அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9272 topics in this forum
-
21 MAY, 2025 | 03:30 PM ரொபட் அன்டனி தெலுங்கானா, ஆந்திரா, தமிழ்நாடு மற்றும் இலங்கை ஆகியவற்றுக்கு இடையில் ஒரு பொருளாதார வழித்தடம் உருவாக வேண்டியது அவசியமாகும். இலங்கை இந்தியாவுக்கு இடையிலான பாலம் அமைக்கப்படுவதை தற்போதைய அரசாங்கம் அதனை விரும்பவில்லை. ஆனால் பிராந்தியங்கள் மற்றும் நாடுகளுக்கு இடையில் தொடர்புகளை வலுப்படுத்தாமல் பொருளாதாரத்தில் முன்னேற முடியாது என்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். 2050ஆம் ஆண்டாகும்போது இந்தியா 30 ட்ரில்லியன் பொருளாதாரத்துடன் உலகில் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதாரமாக உருவெடுக்கும். அப்போது அந்த வளர்ச்சியில் பல்வேறு நாடுகள் நன்மை பெறும். இதற்காக நாம் என்ன செய்யப்போகின்றோம்? எமது தொடர்புகள் என்ன ? எவ்வாறான தொடர்புகளை மேற்கொ…
-
- 0 replies
- 302 views
- 1 follower
-
-
20 MAY, 2025 | 12:46 PM டி.பி.எஸ். ஜெயராஜ் ஐரோப்பாவில் வாழும் இலங்கை தமிழ் புலம்பெயர் சமூகத்தின் ஒரு பிரிவினர் மத்தியில் இன்றைய நாட்களில் பெரிதும் பேசப்படுபவராக தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தின் முன்னாள் புலனாய்வு தலைவரான 'பொட்டு அம்மான்' என்ற சண்முகநாதன் சிவசங்கர் விளங்குகிறார். பெரிதும் அஞ்சப்பட்ட புலிகளின் புலனாய்வு பிரிவின் தலைவர் போரின் இறுதிக்கட்டத்தில் 2009 மே மாதத்தில் இறந்துவிட்டார் என்ற போதிலும், ஐரோப்பாவில் இருக்கும் முன்னாள் விடுதலை புலிகள் இயக்க உறுப்பினர்களில் ஒரு குழுவினர் பொட்டு அம்மான் இன்னமும் உயிருடன் இருக்கிறார் என்றும் அவர் மீண்டும் வெளியில் வந்து இயக்கத்துக்கு புத்துயிரளித்து இலங்கை அரசுக்கு எதிரான ஆயுதப் போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுப்பார் என்ற…
-
-
- 3 replies
- 1k views
- 1 follower
-
-
வலிசுமந்த மாதத்தில் அம்பலமான தோழர்கள் -விதுரன் May 19, 2025 ஈழத் தமிழர்களின் இனவிடுதலை வரலாற்றில் மே மாதம் கண்ணீரால், தோய்ந்த, வலிகளும், காயங்களும் தாரளமாகவே நிறைந்ததொன்றாகும். 2009 மே இல் முள்ளிவாய்க்காலில் கட்டமைக் கப்பட்ட இனவழிப்பொன்று நிகழ்ந்தேறியது. ‘மனிதாபிமான நடவடிக்கை’ என்ற போர்வையில் மனித உரிமைகள், மனிதாபிமானச் சட்டங்கள் தாராளமாகவே மீறப்பட்டு முள்ளிவாய்க்காலில் மனிதப் பேரவலம் நிகழ்ந்தது. அதற்குப் பிறகு கடந்த 16வருடங்களாக பேரவலத்துக்கான நீதி கோரிய போராட்டமும் இனவிடுதலைக்கான பயணத்தில் பின்னிப்பிணை ந்து தொடர்கதையாக நீண்டு கொண்டிருக்கின்றது. தமிழின விடுதலைப்போராட்டம் ஆரம்பித்தகாலம் முதல், தாயகக் கோட்பாட்டிற்கும், அதிகாரப் பகிர்வுக்கும் ஆட்சியிலிருந்த சிங்கள, பௌத்த ம…
-
- 0 replies
- 338 views
-
-
பதினாறாவது மே பதினெட்டும் உள்ளூராட்சி சபைகளும் – நிலாந்தன். adminMay 18, 2025 ஆரியகுளம் சந்தியில் அமைக்கப்பட்டிருந்த வெசாக் பந்தல்களைப் பார்ப்பதற்கு ஒரு பகுதி தமிழர்கள் போனது உண்மை. புதுக்குடியிருப்பிலும் கிளிநொச்சியிலும் அமைக்கப்பட்டிருந்த வெசாக் அலங்காரங்களைப் பார்ப்பதற்கு ஒரு பகுதியினர் போனது உண்மை. புதுக்குடியிருப்பில் ஆயிரக்கணக்கில் போய் படைத்தரப்பு வழங்கிய குடிபானங்களையும் அன்னதானத்தையும் வாங்கியதும் உண்மை. அதேசமயம் கடந்த வாரம் தாயகம் முழுவதிலும் ஆங்காங்கே பரவலாக முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சி கொடுக்கப்படுவதும் உண்மை. மக்கள் பரவலாக அதை வாங்கி அருந்துவதும் உண்மை. இன்று முள்ளிவாய்க்காலில் பெருந்திரளாக மக்கள் திரள்வார்கள் என்பதும் உண்மை. ஒரு தேசம் என்பது அப்படித்தான…
-
- 0 replies
- 289 views
-
-
16ஆவது மே 18இல் நீதிக்கான போராட்டம் – நிலாந்தன். நீதி கிடைக்காத 16ஆவது ஆண்டு.கடந்த 16 ஆண்டுகளாக தமிழ் மக்கள் தங்களுடைய அரசியலை நீதிக்கான போராட்டம் என்று வர்ணிக்கின்றார்கள். ஆனால் நீதிக்கான தமிழ் மக்களின் போராட்டமானது தொடர்ச்சியானதாக, செறிவானதாக பெருந் திரள் மயப்பட்டதாக இல்லை.அவை அவ்வப்போது தொடர்ச்சியாக நிகழும் ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக, அடக்குமுறைகளுக்கு எதிராகக் கிளர்ந்தெழும் போராட்டங்களாகத்தான் காணப்படுகின்றன. கடந்த 16 ஆண்டுகளில் தொடர்ச்சியாகப் போராடிக் கொண்டிருப்பது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மட்டும்தான். அவர்களுடைய போராட்டம்தான் ஒப்பீட்டளவில் தொடர்ச்சியானது. கடந்த 16 ஆண்டுகளாக தமிழ் மக்கள் உலகின் கவனத்தை ஈர்க்கத்தக்க விதத்தில் தென்னிலங்கையில் தாக்கத்தை ஏற்…
-
- 1 reply
- 239 views
-
-
கார்ணியின் மந்திரிசபைசிவதாசன்கனடிய மத்திய அரசைக் கைப்பற்றி லிபரல் கட்சியின் தலைவர் கார்ணி மந்திரிசபையை இவ்வாரம் அறிவித்திருக்கிறார். அதில் இரு தமிழர்களுக்கு முக்கிய பதவிகள் வழங்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி. துர்ப்பாக்கியமாக அமைச்சர் கெரி ஆனந்தசங்கரியுடன் நான் எடுத்துக்கொண்ட படம் எதுவும் கைவசம் இல்லாமையால் அதை இக்கட்டுரையில் இணைத்துக்கொள்ள முடியவில்லை. தேர்தலுக்குப் பின் சற்றே ஒதுங்கியிருந்த முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் பொய்லியேவ் கார்ணியின் மந்திரிசபை அறிவிக்கப்பட்டதும் மீண்டும் முனக ஆரம்பித்திருப்பது பரிதாபமாகவிருக்கிறது. பாவம், பின்னாலிருந்து முதுகில் இடி விழுகிறது போல; ஏதாவது சொல்லியாகவேண்டும் என்பதற்காகச் சொல்கிறார் போலிருக்கிறது. “இந்த மந்திரிசபையில் பலர் ட்றூடோவின் அ…
-
- 0 replies
- 288 views
-
-
வடக்கு- கிழக்கில் உள்ளூராட்சித் தேர்தல் முடிவு கூறும் செய்தியும் தமிழ்த் தேசிய அரசியலின் எதிர்காலமும் தமிழ் மக்களின் இன்றைய நிலை – ஆட்சியாளரின் நிகழ்ச்சி நிரல் – எமது பலம் – சர்வதேச சக்திகளின் நிலைப்பாடும் – தீர்வுநோக்கி முன்னேறவுள்ள சாத்தியப்பாடுகள் – போன்றவற்றை மனம்விட்டு வெளிப்படையாகப் பேசி கூட்டு முடிவை எடுக்க தமிழரசும் காங்கிரசும் தயாராக வேண்டும். எனவே புதிய கூட்டிணைவு என்பது வெறுமனே சபைகளை கைப்பற்றுவதோடு நிற்க முடியாது. மாறாக தீர்வு நோக்கி ஒன்றுபட்டு செயற்படுவதற்கான பேச்சுவார்த்தைகளும் இடம்பெற வேண்டும் – தொடர வேண்டும். கலாநிதி க.சர்வேஸ்வரன் நடைபெற்று முடிந்த உள்ளூராட்சித் தேர்தலானது வெறுமனே உள்ளூராட்சிக்கான வினைத்திறன் மிக்க நிர்வாகத்தை நடத்தவல்ல வேட்பாளர்களைத் தெரி…
-
- 0 replies
- 403 views
-
-
சுமந்திரன் சென்ற கூட்டத்தில் கூச்சல் குழப்பம்! வெளியான பகீர் வீடியோ. கட்சியில் வெற்றி பெற்றவர்களும் வாக்காளர்களும் விரும்பியவர்களை விட சுமந்திரனின் ஆதரவாளர்களை பதவியில் அமர்த்த முற்பட்டவேளை கூட்டம் நுச்சல் குழப்பமாக இருந்தது.
-
-
- 25 replies
- 1.5k views
- 3 followers
-
-
எப்படி போர் நிறுத்தம் ஏற்பட்டது? -ச.அருணாசலம் அமெரிக்காவின் நிர்பந்தமா? பாகிஸ்தான் பின்னணியில் சீனா இருந்ததால் ஏற்பட்ட தயக்கமா? நமது ரபேல் ராணுவ விமானங்களை சீனாவின் PL-15E ஐ பயன்படுத்தி பாகிஸ்தான் முறியடித்ததால், சீனாவின் ஆயுத வியாபாரத்திற்கு சர்வதேச மவுசு ஏற்பட்டுவிடக் கூடாது என்ற அமெரிக்காவின் பதட்டமா..? ஒரு அலசல்; பெஹல்காம் படுகொலையைத்தொடர்ந்து, இந்திய அரசு , பாகிஸ்த்தான் நாட்டில் ஒன்பது இடங்களை குறி வைத்து தாக்கி தாக்குதலை (போரை) தொடங்கி வைத்தது. அண்டை நாட்டு மீதான இத்தாக்குதலை இந்தியா ‘ஆபரேஷன் சிந்தூர்’ என அழைத்தாலும், இது ஒரு மட்டுபடுத்தப்பட்ட, பொறுப்பான, அளவான, பிரச்சினையை விரிவாக்காத தாக்குதல் என இந்திய அரசு வருணித்தது! இத்தாக்குதல் பாகிஸ்த்தான் இராணுவத்தின் மீ…
-
- 0 replies
- 456 views
-
-
“சேர்ந்து இயங்க வேண்டிய நேரம் ; காலம்” ? - நிலாந்தன் உள்ளூராட்சி சபைத் தேர்தல் முடிவுகள் கிடைத்த பின் முல்லைத்தீவில் இருந்து ஒரு தமிழரசுக் கட்சியின் ஆதரவாளர் முகநூலில் பின்வருமாறு எழுதினார்… “முல்லைத்தீவு ரவிகரனோடு, கிளிநொச்சி சிறீயரோடு” என்று. அதற்கு கிளிநொச்சியைச் சேர்ந்தவரும் முன்பு பிரதேச சபை உறுப்பினராக இருந்தவரும், இப்பொழுது சுமந்திரனின் தீவிர விசுவாசியுமான ஒருவர் பதில் எழுதினார் “யாழ்ப்பாணம் சுமந்திரனோடு” என்று. இது ஒரு சமூக வலைத்தளக் காட்சி. இரண்டாவது காட்சி, தேர்தல் வெற்றிகள் பின் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த சுமந்திரன், “தமிழரசுக் கட்சி பலவீனமடையவில்லை. தமிழ்த் தேசியக் கூடடமைப்பாக சேர்ந்து இருந்ததைவிட தற்போது தனியாக பலமாக வெளிவந்திருக்கிறது” என்று கூறிய…
-
- 1 reply
- 336 views
-
-
உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்குப் பின்னரான சிந்தனைகள் – நிலாந்தன். எதிர்பாக்கப்பட்டதைப் போலவே உள்ளூராட்சி சபைகளில் தமிழரசுக் கட்சி ஒப்பீட்டளவில் அதிக ஆசனங்களைப் பெற்றிருக்கின்றது. அறுதிப் பெரும்பான்மை இல்லாத சபைகளில், தமிழ்த் தேசியக் கட்சிகள் தங்களுக்கிடையே இணங்கிச் செயற்படத் தயாராக இருந்தால் சபைகளை வெற்றிகரமாக நிர்வகிக்க முடியும். எனவே தேர்தலுக்குப் பின்னரான தமிழ்த் தேசிய அரசியல் சூழலில் கட்சிகள் பின்வரும் முடிவுகளை எடுக்க வேண்டியிருக்கும். எனது கட்டுரைகளில் நான் திரும்பத் திரும்ப கூறுவது போல, உள்ளூராட்சி சபைகள் உள்ளூர் நிலைமைகளுக்கானவை என்ற போதிலும் அவை தேசத்தைக் கட்டியெழுப்பும் அரசியல் வழியில் அடிப்படையானவை. கீழிருந்து மேல் நோக்கித்தான் தேசத்தைக் கட்டியெழுப்பலாம். அந்த அ…
-
- 0 replies
- 259 views
-
-
Published By: DIGITAL DESK 2 08 MAY, 2025 | 10:04 AM டி.பி.எஸ். ஜெயராஜ் இலங்கை தமிழ் அரசியல் களத்தில் தலைமைத்துவம் தொடர்பான அக்கறைகள் அண்மைக்காலமாக உத்வேகம் பெறும் முக்கியமான ஒரு பிரச்சினையாக இருக்கிறது. தற்போதைய தமிழ் அரசியல்வாதிகள் மத்தியில் யார் எதிர்கால தமிழ் அரசியல் தலைவராக மேன்மைப்படுத்தக்கூடியவராக இருப்பார் என்பது உள்ளூராட்சி தேர்தல்களுக்கு பிறகு விவாதத்துக்குரிய ஒரு விடயமாக இருக்கும். வெவ்வேறு காலப்பகுதிகளில் வெவ்வேறு கட்டங்களில் செல்வாக்குமிக்க தலைவர்கள் வெளிக்கிளம்பி ஆதிக்கம் செய்த தோற்றப்பாடு இலங்கை தமிழ் அரசியல் வரலாற்றின் எடுத்துக்காட்டான ஒரு அம்சமாகும். பொன்னம்பலம் சகோதரர்கள் இராமநாதனும் அருணாச்சலமும், அருணாச்சலம் மகாதேவா , ஜீ.ஜீ. பொன்னம்பலம், எஸ்.ஜே.வி…
-
-
- 6 replies
- 727 views
- 2 followers
-
-
அலசல்: கார்ணி – ட்றம்ப் சந்திப்புசிவதாசன்கனடிய பிரதமர் கார்ணியின் அமெரிக்க ஜனாதிபதியுடனான முதல் சந்திப்பு நேற்று நடந்தது. யூக்கிரெய்ன் அதிபர் செலென்ஸ்கியின் சந்திப்பைப்போல இதுவும் வெடித்துச் சிதறுமோ என ஐயப்பட்ட சிலருக்கு ஆறுதல். செலென்ஸ்கி சந்திப்பின் பின்னர் தேனீர் கூட் வழங்காமல் அவமதித்து அனுப்பியமைக்கும் கார்ணியின் சந்திப்பின் பின்னர் வெள்ளை மாளிகையில் விருந்து வைத்து அனுப்பியமைக்குமுள்ள வித்தியாசம்?: கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு! பாவம் செலென்ஸ்கி வைத்துக்கொண்டு வஞ்சகம் செய்யவில்லை. ட்றம்ப் கார்ணியை உபசரித்து அனுப்பியமை ட்றூடோ, செலென்ஸ்கி உட்படப் பலருக்கு பாடம் புகட்டுவதற்காகவும் இருக்கலாம். இதைத் திட்டமிட்டுச் செய்யக்கூடியவர் ட்றம்ப். இரண்டாம் ஆட்சியில் ட்றம…
-
- 0 replies
- 285 views
-
-
-ஐ.வி.மகாசேனன்- ஜே.வி.பி. பரிமாணமாகிய தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஜனரஞ்சக அரசியலின் தேர்தல் யுக்திகள் தொடர்பிலான விமர்சனங்கள் அரசியல் அவதானிகளால் சுட்டிக்காட்டப்படுகின்றது. குறிப்பாக ஆட்சியதிகாரத்தை கைப்பற்றுவதற்கு முன்னரான ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல் பிரசாரங்களில் அதிகளவில் வாக்குறுதிகளை வழங்கினார்கள். அதன் செயலாக்க தன்மைகள் தொடர்பில் சமகாலத்தில் அரசாங்கம் மீது குற்றச்சாட்டுகள் நிறைந்துள்ளன. இந்த பின்னணியில் உள்ளூராட்சி சபைத் தேர்தல் பிரசாரங்களில் கடந்த காலங்களை இருண்ட காலமாகவும், பழையவர்களை சாத்தான்களாகவும் சித்தரித்து, தங்களை புறக்கணிப்பதனூடாக பழைய இருண்ட காலத்திற்குள் சாத்தானின் பிடிக்குள் செல்வீர்களென்ற எச்சரிக்கை அச்சுறுத்தல்களை முன்வைக்கின்றார்க…
-
- 0 replies
- 334 views
- 1 follower
-
-
ந.ஜெயகாந்தன் கிராமங்களை அபிவிருத்தி செய்யும் உள்ளுராட்சி சபைகளுக்கு தமது பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்கான தேர்தலுக்கு இன்னும் சில தினங்களே உள்ளன. இந்தத் தேர்தலில் எவ்வாறு வாக்களிப்பது என்றும், அந்த வாக்குகள் எவ்வாறு எண்ணப்படும் என்றும் மக்கள் தெளிவாக புரிந்துகொள்ள வேண்டியது அவசியமாகும். ஜனாதிபதி மற்றும் பாராளுமன்றத் தேர்தல் முறைமைகளை விடவும் உள்ளூராட்சித் தேர்தல் முறைமை முற்றிலும் வித்தியாசமானது என்பதனால் வாக்களிக்க முன்னர் மக்கள் இது தொடர்பில் தெளிவாக அறிந்துகொள்ள வேண்டியுள்ளது. அதாவது ஜனாதிபதித் தேர்தல் முழுநாடும் ஒரே தேர்தல் மாவட்டம் போன்று கணிக்கப்பட்டு வெற்றி பெற்றவர் தீர்மானிக்கப்படுவர். அதேபோன்று பாராளுமன்றத் தேர்தல் விகிதாசார அடிப்படையில் 22 தேர்தல் மாவட்டங்களில…
-
- 0 replies
- 284 views
- 1 follower
-
-
ஈழத் தமிழர்களும் அவர்கள் இருப்பும்- பா.உதயன் உலகத்தில் திருடர்கள் சரி பாதி ஊமைகள் குருடர்கள் அதில் பாதி பெளத்த மத முன்னுருமை சிந்தனையில் இருந்து மாறுவதோ அல்லது தமிழர் பிரச்சினைக்கான நியாயமான தீர்வை வழங்க வேண்டும் என்றோ இது வரை அனுரா அரசு முயற்சிற்ததாகவும் இல்லை இவை பற்றி எதுகும் தமிழர் தரப்புடன் பேசியதாகவும் இல்லை. அது வேண்டுமா உங்களுக்கு இது வேண்டுமா என்று அனுரா கேட்க்கிறாரே தவிர தமிழருக்கு எதை கொடுக்க வேண்டும் அவர்கள் இதுவரை எதற்காக போராடினார்கள் எத்தனை துயரம் எத்தனை உயிர் தியாகம் செய்தார்கள் எத்தனை தம் உறவுகளை இழந்தார்கள் என்று கூட ஒரு போராடத்தின் பாதையில் இருந்து வந்து ஆட்சி அமைத்தவர்களுக்கு புரியாமல் இருப்பது வேதனை தான். தமிழர்களின் அரசியல் தீர்வு, முள்ளிவாய்க…
-
- 0 replies
- 283 views
-
-
யாருக்கு வாக்களிப்பது? -நிலாந்தன்.- தேசிய மக்கள் சக்தியின் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களும் போதும் தேசிய மக்கள் சக்தியை யாழ்ப்பாணத்தில் தோற்கடிப்பதற்கு. “இளங்குமரன் என்ன கதைக்கிறார் என்பது மற்றவர்களுக்கும் விளங்குவதில்லை அவருக்கு விளங்குவதில்லை” என்று சுமந்திரன் அண்மையில் தெரிவித்திருந்தார்.அது உண்மை. அவருக்கு தமிழும் சரியாக வருவதில்லை தகவல்களும் சரியாகத் தெரிவதில்லை. கதைக்கின்ற பாணியும் ஒரு தினுசானது.அடிக்கடி ஊடகங்களில் அவர் மீம்ஸ் ஆக்கப்படுகிறார். அவருடைய ஆகப்பிந்திய மீம்ஸ் “யாழ்ப்பாணம் தெல்லிப்பளைக்குள் இருக்கிறது” என்பதாகும். மற்றவர் ரஜீவன். இவர் இளங்குமரன் அளவுக்கு வாயைக் கொடுத்து மாட்டிக் கொள்வதில்லை. அவர் முன்பு சுமந்திரனுக்கு நெருக்கமாக இருந்தவர். ஜனாதிபதித் …
-
- 0 replies
- 320 views
-
-
மீன் சட்டிக்குள்ளேயே இருக்கட்டும் அடுப்புக்குள் விழக் கூடாது - நிலாந்தன் உப்புக்குத் தட்டுப்பாடு. ஒரு கிலோ உப்பு பக்கெட் 300ரூபாய்க்கு மேல் போகிறது. இத்தனைக்கும் இலங்கை ஒரு தீவு. சுத்திவர உப்புக்கடல். ஆனால் தேசிய மக்கள் சக்தியின் உள்ளூராட்சி சபை பிரச்சாரத்திற்கு அள்ளிக் கொட்டுவதற்கு தாராளமாக நிதி இருக்கிறது. தமிழ்ப் பகுதிகளில் பிரமாண்டமான கூட்டங்களை சிறீதரன் ஒருவரைத் தவிர தேசிய மக்கள் சக்திதான் ஒழுங்குபடுத்துகின்றது. கிராமங்களிலும் நகரங்களிலும் அவர்கள் தமது இருப்பை காட்சிப்படுத்தும் விதத்தில் தமிழ்க் கட்சிகளிடம் இல்லாத ஓர் உத்தியைப் பயன்படுத்துகிறார்கள். பூட்டிக் கிடக்கும் ஒரு கடை அல்லது ஒரு மண்டபம் அல்லது ஒரு முழிப்பான இடம் போன்றவற்றில் கவிழ்த்து விடப்பட்ட பானா வடியில…
-
- 1 reply
- 472 views
-
-
கனடிய தேர்தல்: ஒரு போஸ்ட் மோட்டம் சிவதாசன்எதிர்பார்த்தபடியே லிபரல் கட்சி வெற்றீவாகை சூடியிருக்கிறது. அறுதிப் பெரும்பான்மை இல்லாவிடினும் இவ்வெற்றி மகத்தானது. நான்காவது தடவையாக அது ஆட்சியமைக்கப்போகிறது. இத் தேர்தலில் பல திருப்பங்கள், அதிர்ச்சிகள் எதிர்பாராதவாறு கிடைத்திருக்கின்றன. பிரதான எதிர்க்கட்சியான கன்சர்வேட்டிவ் தலைவர் பியர் பொய்லியேவ் , கடந்த 20 வருடங்களாகக் கட்டிக் காத்து வந்த தொகுதியை இழந்திருக்கிறார். அது போலவே என்.டி.பி. கட்சித் தலைவர் ஜக்மீத் சிங்கும் தனது தொகுதியை இழந்திருக்கிறார். ட்றம்ப் என்ற புயல் வந்து இவர்களை ஒதுக்கியிருக்கிறது. லிபரல் கட்சியின் தலைவர் மார்க் கார்ணி முன் பின் எதுவித அரசியல் அனுபவமுமில்லாதவர். கனடிய மக்கள் அவரிடம் ஒரு பெரிய பொறுப்பைக் கொடுத…
-
-
- 12 replies
- 847 views
-
-
க.சர்வேஸ்வரன் ஆசியாவின் சுவிஸ்சர்லாந்து என அழைக்கப்படும் காஷ்மீர் பள்ளத்தாக்கு சுற்றுலாப் பிரதேசமான பகங்காமின் கடந்த செவ்வாய்கிழமை லஷ்கர் இ தொய்பா என்ற காஷ்மீர் தீவிரவாத அமைப்பு 26 சுற்றுலாக்காரர்களை சுட்டுக்கொண்டுள்ளது. இது இந்தியா முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. காஷ்மீர் விடயத்தில் இந்தியா சுதந்திரமடைந்த நாளிலிருந்து (75 ஆண்டுகளாக) மோதல் நிலவி வருவது உலகறிந்த விடயம். காஷ்மீர் விடுதலை போரும் பல ஆயுதப் போராட்ட அமைப்புகளுக்கு பாகிஸ்தான் 75 ஆண்டுகாலமாக பயிற்சிகள் வழங்கி இந்தியாவிற்குள் அனுப்பி பல்வேறு காலகட்டங்களில் பெரியதும் சிறியதுமான தாக்குதல்களை நடத்தி வருவதும் இந்தியா பதில் நடவடிக்கைகள் எடுத்து வருவதும் அனைவரும் அறிந்ததே. மேற்கண்ட பாகிஸ்தான் பயிற்சியளித்து அனு…
-
- 0 replies
- 318 views
- 1 follower
-
-
"தந்தை செல்வாவின் அரசியல் அணுகுமுறையும் அவரின் சொந்தக் குணாதிசயமும் ஒன்றாகவே இருந்தது. அவர் ஒத்து ஓடுகின்றவர் அல்லர். அதாவது அடம்பன்கொடி திரண்டு இருக்க வேண்டும் என்பதற்காகச் சேரக் கூடாதவர்களோடு சேருபவர் அல்லர்." - இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நிறுவுநர் தந்தை செல்வாவின் 47 ஆவது நினைவேந்தல் நிகழ்வு திருகோணமலை இந்து கலாசார மண்டபத்தில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்றது. இந்த நிகழ்வில் சுமந்திரன் எம்.பி. உரையாற்றும்போதே மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், "தந்தை செல்வநாயகம் சென்தோமஸ் கல்லூரியில் கற்பிக்கும் வேளையிலே சகோதரனின் உடல்நிலை கருதி விடுமுறை கோரியபோது…
-
-
- 8 replies
- 709 views
-
-
கவனம் : பொய் வாக்குறுதிகளுடம் தகுதியற்ற வேட்பாளர்கள்! May 1, 2025 — கருணாகரன் — இது தேர்தற்காலம். உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தற் பரப்புரைகள் நாடு முழுவதிலும் நடக்கிறது. பல்வேறு கட்சிகளும் சுயேச்சைக் குழுக்களும் தேர்தற் பரப்புரைகளில் முழுமூச்சாக ஈடுபடுகின்றன. ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்கள் முதற்கொண்டு கட்சித் தலைவர்கள், உறுப்பினர்கள், தொண்டர்கள், ஆதரவாளர்கள் என எல்லோரும் நகரங்கள், கிராமங்கள் என்ற வேறுபாடில்லாமல் எல்லா இடங்களுக்கும் சென்று நிற்கிறார்கள். தேர்தற் களப்பணியை ஆற்றுகிறார்கள். இதைப்போல இவர்களெல்லாம் தேர்தலுக்குப் பிறகும் வந்து மக்களைச் சந்திக்க வேண்டும். மக்களுக்குப் பணிகளைச் செய்ய வேண்டும் என்று மக்கள் பேசுவதைக் கேட்க முடிகிறது. மக்களுடைய நியாயமான எதிர்பார்ப்…
-
- 1 reply
- 328 views
-
-
உள்ளூராட்சி தேர்தல்களும் மக்களின் மனநிலையும் Veeragathy Thanabalasingham on April 29, 2025 Photo, @anuradisanayake உள்ளூராட்சி தேர்தல்களுக்கு இன்னமும் எட்டு தினங்கள் இருக்கின்றன. ஏழு மாதகால இடைவெளியில் மூன்றாவது தேர்தலை எதிர்கொள்வதனால் போலும் மக்கள் மத்தியில் பெரிய உற்சாகத்தைக் காணமுடியவில்லை. கடந்த வருடத்தைய ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பில் கலந்துகொண்டவர்களை விடவும் குறைவான தொகையினரே நாடாளுமன்ற தேர்தலில் வாக்களித்தார்கள். உள்ளூராட்சி தேர்தல்களில் மேலும் குறைவான எண்ணிக்கையில் மக்கள் வாக்களிப்பில் கலந்துகொள்ளக்கூடிய சாத்தியமே இருக்கிறது. மக்களின் மனநிலைக்கு அப்பால் நாடடின் தற்போதைய மிகவும் கடுமையான வெப்பநிலையும் கூட இதற்கு பெருமளவில் பங்களிப்புச் செய்யக்கூடும். ஆளும் தேசி…
-
- 0 replies
- 299 views
-
-
உலக அரசியல் ஒழுங்கை கையாளும் கொழும்பின் உத்தி – மக்கள் இயக்கதின் அவசியம் May 2, 2025 11:09 am ‘தர்மத்தின் வாழ்வுதனைச் சூது கவ்வும் மீண்டும் தர்மமே வெல்லும்’ என்பதற்கு அமைய ஈழத்தமிழர் தேசியப் பிரச்சினைக்கான அரசியற் தீர்வு காணும் சுயநிர்ணய உரிமைப் பயணத்தில் முதற்பாதி நடந்து முடிந்து விட்டது. சூது காவலுக்கு ஐரோப்பிய காலனித்துவம், குறிப்பாகப் பிரித்தானிய காலனித்துவம், அதன் தொடர்ச்சியாக நவகாலனித்துவமாக அமெரிக்காவுக்குக் கைமாறிய இரு துருவ, ஒரு துருவ உலக வல்லாதிக்க அரசியல் மட்டும் மூல காரணமல்ல. இந்தியத் துணைக் கண்டத்தில் மேலெழுந்துள்ள பிராந்திய மேலாதிக்கமும் முக்கியமான ஒரு காரணி. ஈழத்தமிழர்களின் உரிமைப் போராட்டம் இலங்கை ஒற்றையாட்சி அரசின் இன அழிப்புப் போர் மூலம் அழிக்கப்படுவதற்…
-
- 0 replies
- 192 views
-
-
நீலமானின் மாயப்பொதிகள் நீலனும் ஜி.எல்.பீரிஸும் 1995ம் ஆண்டு கொண்டுவந்த தீர்வுப் பொதியானது (அரசமைப்பு திருத்த வரைபுகள்) பல்வேறு மாறுதல்கள், சுரண்டல்களுக்கு உட்பட்டு சந்திரிக்கா மாமியின் ஆட்சிக்காலத்தில் மொத்தம் நான்கு விருத்துக்களான (Version) தீர்வுப்பொதிகளாக (1995, 1996, 1997, 2000 முறையே), பல்வேறு காலகட்ட சிங்களப் படைத்துறையின் சமர்க்கள முன்னேற்றங்களுக்கு ஏற்ப, கொண்டுவரப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. அஃது முதன் முதலில் ஓகஸ்ட் 3 1995 அன்று சிறிலங்கா அதிபர் சந்திரிக்கா குமாரதுங்கவால் முன்மொழியப்பட்டது. (முன்மொழிவு) எவ்வாறெயினும் இது தனது மெய்யான முன்மொழியப்பட்ட மிளிர்வில் நாடாளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்படவில்லை. பல சுரண்டல்களுக்கு உட்பட்டு அதனது தொடக்கப் பொலிவான …
-
-
- 134 replies
- 6.2k views
- 2 followers
-