Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. தமிழகத்தில் பலப்படுமா திராவிட இயக்கம்? தமிழகத்தில் இரு பெரும் முக்கிய நிகழ்வுகள் நடைபெறுகின்றன. அ.தி.மு.கவுக்கு புதிய பொதுச் செயலாளர் தெரிவு செய்யப்படுகிறார். தி.மு.கவுக்கு செயல்தலைவர் நியமனம் செய்யப்படுகிறார். இரு கட்சிகளுக்கும் புதிய தலைமை வழி நடத்திச் செல்லும் சூழல் மீண்டும் திராவிட இயக்கங்களுக்குள் நிகழ்ந்திருக்கிறது. திராவிட முன்னேற்றக் கழகம், தந்தை பெரியாரின் திராவிடர் கழகத்திலிருந்து 1949 இல் பிரிந்தது. பேரறிஞர் அண்ணாவின் கீழ் திராவிட முன்னேற்றக் கழகம் உருவானது. அதேபோல் 1972 இல் தி.மு.கவிலிருந்து பிரிந்து, அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை உருவாக்கினார் மறைந்த எம்.ஜி.ஆர். மறைந்த தலைவர் எம்.ஜி.ஆருக்கு…

  2. P2P போராட்டம் எதுவரைக் கொண்டு செல்லும்? -தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ பொத்துவில் முதல் பொலிகண்டி வரை (P2P) போராட்டம், இலங்கையின் சிறுபான்மைச் சமூகங்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்பதை மறுக்கவியலாது. இந்தப் போராட்டத்தின் முடிவைத் தொடர்ந்து, அரசியல்வாதிகள் இடையேயான பரஸ்பரக் குற்றச்சாட்டுகள், கருத்து மோதல்கள் ஒருபுறமும், இதற்கு யார் உரிமை கொண்டாடுவது என்பது, இன்னொரு புறமுமாக ஈழத்தமிழர் அரசியல் நகர்கிறது. இந்தப் போராட்டத்தில் உணர்வெழுச்சியோடு பங்குபற்றிய எல்லோருடைய கேள்வியும், அடுத்து என்ன என்பதே? இக்கேள்வி மிகவும் முக்கியமானது. இக்கேள்விக்கான பதிலைத் தேடுவதற்கு, இந்தப் போராட்டத்தின் போதும் அதன் பின்னரும், நடைபெற்ற நிகழ்வுகளை ஆழமாக நோக்க வேண்டியுள்ளத…

  3. தமிழ்த் தேசிய அரசியலின் முறிவு? தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் உரையாற்றிக் கொண்டிருந்தபோது, விளைவிக்கப்பட்ட குழப்பம் தொடர்பில் கடந்த இரண்டு வாரங்களாகப் பேசப்படுகின்றது. சம்பந்தன் ஏன் முள்ளிவாய்க்கால் வந்தார்?, மக்கள் ஏன் கொந்தளித்தார்கள்?, குழப்பத்துக்குப் பின் சம்பந்தன் அழைத்தும் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஏன் ஊடக சந்திப்பைத் தவிர்த்தார்? என்று பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டு பதில்கள் எழுதப்படுகின்றன. ஆனால், எழுதப்படுகின்ற பதில்கள் எல்லாமே ஒரேயிடத்தில் வந்து முட்டி நிற்கின்றன. அவை, ‘தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் மக்கள் நம்பிக்கையிழந்து விட்டார்கள். மக்களின் விமர்சனங்களு…

  4. ஜெனிவாவுக்கான அறிக்கையிலும் முரண்படும் தமிழ்த் தலைமைகள் – அகிலன் September 7, 2021 ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 48 ஆவது கூட்டத் தொடர் எதிர்வரும் 13 ஆம் திகதி ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ள நிலையில், தமிழ்த் தேசியக் கட்சிகளிடையேயான பிளவு மீண்டும் தெளிவாக வெளிப்பட்டுள்ளது. ஒரே குரலில் ஜெனிவாவுக்கு அழுத்தத்தைக் கொடுக்கும் வகையிலான அறிக்கை ஒன்றை அனுப்பி வைப்பதற்காக முன்னெடுக்கப்பட்ட முயற்சிகள் தோல்வியடைந்திருக்கின்றன. முரண்படும் தமிழ்த் தலைமைகள்; இந்த நிலையில் தமிழ்த் தேசியக் கட்சிகள் நான்காகப் பிளவுபட்டு தமது அறிக்கைகளைத் தனித்தனியாக ஜெனிவாவுக்கு அனுப்பிவைக்கின்றன. இதில் ஐந்தாவதாக அனந்தி சசிதரன் தலைமையிலான கட்சி இந்த அணிகள் எதற்குள்ளும் செல்லாமல் தனித்து நிற்கின்றது. …

  5. இராணுவத்தின் களமிறக்கம்; பொறுப்பற்ற தமிழ்த்தலைமை இரண்டு பொலிஸார் மீது, கொக்குவில் பகுதியில் வாள்வெட்டு நடத்தப்பட்டதையடுத்து, யாழ்ப்பாணம் வந்திருந்த பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, “நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர, தேவைப்பட்டால் இராணுவத்தினர், கடற்படையினர், விமானப்படையினரின் உதவியையும் பெறுவேன்” என்று கூறியிருந்தார். யாழ்ப்பாணக் குடாநாட்டில் சுமார் ஆயிரம் பேரைக் கொண்ட விசேட அதிரடிப்படையைத் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் பொலிஸ்மா அதிபர், அவர்களின் மூலம், நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் வாய்ப்புகள் இருந்தாலும், முப்படைகளையும் களமிறக்குவேன் என்று எச்சரித்தமை, சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடிய…

  6. ஜெயலலிதா மரணம் பற்றிய விசாரணை ஆணைக்குழுவும் திராவிட இயக்கங்களும் “ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை ஆணைக்குழு அமைக்கப்படும்” என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருக்கிறார். முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்தின் கோரிக்கை மட்டுமல்ல, திராவிட முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளின் கோரிக்கைதான் இது என்றாலும், எட்டு மாதங்களுக்குப் பிறகு, இந்தக் கோரிக்கை ஏற்கப்பட்டிருக்கிறது. 2016, டிசெம்பர் ஐந்தாம் திகதி, ஜெயலலிதா மரணமடைந்தார் என்றாலும், அவர் ‘அப்பலோ’ மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட செப்டெம்பர் 22 ஆம் திகதியிலிருந்தே அனைத்தும் மர்மம் நிறைந்த பரபரப்பூட்டும் காட்சிகள் போல் இருந…

  7. நினைவு கூரல்களுக்கான தடை என்ற ஜனநாயக மீறல் லக்ஸ்மன் நினைவுகூரல்களுக்கும் நீதி கோரல்களுக்கும் விதிக்கப்பட்டு வருகின்ற தடையானது மிக மோசமானதொரு ஜனநாயக மீறல் என்பதை அறியாதவர்களாகவே இலங்கையின் அரசாங்கமும் அதன் படைகளும் பாதுகாப்புத் தரப்பினரும் இருந்து வருகின்றனர். அதற்குரிய மாற்று நடவடிக்கையினை யார் முன்னெடுப்பது என்பதே இப்போதைக்கு எல்லோரிடமும் உள்ள கேள்வி. ஆனால் ஏதோ நடப்பதெல்லாம் நடக்கட்டும் நமக்கென்ன என்றிருப்பவர்கள் அதிகமாகிக்கொண்டே வருகின்றனர் என்பதே கவலை. முக்கியமாக போராட்டம் நடைபெற்று அப்போராட்டம் மௌனிக்கப்பட்ட இலங்கையில், அதிகமாகவே படுகொலைகள், கொலைகளுக்கான நினைவு கூரல்களைக் கூட யாரும் செய்துவிடமுடியாதளவுக்கான அடக்குமுறைகள் நடைபெறுகின்றன. அதே நேரத்தில் நடை…

  8. கண்ணை மூடிக்கொண்டு கையை உயர்த்துதல் http://content.epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2017-09-03#page-5

  9. யாழ். இளைஞர்கள் சோம்பேறிகள் என்ற புனைவு Ahilan Kadirgamar / சிறிது காலத்துக்கு முன்பு, போர் முடிவடைந்ததன் பின்பு, யாழ்ப்பாணச் சமூகம் பற்றித் திரும்பத் திரும்பக் கூறப்பட்ட ஒரு விடயமாக, அந்த மக்கள், எவ்வளவு கடின உழைப்பாளிகள் என்பதுவும் சிக்கனமாகச் செயற்படுவர்கள் என்பதுவும் மதிநுட்பம் கொண்டவர்கள் என்பதுவும் காணப்பட்டது. ஆனால் இன்று, யாழ்ப்பாணச் சமூகம், சோம்பேறித்தனமாக வந்துவிட்டது எனவும், ஊதாரித்தனமாகச் செலவுசெய்து, கடனில் மூழ்குகிறது எனவும் மக்கள் கதைப்பதைக் கேட்கக்கூடியதாக உள்ளது. யாழ்ப்பாணச் சமூகம், கடனில் சிக்கியுள்ளமை உண்மைதான், ஆனால், அவ்வாறான கடன் நிலைமை ஏற்படக் காரணங்கள் என்ன? கடந்த சில ஆண்டுகளுக்குள், ய…

  10. தேசிய இனங்களின் விடுதலைக்கு கற்றலோனியர்கள் முன்னுதாரமாணவர்களே! கற்றலோனியரின் தனிநாட்டுக் கோரிக்கை சர்வதேச மட்டத்தில் அதிக சர்ச்சைகளை தூண்டிவிட்டுள்ளது. சுயாட்சிக்குரித்துடைய அந்தஸ்த்தை அனுபவித்த கற்றலோனியர்கள் பிரிந்து சென்று தனிநாடு அமைக்க முயன்றனர். அதற்கான ஆதரவை தமது மக்களிடமிருந்து பெற்றுக் கொண்டாலும் உலக நாடுகளிடமிருந்து ஆதரவும் பெற வேண்டுமென்பதும் என்றுமே வலிமையான மூலக்கூறாக அமைந்துள்ளது. கற்றலோனியரின் தனிநாட்டுக்கான அணுகுமுறை எதிர்நோக்கியுள்ள பிரச்சனையை அலசுவதே இக் கட்டுரையின் நோக்கமாகும். முதலில் ஸ்பெயின் நாட்டின் அதிரடி முடிவுகளை அவதானிப்போம். கற்றலோனிய பிராந்திய நாடாளுமன்றத்தினை கலைப்பதாக ஸ்பெயின் பிரதமர் மரியானோ அறிவித்தார். ஸ்பெயினி…

    • 0 replies
    • 590 views
  11. மறக்கப்படுகிறதா தமிழ்த் தேசியம்? என்.கே. அஷோக்பரன் Twitter @nkashokbharan ராஜபக்‌ஷ எனும் ‘கோலியாத்’தை, காலம், சாபம், அவர்கள் செய்த பாவம் என்று எல்லாம் சேர்ந்து வீழ்த்திக் கொண்டிருக்கின்றன என்று சொல்வது பொருத்தமற்றதல்ல! இலங்கை அரசியலில், அசைக்க முடியாத சக்திகள் தாம் என்பதை, ராஜபக்‌ஷர்கள் 2019-2020 தேர்தல்களில் நிரூபித்து, இரண்டு வருடங்களுக்கு உள்ளாகவே, நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. ராஜபக்‌ஷர்கள், தமது 2015ஆம் ஆண்டு தோல்விக்குப் பிறகு, திட்டமிட்டு, இனவாத உரத்தைக் கொண்டு ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன என்ற கட்சியை உருவாக்கி, இன-மத தேசியவாதத்தை முன்னிறுத்திப் பெற்ற பெரும் தேர்தல் வெற்றி, இன்று தவிடுபொடியாகிய நிலையில் நிற்கிறது. 2020 பொதுத் தேர்தலில் ராஜபக்‌ஷர்கள…

  12. யூகோஸ்லாவியாவுக்கான குற்றவியல் தீர்ப்பாயம்: நீதியின் புதிய அத்தியாயம் நீதி எல்லோருக்குமானதல்ல; நீதி எல்லோருக்கும் பொதுவானது என்று சொல்லப்பட்டாலும் நடைமுறையில் அவ்வாறு நிகழ்வதில்லை. நீதியின் அளவுகோல்கள் வேறுபட்டன. யாருடைய நீதி, யாருக்கான நீதி, எதற்கான நீதி போன்ற கேள்விகள் நீதியின் தன்மையை விளங்கப் போதுமானவை. நீதி பற்றிய புதிய கேள்விகள், காலங்காலமாக எழுந்து அடங்கியுள்ளன. இருந்தபோதும், பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதியின் பெயரால், நீதியின் அரசியல் அரங்கேறியுள்ளது. இரண்டாம் உலகப் போரில் தோற்ற காரணத்தால் ஜேர்மனிய, இத்தாலிய, ஜப்பானிய இராணுவ அதிகாரிகள் தீர்ப்பாயத்தின் மூலம் தண்டிக்க…

  13. கூட்டு அரசைப்பலம் இழக்கச் செய்யும் மகிந்தவின் வியூகங்கள்!! கூட்டு அரசைப்பலம் இழக்கச் செய்யும் மகிந்தவின் வியூகங்கள்!! கூட்டு அரசு இந்த வருட ஆரம்­பத்­தி­லி­ருந்து பல வித­மான அர­சி­யல் நெருக்­க­டி­க­ளுக்­குள் சிக்­கித்­த­வித்­துக் கொண்­டி­ருக்­கின்­றது. அர­ச தலை­வ­ரான மைத்­தி­ரி­பால சிறி சேன, தலைமை அமைச்­ச­ரான ரணில் விக்­கி­ர­ம­சிங்க ஆகி­யோ­ரது தலை­மை­யி­லான இரு பெரும் தேசி­யக் கட்­சி­கள் கூட்டுச் சேர்ந்து 40 மாதங்­கள் கால­மாக கூட்டு அரசை நா…

  14. அடக்கு முறையும் சுதந்திரமும் உழுத்துப் போன மன்னராட்சியின் கீழும் வெவ்வேறு பெயர்களில் அடக்குமுறை இராணுவ ஆட்சியின் கீழும் சமய சட்டங்கள் என்ற வேரில் இன்னொருவகை ஆதிக்கத்தின் கீழும் சுதந்திரத்தைப்பறிகொடுத்து நிற்கும் மக்கள் கூட்டத்தினரின் போராட்ட அலைதான் பெரும் சுவாலையாக அரபு நாடுகளை இன்று சூழ்ந்துள்ளது. மேற்கத்தைய வல்லரசுச் சக்திகளுக்குச் சமமாக நிற்க வேண்டிய சாம்ராஜ்யங்களின் பரிதாபமான கதை இது. "மனிதன் சுதந்திரமாகப் பிறக்கிறான்' என்ற ரூஸோவின் வார்த்தைகளுக்கு உலகம் இன்றும் தீர்வுகளைத் தேடிவருகிறது. ஏனெனில் இந்த வாசகம் இன்னொரு பகுதியையும் உள்ளடக்கி உள்ளது. அவன் எல்லா இடங்களிலும் சங்கிலிகளால் பிணைக்கப்பட்டுள்ளான். மனித சுதந்திரத்தைக் புனிதப்படுத்திய ரூஸோவின் மகாவாக்கியம் இது…

  15. சோவியத் ஒன்றியத்திலிருந்து 10 லட்சத்துக்கும் மேற்பட்ட யூதர்கள், இஸ்ரேலுக்குக் குடிபெயர்ந்ததன் 25-வது ஆண்டு இது. இஸ்ரேலிய சமூகத்தில் இது குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தியது என்றே சொல்லலாம். சோவியத் ஒன்றியத்தின் இரும்புத் திரை விலகிய பின்னர், இஸ்ரேலை நோக்கி யூதர்கள் திரண்டு வரத் தொடங்கினர். இஸ்ரேலில் இன்று இருக்கும் யூதர்களில் 5-ல் ஒருவர், சோவியத் ஒன்றியத்திலிருந்து வந்தவர்தான். ரஷ்யாவிலிருந்து குடிபுகுந்த அலியாக்களின் (வெவ்வேறு நாடுகளிலிருந்து இஸ்ரேலுக்குள் குடிபுகுந்த யூதர்களைக் குறிக்கும் சொல்) வாழ்க்கைச் சரித்திரம், வெற்றிக் கதைகளுக்கு உதாரணம். “ஒருசில ஆண்டுகளிலேயே இஸ்ரேலின் மக்கள்தொகையில் 20% அதிகரித்துவிட்டது” என்று நினைவுகூர்கிறார் சோவியத் ஒன்றியத்தை எதிர்த்த…

  16. தமிழ்ப் பகுதிகளை விட்டு படையினரை வெளியேற்றம் செய்யக் கூடிய சக்தி தமிழ்க் கட்சிகள் மத்தியில் உண்டா?- நிலாந்தன் (கட்டுரை) புங்குடுதீவுச் சம்பவம் தொடர்பில்…. “வட மாகாணசபையின் முதலமைச்சர் இத்தகைய பிரச்சினைகளுக்கெல்லாம் காரணம், படைமயப்பட்ட ஒரு சமூகச் சூழலே என்று கூறுகிறார். போதையூட்டும் பொருட்கள் இளைய தலைமுறையினர் மத்தியில் திட்டமிட்டுப் பரப்பப்படுவதாகவும், இது குற்றச் செயல்களை ஊக்குவிப்பதாகவும் அவர் கூறியிருக்கிறார். அவர் கூறுவதன் அடிப்படையில் யோசித்தால் தமிழ் பகுதிகளில் படைமய நீக்கம் செய்வதே இப்பிரச்சினைகளுக்கெல்லாம் இறுதித்தீர்வாக அமைய முடியும் என்று தெரிகின்றது. வட மாகாண முதலமைச்சர் கூறி வருவது போல பிரச்சினைகள் எல்லாவற்றுக்குமான மூலகாரணம் படைமயப்பட்ட ஒரு சூழல்த…

  17. மேற்குலகின் இலங்கை மீதான ஈடுபாடு. சீனாவின் மடியில் இருந்து இலங்கை மீட்கப் பட்டு உள்ளது. அண்மைய தேர்தலில் ராஜபக்சே, ஜனநாயக ரீதியில் மண் கவ்வ வைக்க, பின்புலத்தில் மேற்கின் கடும் உழைப்பு இருந்தது அவதானிக்கப் பட்டு உள்ளது. ராஜபக்சேவின் வெற்றியானது, நாட்டினை மீண்டும் சீனாவின் கைக்கு கொண்டு செல்லும் நிலைமை கொண்டதாக இருந்தாலும், மைத்திரி எனும், அதிகார மையத்தினை சரியாக கையாண்டு அவரது தோல்வி உறுதிப் படுத்தப் பட்டு உள்ளது. அடுத்து என்ன? இந்திய நிலைப்பாடு இந்தியாவிலும் பார்க்க வேகமாக அமரிக்கா செயல்படுவது தெளிவாக தெரிகின்றது. சிலர் அமெரிக்க ஈடுபாடு, இந்தியாவிற்கு பிடிக்காவிடினும், சீனாவிலும் பார்க்க, அமெரிக்கா, பரவாயில்லை என்று கருத்து தெரிவிக்கின்றனர். தமிழ் நாட்டில், அமெரிக்…

    • 0 replies
    • 279 views
  18. தொடரும் தவறுகள்..! தமிழ் அர­சியல் ஓர் இக்­கட்­டான நிலை­மைக்குள் பிர­வே­சித்­தி­ருக்­கின்­றது. இந்த நிலை­மையில் இருந்து அது எவ்­வாறு வெளி­வரப் போகின்­றது என்­பதும், பல்­வேறு நெருக்­க­டி­க­ளுக்கும், அர­சியல் ரீதி­யான அச்­சு­றுத்­தல்­க­ளுக்கும் ஆளா­கி­யுள்ள தமிழ் மக்­களை எவ்­வாறு அது வழி­ந­டத்தப் போகின்­றது என்­பதும் சிந்­த­னைக்­கு­ரி­யது. நல்­லாட்சி அர­சாங்கம் வாய்ப்­பேச்சில் தனது வீரத்தைக் காட்­டி­ய­தே­யொ­ழிய, காரி­யத்தில் எத­னையும் சாதிக்­க­வில்லை. எதேச்­ச­தி­கா­ரத்தை ஒழித்­துக்­கட்டி, ஜன­நா­ய­கத்துக்குப் புத்­து­யி­ர­ளித்து, பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு காணப்­போ­வ­தாக நல்­லாட்சி அரச தலை­வர்கள் உறு­தி­ய­ளித்­தி­ருந்­தனர். ஆனால், காலப் போக்கில் அந்த உறு­தி­மொ­ழி…

  19. 02 SEP, 2024 | 01:38 PM டி.பி.எஸ். ஜெயராஜ் இம்மாதம் 21ஆம் திகதி நடைபெறவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில் 39 வேட்பாளர்கள் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது. ஒருவர் இறந்ததை அடுத்து இப்போது 38 பேர் களத்தில் நிற்கிறார்கள். அவர்களில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் எதிர்க்கட்சி தலைவர் பிரேமதாசவுமே பிரதான வேட்பாளர்கள். ஜனதா விமுக்தி பெரமுன (ஜே.வி.பி.) தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரா குமார திசாநாயக்க, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச, பிரபல ஊடக நிறுவனங்களின் உரிமையாளரான திலித் ஜயவீர, பிலாட் மார்ஷல் சரத் பொன்சேகா, முன்னாள் நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ச, முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங…

  20. ' நரகத்தில் நிச்சயிக்கப்பட்ட திருமணம் ' - வீ.தனபாலசிங்கம் ஈஸ்டர் ஞாயிறு தற்கொலைக் குண்டுத்தாக்குதல்கள் இடம்பெற்று நேற்றைய தினத்துடன் சரியாக மூன்று மாதங்கள் கடந்துவிட்டன. அந்த கொடூரமான தாக்குதல்களுக்கு இஸ்லாமிய அடிப்படைவாதம் காரணமென்றால், அதற்கு பிறகு இலங்கை அரசியலில் காணக்கூடியதாக இருக்கின்ற வெறுப்பூட்டும் போக்குகளுக்கு சிங்கள - பௌத்த அடிப்படைவாதம் காரணமாக இருக்கிறது. கடந்த மூன்று மாதகாலத்தில் அரசியல் விவாதங்களின் திசைமார்க்கத்தை தீர்மானிக்கின்ற முக்கியமான காரணிகளில் சிங்கள - பௌத்த மேலாண்மைவாதம் முதல்நிலை வகித்துவருகிறது. அதன் முன்னரங்க சேனைகளாக பிக்குமார் விளங்குகிறார்கள். அரசியலில் பிக்குமாரின் ஆதிக்கம் என்பது இலங்கையைப் பொறுத்தவரை அண்மைக்காலத்தில் வளர்…

  21. இலங்கையில் சில மாதங்களில் ஜனாதிபதி தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகவுள்ள நிலையில், நாட்டில் அது குறித்த கருத்துகள் தினமும் பேசப்படுகின்றன. 2015ம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில், மைத்திரிபால சிறிசேன வெற்றி பெறுவதற்கு தமிழ் பேசும் சமூகத்தின் வாக்குகள் பாரிய பங்களிப்பை வழங்கியிருந்தன. இந்நிலையில், இந்த ஆண்டு இறுதியில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் தமிழர்கள் மற்றும் முஸ்லிம்களின் வாக்குகள் எந்த அளவில் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுபவருக்கு பங்களிப்பு வழங்கும் என்பது தொடர்பிலும் அரசியல் கட்சிகள் தற்போது அதிக அளவில் கவனம் செலுத்தி வருகின்றன. எனினும், சிங்களத் தலைவர்கள், தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் வாக்குகளை பெற்றுக் கொள்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வ…

    • 0 replies
    • 534 views
  22. காலத்தின் கட்டாயம்… Published by Loga Dharshini on 2020-01-08 14:57:43 மாகாண சபை­க­ளுக்கு பொலிஸ் அதி­கா­ரங்­களை வழங்­கினால் அது பொலிஸ் பணி­களை அர­சியல் மய­மாக்­கு­வ­தற்கு வழி­வ­குக்கும் என அவர் கருத்து வெளி­யிட்­டுள்ளார். ஆனால் மொழிப்­பி­ரச்­சினை கார­ண­மாக வடக்கு–கிழக்கு தமிழ்ப்­பி­ர­தே­சங்­களில் பொலி­ஸா­ருக்கும் பொது­மக்­க­ளுக்கும் இடையில் ஏற்­ப­டு­கின்ற முரண்­பா­டு­களும் முறுகல் நிலை­மை­க­ளுமே பல்­வேறு வன்­மு­றை­க­ளுக்கு கடந்த காலங்­களில் வித்­திட்­டி­ருந்­தன என்­பதை கவ­னத்திற்கொள்ள வேண்டும். ஜனா­தி­பதி கோத்­தபாய ராஜ­பக்ஷவின் கொள்கை விளக்க உரை தமிழ் அர­சி­ய­லையும் தமிழ் மக்­க­ளையும் கையறு நிலை­…

    • 0 replies
    • 920 views
  23. காற்றாலைகளை எதிர்க்கும் ஒரு தீவு - நிலாந்தன் Pix by Nimalsiri Edirisinghe மன்னாரில் குறிப்பாக மன்னார்த் தீவுப் பகுதியில் காற்றாலைகள் நிறுவப்படுவதற்கு எதிராக அங்குள்ள திருச்சபையினரும் பொதுமக்களும் கடுமையாக எதிர்ப்பைக் காட்டி வருகிறார்கள். கடந்த திங்கட்கிழமை அங்கே கடை முடக்கமும் ஆர்ப்பாட்டமும் இடம்பெற்றன. சில வாரங்களுக்கு முன்பு கத்தோலிக்க திருச்சபையின் மறை மாவட்ட ஆயர் ஜனாதிபதியைச் சந்தித்திருந்தார். சந்திப்பின்போது அவர் மன்னாரில் நிகழும் கனிமவள அகழ்வு மற்றும் காற்றாலைத் திட்டங்கள் போன்றவற்றைக் குறித்துப் பேசியதாக அறிய முடிகிறது. அதன்பின் ஆயர் ஐரோப்பாவில் சுற்றிப் பயணத்தை மேற்கொண்டிருந்த ஒரு காலகட்டத்தில்,ஜனாதிபதி அனுரகுமாரவும் வெளிநாட்டுப் பயணத்தை மேற்கொண்டிருந்த அதே கால…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.