Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. ஜெனீவாவில் இருப்பதா, வீற்றோவால் தொலைப்பதா? புருஜோத்தமன் தங்கமயில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக் கூட்டத் தொடர் ஆரம்பித்துள்ள நிலையில், இலங்கை தொடர்பிலான புதிய தீர்மானமொன்றைக் கொண்டுவர பிரித்தானியா உள்ளிட்ட நாடுகள் முயற்சிக்கின்றன. ராஜபக்‌ஷர்கள் மீண்டும் பதவியேற்றதும், ஏற்கெனவே இலங்கை தொடர்பில் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் இருந்து இலங்கை விலகிவிட்டது. அப்படியான நிலையில், இலங்கை தொடர்பிலான புதிய தீர்மானம் என்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகும். ஆனால், புதிய தீர்மானம் தொடர்பிலான ஆரம்ப வரைபு (Zero Draft) இலங்கைக்கு எந்தவித நெருக்கடிகளையும் வழங்காத ஒரு சூனியமான வரைபாகவே வெளிவந்திருக்கின்றது. குறிப்பாக, ஏற்கெனவே அமைக்கப்பட்ட காணா…

  2. இலங்கையை பொறுத்தமட்டில் 2012ஆம் ஆண்டு பொருளாதார நிலை பல்வேறு ஏற்றத்தாழ்வுகளை சந்தித்திருந்தது. 2012ஆம் ஆண்டின் முற்பகுதியில் இலங்கையின் மொத்த தேசிய உற்பத்தி வளர்ச்சி வீதம் 8 சதவீதமாக அமைந்திருக்கும் என பல தரப்பினரின் மூலம் எதிர்வுகூறப்பட்டிருந்த போதிலும், வருட நிறைவில் 6.8 வீத வளர்ச்சியே எய்தப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இதில் நாட்டில் நிலவிய வெவ்வேறான சூழ்நிலைகள், காலநிலை மாற்றம், அரசியல் சூழல், பங்குச்சந்தை நிலைவரம், நாணய மாற்றுக் கொள்கை போன்றவற்றுடன், சர்வதேச நாடுகளில் நிலவிய பொருளாதார நெருக்கடி மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் நிலவிவரும் அமையதியற்ற சூழ்நிலை போன்றனவும் பங்களிப்பு வழங்கியிருந்தன. நாட்டின் பொருளாதாரத்தில் பிரதான பங்களிப்பு செலுத்தும் துறைகளாக …

  3. இலங்கையில் என்ன நடக்கிறது? அதனிடம் ஏன் பணம் இல்லை இலங்கையின் தற்போதைய பிரச்சினை வெளியுலகில் இருந்து தனக்குத் தேவையானதை வாங்குவதற்கு போதுமானஅளவு பணம் இல்லையெ ன்பதாகும். இங்கு என்ன நடந்தது?. பிரபாஷ் கே .தத்தா ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே , பெரும்பாலான கிராமங்கள் பொருளாதாரத்தில் தன்னிறைவு பெற்றன. குடியிருப்பாளர்களுக்குத் தேவையான அனைத்தையும் அவர்கள் உற்பத்திசெய்தனர் . ஆனால் உலகமே இப்போது ஒரு கிராமமாக இருந்தாலும் நவீன தேசிய அரசுகள் தன்னிறைவு பெறுவது அரிது. அவர்கள் தங்கள் மிகையான உற்பத்தியை ஏற்றுமதி செய்கிறார்கள். அவர்கள் வெளிநாட்டு கையி ருப்புக்களை சம்பாதித்து …

  4. வசந்த முதலிகேயின் யாழ் விஜயம்! நிலாந்தன். கொழும்பு, புகையிரத நிலைய கழிப்பறையில் விடப்பட்ட குழந்தை, காலிமுகத்திடல் போராட்டத்தின் கூடாரங்களுக்குள் நடந்த ஒன்றின் விளைவு என கொழும்பு மாநகர சபையின் உறுப்பினர் மஹிந்த கஹதகம கூறியுள்ளார். போராட்டத்தின்போது இதுபோன்ற பல சம்பவங்கள் நடந்துள்ளன என்றும்,போராட்டம் நடந்த பகுதியில் பல்வேறு முறைகேடுகள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் நடந்துள்ளது என்றும் அவர் கூறினார். அவர் அவ்வாறு கூறுவது தென்னிலங்கையில் இடம்பெற்ற தன்னெழுச்சிப் போராட்டங்களை பரிகசிப்பதற்காகத்தான். ஆனால் அவர் ஒரு பெரிய உண்மையை விழுங்கிவிட்டு கீழ்த்தரமான இந்த விமர்சனத்தை முன்வைக்கிறார். அப்பெரிய உண்மை என்னவென்றால், இலங்கைத்தீவின் இப்போத…

  5. -என்.கண்ணன் - இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவலிடம், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஒரு வேண்டுகோளை முன்வைத்திருக்கிறார். வடக்கு, கிழக்கின் அபிவிருத்தியில் கவனம் செலுத்துவதைப் போன்று, தென்னிலங்கையின் அபிவிருத்தி மீதும் இந்தியா கவனம் செலுத்த வேண்டும், என்பது தான் அது. http://cdn.virakesari.lk/uploads/medium/file/140329/fafaf.jpg வடக்கு, கிழக்கு, மலையகத்தில் இந்தியா 50 ஆயிரத்துக்கும் அதிகமான வீடுகளைக் கட்டிக் கொடுத்திருக்கிறது. அதுபோல, தென்னிலங்கையிலும் வீடமைப்புத் திட்டம் ஒன்றை முன்னெடுக்க வேண்டும் என்று பிரதமர் மஹிந்த கோரியிருக்கிறார். சாதாரணமாக, தென்னிலங்கையில் வீடமைப்புத் திட்டத்தை முன்னெடுக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கோரியிருந்தால், பரவாயில்லை. வடக்…

  6. எண்பதுகளில் சண்டை காரை துர்க்கா / “அடம்பன் கொடியும் கொடியும் திரண்டால் மிடுக்கு”, “வேற்றுமையிலும் ஒற்றுமை காண்போம்”, “ஒற்றுமை இன்றேல் உயர்வு இல்லை” எனப் பல பொன்மொழிகள் தமிழில் வழக்கில் இருக்கின்றன. ஆனால் இவை, தமிழ் மக்கள் (நல்)வாழ்வில் புழக்கத்தில் இல்லை. நல்வாழ்வுடன் உள்ள ஒருவர், சிறந்த மனவெழுச்சி சமூக நல்வாழ்வைக் கொண்டிருப்பதுடன், வாழ்வில் ஏற்படுகின்ற மாற்றங்கள் மற்றும் சவால்களை எதிர்கொள்ளும் ஆற்றல்களையும் கொண்டிருப்பார். ஆனால், இவ்வாறான சவால்களை வெற்றிகரமாக எதிர்கொள்ள முடியாமலும் முறியடிக்க முடியாமலும், தமிழ்ச் சமூகம் திணறுகின்றது. இதற்குக் காரணமாக, தமிழ் மக்கள், அரசியல் அனாதைகளாக்கி உள்ளமையைக் குறிப்பிடல…

  7. அரசியல் நெருக்கடியில் இருந்து பாடம் எதையும் படிக்காத அரசியல் தலைவர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது முன்னாள் அரசியல் வைரியான மகிந்த ராஜபக்சவுடன் சேர்ந்து அரங்கேற்ற முயற்சித்த ' அரசியலமைப்புச் சதி' யின் தோல்வியில் இருந்து எமது நாட்டின் அரசியல் வர்க்கம் பெறுமதியான சில படிப்பினைகளைப் பெற்றிருக்கும் என்று எதிர்பார்ப்பை எவராவது கொண்டிருந்தால் புதிய அமைச்சரவையை அமைப்பதற்கு அரசியல் தலைவர்களினால் கடந்தவாரம் கடைப்பிடிக்கப்பட்ட அணுகுமுறைகள் நிச்சயமாக ஏமாற்றத்தையே கொடுத்திருக்கும். தற்போதைக்கு அமைச்சரவை உறுப்பினர்களின் எண்ணிக்கை 30 ஆக மட்டுப்படுத்தப்பட்டிருக்கின்ற போதிலும், ' தேசிய அரசாங்க ' முயற்சியொன்றின் ஊடாக அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு பல்வேறு நகர்வுக…

  8. இலங்கைக்கு வெளியில் பொறிமுறை அவசியம் ! வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பிலான இலங்கையின் பிரச்சினைக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் ஊடாகவே தீர்வு காண வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்ற உண்மையைக் கண்டறிந்து அதற்கான நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்பதற்கான தொடர் போராட்டம் உள்நாட்டில் ஆயிரமாவது தினத்தை நெருங்கிக் கொண்டிருக்கின்ற நிலையிலேயே இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. பல்வேறு நெருக்குதல்கள், அச்சுறுத்தல்கள், வாழ்க்கை நெருக்கடிகளுக்கு மத்தியில் இந்த வீதியோரப் போராட்டத்தை வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுடைய குடும்ப உறவினர்கள் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர். தன்னெழுச்சியாக ஆரம்பமாகி தீவிரமடைந்…

  9. கைகூடாத கூட்டு ஏனைய காலங்களை விட, தேர்தல் காலத்தில் அரசியல்வாதிகளிடையே விநோதமான ஒற்றுமைகளும் பகைமை பாராட்டல்களும் ஏற்பட்டு விடுவது வழக்கமானது. மக்களைப் பேய்க்காட்டி, ஏமாற்றி வாக்குகளைப் பெற்றுக் கொள்வதற்காக ‘ஆறு கடக்கும் வரை அண்ணன் தம்பி உறவுபோல’ யாருடனும் கூட்டு வைத்துக் கொள்வதற்கு, சிறுபான்மைக் கட்சிகள் மட்டுமல்ல பெரும்பான்மைக் கட்சிகளும் பின்னிற்பதில்லை. ‘வேற்றுமையில் ஒற்றுமை காணுதல்’ என்ற கோட்பாடு, அரசியலில், தேர்தல் காலத்தில் மட்டுமே அதிகமதிகம் பரீட்சார்த்தம் செய்யப்படுகின்றது. அந்த வகையில் வடமாகாணத்தில், மூன்று நிர்வாக மாவட்டங்களை உள்ளடக்கிய வன்னித் தேர்தல் மாவட்டத்தில், பிரதான தமிழ்க் கட்…

  10. அரசியலமைப்பு சூழ்ச்சியில் கற்றுக்கொண்ட பாடங்கள் Maatram Translation on January 30, 2019 பட மூலம், Selvaraja Rajasegar “தனி மனிதன் ஒருவன் ஆட்சி செய்யும் பிரஜைகள் நகரம் எந்த வகையிலும் பிரஜைகள் நகரம் அல்ல” – சொபொக்லீஸ் (என்டிகனி) இற்றைக்கு நான்கு வருடங்களுக்கு முன்னர் இந்த நாட்டு மக்களில் பெரும்பான்மையானோர் மைத்திரிபால சிறிசேனவை நிறைவேற்று ஜனாதிபதியாக தெரிவு செய்தனர். இன்றிலிருந்து சுமார் ஒரு வருட காலப்பகுதிக்குள் அடுத்த நிறைவேற்று ஜனாதிபதியும் தெரிவு செய்யப்படவிருக்கிறார். கடந்த காலத்தில் செய்த தவறுகளை எதிர்காலத்தில் செய்யாதிருக்க எம்மால் முடியுமா? கடந்த காலத்தில் செய்த …

  11. அழிக்கபட்டஒரு நினைவுச் சின்னமும் அழிக்கப்பட முடியாத நினைவுகளும் – நிலாந்தன்! January 16, 2021 கடந்த கிழமை யாழ். பல்கலைக்கழகத்தில் நிறுவப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் சின்னம் உடைக்கப்பட்டமை நன்மையான விளைவுகளைத்தான் ஏற்படுத்தியிருக்கிறது. முதலாவது நன்மை தூங்கிக் கிடந்த பல்கலைக்கழகத்தை அது துடித்தெழ வைத்திருக்கிறது. யாழ் பல்கலைக்கழகம் கடந்த பத்தாண்டுகளில் பல போராட்டங்களை முன்னெடுத்து இருக்கிறது. எனினும் பெரும்பாலான அரசியல் போராட்டங்களில் அது எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. அல்லது இடைக்கால வாக்குறுதிகள் மூலம் போராட்டங்கள் பிசுபிசுத்துப் போயின. இப்படிப்பட்ட ஒரு பின்னணியில் இது ஒரு வெற்றி பெற்ற போராட்டம். ஏனெனில் மாணவர்களின் க…

  12. வல்லரசுகளைத் தோற்கடித்த 4 ராணுவ சாகசங்கள் ராமச்சந்திர குஹா உக்ரைன் மீதான ரஷ்யப் படையெடுப்பு கடந்த காலத்தில் நிகழ்ந்த தவறான நான்கு பெரிய ராணுவப் படையெடுப்புகளைப் பற்றி என்னைச் சிந்திக்க வைத்தது. மிகப் பெரிய நாடுகள், ராணுவரீதியில் வலிமையும் வாய்ந்தவை, உலக அரங்கில் தங்களுக்கு அதிக முக்கியத்துவம் இருப்பதாகக் கருதி, பெரும் அவமானத்தில் முடிந்த அந்த நான்குப் படையெடுப்புகளை மேற்கொண்டன. அத்தகைய பழைய வரலாறுகளை, நம் வாழ்நாளில் நிகழ்ந்தவையாகச் சுருக்கிக்கொள்ள வேண்டும் என்றால், இது - அந்த வரிசையில் நான்காவது படையெடுப்பு. வியட்நாமிலும் இராக்கிலும் அமெரிக்கா நடத்திய இருவேறு தனித்தனி படையெடுப்புகள், ஆப்கானிஸ்தான் மீது அன்றைய சோவியத் ஒன்றியம் தவறான கணிப்பின்பேரில் நிகழ்த்திய பட…

  13. வார்த்தை ஜாலங்களால் ஒரு அரசியல் விளையாட்டு! இன்னும் எத்தினை காலத்துக்கு இந்த சித்து விளையாட்டை அனுமதிப்பார் தமிழர்? [Tuesday, 2014-03-18 20:04:34] மன்னார் திருக்கேதீஸ்வரம் மாந்தைப்புதைகுழி தொடர்பாக சர்வதேச விசாரணையை ஆரம்பிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட, மன்னார் மாவட்ட மக்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகளுக்கு நீதி கோரி அடுத்த மாதம் 12ம் திகதி (12.03.2014 அன்று) மன்னாரில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டத்தை மேற்கொள்ளவுள்ளதாக கடந்த 12.02.2014 அன்று தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் அறிவித்திருந்தார். ஏன்? எதற்கு? மன்னார் திருக்கேதீஸ்வரம் மாந்தைப்புதைகுழி விவகாரம், உள்நாட்டு யுத்தத்தினால் உயிர…

  14. பாலைவனத்துக்கான பயணமா, பால்நிலவுக்கான பயணமா? காரை துர்க்கா / 2018 நவம்பர் 27 செவ்வாய்க்கிழமை, மு.ப. 01:41 Comments - 0 நல்ல உறவு (நல்லுறவு) என்பது மற்றவர்களுடன் ஏற்படுத்திக் கொள்கின்ற கட்டாய ஒப்பந்தம் அல்ல. மாறாக, அது இயல்பாக விரும்பி, மனதில் தோன்ற வேண்டிய ‘புனித உறவு’ ஆகும். ஆனால், 2015ஆம் ஆண்டு ஜனவரி எட்டாம் திகதி தொடக்கம், கடந்த ஒக்டோபர் 26ஆம் திகதி வரை, ‘நல்லாட்சி’ என்ற ஒற்றை வார்த்தை, மலிந்து காணப்பட்ட சொல் ஆகும். அவர்கள், வலிந்து ஏற்படுத்திய உறவு என்பதால்தான், நல்லுறவும் நல்லாட்சியும் இன்று வலுவிழந்து விட்டது. இவ்வகையில், இலங்கை அரசியலில், கடந்த ஒரு மாத காலமாகப் பல ‘அசிங்கங்கள்’ அரங்கேறி வருகின்றன. பேரினவாதப் பெருந் தேசியக் கட்சிகள் இர…

  15. சிரியாவின் போரினால் யாருக்கு இலாபம்? – 1 அமெரிக்கா, அரசியல், சிரியா, வரலாறுFebruary 21, 2016March 4, 2016 இ.பா.சிந்தன் ஒரு ஐந்தாண்டுகளுக்கு முன்னர் சிரியா என்கிற நாடு குறித்து பெரிதாக நாம் அறிந்திருக்கமாட்டோம். ஆனால் இன்று சர்வசாதாரணமாக டீக்கடை விவாதங்களில்கூட சிரியா ஒரு பேசுபொருளாகியிருக்கிறது. அப்படி சிரியாவில் என்னதான் நடக்கிறது? சிரியாவின் உள்நாட்டுப்போருக்கு யாரெல்லாம் காரணம்? இப்போரினால் பாதிக்கப்படுவதும்/பாதிக்கப்படப்போவதும் யார்? இப்போரினால் இலாபம் அடையப்போவது யார்? சிரியாவில் தொடங்கிய போர் சிரியாவோடு முடிந்துவிடுமா அல்லது மூன்றாம் உலகப்போருக்கான ஆயத்தப்பணிகளா? இது போன்ற பல கேள்விகளுக்கு விடைகள் தேடும் முயற்சியே இக்கட்டுரைத்தொடர்…. உலகில் மன…

    • 0 replies
    • 758 views
  16. தற்போது கடல்வழியாக அவுஸ்திரேலிய கிறிஸ்மஸ் தீவுக்குள் உட்புக முயன்ற தமிழ் அகதிகளின் படகுகள் வழிமறிக்கப்பட்டு நிராகரிக்கப்பட்ட சிலர் இலங்கைக் கடற்படையினரிடம் கையளிக்கப்பட்டும், மற்றையவர்களின் கதி என்னவென்று தெரியாத நிலையும் உள்ளது. இக் கருத்துக்கணிப்பு அவுஸ்திரேலிய அரசின் நடவடிக்கைகள் பற்றிய தமிழர்களின் நிலைப்பாட்டை அறிய உருவாக்கப்பட்டுள்ளது. அடுத்த ஞாயிறு வரை வாக்களிக்க முடியும் : http://www.yarl.com வாக்களித்த பின்னர் அதன் பெறுபேறுகளைக் இங்கு காணலாம். http://www.yarl.com/node/8093 ஏற்கனவே நடத்தப்பட்ட கருத்துக் கணிப்புகளை இந்த இணைப்பில் பார்வையிடலாம். http://www.yarl.com/poll

  17. [size=4]வீர புருஷர்கள் இரு ஓரங்களும் கூரான வாளொன்றை ஒத்தவர்கள், புத்திசாலித்தனம் வாய்த்த இனத்தவர்கள். இத்தகைய வீரபுருஷர்கள் விடயத்தில் அவதானத்துடனேயே செயற்படுவர்.[/size] [size=4]தமிழில் : வியெஸ்ரி[/size] [size=4]மூலம்: ராவய[/size] [size=4] இத்தகைய வீர புருஷர்களூடாகத் தமது தேவையை நிறைவு செய்து கொண்ட பின்னர் அவர்களுக்கு கௌரவமாக ஓய்வு வழங்கிவிடுவர். வீர புருஷரொருவருக்கு காலக்கட்டுப்பாடின்றித் தொடர்ந்து செயற்பட இடமளிக்கும் இனங்கள் தமது நிகழ் காலத்தைப் போன்றே, எதிர்காலத்தையும் ஆபத்துக்கு உள்ளாக்கிக் கொள்கின்றன. [/size] [size=4]கறுப்பு ஜூலை கலவரத்தால் பெரும் பாதிப்புக்கு உள்ளான இந்த நாட்டின் தமிழ் மக்கள், தலை நிமிர்ந்து மீண்டும் தமது வாழ்க்கையைத் தொடர வாய்ப்பு …

    • 0 replies
    • 758 views
  18. கூட்டமைப்பின் பேச்சாளரை ரெலோ, புளொட் தனியாக அறிவிக்கப்போகின்றனவா? தொடரும் நெருக்கடிக்கு அதிரடி முடிவு வருமா? “தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் பதவியை ‘ரெலோ’வுக்கு தரப்போவதில்லை என்பதில் தமிழரசுக் கட்சி பிடிவாதமாக நின்றால், ‘புளொட்’ மற்றும் இணைந்து செயற்படக்கூடிய வேறு கட்சிகளுடன் சேர்ந்து புதிய பேச்சாளர் ஒருவரைத் தெரிவு செய்து நாம் தொடர்ந்து கூட்டமைப்பாகப் பயணிப்போம்” என ரெலோ உறுதியாகத் தெரிவித்திருக்கின்றது. அதற்குத் தேவையான பாராளுமன்றப் பலமும், ஒருங்கிணைப் புகுக்குழுவின் ஆதரவும் தமக்கு இருப்பதாகவும் ரெரோ கூறுகின்றது. கூட்டமைப்பின் பேச்சாளர் பதவியில் தொடரும், இழுபறிநிலை மற்றும் பாராளுமன்றக்குழுக் கூட்டத்தில் நடைபெற்றது என்ன? இது தொடர்பில் ரெலோவின…

  19. திசை மாறும் சட்டப் போராட்டம் -கபில் இன்னும் ஒரு மாதம் அமைச்­ச­ராக இருந்து டெனீஸ்­வரன் எதனைச் சாதித்து விடப்­போ­கிறார்- அல்­லது டெனீஸ்­வ­ரனை இன்னும் ஒரு மாதம் பத­வியில் இருக்க அனு­ம­திப்­பதால் தான் விக்­னேஸ்­வ­ர­னுக்கு என்ன கெடுதல் வந்து விடப் போகி­றது? இன்னும் ஒரு மாதத்­துக்குப் பின்னர் வடக்கு மாகா­ண­சபை செய­லி­ழந்து போகும். அதற்குப் பின்னர் ஆளு­நரின் கையில் அதி­காரம் வரப்­போ­கி­றது. அவர் அந்த அதி­கா­ரத்தை எவ்­வாறு பயன்­ப­டுத்­துவார் என்ற கேள்வி உள்­ளது வடக்கு மாகாண சபையின் ஆயுள்­காலம் முடி­வ­டைந்­தாலும் கூட, அதன் அமைச்சர் பத­வியை முன்­வைத்து தொடங்­கப்­பட்ட சட்டப் போராட்டம் ஓய்­வுக்கு வரும் அறி­கு­றிகள் ஏதும் இருப்­ப­தாகத…

  20. விக்கியின் துரத்தலும் கஜனின் ஓட்டமும் புருஜோத்தமன் தங்கமயில் / 2019 ஜூன் 19 புதன்கிழமை, மு.ப. 04:35 Comments - 0 கடந்த வாரம், கொழும்பில் இடம்பெற்ற சமூக சேவையாளர் க.மு.தருமராஜாவின் நினைவுக் கூட்டத்தில் உரையாற்றிய சி.வி.விக்னேஸ்வரன், கஜேந்திரகுமாரை நோக்கி,“...நாம் இணைந்து செயற்பட்டால் சாதிக்க முடியாதது ஒன்றுமில்லை...” என்று கூறினார். அதுவும், “மறைந்த தருமராஜா தற்போது இருந்திருந்தால், தன்னோடு, கஜேந்திரகுமார் இணைய வேண்டிய அவசியத்தை, வலியுறுத்தி வந்திருப்பார்” என்றும் குறிப்பிட்டார். குறித்த நினைவுக் கூட்டத்தில் உரையாற்றியவர்களில் அதிகமானவர்கள், விக்னேஸ்வரன், கஜேந்திரகுமார் இணைவு என்பது, காலத்தில் கட்டாயம், தவிர்க்க முடியாதது என்கிற தோரணையிலேயே உரையாற்றினர். …

  21. ஊடக அறம் - ரஜினியும் எம்.ஜி.ஆரும்: ஓர் ஒப்பீடு ஊழிமுதல்வன் ரஜினிக்காகச் சலம்பும் அடிப்பொடிகள் வருவேன் வருவேன் என்று இருபத்தோரு ஆண்டுகளாகப் போக்குக்காட்டி வந்த ரஜினிகாந்த் என்னும் சிவாஜிராவ் கெய்க்வார்டு கடைசியில் தமிழக அரசியலில் குதித்தே விட்டார்; "நேரடியாக இருநூத்தி முப்பத்துநாலு தொகுதிகளிலும் போட்டி போடுறோம்; ஜெயிக்கிறோம்; ஆட்சி அமைக்கிறோம்", என்று அறிவித்தும் விட்டார். எம்.ஜி.ஆர் நூற்றாண்டுவிழாக் காணும் இக்காலகட்டத்தில், எழுத்தாளர்களும், ஊடகவியலாளர்களும், கவிஞர்களும், அரசியல்வாதிகளும் போட்டி போட்டுக்கொண்டு ரஜினி என்னும் சிவாஜிராவ் கெய்க்வார்டை எம்.ஜி.ஆர். என்னும் மாமனிதருடன் ஒப்பிட்டு, இல்லை, இல்லை, எம்.ஜி.ஆரைவிட ரஜினி மிக உயர்ந்தவர் என்று தலைமேல…

  22. சாள்ஸ் அன்ரனியும் யோசித ராஜபக்சவும் – உபுல் ஜோசப் பெர்னான்டோ பிரபாகரன் ஒரு பயங்கரவாதத் தலைவராக இருந்த போதிலும் அவர் தனது சொந்தச் சமூகத்திற்கு துரோகம் இழைக்க ஒருபோதும் நினைக்கவில்லை. பிரபாகரனின் அர்ப்பணிப்பு மனோநிலைக்கு மாறாக, மகிந்தவின் போலித்தனமான தேசப்பற்று எவ்வாறு அமைந்துள்ளது என்பதை யோசித மீதான ஆணைக்குழுவின் விசாரணை சுட்டிநிற்கிறது. இவ்வாறு சிலோன் ருடே நாளிதழில் உபுல் ஜோசப் பெர்னான்டோ எழுதியுள்ள கட்டுரையில் தெரிவித்துள்ளார். இதனைப் புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்துள்ளவர் நித்தியபாரதி. டிசம்பர் 2006ல் சிறிலங்கா கடற்படையில் இணைந்து கொண்ட மகிந்த ராஜபக்சவின் மகனான யோசித ராஜபக்ச கடந்த பத்தாண்டில் எவ்வாறான பதிவுகளைக் கொண்டுள்ளார் என்பதை இங்கு பார்க்கல…

  23. வதிவிடச் சிக்கலும் மணிவண்ணனும் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸின் யாழ். மாநகர சபை உறுப்பினர் விஸ்வலிங்கம் மணிவண்ணன், சபை அமர்வுகளில் கலந்து கொள்வதற்கும் வாக்களிப்பதற்கும் இடைக்காலத் தடை விதித்து, இலங்கையின் மேன்முறையீட்டு நீதிமன்றம், கடந்த வெள்ளிக்கிழமை (03) உத்தரவிட்டிருக்கின்றது. உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் தொடர்பிலான சட்டத்தின் பிரகாரம், வேட்பாளர் ஒருவர், தான் போட்டியிடும் உள்ளூராட்சி மன்ற ஆள்புல எல்லைக்குள் வசிப்பவராக இருக்க வேண்டும். ஆனால், யாழ். மாநகர சபைக்கு காங்கிரஸால் (தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி) நியமனப்பட்டியல் உறுப்பினராக நியமிக்கப்பட்ட மணிவண்ணன், ஆள்புல எல்லைக்குள் (அதாவது, யாழ். மாநகர சபை எல்லைக்குள்) வச…

  24. இந்தக் கட்டுரை எழுதுவதற்கான குறிப்புக்களை எடுத்துக் கொண்டிருந்த போது, ஒரு செய்தி வெளியாகியிருந்தது. அவுஸ்திரேலிய ஊடகமான கிறீன் லெப்ட் (Green Left Weekly) வாராந்த சஞ்சிகையை மேற்கோள் காட்டி மேற்படி செய்தி இலங்கையின் ஊடகங்களால் முக்கியத்துப்படுத்தப்பட்டிருந்தது. அந்த செய்தி இதுதான் - சமீபத்தில் சீனா சென்றிருந்த இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, அங்கு ஒரு உடன்பாட்டில் கைச்சாத்திட்டிருக்கின்றார். அதாவது, திருகோணமலை துறைமுகத்திற்கு அருகாமையில் உள்ள சீனக்குடா பகுதியில் 1200 ஏக்கர் நிலப்பகுதியை நீண்ட கால குத்தகை அடிப்படையில் சீனாவிற்கு வழங்கியிருக்கின்றார். இது பாதுகாப்பு தொடர்பான அபிவிருத்தி ((defense-related development) என்னும் அடிப்படையில் சீனாவினால் பயன்படுத்தப்படவுள்ளது. இ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.