அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9225 topics in this forum
-
கொரோனா நெருக்கடியும் கைநழுவிய போக்கும் -பி.மாணிக்கவாசகம் 31 Views கோவிட்-19 கொள்ளை நோய் தீவிரமடைந்துள்ளது. அதன் தொற்றுப் பரவலைத் தகுந்த முறையில் தடுத்து நிறுத்த முடியாமல் இலங்கை தடுமாறிக் கொண்டிருக்கின்றது. இராணுவத்தை முதன்மை நிலையில் பயன்படுத்தி கடந்த மார்ச் மாதம் ஏற்பட்டிருந்த நோய்த்தொற்றின் முதலாவது அலையை அரசு வெற்றிகரமாகக் கையாண்டிருந்தது. அது ஏனைய நாடுகளுக்கு முன்மாதிரியானது என்று உலக சுகாதார நிறுவனம் பாராட்டி இருந்தது. இதனால் சினிமா கதாநாயகனைப் போன்று, ஜனாதிபதி கோத்தாபாய அரசு இறுமாப்புடன் கொலரைத் தூக்கிவிட்டுக் கொண்டது. ஆனால் ஒரு சில மாதங்களிலேயே நிலைமைகள் தலைகீழாக மாறிவிட்டன. குறிப்பாக ஒக்டோபர் மாதத்தில் கொரோனா …
-
- 0 replies
- 369 views
-
-
புலிகளின் மீதான தடைக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்காட தமிழ் அரசியல் சட்டத்தரணிகள் தயாரா? மனோ கேள்வி 78 Views தமிழர் தாயகப் பிரதேசத்தில் இலங்கை அரசால் முன்னெடுக்கப்பட்டு வந்த நில ஆக்கிரமிப்புப் போர், 2009 ஆண்டு பெரும் தமிழின அழிப்புடன் முடிவுக்கு வந்தது. பயங்கரவாதிகளை அழித்துவிட்டோம், தமிழ் மக்களை பயங்கரவாதிகளிடம் இருந்து மீட்டுவிட்டோம் என அறிவித்த இலங்கை அரசாங்கம், அதன் பின் இன்று வரையிலும் அதே பயங்கரவாத பூச்சாண்டி காட்டி தமிழர் நிலங்களை ஆக்கிரமிப்பதுடன் இன சுத்திகரிப்பு வேலைகளிலும் சத்தங்களின்றி செயற்பட்டு வருகின்றது. அதே நேரம் தமிழர்களுக்கு உரிமைகளை வழங்குவதற்குப் பதிலாக குறுகிய கால சலுகைகளை வழங்கி, தான் ஒரு நல்லரசா…
-
- 1 reply
- 691 views
-
-
அமெரிக்காவுக்கு அடிபணிய மறுக்கும் இலங்கை! - நா.யோகேந்திரநாதன்.! இரண்டாவது உலகயுத்தம் முடிவுக்கு வந்த பின்பு அமெரிக்கா உலக மேலாதிக்கத்தைத் தனது இராணுவ, பொருளாதாரக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் முயற்சிகளை லாவகமாகவும் வெற்றிகரமாகவும் மேற்கொண்டு வருகிறது. இவற்றில் படை நடவடிக்கை, இராணுவ சதிப் புரட்சி, நாடுகளின் நிலவும் உள்நாட்டு அரசியல், இன, மத முரண்பாடுகளைக் கையாளுதல், இராஜதந்திர நகர்த்தல்கள் எனப் பல்வேறு வழிமுறைகள் உள்ளடங்கும். தமது கட்டுப்பாட்டுக்குள் அடங்க மறுக்கும் அரசுத் தலைவர்களின் ஆட்சிகளைக் கவிழ்ப்பதற்கும் அரசுத் தலைவர்களைக் கொல்வதற்கும் தயங்குவதில்லை. கொங்கோவின் லுமும்மா, சிலி நாட்டின் அலண்டே, சிம்பாவின ரொபேட் முகாபே, ஈராக்கின் சதாம் ஹூசைன், லிபிய…
-
- 1 reply
- 687 views
-
-
இலங்கையில் சீனா? - யதீந்திரா அண்மையில் கொழும்பிற்கு வியஜம் செய்திருந்த அமெரிக்க ராஜாங்கச் செயலர் மைக் பொம்பியோ – சீனாவின் கம்யூனிஸ் கட்சியை வேட்டையாடும் தன்மைகொண்டது – அதாவது வேடையாடி புசிக்கும் மிருகம் என்று தெரிவித்திருந்தார். பொம்பியோ இவ்வாறு குறிப்பிட்டு சில தினங்களே ஆகின்ற நிலையில், சீனக் கம்யூனிஸ்ட் கட்சியும் சிறிலங்கா பொதுஜன பெரமுனவும் இணைந்து கட்சிக் கட்டமைப்புக்கள் சார்ந்த அனுபவங்களை பகிர்ந்துகொள்ளும் வகையில் இணைய வழி கலந்துரையாடலொன்றை நடத்தியிருக்கின்றனர். மகிந்தவின் அரசியல் வாரிசான நாமல் ராஜபக்சவின் தலைமையில் இந்த நிகழ்வு நடந்திருக்கின்றது. இதற்கான ஏற்பாடுகளை இலங்கைக்கான சீனத் தூதரகம் ஒழுங்கு செய்திருக்கின்றது. பொம்பியோ கொழும்பில் வைத்து தெரிவித்த கருத்துக்…
-
- 1 reply
- 748 views
-
-
தமிழ்த் தேசிய அரசியலில் அடுத்தது என்ன? -என்.கே. அஷோக்பரன் கொரோனா வைரஸின் இரண்டாம் அலை இலங்கையை ஆட்டுவித்துக் கொண்டிருக்கிறது. சமூகப் பரவல் என்ற வார்த்தையைப் பயன்படுத்தாவிட்டாலும், தினந்தோறும் நாடெங்கிலும் ஆங்காங்கே, புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்ட வண்ணமே இருக்கின்றார்கள். கொரோனா வைரஸ், முழு உலகத்துக்குமே சவாலாக மாறியிருக்கிறது. கொரோனா வைரஸின் சுகாதாரத் தாக்கம் ஒரு புறமென்றால், அதன் பொருளாதாரத் தாக்கம் அதைவிடப் பயங்கரமானதாக இருக்கிறது. தொற்றைக் கட்டுக்குள் கொண்டுவர, நீண்ட கால முடக்கல் நிலை அமல்படுத்தப்பட்டால், தொற்றுப் பரவல் குறையும். ஆனால், அதனால் விழும் பொருளாதார அடி, நீண்ட காலத்துக்கு மீண்டெழ முடியாத பாதாளத்தில் நாட்டைத் தள்ளிவிடும். ஆகவே, நோய…
-
- 14 replies
- 1.6k views
-
-
இலங்கையில் சீனாவின் செல்வாக்கைக் கட்டுப்படுத்த அமெரிக்காவினால் முடியுமா? -தேவநேசன் நேசையா Bharati November 8, 2020 இலங்கையில் சீனாவின் செல்வாக்கைக் கட்டுப்படுத்த அமெரிக்காவினால் முடியுமா? -தேவநேசன் நேசையா2020-11-08T22:42:04+05:30Breaking news, அரசியல் களம் FacebookTwitterMore தேவநேசன் நேசையா தெற்காசிய மற்றும் தென்கிழக்காசியாவிற்கான (இலங்கை, இந்தியா, மாலைதீவு, இந்தோனேசியா, வியட்நாம்) அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பொம்பியோவின் விஜயத்தின் பிரதான குறிக்கோள் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசுக் கட்சிக்கான ஆதரவை அதிகரிப்பதற்காகவேயாகும். அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் பிரசாரங்கள் உச்சகட்டத்தில் இருந்த நேரத்தில் அவரது…
-
- 0 replies
- 680 views
-
-
தமிழ்த் தேசியத்தின் திரிசங்கு நிலை -ஆர்.ராம்- 2020பொதுத்தேர்தலின் பின்னரான சூழலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதான கட்சியான தமிழரசுக்கட்சிக்குள் ஏற்பட்டிருந்த சேனாதிராஜா சுமந்திரன் ‘அணி’ முரண்பாடுகளும், அதனால் அக்கட்சியின் தலைவராக இருக்கும் மாவை.சோ.சேனாதிராஜாவுக்கும், சுமந்திரன், சிறிதரன் போன்றவர்களுக்கும் இருந்த ‘அரசியல் உறவில்’ ஏற்பட்ட ‘வெடிப்புக்களும்’ பகிரங்கமானவை. சேனாதிராஜா தேர்தலில் பின்னடைவுகளைச் சந்தித்திருந்த சொற்பகாலத்திலேயே தமிழரசுக்கட்சியின் தலைவர் பாத்திரத்திலிருந்தும் அதன் மூலம் ஒட்டுமொத்த தமிழ்த் தேசிய அரசியலில் இருந்தும் அகற்றப்படவுள்ளரா? என்ற சூழல் ஏற்பட்டிருந்தது. இத்தருணத்தில் ‘வீழ்வேன் என்று நினைத்தாயோ’ என்று பதிலுரைத்து அவர…
-
- 2 replies
- 945 views
-
-
-
- 0 replies
- 861 views
-
-
அரசாங்கத்தின் அலட்சியமும் கொரோனாவின் மீள்பரவலும் புருஜோத்தமன் தங்கமயில் இலங்கை எப்போதுமே ஆச்சரியங்களால் நிறைந்த நாடு. கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு உலகம் பூராவும் சுகாதாரத்துறையினர் தலைமை தாங்கிக் கொண்டிருக்கையில், இலங்கையில் இராணுவம் தலைமையேற்றிருக்கின்றது. சுகாதார அமைச்சரோ, மத அனுஷ்டானங்களை நடத்தி, பானையில் அடைக்கப்பட்ட புனித நீரை ஆற்றில் கொட்டுவதில் கவனமாக இருக்கிறார். பிரதமரோ, மத - மார்க்க நிறுவனங்களிடம் கொரோனா வைரஸுக்கு எதிரான பிரார்த்தனைகளை முன்னெடுக்குமாறு கோருகிறார். ஜனாதிபதியோ, கொரோனா வைரஸ் தொற்றுக்குப் பொதுமக்களைக் குற்றஞ்சாட்டிக் கொண்டிருக்கிறார். கொரோனா வைரஸ்ஸுக்கு எதிரான நடவடிக்கைகளில், முதல் தரப்பாக இருக்க வேண்டிய வைத்திய…
-
- 1 reply
- 849 views
-
-
விபரீதங்களோடு விளையாடும் விந்தை தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ அறிவியலுக்கும் அபத்தத்துக்கும் இடையிலான பிரிகோடு, மிகவும் சிறியது. அறிவியலை விட, அபத்தத்துக்கு முக்கியத்துவம் அதிகமாகிப் போன உலகத்தில் நாம் வாழ்கிறோம். பயன் யாதெனில், கொரோனா வைரஸின் இரண்டாவது அலை, இப்போது ஆட்கொண்டுள்ளது. இது எதிர்பாராதது அல்ல; ஆனால், ‘முன்னே ஓடவிட்டுப் பின்னே துரத்தும்’ வித்தையை, இந்தப் பெருந்தொற்றை வைத்து, அரசியல்வாதிகள் ஆடிக்கொண்டிருக்கிறார்கள். இந்த ஆபத்தான விளையாட்டைப் பெரும்பாலான நாடுகள் விளையாடுகின்றன. அந்த நாடுகள், தமது சொந்த மக்களின் உயிரைப் பணயம் வைத்து, இந்த வித்தையை ஆடுகின்றன. இங்கே எழுகின்ற கேள்வி யாதெனில், இவ்வாறானதோர் ஆபத்துப் பற்றி, அறிவியலாளர்கள் தொடர்ச்சியாகச் சொல்லி…
-
- 0 replies
- 829 views
-
-
ஒரே நாடு, ஒரே சட்டம், ஒரே குடும்பம்? நிலாந்தன்… November 8, 2020 பசில் ராஜபக்ச கடந்த செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்துக்கு தேசியப் பட்டியல் மூலம் தெரிவு செய்யப்படுவார் என்று முன்பு அறிவிக்கப்பட்டது. இல்லையென்றால் அடுத்த நாடாளுமன்ற அமர்வுக்கு முன் அவர் நாடாளுமன்றத்திற்குள் வந்து விடுவார் என்று தெரிய வருகிறது. அவருடைய பெயர் கட்சியின் தேசியப் பட்டியலில் இல்லாதபடியால் சட்டச் சிக்கல்கள் உண்டு என்று கூறப்படுகிறது.ஆனால் ராஜபக்சக்கள் இது விடயத்தில் தடைகளை உடைக்கும் சக்தி மிக்கவர்கள். பசிலை எப்படியாவது உள்ளே கொண்டுவரப் பார்ப்பார்கள்.இதன்மூலம் அவர்கள் எந்த இறுதி இலக்குகளை முன்வைத்து 20ஆவது திருத்தத்தை கொண்டு வந்தார்களோ அந்த இலக்குகளில் ஒன்றை அடைந்து விடுவார்கள். …
-
- 0 replies
- 1.2k views
-
-
எனது மகனை கொலை செய்துவிடுவோம் என எனது வீட்டிற்கு சென்று மிரட்டினார்கள் – மனம் திறந்தார் மகிந்த தேசப்பிரிய Rajeevan Arasaratnam November 7, 2020 எனது மகனை கொலை செய்துவிடுவோம் என எனது வீட்டிற்கு சென்று மிரட்டினார்கள் – மனம் திறந்தார் மகிந்த தேசப்பிரிய2020-11-07T11:48:24+05:30அரசியல் களம் FacebookTwitterMore 1988 தேர்தலின் போது வேட்புமனுக்களை பெற்றுக்கொண்டால் என்னை சுட்டுக்கொல்லப்போவதாக அச்சுறுத்தினார்கள் என தேர்தல் ஆணையாளர் பதவியிலிருந்து ஓய்வுபெறவுள்ள மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். நான் அவர்களின் உத்தரவினை ஏற்றுக்கொள்ளாவிட்டால் எனது இரண்டு வயது மகனை கொலை செய்துவிடுவோம் என எனது வீட்டிற்கு சென்று மிரட்டினார்கள், …
-
- 0 replies
- 662 views
-
-
-
- 1 reply
- 1.1k views
-
-
இலங்கையில் சீனாவின் செல்வாக்கு; கட்டுப்படுத்த முடியாத நிலையில் அமெரிக்கா Maatram Translation on November 6, 2020 பட மூலம், South China Morning Post தெற்காசியா மற்றும் தென்கிழக்காசியாவிற்கான (இலங்கை, இந்தியா, மாலைத்தீவு, இந்தோனேசியா, வியட்னாம்) அமெரிக்க இராஜாங்க அமைச்சர் மைக் பொம்பியோவின் விஜயத்தின் பிரதான குறிக்கோள் அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் குடியரசுக் கட்சிக்கான ஆதரவை அதிகரிப்பதற்காகவே ஆகும். அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் பிரசாரங்கள் உச்சகட்டத்தில் இருந்த நேரத்தில் அவரது இந்த விஜயம் இடம்பெற்றமை – இதைத் தெளிவாகக் காட்டுகின்றமை, சீனாவிற்கு எதிரான கடுமையான தெற்கு/ தென்கிழக்காசிய பிரதிபலிப்பொன்று அமெரிக்க வாக்காளர்க…
-
- 1 reply
- 524 views
-
-
முஸ்லிம்களின் ஜனாஸாக்களைப் புதைக்க மறுக்கும் ஒரு நாட்டில் வைரசுக்குக் கழிப்புக் கழித்த அமைச்சர் – நிலாந்தன் கடந்த பௌர்ணமி தினத்தன்று யாழ்ப்பாணத்திலிருந்து கிளிநொச்சிக்கு ஓர் ஆசிரியர் தனது மகளோடு பயணம் செய்து கொண்டிருந்தார். தென்மராட்சியில் ராணுவ தளங்களுக்கு முன்னே பௌத்த மதக் கொடிகள் பறக்க விடப்பட்டிருந்தன. அதைப் பார்த்துவிட்டு மகள் தகப்பனிடம் கேட்டாள் “இந்த ராணுவத்தில் வேறு மதத்தவர்கள் இல்லையா?” என்று. “இருக்கிறார்கள் இப்போது உள்ள தளபதி ஒரு கத்தோலிக்கர் தான்” என்று அவர் கூறினார். “அப்படி என்றால் ஏனைய மதத்தவர்களின் புனித நாட்களின் போது அவர்களுடைய கொடிகளையும் சின்னங்களையும் முகாம்களின் முன் கட்டுவார்களா?” என்று மகள் கேட்டாள் “ இல்லை அப்படி நான் பார்த்ததில்லை” என்று தகப்…
-
- 14 replies
- 1.1k views
-
-
-
- 9 replies
- 1.3k views
-
-
சர்வதேசத்தில் உள்ள தடைகள் உடைக்கப்படவேண்டும்- நா.விஸ்ணுகாந்தன் வேண்டுகோள் சர்வதேசத்தில் இருக்கின்ற அத்தனை நாடுகளும் தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடைகளை நீக்கி உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கு ஒரு அங்கீகாரம் வழங்கவேண்டும் என இலங்கை மக்கள் தேசிய கட்சியின் செயலாளர் நாயகம் நா.விஸ்ணுகாந்தன் வேண்டுகோள் விடுத்துள்ளார். மட்டக்களப்பில் உள்ள அவரது அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இந்த வேண்கோளை விடுத்துள்ளார். தமிழ் மக்களுக்கான நிரந்தர தீர்வும் கிடைக்கவேண்டுமானால் சர்வதேச ரீதியாக இருக்கும் தடை நீக்கப்படவேண்டும் எனவும் வரவு செலவுத் திட்டம் ஊடாக மட்டக்களப்பு மாவட்ட செயலகம் தொடர்பில் விசேட கவனம் செலுத்தவேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். …
-
- 0 replies
- 489 views
-
-
அமெரிக்க ஜனாதிபதி எவ்வாறு தெரிவு செய்யப்படுகிறார்? A.Kanagaraj எம்.எஸ்.எம். ஐயூப்இன்று அமெரிக்க ஜனாதிபதி; தேர்தல் நடைபெறுகிறது. அதாவது இன்று அமெரிக்க மக்கள் தமது நாட்டுத் தலைவரை மட்டுமல்லாது உலகிலேயே பலம் வாய்ந்த அரசியல் தலைவரை தெரிவு செய்ய வாக்களிக்கிறார்கள். இலங்கையில் கடந்த நவம்பர் மாதம் 16 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்றது. 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்றது. சட்டத்தில் கூறப்படாவிட்டாலும் பதவியில் இருக்கும் ஜனாதிபதியின் விருப்பப்படியே இலங்கையில் இந்தத் திகதி நிர்ணயிக்கப்படுகிறது. ஆனால் அமெரிக்காவில் ஜனாதிபதித் தேர்தல் திகதியும் புதிய ஜனாதிபதி பதவியேற்கும் திக…
-
- 0 replies
- 908 views
-
-
பாம்பியோவின் பயணத்தினை வெற்றிகரமாகக் கையாண்டுள்ளதா இலங்கை.? - கலாநிதி கே.ரீ.கணேசலிங்கம் இலங்கை அமெரிக்க உறவின் அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மைக் பாம்பியோவின் விஜயம் ஒரு வரலாற்று நிகழ்வென இலங்கையின் வெளியுறவு துறை அமைச்சர் தினேஸ் குணவர்த்தன தெரிவித்துள்ளார். மைக் பாம்பியோவின் விஜயம் இலங்கை அரசியல் பரப்பில் ஜேவிபி உட்பட பல தரப்பினரிடமும் அதிக கேள்விகளை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இலங்கை ஆடசியாளர்கள் பாம்பியோவை எதிர் கொண்ட விதத்தையும் அதன் மறுபக்கத்தையும் தேடுவதே இக்கட்டுரையின் பிரதான நோக்கமாகும். முதலாவது மைக் பாம்பியோவும் இலங்கை ஜனாதிபதியும் சந்தித்த போது ஜனாதிபதி வெளிப்படுத்திய விடயங்களை நோக்குவோம். இலங்கையின் தேவை தொடர்ந்தும் கடன் பெறுவதல்ல வெளிநாட்டு ம…
-
- 1 reply
- 1k views
-
-
ஜனாஸா எரிப்பு விவகாரம்; வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுதல் மொஹமட் பாதுஷா இலங்கையில் கொரோனாவின் இரண்டாவது அலை மிக வேகமாகவும், வீரியமாகவும் பரவிக் கொண்டிருக்கின்றது. முதலாவது அலைக்கும் இரண்டாவது அலைக்கும் இடைப்பட்ட காலத்தில் அரசியல் காய்நகர்த்தல்களில் முழுக் கவனத்தையும் செலுத்தியிருந்த அரசாங்கம், இப்போது துணுக்குற்று எழுந்து, மீண்டும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதில் மும்முரமாக ஈடுபட்டுள்ளது. இது சமூகப் பரவல் இல்லை என்று சொல்லி, முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் நடவடிக்கைகளும் எடுக்கப்படுகின்றன. இதுவரை கொவிட்-19 தொற்றுக்குள்ளான 21 மரணங்கள் பதிவாகியுள்ளளன. தற்கொலை செய்து இறந்த இளைஞனின் மரணத்தையும் கொவிட் கணக்கில் இருந்து அரசாங்கம் பதிவளிப்பு செய்திருக்கின்றது. இ…
-
- 2 replies
- 928 views
-
-
துமிந்த சில்வாவிற்கான பொது மன்னிப்பும், அரசியற் கைதிகளின் விடுதலையும் என்.கே.அஷோக்பரன் தன்னை “மனித உரிமைகளின் பாதுகாவலன்” என்று பறைசாற்றிக்கொள்ளும் மனோ கணேசன் துமிந்த சில்வாவிற்கு பொது மன்னிப்பு வேண்டி 150 பாராளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்ட கோரிக்கைப் பத்திரத்தில் தானும் கையெழுத்திட்டிருந்தார். இந்த விஷயம் வௌியானதும், அதற்கு அவர் கொடுத்த முதல் விளக்கத்தில் “இளைஞன், குடிபோதையில் தவறிழைத்துவிட்டார்” என்று சொன்னார். அதற்கு எதிர்ப்பு வலுக்கவே அதை அப்படியே கைவிட்டுவிட்டு, இரண்டாவது இன்னொரு விளக்கத்தைக் கொடுத்தார். இரண்டாவது விளக்கத்தில், “இந்த ஆவணத்தில் நான் கையெழுத்திட்டது, இதன் மூலம் ஏற்படும் பிரச்சாரத்தை பயன்படுத்தி, தசாப்தகாலமாக சிறைவாசம் அனுபவிக்கும…
-
- 0 replies
- 488 views
-
-
-
- 3 replies
- 1k views
-
-
‘அமெரிக்காவிடமிருந்து இலங்கை தப்ப முடியாது’ என சம்பந்தன் சொன்னது எதற்காக? அதன் அரசியல் விளைவுகள் எவ்வாறானதாக இருக்கும்? அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோவின் இலங்கைக்கான வருகையைத் தொடர்ந்து பிராந்தியத்தில் ஒரு பதட்டமான நிலைமை உருவாகி இருக்கின்றது. இதற்கு காரணம் இலங்கை தெளிவாக தன்னுடைய வெளியுறவுக் கொள்கையை மாற்றிக்கொள்வதான ஒரு சமிஞ்ஞையை வெளிப்படுதியிருப்பதுதான். இந்தப் பின்னணியில், “பொறுப்பு கூறும் விடயத்தில் இலங்கை அரசு அமெரிக்காவிடம் இருந்து தப்ப முடியாது ” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் நேர்காணல் ஒன்றில் கூறியிருக்கின்றார். சம்பந்தன் எதற்காக அவ்வாறு சொன்னார்? அவரது நோக்கம் என்ன? இதனால் உருவாகப்போகும் அரசியல் விளைவு என்ன? தமிழ் தலை…
-
- 1 reply
- 763 views
-
-
பலவீனமடையும் சிறுபான்மைக் கட்சிகள்.! - நா.யோகேந்திரநாதன் கடந்த சில வாரங்களாகக் கடும் வாதப்பிரதிவாதங்களுக்கு உட்பட்டதுடன் உயர் நீதிமன்றம் வரைச்சென்று திருத்தங்களுடன் நிறைவேற்ற அனுமதியும் பெற்ற 20ஆவது திருத்தச் சட்டம் நாடாளுமன்றத்தில் இரண்டாவது வாசிப்புக்குச் சமர்ப்பிக்கப்பட்டது. காரசாரமான விவாதங்களின் பின் ஆதரவாக 156 வாக்குகளையும் எதிராக 65 வாக்குகளையும் பெற்று தேவைப்பட்ட மூன்றில் இரண்டு பங்குக்கு அதிகமான வாக்குகளையும் பெற்று நிறைவேற்றப்பட்டது. இத்திருத்தச் சட்டம் நிறைவேறுமென்பது ஏற்கனவே தெரிந்திருந்த போதிலும் கூட இவ்வளவு அதிகப்படியான வாக்குகளைப் பெறும் என்பதை எவரும் எதிர்பார்த்திருக்க முடியாது. அதாவது இச்சட்டம் நிறைவேற எதிர்க்கட்சியைச் சேர்ந்த சிலரும் ஆதரவா…
-
- 0 replies
- 807 views
-
-
தடத்திற்கு தடை தரலாமா? – முனைவர் ஆ. குழந்தை 39 Views இங்கிலாந்தில் உள்ள தீவிரவாதச் சட்டம்(2000) பிரிவு 2(1, 2)இன் கீழ் விடுதலைப்புலிகள் இயக்கத்தை இங்கிலாந்து உள்துறை அமைச்சகம் தடைசெய்யப்பட்ட இயக்கங்களின் பட்டியலில் சேர்த்து, தடை செய்திருக்கிறது. இந்த தடையை நீக்க நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வழக்கு தொடர்ந்தது. நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் சார்பாக திருமிகு மாயா இலெசுடர், திருமிகு மால்கம் பிர்டிலிங், திருமிகு சேக்கப் ரொபினோலிட்சு ஆகிய சட்டத்தரணிகள் வாதாடினர்(1,2பத்திகள்). அதன் விளைவாக நடுவர் மன்றம் தந்த தீர்ப்பு அறிக்கையில் மூன்று பகுதிகள் உள்ளதாக நான் பார்க்கின்றேன். அந்த மூன்று பகுதிகளை விளக்கிவிட்டு, நமது கடமைகளை ஆராய்…
-
- 0 replies
- 754 views
-