நிகழ்ச்சி பின்னர் 1970பதுகளில் யாழ்ப்பாணத்தின் பெருங்கதையாடலாக மாறிவிட்டது. . . அரை நூற்றாண்டின் முன்னம் ஒரு காலைப்பொழுது. யாழ்ப்பாணத்து பெருங்குடி பிரமுகர்கள் பலர் தங்கள் கையாட்களோடு மாவிட்டபுரம் முருகன் கோவில் வாசலை தடைபண்ணியபடி குவிந்திருக்கிறார்கள். தடையை உடைக்க வெளியே பல்சாதி தோழர்களின் துணையோடு ஒடுக்கப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த இளைஞர்கள் அணிவகுத்து வருகிறார்கள். . தீ பற்றக்கூடிய அந்த சூடான பொழுதில் கேலித் திமிரோடு கோவில் வாசலை தடைபண்ணிக்கொண்டிருந்த…
-
- 2 replies
- 1k views
-