Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. காணி நிலம் வேண்டும்! நிலாந்தன். காணி நிலம் வேண்டும்! நிலாந்தன். காணி நிர்ணயக் கட்டளைச் சட்டத்தின் நாலாம் பிரிவின் கீழ் 28.03.2025 ஆம் திகதியிடப்பட்டு, 2430 இலக்கமிடப்பட்டு பிரசுரிக்கப்பட்டிருக்கும் வர்த்தமானி அறிவித்தலானது இலங்கைத் தீவின் இன முரண்பாடுகள் தொடர்பில் ஆகப் பிந்திய தலைப்புச் செய்தியாக மாறியிருக்கின்றது. வடக்கு மாகாணத்தில் மொத்தமாக 5.940 ஏக்கர் காணிகளை 3 மாத காலத் துக்குள் எவரும் உரிமை கோராதுவிடின், அவை அரச காணிகளாகப் பிரகடனப்படுத் தப்படும் என மேற்படி வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவிலிருந்து வடமராட்சி கிழக்கு வரையிலுமான நீண்ட பிரதேசத்துக்குள் காணப்படும் காணிகளைக் குறித்த மேற்படி வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டிருக்கும் காணிகளில் கிட்டத்தட்ட அரைவ…

  2. காணி விடுவிப்பு; பொருத்து வீடு; காடழிப்பு முல்லைத்தீவு, கேப்பாபுலவில் இராணுவ ஆக்கிரமிப்பிலுள்ள பொதுமக்களின் 613 ஏக்கர் காணிகளையும் இந்த மாத இறுதிக்குள் விடுவிக்குமாறு வலியுறுத்தி கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கடந்த திங்கட்கிழமை கடிதம் எழுதியிருக்கின்றார். இந்தக் காணிகளை நான்கு கட்டங்களாக விடுவிப்பதற்கான இணக்கம் ஜனாதிபதி, இராணுவத் தளபதி(கள்), தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட தரப்பினருக்கு இடையில் கடந்த மே மாதத்தில் காணப்பட்டிருந்தது. அதில், ஒரு சில பகுதிகளைக் கூட இதுவரை விடுவிக்காத நிலையில், மக்களின் போராட்டம் இன்று 143 ஆவது நாளாகத் தொடர்ந்து வருகின்றது. …

  3. காணி விடுவிப்புக்காக நன்றி சொல்லும் மனநிலை, ஓர் அரசியல் தோல்வி வலிகாமம் வடக்கில், இராணுவ ஆக்கிரமிப்பிலுள்ள பொது மக்களின் காணிகளில் ஒரு தொகுதி (638 ஏக்கர்), கடந்த வெள்ளிக்கிழமை விடுவிக்கப்பட்டது. கால்நூற்றாண்டுகளுக்கும் மேலாக முகாம்களிலும், அடுத்தவர் வீடுகளிலும் அகதி வாழ்க்கைக்கு வலிந்து தள்ளப்பட்ட மக்களுக்கு, தமது சொந்த வீடு, வளவைக் காணுதல் என்பது பெரும் கனவு. யாராவது, எப்படியாவது தங்களது காணிகளை மீட்டுத்தந்துவிட மாட்டார்களா? என்று ஒவ்வொரு நாளும் ஏங்கித் தவிக்கிறார்கள்; போராடிச் சாய்கிறார்கள். அப்படியான நிலையில், இராணுவ ஆக்கிரமிப்பிலிருந்து விடுவிக்கப்படும் தமது காணிகளை நோக்கிச் செல்லும்…

  4. காணிகளை விடுவிக்க- வீதியோரம் போராடும் மக்கள்!! முல்­லைத்­தீ­வின் கேப்­பாப்­பு­லவு பகு­தி­யில் இரா­ணு­வத்­தி­னர் வச­மி­ருக்­கும் தமது பூர்­வீகக் காணி­களை விடு­விக்கக்கோரி கடந்த 2017 ஆம் ஆண்டு மார்ச் 1 ஆம் திகதி முதல் கேப்­பாப்­பு­லவு மக்­கள் ஆரம்­பித்த காணி மீட்புப் போராட்­டம், முன்­னேற்­றம் எது­வு­மற்ற நிலை­யில் 450 நாள்­களை தாண்­டி­யும் தொடர்ந்து முன்­னெ­டுத்து செல்­லப்­ப­டு­கின்­றது. இரவு, பகல் என்­றும் பாராது குளிர், வெயில் மற்­றும் நுளம்­புத் தொல்­லை­க­ளுக்கு மத்­தி­யி­லும், கேப்­பாப்­பு­லவு மக்­கள் தமது மாதிரிக் கிரா­மங்­க­…

  5. உலக வரலாற்றில் இதுவரைக்கும் நடைபெற்ற யுத்தங்களில் பெரும்பாலானவை நிலத்தை ஆக்கிரமிப்பதற்கான அல்லது நில மீட்புக்கான யுத்தங்களாகும். இன்று பலஸ்தீனம் உள்ளிட்ட முஸ்லிம் நாடுகளில் இடம்பெற்றுக் கொண்டிருப்பதும் முஸ்லிம்களை வேரறுத்து, அந்த மண்ணைக் கைப்பற்றி, அங்கிருக்கின்ற வளங்களை சுரண்டுவதற்கான பல்நோக்கு யுத்தமென்றே கூற வேண்டும். ஏனென்றால் நிலம் அல்லது காணி என்பது ஒரு குறிப்பிட்ட மக்களின் இருப்புக்கும் வாழ்தலுக்குமான அடிநாதமாக திகழ்கின்றது. காணிகள் மீதான உரிமை எந்தளவுக்கு முக்கியமானது என்பதை உலக வரலாற்றினூடு மட்டுமல்லாமல் இலங்கையின் அனுபவத்தின் ஊடாகவும் புரிந்து கொள்ள முடியும். அதாவது, விடுதலைப் போராட்டமும், அதற்கெதிரான அரச நடவடிக்கையும் வெறுமனே அரசியல் உரிமைகள் தொடர்பான இராண…

    • 0 replies
    • 1k views
  6. காணிகள் விடுவிப்பும் இராணுவ நிகழ்ச்சி நிரலும் கே. சஞ்சயன் / பொதுமக்களின் காணிகளை விடுவிப்பதற்காக, சில இராணுவ முகாம்களை மூடுவதற்கும், சில இராணுவ முகாம்களின் பருமனைக் குறைப்பதற்கும், இராணுவத் தளபதி எடுத்துள்ள நடவடிக்கை முட்டாள்த் தனமானது என்று விமர்சித்திருக்கிறார் முன்னாள் இராணுவத் தளபதியும் தற்போதைய அமைச்சருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா. முன்னர் சரத் பொன்சேகாவின் தீவிர விசுவாசியாக இருந்தவர், இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனாநாயக்க, அதனால், மஹிந்த ராஜபக்‌ஷ அரசாங்கத்தால் கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டவர். வெளிநாட்டுக்குத் தப்பியோடி, தலைமறைவாக இருந்துவிட்டு, ஆட்சி மாற்றம் ஏற்பட்ட அடுத்த நாளே, அவர் கட்டுநாயக்க விமான…

  7. காணிக் கட்டளைச் சட்டத் திருத்தமும் தமிழ்க் கட்சிகளுடனான பேச்சும். -மாகாணங்களுக்கு வழங்கப்பட்டுள்ள காணி அதிகாரங்களை காணிச் சீர்திருத்த ஆணைக்குழு கட்டுப்படுத்தும் வல்லமை கொண்டது. இந்த வல்லமையை இழக்கக்கூடாது என்ற கருத்தின் அடிப்படையில் இலங்கைத் தேசிய காணி ஆணைக்குழுவை அமைக்கச் சிங்கள ஆட்சியாளர்கள் விரும்பில்லை என்பது கண்கூடு ஜே.ஆர் வகுத்த சூழ்ச்சி வகிபாகத்தின் நீட்சியாக இன்றுவரை கையாளப்படும் அரசியல் உத்தி- -அ.நிக்ஸன்- வடக்குக் கிழக்குத் தமிழ்பேசும் மக்களின் பாரம்பரியப் பிரதேசங்களில் உள்ள காணிகளைக் கொழும்பை மையமாகக் கொண்ட இலங்கை ஒற்றையாட்சி அரசின் சில திணைக்களங்கள் அபகரித்து வரும் சூழலில், காணிக் கட்டளைச்…

  8. தீபச்செல்வன் - 9 JUNE, 2011 ஆயுதப் போராட்டம் அழிக்கப்பட்ட நிலையில் ஈழத்து மக்களிடம் ஏற்பட்டுள்ள அரசியல் வெறுமையும் அரசின் ஆக்கிரமிப்பு நிலையும் சேர்த்து ஈழத்து மக்களை நிலமற்ற வாழ்வுக்குள் தள்ளியிருக்கிறது. கொடும் போரால் ஈழத்தை ஆக்கிரமித்துள்ள இலங்கை அரசு ஈழத்து மக்களின் ஒவ்வொரு அங்குல நிலத்திலும் தன் ஆக்கிரமிப்புக் கனவைத் திணித்துவருகிறது. இத்தனை அழிவுகளின் பிறகும் தம் வாழ் நிலத்திற்காகப் போராட வேண்டிய தவிர்க்க முடியாத நிலை ஈழத்து மக்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. போர் முடிந்த பின்னர் மிகவும் கவர்ச்சிகரமானதாக முன்வைக்கப்பட்ட மீள்குடியேற்றம் என்னும் வார்த்தையில்தான் இந்த நிலப் பிரச்சினை அடங்கியிருக்கிறது. எல்லாத் துயரங்களின் பிறகும் தலைமுறைகளுக்காகவும் சந்ததிகளுக்காகவும் …

  9. காணிப் பிரச்சினைகளைத் தீர்க்க போராடாத முஸ்லிம்கள் சனத்தொகைப் பரம்பல் மற்றும் அதனது மேல்நோக்கிய வளர்ச்சிப் போக்கு ஆகியவற்றுக்கு ஏற்றாற்போல், காணிகள் இல்லாத இனக் குழுமமாக, நாட்டில் பரவலாகவும் குறிப்பாக வடக்கு, கிழக்கிலும் முஸ்லிம்கள் வாழ்கின்றார்கள். இழந்த காணிகளை மீட்பதிலோ அல்லது காணிப் பிரச்சினைகளைத் தீர்ப்பதிலோ, இவர்கள் அக்கறை இல்லாமல் இருக்கின்றமை, மிகவும் ஆபத்தான நிலைமையாகும். பொருத்தமற்ற தலைவர்களையும் அரசியல் பிரதிநிதிகளையும் தெரிவு செய்கின்ற சமூகமும், சமூக அக்கறையற்ற அரசியல்வாதிகளால் ஆளப்படும் மக்கள் கூட்டமும் எவ்வாறான இழப்புகளையும் பின்னடைவுகளையும் சந்திக்கும் என்பதைத்தான், இலங்கை முஸ்லிம்கள் தற்சமய…

  10. காணிவிடுவிப்பு விவகாரத்தில் கண்துடைப்பு நடவடிக்கை இரா­ணு­வத்தின் வசமுள்ள பொது­மக்­களின் காணி­களை விடு­விப்­பதில் கையா­ளப்­ப­டு­கின்ற அணு­கு­முறை, பொறுப்பு மிக்க ஓர் அர­சாங்­கத்தின் செயற்­பா­டாகத் தோற்­ற­வில்லை. பொது­மக்­களின் காணி­களை விடு­விப்­ப­தாகக் கூறி கண்­து­டைப்பு நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­வ­தி­லேயே இரா­ணு­வத்­தி­னரும் அர­சாங்­கமும் ஈடு­பட்­டி­ருக்­கின்­றார்கள் என்­பது கேப்­பாப்­புலவு காணி விடு­விப்புச் செயற்­பாட்டின் மூலம் வெளிச்­சத்­திற்கு வந்­துள்­ளது. அடாத்­தாக பொது­மக்­களின் காணி­களைக் கைப்­பற்­றி­யது மட்­டு­மல்­லாமல், தமது தேவைக்­கு­ரிய காலம் முடி­வ­டைந்த பின்­னரும். அந்தக் காணி­களை உரி­மை­யா­ளர்­க­ளிடம் கைய­ளிப்­ப­தற்கு உடன்­ப­டா…

  11. காணொளிகளின் காலத்தில் காணாமல் ஆக்கப்பட்டவருக்கான நீதி – நிலாந்தன்! அணையா விளக்கு போராட்டத்தில் தன்னை நித்திரை கொள்ளவிடாமல் தடுத்த இரண்டு சம்பவங்களைப் பற்றி அதில் அதிகமாக ஈடுபட்ட ஒருவர் சொன்னார். முதலாவது சம்பவம், ஒரு முதியவர்-மிக முதியவர்- காணாமல் ஆக்கப்பட்ட ஒரு மகனின் தகப்பன். அவர் அங்கே போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார். ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் வந்து போனபின் அவர் அங்கிருந்தவர்களிடம் கேட்டாராம், “தம்பி இனி எங்களுக்குத் தீர்வு கிடைக்குமா? காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளைகள் திரும்பக் கிடைப்பார்களா?” என்று. அவர் நம்புகிறார், ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் வந்ததால் ஏதோ தீர்வு கிடைக்கும் என்று. அந்த நம்பிக்கை, அதுவும் அந்த முதிய வயதில் அவருக்கு இருந்த நம்பிக்கை, தன்னைத் துன்புறுத்தியதா…

  12. காதில் ஏறுமா ? ஐ. நா நிபுணரின் புத்திமதி உண்மை, நீதி, இழப்­பீடு, மீள­நி­க­ழா­மையை உத்­த­ர­வா­தப்­ப­டுத்தும் ஐ.நாவின் சிறப்பு அறிக்­கை­யாளர் பப்லோ டி கிரெய்ப், இலங்­கையில் இரண்டு வார­கால உண்மை கண்­ட­றியும் பய­ணத்தை முடித்துக் கொண்டு திரும்­பி­யி­ருக்­கிறார். அவர் கொழும்பில் இருந்து புறப்­ப­டு­வ­தற்கு சில மணி­நேரம் முன்­ன­தாக,- கடந்த 23ஆம் திகதி- ஐ.நாவின் இலங்­கைக்­கான பணி­ய­கத்தில் ஒரு செய்­தி­யாளர் சந்­திப்பை நடத்­தி­யி­ருந்தார். அந்தச் சந்­திப்பில் அவர் வெளி­யிட்ட கருத்­துக்கள், நிச்­ச­ய­மாக அர­சாங்­கத்­துக்கு உவப்­பான ஒன்­றாக இருக்­காது. ஆனாலும் ஐ.நா. நிபு­ணரின் கருத்து வெளி­யாகி பல நாட்­க­ளாகி விட்ட பின்­னரும், அர­சாங்கத…

  13. காத்தான்குடி படுகொலை நியாயமானதா? இன்று காத்தான்குடி பள்ளிவாசலில் அப்போதைய முன்னாள் கிழக்கு மாகாண தளபதியாக இருந்த கருணா, கரிகாலன் தலைமையிலான விடுதலைப்புலிகள் முஸ்லிம் மக்களை வெட்டி கொலைசெய்தனர். ஆனால் அது ஜீரணிக்க முடியாத, மனிதநேயத்தை நேசிப்போர் ஏற்றுகொள்ள கூடியதல்ல. காலங்கள் கடந்தாலும் அதற்கு விடுதலைப்புலிகள் மன்னிப்பு கோரினர். ஆனால் கருணா, கரிகாலன் அவர்கள் அத்தகைய கொலைகளை செய்ய முடிவெடுத்தது ஏன் என இந்த கட்டுரையை #வாசியுங்கள். திராய்க்கேணி படுகொலைகள் (Thiraikkerney massacre) என்பது 1990 ஆம் ஆண்டு ஆகத்து 6 ஆம் நாள் இலங்கையின் அம்பாறை மாவட்டத்தில் திராய்க்கேணி என்னும் தமிழ்க் கிராமம் ஒன்றில் இடம்பெற்ற படுகொலை நிகழ்வைக் குறிக்கும். சிறப்பு…

  14. (எம்.பஹ்த் ஜுனைட்) 1990 ஒக்டோபர் 29 இல் புலிகளால் வட மாகாணத்திலிருந்து முஸ்லிம்களை இனச்சுத்திகரிப்பு மேற்கொண்டு 33 வருட நினைவு தின நிகழ்வு ஞாயிற்றுக் கிழமை (29) காத்தான்குடி அல் மனார் அறிவியல் கல்லூரி , அப்துல் ஜவாத் மண்டபத்தில் நடைபெற்றது . எக்ஸத் ஊடக வலையமைப்பின் பணிப்பாளர் ஜெ.எல்.எம்.ஷாஜஹான் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.எம்.எம்.முஷாரப் பிரதம அதிதியாகவும் வெளியேற்றப்பட்ட வடமாகாண முஸ்லிம்கள் அமைப்பின் செயலாளர் சட்டமானி பி.எம்.முஜீபுர்ரஹ்மான் முன்னாள் கிழக்குமாகாண சபை உறுப்பினர் யு.எல்.எம்.என்.முபீன் ஆகியோர் கெளரவ அதிதிகளாக கலந்துகொண்டு வட மாகாணத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட முஸ்ல…

    • 0 replies
    • 614 views
  15. காத்திருக்கும் பாரியதோர் அரசியல், பொருளாதார நெருக்கடி எம்.எஸ்.எம். ஐயூப் மக்கள் ஆர்ப்பாட்டங்கள் மூலம் அல்லது ஆயுதப் போராட்டங்கள் மூலம் ஆட்சியாளர்களை விரட்டியடித்த நாடுகள் இருக்கின்றன. பிலிப்பைன்ஸ், டியூனீசியா, எகிப்து, ஈரான், உக்ரைன் போன்ற பல நாடுகளில், மக்கள் ஆயுதம் ஏந்தாமலேயே ஆர்ப்பாட்டங்கள் மூலமாக, ஆட்சியாளர்களைப் பதவியிலிருந்து விலக்கி, நாட்டை விட்டும் ஓடச் செய்தனர். அவ்வாறானதொரு நிலைமை, இலங்கையிலும் உருவாகி வருகிறது போல் தெரிகிறது. இலங்கையிலும் 1953ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம், ஒரு கொத்து அரிசியின் விலை 25 சதத்திலிருந்து 70 சதமாக திடீரென உயர்த்தப்பட்ட போது, நாட்டு மக்கள் கிளர்ந்தெழுந்தனர். நாட்டில் பல பகுதிகளில், மக்கள் ஆரப்பாட்டங்களை நடத்தினர். அம்…

  16. அரசுத்தலைவர் சிறிசேன ஜெனிவாவில் இருந்து திரும்பி வந்தபொழுது அவருக்கு வழங்கப்பட்ட வரவேற்பும் மரியாதையும் புகழாரமும் நன்கு திட்டமிட்டுச் செய்யப்பட்டவைதான். தமது வெற்றி நாயகர்களை தண்டிக்க முற்படும் வெளிச்சக்திகளை வெற்றிகரமாக தன் வழிக்குக் கொண்டுவந்ததன் மூலம் நாட்டின் இறையாண்மையையும் கௌரவத்தையும் அவர் பாதுகாத்திருப்பதாக ஒரு தோற்றம் கட்டி எழுப்பப்படு;கிறது. அவரும் பிரதமரும் ஜெனிவாவில் இருந்து வந்த பின் ஊடகங்களுக்கும் படைத்துறை பிரதானிகளுக்கும் தெரிவித்துவரும் கருத்துக்களும் அத்தகையவைதான். இதுபோலவே வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஐ.நாவிலும் ஏனைய வெளிநாட்டுத் தலைநகரங்களிலும் தெரிவித்துவரும் கருத்துக்களும் ஏறக்குறைய அத்தகையவைதான். இவை அனைத்தையும் செறிவாக கூராகச் சொன்…

  17. காந்திகளுக்குச் சோதனைக் காலம்? இந்திய அரசியலில், தவிர்க்கப்பட முடியாத ஓர் அங்கமாக, நேரு - காந்தி அரசியல் வரலாறு காணப்படுகிறது. காந்தி என்ற பெயரைக் கேட்டதும், மகாத்மா காந்தி தான் ஞாபகத்துக்கு வந்தாலும், இந்தக் காந்திகளும், சிறிதளவுக்கும் குறைவான தாக்கத்தைக் கொண்டிருக்கவில்லை. தற்போதைய நேரு - காந்தி பரம்பரையின் மூத்தவராக, மோதிலால் நேரு காணப்படுகிறார். இந்திய சுதந்திரப் போராட்ட இயக்கத்தின் அங்கமாக இருந்தவர். காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும் இருந்தவர். இவர் வழியில் போராடிய ஜவஹர்லால் நேரு, அதே காங்கிரஸின் தலைவராக இருந்ததோடு மாத்திரமல்லாது, பின்னர் சுதந்திர இந்தியாவின் முதலாவது பிரதமராகவும் மாறினார். இவரைத் தொடர்ந்து தான், நேர…

  18. காந்திய தேசத்திடம் அரசியல் தீர்வுக்காக கையேந்துவது எவ்வகையில் அறம்’ 45 Views தமிழ் அரசியல் தலைமைகள் காந்திய தேசத்திடம் அரசியல் தீர்வுக்காக கையேந்துவது எவ்வகையில் அறமாகும் என ஜனநாயக போராளிகள் கட்சி தெரிவித்துள்ளது. ஜனநாயக போராளிகள் கட்சியின் ஊடகப்பேச்சாளர் துளசி வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில், “உலகில் நடைபெற்ற அடக்கு முறைகளுக்கெதிரான அத்தனை போராட்டங்களும் வெற்றி பெற்றதின் பின்னர்தான் விடுதலைப் போராட்டமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அதுவரையில் அவ்வகையிலான போராட்டங்கள் தீவிரவாதம் என்றும் பயங்கரவாதம் என்றும் முத்திரை குத்தப்பட்டு இழிவுபடுத்தப்பட்டதே வரலாறு. இலங்கை சுதந்திரத்திற்கு பின்னர் ஆட்சியாளர்கள் தமது ஆட்சியுரிமையை தொட…

  19. காந்திய தேசத்திலிருந்து கிடைத்த உயிர்ப்பலிச் செய்தி மனிதாபிமானமுள்ள அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. தீவிரவாதம், மிதவாதம் என்பதற்கு அப்பால் காந்தீயவாதம் என்ற அஹிம்சாவழிக்கொள்கை சக்தியுடையதாகவும் உயிர்ச்சேதமற்றதாகவும் அனைவரும் விரும்பத்தக்கதாகவும் உள்ளது. ‘கோபம் வேண்டாம் - மன்னித்துவிடு’, ‘அஹிம்சையின் உன்னதம் அதனை அடையும்போது தெரியும்’ என்றெல்லாம் போதிக்கிறது காந்தீயவாதம். துப்பாக்கி முனையில் நிற்கும்போதும் மௌனம் ஆயிரம் மடங்கு பலத்தினைக் கொண்டிருக்கும் எனப் போதிக்கப்பட்டு காந்தீயவாதம் முளைவிட்டு உயிர்பெற்ற இந்திய தேசத்திலிருந்தா இச்செய்தி வந்திருக்கிறது என்பதை எண்ணுகையில் உள்ளம் பதைபதைக்கத்தான் செய்கிறது. ஆம்! இந்தியாவின் முன்னாள் பிரதமர் ரஜீவ் காந்த…

  20. கானல் நீராகியிருக்கும் கூட்டமைப்பின் நம்பிக்கை மழை விட்­டாலும் தூவானம் விட­வில்லை என்­பார்கள். அது­போல, உள்­ளூ­ராட்சி தேர்தல் முடிந்த பின்­னரும், தேர்தல் காலத்து, எதி­ர­ணிகள் மீதான கருத்து பரப்­பு­ரைகள் இன்னும் முடி­வ­டை­ய­வில்லை. கட்சி அர­சி­யலை முதன்­மைப்­ப­டுத்தும் போக்கில் தமிழ் அர­சி­யல்­வா­திகள் மிகவும் தீவி­ர­மாக ஈடு­பட்­டி­ருக்­கின்­றார்கள். உள்­ளூராட்சி சபை­க­ளுக்­கு­ரிய பிரச்­சி­னை­க­ளிலும் பார்க்க, தேசிய மட்­டத்­தி­லான பிரச்­சி­னை­களுக்கே இந்தத் தேர்­தலில் முக்­கி­யத்­துவம் அளிக்­கப்­பட்­டி­ருந்­தது. அதன் அடிப்­ப­டையில், இந்த கலப்பு தேர்தல் முறையில் முன்­னிலை பெற்­றி­ருந்த கட்­சி­களை முதன்­மைப்­ப­டுத்தும் போக்கில் இருந்து கட்சித் தலை­…

  21. சிறிலங்கா அரசாங்கம் கால காலமாக இலங்கை ஜனநாயக நாடு இங்கு வாழும் மக்கள் சுதந்திரமாக வாழ்கின்றனர் எனக் கூறி வந்தாலும், உண்மையாக நாட்டில் ஜனநாயகம் இல்லை என்று தான் அண்மைக் காலங்களாக இடம்பெற்றுவரும் நிகழ்வுகள் எடுத்துக்காட்டுகின்றன. ஜனநாயக நாடு எனில் அந்நாட்டில் வாழும் மக்கள் அங்கு சுதந்திரமாக கருத்துக்களை தெரிவிக்கவும், சுதந்திரமான முறையில் ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்களை மேற்கொள்ளவும் மற்றும் ஒன்று கூடுவதற்கான சுந்தந்திரம் வழங்கப்படும். ஆனால் சிறிலங்காவில் அப்படி ஒன்றும் நடப்பதாக தெரியவில்லை. குறிப்பாக தமிழ் மக்களுக்கு அவ்வாறான ஜனநாயக சுதந்திரத்தை வழங்க இந்த அரசு தயாராக இல்லை. காணமால் போனவர்களை கண்டுபிடித்து தருமாரு கோரி கொழும்பில் கனவயீர்ப்பு போராட்டம் ஒன்று நடத்தத் தி…

    • 0 replies
    • 619 views
  22. கானல் நீரில் தாகம் தீர்த்தல்! -நஜீப் பின் கபூர்- முதலில் 2025ம் புத்தாண்டுக்கான வாழ்த்துக்களை நமது வாசகர்களுக்கு கூறிக்கொண்டு கானல் நீரில் தாகம் தீர்த்தல் தொடர்பான கதையையும், கடந்து போன நூறு நாட்களில் நாட்டில் நடந்த மாற்றங்கள் பற்றியும் இங்கு பேசலாம் என்று எதிர்பார்க்கின்றோம். அதற்கு முன்னர் நாம் கடந்த ஆண்டில் துல்லியமாக வாசகர்களுக்கு வழங்கி இருந்த தகவல்களை மீண்டும் ஒரு தடவை நினைவுபடுத்த விரும்புகின்றோம். இதற்கு முன்னரும் இப்படியான வார்த்தைகளை நாம் உச்சரித்திருந்தாலும் அதனை கூறியது கூறலாக நமது வாசகர்கள் எடுத்துக் கொள்ளமாட்டார்கள் என்று நாம் நம்புகின்றோம். அனுரவுடன் மோதுவதாக இருந்தால் மெகா கூட்டணி போட்டுக் கொள்ளுங்கள் என்று எதிரணிகளுக்கு சொல்லி இருந்தோ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.