Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. தொடரும் தண்டனை விலக்கீட்டுக் கலாசாரம் – பி.மாணிக்கவாசகம்.. May 27, 2019 உயிர்த்த ஞாயிறு தின தற்கொலைக்குண்டுத் தாக்குதல்களின் பின்னர், மூன்று வாரங்கள் கடந்த நிலையில் முஸ்லிம்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள், நாட்டில் நிலவுகின்ற ஒரு மோசமான வன்முறைப் போக்கை வெளிப்படுத்தியிருக்கின்றது. அது நிறைவேற்று அதிகாரம், நாடாளுமன்ற ஆட்சி முறை என்பவற்றை உள்ளடக்கிய இறைமையுள்ள அரசாங்கத்தையும் மீறிய ஒரு கும்பலாட்சி – குண்டர்களின் ஆட்சி நாட்டில் நிலவுவதையே அடையாளப்படுத்தி உள்ளது. யுத்த வெற்றிவாத அரசியல் மனோநிலை சார்ந்த எதேச்சதிகார ஆட்சிக்கு 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலிலும் தொடர்ந்து நடைபெற்ற பொதுத் தேர்தலிலும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு நாட்டில் நல்லாட்ச…

  2. பாதிக்­கப்­பட்ட மக்­களை கவ­னத்தில் கொள்­ளுங்கள் யுத்தம் முடி­வ­டைந்து பத்து வரு­டங்கள் கடந்­து­விட்ட நிலையில் இது­வரை யுத்­தத்­தினால் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நீதி நிலை­நாட்­டப்­ப­ட­வு­மில்லை. நிவா­ர­ணங்கள் சரி­யான முறையில் அந்த மக்­களை சென்­ற­டை­ய­வு­மில்லை. யுத்­தத்­தினால் பாதிக்­கப்­பட்ட மக்கள் தொடர்ந்தும் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளா­கவே இருப்­ப­துடன் நீதிக்­காக தொடர் போராட்­டங்­களை நடத்திக் கொண்­டி­ருக்­கின்­றனர். நாட்டின் தற்­போ­தைய இக்­கட்­டான சூழலில் யுத்­தத்­தினால் பாதிக்­கப்­பட்ட மக்­களின் விட­யங்கள் குறித்து கவனம் செலுத்­து­வது முக்­கி­யத்­து­வ­மற்­றது என யாரும் கரு­தி­விடக் கூடாது நாட்டின் தற்­போ­தைய நிலை­யி­லி­ருந்து நாட்டை மீட்­டெ­டுத்து…

  3. 'மோடியின் வெற்றி உல­கிற்கும், இந்­தி­யா­விற்கும் கெடு­தி­யா­ன­தொரு செய்­தி­யாகும்' இந்­தியப் பொதுத்­தேர்­தலில் நரேந்­திர மோடிக்குக் கிடைத்­தி­ருக்கும் பிரம்­மாண்­ட­மான வெற்றி இந்­தி­யா­விற்கும், உல­கிற்கும் நல்­ல­தொரு செய்­தியல்ல. குறிப்­பாக இந்­தி­யாவின் ஆன்­மா­வுக்குத் தீங்­கா­னது என்று லண்டன் கார்­டியன் பத்­தி­ரிகை இந்­தியத் தேர்தல் முடிவு குறித்து எழு­திய ஆசி­ரியர் தலை­யங்­கத்தில் குறிப்­பிட்­டி­ருக்­கி­றது. அதில் மேலும் தெரி­வித்­துள்­ள­தா­வது, வர­லாற்றில் மிகப்­பெ­ரிய தேர்­தலில் மோடி என்ற ஒரு மனிதன் வெற்றி பெற்­றி­ருக்­கிறார். சுதந்­திர இந்­தி­யாவின் அர­சியல் வர­லாற்றில் 1971 ஆம் ஆண்­டுக்குப் பிறகு தனி­யொரு கட்­சியை அறுதிப் பெரும்­பான்­ம…

  4. உயிர்த்த ஞாயிறுப் படுகொலைகள் : மத நிறுவனங்களை நோக்கிச் சிலகேள்விகள் – நிலாந்தன்.. May 26, 2019 எல்லாமேவிதிப்படிதான் நடக்கும் எதையுமே நம்மால் மாற்ற இயலாது, என்று சொல்பவர்கள் ரோட்டைக் கடக்கும்போது இருபுறமும் பார்த்துவிட்டுக் கடப்பதைநான் பார்த்திருக்கிறேன் – ஸ்டீஃபன் ஹொக்கிங். கோயில்களின் காலம் முடிந்துவிட்டதுஎன்றுமு.தளையசிங்கம் கூறியிருக்கின்றார்.ஈழத்தமிழர்கள் மத்தியில் தோன்றியமிகமுக்கியஆன்மீக இலக்கியச் சிந்தனையாளர் செயற்பாட்டாளர் அவர். ஒருபுதுமதத்தை முழு மதத்தைஅவர் கனவுகண்டார். ஈழப்போர்க்களத்தில் எல்லாமதக் கோயில்களும் தாக்கப்பட்டிருக்கின்றன. போரில் ஈடுபட்டஎல்லாத் தரப்புக்களும் மற்றையதரப்பின் ஆலயங்களைஅல்லதுவழிபாட்டிடங்களைத் த…

    • 1 reply
    • 971 views
  5. வெசாக் தினத்தில் வௌிப்பட்ட நல்லிணக்கம் சி.சி.என் இம்முறை வெசாக் தினம் மிகவும் அமைதியான முறையில் அனுஷ்டிக்கப்பட்டது. பெரும்பான்மையினர் செறிந்து வாழ்ந்து வரும் பிரதேசங்களில் வெசாக் தோரணங்கள்,வர்ண அலங்காரங்கள் , மின்குமிழ் வேலைப்பாடுகளுக்கு குறைவிருக்கவில்லை. எனினும் முதன் முறையாக தொரண என்ற அலங்கார அமைப்பு இல்லாத ஒரு வெசாக் தினமாகவும் பெரியளவான உணவு தன்சல் இல்லாததாகவும் இது அனுஷ்டிக்கப்பட்டமை ஒரு குறையாகவே தெரிந்தது. இந்த குறையை இல்லாதாக்குவது போன்று இம்முறை அனைவரையும் ஆச்சரியப்பட வைத்த சம்பவம் பல முஸ்லிம்கள் தமது மார்க்க கட்டுப்பாடுகளையும் தளர்த்தி வெசாக் பந்தல் அமைத்தல், தன்சல் செயற்பாடுகளில் ஈடுபடல் ஏன் விகாரைகளுக்கு செல்லல் போன்ற விடயங்களில் ஈடுபட…

  6. ஊமைவெயில் காலத்தில் - முள்ளிவாய்க்கால் நினைவு பட மூலம், Selvaraja Rajasegar நேற்றுப்போலிருக்கிறது. இரத்தமும், கண்ணீர் நிரம்பிய மனிதர்களுமாக வரலாறு நம் முன் பதிந்த நாட்கள். நேற்றுப்போல் இருக்கிறது 2009. அதற்குள் 2019 ஆகிவிட்டது. தசாப்தமொன்றை கடந்து நிற்கிறோம். இந்த ஊமைவெயில் காலத்தைக் கடந்து நின்று திரும்பிப் பார்க்கையில் தூரமாகவும், அண்மையாகவும் என்ன தெரிகின்றது என்பதையே இக்கட்டுரை அலசுகின்றது. 18 மே 2009 இல் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதம் மௌனிக்கப்படுகையில், தமிழ் தேசிய இனத்தின் விடுதலைப் போராட்டமானது தமிழ் தேசிய கூட்டமைப்பிடமும், புலம்பெயர் தமிழர்களிடமும், தமிழகத் தமிழர்களிடமும்தான் கையளிக்கப்பட்டது. இது இயற்கையான போக்கில் நிகழ்ந்ததுதான். ஆனால் அனை…

  7. வெளியே வந்துள்ள ‘ஹீரோக்கள்’ கே. சஞ்சயன் / 2019 மே 24 வெள்ளிக்கிழமை, மு.ப. 08:16 Comments - 0 ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்களால் ஏற்பட்ட சூழ்நிலைகள், இரண்டு முக்கியமான விடயங்களைப் பலரது கண்களில் இருந்தும் மறைத்து விட்டன. நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், ஆறு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட பொது பலசேனா அமைப்பின் தலைவர் கலகொட அத்தே ஞானசார தேரரின் விடுதலை, அதில் ஒன்று. ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்ட சம்பவங்களுடன் தொடர்புடையவர் என்ற குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருக்கும், மேஜர் பிரபாத் புலத்வத்த என்ற இராணுவப் புலனாய்வு அதிகாரி, மீண்டும் இராணுவத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டிருப்பது இன்னொன்று. சாதாரணமானதொரு சூழ்நிலையில் இந்த இரண்டும் நிகழ்ந்திருந்தால், அது ப…

  8. மே 18யை நினைவுகூரல்: சடங்குகளுக்கும் சம்பிரதாயங்களுக்கும் அப்பால் Editorial / 2019 மே 23 வியாழக்கிழமை, பி.ப. 06:52 Comments - 0 போர் முடிந்து பத்து வருடங்கள் ஆகிவிட்டன. கடந்த 10 ஆண்டுகளாக ஈழத்தமிழர் வாழும் நாடுகள் எங்கும் மே 18 நினைவுகூரப்படுகிறது. இந்த நினைவுகூரலின் சமூகப் பெறுமானம் என்ன என்ற கேள்வியை இப்போதாவது நாம் கேட்டாக வேண்டும். மே 18 நினைவுகூரல்கள், மெழுகுதிரி ஏற்றுதல், அஞ்சலி, நீதிக்கான கோரிக்கை, வீரப்பேச்சுக்கள் என்பவற்றுடன் முடிகின்றன. ஒரு மே, அடுத்த மே, அதற்கத்த மே என ஆண்டுகள் பத்து கடந்துவிட்டது. இப்போது மே18 ஆண்டு நாட்காட்டியில் சடங்குக்கு உரிய ஒரு தினம் மட்டுமே. பத்தாண்டுகளைப் பின்னோக்கியும் முன்னோக்கியும் பார்க்குமிடத்து இந்த…

  9. மதத்தின் பெயரிலான தீவிரவாத்தின் ஒழிப்பு Editorial / 2019 மே 23 வியாழக்கிழமை, பி.ப. 06:34 Comments - 0 -இலட்சுமணன் உலகளவில் எழுந்திருக்கின்ற கேள்விகள் எல்லாமே, இஸ்லாத்தின் பெயராலும் ஏனைய மதங்களின் பெயராலும் மேற்கொள்ளப்படும் பயங்கரவாதத்தை, எவ்வாறு ஒழிக்க முடியும் என்பதாக இருக்கையில்தான், இலங்கையில் ஈஸ்டர்தினம் தெரிவு செய்யப்பட்டு, தேவாலங்களிலும் நட்சத்திர ஹோட்டல்களிலும் தற்கொலைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டிருந்தன. நாட்டில் ஏற்பட்ட தற்கொலைத் தாக்குதல்களை அடுத்தான அசாதாரண நிலைமையில் மாற்றம் கொண்டுவரப்படுதல்தான், இப்போதைய தேவையாக இருக்கிறது. இந்தத் தாக்குதலுக்கு, கிழக்கின் காத்தான்குடியைச் சேர்ந்தவர் ஆரம்பப் புள்ளியாக இருந்திருக்கிறார் என்ற கரும்புள்ளியுடன…

  10. முள்ளிவாய்க்காலுக்குப் பின்னரான தாயக - புலம்பெயர் உறவு புருஜோத்தமன் தங்கமயில் / 2019 மே 23 வியாழக்கிழமை, பி.ப. 01:04 Comments - 0 “நாங்கள் தாயகத்திலிருந்து புலம்பெயர்ந்துவிட்டதால் மாத்திரம், ஈழத்தமிழர் அரசியலைப் பேசுவதற்கான தகுதியை இழந்துவிட்டோமா, எமக்கான அங்கிகாரத்தையும் பேசுவதற்கான தகுதியையும் பெறுவதற்கு, நாங்கள் என்ன செய்ய வேண்டும்? மீண்டும் தாயகத்துக்குத் திரும்ப வேண்டுமா” என்கிற ஆதங்கத்தை, இந்தப் பத்தியாளரிடம், அவரின் வயதையொத்த புலம்பெயர் ஊடகத்துறை நண்பரொருவர், சில ஆண்டுகளுக்கு முன்னர் வெளிப்படுத்தினார். கிட்டத்தட்ட அதேமாதிரியான ஆதங்கத்தை, சமூக ஊடகமொன்றில், கனடாவில் வசிக்கும் ஈழத்தமிழ்ச் செயற்பாட்டாளர் ஒருவரும், அண்மையில் வெளிப்படுத்தி இருந்தார். …

  11. மே 18 நினைவுகூர்தல்: அரசியல்படுத்தலிலிருந்து மக்கள் மயப்படுத்தல் North East Coordinating Commitee on May 22, 2019 இறுதியுத்தத்தின் பொழுது இலங்கையின் வட பகுதியின் வன்னிப் பிரதேசத்தில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டும் காயமடைந்தும் காணாமலாக்கப்பட்டுமிருந்தார்கள். சரணடைந்தவர்களும் தடுத்து வைக்கப்பட்டவர்களில் பலரும் காணாமல்போகச் செய்யப்பட்டிருந்தார்கள். போர் உக்கிரமடைந்த 2008இன் பிற்பகுதிகளில் வன்னியின் ஏனைய பகுதி மக்கள் முல்லைத்தீவை நோக்கி நகரத் தொடங்கினார்கள். ஷெல் தாக்குதல்களிலிருந்தும் விமானக் குண்டு வீச்சுக்களிலிருந்தும் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள தினமும் ஒவ்வொரு இடமாக நகர்ந்து கொண்டேயிருந்தார்கள். இறுதியில் அவர்கள் அனைவர…

  12. வஞ்சம் - முஸ்லிம் சமூகம் மீது வஞ்சம் தீர்க்க வாய்ப்பான ஈஸ்டர் பயங்கரவாதத் தாக்குதல்கள் முகம்மது தம்பி மரைக்கார் / 2019 மே 23 வியாழக்கிழமை, பி.ப. 12:53 Comments - 0 முஸ்லிம் சமூகம் மீது, வஞ்சம் தீர்க்கக் காத்திருந்தோருக்கு, ஈஸ்டர் தினத்தன்று நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதல்கள், நல்லதொரு வாய்ப்பாக அமைந்து விட்டன. ஒட்டுமொத்த முஸ்லிம் மக்களையும் பயங்கரவாதிகளாகச் சில கூட்டம் சித்திரித்துக் கொண்டிருக்கிறது. மறுபுறத்தில், இந்தத் தாக்குதல்களைச் சாட்டாக வைத்து, முஸ்லிம் பிரதேசங்கள் பலவற்றில், காடைத்தனங்கள் இடம்பெற்றுள்ளன. இத்தனைக்கும், பாதிக்கப்பட்ட கிறிஸ்தவ மக்கள், மிகவும் பொறுமையுடனும் சகிப்புத் தன்மையுடன் இருக்கத்தக்கதாகவே, இவ்வளவு கூத்து…

  13. முடிவுற்ற ஆயுதப் போரும் முடிவுறாத உளவியல் போரும் காரை துர்க்கா / 2019 மே 23 வியாழக்கிழமை, பி.ப. 12:46 Comments - 0 கடந்த சனிக்கிழமை (மே 18), வலிகள் சுமந்த முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பத்தாம் ஆண்டு நிறைவு, தமிழர் தாயகத்தில் இதயம் கனத்த கவலையுடனும் எழுச்சி பொங்கிய உணர்வுடனும் நடைபெற்றது. ‘தமிழர்கள் மத்தியில் பயத்தைத் தக்க வைத்து, உளவியல் போர் செய்கின்றது ஸ்ரீ லங்கா அரசாங்கம்’ என, அங்கு வெளியிடப்பட்ட நினைவேந்தல் பிரகடனத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. கடந்த 10 ஆண்டுகளில், ஆயுதப் போர் அற்றுப் போன நிலையில், உளவியல் போர் தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டிருப்பதை, அனைத்துத் தமிழ் மக்களும், அன்றாடம் அனுபவித்தும் உணர்ந்தும் வருகின்றனர். அதன் நீட்சி…

  14. ‘இந்துத்துவா வரும் பின்னே, மணியோசை வரும் முன்னே’ எம். காசிநாதன் / 2019 மே 20 திங்கட்கிழமை, பி.ப. 08:00 Comments - 0 இந்திய மக்களவைக்கான கடைசிக்கட்ட வாக்குப்பதிவுடன் தமிழகத்தில் உள்ள அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், சூலூர், ஒட்டப்பிடாரம் ஆகிய நான்கு சட்டமன்றத் தொகுதிகளின் இடைத்தேர்தல் நடைபெற்று முடிந்திருக்கிறது. டொக்டர் அன்புமணி ராமதாஸ் போட்டியிட்ட தர்மபுரி நாடாளுமன்றத் தொகுதி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத்குமார் போட்டியிட்ட தேனி நாடாளுமன்றத் தொகுதி ஆகியவற்றில், சில வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப் பதிவு ஆகியன நடந்து முடிந்திருக்கின்றன. இந்த நான்கு சட்டமன்றத் தொகுதிகளும் தமிழ்நாட்டில் அ.தி.மு.க ஆட்சி நீடிப்பதற்கான, அச்சாரமாக அம…

  15. இலங்கையில் வல்லரசுகளின் ஊடுருவலுக்கு வழிவகுத்துள்ள தற்கொலைத் தாக்குதல்கள் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தற்­கொலைக் குண்­டுத்­தாக்­கு­தல்கள் உள்ளூர் தீவி­ர­வா­தத்தை அடிப்­ப­டை­யாகக்கொண்­டது. அது ஐ.எஸ்.­ஐ.எஸ். என்ற உலக பயங்­க­ர­வாத அமைப்­பினால் வழி­ந­டத்­தப்­பட்­டது. பொலிஸ் விசா­ர­ணை­களில் இது கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளது. உள்ளூர் தீவி­ர­வாத அமைப்­பி­னரே பயங்­க­ர­மான தற்­கொலைக்குண்டுத் தாக்­கு­தல்­களை நன்கு திட்­ட­மிட்ட வகையில் நடத்தி அப்­பா­வி­க­ளான 250க்கும் மேற்­பட்­ட­வர்­களைக் கொன்­றொ­ழித்­த­துடன், 500க்கும் மேற்­பட்­ட­வர்­களை காய­ம­டையச் செய்­துள்­ளனர். தேவா­ல­யங்­க­ளிலும் நட்சத்திர ஹோட்­டல்­க­ளிலும் நடத்­தப்­பட்ட இந்தத் தாக்­கு­தல்­களின் பின்­…

  16. 2008 விடுதலைப் புலிப் போராளி கலைக்கோன் மாஸ்ரரின் பார்வையில்... இன்றைய காலத்தில் எழுப்பப்படும்.. பல கேள்விகளுக்கு அன்றே பதில் சொன்னவர்களுக்கு இப்போது சிலர் மீள்பார்வை.. மீளாராய்ச்சி என்று கத்துக்குட்டிக்கள் வகுப்பெடுப்பது தான் வேடிக்கை.

    • 0 replies
    • 1.2k views
  17. மத்ரஸாக்கள், தீவிரவாதம் மற்றும் தேசிய பாதுகாப்பு Maatram Translation on May 17, 2019 பட மூலம், Selvaraja Rajasegar Photo மத்ரஸாக் கல்வி மற்றும் இஸ்லாமிய தீவிரவாதம் என்பவற்றுக்கிடையிலான தொடர்பு ஆப்கானிஸ்தானின் தலிபான் இயக்கம் எழுச்சியடைந்த நாள் தொடக்கம் உலகளாவிய கலந்துரையாடல்களில் உள்ளடக்கப்பட்டிருந்தது. சோவியத் முற்றுகைக்குப் பின்னர் ஆப்கானிஸ்தானில் இந்தத் தோற்றப்பாடு எழுச்சியடைந்ததுடன், சோவியத் துருப்புக்களுக்கு எதிராக ஆப்கானிஸ்தானில் போராடியவர்கள் சோவியத்களின் வெளியேற்றத்தை அடுத்து, பல்வேறு பிரிவுகளாக பிரிந்து, தங்களுக்குள் ஒரு மிகக் கசப்பான உள்நாட்டு போரில் ஈடுபட்டிருந்தார்கள். இது அந்ந…

  18. அச்சுறுத்தலில் பிராந்திய பாதுகாப்பு ! மழைவிட்டும் தூவானம் நிற்கவில்லை என்பது போல் உயிர்த்த ஞாயிறு தினத்தில் நடைபெற்ற தற்கொலை குண்டுத்தாக்குதல்கள் தொடர்பில் நாளுக்கு நாள் அதன் பிரதிபலிப்புக்கள் இடம்பெற்றுக்கொண்டே இருக்கின்றன. தற்கொலை தாக்குதல்களை அடுத்து பாதுகாப்புத்துறையினரின் உடனடிச் செயற்பாடுகள் மூலம் தாக்குதல் சம்பவங்கள் அடுத்து நிகழாத வகையில் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன. எனினும் நடத்தப்பட்ட தற்கொலை தாக்குதல்கள் சம்பந்தமாக பல்வேறு கோணங்களில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளின் போது அதிர்ச்சி விடயங்கள் வெளியாகிக்கொண்டே இருக்கின்றன. அந்த விடயங்கள் பரஸ்பரம் உள்நாட்டிலும் பிராந்தியத்திலும் எதிர்விளைவுகளையும் ஏற்படுத்தியிருக்கின்றன. ஆனாலும் தீவிரவாதத்…

    • 2 replies
    • 685 views
  19. மீண்டுமொரு கறுப்பு ஜூலைக்கு வழிவகுக்க திட்டமா? மற்­று­மொரு கறுப்பு ஜூலை நாட்டில் உரு­வா­கி­யுள்­ளதா என்று பீதி கொள்ளும் அள­வுக்கு கடந்த செவ்­வாய்க்­கி­ழமை (13.05.2019) குரு­நாகல், கம்­பஹா மற்றும் புத்­தளம் ஆகிய மாவட்­டங்­களில் வாழும் முஸ்லிம் குடி­மக்­க­ளுக்­கெ­தி­ராக கட்­ட­விழ்த்­து­வி­டப்­பட்ட கொடூர வன்­முறைச் சம்­ப­வங்கள் அரங்கேற்றப்பட்டுள்ளன. அப்­பாவி பொது­மக்கள் ஒருவர் கொல்­லப்­பட்­டி­ருக்­கி­றார்கள், பள்­ளி­வா­சல்கள் தாக்­கப்­பட்­டுள்­ளன, தீ வைக்­கப்­பட்­டுள்­ளன, வர்த்­தக நிலை­யங்கள் நாச­மாக்­கப்­பட்­டுள்­ளன, கொடு­மை­யா­ளி­களின் தாக்­கு­தல்­க­ளுக்கு அஞ்சி வீடு வாசல்­களை விட்­டோடி வயல்­வெ­ளி­களில் அப்­பாவி கிராம மக்கள் அடைக்­கலம் கோரி­யுள்­ளனர். படைத்­த­…

  20. புர்கா தடை என்னும் அக்கினி Sharmila Seyyid on May 15, 2019 பட மூலம், Getty Images, AXIOS “புர்கா/ நிகாப் இல்லாமல் வெளியே வரவே மாட்டேன்” என்று ஐந்து பெண் மக்களின் தாயொருவர் அடம்பிடித்து அழுதபடி வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றார் என்ற செய்தி காது வழியாக நுழைந்தபோது மூளையின் நரம்புத் தொகுதிகளில் ஒரு பெருத்த வலியை உணர்ந்தேன். எமது பெண்களை ஆணாதிக்கம் கொண்டுவந்து நிறுத்தியிருக்கும் இடம் இதுதான். “பாதுகாப்புக் காரணங்களுக்காக புர்கா/ நிகாப் தடை செய்யப்பட்டுள்ளதனால் பெண்கள் இவற்றை அணிந்து கொண்டு வெளியே வராதீர்கள், வீடுகளிலேயே இருந்துவிடுங்கள்” என்று மிக எளிதாக ஆண்கள் தீர்மானம் இயற்றிவிட்டார்க…

    • 4 replies
    • 1.1k views
  21. ஆறாத சோகம் தீராத துயரம் அது,ஆறாத சோகம். தீராத துயரம். அந்த இழப்­புக்கள் ஆழமானவை. மிக­மிக ஆழ­மா­னவை. அந்த சோகத்­தையும், துயரத்தையும் இழப்புக்களையும் மீட்­டுப்­பார்க்க நெஞ்சம் பதைபதைக்கும். அந்தப் பதை­ப­தைப்பு அடி மனம் வரையும் பாய்ந்து அப்­ப­டியே உலுக்கி எடுக்கும். முள்­ளி­வாய்க்­காலில் பாதிக்­கப்­பட்­ட­வர்­களின் நிலைமை இதுதான். முள்­ளி­வாய்க்கால் பேர­வலம் நடந்து பத்து வரு­டங்கள் ஓடிவிட்டன. அந்தப் பாதிப்­புக்கள் குறித்து பாதிக்­கப்­பட்­ட­வர்கள் மீட்­டுப் பார்க்­கவே விரும்­பு­வ­தில்லை. ஆனால் அந்த நினை­வுகள் நன­வு­க­ளாக எந்­தெந்த சந்­தர்ப்­பங்­களில் மேலெ­ழுந்து மெய்நடுங்கி மனம் நோகச் செய்யும் என்­பது அவர்கள் எவ­ருக்­குமே தெரி­யாது. கதைப் போக்கில் முள்­…

  22. ஒரு முஸ்லிம் தோழருக்கு எழுதியது... . தோழா, சில தமிழ் ஊடகங்களின் தவறு கண்டிக்க வேண்டியது. சில முஸ்லிம் சமூக வலை தழத்திலும் குறிப்பாக பின்னூட்டங்களில் தமிழர் பற்றிய வசைபாடல்கள் வருகின்றன. அனுதாபம் தெரிவிக்கிற எல்லோரும் கிறிஸ்தவம் ஒரு இனம்போல பேசுகிறார்கள். தாக்கபட்ட தமிழ் பூசைகளில் கொல்லபட்டது கிழக்குமாகாணத்தையும் மலையக தென்னிலங்கையையும் சேர்ந்த தமிழர்கள் என்பதை யாரும் கணக்கெடுக்கவில்லை என்கிற கவலை கிழக்கு நாடாளுமன்ற பிரதேசசபை தலைவர்கள் மத்தியிலும் மனோ கணேசன் போன்ற மலைய தலைவர்கள் மத்தியிலும் பல தமிழ் ஊடகவியலாளர் மத்தியிலும் உள்ளது. தயவு செய்து இதனையும் பொருட்படுத்துங்கள். மட்டகளப்பு நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்தரனின் உறவினர்க்ச்ள் கொல்லப் பட்டதாக சொன்ன…

    • 15 replies
    • 2.8k views
  23. இலங்கையில் இஸ்லாமியவாத தீவிரவாதம்: எங்கே செல்லும் இந்தப் பாதை? பேராசிரியர் எஸ்.ஐ.கீதபொன்கலன் பாதுகாப்பு பகுப்பாய்வாளர் Getty Images கோப்புப்படம் (இந்தக் கட்டுரையில் வரும் கருத்துகள் அனைத்தும் கட்டுரையாளரின் சொந்தக் கருத்துகளே. இவை பிபிசியின் கருத்துகள் அல்ல. - ஆசிரியர்) இலங்கையில், உயிர்ப்பு ஞாயிறு தாக்குதலில் 250-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டமை உள்ளூர் ரீதியாகவும், சர்வதேச ரீதியாகவும் பாரிய எதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது. இத்தாக்குதலில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது, தாக்குதலின் பிரமாண்டமும், கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கையுமே அன்றி தாக்குதல்கள் அல்ல. இதுவரை வந்துள்ள தகவல்களின் அடிப்படையில், தாக்குதலாளிகள் அனைவரும் இலங்கையின் இரண்டா…

  24. இந்த ஆறாத் துயரிலிருந்து நமது தேசத்தை மீட்டெடுப்பதற்கான வழி (முதல் பாகம்) Maatram Translation on May 14, 2019 பட மூலம், The National உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நாட்டில் இடம்பெற்ற மிகக் கொடூரமான குண்டுத் தாக்குதல்களை அடுத்து, முஸ்லிம் சமூகத்திற்கு எதிரான உடல் ரீதியான தாக்குதல்களை இலங்கை தவிர்த்துக் கொள்ளக்கூடியதாக இருந்து வந்துள்ளது. எவ்வாறிருப்பினும், இலங்கை அரசினால் இந்த நெருக்கடி முகாமைத்துவம் செய்யப்படும் விதம் (கொச்சிக்கடை மற்றும் நீர்கொழும்பு ஆகிய இடங்களில் இடம்பெற்ற சம்பங்கள் தவிர) முதிர்ச்சியான இயல்பைக் கொண்டதாகவோ அல்லது திருப்திகரமானதாகவோ இருந்து வரவில்லை. இத்தகைய வன்முறையுடன்…

  25. இஸ்லாமிய விரோதியா தீவிரவாதியா, நான் யார்? - ஸர்மிளா ஸெய்யித் Sharmila Seyyid on May 12, 2019 பட மூலம், Tharaka Basnayaka Photo, Axios இஸ்லாத்தின் எந்தவொரு அடிப்படைவாத சிந்தனைகளையும் ஒரு சந்தர்ப்பத்தில்கூட தூக்கிப்பிடித்திராத, குறைந்தபட்சம் புர்காவோ ஹிஜாபோகூட அணியாத பெண் நான். பெரும்பாலான இடங்களில் “நானொரு முஸ்லிம்” என்று சொல்லிக் கொண்டாலே தவிர, என்னை அவ்வாறு அடையாளப்படுத்திக் கொண்டு தோன்றுவதுமில்லை. மதம் ஆன்மீகமானதும், அது முழுக்க முழுக்க ஆழ் மனத்தோடு தொடர்பான ஒரு உள்மன யாத்திரை என்பதுமே மதம் பற்றிய எனது புரிதல். இருந்தும் நாட்டின் தற்போதைய சூழலில் நானும் ஒரு தீவிரவாதியாகவே பார்க்கப்படுகிற…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.