Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. மாட்டு தலைமை மன்னிக்கவேண்டும் மாற்று தலைமைகளுக்கிடையில் வேட்டியை உருவி அடிபாடு..! https://i.postimg.cc/YqmZN7d4/mj.png போினவாதிகளுக்கு நன்மையளித்து தமிழ் மக்களை பிாிக்கும் செயற்பாட்டை மேற்கொள்வது நாங்களா ? தமிழ் தேசிய மக்கள் முன்னணியா ? இந்த சம்பவம் தற்செயலாக நடந்த ஒரு சம்பவமல்ல. ஒருவா் அல்லது பலாின் வழிநடத்தலில் நடக்கின்றது.அந்த சந்தேகம் எனக்கு உள்ளது. மேற்கண்டவாறு தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மீது வட மாகாண முன்னாள் முதலமைச்சா் சீ.வி.விக்னேஸ்வரன் பல்வேறு குற்றச்சாட்டுக்களை சுமத்தி ஊடகவியலாளா் சந்திப்பு என தானே ஒரு அறிக்கையை எழுதி வெளியிட்டுள்ளாா். ஊடகவியலாளர்:- தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் நீங்கள் ஒற்றையாட்சி அரசியலமைப்புக்குள் தமிழ் மக்களை ஏ…

  2. சுதந்திரக் கட்சியை சுழியோடி காப்பவர் யார் றம்ஸி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தனியாகப் போட்டியிடுமானால், அதனை வரவேற்பதாகப் பெருந்தோட்டத்துறை அமைச்சரும் அமைச்சரவை இணைப் பேச்சாளருமான ரமேஸ் பத்திரன தெரிவித்திருப்பதானது, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் கருத்தாகவும் இருக்கலாமென்பது அரசியல் ஆய்வாளர்களின் கருத்து. ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, தற்போது இருந்ததையும் இழந்த நாதியற்ற நிலையில் காணப்படுவதை அவதானிக்கலாம். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர, தொடர்ந்தும் இப்பதவியில்…

  3. நல்ல தொடக்கம்; தொடரட்டும் நல்லபடியாக... காரை துர்க்கா / 2020 பெப்ரவரி 18 வடக்கு, கிழக்கின் பொருளாதாரம், சமூக அபிவிருத்தி மேம்பாட்டை முன்னெடுத்துச் செல்லும் நோக்கத்துடன், ‘மக்கள் அபிவிருத்தி மேம்பாட்டு மன்றம்’ என்ற அமைப்பு, புதிதாக அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ளது. யாழ். ஆயர் அதிவணக்கத்துக்குரிய ஜஸ்டின் பேணார்ட் ஞானப்பிரகாசம் ஆண்டகை, நல்லை ஆதீன குரு ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் ஆகியோரின் இணைத் தலைமையில், வடக்கு, கிழக்கைச் சேர்ந்த ஐம்பதுக்கும் அதிகமான துறைசார் நிபுணர்கள், பேராசிரியர்கள், புலமை சார்ந்தோர் இணைந்து, மேம்பாட்டு மன்றத்தில் செயற்பட முன்வந்துள்ளனர். இந்தப் பூமிப்பந்தில், பிரச்சினைகள் இல்லாத தனிநபர்கள் இல்லை.…

    • 2 replies
    • 944 views
  4. ‘தமிழ்த் தேசிய கூட்டமைப்பு’ ஏன் பதிவு செய்யப்பட வேண்டும்? என்.கே. அஷோக்பரன் / 2020 பெப்ரவரி 17 தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, தனித்ததொரு கட்சியாக அல்லது கூட்டணிக் கட்சியாகப் பதிவுசெய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கை, மிக நீண்ட காலமாகவே முன்வைக்கப்பட்டு வருகின்றது. இருந்தபோதிலும், பதிவுசெய்வதற்கான நடவடிக்கைகள் நடைபெறுவதற்கான எந்தவொரு சமிக்ஞையும் தென்படுவதாக இல்லை. மறுபுறத்தில், தமிழ்த் தேசிய கூட்டமைப்பு என்ற பெயரளவிலான அமைப்பிலிருந்து, கூட்டுக்கட்சிகளும் அக்கட்சிகளின் உறுப்பினர்களும் விலகி, தனிவழி சென்று கொண்டிருக்கின்ற போக்கை, நாம் அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது. தமிழ் மக்களிடம், “நாம் ஒற்றுமையாக இருக்க வேண்டும்; ஒன்றுபட்டால்தான் உண்டு வாழ்வு” …

  5. கீனி மீனி: இலங்கையில் பிரித்தானிய கூலிப்படைகள் உண்மை வலியது; அதலபாதாளத்தில் ஒளித்து வைத்தாலும், உண்மை ஒருநாள் வௌிவந்தே தீரும். உண்மைகள் வெளியாகிற போது, பலவித உணர்வுகளை அது ஏற்படுத்தும். சங்கடம், துரோகம், வேதனை, அதிர்ச்சி போன்றவற்றை, வெளிக்கொணரப்பட்ட உண்மை உருவாக்கிவிடும். இது, உண்மையின் வலிமையையும் ஆழத்தையும் முக்கியத்துவத்தையும் எமக்குப் புரிய வைக்கின்றன. பெரும்பாலும், நீண்ட முயற்சியின் பின்னர் வெளிவரும் உண்மைகளை ஏற்றுக்கொள்ள, ‘பொதுப்புத்தி’ மனநிலை தயாராக இருப்பதில்லை. “இப்படி நடந்திருக்காது” என்ற ஆறுதலுடன், அப்பால் கடந்து போகிறோம். உண்மைகள் கொடியன; அவை, எமது நம்பிக்கைகளில் தீ வைப்பன; எதிர்பார்ப்புகளில் கல்லெறிவன. ‘கீனி மீனி’ என்ற தலைப்ப…

    • 6 replies
    • 1.5k views
  6. புதிய உலக ஒழுங்கில் மனித உரிமைகள்- Human Rights in the New World Order-B.Uthayan மனிதப் படுகொலைகள் மறைக்கப்பட்டன,காணாமல் போனவன் காணாமல் ஆக்கப்பட்டான்,தொலைந்து போனவன் தொலைந்தே போனான்,எவரும் பார்த்ததும் இல்லை எவரும் பேசியதும் இல்லை .கண்ணீரோடு மட்டும் பேசியபடி திரிந்தாள் காணாமல் போன மகனின் தாய். ஐ.நா.சபையின் அத்தனை தீர்மானமும் அடுப்புக்குள் போட்டு எரித்தனர் அருகில் ஒரு நாடு ஆயுதம் கொடுத்தனர்.அவர்களால் எதுகும் பேசமுடியாது அவர்களும் யுத்த பங்காளிகளாகஇருந்ததால் .ஏதோ ஒரு ராஜதந்திர சறுக்கலாக எமது போராட்டமும் முடிவுக்கு வந்தது.தேனீர் கோப்பை ராஜாதந்திரிகளாக(tea party diplomacy) நாம் அப்போ இருக்கவில்லை. பத்து வருடம் யுத்தம் முடிந்தும் பாவம் தமிழன் வாழ்வு என்று ஒன்று இல்…

  7. பகடிவதை: இனியாவது புனிதங்களை களைவோமா? பல்கலைக்கழகங்கள் பற்றி, எமது சமூகத்தில் கட்டி எழுப்பப்பட்டுள்ள புனிதங்கள் பல. அவையே, பல்கலைக்கழக சமூகத்தை, அனைத்துக்கும் மேலானதாக, கேள்விகளுக்கு அப்பாற்பட்டதாக மாற்றியுள்ளன. ‘கற்றோருக்கு எல்லாம் தெரியும்’ என்ற மனோநிலை, தமிழ்ச் சமூகத்தை ஆண்டாண்டு காலமாகப் பீடித்த நோய். அது, படித்தவர்கள் அரசியல் செய்தால், உரிமைகள் கிடைக்கும் என்று நம்பி, வாக்களிக்கத் தொடங்கிய காலம் முதல் இருந்து வரும் ஒன்று. ‘அப்புக்காத்து’ அரசியலின் அடிப்படையும் இதுதான். இன்றுவரை, பல்கலைக்கழகங்களை அதுசார்ந்த சமூகங்களைக் கேள…

  8. தமிழர் பிரச்சினை; கைவிடுகிறதா இந்தியா? கே. சஞ்சயன் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி குறுகிய கால இடைவெளிக்குள், இரண்டாவது தடவையாக தமிழர்களின் அபிலாசைகளை நிறைவேற்றும் கௌரவமான, நீதியான, சமத்துவமான தீர்வு ஒன்றை வழங்க வேண்டும் என்பதை இலங்கைத் தலைவர்களிடம் வலியுறுத்தியிருக்கிறார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த போது, முதல் முறையாக இந்தக் கருத்தை வலியுறுத்தியிருந்த நரேந்திர மோடி, கடந்த வாரம் இந்தியாவுக்குச் சென்றிருந்த பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவிடமும் அதனையே கூறியிருக்கிறார். இரண்டு நாடுகளினதும் பிரதமர்கள் சந்தித்துப் பேசிய பின்னர்…

  9. அரசாங்கத்தின் நிலைப்பாடென்ன? மொஹமட் பாதுஷா சிங்களப் பெரும்பான்மையினரின் வாக்குகளாலேயே, இந்த நாட்டின் புதிய ஜனாதிபதி தெரிவு செய்யப்பட்டதாக, அரசாங்கம் அடிக்கடி சொல்லி வருகின்ற போதிலும், முஸ்லிம்களும் தமிழர்களும், தமது அரசாங்கத்தோடு இணைந்து பணியாற்ற வேண்டும் என்ற பொருள்பட, ஜனாதிபதியும் பிரதமரும் கருத்துகளை முன்வைத்து வருகின்றனர். கடந்த தேர்தலில், முஸ்லிம் வாக்குகள் இல்லாவிட்டாலும் பரவாயில்லை என்று, பொதுஜன பெரமுன கருதியிருக்கலாம் என்று கருதுவதற்கு இடமுண்டு. இருந்தாலும் கூட, நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில், நிலைமையில் மாறுதல்கள் ஏற்பட்டிருக்கின்றன. வடக்கு, கிழக்கு உட்பட, நாட்டின் எ…

  10. உதட்டில் ஐக்கியம்; மனதில் குரோதம் -இலட்சுமணன் தமிழ்த் தேசிய அரசியல் சூழ்நிலையானது, மிகவும் மோசமானதொரு வரலாற்றுச் சிக்கலுக்குள் சிக்குண்டு போயுள்ளது. தமிழ்த் தேசியத்தின் அரசியல் விடுதலை தொடர்பாக, கடந்த 22 ஆண்டுகளாக அஹிம்சை வழியிலும் ஆயுத வழியிலும் பல்வேறு போராட்டங்களை நிகழ்த்தி, தனது உரிமையை நிலைநிறுத்தப் போராடி இருக்கிறது தமிழினம். இத்தகைய போராட்டச் சூழலில், எண்ணங்களில் தோன்றாததும் நினைத்துக் கூடப் பார்த்திருக்க முடியாத, ‘சுயநல அபிலாசைகள்’ தமிழ் அரசியலில் இன்று முனைப்புப் பெற்றுள்ளன. தமிழரின் அரசியல் விடுதலை தொடர்பாக, பல்வேறு துயர்நிறைந்த அனுபவங்களை, வரலாற்று ரீதியாக அனுபவித்த இனத்துக்குச் சாபக்கேடானதோர் அரசியல் சூழல் தோற்றம் பெற்றுள்ளது. இந்…

  11. ஈழத் தமிழர்களுக்கான அரசியல் தீர்வு? இலங்கையின் ஒற்றையாட்சி மாறாது- டில்லியில் மகிந்த ராஜபக்ச கோட்டா- மகிந்த அரசாங்கத்தின் நிலைப்பாடு இதுதான் என்ற தொனியில் மோடியிடம் எடுத்துரைப்பு கோட்டாபய ராஜபக்ச, மகிந்த ராஜபக்ச ஆகியோரை மையப்படுத்திய புதிய அரசாங்கம் இந்திய மத்திய அரசுடன் பொருளாதார உடன்படிக்கைகள். நிதியுதவிகள் குறித்துப் பேச்சு நடத்தி வருகின்றது. இந்தோ பசுபிக் பிராந்திய நலன் அடிப்படையில் இந்திய அரசின் வெளியுறவு கொள்கைக்கு அமைவாக இலங்கையுடனான உறவுகளைப் பேணும் புதிய அணுகுமுறைகளின் வெளிப்பாடாகவே கோட்டாபய ராஜபக்சவுக்கு இந்தியாவுக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதனால் சென்ற …

  12. தமிழரசுக் கட்சி அங்குரார்ப்பணக் கூட்டத்தில் S.J.V.செல்வநாயகம் ஆற்றிய தலைமைப்பேருரை வரவேற்புக் கழகத் தலைவருக்கும் இலங்கையின் பற்பல பகுதிகளிலுமிருந்து இங்குவந்து குழுமியிருக்கும் பிரதிநிதிகளுக்கும் - எனது அன்பான வணக்கம். இன்றைய நிகழ்ச்சிகளுக்குத் தலைமை வகிக்கும்படி என்னைத் தெரிந் தெடுத்துக் கௌரவித்ததற்காக எனது மனப்பூர்வமான நன்றியறிதலை உங்களுக்குத் தெரிவித்துக் கொள்ளுகிறேன். நீங்கள் எனக்கு அளித்திருக்கின்ற பெரும் பொறுப்பினை நோக்கும் போது, அவற்றையெல்லாம் கொண்டு நடத்துவதற்குப்போதுமானவன்மை என்னிடமிருக்குமோ என்று ஐயுறுகின்றேன். எனினும், நீங்கள் எல்லோருமாகச் சேர்ந்து எனக்கெனக் குறிக்கும் பணியினை ஏற்று, எங்கள் நோக்கத்துக்காக யான் தொண்டு செ…

  13. போக்கிடமற்றவர்களின் புதிய கூட்டணி புருஜோத்தமன் தங்கமயில் / 2020 பெப்ரவரி 12 ஒரு வழியாக சி.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான புதிய அரசியல் கூட்டணி, ‘தமிழ் மக்கள் தேசிய கூட்டணி’ என்ற பெயரில் யாழ்ப்பாணத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டிருக்கின்றது. புதிய கூட்டணி ஆரம்பிக்கப்பட்ட மறுநாள், யாழ்ப்பாணத்திலிருந்து இயங்கும் தொலைக்காட்சியொன்றில், விக்னேஸ்வரனை அடுத்த தேசிய தலைவராகக் கடந்த காலத்தில் அடையாளப்படுத்திய தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் இரண்டாம் மட்டத் தலைவர் ஒருவர், “விக்னேஸ்வரன் அமைத்திருப்பது நாற்காலிக்கான கூட்டணி. பொதுத் தேர்தல் முடிந்து ஆறு மாதங்களுக்குள் அந்தக் கூட்டணி கலைந்துவிடும்” என்று சவால் விட்டுக்கொண்டிருந்தார். இன்ன…

  14. புதிதாகச் சிந்திக்க தூண்டும் பிரதமரின் இந்திய விஜயம் எம்.எஸ்.எம். ஐயூப் / 2020 பெப்ரவரி 12 2019நவம்பர் மாதம் 16ஆம் திகதி நடைபெற்ற தேர்தலில் வெற்றிபெற்று, 18ஆம் திகதி பதவியேற்று 11 நாள்களிலேயே, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ, தமது முதலாவது வெளிநாட்டு விஜயமாக இந்தியாவுக்குச் சென்றார். அப்போது அவர், இந்தியாவிலிருந்து வெளியிடப்படும் ‘இந்து’ பத்திரிகைக்கு வழங்கிய பேட்டியொன்றின் போது, அதிகாரப் பரவலாக்கலை உதாசீனம் செய்யும் வகையில் கருத்து வெளியிட்டு இருந்தார். தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு ஒரே தீர்வு, பொருளாதார அபிவிருத்தியாகும் என்பதே அப்போது அவரது நிலைப்பாடாக இருந்தது. ‘30 வருடங்களுக்கு மேலாக, அதிகாரப் பரவலாக்கல் பற்றிக் கூறிக்கொண்டு இருக்கிறார்கள். ஆனால், எதுவு…

  15. பல்கலைக்கழகத்தில் புதைந்து கிடக்கும் சேட்டைகள்: வெட்டைக்கு வரவேண்டிய காலமிது -க. அகரன் ‘கற்றவனுக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு’ என்ற பழமொழியை ஜீரணித்து, ஜீரணித்து வளர்ந்த சமூகமாகத் தமிழ்ச் சமூகம் காணப்படும் நிலையில், இன்றைய கல்விச்சாலைகள், தன் இனத்துக்கான சாபக்கேடான தளங்களாக மாறி வருகின்றமை கவலைக்குரியதாகவே தென்பட ஆரம்பிக்கின்றன. இலங்கையில், 1980க்கு முன்னரான அரச நிர்வாகச் சேவைகளில், தமிழர்களை மிஞ்சி எவரும் இல்லை என்ற நிலை காணப்பட்டது. ஆனால் தற்போதைய நிலையில், வடக்கின் கல்வி நிலையானது, மாகாண மட்டத்தில் ஒன்பதாம் இடத்திலேயே பல வருடங்களாகக் காணப்படுகின்றது. சீரமைக்கப்பட்ட கல்விச் செயற்பாடுகள் இல்லாமை, பாடசாலை ஆசிரியர்கள் தனியார்க் கல்வி நிலையங்களை மய்ய…

  16. ஆர்ப்பாட்ட இடமும் புலிகேசிச் சிந்தனைகளும் என்.கே. அஷோக்பரன் இம்சை அரசன் இருபத்துமூன்றாம் புலிகேசி என்றொரு, கற்பனை வரலாற்று, அரசியல் நையாண்டித் திரைப்படத்தில் ஒரு காட்சி வருகிறது. அதில், மக்கள் கூட்டங்களிடையே தினம் தினம் நடக்கும் ஜாதிச்சண்டைகளுக்குத் தீர்வு தர விளையும் மன்னர் புலிகேசி, ‘வீணாக வீதிகளில் சண்டையிட்டு அரசாங்கச் சொத்துகளுக்குச் சேதத்தை விளைவிப்பதை விட, ஒரு மைதானம் அமைத்து, அதில் சண்டையிட்டு, அதற்கொரு வரியை விதித்தால், இந்த நாட்டுக்கு நிறைய வருமானம் வரும் என்பதுதான் இந்த அரசின் நோக்கம்’ என்று காரணம் சொல்லி, ஜாதிப் பிரிவினைகளால் உண்டாகும் சண்டைகள் இடம்பெறுவதற்கென்று ‘ஜாதிச்சண்டை மைதானம்’ என்று ஒன்றை அமைத்து, அத…

  17. நேர்முகத் தெரிவு முறைகேடுகளால் திணறும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் எம். காசிநாதன் இலட்சக்கணக்கான இளைஞர்கள் வேலை வாய்ப்புக்காகக் காத்திருக்கின்ற நேரத்தில், தமிழ்நாட்டில் மிகப்பெரிய வேலை வாய்ப்பு முறைகேடு நடைபெற்று இருப்பது, இளைஞர் சமுதாயத்தை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. அரசு வேலை வாய்ப்பு அலுவலகங்களில், வேலைக்காகப் பதிவு செய்து விட்டு, நீண்ட வரிசையில் இளைஞர்கள் காத்திருக்கிறார்கள். ஒரு சாதாரண வேலைக்கு, ‘ஆள் தேவை’ என்று விளம்பரம் வந்தால், நேர்முகப் பரீட்சைக்கு ஆயிரக்கணக்கில் இளைஞர்கள் படையெடுக்கிறார்கள். இந்நிலையில், எழுத்து தேர்வுகளில் பேரங்களின் அடிப்படையில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக வெ…

  18. காணாமல் ஆக்கப்பட்டவர்களை மறக்க முயற்சிக்கும் ஒருதீவு? நிலாந்தன்… February 8, 2020 காணாமல் ஆக்கப்பட்டவர்களை நிலத்தில் தோண்டித்தான் எடுக்கவேண்டும் என்று விமல் வீரவன்ச கூறியிருக்கிறார். இதை அவர் மட்டும்தான் கூறுகிறார் என்று இல்லை. ஏற்கனவே ஜனாதிபதி கோட்டாபய அதை கூறிவிட்டார். அவருக்கு முன் ரணில் விக்கிரமசிங்க அதைக் கூறிவிட்டார். சிங்களத் தலைவர்கள் மட்டுமல்ல சம்பந்தரும் அப்படித்தான் கூறுகிறார். ஆனால் அந்த உண்மையை கூறுவதற்கு அவர்கள் பயன்படுத்தும் வார்த்தைகளில் தான் வேறுபாடு உண்டு. 2016ஆம் ஆண்டு தைப்பொங்கல் தினத்தன்று அதை ரணில் விக்ரமசிங்க கூறினார். ஆனால் காணாமல் போனவர்களில் பலர் வெளிநாடு சென்று இருக்கலாம் என்று அவர் சொன்னார். அதைத்தான் புதிய ஜனாதிப…

  19. காணாமல்போனோர் பிரச்சினையைக் கையாளுதல்: அரசின் நிலைப்பாட்டில் மறுபரிசீலனை அவசியம் ஒரு அரசாங்கம் தன்மீது தானாகக் குற்றம் சுமத்தும் என்று எதிர்பார்ப்பது சாத்தியமில்லை. போரின் முடிவிற்குப் பின்னரான காலப்பகுதியில் அரசாங்கத்திற்கும், மனித உரிமைகள் செயற்பாட்டாளர்களுக்கும் இடையில் ஒரு பாலமாக செயற்படுவதற்கு முயற்சித்த முன்னாள் இராஜதந்திரி ஒருவர் முன்னர் ஒருதடவை இவ்வாறு கூறினார். போரின் போது காணாமல்போனோராக அறிவிக்கப்பட்டவர்கள் உண்மையில் இறந்துவிட்டார்கள் என்றும், அவர்களுக்கு நேர்ந்த கதிக்கு அரசாங்கம் பொறுப்பல்ல என்றும் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ அண்மையில் வெளியிட்ட கருத்து இதுவிடயத்தில் மறுப்பைத் தெரிவித்து வருகின்ற ஒரு நீண்டகாலக் கொள்கையின் தொடர்ச்சியேயாகும். அரசாங்கத்தின்…

  20. மீண்டும் மீண்டும் தவறிழைக்கும் சிங்களத் தலைமைகள் கே. சஞ்சயன் / 2020 பெப்ரவரி 07 , மு.ப. 09:02 கோட்டாபய ராஜபக்‌ஷவின் அரசாங்கம், கடைசியில் தாம் நினைத்தது போலவே, தேசிய சுதந்திர தின நிகழ்வில் இருந்து, தமிழ் மொழியை நீக்கி விட்டது. தேசிய சுதந்திர தின நிகழ்வில், சிங்கள மொழியில் மாத்திரம் தேசிய கீதம் பாடப்படும் என, அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் அறிவித்தபோதே, தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடப்படமாட்டாது என்ற உறுதியான முடிவை அரசாங்கம் எடுத்து விட்டது. ஆனால், இந்த விவகாரம் சர்ச்சையாகக் கிளம்பியபோது, பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவும் சரி, அவரது அமைச்சர்களும் சரி, தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடப்படமாட்டாது என்ற முடிவை அரசாங்கம் எடுக்கவில்லை, என்று கூறிச் சமாளித்திரு…

  21. பாடாத கீதம்: தமிழ் பேசும் மக்களின் தேச உணர்வு மொஹமட் பாதுஷா / 2020 பெப்ரவரி 07 , மு.ப. 08:51 இரண்டு விடயங்கள் பற்றிக் குறிப்பாகப் பேச வேண்டியிருக்கின்றது. ஒன்று, இந்த நாட்டில் வாழ்கின்ற தமிழ், முஸ்லிம் மக்களை, பெரும்பான்மை இனமும் பெருந்தேசியமும் ஆட்சியாளர்களும் இலங்கைத் தேசத்தின் மக்களாகப் பார்க்க வேண்டிய கடப்பாடு பற்றியதாகும். இரண்டாவது, சிறுபான்மைச் சமூகங்கள், ‘இலங்கையர்’ என்ற பொதுமைப்பாட்டுக்குள், தம்மைச் சரியாக நிலைநிறுத்திக் கொள்ள வேண்டும் என்பது பற்றியதாகும். ஏனெனில், வெறுமனே தேசிய கீதத்தைத் தமிழில் பாடுவதால் மாத்திரம், ஒரு நாட்டின் மீதான தேசபக்தி உருவாகி விடுவதில்லை. அதுபோலவே, எல்லா மக்களையும் சமமாக மதிக்கின்றோம் என்று, சி…

  22. மதச் சகிப்பின்மையும் ‘இலங்கையர்’ என்ற அடையாளமும் இன்று இலங்கை எதிர்நோக்கும் சவால்களில் பிரதானமானது, இலங்கையின் பல்லின அடையாளத்தைத் தக்கவைப்பதாகும். ஒருபுறம், இலங்கையர் என்ற பொது அடையாளத்துக்குள் எல்லோரையும் உள்ளீர்க்க அரசாங்கம் முயல்கின்ற அதேவேளை, இலங்கையில் மத சகிப்பின்மை வளர்ந்துள்ளது. இன்றைய இலங்கை அரசாங்கத்தின், நீக்கமற நிறைந்த அங்கமாக, பௌத்த சிங்கள தேசியவாதம் நிலைபெற்றுள்ளது. இது, அரசு கோருகின்ற ‘இலங்கையர்’ என்ற அடையாளம், யாது என்ற வினாவை எழுப்புகிறது. இலங்கையர் என்ற அடையாளம், தனிமனிதர்களது இனத்துவ, மத அடையாளங்களை அங்கிகரித்து, அதனூடாகத் தோற்றம் பெறுகின்ற அடையாளமா அல்லது பௌத்த சிங்களப் பெருந்தேசியவாத அகங்காரம் கோருகின்ற ஒற்றைப்பர…

  23. தமிழ்த் தேசிய அரசியலுக்குச் சோதனை -இலட்சுமணன் விஞ்ஞானத்தில் மாத்திரமல்ல, உலகின் அனைத்து விடயங்களிலும் சோதனை முயற்சிகள் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன. அதேபோன்றுதான், அரசியலிலும் சோதனைகள், சாதனைகள், வெற்றிகள், தோல்விகள் சாதாரணமானவை; இவை தொடர்ந்தும் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. இவை அரசியலில் வெறுமனே, தேர்தல்களுக்கு மட்டுமானவை இல்லை; ஆனால், இப்போதைய காலச்சூழலில் இந்தச் சோதனை முயற்சிகள் தேர்தல்கானவையாகவே மாறியிருக்கின்றன. இதில் நகைச்சுவை என்னவென்றால், இலங்கையில் தமிழர் அரசியல் என்பது, தமிழ்த் தேசியத்துக்கு மாத்திரமே சொந்தமானது என, எல்லோரும் நினைக்கிறார்கள். இலங்கையின் அரசியல் கள நிலைவரம் மிகவும் மோசமாகத்தான் இருக்கிறது. ஒவ்வொருவருக்க…

  24. அவுஸ்ட்விட்ச் 75: ஒடுக்கப்பட்டோரில் இருந்து ஒடுக்குவோராக... தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ / 2020 பெப்ரவரி 06 வரலாற்றின் சில இருண்ட பக்கங்கள் பயங்கரமானவை, திகிலூட்டுபவை, அச்சத்தை விதைப்பவை. அந்தப் பக்கங்கள், அரிய பல பாடங்களை எமக்குச் சொல்லிச் சென்றுள்ளன. தேசியவாதம், தேசியவெறியாக மாறுகின்ற போது, நிகழக்கூடிய ஆபத்துகளையும் இனவெறி ஏற்படுத்தக்கூடிய விபரீதங்களையும் காட்டும் குறிகாட்டிகள் வரலாறெங்கும் உண்டு. அவற்றை, இன்று நாம் நினைவுகூரும் போது, அந்த இருண்ட பக்கங்களுக்கு இட்டுச் சென்ற காரணிகளையும் கவனமாய் மனத்தில் இருத்துதல் வேண்டும். ஏனெனில், அதேபோன்ற பயங்கரங்கள் இனியும் நிகழாது என்பதற்கு, எந்தவோர் உத்தரவாதமும் இல்லை. இதை ஈழத்தமிழர்களை விட, நன்கறிந்தவர் யா…

  25. " ”இந்த நாடு சிங்களவரது. தேசியகீதம் இனி தமிழல் இல்லை” "SRI LANKA IS ONLY FOR SINHALESE" - 1956, 1958, 1983 AND NOW IN 2020. . . NO TO TAMIL NATIONAL ANTHEM - PRESIDENT (Sri Lanka’s Constitution provides for the singing of the national anthem in both Sinhalese and Tamil. ) ”இந்த நாடு சிங்களவரது.” என 1956ல் பண்டார நாயக்க எங்கள் தந்தையருக்குச் சொன்னார். :இந்த நாடு சிங்களவரது” என 1983ல் ஜே.ஆர் எங்கள் தலைமுறைக்குச் சொன்னார். இப்ப 2020பதில் புதியவர் மீண்டும் ”இந்த நாடு சிங்களவரது” என எங்கள் பிள்ளைகளுக்கு சொல்லியிருக்கிறார். சாம்ராட்சியங்களதும் தேசங்களதும் குப்பைமேட்டில் நிமிரும் புத…

    • 0 replies
    • 613 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.