அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9225 topics in this forum
-
உயிர்த்த ஞாயிறுப் படுகொலைகள் : மத நிறுவனங்களை நோக்கிச் சிலகேள்விகள் – நிலாந்தன்.. May 26, 2019 எல்லாமேவிதிப்படிதான் நடக்கும் எதையுமே நம்மால் மாற்ற இயலாது, என்று சொல்பவர்கள் ரோட்டைக் கடக்கும்போது இருபுறமும் பார்த்துவிட்டுக் கடப்பதைநான் பார்த்திருக்கிறேன் – ஸ்டீஃபன் ஹொக்கிங். கோயில்களின் காலம் முடிந்துவிட்டதுஎன்றுமு.தளையசிங்கம் கூறியிருக்கின்றார்.ஈழத்தமிழர்கள் மத்தியில் தோன்றியமிகமுக்கியஆன்மீக இலக்கியச் சிந்தனையாளர் செயற்பாட்டாளர் அவர். ஒருபுதுமதத்தை முழு மதத்தைஅவர் கனவுகண்டார். ஈழப்போர்க்களத்தில் எல்லாமதக் கோயில்களும் தாக்கப்பட்டிருக்கின்றன. போரில் ஈடுபட்டஎல்லாத் தரப்புக்களும் மற்றையதரப்பின் ஆலயங்களைஅல்லதுவழிபாட்டிடங்களைத் த…
-
- 1 reply
- 971 views
-
-
ஊமைவெயில் காலத்தில் - முள்ளிவாய்க்கால் நினைவு பட மூலம், Selvaraja Rajasegar நேற்றுப்போலிருக்கிறது. இரத்தமும், கண்ணீர் நிரம்பிய மனிதர்களுமாக வரலாறு நம் முன் பதிந்த நாட்கள். நேற்றுப்போல் இருக்கிறது 2009. அதற்குள் 2019 ஆகிவிட்டது. தசாப்தமொன்றை கடந்து நிற்கிறோம். இந்த ஊமைவெயில் காலத்தைக் கடந்து நின்று திரும்பிப் பார்க்கையில் தூரமாகவும், அண்மையாகவும் என்ன தெரிகின்றது என்பதையே இக்கட்டுரை அலசுகின்றது. 18 மே 2009 இல் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதம் மௌனிக்கப்படுகையில், தமிழ் தேசிய இனத்தின் விடுதலைப் போராட்டமானது தமிழ் தேசிய கூட்டமைப்பிடமும், புலம்பெயர் தமிழர்களிடமும், தமிழகத் தமிழர்களிடமும்தான் கையளிக்கப்பட்டது. இது இயற்கையான போக்கில் நிகழ்ந்ததுதான். ஆனால் அனை…
-
- 1 reply
- 822 views
-
-
வெளியே வந்துள்ள ‘ஹீரோக்கள்’ கே. சஞ்சயன் / 2019 மே 24 வெள்ளிக்கிழமை, மு.ப. 08:16 Comments - 0 ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்களால் ஏற்பட்ட சூழ்நிலைகள், இரண்டு முக்கியமான விடயங்களைப் பலரது கண்களில் இருந்தும் மறைத்து விட்டன. நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், ஆறு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட பொது பலசேனா அமைப்பின் தலைவர் கலகொட அத்தே ஞானசார தேரரின் விடுதலை, அதில் ஒன்று. ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்ட சம்பவங்களுடன் தொடர்புடையவர் என்ற குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருக்கும், மேஜர் பிரபாத் புலத்வத்த என்ற இராணுவப் புலனாய்வு அதிகாரி, மீண்டும் இராணுவத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டிருப்பது இன்னொன்று. சாதாரணமானதொரு சூழ்நிலையில் இந்த இரண்டும் நிகழ்ந்திருந்தால், அது ப…
-
- 0 replies
- 560 views
-
-
மே 18யை நினைவுகூரல்: சடங்குகளுக்கும் சம்பிரதாயங்களுக்கும் அப்பால் Editorial / 2019 மே 23 வியாழக்கிழமை, பி.ப. 06:52 Comments - 0 போர் முடிந்து பத்து வருடங்கள் ஆகிவிட்டன. கடந்த 10 ஆண்டுகளாக ஈழத்தமிழர் வாழும் நாடுகள் எங்கும் மே 18 நினைவுகூரப்படுகிறது. இந்த நினைவுகூரலின் சமூகப் பெறுமானம் என்ன என்ற கேள்வியை இப்போதாவது நாம் கேட்டாக வேண்டும். மே 18 நினைவுகூரல்கள், மெழுகுதிரி ஏற்றுதல், அஞ்சலி, நீதிக்கான கோரிக்கை, வீரப்பேச்சுக்கள் என்பவற்றுடன் முடிகின்றன. ஒரு மே, அடுத்த மே, அதற்கத்த மே என ஆண்டுகள் பத்து கடந்துவிட்டது. இப்போது மே18 ஆண்டு நாட்காட்டியில் சடங்குக்கு உரிய ஒரு தினம் மட்டுமே. பத்தாண்டுகளைப் பின்னோக்கியும் முன்னோக்கியும் பார்க்குமிடத்து இந்த…
-
- 0 replies
- 665 views
-
-
மதத்தின் பெயரிலான தீவிரவாத்தின் ஒழிப்பு Editorial / 2019 மே 23 வியாழக்கிழமை, பி.ப. 06:34 Comments - 0 -இலட்சுமணன் உலகளவில் எழுந்திருக்கின்ற கேள்விகள் எல்லாமே, இஸ்லாத்தின் பெயராலும் ஏனைய மதங்களின் பெயராலும் மேற்கொள்ளப்படும் பயங்கரவாதத்தை, எவ்வாறு ஒழிக்க முடியும் என்பதாக இருக்கையில்தான், இலங்கையில் ஈஸ்டர்தினம் தெரிவு செய்யப்பட்டு, தேவாலங்களிலும் நட்சத்திர ஹோட்டல்களிலும் தற்கொலைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டிருந்தன. நாட்டில் ஏற்பட்ட தற்கொலைத் தாக்குதல்களை அடுத்தான அசாதாரண நிலைமையில் மாற்றம் கொண்டுவரப்படுதல்தான், இப்போதைய தேவையாக இருக்கிறது. இந்தத் தாக்குதலுக்கு, கிழக்கின் காத்தான்குடியைச் சேர்ந்தவர் ஆரம்பப் புள்ளியாக இருந்திருக்கிறார் என்ற கரும்புள்ளியுடன…
-
- 0 replies
- 473 views
-
-
முள்ளிவாய்க்காலுக்குப் பின்னரான தாயக - புலம்பெயர் உறவு புருஜோத்தமன் தங்கமயில் / 2019 மே 23 வியாழக்கிழமை, பி.ப. 01:04 Comments - 0 “நாங்கள் தாயகத்திலிருந்து புலம்பெயர்ந்துவிட்டதால் மாத்திரம், ஈழத்தமிழர் அரசியலைப் பேசுவதற்கான தகுதியை இழந்துவிட்டோமா, எமக்கான அங்கிகாரத்தையும் பேசுவதற்கான தகுதியையும் பெறுவதற்கு, நாங்கள் என்ன செய்ய வேண்டும்? மீண்டும் தாயகத்துக்குத் திரும்ப வேண்டுமா” என்கிற ஆதங்கத்தை, இந்தப் பத்தியாளரிடம், அவரின் வயதையொத்த புலம்பெயர் ஊடகத்துறை நண்பரொருவர், சில ஆண்டுகளுக்கு முன்னர் வெளிப்படுத்தினார். கிட்டத்தட்ட அதேமாதிரியான ஆதங்கத்தை, சமூக ஊடகமொன்றில், கனடாவில் வசிக்கும் ஈழத்தமிழ்ச் செயற்பாட்டாளர் ஒருவரும், அண்மையில் வெளிப்படுத்தி இருந்தார். …
-
- 0 replies
- 884 views
-
-
மே 18 நினைவுகூர்தல்: அரசியல்படுத்தலிலிருந்து மக்கள் மயப்படுத்தல் North East Coordinating Commitee on May 22, 2019 இறுதியுத்தத்தின் பொழுது இலங்கையின் வட பகுதியின் வன்னிப் பிரதேசத்தில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டும் காயமடைந்தும் காணாமலாக்கப்பட்டுமிருந்தார்கள். சரணடைந்தவர்களும் தடுத்து வைக்கப்பட்டவர்களில் பலரும் காணாமல்போகச் செய்யப்பட்டிருந்தார்கள். போர் உக்கிரமடைந்த 2008இன் பிற்பகுதிகளில் வன்னியின் ஏனைய பகுதி மக்கள் முல்லைத்தீவை நோக்கி நகரத் தொடங்கினார்கள். ஷெல் தாக்குதல்களிலிருந்தும் விமானக் குண்டு வீச்சுக்களிலிருந்தும் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள தினமும் ஒவ்வொரு இடமாக நகர்ந்து கொண்டேயிருந்தார்கள். இறுதியில் அவர்கள் அனைவர…
-
- 0 replies
- 808 views
-
-
வஞ்சம் - முஸ்லிம் சமூகம் மீது வஞ்சம் தீர்க்க வாய்ப்பான ஈஸ்டர் பயங்கரவாதத் தாக்குதல்கள் முகம்மது தம்பி மரைக்கார் / 2019 மே 23 வியாழக்கிழமை, பி.ப. 12:53 Comments - 0 முஸ்லிம் சமூகம் மீது, வஞ்சம் தீர்க்கக் காத்திருந்தோருக்கு, ஈஸ்டர் தினத்தன்று நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதல்கள், நல்லதொரு வாய்ப்பாக அமைந்து விட்டன. ஒட்டுமொத்த முஸ்லிம் மக்களையும் பயங்கரவாதிகளாகச் சில கூட்டம் சித்திரித்துக் கொண்டிருக்கிறது. மறுபுறத்தில், இந்தத் தாக்குதல்களைச் சாட்டாக வைத்து, முஸ்லிம் பிரதேசங்கள் பலவற்றில், காடைத்தனங்கள் இடம்பெற்றுள்ளன. இத்தனைக்கும், பாதிக்கப்பட்ட கிறிஸ்தவ மக்கள், மிகவும் பொறுமையுடனும் சகிப்புத் தன்மையுடன் இருக்கத்தக்கதாகவே, இவ்வளவு கூத்து…
-
- 0 replies
- 800 views
-
-
முடிவுற்ற ஆயுதப் போரும் முடிவுறாத உளவியல் போரும் காரை துர்க்கா / 2019 மே 23 வியாழக்கிழமை, பி.ப. 12:46 Comments - 0 கடந்த சனிக்கிழமை (மே 18), வலிகள் சுமந்த முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பத்தாம் ஆண்டு நிறைவு, தமிழர் தாயகத்தில் இதயம் கனத்த கவலையுடனும் எழுச்சி பொங்கிய உணர்வுடனும் நடைபெற்றது. ‘தமிழர்கள் மத்தியில் பயத்தைத் தக்க வைத்து, உளவியல் போர் செய்கின்றது ஸ்ரீ லங்கா அரசாங்கம்’ என, அங்கு வெளியிடப்பட்ட நினைவேந்தல் பிரகடனத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. கடந்த 10 ஆண்டுகளில், ஆயுதப் போர் அற்றுப் போன நிலையில், உளவியல் போர் தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டிருப்பதை, அனைத்துத் தமிழ் மக்களும், அன்றாடம் அனுபவித்தும் உணர்ந்தும் வருகின்றனர். அதன் நீட்சி…
-
- 0 replies
- 692 views
-
-
ஜனாதிபதித் தேர்தல் முஸ்தீபுகள் என்.கே. அஷோக்பரன் / 2019 மே 20 திங்கட்கிழமை, பி.ப. 08:08 Comments - 0 பகுதி -1 மிகக்கோரமான உயிர்த்தெழுந்த ஞாயிறு தாக்குதல்களைத் தொடர்ந்து, அச்சமும் துயரமும் பயங்கரமும் இலங்கை மக்களின் மனதை, மீண்டும் ஆட்டிப்படைக்கத் தொடங்கியுள்ள வேளையில், அரசியல் பரப்பில், முக்கியமான சில காய்நகர்த்தல்கள் இடம்பெற்றுக் கொண்டிருப்பதையும் நாம் அவதானிக்கக் கூடியதாக உள்ளது. இந்தக் காய் நகர்த்தல்கள் எல்லாம், அடுத்த ஜனாதிபதித் தேர்தலை இலக்காகக் கொண்டு, இடம்பெற்று வருவதையும் உணரக் கூடியதாக உள்ளது. 2015ஆம் ஆண்டு ஜனவரி எட்டாம் திகதி, நடைபெற்ற ‘வரலாற்று முக்கியத்துவம் மிக்க’ ஜனாதிபதித் தேர்தலின் ஞாபகங்கள் கூட, இன்னும் இலங்கையர்களின் ம…
-
- 7 replies
- 1.6k views
-
-
‘இந்துத்துவா வரும் பின்னே, மணியோசை வரும் முன்னே’ எம். காசிநாதன் / 2019 மே 20 திங்கட்கிழமை, பி.ப. 08:00 Comments - 0 இந்திய மக்களவைக்கான கடைசிக்கட்ட வாக்குப்பதிவுடன் தமிழகத்தில் உள்ள அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், சூலூர், ஒட்டப்பிடாரம் ஆகிய நான்கு சட்டமன்றத் தொகுதிகளின் இடைத்தேர்தல் நடைபெற்று முடிந்திருக்கிறது. டொக்டர் அன்புமணி ராமதாஸ் போட்டியிட்ட தர்மபுரி நாடாளுமன்றத் தொகுதி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத்குமார் போட்டியிட்ட தேனி நாடாளுமன்றத் தொகுதி ஆகியவற்றில், சில வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப் பதிவு ஆகியன நடந்து முடிந்திருக்கின்றன. இந்த நான்கு சட்டமன்றத் தொகுதிகளும் தமிழ்நாட்டில் அ.தி.மு.க ஆட்சி நீடிப்பதற்கான, அச்சாரமாக அம…
-
- 0 replies
- 944 views
-
-
இலங்கையில் வல்லரசுகளின் ஊடுருவலுக்கு வழிவகுத்துள்ள தற்கொலைத் தாக்குதல்கள் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத்தாக்குதல்கள் உள்ளூர் தீவிரவாதத்தை அடிப்படையாகக்கொண்டது. அது ஐ.எஸ்.ஐ.எஸ். என்ற உலக பயங்கரவாத அமைப்பினால் வழிநடத்தப்பட்டது. பொலிஸ் விசாரணைகளில் இது கண்டறியப்பட்டுள்ளது. உள்ளூர் தீவிரவாத அமைப்பினரே பயங்கரமான தற்கொலைக்குண்டுத் தாக்குதல்களை நன்கு திட்டமிட்ட வகையில் நடத்தி அப்பாவிகளான 250க்கும் மேற்பட்டவர்களைக் கொன்றொழித்ததுடன், 500க்கும் மேற்பட்டவர்களை காயமடையச் செய்துள்ளனர். தேவாலயங்களிலும் நட்சத்திர ஹோட்டல்களிலும் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல்களின் பின்…
-
- 0 replies
- 626 views
-
-
30 வருடகால யுத்தம் நிறைவடைந்து 10 வருடங்கள் கடந்தும் தீர்க்கப்படாதுள்ள பிரச்சினைகள் நாட்டில் பாரிய பாதிப்புகளை ஏற்படுத்திய மக்களின் உயிர்களுக்கும் உடைமைகளுக்கும் இழப்புகளைக் கொடுத்த 30 வருடகால யுத்தம் நிறைவடைந்து 10 வருடங்கள் கடந்துவிட்ட நிலையில் அதனால் பாதிக்கப்பட்ட அப்பாவிப் பொதுமக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டுள்ளனவா என்று பார்த்தால் அது விடை கிடைக்காத ஒரு கேள்வியாகவே இருக்கும். காரணம் கடந்த 10 வருடங்களாக பாதிக்கப்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டவர்களாகவே இருக்கின்றனர். அவர்களின் பிரச்சினைகளும் இன்னும் பிரச்சினைகளாகவே நீடித்துக்கொண்டிருக்கின்றன. அரசியல் தீர்வு, காணாமல் போனோர் விவகாரம், …
-
- 10 replies
- 1k views
-
-
2008 விடுதலைப் புலிப் போராளி கலைக்கோன் மாஸ்ரரின் பார்வையில்... இன்றைய காலத்தில் எழுப்பப்படும்.. பல கேள்விகளுக்கு அன்றே பதில் சொன்னவர்களுக்கு இப்போது சிலர் மீள்பார்வை.. மீளாராய்ச்சி என்று கத்துக்குட்டிக்கள் வகுப்பெடுப்பது தான் வேடிக்கை.
-
- 0 replies
- 1.2k views
-
-
மத்ரஸாக்கள், தீவிரவாதம் மற்றும் தேசிய பாதுகாப்பு Maatram Translation on May 17, 2019 பட மூலம், Selvaraja Rajasegar Photo மத்ரஸாக் கல்வி மற்றும் இஸ்லாமிய தீவிரவாதம் என்பவற்றுக்கிடையிலான தொடர்பு ஆப்கானிஸ்தானின் தலிபான் இயக்கம் எழுச்சியடைந்த நாள் தொடக்கம் உலகளாவிய கலந்துரையாடல்களில் உள்ளடக்கப்பட்டிருந்தது. சோவியத் முற்றுகைக்குப் பின்னர் ஆப்கானிஸ்தானில் இந்தத் தோற்றப்பாடு எழுச்சியடைந்ததுடன், சோவியத் துருப்புக்களுக்கு எதிராக ஆப்கானிஸ்தானில் போராடியவர்கள் சோவியத்களின் வெளியேற்றத்தை அடுத்து, பல்வேறு பிரிவுகளாக பிரிந்து, தங்களுக்குள் ஒரு மிகக் கசப்பான உள்நாட்டு போரில் ஈடுபட்டிருந்தார்கள். இது அந்ந…
-
- 0 replies
- 499 views
-
-
அச்சுறுத்தலில் பிராந்திய பாதுகாப்பு ! மழைவிட்டும் தூவானம் நிற்கவில்லை என்பது போல் உயிர்த்த ஞாயிறு தினத்தில் நடைபெற்ற தற்கொலை குண்டுத்தாக்குதல்கள் தொடர்பில் நாளுக்கு நாள் அதன் பிரதிபலிப்புக்கள் இடம்பெற்றுக்கொண்டே இருக்கின்றன. தற்கொலை தாக்குதல்களை அடுத்து பாதுகாப்புத்துறையினரின் உடனடிச் செயற்பாடுகள் மூலம் தாக்குதல் சம்பவங்கள் அடுத்து நிகழாத வகையில் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன. எனினும் நடத்தப்பட்ட தற்கொலை தாக்குதல்கள் சம்பந்தமாக பல்வேறு கோணங்களில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளின் போது அதிர்ச்சி விடயங்கள் வெளியாகிக்கொண்டே இருக்கின்றன. அந்த விடயங்கள் பரஸ்பரம் உள்நாட்டிலும் பிராந்தியத்திலும் எதிர்விளைவுகளையும் ஏற்படுத்தியிருக்கின்றன. ஆனாலும் தீவிரவாதத்…
-
- 2 replies
- 685 views
-
-
மீண்டுமொரு கறுப்பு ஜூலைக்கு வழிவகுக்க திட்டமா? மற்றுமொரு கறுப்பு ஜூலை நாட்டில் உருவாகியுள்ளதா என்று பீதி கொள்ளும் அளவுக்கு கடந்த செவ்வாய்க்கிழமை (13.05.2019) குருநாகல், கம்பஹா மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் வாழும் முஸ்லிம் குடிமக்களுக்கெதிராக கட்டவிழ்த்துவிடப்பட்ட கொடூர வன்முறைச் சம்பவங்கள் அரங்கேற்றப்பட்டுள்ளன. அப்பாவி பொதுமக்கள் ஒருவர் கொல்லப்பட்டிருக்கிறார்கள், பள்ளிவாசல்கள் தாக்கப்பட்டுள்ளன, தீ வைக்கப்பட்டுள்ளன, வர்த்தக நிலையங்கள் நாசமாக்கப்பட்டுள்ளன, கொடுமையாளிகளின் தாக்குதல்களுக்கு அஞ்சி வீடு வாசல்களை விட்டோடி வயல்வெளிகளில் அப்பாவி கிராம மக்கள் அடைக்கலம் கோரியுள்ளனர். படைத்த…
-
- 0 replies
- 519 views
-
-
ஆறாத சோகம் தீராத துயரம் அது,ஆறாத சோகம். தீராத துயரம். அந்த இழப்புக்கள் ஆழமானவை. மிகமிக ஆழமானவை. அந்த சோகத்தையும், துயரத்தையும் இழப்புக்களையும் மீட்டுப்பார்க்க நெஞ்சம் பதைபதைக்கும். அந்தப் பதைபதைப்பு அடி மனம் வரையும் பாய்ந்து அப்படியே உலுக்கி எடுக்கும். முள்ளிவாய்க்காலில் பாதிக்கப்பட்டவர்களின் நிலைமை இதுதான். முள்ளிவாய்க்கால் பேரவலம் நடந்து பத்து வருடங்கள் ஓடிவிட்டன. அந்தப் பாதிப்புக்கள் குறித்து பாதிக்கப்பட்டவர்கள் மீட்டுப் பார்க்கவே விரும்புவதில்லை. ஆனால் அந்த நினைவுகள் நனவுகளாக எந்தெந்த சந்தர்ப்பங்களில் மேலெழுந்து மெய்நடுங்கி மனம் நோகச் செய்யும் என்பது அவர்கள் எவருக்குமே தெரியாது. கதைப் போக்கில் முள்…
-
- 0 replies
- 991 views
-
-
இலங்கையில் இஸ்லாமியவாத தீவிரவாதம்: எங்கே செல்லும் இந்தப் பாதை? பேராசிரியர் எஸ்.ஐ.கீதபொன்கலன் பாதுகாப்பு பகுப்பாய்வாளர் Getty Images கோப்புப்படம் (இந்தக் கட்டுரையில் வரும் கருத்துகள் அனைத்தும் கட்டுரையாளரின் சொந்தக் கருத்துகளே. இவை பிபிசியின் கருத்துகள் அல்ல. - ஆசிரியர்) இலங்கையில், உயிர்ப்பு ஞாயிறு தாக்குதலில் 250-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டமை உள்ளூர் ரீதியாகவும், சர்வதேச ரீதியாகவும் பாரிய எதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது. இத்தாக்குதலில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது, தாக்குதலின் பிரமாண்டமும், கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கையுமே அன்றி தாக்குதல்கள் அல்ல. இதுவரை வந்துள்ள தகவல்களின் அடிப்படையில், தாக்குதலாளிகள் அனைவரும் இலங்கையின் இரண்டா…
-
- 0 replies
- 840 views
-
-
இந்த ஆறாத் துயரிலிருந்து நமது தேசத்தை மீட்டெடுப்பதற்கான வழி (முதல் பாகம்) Maatram Translation on May 14, 2019 பட மூலம், The National உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நாட்டில் இடம்பெற்ற மிகக் கொடூரமான குண்டுத் தாக்குதல்களை அடுத்து, முஸ்லிம் சமூகத்திற்கு எதிரான உடல் ரீதியான தாக்குதல்களை இலங்கை தவிர்த்துக் கொள்ளக்கூடியதாக இருந்து வந்துள்ளது. எவ்வாறிருப்பினும், இலங்கை அரசினால் இந்த நெருக்கடி முகாமைத்துவம் செய்யப்படும் விதம் (கொச்சிக்கடை மற்றும் நீர்கொழும்பு ஆகிய இடங்களில் இடம்பெற்ற சம்பங்கள் தவிர) முதிர்ச்சியான இயல்பைக் கொண்டதாகவோ அல்லது திருப்திகரமானதாகவோ இருந்து வரவில்லை. இத்தகைய வன்முறையுடன்…
-
- 1 reply
- 1.2k views
-
-
புர்கா தடை என்னும் அக்கினி Sharmila Seyyid on May 15, 2019 பட மூலம், Getty Images, AXIOS “புர்கா/ நிகாப் இல்லாமல் வெளியே வரவே மாட்டேன்” என்று ஐந்து பெண் மக்களின் தாயொருவர் அடம்பிடித்து அழுதபடி வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றார் என்ற செய்தி காது வழியாக நுழைந்தபோது மூளையின் நரம்புத் தொகுதிகளில் ஒரு பெருத்த வலியை உணர்ந்தேன். எமது பெண்களை ஆணாதிக்கம் கொண்டுவந்து நிறுத்தியிருக்கும் இடம் இதுதான். “பாதுகாப்புக் காரணங்களுக்காக புர்கா/ நிகாப் தடை செய்யப்பட்டுள்ளதனால் பெண்கள் இவற்றை அணிந்து கொண்டு வெளியே வராதீர்கள், வீடுகளிலேயே இருந்துவிடுங்கள்” என்று மிக எளிதாக ஆண்கள் தீர்மானம் இயற்றிவிட்டார்க…
-
- 4 replies
- 1.1k views
-
-
ஒரு முஸ்லிம் தோழருக்கு எழுதியது... . தோழா, சில தமிழ் ஊடகங்களின் தவறு கண்டிக்க வேண்டியது. சில முஸ்லிம் சமூக வலை தழத்திலும் குறிப்பாக பின்னூட்டங்களில் தமிழர் பற்றிய வசைபாடல்கள் வருகின்றன. அனுதாபம் தெரிவிக்கிற எல்லோரும் கிறிஸ்தவம் ஒரு இனம்போல பேசுகிறார்கள். தாக்கபட்ட தமிழ் பூசைகளில் கொல்லபட்டது கிழக்குமாகாணத்தையும் மலையக தென்னிலங்கையையும் சேர்ந்த தமிழர்கள் என்பதை யாரும் கணக்கெடுக்கவில்லை என்கிற கவலை கிழக்கு நாடாளுமன்ற பிரதேசசபை தலைவர்கள் மத்தியிலும் மனோ கணேசன் போன்ற மலைய தலைவர்கள் மத்தியிலும் பல தமிழ் ஊடகவியலாளர் மத்தியிலும் உள்ளது. தயவு செய்து இதனையும் பொருட்படுத்துங்கள். மட்டகளப்பு நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்தரனின் உறவினர்க்ச்ள் கொல்லப் பட்டதாக சொன்ன…
-
- 15 replies
- 2.8k views
-
-
மதம் பிடித்த பிராந்தியங்கள் புதினப்பணிமனைMay 14, 2019 by in ஆய்வு கட்டுரைகள் மத்திய கிழக்கைப் போலவே, தெற்காசிய நாடுகள் அனைத்தும் இன்று மதம் பிடித்தோரின் அரசியலில் சிக்கிச் சீரழிந்து கொண்டிருக்கின்றன. பல்தேசிய சமூகங்களை கொண்ட இந்த பிராந்தியத்தில் பெரும்பான்மையினர் என தம்மை அடையாளப்படுத்தி கொண்டுள்ளவர்கள், மத கொள்கைகளை முன்னிறுத்தி ஆட்சியை கைப்பற்றி தமது நம்பிக்கைகளையும் புனை கதைகளையும் ஆட்சியில் உட்புகுத்துவது மட்டு மல்லாது, சமூக பொருளாதார வாழ்வில் பெரும் தக்கங்களை விளைவித்து வருகின்றனர். தமது ஆட்சி அதிகாரப்போக்கினை மேலும் பல ஆண்டுகளுக்கு நிலை நிறுத்தி கொள்ளும் போக்கில், தமது கொள்கைகளை சமூகங்களின் மத்தியில் பல்வேறு அடிப்படைவாத அமைப்புகளை கொண்டிருக்கின…
-
- 7 replies
- 4.3k views
-
-
இனப்படுகொலை: சர்வதேச சட்டமும் அதன் பொருந்துத்தன்மையும் Editorial / 2019 மே 13 திங்கட்கிழமை, மு.ப. 07:00 Comments - 0 ஜனகன் முத்துகுமார் சர்வதேச மனித உரிமைகள் சமவாயங்கள் மற்றும் சர்வதேச சட்ட விதிமுறைகள், இனப்படுகொலை என்பது ஒரு இன, மொழி, மத சார்பான மக்கள் கூட்டத்தை முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ அழிக்கவேண்டி, அவ்வாறாக அழிக்கும் நோக்கத்துடன் கட்டவிழ்க்கப்படுகின்ற வன்முறை என விளிக்கின்றன. இனப்படுகொலை தொடர்பான எண்ணக்கரு முதல் முதலில் 1944 இல் ராபியேல் லெம்கின் Axis Rule in Occupied Europe எனும் நூலில் வெளியிடப்பட்டிருந்தது. குறிப்பாக இது இரண்டாம் உலகப்போரின் போதான ஹோலோகாஸ்ட் (Holocaust) இனப்படுகொலையை சித்தரிக்க பயன்பட்டிருந்தது. லெம்கின் இனப்படுகொலையை தனத…
-
- 0 replies
- 1k views
-
-
ஈஸ்டர் குண்டுவெடிப்புகளில் அதிக அரசியல் லாபமீட்டக்கூடியவர்கள் மகிந்தவாதிகள் தான். எந்த ஒரு நிலைமையையும் தமக்கு சாதகமாக திசைதிருப்பிக்கொள்ளும் அரசியல் வியூகத்தை வடிவமைப்பதில் இலங்கையில் வல்லவர்களாக இருப்பவர்கள் மகிந்தவாதிகள் தான். ஈஸ்டர் படுகொலையில் அதிக அரசியல் லாபம் ஈட்ட முயற்சித்துக்கொண்டிருப்பவர் கோத்தபாய. அதிக அரசியல் லாபம் அடையக் கூடியவரும் அவர் தான். பிரதான கட்சிகள் இன்னமும் ஜனாதிபதித் தேர்தலில் தமது வேட்பாளர் யார் என்பதை தேர்ந்தெடுப்பதிலும், வெளிப்படையாக பகிரங்கப்படுத்துவதிலும் ராஜதந்திரத்துடன் அணுகுவதாக அக்கட்சிகள் நம்பிக்கொண்டிருக்கின்றன…
-
- 0 replies
- 812 views
-