அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9225 topics in this forum
-
ஜேர்மனி ஹிட்லரை நம்ப ஆரம்பித்திருந்தது. அடாவடிக்காரர், போர்வெறி கொண்டவர் என்றெல்லாம் முணுமுணுப்புகள் காதில் விழுந்தாலும், ஹிட்லர் அவசியமானவர் என்று தான் தோன்றுகிறது. அங்கே தவறு செய்தார். இங்கே விதிகளை மீறினார் என்று அவ்வப்போது சுட்டிக்காட்டுகிறார்கள். இருக்கட்டுமே! யாருக்காக செய்கிறார் ஹிட்லர்? தனக்காகவா? தேசத்துக்காக தானே? தேசத்தின் முன்னேற்றத்திற்காக தானே? அவர் வெற்றி எமது வெற்றி அல்லவா? அவர் சறுக்கினால் ஜேர்மனி பின்னுக்குச் செல்லும் அல்லவா? கடந்த உலகப் போரில் பட்டது போதாதா? கடன்கள் போதாதா? ஹிட்லராக இருப்பதால் பிழைத்தோம். ஹிட்லர் அவர் பாதையில் செல்லட்டும். என்ன தான் ஆகிறது என்று பார்ப்போம். இதுவே ஹிட்லரின் ஆதரவாளர்களால் ஜேர்மனி மக்களுக்கு வைக்கப்பட்ட பிரச்சாரம். ஏ…
-
- 2 replies
- 1.1k views
-
-
தமிழ்த் தலைமைகளும், தேர்தலும் | கருத்தாடல் | Sivasubramaniam Jothilingam
-
- 0 replies
- 545 views
-
-
சிறீலங்கா அரசு மேற்கொண்ட இனஅழிப்புக்கு நீதி கேட்டு போராடும் தமிழ் இனத்தின் முக்கிய நகர்வுகள் புலம்பெயர் தேசங்களை மையமாகக் கொண்டே தற்போது இயங்குகின்றது. அதுவே சிறீலங்கா அரசுக்கு சவாலான விடயமும் கூட. மேற்குலக சமூகமும், அதனைச் சார்ந்த மனித உரிமை அமைப்புக்களும் அண்மைக் காலமாக சிறீலங்கா அரசு மீது மேற்கொண்டு வரும் அழுத்தங்கள் என்பது மிகப்பெரும் சவலாக எதிர் காலத்தில் மாற்றம் பெறும் என்பதை தற்போதைய சிறீலங்கா அரசு நன்கு அறியும். சுருக்கமாக கூறப்போனால், தற்போதைய சிறீலங்கா அரச தலைவர் கோத்தபாயா ராஜபக்சா நிம்மதியாக உறங்க முடியாத நிலை ஒன்றே மெல்ல மெல்ல உருவாகி வருகின்றது. சிறீலங்கா படை அதிகாரிகள் மீது அமெரிக்க அரசு கொண்டு வந்த பயணத்தடை ஒருபுறம் இருக்க, கடந்த மாதம் இடம்பெற்ற ம…
-
- 0 replies
- 685 views
-
-
கருணாவை பாராட்ட வேண்டும் எம்.எஸ்.எம். ஐயூப் / 2020 ஜூன் 24 தேசப்பற்று என்பது ஒரு வகையில் ஆச்சரியமானது. சிலவேளைகளில், அது மனிதனை இயங்கச் செய்கிறது. சிலவேளைகளில், அது அவ்வாறு செய்வதில்லை. சிலவேளைகளில், கிள்ளுவதுகூட ஒருவரை ஆவேசம் கொள்ளச் செய்யும். சிலவேளைகளில், அணுகுண்டு வெடித்தாலும் ஒருவரைத் தட்டி எழுப்பாது. கடந்த காலங்களில், தமிழ் அரசியல் கட்சிகள் சமஷ்டி முறை ஆட்சி வேண்டும் என்று கூறிய போதெல்லாம், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவைச் சேர்ந்த பலர், நாட்டைப் பிரிக்கப் போகிறார்கள் எனக் கூறி, துள்ளிக் குதித்தனர். ஆனால், முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தாம் ஆைனயிறவு இராணுவ முகாமில் 2,000 படையினரையும் கிளிநொச்சியில் 3,000 படையினரையும் கொன…
-
- 0 replies
- 772 views
-
-
சுமந்திரனுக்கு எதிரான உள்வீட்டுக் குத்து வெட்டுகள் புருஜோத்தமன் தங்கமயில் / 2020 ஜூன் 24 தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, என்றைக்கும் இல்லாதளவுக்கு விருப்பு வாக்குச் சண்டைகளால் அல்லாடிக் கொண்டிருக்கின்றது. வழக்கமாக எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்குப் பதில் சொல்வதிலேயே, கூட்டமைப்பின் வேட்பாளர்கள் அதிக கவனம் செலுத்துவார்கள். ஆனால், இம்முறை, ஒரே கட்சிக்குள் இருக்கும் சக வேட்பாளர்களின் குற்றச்சாட்டுகளுக்கும் குழிபறிப்புகளுக்கும் எதிராக நின்று, தேர்தல் வேலைகளைச் செய்ய வேண்டியிருக்கின்றது. கூட்டமைப்புக்குள், குறிப்பாக தமிழரசுக் கட்சிக்குள் வெற்றிக்காக ஓடும் எந்தவொரு வேட்பாளரும், இன்னொரு வேட்பாளரை நம்புவதற்குத் தயாராக இல்லை. தோற்பதற்காகவே களமிறக்கப்பட்ட வே…
-
- 0 replies
- 550 views
-
-
விளாதிமிர் புதின்: அசைக்க முடியாத இந்த ரஷ்யத் தலைவரை இப்போது உலகம் கவனிப்பது ஏன்? Getty Images விளாதிமிர் புதின் ``புதின் இல்லாமல், ரஷ்யா கிடையாது.'' ரஷ்யா அதிபரின் கிரெம்ளின் மாளிகை அலுவலர்களின் துணைத் தலைவருடைய கருத்து இது. பல தசாப்த காலங்களாக பிரதமர் அல்லது அதிபர் பொறுப்பில் அதிகாரத்தைக் கையாளும் பொறுப்புக்கு விளாதிமிர் புதினை தேர்ந்தெடுத்து வரும் பல மில்லியன் ரஷ்யர்களின் கருத்தும் இதுவாகத்தான் இருக்கிறது. இந்த நம்பிக்கை ஜூலை 1 ஆம் தேதி மீண்டும் புதுப்பிக்கப்படலாம். ரஷ்யாவில் அதிபர் பதவியில் இருப்பவர், மேலும் இரண்டு முறை தலா ஆறாண்டு காலம் பதவி வகிக்கும் வகையிலான சட்ட திருத்தத்திற்கான நாடுதழுவிய கருத்தறியும் வாக்கெடுப்பில் அது வெளிப்படும் என்று தெரிகிறது. …
-
- 1 reply
- 765 views
-
-
தங்கப் பாத்திரத்தில் பிச்சையெடுத்தல் “தேச பக்தி என்பது, அயோக்கியர்களின் கடைசிப் புகலிடம்” என்றார் சாமுவேல் ஜோன்ஸன். தேச பக்திக்கு சற்றும் குறைவில்லாத ஒன்றுதான் இனவாதம். இந்தத் தேர்தலில், சிறுபான்மை இன வேட்பாளர்களில் கணிசமானோரும், தமது வெற்றிக்காக இனவாதத்தைத் தூக்கிப் பிடிக்கத் தொடங்கியுள்ளனர். குறிப்பாக, தமிழர், முஸ்லிம் வேட்பாளர்களில் ஒரு தொகையினர், இனவாதச் சாக்கடைக்குள் முடியுமான அளவு உருண்டு, புரண்டு கொண்டிருப்பதைக் காணக்கூடியதாக உள்ளது. புலிகள் அமைப்பின் முன்னாள் தளபதி கருணா அம்மான் என்கிற முரளிதரன், இம்முறை பொதுத் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிடுகின்றார். அவர் தனது பிரசார மேடைகளிலெல்லாம், முஸ்லிம்களுக்கு எதிராகப் பேசி வருகின்றமையை அவதானிக்…
-
- 0 replies
- 515 views
-
-
தமிழ்_தேசிய_கூட்டமைப்பு திகாமடுல்ல_மாவட்ட_வேட்பாளர் கலாநிதி_எஸ்_கணேஷ்_அவர்கள்_பங்குபெறும் பாராளுமன்ற_திருப்பு_முனை - 2020
-
- 0 replies
- 398 views
-
-
கொரோனாக் காலத்தில் கூட்டமைப்புக்குள் அதிகரித்திருக்கும் மோதல்கள்? - நிலாந்தன் கோவிட் -19 கூட்டமைப்புக்கு ஒரு தீய விளைவை ஏற்படுத்தியிருக்கிறதா?ஒத்திவைக்கப்பட்ட தேர்தல் கட்சிக்குள் ஏற்கனவே புகைந்து கொண்டிருந்த உள் முரண்பாடுகளை பற்றி எரியச் செய்திருக்கிறது. சுமந்திரனும் தவராசாவும் பகிரங்கமாக ஊடகங்களில் மோதும் ஒரு நிலைமை தோன்றியிருக்கிறது. தவராசாவுக்கு முன்னரே சரவணபவனுக்கும் சுமந்திரனுக்கு இடையில் விரிசல் உண்டாக்கியது. ஏற்கனவே சரவணபவனுக்கும் தீவுப் பகுதியைச் சேர்ந்த ஒரு தொகுதி கட்சி உறுப்பினர்களுக்கும் நெருக்கம் அதிகம்.இதே உறுப்பினர்கள் புங்குடுதீவைச் சேர்ந்த தவராசாவுக்கும் நெருக்கம் .எனவே தவராசாவை சுமந்திரன் ப…
-
- 0 replies
- 666 views
-
-
கொவிட்-19 அனர்த்தத்துக்குப் பின்னரான அரசியலை எதிர்கொள்ளல் என்.கே. அஷோக்பரன் / 2020 ஜூன் 23 ராஜபக்ஷர்களின் இன்றைய அரசியல் என்பது, மிகத் தௌிவான சிங்கள-பௌத்த இனத் தேசியவாதத்தை, பெருந்திரள்வாத (populism) வாகனத்தில் ஏற்றிக்கொண்டுள்ள பெரும்பான்மையினத் தேசிய பெருந்திரள்வாத அரசியலாகும். ஏதோவோர் அடிப்படையில், தம்மை ஒரு மக்களாக அடையாளங்காணும் மனிதக் கூட்டமொன்றைத் தம்மில் வேறுபட்ட ‘மற்றையவர்களுக்கு’ எதிராக நிறுத்தும் சித்தாந்தமே, பெருந்திரள்வாதமாகும். பெருந்திரள்வாதத்தை வரையறுக்க முயலும் அல்பெடட்ஸியும் மக்டொன்னெலும், பெருந்திரள்வாதச் சிந்தாந்தம் என்பது, ஒன்றுபட்ட தன்மைகளையுடைய ஒரு மக்கள் கூட்டத்தை, அந்த இறைமையுள்ள மக்கள் கூட்டத்தின் அதிகாரங்கள், விழுமியங்கள், சௌபாக்…
-
- 0 replies
- 408 views
-
-
அன்புக்குரிய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனுக்கு! ஒருமுறை (2013) கிளிநொச்சியில் வட மாகாண சபையின் மரநடுகை நிகழ்வு இடம்பெற்றது. இதில் உரையாற்றிய தாங்கள், கோடாலிக்காம்பு பற்றிய கதை ஒன்றை கூறியிருந்ததை மறந்திருக்கமாட்டீர்கள். ஒரு காட்டில் உள்ள மரங்கள் எல்லாம் வெட்டப்பட்டதாகவும் அதற்கு கோடாலிக் காம்பாக மாறிய அந்தக் காட்டிலுள்ள மரம் ஒன்றே காரணம் என்றும் அந்தக் கதையை சொல்லி முடித்தீர்கள். அன்றைய முதல்வர் விக்னேஸ்வரனைக் குத்துவதற்கே அந்தக் கதையை சொன்னீர்கள். இப்போது கனகச்சிதமாக அந்தக் கதை உங்களுக்குத்தான் பொருந்துகின்றது. சில வருடங்கள் ஓடி மறைந்திருக்கின்ற இன்றைய நிலையில், இப்போது யார் கோடாலிக்காம்பு என்பதற்கான விடையும் கிடைத்திருக்கிறது. திரு. விக்னேஸ்வரன் அந்த…
-
- 1 reply
- 646 views
-
-
ராஜ்பக்ஷக்கள் தமது இரண்டாவது யுத்தத்திலும் வெற்றி பெறத் தொடங்கி விட்டார்களா? ராஜபக்ஷக்கள் தமது இரண்டாவது யுத்தத்திலும் வெற்றி பெறத் தொடங்கி விட்டார்களா? கொரோனா வைரஸ் குறித்த அச்சம் குறையத் தொடங்கி விட்டது. ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கைத்தீவில் இறப்பு விகிதம் குறைவானதே. நோய் பெருமளவுக்குக் கட்டுப்பாட்டுக்குள் வந்து விட்டதாகவே தோன்றுகிறது. பொதுவாகச் சொன்னால் நாட்டில் மக்கள் மத்தியில் வைரஸைப் பற்றிய பயம் தெளிந்து விட்டது. ராஜபக்ஷகளைப் பொறுத்தவரை இது ஒரு பெரிய வெற்றி. தமிழ்த் தரப்பினால் போர்க் குற்றம் சுமத்தப்பட்ட ஒரு தளபதியின் தலைமையில் பெருமளவிற்கு படைத்தரப்பு கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளில் முன்னணியில் நின்றது. அது காரணம…
-
- 0 replies
- 709 views
-
-
செக்கு மாடு ஊர் போய்ச் சேராது’ சமஷ்டி ஆட்சிமுறைமை உள்ளடங்காதவாறு, அரசமைப்பில் திருத்தம் செய்யப்பட்டு, அதனூடாகத் தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகள் தீர்க்கப்படும். சமஷ்டி ஆட்சி முறைமையின் கொள்கைகளை உள்ளடக்காத வகையிலும் எத்தரப்பினருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையிலும், அரசமைப்பில் திருத்தம் செய்யப்படும். தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளுக்கான தீர்வு, அரசியல் நோக்கங்களைப் பின்னணியாகக் கொண்டிராத வகையில் வழங்கப்படும். பொருளாதாரத்தை மேம்படுத்தினால், இனங்களுக்கிடையே எவ்வித முரண்பாடுகளும் தோற்றம் பெறாது என்பதே, அரசாங்கத்தின் கொள்கை ஆகும். இவ்வாறு நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்து உள்ளார். இவ்வாறாகக் கருத்துத் தெரிவிப்பவர்கள…
-
- 0 replies
- 724 views
-
-
சர்வதேசமே தீர்வையும் பெற்றுத்தர வேண்டும் இராணுவ ரீதியாக, சர்வதேசச் சமூகம் இலங்கைக்கு உதவவில்லை. சர்வதேச நாடுகள், தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பான உளவுத் தகவல்களை இலங்கை அரசாங்கத்துக்கு வழங்கியிருந்தன. அதுவே, புலிகளை பலவீனப்படுத்தியது. யுத்தத்தை நிறைவுக்குக் கொண்டுவரவதற்கு உதவிய சர்வதேசச் சமூகத்துக்கு, தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வைப் பெற்றுத்தரும் கடமையும் இருக்கிறது. அதற்கு, சர்வதேச சமூகம் முயற்சிக்க வேண்டும்” என்று, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். இராணுவ ரீதியாக சர்வதேசச் சமூகம் இலங்கைக்கு உதவவில்லை. சர்வதேச நாடுகள் தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பான உளவுத் தகவல்களை இலங்கை அரசாங்கத்துக்கு வழங்கியிருந்தது. அதுவே, புலி…
-
- 0 replies
- 655 views
-
-
முன்னாள் போராளிகளை மலினப்படுத்தும் தமிழ் கூட்டமைப்பு ஆதரவுப் ”புலிகள்” தாயகன் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனால் உருவாக்கப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கே இம்முறையும் தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டுமென முன்னாள் விடுதலைப்புலிப் போராளிகள் என்ற பெயரில் விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோள் தமிழ் மக்களையும் தமிழின உணர்வாளர்களையும் மாவீரர்,போராளிகள் குடும்பங்களையும் கடும் விசனமடைய வைத்துள்ளதுடன் விடுதலைப்புலிகளின் முன்னாள் போராளிகள் சார்பான கட்சிகள் மீது சந்தேகங்களையும் ஏற்படுத்தியுள்ளது. 2015 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலின் போது இவ்வாறானதொரு வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தால் கூட அது வரவேற்கப்பட்டிருக்கும். ஆனால் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ,அதன்…
-
- 0 replies
- 472 views
-
-
மாற்று தமிழ்த் தேசிய தரப்பினரது வெற்றியும் அதன் அரசியல் முக்கியத்துவமும்? - யதீந்திரா இம்முறை தேர்தலில் மாற்றம் ஏற்படலாம் என்பது பலருடைய எதிர்பார்ப்பு. இதுவரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே தமிழ் மக்களின் ஒரோயோரு தமிழ்த் தேசிய தலைமையாக இருந்தது. கூட்டமைப்பு ஒரணியாக நிற்க வேண்டும் – அதுதான் தமிழ் மக்களுக்கு நல்லதென்பது, பலரதும் கருத்தாக இருந்தது. அதே போன்று, தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகள் அணைத்தும் கூட்டமைப்பிற்குள் ஓரணியாக நிற்க வேண்டும் என்னும் அபிப்பிராயமும் பலரிடம் இருந்தது. ஆனால் நிலைமைகள் எதிர்பார்த்தது போன்று இருக்கவில்லை. அனைவரையும் அரவைணத்து, கூடுத் தலைமையொன்றை, வழங்கக் கூடிய ஆற்றல் கூட்டமைப்பிடம் இருந்திருக்கவில்லை. அனைவரும் ஓரணில் நிற்க வேண்டுமென்னும் எதிர…
-
- 0 replies
- 441 views
-
-
ஹக்கீம் ரணில் விக்கிரமசிங்கவின் முதுகில் குத்தினார்... ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் தவிசாளரும் முன்னாள் அமைச்சருமான பஷீர் சேகு தாவுத் கலந்துகொண்ட அதிகாரம்.
-
- 1 reply
- 612 views
-
-
இரண்டாம் உலகப்போரின் முன்னோடியாக ஹிட்லர் எவ்வாறு ஒஸ்ரியாவையும் செக்கோஸ்லாவாக்கியாவையும் யுத்தமின்றி அரசியல் நகர்வுகள் மூலம் தன் பிடிக்குகள் கொண்டு வந்தார் என்பது பற்றியும், மூனிச் உடன்படிக்கை பற்றியும், ஹிட்லரை பற்றிய சோவியத் யூனியனின் எச்சரிக்கையையும் மீறி பிரித்தானிய பிரதமராக அன்று இருந்த, நெவில் சாம்பர்லைன் போட்ட தப்புக்கணக்குகள் பற்றியும், பிரிட்டனையும் பிரான்சையும் ஏமாற்றி ஹிட்லர் தனது பலத்தை எவ்வாறு பெருக்கிக்கொண்டார் என்பதையும் இந்த பகுதி விளக்குகிறது. ஜப்பானுடன் ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்ட போதிலும் சீனாவுடனும் உறவை வளர்த்துக்கொண்டு தான் இருந்தார் ஹிட்லர். ஆட்டத்தை ஆரம்பிப்பதற்கு முன்னால் அணியை முடிந்தவரை பலப்படுத்த வேண்டும் என்பதால். ஜேர்மனிக்கும…
-
- 13 replies
- 1.6k views
-
-
யார் பக்கம் வீசும் அனுதாபக் காற்று ? -கபில் கொரோனாவினால் கொஞ்சம் பரபரப்பு அடங்கியிருந்த வடக்கு அரசியல் களம், இப்போது சூடுபிடிக்கத் தொடங்கி விட்டது. இந்தமுறை பொதுத் தேர்தலில் கட்சிகளுக்குக் கிடைக்கக் கூடிய ஆசனங்களின் எண்ணிக்கையை மதிப்பீடு செய்ய முடியாதளவுக்கு, போட்டிச் சூழல் தென்படுவதால், எல்லாக் கட்சிகளுமே, தமக்கும் ஆசனம் கிடைக்கும் என்ற கனவில் இருக்கின்றன. தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகள் தனித்தனியாக பிரிந்து போட்டியிடுகின்ற சூழல், ஆரோக்கியமற்றதாக கருதப்படுகின்ற போதும், இனி அது தவிர்க்க முடியாத ஒரு போராகவே மாறி விட்டது. இந்தநிலையில் ஒருவரை ஒருவர் எந்தளவுக்கு சேறடிக்க முடியுமோ அந்தளவுக்கு நாறடிக்கத் தயாராகி விட்டனர். வழக்கம் போலவே, ம…
-
- 0 replies
- 820 views
-
-
நடிகர்கள் எல்லாம் தலைவர்கள் ஆகிவிட்டனர், தலைவர்கள் எல்லாம் நடிகர்கள் ஆகிவிட்டனர் என்பது காசி ஆனந்தனின் பிரபல கவிதை வரிகள். இந்தியாவிலும் தமிழகத்திலும் நீண்ட கால மிதவாத அரசியல் காணப்படுகின்ற சூழலில் இது யதார்த்தமான வரிகள்தான். ஆனால் முள்ளிவாய்க்காலுக்குப் பிறகு தொடங்கிய மிதவாத அரசியலில், தமிழகத்தின் நடிகர் திலகங்களை மிஞ்சும் மகா நடிகர்கள் உருவாகியிருப்பது வியப்புத்தான். இன்னும் எத்தனை தசாவதாரங்களை காண நேரிடுமோ? மூச்சுக்கு முந்நூறு தரம் விடுதலைப் புலிகளைப் பற்றி பேசிவிட்டு, ரணில் ஒரு நரி, கருணாவை பிரித்து, எங்கள் மண்ணை சிதைப்பதில் பங்காற்றியவர் என்றும் ரணிலுக்கு வாக்களிப்பவர்கள் துரோகிகளே என்றும் பேசிவிட்டு தேர்தல் முடிந்த பின்னர், ரணில் முதுகை தடவிக் கொடுக்க சிரித்துக…
-
- 0 replies
- 1.6k views
-
-
‘நான் கிரிக்கெட் ஆடியமை ராஜதந்திரம்’ – சுமந்திரன் ‘எமது ஆயுத போராட்டம் ராஜதந்திரம்’ – ஜனநாயகப் போராளிகள் தமிழர் அரசியலில் ராஜதந்திரம் என்பதற்கான விளக்கங்கள் தலையைச் சுற்ற வைக்கின்றன. ராஜதந்திரத்தின் குருவான சாணக்கியன் இன்று உயிருடன் இருந்திருந்தால் ஓட்டைச் சிரட்டைக்குள் தண்ணீர் விட்டு அதற்குள் குதித்து உயிரை மாய்த்திருப்பார். ஒரு பிள்ளை பிறந்ததில் இருந்தே வாய்பேசாமிலிருந்தது. நீண்டகாலம் தவமிருந்து பெற்ற இந்தப் பிள்ளையின் வாயிலிருந்து என்றாவது ஒருநாள் அம்மா என்ற வார்த்தை வராதா என ஏங்கித் துடித்துக் கொண்டிருந்தாள் அன்னை. மீண்டும் ஆலயங்கள், தல விருட்சங்கள் எல்லாவற்றையும் சுற்றி வந்தாள். யார் யாரோ சொன்ன விரதங்கள் எல்லாவற்றையும் அனுஷ்டித்தாள். நம்பிக்கையை மட்டும…
-
- 0 replies
- 1.3k views
-
-
அமெரிக்காவை மிரட்டும் சீனா ட்ராகன்.! அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் கடந்த சில வருடங்களாகவே சண்டை நடந்து கொண்டு தான் இருக்கிறது. வர்த்தகப் போரில் தொடங்கிய பிரச்சனை, இப்போது வார்த்தைப் போர் வரை வந்து இருக்கிறது. எப்போது பார்த்தாலும், சர்வதேச அரங்கில். இரு நாடுகளும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டே தான் இருக்கிறார்கள். அமெரிக்கா எகிறும் போதெல்லாம், ஓரளவுக்காவது மெளனம் காக்கும் சீனா, இந்த முறை "திருப்பி அடிப்பேன் பாத்துக்க" என்கிற ரேஞ்சில் தெனாவெட்டாக பேசி இருக்கிறது. அப்படி என்ன பிரச்சனை..? உய்கர் (Uighur) இஸ்லாமியர்கள் சிங் ஜியாங் (Xinjiang) என்கிற பகுதியில் தான் இந்த உய்கர் இஸ்மாலிமியர்கள் வாழ்ந்து வருகிறார்கள். 1949-ம் ஆண்டு சீனா தன்னை சுதந்திர நா…
-
- 0 replies
- 708 views
-
-
ஈழத் தமிழர்களின் எழுபது ஆண்டுகால அரசியல் போராட்டத்தை அழிக்க மேற்குலகை நம்பிய இரு பிரதான சிங்களக் கட்சிகளும் இன்று பிளவுபட்டுக் கிடக்கும் அவலம் முஸ்லிம்களையும் வெளியேற்ற வேண்டும் என்ற கோசத்தோடும், தற்போதைய அரசியல் நகர்வுகள் 1 2 நிருபர் திருத்தியது ஆசிரியர் திருத்தியது உறுதிப்படுத்தப்படக்கூடியது ஆசிரியபீட அங்கீகாரம் மொழி திருத்திய பதிப்பு …
-
- 0 replies
- 803 views
-
-
-
தமிழ்த் தேசிய தேர்தல் களத்தில் ’இரட்டைக் குழல் துப்பாக்கி’ Johnsan Bastiampillai / 2020 ஜூன் 20 இது தேர்தல்க் காலம். தேர்தலில் போட்டியிடும் ஒவ்வொரு வேட்பாளரும், எவ்வாறு வாக்குகளை வாரி அள்ளிக் கொள்ளலாம் என்பதிலேயே, கவனம் செலுத்துவார். தேர்தல் அரசியலில், அதுதான் முக்கியமானதும் கூட! கட்சியொன்றிலோ, சுயேட்சையாகவோ தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவரைத் தெரிவு செய்யும் முகமாகப் புள்ளடி இடும், வாக்காளர் ஒருவர், அந்த வேட்பாளரைத் தெரிவு செய்வது, அறிந்தவர், தெரிந்தவர், ஊரவர் என்ற முட்டாள்தனமான காரணங்களைத் தவிர்த்து, 'எனதும் எனது சமூகத்தினதும் வாழ்க்கையைச் செழிக்கச் செய்வார்' என்ற எதிர்பார்ப்பாகும். ஒவ்வொரு வாக்காளனும் ஏதோவோர் எதிர்பார்ப்பின் நிமித்தம், தான் சிந்தி…
-
- 1 reply
- 567 views
-