அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9211 topics in this forum
-
இன அழிப்பின் குறியீடே தையிட்டி விகாரை- அரசியல் ஆய்வாளர் சட்டத்தரணி சி.அ. யோதிலிங்கம்யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள விகாரை இன அழிப்பின் குறியீடு என அரசியல் ஆய்வாளர் சட்டத்தரணி சி.அ. யோதிலிங்கம் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவரால் இன்றையதினம்(15) வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, தையிட்டி விகாரை தொடர்பாக தமிழ் மக்களின் ஒன்றிணைந்த போராட்டம் கடந்த 12ஆம் திகதி புதன்கிழமை பௌர்ணமி தினத்தன்று நடந்து முடிந்திருக்கின்றது. ஆயிரக்கணக்கில் மக்கள் போராட்டத்தில் பங்குபற்றியுள்ளனர். போராட்டக்காரர்களுக்கும், பொலிசாருக்குமிடையே வாக்குவாதங்களும் இடம்பெற்றிருக்கின்றன. சிங்கள மக்களை விகாரை வளவுக்குள் அனுமதித்த பொலிஸார் …
-
- 0 replies
- 277 views
-
-
ஒரு துரோகத்தின் நாட்காட்டி தமிழினம் தனது சரித்திரத்தில் பல தியாகிகளை, வரலாற்று நாயகர்களை, வீர மறவர்களைக் கண்டிருக்கிறது. ராஜ ராஜ சோழன் முதல் பாண்டியர்கள், வன்னியர்கள் என்று பல தமிழ் எழுச்சி வரலாறுகளை அது கண்டிருக்கிறது. நமது முன்னோடிகளின் வாழ்க்கை வரலாறுகள் எமதினத்தின் எழுச்சிக்கும், வளர்ச்சிக்கும் இன்றியமையாதது என்பதுடன், அவைபற்றித் தொடர்ந்தும் பேசப்படவேண்டும் என்பதும், எமது எதிர்காலச் சந்ததிக்கும் இவை கடத்தப்படவேண்டும் என்பது அவசியமானது. எமது வரலாற்றில் வீர மறவர்களினதும், வரலாற்று நாயகர்களினதும் கதை சொல்லப்படும்பொழுது உதிரியாக இன்னொரு விடயமும் கூட வருகிறது. இது தமிழினத்தால் தவிர்க்கமுடியாத, இனத்தினுள்ளேயே உருவாகி நெருக்கமாக இழையோடிப்போயிருக்கும் ஒரு சாபக்கேடு…
-
-
- 588 replies
- 81.9k views
- 1 follower
-
-
மாவை சேனாதிராஜாவின் அரசியல் வாழ்வின் மூலமான படிப்பினைகள் February 9, 2025 — வீரகத்தி தனபாலசிங்கம் — இலங்கை தமிழ் அரசியல் சமுதாயம் ஒரு குறுகிய கால இடைவெளியில் இரு மூத்த அரசியல் தலைவர்களை இழந்து விட்டது. இருவருக்கும் இடையில் சுமார் பத்து வயது வித்தியாசம் இருந்தபோதிலும், அவர்கள் ஆறு தசாப்தங்களுக்கும் அதிகமான காலத்தை இலங்கை தமிழர்களின் ஜனநாயக ரீதியான அரசியல் உரிமைப் போராட்டத்துக்காக அர்ப்பணித்தவர்கள். இராஜவரோதயம் சம்பந்தன் மரணமடைந்து ஏழு மாதங்கள் நிறைவடைவதற்கு இரு நாட்கள் இருந்த நிலையில் மாவை சேனாதிராஜா 2025 ஜனவரி 29 ஆம் திகதி புதன்கிழமை காலமானர். அவரது இறுதிக் கிரியைகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை சொந்த ஊரான மாவிட்டபுரத்தில் பெருமளவு மக்களின் ப…
-
- 0 replies
- 464 views
-
-
தையிட்டி விகாரை : என்ன செய்யலாம்? - நிலாந்தன். adminFebruary 9, 2025 தையிட்டி விகாரை ஒரு தனியார் காணியில் கட்டப்படுறது என்பதனால் அது சட்டவிரோதமானது என்று கூறி அதனை ஒரு சட்ட விவகாரமாக மட்டும் குறுக்குவது தமிழ் மக்களுக்குப் பொருத்தமானது அல்ல. அது சட்டப் பிரச்சினை மட்டுமல்ல, அதைவிட ஆழமான பொருளில் அது ஓர் அரசியல் விவகாரம். இன ஒடுக்குமுறையின் ஆகப் பிந்திய வெளிப்பாடுகளில் ஒன்று. அது ஓர் ஆக்கிரமிப்பு. ஒரு மரபுரிமைப் போர். இலங்கைத் தீவின் சட்டங்கள் எவ்வாறு தமிழ் மக்களுக்கு எதிராக வளைக்கப்படும் என்பதற்கு அது ஒரு சான்று. 2009க்கு பின்னரும் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் நிறுத்தப்படவில்லை என்பதற்கு அது ஒரு சான்று. சம்பந்தப்பட்ட சில தமிழர்களின் காணி உரிமை பற்றிய ஒரு …
-
- 1 reply
- 706 views
- 1 follower
-
-
தலைவர்களை இழந்த தமிழ்த்தேசிய அரசியல்! February 9, 2025 — கருணாகரன் — தமிழ்த்தேசிய அரசியலை முன்னெடுப்பதாகக் கூறும் கட்சிகள் பதினைந்துக்கு மேல் உண்டு. ஆனாலும் தமிழ்த்தேசிய அரசியல் அரங்கிலே ஒரு வலிமையான – அடையாளம் காட்டக் கூடிய – தலைவர் என எவருமே இல்லை. என்பதால்தான் தமிழ்த்தேசிய அரசியற் சக்திகளை ஒருங்கிணைக்கவும் முடியவில்லை. அதனைக் கோட்பாட்டு ரீதியாக வளர்த்தெடுக்கவும் முடியவில்லை. நடைமுறை ரீதியான பிரச்சினைகளுக்கு அதனால் முகம் கொடுக்கவும் முடியவில்லை. அதைப் பலமடையச் செய்யவும் முடியவில்லை. உள்நாட்டில் தமிழ்ச் சூழலிலும் சரி, இலங்கைக்குள்ளும் சரி, இலங்கைக்கு வெளியே சர்வதேச சமூகத்தோடும் சரி, புலம்பெயர்ந்த தமிழர்களிடத்திலேயும் சரி அதனால் சரியான முறையி…
-
- 1 reply
- 394 views
-
-
பாடசாலை மாணவர்களின் விவாத மேடையும் தமிழ் அரசியலும் – நிலாந்தன். பாடசாலை மாணவர்கள் அரசியல்வாதிகளை கிழித்துத் தொங்க விட்டார்கள் என்று கூறிச் செய்திகளும் காணொளிகளும் நேற்றிலிருந்து வந்து கொண்டிருக்கின்றன.யுடியுப்பர்களுக்கு சூடான, உணர்ச்சிகரமான விடயங்கள் கிடைத்திருக்கின்றன. அவர்கள் வழமைபோல தலைப்புக்கும் உள்ளடக்கத்துக்கும் தொடர்பு இல்லாத காணொளித் துண்டுகளை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள். கடந்த சில ஆண்டுகளாக மேலெழுந்து வருகின்ற ஒரு போக்கு இது. யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிக்கும் கொழும்பு இந்துக் கல்லூரிக்கும் இடையிலான விவாதப் போட்டிக் களத்தில் எடுக்கப்பட்ட காணொளிகளே அவை. அந்த விவாதப் போட்டிகளின் தலைப்புகள் பெரும்பாலும் அரசியல் பரிமாணத்தைக் கொண்டவை. அதனால் மாணவர்கள் அரச…
-
- 0 replies
- 379 views
-
-
சோல்பரி ஆணைக்குழு நியமிக்கப்பட்ட 80வது ஆண்டில் ஈழத்தமிழர் இறைமையின் தொன்மை குறித்து சில தெளிவுகள் – மூத்த அரசியல் ஆய்வாளர் சூ. பற்றிமாகரன் January 31, 2025 நீதியரசர் சச்சி பொன்னம்பலத்தின் “சிறிலங்கா-தமிழர் தேசியப் பிரச்சினையும் தமிழர் விடுதலைப் போராட்டமும்” நூலிருந்து சில தரவுகள்சிறிலங்காவின் இன்றைய அரசத்தலைவர் அநுரகுமர திசநாயக்கா இரு தேச இனங்களின் இறைமைகளின் சமத்துவத்தை உறுதிப்படுத்தி நாட்டை பொருளாதார பெருவீழ்ச்சியிலிருந்து மீட்பதற்கான சில வரலாற்று வழிகாட்டல் ஈழத்தமிழர் இறைமையை இலண்டன் கிழக்கிந்தியக் கம்பெனி 1796 இல் டச்சுக் காலனித்துவ அரசிடம் இருந்து கைப்பற்றி மதராசில் இருந்து ( இன்றைய சென்னை) தமிழகத்துடன் இணைந்ததாக முழு இலங்கையையும் 1802 வரை ஒரே சட்டத்தில் ஓரே …
-
-
- 3 replies
- 330 views
-
-
இலங்கை அரசியல் வரலாற்றில் மகிந்த ராஜபக்சவின் இடம் February 4, 2025 — வீரகத்தி தனபாலசிங்கம் — இலங்கையின் காலஞ்சென்ற முன்னாள் பிரதமர்கள் அல்லது ஜனாதிபதிகளில் எவரினதும் உடல் பேணிப்பாதுகாக்கப்பட்டு நினைவாலயத்தில் வைக்கப்படவில்லை. அவர்கள் இறந்தபோது உடல்கள் பேணிப் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற வேண்டுகோள் விடுக்கப்பட்டதாகவும் நாம் அறியவில்லை. ஆனால், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மறைந்த பிறகு அவரது உடலை பேணிப்பாதுகாத்து மக்களின் பார்வைக்கு வைக்கவேண்டும் என்று ஒரு வேண்டுகோளை முன்னாள் பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ச கடந்தவாரம் விடுத்திருக்கிறார். மூன்று தசாப்தகால உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டு வந்த மகிந்தவின் மரபை எதிர்காலச் சந்ததிகள் கௌர…
-
- 1 reply
- 492 views
- 1 follower
-
-
யாழ்ப்பாணம்: பிழையான கேள்வியும் சரியான பதிலும்….! February 5, 2025 — அழகு குணசீலன் — 28 அமைப்புக்களின் கூட்டணியான என்.பி.பி.யும் அதன் பிரதான பங்காளியான ஜே.வி.பி.யும், அதன் தலைவர்களும், ஜனாதிபதியும் அள்ளி வீசிய தேர்தல் வாக்குறுதிகளை -கொள்கைகளை நடைமுறைப்படுத்த முடியாமல் திண்டாடுகிறார்கள். “இந்த வாக்குறுதிகளை உங்களால் நிறைவேற்ற முடியாது அப்படியானால் அவற்றை எப்படிச் செய்யப் போகிறீர்கள்? என்பதை விவாதிப்பதற்கு ஒரு பொருளாதார விவாதத்திற்கு வாருங்கள்” என்று எதிரணியினர் எழுப்பிய கேள்விகளுக்கு ஒரு சரியான பதில் அளிக்கப்படவில்லை. அரசியல் செயற்பாடுகளுக்கான வீதிவரைபடம் அவர்களிடம் இருக்க வில்லை என்பதால் விவாதத்திற்கும் செல்லவில்லை. மாறாக மெயின் ரோட்டில் ப…
-
- 0 replies
- 509 views
-
-
தமிழரசு கட்சி சிதைந்ததாலும்> அழிந்தாலும் பரவாயில்லை> கட்சி தனது கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்பதே சுமந்திரனின் நிலைப்பாடு என அரசியல் ஆய்வாளரும் சட்டத்தரணியும்> சமூக விஞ்ஞான ஆய்வு மைய இயக்குநருமான சி.அ.யோதிலிங்கம் தெரிவித்துள்ளார். அவர் தனது அலுவலகத்தில் 31ம் திகதி அன்று நடாத்திய ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது> வவுனியாவில் இடம்பெற்ற இலங்கை தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் சீ.வி.சிவஞானம் தலைவராக தெரிவுசெய்யப்பட்டுள்ளார். அதுமட்டுமின்றி சுமந்திரன் தரப்போடு முரண்பட்ட பலரும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். அதற்கான தீர்மானமும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது முழுக்க மு…
-
- 2 replies
- 378 views
-
-
அதிகாரிகளும் தமிழ் தலைவர்களும் மடங்கினர்! February 3, 2025 — கருணாகரன் — தென்னிலங்கை அரசியற் களத்தைக் கலக்கும் NPP யும் அநுர குமார திசநாயக்கவும் வடக்கில் தமிழ்த்தரப்பையும் தடுமாற வைக்கும் உபாயத்தில் இறங்கியிருப்பதாகத் தெரிகிறது. பாராளுமன்றத் தேர்தலில் வடக்கில் பெற்ற வெற்றி NPP க்கும் அநுர குமாரவுக்கும் வடக்கில் தமக்கான அரசியல் அடித்தளத்தைப் பலப்படுத்துவதற்கான ஊக்கத்தை அளித்துள்ளது. இதற்கான தந்திரோபாய நடவடிக்கையில் அநுர ஈடுபடுகிறார். அதனுடைய வெளிப்பாடுகளே, அவருடைய அண்மைய யாழ்ப்பாண விஜயமாகும். யாழ்ப்பாண விஜயத்தில் அநுர சில வெற்றிகளை உடனடியாகவே பெற்றுள்ளார். 1. யாழ்ப்பாணத்தின் பல்வேறு இடங்களிலும் அநுரவைச் சுற்றி…
-
- 1 reply
- 463 views
-
-
மாவையும் மட்டக்களப்பும்….. February 2, 2025 — அழகு குணசீலன் — தமிழ்த்தேசிய சாத்வீக போராட்ட வரலாறு, ஆயுதபோராட்டமாக பரிணமித்த அரசியல் நிலைமாறு காலத்தை பதிவு செய்பவர்கள் எவரும் அன்றைய மூன்று இளம் தமிழ் தேசிய செயற்பாட்டாளர்களை மறந்தும் கடந்து செல்ல முடியாது. அவர்கள் வண்ணை ஆனந்தன், காசி ஆனந்தன், மாவை சேனாதிராஜா. இவர்களில் காசி ஆனந்தனும், மாவை சேனாதிராஜாவும் தமிழ்த்தேசிய அரசியல் களத்தில் நிலைத்து நின்றனர். அவர்களில் ஒருவரான மாவையின் மூச்சு 29.01.2025 அன்று நின்று போனதால் அவரும் ஈழப்போராட்ட வரலாற்றில் இறந்த காலமாகிவிட்டார். வடக்கின் எந்த தலைவருக்கும் இல்லாத தமிழ்த்தேசிய அரசியல் உறவு கிழக்கில் -மட்டக்களப்பில் மாவை சேனாதிராஜாவுக்கு உண்டு. 19…
-
- 0 replies
- 394 views
-
-
சேனாதி : மார்ட்டின் ரோட்டுக்கும் நீதிமன்றத்திற்கும் இடையே தத்தளிக்கும் ஆவி? 1965க்குப் பின்னரான காலகட்டம் என்பது இலங்கை முழுவதிலும் தீவிரமான அரசியல் நிலைப்பாடுகள் கருக்கொண்ட ஒரு காலகட்டம் ஆகும். சிங்கள மக்கள் மத்தியிலும் தமிழ் மக்கள் மத்தியிலும் ஆயுதப் போராட்டத்திற்கான கருக்கள் உற்பத்தியாகிய ஒரு காலகட்டம். இக்கால கட்டத்தில் அரசியலில் ஈடுபட்டவர்களில் ஒருவர் மாவை. இப்போதுள்ள தமிழரசு கட்சித் தலைவர்களில் நீண்ட காலம் சிறையிருந்தவர் மாவைதான். இப்படிப்பார்த்தால் ஆயுதப் போராட்டத்திற்கு முன்னரான மிதவாத அரசியல், ஆயுதப் போராட்ட காலகட்ட மிதவாத அரசியல், ஆயுதப் போராட்டத்திற்கு பின்னரான மிதவாத அரசியல் ஆகிய மூன்று காலகட்டங்களின் ஊடாகவும் வந்தவர் மாவை. அதனால்தான் ஆயுதப…
-
-
- 4 replies
- 624 views
-
-
வேலையற்ற பட்டதாரிகளும் தமிழ்ச் சமூகமும் – நிலாந்தன். வேலை தேடும் பட்டதாரிகள்,ஜனாதிபதியின் வருகையையொட்டி, யாழ்ப்பாணம் கச்சேரிக்கு அருகே ஓர் ஆர்ப்பாட்டத்தை ஒழுங்குபடுத்தியிருந்தார்கள்.போலீசார் அவர்களை கச்சேரியை நோக்கி வர விடவில்லை.அவர்களை கண்டி வீதியில்,கச்சேரிக்கு அருகே அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலைய சூழலில் வைத்து மறித்து விட்டார்கள். அதேசமயம் ஜனாதிபதி அவர்களுடைய கண்ணில் படாமல் பழைய பூங்கா வீதி வழியாக வெளியேறிச் சென்று விட்டார்.பட்டதாரிகள் தங்களுடைய முறைப்பாட்டை ஜனாதிபதியிடம் கையளிக்க முடியவில்லை. தமிழ்ப்பகுதிகளில் மட்டும் 3000த்துக்கும் குறையாத பட்டதாரிகள் நிரந்தர வேலையின்றி இருக்கிறார்கள். நாடு முழுவதும் சுமார் 30,000 பட்டதாரிகள் அவ்வாறு உண்டு என்று ஒரு பட்…
-
- 0 replies
- 304 views
-
-
அர்ச்சுனாவின் அரசியலும் அதைவிரும்பும் இரசிகர்களும். ( யாழ் தினக்குரல்- 2/2,ஞாயிறு) தமிழ்த் திரைப்படமொன்றில் தன்னை ஊரில் ரவுடியாகப் ‘பில்ட்டப்’ பண்ணும் நோக்கில் நகைச்சுவை நடிகர் வடிவேலு “நானும் ரவுடிதான். என்னையும் கைது செய்து காவல் நிலையத்துக்கு கொண்டு போங்கள்” என்று கெஞ்சுவதை சிலர் பார்த்திருப்பீர்கள். அந்தக்காட்சிதான் அண்மையில் பாராளுமன்ற உறுப்பினர் அரச்சுனா இராமநாதனை சாவகச்சேரியில் வைத்து அனுராதபுர காவல்துறையினர் கைது செய்தபோது அவர் நடந்தகொண்டவிதம் நினைவுபடுத்தியது. காவல்துறையினர் அவரைக் கைவிலங்கின்றி அழைத்துச்செல்ல முற்பட்டபோது அர்ச்சுனா தனக்கு விலங்கிட்டுக் கூட்டிச் செல்லுங்கள் என்று தானே வலிந்து கேட்டு விலங்கு கையில் மாட்டப்பட்டதைப் பார்த்தோம். அர்…
-
- 0 replies
- 322 views
-
-
ஆட்சியாளர்களின் நண்பர்களும் விரோதிகளும் -நஜீப் பின் கபூர்- ஆட்சியாளர்களின் முதலாவது வரவு – செலவுத் திட்டம் மற்றும் இன்னும் இரு வாரங்களில் உள்ளூராட்சித் தேர்தல்கள் அறிவிப்பு என்பன வெகுவிரைவில் வர இருப்பதால் அவைபற்றி பேச இருக்கின்றன. அதற்கு முன்னர் அனுர அரசின் நண்பர்கள், விரோதிகள் என்ற தலைப்பில் சில விடயங்களை பேச எதிர்பார்க்கின்றோம். அரசியலில் நிரந்தர நண்பர்களும் இல்லை; நிரந்தர எதிரிகளும் இல்லை என்பது நமக்குக் கேட்டுக் கேட்டுப் புளித்துப் போன ஒரு கதைதான். எனவே அதற்கு நாம் மேலும் விளக்கம் கொடுக்க தேவையில்லை. அதனால் இன்றைய நண்பர்கள் நாளை விரோதிகளாகலாம். இன்றைய விரோதிகள் நாளை நண்பர்கள…
-
- 0 replies
- 226 views
-
-
அரசியல் தீர்வு கிடப்பில் ஏன்? நடராஜ ஜனகன் தேசிய மக்கள் சக்தியின் ஆட்சி மலர்ந்து நூறு நாட்கள் கடந்துள்ள நிலையில், கிளீன் ஸ்ரீலங்கா வேலை திட்டத்தின் முன்னெடுப்புகளே அதிகம் மேன்நிலை பெற்று வருகிறது. இலங்கையின் ஆட்சி அமைப்பின் 77 வருட கால வரலாற்றைப் பார்க்கின்ற போது தமிழ் தேசிய பிரச்சினைக்கான தீர்வு எட்டப்படாததன் காரணமாகவே அனைத்து பிரச்சினைகளும் தோற்றம் பெறத் தொடங்கின. இவை இறுதியில் 30 வருட கால யுத்தம் என்ற நிலைவரை சென்றிருந்தது. இதன் காரணமாகவே ஊழல் மோசடி, கறுப்பு பண வெளியேற்றம், அந்நிய தலையீடுகள் என அனைத்தும் இடம்பெறத் தொடங்கின. தற்போதைய ஆட்சியாளர் ப…
-
- 0 replies
- 326 views
-
-
தமிழ் அரசியலில்13வது திருத்தமும், அதற்கு அப்பாலும் …..?(பகுதி 1) January 28, 2025 — வி.சிவலிங்கம் — சமீபத்தில் மூத்த பத்திரிகையாளர் தனபாலசிங்கம் அவர்கள் ’13வது திருத்தத்தினை தமிழர்கள் என்ன செய்யப் போகிறார்கள்?’ எனக் கேள்வி எழுப்பி கட்டுரை ஒன்றினை வெளியிட்டிருந்தார். இக் கட்டுரை இலங்கை ஜனாதிபதியின் இந்திய விஜயத்தின் பின்னதான நிகழ்வுகளின் பின்னணியில் ஏற்பட்டுள்ள நிச்சயமற்ற நிலமைகளைக் கருத்தில் கொண்டு வரையப்பட்டிருந்தது. குறிப்பாக, 13வது திருத்தம் தொடர்பாக வழமையாக இந்திய தரப்பினர் அதனை நடைமுறைப்படுத்துவதை வற்புறுத்துவது வழக்கம். ஆனால் இம்முறை வழக்கிற்கு மாறாக தற்போதைய அரசியல் யாப்பின் உள்ளடக்கத்தினை நடைமுறைப்படுத்துமாறு கோரியிருப்பதும் அது தொடர்பாக …
-
- 2 replies
- 371 views
-
-
அரிசியின் அரசியல் எம்.எஸ்.எம்.ஐயூப் தற்போது நாட்டில் நிலவும் அரிசி பிரச்சனை தமது காலத்தில் உருவானது அல்ல, அது நீண்ட காலமாக நிலவி வரும் பிரச்சனை என்று தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் தலைவர்கள் கூறுவது உண்மை ஆயினும் அதை தீர்ப்பது பதவியில் இருக்கும் அரசாங்கத்தின் பொறுப்பு என்பதை எவராலும் மறுக்க முடியாது. கடந்த செப்டம்பர் மாதம் 21 ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் சாதாரணமாக எந்த ரகத்திலாயினும் ஒரு கிலோ கிராம் அரிசியின் விலை 200 ரூபாவுக்கு குறைவாகவே இருந்தது. ஆனால் அத் தேர்தலுக்குப் பின்னர் சில சந்தர்ப்பங்களில் அவ்விலை 300 ரூபாவுக்கு மேலாகவும் அதிகரித்தது. சந்தையில் அரிசிக்கு ஏற்பட்ட தட்டுப்பாடே இதற்குக் காரணமாகும். இந்த விடயம் தொடர்பாக ஜனாதிப…
-
- 0 replies
- 230 views
-
-
யாழ்ப்பாணத்தின் மிகஉயரமான கட்டிடத்தின் பெயரை ஏன் மாற்றினார்கள்? நிலாந்தன். தமிழ்ப் பகுதிகளில் கடலட்டை ஒரு ராஜதந்திரப் பொருளாகிவிட்டது. காற்றாலை ஒரு ராஜதந்திரப் பொருளாகிவிட்டது. ஒரு கலாச்சார மண்டபமும் அதன் பெயரும் ராஜதந்திரப் பொருட்களாகிவிட்டன. தமிழர்களுக்கான குறிப்பாக யாழ்ப்பாணத்துக்கான இந்திய அரசாங்கத்தின் பரிசு என்று வர்ணிக்கப்படும் யாழ்ப்பாண கலாச்சார மண்டபம் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான தமிழர்கள் சார்ந்த பலப் பிரயோகத்தின் குறியீடா? ஒரு பெரிய நாடு அயலில் உள்ள ஒரு சிறிய நாட்டின் சிறிய மக்கள் கூட்டத்துக்கு பரிசாகக் கட்டிய கலாச்சார மண்டபம் என்று பார்த்தால்,உலகிலேயே மிகப்பெரியது இந்த கலாச்சார மண்டபம்தான். உலகின் வெவ்வேறு பகுதிகளில் இதுபோன்ற வெவ்வேறு க…
-
-
- 3 replies
- 414 views
-
-
அவர்களே ‘திராவிட’ புலிகள் தான்! Jan 21, 2025 ப.திருமாவேலன் கொழுப்பெடுத்த கூமுட்டை ஒன்று, தான் பிரபாகரனைச் சந்திப்பதற்கு முன்பு ‘திராவிடம்’ பேசியதாகவும், பிரபாகரன் தான் ‘திராவிட’ மாயையை உடைத்தார் என்றும் உளறித் திரிகிறது. அதைக் கேட்ட போது ‘ஆமைக் கறி’ நாற்றத்தை விடக் கேவலமாக இருந்தது. அவர்களே ‘திராவிட’ புலிகள் என்பது இந்த குணக்கேடனுக்குத் தெரியாது. ‘தமிழர்கள்'( திராவிடர்கள்) தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் 1976 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. அதன் பிறகு 1978 ஆம் ஆண்டு கியூபாவில் உலகம் முழுக்க இருக்கும் விடுதலைப் போராட்ட அமைப்புகள் கலந்து கொண்ட மாநாட்டில் புலிகள் பங்கெடுத்தார்கள். 11TH WORLD FESTIVAL YOUTH AND STUDENTS – IN CUBA – 1978 என்று அந்த …
-
-
- 228 replies
- 10.8k views
- 1 follower
-
-
சிறிதரன் -சுமந்திரன்: கள்வன், பொலிஸ் விளையாட்டு…..! January 25, 2025 — அழகு குணசீலன் — தமிழரசுக்கட்சியின் உட்கட்சி நெருக்கடிக்கு குறைந்த பட்சம் வயது 15. இதற்கும் சுமந்திரனின் தமிழ்த்தேசிய பாராளுமன்ற அரசியல் பிரவேசத்திற்குமான தொடர்பு சமாந்தரமானது. தனிநபர் வழிபாடு, அதிகாரபோட்டி, அரசியல் பொறாமை, குத்துவெட்டு, உள்ளத்தில் ஒன்று உதட்டில் இன்னொன்று, நானா..? நீயா..? போன்ற அரசியல் நோய்களுக்கு சரியான நேரத்தில் சரியான சிகிச்சை அளிக்காததால், காலம் கடந்தும் தவறான நேரத்தில் தவறான சிகிச்சையே அளிக்கப்படுகிறது. உளவியல் மனநோய்க்கு சட்டவைத்தியம் செய்யமுடியாது. கட்சியின் தலைமுதல் பாதம்வரையான நிர்வாக கட்டமைப்பில் சத்திர சிகிச்சை செய…
-
-
- 1 reply
- 412 views
-
-
ஒன்றிணைந்து செயற்படுவதற்கான எதிரணிக் கட்சிகளின் முயற்சிகள் January 26, 2025 — வீரகத்தி தனபாலசிங்கம் — தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கும் அதிகமான பலம் இருக்கின்ற போதிலும், ஆட்சிமுறையில் அகங்காரம் இல்லாத ஆரோக்கியமான ஒரு போக்கைக் காணக் கூடியதாக இருக்கிறது. மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பாராளுமன்றத்தில் கொண்டிருந்த முன்னைய அரசாங்கங்களின் காலத்தில் ஆட்சிமுறையின் எதிர்மறையான அனுபவங்கள் எமது நாட்டு மக்களுக்கு இருக்கிறது. முன்னைய போக்குகளில் இருந்து வேறுபட்ட முறையில் தங்களது ஆட்சிமுறை இருக்க வேண்டும் என்பதில் ஜனாதிபதி அநுரா குமார திசாநாயக்கவும் அரசாங்கத்தின் மற்றைய தலைவர்களும்…
-
- 0 replies
- 253 views
-
-
என் இனமே என் சனமே உன்னை உனக்கே தெரிகிறதா? நிலாந்தன். adminJanuary 26, 2025 தமிழரசுக் கட்சியின் உள்முரண்பாடு நாடாளுமன்றத்திலும் பிரதிபலித்திருக்கின்றது. நாடாளுமன்றத்தில் சிறீதரன் சுமந்திரனுக்கு எதிராக உரையாற்றியிருக்கிறார். ஒரு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அந்தக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு எதிராக நாடாளுமன்றத்தில் வைத்து முறைப்பாடு செய்வது அநேகமாக இதுதான் முதல் தடவையோ தெரியவில்லை. விமான நிலையத்தில் சிறீதரன் சிறிது நேரம் மறித்து வைக்கப்பட்டமை தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பதில் சொல்ல வேண்டும். அதேசமயம் அது தொடர்பாக சுமந்திரன் தெரிவித்த கருத்துக்களுக்கு சுமந்திரன் பதில் சொல்ல வேண்டும். அந்தக் கருத்துக்கள் சரியா பி…
-
- 0 replies
- 381 views
-
-
ஸ்ரீலங்காவை உண்மையாகவே ‘கிளீனாக’ வைத்திருக்க வேண்டுமானால்…? January 20, 2025 — வீரகத்தி தனபாலசிங்கம் — ஜனாதிபதி அநுரா குமார திசாநாயக்கவின் பேரார்வம் மிகுந்த திட்டமாக தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முன்னெடுக்கும் ‘கிளீன் ஸ்ரீலங்கா’ (Clean Sri Lanka ) செயற்திட்டம் குறித்து நேர்மறையானதும் எதிர்மறையானதுமான கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. ஆசியப் பிராந்தியத்திலேயே மிகவும் தூய்மையான நாடாக இலங்கையை மாற்றும் நோக்குடன் தனது அரசாங்கம் இந்த விசேட செயற்திட்டத்தை முன்னெடுக்கும் என்று பாராளுமன்ற தேர்தல் பிரசாரங்களின்போது ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு கூறினார். ஆனால், கிளீன் ஸ்ரீலங்காவுக்கு பொறுப்பாக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி செயலணியின் ஆரம்பக்கட்ட அணு…
-
- 2 replies
- 405 views
-