அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9224 topics in this forum
-
வல்லாதிக்கச் சக்திகளும் தமிழ்த்தேசியக் கட்சிகளும் —ஆணையாளரின் பரிந்துரைகளை நிராகரித்துப் போர்க்குற்றங்களை விசாரிப்பதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் அமைக்கப்பட்டுள்ள ஆணைக்குழுவுக்கு மனித உரிமைச் சபையின் நிகழ்ச்சி நிரல் பத்தில் கூறப்பட்டுள்ள சர்வதேசத் தொழில் நுட்ப உதவிகளை மாத்திரம் இலங்கை கேட்கக்கூடும். அப்படிக் கோரினால் மனித உரிமைச் சபை அதற்கு இணக்கம் தெரிவிக்கக்கூடிய ஆபத்தும் உண்டு—- -அ.நிக்ஸன்- ஈழத்தமிழர்கள் இன அழிப்புக் கோரிக்கையில் பிடியாக நிற்காமல், இந்தியா, அமெரிக்கா போன்ற வல்லாதிக்கச் சக்திகளுக்கு ஏற்றவாறு செயற்படுகின்றமை இலங்கை ஒற்றையாட்சி அரசுக்கு வாய்ப்பாகவே அமையும். குறிப்பாகச் சிங்கள அரசிய…
-
- 0 replies
- 608 views
-
-
கிழமைக்கு ஒரு பிரச்சினை: உள்நோக்கம் என்ன? -நிலாந்தன் January 31, 2021 இம்மாதம் 8ஆம் திகதி யாழ் பல்கலைகழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னம் உடைக்கப்பட்டது. அதற்கடுத்த கிழமை குருந்தூர் மலையில் தொல்லியல் திணைக்களத்தின் நடவடிக்கைகளை தமிழ் மக்கள் எதிர்த்தார்கள். அதற்கடுத்த கிழமை அதாவது கடந்த வாரம் யாழ்ப்பாணத்தில் நிலாவரை கிணறுள்ள பகுதியில் தொல்லியல் திணைக்களம் சர்ச்சைக்குரிய நடவடிக்கைகளில் ஈடுபட்டது. இடையில் தீவுப்பகுதியில் நில அளவைத் திணைக்களம் படைத்தரப்புக்கு நிலங்களை அளக்க முற்பட்டபோது அதுவும் பிரச்சினையாகியது. இவையாவும் அண்மைக்கால பிரச்சினைகள் குறிப்பாக ஒரு குறுகிய காலகட்டத்திற்குள் நடந்திருக்கும் பிரச்சினைகளை தொகுத்துப் பார்த்தால் என்ன தெரிகிறது…
-
- 0 replies
- 614 views
-
-
ஜெனிவா கூட்டத்தொடரும் ததேமமு கூட்டாக வெளியிட்ட அறிக்கை தாயகத்தில் பலத்த வரவேற்பை பெற்றுள்ளது. தமிழர் விடுதலை கூட்டணியை சேர்ந்த சிவகரன் பற்றிய கருத்து. தலைவர்கள் ஆவணத்தில் கையெழுத்து இடுவது பற்றி சொன்னவர் சுமந்திரன்.
-
- 1 reply
- 479 views
-
-
-
- 0 replies
- 675 views
-
-
-
-
- 0 replies
- 758 views
-
-
திராவிடப்பொழில்: ஆய்வுப் புலத்துக்குள் தமிழை முன்நகர்த்தல் -தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ பண்பாட்டு ரீதியாக, நாம் மிகப்பாரிய நெருக்கடியில் இருக்கிறோம். எமது அடையாளங்களைத் தக்க வைக்கவும் மொழியைப் பேணவும் பண்பாட்டை அடுத்த தலைமுறைக்குக் கடத்தவும், நாம் அரும்பாடுபட வேண்டி இருக்கிறது. நாம், இதைச் சரிவரச் செய்வதற்கு, அறிவியல் ரீதியான அணுகுமுறை தேவைப்படுகிறது. ‘கல் தோன்றி மண்தோன்றாக் காலத்தே முன்தோன்றிய மூத்த இனம்’ என்ற, வெற்றுப் பெருமைகளில் விளையும் பயன் எதுவுமல்ல; எமது மொழியையும் பண்பாட்டையும் வரலாற்றையும், அறிவியல் ரீதியான சிந்தனைப் பரப்புக்குள் கொண்டு சேர்ப்பது முக்கியமானது. எமக்கான வரலாற்றை, வெறுமனே கட்டுக்கதைகளில் இருந்து உருவாக்கிவிட முடியாது. ஒடுக்கப்படு…
-
- 1 reply
- 718 views
-
-
புத்தரின் பெயரால் தொடரும் ஆக்கிரமிப்பு அரசியல் புருஜோத்தமன் தங்கமயில் குடும்பத்தையும் ஆட்சி உரிமையையும் துறந்து, மெய்ஞான வாழ்வைத் தேடிய சித்தார்த்தன், ஒருநாள் ‘புத்தர்’ ஆனார். “ஆசையே துன்பத்தின் அடிப்படை” என்று, இந்த உலகத்துக்குப் போதித்த புத்தரின் பெயரால், ஆக்கிரமிப்பும் அடாவடித்தனமும் முன்னெடுக்கப்படுவது என்பது, புத்தனின் போதனைகளுக்கு முற்றிலும் முரணானது. வடக்கு, கிழக்கில் வலிந்த சிங்களக் குடியேற்றங்களை மேற்கொள்வதற்காக, காலங்காலமாக அரச நிறுவனங்களையும் ஆயுதப் படைகளையும் தென் இலங்கை ஆட்சியாளர்கள் பயன்படுத்தி வருகிறார்கள். இன்றைக்கு புத்தரின் திருவுருவச் சிலைகளையும் ஆக்கிரமிப்புக் கருவியாக முன்னிறுத்த ஆரம்பித்துவிட்டார்கள். அரச மரத…
-
- 0 replies
- 511 views
-
-
குடியெழுப்பப்படும் குருந்துமலை ஐயனார்.! - நா.யோகேந்திரநாதன் அண்மையில் ராஜாங்க அமைச்சர் விதுல விக்கிரம தலைமையில் இராணுவத்தினரின் உதவியுடன் அகழ்வாராய்ச்சி என்ற பெயரில் சில நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அங்கு காலங்காலமாக அப்பகுதி மக்களால் வணங்கப்பட்டு வந்த ஐயனார் சூலம் பிடுங்கி எறியப்பட்டு எங்கிருந்தோ இவர்களால் கொண்டு வரப்பட்ட புத்தர் சிலை புத்த பிக்குகளின் பிரித் ஓதலுடன் அங்கு வைக்கப்பட்டது. அங்கு உரையாற்றிய ராஜாங்க அமைச்சர் அங்கு "குருந்தசேவ" என்றொரு விகாரை அமைந்திருந்ததாக 1932ம் ஆண்டு வெளிவந்த வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். மேலும் படைக் கல்லு என்ற இடத்தில் கல்யாணபுர என்ற பௌத்த விகாரையும், பௌத்த துறவிகள் தங்குமிடமும் இருந்ததாகவ…
-
- 0 replies
- 445 views
-
-
-
- 0 replies
- 1.1k views
-
-
மிகச்சரியான மாற்றம் – விக்டர் ஐவன் தற்போது நாட்டை ஆளும் அரசும், அதன் சமூக அரசியல் முறையும், அதன் பொருளாதாரமும் முழுமையாக முடங்கி விழுந்துள்ளது. அதுவும் வங்குரோத்து நிலை மற்றும் அராஜகத்தின் இருண்ட நிழல்கள் நாட்டை விழுங்கிக் கொண்டிருக்கின்றன. துரதிஷ்டவசமான கொவிட்-19 இன் பாதிப்பும் இந்த சந்தர்ப்பத்தில்தான் நாட்டை காவு கொண்டுள்ளது. இந்த நிலை நாட்டின் பொது மக்களது அன்றாட வாழ்க்கை ஓட்டத்துக்கு பலத்த பாதிப்பை ஏற்படுத்தியிருப்பினும் அதை பொருத்துக் கொள்ளும் நிலையில்தான் நாட்டு மக்கள் உள்ளனர். எனினும் அந்த நிலை நாளுக்கு நாள் மிக மோசமான நிலைக்கு மாற்றமடைந்து செல்வதை தவிர்க்க முடியாதுள்ளது. அதன் விகிதாசரத்துக்கேற்ப சமூகம் சிந்தனைத் திறனுடன் செயல்படும் ஆற்றலையும் இழந்துவிடும்…
-
- 0 replies
- 720 views
-
-
இலங்கை அபிவிருத்தியும் சீனாவின் நலன்களும் – மானுவேல் மங்களநேசன் January 26, 2021 52 Views 1948 வரை இலங்கை பிரித்தானியாவின் கீழ் காலனித்துவ நாடாக இருந்துள்ளது. இலங்கை உலகலாவிய வர்த்தகத்திற்கு கேந்திர முக்கியத்துவம் வாய்ந்ததாக இருப்பது பலரது கண்களை குத்தவே செய்கிறது. அந்த நோக்குடன் சீனாவும் இலங்கை ஊடாக உலக வர்த்தகத்தை விஸ்தரிக்க விரும்பியே இந்த அம்பாந்தோட்டை துறைமுக ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது என ஊகிக்கலாம். ஆனால் அது இலங்கையின் அபிவிருத்தியும் முன்னேற்றமும் என்ற வெளித்தோற்றமாகவே சொல்லப்படுகிறது. சீனா இலங்கையுடன் பல திட்டங்களை நிறைவேற்றுகிறது. இவ்வாறு சீனாக்கும் இலங்கைக்கும் இடையே உருவாக்கப்பட்ட திட்டங்கள் 1. அம்பாந்தோட்டை துறைமுக அபிவிருத்…
-
- 0 replies
- 488 views
-
-
குருந்தூர் மலையும் இனப் பிளவும் கபில் கிழக்கு தொல்பொருள் முகாமைத்துவ செயலணியில் ஒரு தமிழ்ப் பிரதிநிதிக்குக் கூட இடமளிக்கத் தயாராக இல்லாத அரசாங்கம், குருந்தூர்மலை தொல்பொருள் ஆய்வில் தமிழ் தரப்பினரை இணைத்துக் கொள்ளும் என்று எதிர்பார்ப்பது முட்டாள் தனம். இலங்கைத் தீவைப் பொறுத்தவரையில் தொல்பொருள் ஆய்வு, என்பது, தமிழரின் வரலாற்றை அழிப்பதற்கான, அதற்கான தடயங்களை இல்லாமல் செய்வதற்கான தமிழ் மக்களின் மீதான ஆக்கிரமிப்பின் ஒரு வடிவமே முல்லைத்தீவு மாவட்டத்தில் குமுழமுனைக்கு அருகில் உள்ள குருந்தூர் மலை என்ற சிறியதொரு குன்று இப்போது, சர்ச்சைக்குரிய ஒரு இடமாக மாறியிருக்கிறது. குருந்தூர்மலையில் தொல்பொருள் ஆய்வு என்ற பெயரில், புத்தர் சிலை வைக்கப்பட்டு வழிபாடு செய்…
-
- 0 replies
- 540 views
-
-
அரசியல் விழிப்புணர்வு ஏற்படுவதற்கு முன் ஆயுதம் ஏந்தி விட்டோம்!!!
-
- 0 replies
- 792 views
-
-
நினைவேந்தல் அங்கிகாரங்கள் -என்.கே. அஷோக்பரன் நினைவேந்தல் (Memorialisation) என்பது, பலவிதமான செயல்முறைகள் ஊடான கூட்டு நினைவூட்டலின் பல்வேறு வடிவங்களைக் குறிக்கிறது. இது நினைவுச் சின்னங்கள், அருங்காட்சியகங்கள், நினைவுகளை முன்னிறுத்தும் முக்கிய இடங்கள், கடந்த காலத்தை எதிர்கொள்ளக்கூடிய முக்கியமான தளங்களைக் குறிக்கிறது. உலகெங்கிலும் வன்கொடுமை, சித்திரவதை, இனப்படுகொலை ஆகிய சம்பவங்களும் அவை நடந்தேறிய இடங்களும் மனிதப் புதைகுழித் தளங்களும் பிற ஒத்த இடங்களும், பொது நினைவுச் சின்னங்களாக மாற்றப்பட்டுள்ளன. 20ஆம் நூற்றாண்டின் மிகப்பெரும் மனித அவலங்களுள் ஒன்றான ‘ஹோலகோஸ்ட்’ நடந்தேறிய நாஸிக்களின் அன்றைய சித்திரவதை முகாம்கள், இன்று நினைவேந்தல் ஸ்தலங்களாக மாறியுள்ளன. உலக…
-
- 0 replies
- 730 views
-
-
கிழக்கில் புதிய வடிவம் பெறும் தமிழர்களுக்கு எதிரான ஒடுக்குமுறை 97 Views இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிரான ஒடுக்குமுறை கிழக்கு மாகாணத்தில் புதிய வடிவம் பெற்றிருக்கின்றது. கால்நடை வளர்ப்போரே இந்த ஒடுக்குமுறைக்கு ஆளாகியிருக்கின்றார்கள். கால்நடைகளின் வாழ்வாதாரமாகிய மேய்ச்சல் தரையை சிங்களவர்கள் ஆக்கிரமித்திருப்பதே இதற்குக் காரணம். இந்த நிலங்கள் பல தசாப்தங்களாக மேய்ச்சல் தரையாகப் பயன்பட்டு வந்தன. கால்நடை வளர்ப்புக்குப் பயன்படுத்தப்பட்ட நிலத்தை ஆக்கிரமிப்பாளர்கள் பயிர் செய்யும் நிலமாக மாற்றியிருக்கின்றார்கள். இது கால்நடைகளை மேய்ச்சலுக்கு வழியில்லாத அவல நிலைமைக்கு உள்ளாக்கியிருக்கின்றது. மட்டக்களப்பு மாவட்டத்தின் நான்…
-
- 2 replies
- 578 views
-
-
காலதாமதமில்லாத அனைத்துலக விசாரணை உடன்தேவை 90 Views இலங்கைத் தீவில் உண்மையும், நீதியும், இழப்பீடுகளும் முன்னெடுக்கப்பட்டு, இனிமேல் முன்னைய நிகழ்வுகள் இடம்பெறாமை உறுதிசெய்யப்படல் வேண்டும் என்பது ஐக்கிய நாடுகள் சபையின் மனிதஉரிமை ஆணையகத்தின் நிலைமாற்று நீதி முறைமையாக தீர்மானம் 30/1 மூலம் பரிந்துரைக்கப்பட்டது. ஆயினும் 2020ஆம் ஆண்டு பெப்ரவரியில் சிறீலங்கா இந்தப் பரிந்துரைகளுக்கான வழிகாட்டல் தீர்மானத்தில் இருந்து விலகிக்கொண்டது. அதே நேரத்தில் கடந்த ஆண்டு முழுவதும் சிறீலங்கா சட்டத்தின் ஆட்சிக்கு மதிப்பளிக்காத வகையில் நடந்து கொண்டுள்ளதை அனைத்துலக மன்னிப்புச் சபை பின்வருமாறு பட்டியலிட்டு உலகிற்கு வெளிப்படுத்தியுள்ளது. ஐக்கிய ந…
-
- 0 replies
- 560 views
-
-
இருதரப்புப் போர்க்குற்றங்களுக்கான வெளிநாட்டு விசாரணைக்களம் விரிவடையப் போகிறது இன அழிப்புக்கான சர்வேதச நீதி மீண்டும் புறந்தள்ளப்படும் என்பதே கசிந்திருக்கும் ஜெனீவா முடிவு சொல்லும் செய்தி புலம்பெயர் தமிழர் அமைப்புகளிடம் பெரும் பொறுப்பு, அவர்கள் செய்யவேண்டியது என்ன? புவிசார் அரசியலில் அமெரிக்க-இந்திய கேந்திர இராணுவ நலன்களுக்கு முன்னுரிமை கொடுக்க முன்வராவிடின் சர்வதேச போர்க்குற்ற தண்டனைகள் ஒவ்வொன்றாக மேற்குலக நாடுகளால் இலங்கைக்கெதிராக முடுக்கப்படும். அதேவேளை முன்னாள் விடுதலைப்புலிகள் மீதும் இந்தியா, மற்றும் மேற்குலகில் தண்டனைகளும் தடைகளும் இறுக்கப்படும். இன அழிப்பு என்ற குற்றத்தை மேற்குலகோ இந்தியாவோ வ…
-
- 0 replies
- 910 views
-
-
ஆணைக்குழு ‘உத்தி’ (ஆர்.ராம்) ஜெனிவா நெருக்கடிகளைச் சமாளிப்பதற்கு ‘ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவொன்று’ நியமிக்கப்படும் என்று கடந்த திங்கட்கிழமை அமைச்சரவை இணைப்பேச்சாளர் அமைச்சர் உதய கம்பன்பில தெரிவித்திருந்தார். சரியாக 72 மணிநேர இடைவெளியில் கடந்த வியாழக்கிழமை நள்ளிரவில் ‘அதியுத்தமனாரின்’ ஆணைப்படி மூவர் அடங்கிய ‘ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவொன்றை’ வர்த்தமானி அறித்தலை வெளியிட்டு நியமித்திருக்கின்றார் செயலாளர் பீ.பி.ஜயசுந்தர. உயர் நீதிமன்ற நீதிபதி ஏ.எச்.எம்.டி.நவாஸ் தலைமையில் ஓய்வு பெற்ற பொலிஸ்மா அதிபர் சந்திரா பெர்ணான்டோ, ஓய்வு பெற்ற மாவட்ட செயலாளர் நிமல் அபேசிறி ஆகியோரே அறிவிக்கப்பட்டுள்ள ‘ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின்’ உறுப்பினர்கள் ஆவர். இந்த ஜனாதிபதி…
-
- 0 replies
- 686 views
-
-
ஜெனிவாவை நோக்கி ஒரு கூட்டு? நிலாந்தன் January 24, 2021 வரும் ஜெனிவா கூட்டத்தொடரை எதிர்கொள்ளும் பொருட்டு தமிழ் தேசிய நிலைப்பாட்டை கொண்ட மூன்று கட்சிகள் இணைந்து ஒரு பொது ஆவணத்தை உருவாக்கியுள்ளன.கடந்த பத்தாண்டுகளில் தமிழ் தரப்பில் இவ்வாறு ஒரு ஆவணம் உருவாக்கப்பட்டிருப்பது இதுதான் முதல் தடவை. குறிப்பாக கடந்த எட்டு ஆண்டு காலப்பகுதிக்குள் ஜெனிவாவில் தமிழ்மக்கள் எதைக் கேட்க வேண்டும் என்பது குறித்து நீண்ட ஆலோசனைகளின்பின் உருவாக்கப்பட்ட ஓர் ஆவணம் இது.இம்முயற்சிகளின் தொடக்கம் தமிழ் டயஸ்போறாதான். லண்டனை மையமாகக் கொண்டியங்கும் தமிழ் அமைப்பு ஒன்று முதன்முதலாக அப்படி ஒரு ஆவணத்தை உருவாக்கி சுமந்திரனுக்கு வழங்கியதாகத் தெரிகிறது. கிட்டத்தட்ட ஒன்றரை பக்கமுடை…
-
- 0 replies
- 774 views
-
-
-
- 1 reply
- 642 views
-
-
தமிழ் மக்களையும் சர்வதேசத்தினையும் ஏமாற்றவே அரசு முயற்சி -ஞா.சிறிநேசன் 12 Views மனித உரிமை மீறல்களை விசாரிப்பதற்கான ஆணைக்குழு என்று ஒரு குழுவினை அரசாங்கம் ஏற்படுத்தியுள்ளது. இது தமிழ் மக்களையும் சர்வதேசத்தினையும் ஏமாற்றுகின்ற ஒரு கண்துடைப்பு செயல் என தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்தார். இது குறித்து தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், “இன்றைய அரசாங்கத்தின் செயற்பாடுகள் தமிழ் மக்கள் மத்தியில் பல்வேறு கேள்வியை ஏற்படுத்தியுள்ளதுடன் பல்வேறு ஆதங்கத்தினையும் ஏற்படுத்தியுள்ளது. 1958ஆம் ஆண்டு தொடக்கம் 2009ஆம் ஆண்டுவரையில் தமிழ் மக்கள் திட்டமிட்டு இனஅழிப்பு செய்யப்பட்டனர். அடுத்…
-
- 0 replies
- 334 views
-
-
இலங்கைக்கு இராணுவ சேவை கட்டாயமா? -கவிதா சுப்ரமணியம் இராணுவத்துக்கு கட்டாயமாக ஆட்களைச் சேர்க்கும் நடைமுறை, பண்டைய மெசொப்பெத்தேமியா காலத்துக்கு, அதாவது ஆயிரக்காணக்கான ஆண்டுகளுக்கு முற்பட்டதாகும். ஆனால், அண்மைய நவீன வரலாற்றைப் புரட்டிப் பார்க்கும்போது, பிரெஞ்சுப் புரட்சியில் இருந்தே ஆரம்பமாகின்றது. 17, 18ஆம் நூற்றாண்டுகளில், பிரஸ்ஸியா, சுவிட்ஸர்லாந்து, ரஷ்யா உள்ளிட்ட பிற ஐரோப்பிய நாடுகளாலும் கட்டாய இராணுவ சேவை வலியுறுத்தப்பட்டதாக அறியமுடிகிறது. இலங்கையில், 18 வயதுக்கு மேற்பட்ட இளைஞர்களுக்கு, கட்டாய இராணுவப் பயிற்சியை வழங்குவதற்கான முன்மொழிவொன்றை சமர்ப்பிக்கவுள்ளதாக, மக்கள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ரியல் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்திருந்ததை அடுத்து, சமூக…
-
- 1 reply
- 874 views
-
-
பண்பாட்டு ஆக்கிரமிப்பின் இன்னோர் அத்தியாயம்: குருந்தூர் மலையமர்ந்த கௌதமர் -தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ ஈழத்தமிழரின் இருப்புக்கான போராட்டம், இன்று உள்ளூர் களங்களிலேயே அரங்கேறுகிறது. எமது உரிமைகளுக்கானதும் இருப்புக்கானதுமான போராட்டத்தின் மையப்புள்ளி எமது வாழ்விடங்களே ஆகும். எமது வாழ்விடங்களைச் சிறுகச் சிறுக இழந்துவிட்டு, தீர்வை மேற்குலகத் தலைநகரங்களிலோ, புதுடெல்லியிலோ தேடுவதில் பலனில்லை. எமக்கான ஆபத்துகள் விரிவடைந்து கொண்டே போகின்றன. ஆனால், இதைக் கையாளுவதற்கான வேலைத்திட்டமோ, தூரநோக்கோ எம்மிடம் இருக்கிறா என்ற கேள்வி, தவிர்க்க இயலாமல் மேலெழுகிறது. கடந்த சில நாள்களுக்கு முன்னர், குமுளமுனையில் உள்ள குருந்தூர் மலையில், புதிதாக புத்தர் வந்தமர்ந்தார். இன்னும் சர…
-
- 0 replies
- 578 views
-
-
ஜெயசங்கரின் விஜயம் : தமிழர் தரப்பிற்கு கூறியதும் தமிழர் தரப்பு விளங்கிக்கொள்ள வேண்டியதும் - யதிந்திரா இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி.ஜெயசங்கரின் கொழும்பு வருகையைத் தொடர்ந்து, இந்திய – இலங்கை விவகாரம் மீளவும் பேசு பொருளாகியிருக்கின்றது. இந்தியாவின் எதிர்பார்ப்புக்கள் தொடர்ந்தும் பின்னடைவுகளை சந்தித்து வருவதாகவும் இதனால் இந்திய – இலங்கை உறவில் விரிசல்கள் ஏற்பட்டிருப்பதாகவும் சில அபிப்பிராயங்கள் வெளிவருகின்றன. இவ்வாறானதொரு பின்புலத்தில், இலங்கையின் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச கிழக்கு கொள்கலன் முனையத்தை எந்தவொரு நாட்;டுக்கும் விற்கும் நோக்கம் இல்லையென்று தெரிவித்திருக்கின்றார். அதே வேளை, ஜெயசங்கர் கொழும்பில் தங்கியிருக்கும் போதே பிரதமர் மகிந்த ராஜபக்ச, கிழக…
-
- 0 replies
- 387 views
-