அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9225 topics in this forum
-
‘ஒரே நாடு, ஒரே வரி’ சட்டம்: ஆப்பிழுத்த குரங்கின் நிலைக்கு ஒப்பாகுமா? இந்திய நாட்டுக்கு ‘நள்ளிரவில் சுதந்திரம்’ கிடைத்து, இப்போது மீண்டும் நள்ளிரவில் இந்தியாவுக்கு ‘வரிச் சுதந்திரம்’ கிடைத்திருக்கிறது. ஜூலை முதலாம் திகதி நள்ளிரவு முதல், நாடு முழுவதும் ‘ஒரே வரி’ என்ற கோட்பாட்டை அமுல்படுத்தியிருக்கிறது இந்திய மத்திய அரசாங்கம். சுதந்திரம் பெற்று 70 ஆவது வருடத்தில், இப்படியொரு வரிச்சட்டத்தில் அரசாங்கத்தின் பலமுனை வரிகளில் இருந்து, வர்த்தக நிறுவனங்களுக்கு, நுகர்வோருக்கு சுதந்திரத்தை வழங்கியிருக்கிறது மத்திய அரசாங்கம் என்பதுதான் இப்போது வந்திருக்கும் சரக்கு மற்றும் சேவை வரிச் சட்டத்தின் சிறப்பம்சம். “கூட்டு…
-
- 0 replies
- 586 views
-
-
ஈகச் சுடரும் வெற்றி முழக்கமும் இலங்கையில் பன்நெடுங்கால வரலாற்றை கொண்ட சித்திரை வருடப்பிறப்பு நாளன்று, தமிழர் சக்கரைப்பொங்கல் பொங்கிக் கொண்டாடுவர்; சிங்களவர் பால்சோறு சமைத்துக் கொண்டாடுவர். இது தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் பொதுவான பண்டிகை நாளாகக் கருதப்படினும், சைவர்களும் பௌத்தர்களும் தவிர்ந்த வேறு மதத்தவர் கொண்டாடுவது அரிது. எனினும் அவர்கள் கொண்டாட்டத்தில் மகிழ்வுடன் பங்குகொள்வதுண்டு. இன ரீதியான, மதரீதியான வேற்றுமைகளைக் களைந்து இலங்கையராக ஒன்றுசேரும் மகிழ்வான தருணம் இது. சித்திரை புதுவருடம் முடிந்து ஒரு மாதம் ஐந்து நாள்களுக்குள் மீண்டும் பால்சோறு பொங்கிக் கொண்டாடும் நிகழ்வொன்று சிலவருடங்களுக்கு முன்னர் சிங்களவர்கள் மத்தியில் உருவாகியது. இதன் பின்னணியில் …
-
- 0 replies
- 586 views
-
-
-
- 0 replies
- 586 views
- 1 follower
-
-
கிழக்குமாகாண மக்கள் வெளியேறவில்லை வெளியேற்றப்பட்டார்கள் - சீவகன் பூபாலரட்ணம்
-
- 0 replies
- 586 views
-
-
யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் மாவை சேனாதிராசா சுமந்திரன் பங்குபற்றுதலுடன் இடம்பெற்ற “ஒருமித்த கருத்தும் ஒருமித்த பயணமும்” நிகழ்வில் கலாநிதி கணேசலிங்கம் முன்வைத்த ஆய்வுக்குரிய கருத்துக்களுக்கு நன்றி. “ஒருமித்த கருத்தும் ஒருமித்த பயணமும்” என்பது வடகிழக்கு தலைமையை ஏற்றுக்கொண்டு பயணிப்பதே என்பதை கொழும்பு தலைவர்கள் உணரவேண்டும். புலம் பெயர்ந்த தமிழர்கள் விமர்சன நீதியாக வடகிழக்கு மக்கள் தெரிவுசெய்யும் தலைமையுடன் [ஏசி அனுசரணையாக செயல்படவேண்டும். . தமிழரசுக் கட்ச்சியும் கூட்டமைப்பும் தமிழரசுக் கட்ச்சி வரலாற்றில் இருந்து எதையும் கற்றுக்கொள்ளவில்லை என்பது கவலை தருகிறது. கடந்த காலத்தில் தமிழர் தலைமை யாழ்பாணம் வன்னி, மற்றும் திருமலை மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களிலும் கொழும…
-
- 1 reply
- 586 views
-
-
இனப்படுகொலை செய்த இலங்கை அரசை காப்பாற்ற முனையும் அமெரிக்கா? பொன்.சந்திரன், , கோவை. ஞாயிறு, 03 மார்ச் 2013 22:17 ஜெனிவாவில் நடந்து கொண்டிருக்கின்ற (பிப்ரவரி - மார்ச் 2013) ஐ.நா அவையின் மனித உரிமைக் கவுன்சிலில் இலங்கையில் நடைப்பெற்றுவரும் மனித உரிமை மீறல்கள் பற்றிய விவாதம் ஈழத் தமிழ் ஆதரவாளர்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டனின் சானல் 4 தொலைக் காட்சியின் மனித உரிமை பத்திரிகையாளரும் ஆவணப்பட இயக்குனருமான கெல்லன் மெக்ரி அவர்களின் ஆவணப்படம் ("NO FIRE ZONE - THE KILLING FIELDS OF SRILANKA") பெரும் சர்ச்சையை எழுப்பியுள்ளது. இதற்கு முன் KILLING FIELDS என்ற பெயரில் வெளி வந்த ஆவணப்படம் இன அழிப்புப் போரின் சில காட்சிகளை ப…
-
- 1 reply
- 586 views
-
-
ஐநாவுடன் இணைந்து செயற்படுவதற்கான அறிவித்தல் ஐநாவுடன் இணைந்து செயற்படுவதற்கான அறிவித்தல் என்பதானது இலங்கை அரசு மனித உரிமைகள் நிலைமைகளைச் சீர் செய்வதற்கு ஆக்க பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்ற சர்வதேச கோரிக்கைக்கு ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்ச செவி சாய்த்து, அண்மையில் பதிலளித் துள்ளமை பலரையும் ஏறிட்டு நோக்கச் செய்திருக்கின்றது. பௌத்த சிங்கள பேரின தேசிய வாதத்தில் ஊறி, இராணுவ மனோபாவ சர்வாதிகார ஆட்சியில் ஆழ்ந்துள்ள அவருடைய போக்கிற்கு முரணாக இந்தக் கருத்து வெளிப்பாடு அமைந்திருப்பதே இதற்குக் காரணமாகும். பொறுப்பு கூறுகின்ற கடப்பாட்டை உதறித் தள்ளி, ஜனநாயக விழுமியங்களுக்கு மாறாக சர்வாதிகார ஆட்சிப் போக்கில் செல்கின்ற அவர், பொறுப்புக் கூறல் விடயத்தி…
-
- 0 replies
- 586 views
-
-
மாகாண சபையை எங்கிருந்து திட்டமிடுவது? நிலாந்தன்! April 17, 2021 மாகாணசபைத்தேர்தல்களை அரசாங்கம் நடத்தினால் இம்முறை வடக்கிலும் கிழக்கிலும் தமிழ்த்தரப்பு பலவீனமான பெரும்பான்மையைத்தான் பெறலாம் என்ற கணிப்பு பரவலாக உண்டு. கிழக்கில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உட்பட ஏனைய தமிழ் தேசிய கட்சிகள் வாக்குகளை மூன்றாக உடைக்கும். தவிர பிள்ளையான், வியாழேந்திரன், கருணா ஆகிய மூவரும் வாக்குகளைப் பிரிப்பார்கள். இவ்வாறாக தமிழ்வாக்குகள் அங்கே ஆறுக்கும் மேற்பட்ட தரப்ப்புக்களால் பிரிக்கப்படும் ஆபத்து உண்டு. இது ஒரு பலமான பெரும்பான்மையை பெறுவதில் சவால்களை ஏற்படுத்தும். இதனால் முஸ்லிம்களோடு இணைந்துதான் ஆட்சியை நடத்த வேண்டி இருக்கும் என்ற கணிப்பு பலமாக உண்டு. தமிழ்த்தரப்போடு ஒப்ப…
-
- 0 replies
- 586 views
-
-
தேசியக்கொடி கற்பிதமும் உண்மையும் இலங்கையின் தேசியக் கொடி பற்றிய சர்ச்சை சமகால அரசியல் அரங்கில் மேலோங்கிவிட்டிருப்பதை இந்த நாட்களில் கவனித்திருப்பீர்கள். இந்த போக்கின் பின்னால் உள்ளார்ந்திருக்கும் அரசியல் நலன்கள், பேரினவாதிகளின் பாசிச நலன்கள், அவர்களின் நீண்டகால குறுங்கால தந்திரோபாயங்கள், அவர்களின் திசைவழி என்பன குறித்து அலட்சியப்படுத்திவிட முடியாது. தேசியக் கொடி என்பது தமிழர்களைப் பொறுத்தளவில் அவ்வளவு அக்கறைக்குரிய ஒன்றாக இல்லாமல் போய் நெடுங்காலம் ஆகிவிட்டாலும் கூட அரசியல் தளத்தில் தேசியக்கொடியை சிறுபான்மை தேசிய இனங்களுக்கு எதிரான ஒரு வடிவமாக முன்னெடுக்கப்பட்டு வருவதை அலட்சியப்படுத்திவிட முடியாது. மேலும் சிங்கள பௌத்த பேரினவாதம் என்பது நிருவனமயப்பட்டது என…
-
- 0 replies
- 586 views
-
-
இலங்கையின் 7வது ஜனாதிபதியாக திரு. கோதாபயா ராஜபக்ஷ அவர்கள் தெரிவு செய்யப்பட்டது நாம் அனைவரும் நன்றாக அறிந்த ஒரு விடயம். இவர் கடந்த காலத்தில் அதாவது திரு. மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் அரசாங்க காலத்தில் பல முக்கிய பங்களிப்பினை வழங்கியதன் மூலம் பெரும்பாலான மக்களின் செல்வாக்கினை தன்னகத்தே கொண்டு ஒரு சிறந்த தலைவராகத் திகழ்ந்து வந்தார். இவர் கடந்த காலங்களில் ஒருமுறையேனும் தேர்தலில் போட்டியிடாமல் பல அதி உயர் பதவியில் அரச நிருவாகத்தில் கடமையாற்றி வந்திருந்தார். இவரின் கடந்த கால வெற்றி நோக்கிய திட்டத்தின் காரணமாக மக்கள் இவரை ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி வேட்பாளராக நிற்க பல அழுத்தங்களைப் பிரயோகித்திருந்தனர். அதுமாத்திரமல்லாது அவர் ஒரு பூரண இலங்கைப் பிரஜையா? இல்லையா? போன்ற பல எதிர் வாதங…
-
- 0 replies
- 585 views
-
-
கொரோனா அச்சுறுத்தலிலும் ஆதாயம் தேடும் ராஜபக்ஷக்கள் புருஜோத்தமன் தங்கமயில் உயிரிழப்பு ஏதுமின்றி கொரோனா வைரஸ் அச்சுறுத்தலை இலங்கை கடந்துவிடும் என்ற நம்பிக்கை, நாட்டு மக்களிடம் பரவலாகக் காணப்பட்டது. ஆனால், அந்த நம்பிக்கை பொய்த்திருக்கின்றது. இதுவரை இரண்டு பேர் கொரோனா தொற்று ஏற்பட்டு மரணித்திருக்கிறார்கள். அந்த இருவரின் உடல்நிலையில் ஏற்கெனவே காணப்பட்ட சிக்கல்கள் குறித்து வைத்தியத்துறையினர் விளக்கமளித்து, கொரோனா மரணங்கள் தொடர்பிலான மக்களின் பயத்தைக் குறைப்பதில் கவனம் செலுத்தி இருக…
-
- 1 reply
- 585 views
-
-
ஜெனிவா மனித உரிமைகள் சபையின் 46 வது கூட்டத்தொடர் தமிழ் மக்களிற்கு சாதகமாக அமையுமா? – கிருபாகரன் Bharati October 21, 2020 ஜெனிவா மனித உரிமைகள் சபையின் 46 வது கூட்டத்தொடர் தமிழ் மக்களிற்கு சாதகமாக அமையுமா? – கிருபாகரன்2020-10-21T05:53:20+05:30Breaking news, அரசியல் களம் FacebookTwitterMore ச.வி.கிருபாகரன், பிரான்ஸ் நியூயோர்க்சில்உள்ள ஐ.நா. பொதுச்சபையில், கடந்த 13ம்திகதி, ஐ.நா. மனித உரிமை சபையின் 2021ம் ஆண்டு முதல் மூன்று வருடங்களிற்கு அங்கத்துவத்திற்கான பதினைந்து வெற்றிடங்களிற்கு தேர்தல் நடைபெற்றுள்ளது. இதன் அடிப்படையில் மனிதஉரிமைகளை மோசமாக மீறும் நாடுகள் சிலவும் வெற்றிபெற்றுள்ளன. இவ்விடயத்திற்கு விபரமா…
-
- 0 replies
- 585 views
-
-
வடக்கு செயலாளர் நியமனமும் ராஜபக்ஷர்களின் திட்டமும் புருஜோத்தமன் தங்கமயில் வடக்கு மாகாணத்தின் புதிய பிரதம செயலாளராக சமன் பந்துலசேன, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவால் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் ஏற்கெனவே, வவுனியா மாவட்டத்தின் செயலாளராகப் பதவி வகித்தவர். ராஜபக்ஷர்களின் ஆட்சியில், வடக்கு, கிழக்கு மாகாணங்களின் ஆளுநர்களாக, முன்னாள் படைத்துறை அதிகாரிகளை நியமிப்பது வழக்கம். ஏற்கெனவே, ஜி.ஏ. சந்திரசிறி வடக்கு ஆளுநராக ஆறு வருடங்கள் அளவில் பதவி வகித்திருக்கின்றார். அப்படிப்பட்ட நிலையில், 2019ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலோடு, ராஜபக்ஷர்களின் மீள் வருகையின் போது, வடக்கு ஆளுநராக பி.எஸ்.எம். சார்ள்ஸ் நியமிக்கப்பட்டார். அந்த நியமனம், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் பரிந்து…
-
- 0 replies
- 585 views
-
-
பிரித்தானிய டெலோ பொறுப்பாளர் திரு சம்பந்தன் அவர்களோடான செவ்வி
-
- 0 replies
- 585 views
-
-
-
- 1 reply
- 585 views
-
-
மனிதஉரிமை மீறல் குற்றச்சாட்டுகளை அடிப்படையாகக் கொண்டு, இலங்கை இராணுவத்தினருக்குப் பயிற்சி அளிக்க அமெரிக்கா மறுத்தால், சீனாவிடம் போய் உதவி கேட்போம் என்று கடந்தவாரம் ஒரு மிரட்டலை விடுத்திருந்தார் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச. மனிதஉரிமை மீறல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக அரசாங்கம் போதிய கவனம் எடுத்து, விசாரணைகளை நடத்தாத நிலையில், இலங்கை மீதான அமெரிக்காவின் அழுத்தங்கள் அதிகரித்துள்ளன. இத்தகைய பின்னணியில், அமெரிக்காவில் மேலதிகப் பயிற்சிக்காக இலங்கை இராணுவத் தலைமையகத்தால், தெரிவு செய்யப்பட்ட மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்கவுக்கு, அமெரிக்கா வீசா வழங்க மறுத்து விட்டது. 53வது டிவிசனின் தளபதியாகப் பணியாற்றினார் என்பதற்காகவே, அவரை பயிற்சித் திட்டத்தில் சேர்த்துக் கொள்ள அமெரிக்க…
-
- 0 replies
- 585 views
-
-
நல்லிணக்கத்தின் காட்சியறை? நிலாந்தன் 13 அக்டோபர் 2013 மலையகத்தில் தொழில் புரியும் ஒரு நண்பர் சொன்னார்.......அவர் அங்கு ஒரு சிங்கள முதாட்டியின் வீட்டில் வாடகைக்கு இருக்கிறார். கடந்த கிழமை வடமாகாண சபையின் முதலமைச்சர் இலங்கையின் அரசுத் தலைவர் முன்னிலையில் பதவியேற்ற நிகழ்ச்சி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகியபோது மேற்படி நண்பர் அந்த சிங்கள் முதாட்டியுடன் இருந்து அந்தச் செய்தியைப் பார்த்துக் கொண்டிருந்திருக்கிறார். முதலமைச்சர் தொலைக்காட்சியில் தோன்றியபோது, அம்முதிய பெண் சொன்னாராம் 'கொட்டியநாயக்க' - இவரும் ஒரு புலிப் பிரதானி - தான் என்று... அந்தச் சிங்கள மூதாட்டியைப் போலவே பெரும்பாலான சாதாரண சிங்கள வாக்காளர்களும் கருதுவதாகக் கூறப்படுகின்றது. யுத்த வெற்றிவாதத்திற்குத் தலைமை…
-
- 4 replies
- 585 views
-
-
ராஜபக்ஷக்களைப் பலப்படுத்தும் ரணில்? புருஜோத்தமன் தங்கமயில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, பொதுத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான அணி தவிர்ந்து, ஏனைய அனைத்துக் கட்சிகளும் கூட்டணிகள் முதற்கொண்டு, வேட்பாளர்கள் வரையில் இறுதி செய்துவிட்டு, பிரசாரப் பயணத்தைத் தொடங்கிவிட்டன. ஆனால், ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கும் இடையிலான பிணக்கு, இன்னமும் முடிந்தபாடில்லை. கடந்த ஜனாதிபதித் தேர்தல் காலத்திலும் ஜனாதிபதி வேட்பாளரை அறிவிப்பது சார்ந்து எழுந்த சர்ச்சைகள், பல மாதங்…
-
- 1 reply
- 585 views
-
-
ஐ.அமெரிக்க - துருக்கி முரண்பாட்டில் பாகிஸ்தானின் பங்கு -ஜனகன் முத்துக்குமார் துருக்கிய அரசாங்கத்தால் குற்றஞ்சாட்டப்பட்ட ஐக்கிய அமெரிக்கப் போதகர் அன்ட்ரூ பிரன்சன் கைது செய்யப்பட்டதில் இருந்து எழுந்துள்ள அவநம்பிக்கையால், சமீபத்தில் துருக்கிக்கும் ஐ.அமெரிக்காவுக்கும் இடையிலான உறவுகள் மேலும் வலுவிழந்துள்ளதுடன், இது தொடர்பில் எதிர்த்தரப்பு நடவடிக்கைகளை, ஐ.அமெரிக்காவும் துருக்கியின் மீது மேற்கொண்டுள்ளது. அதன் பிரகாரம், ஐ.அமெரிக்கா, பொருளாதாரத் தடைகளை துருக்கி மீது சுமத்தியிருப்பதுடன், இரும்பு, அலுமினிய வர்த்தகங்களின் மீது அதிகரித்த தீர்வைகளை துருக்கி மீது ஐ.அமெரிக்கா சுமத்தியிருப்பது, துருக்கியின் பொருளாதாரத்தை வெகுவாகவே பாதித்த…
-
- 0 replies
- 585 views
-
-
இலங்கை முன்னிருக்கும் வரலாற்று வாய்ப்பு! ஆட்சி மாற்றம் வேண்டி வாக்களித்து, இலங்கையின் அதிபராக மைத்ரிபால சிறிசேனாவையும், பிரதமராக ரணில் விக்ரமசிங்கேயும் இலங்கை மக்கள் தேர்ந்தெடுத்து இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, அரசியல் நெருக்கடியில் சிக்கிக்கொண்டிருக்கிறது தேசியக் கூட்டணி அரசு. பத்தாண்டு காலமாக, கடும் கண்காணிப்பு, அச்சுறுத்தல்கள், ஊடகத்தின் மீதான அடக்குமுறை, ஜனநாயக அமைப்புகளைப் பலவீனப்படுத்துதல் என்று மகிந்த ராஜபக்ச நடத்திய சர்வாதிகார ஆட்சி, 2015 ஜனவரி 9-ல் முடிவுக்கு வந்தது. அவரது ஆட்சியில், வளர்ச்சித் திட்டங்களை விடவும் ஊழல்கள், ஒருதலைப்பட்ச நடவடிக்கைகள் போன்றவைதான் பிரதானமாக இருந்தன. போர் வெற்றி மூலம், இலங்கையின் பெரு…
-
- 0 replies
- 585 views
-
-
மக்களுக்கு நன்மையளிக்காத மாற்றங்கள் ‘கூட்டாகச் சேர்ந்து கோழி வியாபாரமும் செய்யக் கூடாது’ என்று கிராமப் புறங்களில் பேசிக் கொள்வார்கள். ஏனென்றால், இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தரப்பினர் ஒன்றுசேர்வது, ஒற்றுமையின் வடிவம் என்றாலும் கொடுக்கல் வாங்கல்களிலும் வியாபாரத்தின் கணக்கு வழக்குகளிலும் நீண்டகால அடிப்படையில், மனக் கசப்புகள் ஏற்படும் என்பதே, முன்னோரின் கணிப்பாகும். எவ்வாறிருப்பினும், ஒன்றுசேர்தல் என்பது, நல்லதொரு முன்மாதிரி என்ற அடிப்படையில், கூட்டு முயற்சிகள் நவீன உலகில், வரவேற்கப்படுகின்ற சூழல் காணப்படுகின்றன. அந்த வகையில், 2015ஆம் ஆண்டில் நல்லாட்சி அரசாங்கம் நிறுவப்பட்டபோது, பெரும் எதிர…
-
- 0 replies
- 585 views
-
-
இங்கிலாந்திலிருந்து வெளிவரும் பத்திரிகை புலம்பெயர் தமிழ் மக்களது போராட்டத்தை Black Berry revelolution என்ற பெயரில் அழைத்திருந்தது. ஏனெனில் அந்த காலங்களில் Black Berry என்ற கைதொலைபேசி மிகவும் பிரபல்யமாக இருந்தது. – லண்டனில் இருந்து லோகன் பரமசாமி. தகவல் தொழில்நுட்பமும் வலையமைப்பும் குறித்த விடயத்தில் எவ்வாறான ஒரு மாற்றத்தை இந்த உலகம் கண்டு வருகிறது. இதனை மக்கள் தமக்கு ஏற்றாற்போல் பயன்படுத்துகின்றார்களா? அல்லது அது ஒரு பகுதியில் வளர்ந்து கொண்ட போகும் போக்கில் தனிப்பட்ட வசதிகளுக்கும் பெருமைக்குமாக பயன்படுத்தவதுடன் நின்றுவிடுகிறதா? வலையமைப்பு குறித்த அரசியல் பார்வை என்ன? சர்வதேச அரசியலில் தகவல் தொழில் நுட்பத்தின் பங்களிப்பு என்ன என்பன குறித்த பார்வை ஒன்றை இந்த கட்டுரை…
-
- 0 replies
- 585 views
-
-
மோடியும் கச்சதீவும் April 9, 2024 — வீரகத்தி தனபாலசிங்கம் — இந்தியா கச்சதீவை இலங்கைக்கு விட்டுக்கொடுத்த பிறகு கடந்த அரை நூற்றாண்டு காலத்தில் அது தொடர்பாக சர்ச்சை கிளப்பிய முதல் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி. அதுவும் பத்து வருடங்களாக பதவியில் இருந்துவரும் அவர் இதுகாலவரை எதுவும் பேசாமல் இருந்துவிட்டு தற்போது பிரச்சினையை கிளப்புவது கச்சதீவை மீண்டும் இந்தியா வசமாக்குவதற்காக அல்ல, எதிர்வரும் லோக்சபா தேர்தலில் தனது பாரதிய ஜனதா கட்சிக்கு தமிழ்நாட்டு மக்களின் ஆதரவை பெறுலாம் என்ற எதிர்பார்ப்பிலேயே என்பதை புரிந்துகொள்வதற்கு அரசியல் ஞானம் தேவையில்லை. வடஇந்தியாவில் அமோகமான மக்கள் செல்வாக்குடைய தலைவராக இருந்துவரும் மோடி மூன்றாவது தடவையாகவும் பி…
-
- 0 replies
- 585 views
-
-
இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பொதுமக்களின் பணத்திலிருந்து கோடிகோடியாக வருடாவருடம், சர்வதேச பிரச்சார அமைப்புகளுக்கு வழங்கி தன்னை பற்றி சர்வதேச அளவில் உருவாகியுள்ள களங்கத்தை துடைக்கும. முயற்சியில் ஈடுபடுகின்றார், அதன் மூலமாக தான் யுத்த குற்றங்களுக்கா விசாரணை செய்யப்படுகிறேன் என்பதை மக்கள் மறக்கச்செய்கின்றார். எனினும் ஊழல், சட்டவிரோதம் மற்றும் ஈவிரக்கமற்ற தன்மை ஆகியவற்றின் துர்நாற்றம் அவரிலிருந்து அகலுவதில்லை,அது அவரின் ஆன்மாவில் ஆழமாக பதிந்துள்ளது,அவரது ஒவ்வொரு அசைவிலும் புலப்படுகின்றது. தனது பதவிக்காலம் ப+ர்த்தியாவதற்க்கு இன்னமும் இரண்டுவருடங்கள் இருக்கையில் தேர்தலை நடாத்தும்அவரது முடிவும் அவ்வாறனதே, வீழ்ச்சியடைந்து கொண்டிருக்கின்ற தனது ஆதரவை காப்பாற்றும் இறுதிமுயற்ச…
-
- 0 replies
- 585 views
-
-
கூடங்குளம் போராட்டம் - நாம் கற்க வேண்டிய பாடம் நீண்ட நாட்களாக மனதில் புரண்டு கொண்டிருந்த ஆவலை கடந்த சனி, ஞாயிறுகளில் தீர்த்துக் கொண்டேன். நண்பர்கள் இருவருடன் கூடங்குளம், இடிந்தகரை சென்றிருந்தேன். கூடங்குளம் பகுதியில் இருக்கிற ஒரு பொறியியல் கல்லூரியில்தான் பத்து ஆண்டுகளுக்கு முன்னர் நான் கணிப்பொறியியல் படித்தேன் என்பதால், அந்தப் பகுதியின் நிலவமைப்பு எனக்கு ஏற்கனவே அறிமுகமான ஒன்றுதான். மிகவும் வறண்ட பூமி. அரிதாகத் தென்படும் மரங்கள், உரத்து வீசும் காற்று, 150 மீட்டர் உயர வெள்ளைக் கொக்குகளாக நிற்கும் காற்றாலைகள், வெளிநாடுகளில் வேலை பார்க்கும் ஆண்கள் - இவை இந்தப் பகுதியின் பொதுவான அடையாளங்கள். படித்தவர்கள் என்ணிக்கை அதிகமாக இருந்தாலும், மிகவும் பிற்போக்கான பகுதி இது. சாத…
-
- 1 reply
- 585 views
-