Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. கேட்பதற்குத் தமிழ் மக்கள் இருக்கிறார்கள் -இலட்சுமணன் தமிழர் அரசியல் வரலாற்றில், உரிமைப் போராட்டம் அஹிம்சையில் தொடங்கி, ஆயுதப் போராட்டமாகப் பரிணமிப்பதற்கு அடிப்படைக் காரணங்களில் முதன்மையாக, தமிழ் மாணவர்களின் பல்கலைக்கழகத் தரப்படுத்தல், அபிவிருத்தி, தொழில் வாய்ப்பு போன்றவை காணப்பட்டன. இவை இளைஞர்களிடையே பலத்த விவாதங்களுக்கு உட்பட்டிருந்தன. இவற்றில், சம உரிமை, அத்துமீறிய குடியேற்றங்களை நிறுத்துதல் என்பவையும் முக்கியத்துவம் பெற்றிருந்தன. இந்த வகையில், பல்கலைக்கழகத் தரப்படுத்தல் என்பது, அன்றைய காலகட்டத்தைப் பொறுத்தவரையில் குறிப்பாக, யாழ்ப்பாண மாவட்ட மாணவர்களின் பல்கலைக்கழக அனுமதியை, மட்டுப்படுத்துவதாக இருந்தது. ஆனால், மறுபுறத்தில், பின்தங்கிய பிரதேச மாணவர்களு…

  2. இன்ரபோலால் தேடப்பட்ட கேபி எந்த நாட்டில் கைது செய்யப்பட்டார்? எந்த நாட்டு நீதிமன்றத்தால் நாடு கடத்துப்பட்டார்? அல்லது சட்ட விரோதமாக இலங்கை அரசு அவரை கடத்தியதா? அல்லது அவரை காட்டிக் கொடுத்த நாடு தனது நீதிபதிகளை மதிக்க வில்லையா? அல்லது????? சரி எதுவாக இருந்தாலும் இன்ரபோலின் விசாரணை நடந்த பின்னர்தானே அவர் நாடு கடத்தப்பட்டிருக்க வேணும். உண்மையில் என்ன நடந்தது?

    • 5 replies
    • 1.2k views
  3. கேப்பாபிலவு : 700 நாளின் பின்னர் தீவிரம் பெற்றுள்ள போராட்டம் Maatram Translation on January 23, 2019 பட மூலம், கட்டுரையாளர் “நாங்கள் எங்கள் நிலத்திலுள்ள சொந்த வீடு தோட்டத்தில் சமைப்பதற்கும் உண்பதற்கும் உறங்குவதற்கும் விரும்புகின்றோம்.” இராணுவ முகாமொன்றிற்கு வெளியே 700 நாட்கள் பகலும் இரவும் போராட்டம் என்பது மிக நீண்ட காலம். எனினும், இலங்கையின் வடக்கில் முல்லைத்தீவில் உள்ள கேப்பாபிலவு மக்கள் 2017 மார்ச் முதலாம் திகதி முதல் அதனையே செய்து வருகின்றனர். அவர்கள் இராணுவத்திடமிருந்தும் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரிடமிருந்தும் வரும் அச்சுறுத்தல்களையும் மிரட்டல்களையும் எதிர்கொள்வதற்கு துணிச்சலுடன…

  4. கேப்பாபுலவு உணர்த்திய பாடம்:போராட்டக்களத்தில் மாணவர்களின் தேவை பாரம்பரிய உரிமைகளுக்காகவும் இறைமைக்காகவும் போராடும் இனக்கூட்டமொன்றுக்கு நிலமும் அதுசார் ஆட்சியுரிமையும் அடிப்படையானது. அந்த வகையில், தமிழ்த் தேசியப் போராட்டத்தில், ‘நில மீட்புக்கான போராட்டம்’ என்பது ஆக்கிரமிப்புகளுக்கு எதிரான பெரும் குறியீடு. அதன் வெற்றியும் தோல்வியும் தமிழ்த் தேசியப் போராட்டத்தின் ஒட்டுமொத்த வடிவத்திலும் பெரும் தாக்கம் செலுத்தவல்லது. அதனைக் கடந்த எழுபது ஆண்டுகாலப் போராட்ட வரலாற்றில் தமிழ் மக்கள் கண்டிருக்கின்றார்கள். குறிப்பாக, 2009 மே மாதத்துக்குப் பின்னரான நாட்கள் அதன் பெரும் படிப்பினை. ஆயுதப் போராட்டத்தின் முடிவுக்குப் பின்னரான நாட்கள…

  5. கேப்பாபுலவு போராட்டக்களம் வலியுறுத்தும் பாடம் தமிழ் மக்களுக்கும் போராட்டங்களுக்கும் இடையில் அறுக்கவே முடியாத பெரும் பிணைப்பு உண்டு. உரிமைகளுக்காகவும் நீதிக்காகவும் குரல் எழுப்புகின்ற எந்தச் சனக்கூட்டத்துக்கும் போராட்டங்கள் தொடர்பிலான பிணைப்பு அடிப்படையானது; அறுக்கவே முடியாதது. ஆனால், போராட்டங்களை உரிமை மறுப்பாளர்களும் அநீதியின் கொடுங்கரங்களும் என்றைக்குமே இரசிப்பதில்லை; அனுமதிப்ப தில்லை. சுதந்திரத்துக்கு முந்தைய இலங்கையில் ஆரம்பித்துவிட்ட தமிழ் மக்களின் உரிமை மீட்புப் போராட்டங்கள், நாட்டின் 69 ஆவது சுதந்திர தினம் தாண்டியும் நீண்டு வருகின்றன. கொழும்பு, காலி முகத்திடலில் பெரும் இராணுவ அணிவகுப்புடன் வெற்றி…

  6. AIADMK to dip toe in Kerala's assembly poll waters (IANS) 10 April 2006 CHENNAI — In its first foray into Kerala's assembly polls starting April 22, Tamil Nadu's AIADMK will contest as many as 54 seats in 10 districts. The AIADMK's Kerala chapter was formally opened in 2001 and Tamil Nadu Chief Minister J. Jayalalitha's party hopes to take the first step toward becoming a national party by winning some seats in Kerala. It will be the first time that the AIADMK is fielding candidates in nearly one-third of the 140 seats in the Kerala assembly. K.P. Rajapandian, the general secretary of the AIADMK unit in Kerala, said: "This is the first time…

    • 0 replies
    • 1.4k views
  7. கேரளப் பெரு வெள்ளம்: தமிழக - கேரள உறவில் மீண்டும் தைத்த முள் எம். காசிநாதன் / வரலாறு காணாத கன மழை, கேரள மாநிலத்தை நிலைகுலைய வைத்து விட்டது. ‘டிசெம்பர் பெருவெள்ளம்’ 2015இல் சென்னை மாநகரையும் புறநகர் சென்னையையும் திணறடித்தது போல், ‘ஓகஸ்ட் பெருவெள்ளம்’ அலை அலையான பாதிப்புகளை, கேரள மாநில மக்களுக்கு ஏற்படுத்தி விட்டது. சேதங்கள் குவியல் குவியல்களாகக் கிடக்கின்றன; மண்சரிவுகள் மலைகள் போல் குவிந்து கிடக்கின்றன. கட்டடங்கள் அப்படியே, பாய்ந்தோடும் வெள்ளத்தில் நகருவதைப் பார்க்க முடிந்தது. வெள்ளமும் வேதனையும் இணைபிரியாமல் தாக்குதல் நடத்தி, கேரள மக்கள், ஓணம் பண்டிகையை, நிம்மதியா…

  8. கேர்ணல் ரத்னப்பிரியவின் பின்னால் மறைந்திருக்கும் உண்மைகள்:துரோகிகளும் தியாகிகளும் 06/12/2018 இனியொரு... விஸ்வமடு இராணுவ முகாமிலிருந்து இடமாற்றம் பெற்றுச் செல்லும் இராணுவ அதிகாரியை தமிழ் மக்கள் கதறியழுது கண்ணீர் மல்கி வழியனுப்பிய காட்சி கடந்த இரண்டு நாட்களாக தமிழ் ஊடகங்களை ஆக்கிரமித்துக்கொண்டது. கதறியழுதவர்களை துரோகிகள் என புலம்பெயர் முகநூலில் பஞ்ச் பேசி தமது ‘தேசிய’ உணர்ச்சியை பொரிந்து தள்ளினார்கள். இதன் மறுபக்கத்தில் இராணுவ அதிகாரி இரத்தினப்பிரிய உலகமகா மனிதாபிமானியாக இன்னும் ஒரு குழு மக்களோடு சேர்ந்து கசிந்து கண்ணீர் மல்கியது. இவை இரண்டிற்கும் இடையில் இன்னொரு உண்மை இச் சம்பவங்களின்பின்னால் உறைந்து கிடப்பதை சில ஊடகங்கள் மறைத்தன, மற்றும் சில தமது பிரதிய…

    • 3 replies
    • 1.1k views
  9. கேள்­விக்­கு­றி­யா­கி­யுள்ள மக்­களின் பாது­காப்பு -என்.கண்ணன் ஊட­கங்கள் கூறு­வது போன்று வடக்கில் மோச­மான நிலை இல்லை, என்ற அவ­ரது கருத்து அபத்­த­மா­னது. ஏனென்றால், ஊட­கங்கள் நடக்­காத ஒன்றைச் செய்­தி­யாக்­க­வில்லை. நடந்த சம்­ப­வங்­களை செய்­தி­யாக்­கு­கின்ற போது, ஒரே நாளில் ஒன்­றுக்கு மேற்­பட்ட குற்­றங்கள் இடம்­பெறும் போது அல்­லது அடுத்­த­டுத்து இத்­த­கைய சம்­ப­வங்கள் தொடரும் போது, அதனை பார­தூ­ர­மா­கவே மக்கள் பார்ப்­பார்கள் என்­பது வெளிப்­படை. ஓரிரு சம்­ப­வங்­களை வைத்துக் கொண்டு ஊட­கங்­களால் ஒன்­றையும் ஊதிப் பெருப்­பித்து விட முடி­யாது. அதே­வேளை, தொடர்ச்­சி­யான சம்­ப­வங்கள் நடக்கும் போது, அதனை ஒரு சமூகப் பிரச்­சி­னை­யாக வெள…

  10. கேள்விகளுடன் உயிர்த்த ஞாயிறு லக்ஸ்மன் ஒன்றை மறைப்பதற்காக இன்னொன்றைக் கொண்டுவருதல் அல்லது உருவாக்குதல் என்பது எல்லா விடயங்களிலும் நடக்கின்ற ஒன்றே. மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான அரசாங்கம் அட்சியை ஏற்பதற்கு முன்னர் சொன்னவற்றைச் செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு வெளிவருவதற்கும் இதற்கும் சம்பந்தம் இருக்கிறது என்றே கொள்ளலாம். இலங்கையில் நடைபெற்ற உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் திடீர் ஆட்சி மாற்றம் ஒன்றுக்கு காரணமாக இருந்தது. அதேபோன்று, இப்போதிருக்கின்ற அரசாங்கம் உருவாவதற்கும் காரணமாக இருந்தது. ஆனால், மீண்டும் ஒரு ஆட்சி மாற்றத்துக்குக் காரணமாக அமையும் என்றும் எதிர்பார்க்கப்பட்டதாக இருந்தாலும், தொடர்கிறது. உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரிகள் தண்டிக்கப்படுவது கட்டாயம் என்கிற த…

  11. ஆர்.பி.என். இலங்கை மக்கள் மாத்திரமன்றி சர்வதேசம் எங்கும் வாழும் கிறிஸ்தவ மக்களும் 2019 ஏப்ரல் 21ஆம் திகதி ஈஸ்டர் தினத்தை அவ்வளவு எளிதாக மறந்துவிட முடியாது. அன்று தான் ஈவிரக்கமற்ற குண்டுத்தாரிகளால் அப்பாவி உயிர்கள் பலியெடுக்கப்பட்டன. கிறிஸ்தவ மக்கள் அன்று ஈஸ்டர் ஞாயிறை நினைவுகூரும் வகையில் காலை வேளை தங்கள் பங்கு தேவாலயங்களுக்குச் சென்று ஆராதனைகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது சற்றும் எதிர்பாராத வகையில், குண்டுகள் வெடித்துச் சிதறின. வழிபாட்டிலிருந்த பலரும் அடுத்த கணம் கீழே விழுந்து இரத்த வெள்ளத்தில் பரிதாபகரமாக மரணித்தனர். முதலில் இந்த சம்பவத்தை நம்பவோ, ஜீரணிக்கவோ முடியவில்லை. தேவாலயத்துக்குள் குண்டு வெடிக்குமா? என்று எண்ணிப்பார்க்க ஒரு கணம் மனம் தயங…

  12. கேள்விக் குறியாகியுள்ள விடுதலை - செல்வரட்னம் சிறிதரன் 22 பெப்ரவரி 2014 ராஜிவ் காந்தி கொலைக் குற்றத்தில் தண்டனை வழங்கப்பட்டவரகள் விவகாரம் உலக அளவில் தலைப்புச் செய்தியாகியிருக்கின்றது. பாரதப் பிரதமராக இருந்து, ஒரு தேர்தலைச் சந்தித்திருந்தபோது, வேட்பாளராக மக்கள் முன்னால் சென்றிருந்த வேளை, தமிழ் நாட்டில் வைத்து ராஜிவ் காந்தி மிகவும் துணிகரமான முறையில் கொல்லப்பட்டிருந்தார். இது ஓர் அரசியல் கொலை. பிராந்திய வல்லரசாகிய இந்தியப் பெருநாட்டின் முக்கிய தலைவராகக் கருதப்பட்ட இவருடைய கொலை, பிராந்திய சர்வதேச அரசியல் கொலையாகக் கணிப்பிடப்பட்டிருந்தது. இரண்டு தசாப்தத்துக்கும் மேற்பட்ட காலப்பகுதியில் இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பான விசாரணைகளும் நீதிமன்ற விசாரணைகளும் நடைபெற்றிருந்தன…

  13. கேள்விக்கு உள்ளாகும் இருப்பும் தமிழ்த்தலைமைகளின் போக்கும் – பி.மாணிக்கவாசகம் 103 Views புதிய ஆண்டு புத்துணர்ச்சியளிப்பது. புது வேகத்துடன் செயற்படத் தூண்டுவது. இது பொதுவானது. ஆனால், பிறந்துள்ள புதிய ஆண்டாகிய 2021 இல் வலிந்த புத்துணர்ச்சியுடனும், மிகுந்த வேகத்துடனும் செயற்பட வேண்டும் என்பதையே 2020 வலியுறுத்திச் சென்றுள்ளது. அரசியல் உரிமை மறுப்பு, ஆக்கிரமிப்பு, முடிவற்ற அடக்குமுறைகள் என மீள முடியாத சிக்கல்களுக்குள் ஏற்கனவே சிக்கித் தவித்துக் கொண்டிருக்கின்ற தமிழ் மக்கள் கோவிட் 19இற்கு எதிரான போராட்டத்துடன் புதிய ஆண்டில் தமது அரசியல் போராட்டத்தையும் முன்னெடுக்க வேண்டிய பாரிய பொறுப்பைக் கொண்டிருக்கின்றார்கள். இலங்கை…

  14. கேள்விக்குறியாகும் தொழிலாளர்களின் இருப்பு பெருந்­தோட்டத் தொழி­லா­ளர்­களின் சம்­பள உயர்வு உள்­ளிட்ட பல்­வேறு நலன்­க­ளையும் தீர்­மா­னிக்­கின்ற கூட்டு ஒப்­பந்தம் பெரும் இழு­ப­றி­க­ளுக்கும் மத்­தியில் அண்­மையில் கைச்­சாத்­தி­டப்­பட்­டமை தெரிந்த விட­ய­மாகும். எனினும் இக்­கூட்டு ஒப்­பந்­தத்தின் சரத்­துகள் சில­வற்றை கம்­ப­னி­யி­னரும் தோட்ட நிர்­வா­கமும் மீறி செயற்­ப­டு­வ­தாக குற்­றச்­சாட்­டுகள் முன்­வைக்­கப்­பட்டு வரு­கின்­றன. இந்த அதி­ருப்தி நிலைக்கு மத்­தியில் தற்­போது சர்­வ­தேச சந்­தையில் தேயி­லையின் விலையில் அதி­க­ரிப்பு ஏற்­பட்­டி­ருக்­கின்­றது. இவ்­அ­தி­க­ரிப்பின் கார­ண­மாக தோட்டத் தொழி­லா­ளர்­க­ளுக்கு உரிய நிலுவைப் பணத்­தினை வழங்க வேண்டும் என்று இப்­போ…

  15. கேள்விக்குள்ளாகியுள்ள வீட்டுச் சின்னமும் ஒற்றுமையும் தமிழ் மக்­களின் ஆயுத ரீதி­யான உரிமைப் போராட்டம் 2009 ஆம் ஆண்டு மௌனிக்கச் செய்­யப்­பட்­டதன் பின்னர் தமிழ்த் தேசிய அர­சி­யலை கொண்டு செல்ல வேண்­டிய பொறுப்பு தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தோள்­களில் தானா­கவே வந்து இறங்­கி­யது. தமி­ழீழ விடு­தலைப்புலிகள் இருந்த காலத்தில் அவர்­க­ளது ஆத­ர­வுடன் உரு­வாக்­கப்­பட்டு ஜன­நா­யக ரீதி­யாகச் செயற்­பட்ட அமைப்­பா­கவே தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு செயற்­பட்டு வந்­த­மையே அதற்கு காரணம். 2001 ஆம் ஆண்டு தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு உரு­வா­கிய போது தமிழர் விடு­தலைக் கூட்­டணி, அகில இலங்கை தமிழ் காங்­கிரஸ், ஈழ­மக்கள் புரட்­சி­கர விடு­தலை முன்­னணி (ஈ.பி.­ஆர்­.எல்.எப்.), தமி­ழ…

  16. கேள்விக்குள்ளாகும் அரசியல் நேர்மை "போரில் பங்­கேற்ற படை­யினர் மீது சட்ட நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­படக்கூடாது என்­பதும் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் நிலைப்­பாடாக உள்­ளது. அதனால் தான், போரில் ஈடு­பட்ட கடற்­படைத் தள­ப­தி­களை விசா­ர­ணைக்­காக அழைக்­கப்­பட்­டதை நான் விரும்­ப­வில்லை என்று அவர் வெளிப்­ப­டை­யாக கூறி­ யி­ருக்­கிறார். இதி­லி­ருந்தே, படை­யி­னரை எந்த சட்ட நட­வ­டிக்­கை­க­ளுக்கும் உட்­ப­டுத்தக் கூடாது என்­பதே அவ­ரது மனோ­நி­லை­யாக இருக்கிறது என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள முடியும். " பாது­காப்பு அமைச்சில் கடந்­த­வாரம் நடந்த நிகழ்வில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன நிகழ்த்­திய உரை, அவ­ரது அர­சியல் நேர்­மைக்குப் பலத்த சவா­லையும், சர்…

  17. கேள்விக்குள்ளாகும் ஆளுமை கே. சஞ்சயன் / 2019 ஜூன் 30 ஞாயிற்றுக்கிழமை, பி.ப. 07:22 Comments - 0 நாட்டைச் சரியான முறையில் முன்னேற்ற வேண்டுமாக இருந்தால், 18ஆவது 19ஆவது அரசமைப்புத் திருத்தங்களை இல்லாமல் ஒழிக்க வேண்டும் என, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட்டுள்ள கருத்து, இப்போது பலத்த வாதப் பிரதிவாதங்களை உருவாக்கி விட்டிருக்கிறது. “எனக்கும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில், பெரிய இடைவெளி இருப்பதாக மக்கள் நினைக்கிறார்கள், இதற்குக் காரணம் 19ஆவது திருத்தச் சட்டம்தான். இந்தச் சட்டம் கொண்டு வரப்பட்டிருக்காவிடின், கடந்த நான்கரை ஆண்டுகளில், பெரிய முன்னேற்றம் ஏற்பட்டிருக்கும்” என்று, ஜனாதிபதி கூறியிருந்தார். தனது இயலாமையை மறைப்பதற்காக, ஜனாதிபதி மைத்த…

  18. கேள்விக்குள்ளாகும் தமிழரின் அரசியல் அபிலாஷை வடக்கு, கிழக்கில் வாழும் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசை பற்றிய கேள்வியும் விவாதமும் இத்தருணத்தில் முக்கியமாக எழுந்திருக்கிறது. வடக்கிலுள்ள தமிழ் மக்களில் பெரும்பாலானவர்கள், சமஷ்டியைக் கோரவில்லை என்றும், அரசியல்வாதிகள் தான் அதனைக் கோரியதாகவும் புதிய அரசியலமைப்புக்கான ஆலோசனைகளைப் பெறும் குழுவின் தலைவரான சட்டத்தரணி லால் விஜயநாயக்க அண்மையில் வெளியிட்ட கருத்தே, இந்தக் கேள்வி எழுவதற்கு முக்கியமான காரணம். புதிய அரசியலமைப்புக்காக பொதுமக்களின் கருத்துக்களை அறிந்து கொள்வதற்காக அமைக்கப்பட்ட குழுவின் தலைவராக இருந்து கொண்டு, லால் விஜேநாயக்க வெளியிட்ட கருத்து தமிழ் மக்களையும் தமிழ் அரசியல் தல…

  19. கேழ்வியும் பதிலும்..SA Jothi to Jaya Palan கூட்டமைப்புக்கு சொந்தமாக தீர்மானம் எடுக்கும் அதிகாரம் இருக்கிறதா?ஜெயபாலன்..Jaya Palan to SA Jothi ஒரு நாய் யாருக்கு வாலாட்டுகிறது என்பது முக்கியமல்ல நண்பா அது தன் எசமானை காப்பற்றுதா என்பதுதான் முக்கியம். எங்கள் நாயகர்கள் உலகம் முழுக்க வாலாட்டியும் எங்கள் எசமான்கள் இன்னும் கொடுஞ்சிறையில். இனியும் பட முடியாது இத்துயரம்.

    • 0 replies
    • 454 views
  20. கை விரிக்கும் இராணுவம் கே. சஞ்சயன் / 2019 ஜூலை 09 செவ்வாய்க்கிழமை, பி.ப. 12:43 Comments - 0 போரின் இறுதிக் கட்டத்தில், விடுதலைப் புலிகள் எவரும் இராணுவத்தினரிடம் சரணடையவில்லை என்று இலங்கை இராணுவம் கூறியிருப்பது, மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. “இராணுவத்தினரிடம் புலிகள் யாரும் சரணடையவில்லை” என்றும், “இலங்கை அரசாங்கத்திடமே புலிகள் சரணடைந்தனர்” என்றும், இராணுவத் தலைமையகத்தின் சார்பில், இராணுவத் தகவல் தொடர்பு அதிகாரியான பிரிகேடியர் சுமித் அத்தபத்து கூறியிருக்கிறார். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், ‘தமிழ்மிரர்’ சார்பில் எழுப்பப்பட்ட, கேள்விக்கு, மூன்று மாதகால இழுத்தடிப்புக்குப் பின்னர், முற்றுமுழுதாகச் சிங்களத்தில், இந்தப் பதிலை அவர் …

  21. [size=6]கைகளால் எழு! கண்களால் சுடு![/size] [size=4]ஆக்கம்: செந்தூரி[/size] [size=4]புதுக்குடியிருப்பு ஆனந்த புரத்தை அண்மித்ததாக, தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் தலைசிறந்த இளம் போர் வல்லுநர்களான தளபதிகளை மொத்தமாக, இரசாயன ஆயுதங்களால் பலி வாங்கிய பூமியின் மையத்தில் போர்க் காட்சியகம் ஒன்றை அமைத்து, "ஒரே தேசத்தின் எல்லா மக்களையும்" கூவி அழைத்து சிலிர்த்துக் கொள்கின்றது இலங்கை இராணுவம்.[/size] [size=4]எவரெவர் பார்வையில் எப்படியமையினும், வந்து போகின்ற கடைக்கோடி தீ தமிழனிடமும் ""பாரடா! உன்னினத்தை பாரறிய வைத்தவர்களின் வீரத்தின் தளும்புகளை'' என்று வெற்றுக் கலங்கள் முணுமுணுக்கும் இடம் அது![/size] [size=4]மூன்றுக்கு மூன்று அடிப்பரப்பையுடைய ஆறடி உயர இரும்புக் கூண்டொன்ற…

  22. கைகூடாத கூட்டு ஏனைய காலங்களை விட, தேர்தல் காலத்தில் அரசியல்வாதிகளிடையே விநோதமான ஒற்றுமைகளும் பகைமை பாராட்டல்களும் ஏற்பட்டு விடுவது வழக்கமானது. மக்களைப் பேய்க்காட்டி, ஏமாற்றி வாக்குகளைப் பெற்றுக் கொள்வதற்காக ‘ஆறு கடக்கும் வரை அண்ணன் தம்பி உறவுபோல’ யாருடனும் கூட்டு வைத்துக் கொள்வதற்கு, சிறுபான்மைக் கட்சிகள் மட்டுமல்ல பெரும்பான்மைக் கட்சிகளும் பின்னிற்பதில்லை. ‘வேற்றுமையில் ஒற்றுமை காணுதல்’ என்ற கோட்பாடு, அரசியலில், தேர்தல் காலத்தில் மட்டுமே அதிகமதிகம் பரீட்சார்த்தம் செய்யப்படுகின்றது. அந்த வகையில் வடமாகாணத்தில், மூன்று நிர்வாக மாவட்டங்களை உள்ளடக்கிய வன்னித் தேர்தல் மாவட்டத்தில், பிரதான தமிழ்க் கட்…

  23. கைகொடுக்கத் தயங்குவது நியாயமா? DEC 14, 2015 சென்னையிலும், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும், கொட்டித் தீர்த்த பெருமழையும், அதனால் ஏற்பட்ட வரலாறு காணா வெள்ளமும், ஏராளமானோரின் இதயங்களில் புதைந்திருந்த மனிதநேயத்தை வெளிக் கொண்டு வந்திருக்கிறது. அதேவேளை, இன்னும் சிலரின் மனங்களில் உள்ள வக்கிரங்களையும் இந்தப் பெருந்துயர் வெளிச்சம் போட்டுக் காட்டத் தவறவுமில்லை. சில மணிநேரத்துக்குள் கொட்டித் தீர்த்த பெருமழையின் பாதிப்பு இலட்சக்கணக்கான மக்களை சூனிய நிலைக்கு கொண்டு சென்றிருக்கிறது. இந்த மழைக்கான காரணம் என்ன, இந்தப் பேரழிவுக்கான பொறுப்பு யார், ஏனிந்த அழிவை எதிர்கொள்ள நேரிட்டது என்று எல்லா ஊடகங்களிலும் ஆய்வுகள் நடக்கின்றன, விவாதங்கள் தொடர்கின்றன. அவரவர் அறி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.