அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9225 topics in this forum
-
தகவல் இருந்தும் ஏன் தடுக்க முடியவில்லை? எம்.எஸ்.எம். ஐயூப் / 2019 ஏப்ரல் 24 புதன்கிழமை, மு.ப. 11:09 Comments - 0 கடந்த 21 ஆம் திகதி, உலகெங்கும் கிறிஸ்தவர்கள், இயேசு நாதரின் உயிர்த்த ஞாயிறு தினத்தை முன்னிட்டு, தேவாலயங்களில் வழிபாடுகளில் ஈடுபட்டுக் கொண்டு இருக்கும் போது, கொழும்பிலும் நீர்கொழும்பிலும் மட்டக்களப்பிலும் உள்ள மூன்று பிரதான தேவாலயங்களிலும் கொழும்பில் மூன்று ஹோட்டல்களிலும் இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்கள், இந்நாட்டு முஸ்லிம்களை, குறிப்பாக உலகெங்கிலும் வாழும் முஸ்லிம்களைப் பொதுவாகவும் தலைகுனிய வைத்துவிட்டன. இந்தத் தாக்குதல்களில் இதுவரை மொத்தம் 320க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர்; 500க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களில…
-
- 0 replies
- 800 views
-
-
எது தமிழ்த் தரப்பு? நிலாந்தன். என்பிபியின் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரும் வெளிவிவகார இணை அமைச்சரமாகிய அருண் ஹேமச்சந்திர வீரகேசரி யூரியூப் சனலுக்கு வழங்கிய நேர்காணலில்,ஓரிடத்தில் தமிழ்த் தரப்பு என்ற வார்த்தை தொடர்பாக கேள்வி எழுப்புகிறார். அவர் அங்கே என்ன கூற வருகிறார் என்றால், இப்பொழுது வடக்கு கிழக்கில் இருந்து ஏழு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்தில் உண்டு. வடக்கு கிழக்குக்கு வெளியேயும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உண்டு. எனவே தமிழ்த் தரப்பு என்பது இப்பொழுது தமிழ் தேசியத் தரப்புமட்டும் அல்ல என்பதுதான். அரசாங்கத்தில் உள்ள தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களில் குறிப்பாக வடக்குக் கிழக்கில் இருந்து தேர்வு செய்யப்பட்டவர்களில் ஜேவிபியின் நீண்ட கால உறுப்…
-
- 0 replies
- 272 views
-
-
ஊர் யாரோடு? நிலாந்தன். பிரதமர் ஹரினி மாவிட்ட புரம் கந்தசாமி கோவிலுக்கு வருகை தந்துள்ளார்.50 ஆண்டுகளுக்குப் பின் நடந்த கும்பாபிஷேக வைபவத்தில் அவர் விருந்தினராக வரவேற்கப்பட்டுள்ளார். அங்கே தமிழ்த்தேசிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் யாரையும் காண முடியவில்லை. மாவிட்டபுரம் கந்தசாமி கோவிலுக்குத் தமிழ் மக்களின் போராட்டத்தில் ஒரு வரலாற்று முக்கியத்துவம் உண்டு. 1968 ஜூன் மாதம் சாதி ஒடுக்குமுறைக்கு எதிராக தாழ்த்தப்பட்ட மக்கள் போராடி வெற்றி பெற்ற கோவில் அது. அந்தப் போராட்டத்திற்கு கலாநிதி சண்முகதாசன் தலைமையிலான சீன சார்பு கொம்யூனிஸ்ட் கட்சி தலைமை தாங்கியது;வெற்றி பெற்றது. ஆனால் இங்குள்ள முரண் என்னவென்றால் அந்தப் போராட்டத்தில் கொம்யூனிஸ்ட் கட்சி போராடும் தரப்பின் பக்கம் நின்று தலைமை தாங்க…
-
- 0 replies
- 233 views
-
-
மே 19இல் பிரபாகரன் உயிருடன் இருந்தார் என்றால் அவர் இறந்தது எப்படி? கேள்வி எழுப்புமா கூட்டமைப்பு? - யதீந்திரா படம் | AFP PHOTO/ Ishara S. KODIKARA, GETTY IMAGES சில வாரங்களுக்கு முன்னர் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய தேசிய அரசாங்கத்தின் அமைச்சர் சரத்பொன்சேகா, யுத்தம் நிறைவுற்றதாக அறிவிக்கப்பட்ட மே 19 அன்று, பிரபாகரன் உயிருடன் இருந்ததாக தெரிவித்திருக்கின்றார். 2009இல் யுத்தம் முடிவடைந்ததைத் தொடர்ந்து அதுவரை ராஜபக்ஷாக்களின் உற்ற நண்பராக இருந்த பொன்சேகாவிற்கும் கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் இடையில் முரண்பாடுகள் ஏற்பட்டது. அதிகாரத்தை அனுபவிப்பவர்கள் அவ் அதிகாரத்தை தீர்மானிப்பவர்களுடன் முரண்பட்டால், அதன் விளைவு என்னவாக இருக்கும் என்பதை பொன்சேகாவும் அனுபவிக்க நேர்ந…
-
- 0 replies
- 650 views
-
-
பொறுப்பை மறந்தால் முழு நாட்டையும் வைரஸ் தாக்கும் எம்.எஸ்.எம். ஐயூப் கொவிட்-19 எனப்படும், தற்போது உலகை உலுக்கும் நோயின் மரண வீதம், ஆபிரிக்காக் கண்டத்தின் சில நாடுகளில், கடந்த சில வருடங்களுக்கு முன்னர் பரவிய, ‘எபோலா’ எனப்படும் நோயின் மரண வீதத்தைப் பார்க்கிலும், மிகவும் குறைவானதாகும். ‘எபோலா’ தொற்றியவர்களில் 50 சதவீதம் முதல் 90 சதவீதமானவர்கள் உயிரிழந்தார்கள். ஆனால், ‘கொவிட்-19’ தொற்றிவர்களில் மூன்று சதவீதமானவர்களே மரணமடைகின்றனர். ஆனால், ‘கொவிட்-19’ பரவும் வேகத்தைப் பார்க்கிலும், உலகளாவிய ரீதியில், அதைப் பற்றிய பீதி பரவும் வேகம், மிகவும் அதிக…
-
- 0 replies
- 729 views
-
-
மே 18, கொவிட்-19 என்பவற்றின் பின்னணியில்: நிலாந்தன் ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்து 11 ஆண்டுகளின் பின்னரும் கூட ஓர் உலகப் பெரும் தொற்று நோயின் காலத்திலும் கூட நாடு அதன் அரசியல் அர்த்தத்தில் இரண்டாகப் பிரிந்தேயிருக்கிறது என்பதனைத்தான் மே 18ஆம் திகதி தமிழ் பகுதிகளிலும் தெற்கிலும் இடம்பெற்ற சம்பவங்கள் நிரூபித்திருக்கின்றன. தமிழ் பகுதிகளில் இறந்தவர்கள் நினைவு கூரப்பட்டனர். தென்னிலங்கையில் யுத்த வெற்றி கொண்டாடப்பட்டது. அந்த வெற்றியை நினைவுகூர்ந்து உரையாற்றிய ஜனாதிபதி ஒரு விடயத்தை துலக்கமாகத் தெரிவித்திருக்கிறார். அரச படைகளை விசாரிக்க முற்படும் அல்லது தண்டிக்க முற்படும் எந்த ஒரு சர்வதேச நிறுவனத்திலிருந்தும் இலங்கை வெளியேறும் என்பதே அந்தச் செய்தி ஆகும். அதாவத…
-
- 0 replies
- 529 views
-
-
எங்களுக்கு திருப்ப அந்த நினைவை வர வைக்காதேங்க அண்ண. அதை நினச்சாலே பயமா இருக்கு சில சம்பவங்கள் செய்திகளோடும் வாய்ப்பேச்சுக்களோடும் முடிந்து விடுகின்றன. அவற்றின் உருவாக்கங்கள் பற்றியோ காரணங்கள் பற்றியோ எந்த தெளிவுபடுத்தல்களும் முன்வைக்கப்படாது போய்விடுகின்றன. சில சம்பவங்களை தூக்கிப்பிடித்து பேசுபவர்கள் அதன் தாக்கங்கள் விளைவுகள் குறித்தும் பின்விளைவுகள் பற்றியும் பார்க்கத் தவறிவிடுகின்றனர். இந்த பிரித்தறிதல் இல்லாத தன்மை சிலரது செயற்பாடுகளுக்கு நல்ல வசதியாக இருக்கிறது. குரைக்கும் நாய் கடிக்காது என்பது போல அவர்கள் எண்ணிக் கொள்வார்கள். பத்திரிகைகளில் வரும் செய்தி அதன் விளக்கங்கள் அன்றன்றே முடிந்து போய்விடுகின்றன. அதனால் எந்தப் புரளியும் எழுந்துவிடப் போவதில்லை என்பதே …
-
- 0 replies
- 707 views
-
-
விடுதலையை நோக்கிய பயணம் – ஒரு புதிய பார்வை October 20, 2020 Share 48 Views எழுபது ஆண்டுகளுக்கு முன்னர் நிகழ்ந்தேறிய இரண்டாம் உலகப்போரின் முடிவும் அதனைத் தொடர்ந்து ஆசியாவிலும், ஆபிரிக்காவிலும் நிலைகொண்டிருந்த ஐரோப்பியக் காலனியக் கட்டமைப்புகள் படிப்படியாக செயலிழக்கச் செய்யப்பட்ட நிகழ்வும், தெற்காசியா உள்ளிட்ட பிரித்தானிய ஆட்சியின்கீழ் அதுவரை இருந்த பல புதிய சுதந்திர ‘நாடிய அரசுகள்’ (nation – states) தோற்றம் பெற வழிவகுத்தன. அதைவிட அண்மையில், எண்பதுகளின் இறுதியில், ஏற்பட்ட சோவியத் யூனியனின் வீழ்ச்சியின் காரணமாக மீண்டும் உலக சமூகத்தால் அ…
-
- 0 replies
- 803 views
-
-
இலங்கையின் மீதான அமெரிக்க அழுத்தங்கள் – இரண்டாம் பாகம் ? - யதீந்திரா இலங்கையின் அரசியல் கடிகாரம் மீளவும் பழைய காலத்தை நோக்கித் திரும்பக் கூடிய நிலைமை காணப்படுகின்றது. ஜ.நா மனித உரிமைகள் பேரவையில், இலங்கையின் மீதான மனித உரிமைகள் விவகாரம் மீளவும் கூட்டான விவாதங்களை ஏற்படுத்தலாம். இதற்கான காரணம் மிகவும் தெளிவானது. அதாவது, மீளவும் ஆட்சியதிகாரத்தை கைப்பற்றியிருக்கும் ராஜபக்சக்களின் அரசாங்கமானது, ஜ.நா மனித உரிமைகள் பேரவையுடன் ஒத்துப் போகும் முடிவை நிராகரித்திருக்கின்றது. இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்த்தனவின் வார்தையில் கூறுவதனால், முன்னைய அரசாங்கம் ஏற்றுக்கொண்டிருந்த மனித உரிமைகள் பேரவையின் பிரேரணை இறந்துவிட்டது. அதனை இனி உயிர்ப்பிக்க முடியாது. உண்மையிலேயே அந…
-
- 0 replies
- 526 views
-
-
பெருந்திரள் மக்கள் போராட்டங்களை ஏன் நடாத்த முடியவில்லை? கடந்த பத்தாண்டுகளாக நாம் கவனயீர்ப்பு போராட்டங்களை நடாத்தினோம். சிறிய சிறிய எதிர்ப்புக்களை காட்டினோம். இந்த எதிர்ப்புகள் பெரும்பாலும் ரிஸ்க் எடுக்காத எதிர்ப்புகள். பெருந்திரள் மக்கள் போராட்டங்களை யாராலும் நடாத்த முடியவில்லை. முஸ்லிம்கள் இன்று ஜனாஸா எரிப்புக்கு எதிராக கபன் துணியை ஒரு குறியீடாக வைத்து போராட தொடங்கியிருக்கிறார்கள். எங்கள் தமிழ் தலைமைகள் அப்படியான குறியீட்டுப் போராட்டங்களை கூட நடாத்தவில்லை. கோவிட் 19 சூழலை காரணம் காட்டி பின்னடிக்கும் நிலைமையே காணப்படுகின்றது. இவை தொடர்பில் பல்வேறு விடயங்களையும் விளக்குகிறார் அரசியல் ஆய்வாளர் நிலாந்தன்.
-
- 0 replies
- 603 views
-
-
ஜெயசங்கரின் விஜயம் : தமிழர் தரப்பிற்கு கூறியதும் தமிழர் தரப்பு விளங்கிக்கொள்ள வேண்டியதும் - யதிந்திரா இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி.ஜெயசங்கரின் கொழும்பு வருகையைத் தொடர்ந்து, இந்திய – இலங்கை விவகாரம் மீளவும் பேசு பொருளாகியிருக்கின்றது. இந்தியாவின் எதிர்பார்ப்புக்கள் தொடர்ந்தும் பின்னடைவுகளை சந்தித்து வருவதாகவும் இதனால் இந்திய – இலங்கை உறவில் விரிசல்கள் ஏற்பட்டிருப்பதாகவும் சில அபிப்பிராயங்கள் வெளிவருகின்றன. இவ்வாறானதொரு பின்புலத்தில், இலங்கையின் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச கிழக்கு கொள்கலன் முனையத்தை எந்தவொரு நாட்;டுக்கும் விற்கும் நோக்கம் இல்லையென்று தெரிவித்திருக்கின்றார். அதே வேளை, ஜெயசங்கர் கொழும்பில் தங்கியிருக்கும் போதே பிரதமர் மகிந்த ராஜபக்ச, கிழக…
-
- 0 replies
- 388 views
-
-
தமிழர் அரசியலும் முதலமைச்சர் விக்ஸ்வனேரனும் http://content.epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2017-06-25#page-11
-
- 0 replies
- 339 views
-
-
‘மிக்காரும் இல்லை; தக்காரும் இல்லை’: பிரதமர் மோடியின் காய்நகர்த்தல்கள் இந்திய பிரதமரின் 2019 நிகழ்ச்சித்திட்டம், ஏறக்குறைய இலக்கை எட்டி விட்டது. காங்கிரஸ் முன்னின்று உருவாக்கிய, கூட்டணியை பீஹாரில் உடைத்துச் சிதறடித்த நிலையில், 2019 நாடாளுமன்றத் தேர்தலில், பிரதமர் நரேந்திர மோடியை எதிர்க்கும் வலுவான எதிர்க்கட்சியோ, எதிர்க்கட்சிகளின் கூட்டமைப்பைச் சேர்ந்த வேட்பாளரோ இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. பீஹார் முதலமைச்சர் நிதிஷ்குமார், கூட்டணியில் இருந்து விலகி, பாரதீய ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைத்து, ஓரிரவுக்குள், மீண்டும் முதலமைச்சர் ஆகியிருப்பது பீஹாரில் நடக்கும் புதிய ‘மாஜாஜாலம்’ அல்ல! என்றால…
-
- 0 replies
- 480 views
-
-
கூட்டாட்சியை குழப்புமா சீற்றம்? திடீரென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ஒரு ஞானம். அது பயத்தின் வெளிப்பாடு என்றும், தனது கட்சியைப் பாதுகாக்க வேண்டும் என்ற கடப்பாடு என்றும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கமீது ஏற்பட்ட குரோதம் என்றும், தேர்தலை இலக்குவைத்த நகர்வுகள் என்றும் பல விமர்சனங்கள் எழுப்பப்படுகின்றன. அதற்கேற்றாற்போல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் தனது வியூகங்களை மிகவும் ஆக்ரோஷமாக, தான் பங்கேற்கும் ஒவ்வொரு மேடைகளிலும் வெளிப்படுத்தி வருகின்றார். இத்தனை காலமும் நல்லாட்சி அரசு ஐக்கிய தேசியக் கட்சியினுடையது என்று நினைத்துக் கொண்டிருந்தவர்களுக்கெல்லாம், "நிறைவேற்று ஜனாதிபதி நானே என்றும் எனது ஆட்சிதான் இங்கு நடக்க வேண்டும்'' என எண்ணும் தோரணைதான் அவரின் பேச…
-
- 0 replies
- 325 views
-
-
தண்டிக்கப்படுவோம் என்ற பயம் ஏற்படாத வரை தாக்குதல்கள் தொடரும் இலங்கை, முஸ்லிம்களுக்கு பாதுகாப்பற்ற நாடுகளில் ஒன்றென, இலண்டன் நகரை மையமாகக் கொண்டியங்கும் சர்வதேச மனித உரிமைகள் அமைப்பான, சர்வதேச மன்னிப்புச் சபை, பெப்ரவரி மாதம் 21 ஆம் திகதி வெளியிட்ட, தனது வருடாந்த அறிக்கையில் குறிப்பிட்டு இருந்தது. கடந்த காலங்களில், இலங்கை முஸ்லிம்களின் வியாபார நிலையங்கள், பள்ளிவாசல்கள் மற்றும் வீடுகள் அடிக்கடி சிங்களவர்களின் தாக்குதலுக்கு இலக்காகி வந்தன. கடந்த நவம்பர் மாதம், காலி, கிந்தொட்டையில் சிறு பிரச்சினையொன்றின் காரணமாக, முஸ்லிம்களின் உடமைகள் மற்றும் பள்ளிவாசல்கள் தாக்கப்பட்டன. ஆயினு…
-
- 0 replies
- 399 views
-
-
மக்களது தேவைகளை நிறைவேற்றும் – அரசே நீடித்து நிலைக்கும்!! நாடு சுதந்திரம் அடைந்த பின்னர் ஆட்சி அதிகாரத்துக்கு வந்த பெரும்பாலான அரசுகள் கைக்கொண்ட பொருளாதாரக் கொள்கைகள், காலப்போக்கில் நாட்டு மக்களால் நிராக ரிக்கப்பட்டமை வரலாற்றுப் பதிவுகள். அதற்குக் காரணம், குறித்த அரசுகளது பொருளாதாரக் கொள்கை வகுப்பாளர்கள், உலக நடப்பின் யதார்த்தத்தைச் சரிவரப் புரிந்து கொள்ளத் தவறியமையே ஆகும். ஒரு நாட்டினது பொருளாதாரக் கொள்கை இன்னுமொரு நாட்டுக்குப் பொருந்துவதில்லை …
-
- 0 replies
- 463 views
-
-
எது பயங்கரவாதம்? பிரிட்டனிலிருந்து அமெரிக்கா செல்லும் பிரிட்டிஷ் விமானங்களைத் திரவ வெடிகுண்டுகளை வைத்து வெடிக்கச் செய்ய சதி நடந்தது என 24 பிரிட்டிஷ் முஸ்லிம்கள் ஆகஸ்ட் முதல் வாரத்தில் கைது செய்யப்பட்டனர். அப்படி ஒரு சதி பற்றிய தகவல்களை பிரிட்டிஷ் போலீசுக்குத் தெரிவித்தது பாகிஸ்தான் அரசு. இதைத் தொடர்ந்து அவர்களைக் கைது செய்தது மட்டுமல்ல, விசாரணைகளையும் நடத்தி வருகிறது பிரிட்டிஷ் அரசு. இதற்கிடையில் 12.8.2006 அன்று அமெரிக்க ரேடியோவில் பேசிய ஜார்ஜ் புஷ், விமானங்களைத் தகர்க்கச் சதி செய்தவர்கள் லெபனானைச் சேர்ந்த ஹ’ஸ்புல்லாக்கள் என்று அறிவித்திருக்கிறார். கூடுதலாக ஜார்ஜ் புஷ் ஹ’ஸ்புல்லாக்கள், ஆப்கானிய தலிபான்கள், ஈராக்கில் அமெரிக்க ஆக்கிரமிப்புக்கு எதிராகப் போராடுபவர்கள் எல…
-
- 0 replies
- 927 views
-
-
தென்னாபிரிக்காவைச் சேர்ந்த ஒரு தன்னார்வத்; குழு மற்றும் சுவிட்சர்லாந்து என்பவற்றின் உதவியோடு சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சரும் கூட்டமைப்பின் பிரதிநிதி ஒருவரும் புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புக்களின் பிரதிநிதிகள் சிலரும் அண்மையில் சந்தித்திருக்கிறார்கள். தேர்தல் வரவிருக்கும் பின்னணியில் முன்னய அரசாங்கத்தால் தடை செய்யப்பட்ட ஒரு அமைப்பை இலங்கை அரசாங்கத்தின் வெளிவிவகார அமைச்சர் சந்தித்திருக்கிறார். இச்சந்திப்பில் நோர்வேயின் முன்னாள் சமாதானத்துக்கான தூதுவர் சொல்ஹெய்மும் பங்குபற்றியிருக்கிறார். இது ஒரு பகிரங்கப்படுத்தப்படாத உத்தியோகபூர்வமற்ற சந்திப்பு என்று கூறப்பட்டாலும் இதில் பங்குபற்றியவர்கள் மற்றும் பங்குபற்றிய நிறுவனங்கள் என்பவற்றைக் கருதிக் கூறின் இது அதிகப…
-
- 0 replies
- 285 views
-
-
ஜனாதிபதித் தேர்தல் : தமிழ் நிலைப்பாடு என்ன? - நிலாந்தன். - நாடு ஒரு தேர்தலை நோக்கி போய்க்கொண்டிருக்கும் பொழுது தமிழரசுக் கட்சியானது தொடர்ந்து முடிவெடுக்க முடியாத ஒரு நிலையில் காணப்படுகின்றது. தமிழ்த் தேசியப் பரப்பில் உள்ள பெரிய கட்சி அது. அதன் செயற்பாடுகள் காரணமாக அது படிப்படியாக உடைந்து உடைந்து அதன் ஏகபோகத்தை இழந்து விட்டது என்பது உண்மைதான்.என்றாலும் அதுதான் இப்பொழுது உள்ளத்தில் பெரிய கட்சி. அக்கட்சி ஒரு தேர்தல் ஆண்டில் முடிவெடுக்க முடியாதபடி உடைந்து காணப்படுவது,தென் இலங்கைக்குச் சாதகமானது. நீதிமன்றம் கட்சியை முடக்கவில்லை. ஆனால் அண்மையில் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய தலைவர் செயல்பட முடியாத ஒரு நிலை. அதனால் முன்னைய தலைவராகிய மாவை சேனாதிராஜாவே இப்பொழுத…
-
- 0 replies
- 302 views
-
-
POLITICAL GEOGRAPHY OF TAMIL MUSLIM UNITY தமிழ் முஸ்லிம் நல்லுறவின் அரசியல் புவியியல். -வ.ஐ.ச.ஜெயபாலன் கவிஞன் . இனங்களுக்கிடையிலான நல்லுறவு இராஜதந்திரத்தில் சிக்கலான பகுதி பெரும்பாலும் புவியியல் சார்ந்ததாகும். இதற்க்கு இலங்கையும் புறநடையில்லை. இலங்கையிலும் தமிழர் முஸ்லிம்கள் நல்லுறவு சிக்கலில் அரசியல் புவியியல் பிரச்சினைகளே பெரும்தடையாக உள்ளது. . இலங்கை தமிழர் முஸ்லிம்கள் அரசியல் புவியியலை சிக்கலாக்கிய பிரச்சினைகள் 1,கிழக்கில் தமிழ் முஸ்லிம் உறவு நெருக்கடிகள் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களால் மேலும் தீவிரபட்டுள்ளது. 2. முஸ்லிம்கள் நிலதொடற்ச்சியற்ற ஊர் பிரதேசங்களில் வாழ்வது. 3.1முஸ்லிம்களைப் பொறுத்து அம்பாறை மாவட்டத்தில் மட்டும்…
-
- 0 replies
- 614 views
-
-
Published By: VISHNU 22 SEP, 2024 | 03:37 AM லோகன் பரமசாமி சர்வதேச நாடுகள் மத்தியில் இவ்வருடம் இடம்பெற்று வரும் தேர்தல்களின் பட்டியலில் இலங்கையில் இவ்வாரம் இடம்பெறும் ஜனாதிபதி தேர்தல் நாட்டின் கேந்திர முக்கியத்துவம் காரணமாக சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது. இலங்கைத் தேர்தல் அத்தீவின் தென்பகுதியில் வெறும் உதிரி வேட்பாளர்களின் தேர்தல் களமாக பார்க்கப்பட்டிருந்த போதிலும் ஒருதேசமாக தமிழ்பொது வேட்பாளரின் வருகை ஏற்கனவே பிராந்திய அரசியலில் தாக்கத்தை விளைவிக்க ஆரம்பித்துவிட்டது. பல்வேறு பிராந்திய மற்றும் சர்வதேச அலகுகளையும் மீண்டுமொரு முறை ‘ஈழத்தமிழர்’ விவகாரத்தில் கவனம் செலுத்தும் நிலைக்கு தள்ளியுள்ளது. இதற்கு முக்கிய ஆரம்ப…
-
- 0 replies
- 335 views
- 1 follower
-
-
மனித புதைகுழிகள் தொடர்பில் சர்வதேச விசாரணைகளை மேற்கொள்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் – யாழ். கத்தோலிக்க மறைமாவட்ட நீதி சமாதான ஆணைக்குழு வேண்டுகோள் Published By: DIGITAL DESK 2 18 JUL, 2025 | 04:03 PM நல்லிணக்கம் ஏற்படவேண்டுமாயின் தமிழ் மக்கள் மீது நடாத்தப்பட்டுள்ள குண்டுதாக்குதல்கள், புதைகுழிகள், காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பிலாவது சர்வதேச விசாரணைகளை மேற்கொள்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என யாழ் கத்தோலிக்க மறைமாவட்ட நீதி சமாதான ஆணைக்குழு வேண்டுகோள் விடுத்துள்ளது. இது தொடர்பாக "செம்மணி புதைகுழி கிளறிய சில சிந்தனைகள்" என குறிப்பிட்டு அவர்கள் வெளியீட்டுள்ள அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளார்கள். அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது : …
-
- 0 replies
- 125 views
- 1 follower
-
-
ஈழக் குரல் ஜெனீவாவிற்கு கேட்பதே இல்லையா.? காணாமல் ஆக்கப்பட்ட பேரப் பிள்ளைக்காக போராடி வந்த தாயொருவர், தன் தேடல் முடிவுறாத தருணத்தில் காலமானார் என்கின்ற துயரச் செய்தி ஒரு புறம். முன்னாள் போராளி ஒருவர், ஆறாக்காயங்களுடன் அவதிப்பட்டு மரணித்தார் என்கிற அதிர்ச்சி செய்தி இன்னொரு புறமாய். போர் முடிந்து பதினொரு ஆண்டுகள் ஆகின்ற தருணங்கள் இவை. 2009 கொடும் போர் நடந்து கொத்துக் கொத்தாக மக்கள் கொல்லப்பட்ட ஜனவரி, பிப்ரவரி, மார்ச் மாதங்கள் இவை. ஏப்ரல், மே என ஆண்டின் அரைவாசி வரையில் இனப்படுகொலையின் காலம்தான். இன்னும் ஈழ நிலத்தில் உயிர்கள் வீழ்ந்து கொண்டே இருக்கின்றது. உண்மையில் இந்தக் குரல்கள் எவையுமே ஜெனீவாவிற்கு கேட்பதே இல்லையா? செல்வம் சிவபாக்கியம் என்ற தாயின் மரணமும் மௌ…
-
- 0 replies
- 399 views
-
-
பெருந்தோட்டப் பெண்களின் மாதவிடாய் கால சுகாதாரப் பிரச்சினைகள் Daya Dharshini இலங்கையில் குறிப்பாக பெருந்தோட்டப் பகுதிகளில் வாழும் மக்கள் பல்வேறுபட்ட சவால்களை எதிர்கொள் கிறார்கள். அதில் அதிகம் பாதிக்கப்படுபவர்களாக பெருந்தோட்டப் பெண் தொழிலாளர்கள் இருக்கின் றார்கள். பெண்கள் தமது நாளாந்த வாழ்க்கையில் சமூக, பொருளா தாரம், அரசியல், கலாசாரம் மற்றும் சுகாதாரம் தொடர் பாகவும் பல பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். குறிப்பாக பெண் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச் சினைகளோ ஏராளம். காலையில் எழுந்து தமது குடும்பத் தேவைகளை செய்து முடித்து தமது பிள்ளைகள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் தேவைகளையும் முடித்து விட்டு தேயிலை ம…
-
- 0 replies
- 649 views
-
-
பண்பாட்டு ஆக்கிரமிப்பின் இன்னோர் அத்தியாயம்: குருந்தூர் மலையமர்ந்த கௌதமர் -தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ ஈழத்தமிழரின் இருப்புக்கான போராட்டம், இன்று உள்ளூர் களங்களிலேயே அரங்கேறுகிறது. எமது உரிமைகளுக்கானதும் இருப்புக்கானதுமான போராட்டத்தின் மையப்புள்ளி எமது வாழ்விடங்களே ஆகும். எமது வாழ்விடங்களைச் சிறுகச் சிறுக இழந்துவிட்டு, தீர்வை மேற்குலகத் தலைநகரங்களிலோ, புதுடெல்லியிலோ தேடுவதில் பலனில்லை. எமக்கான ஆபத்துகள் விரிவடைந்து கொண்டே போகின்றன. ஆனால், இதைக் கையாளுவதற்கான வேலைத்திட்டமோ, தூரநோக்கோ எம்மிடம் இருக்கிறா என்ற கேள்வி, தவிர்க்க இயலாமல் மேலெழுகிறது. கடந்த சில நாள்களுக்கு முன்னர், குமுளமுனையில் உள்ள குருந்தூர் மலையில், புதிதாக புத்தர் வந்தமர்ந்தார். இன்னும் சர…
-
- 0 replies
- 579 views
-