அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9225 topics in this forum
-
பகடைக்காய் ஆக்கப்படும் அரசியல் கைதிகள் கே. சஞ்சயன் / 2019 நவம்பர் 01 ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றால், பல்வேறு குற்றச்சாட்டுகளின் பேரில் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள அரச படையினர் விடுதலை செய்யப்படுவார்கள் என்றொரு வாக்குறுதியைத் தனது தேர்தல் அறிக்கையில் கொடுத்திருக்கிறார் கோட்டாபய ராஜபக்ஷ. அதுபோலவே, சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள 274 விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் போராளிகளும் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு, விடுதலை செய்யப்படுவார்கள் என்றும் அவர் வாக்குறுதி கொடுத்திருக்கிறார். மற்றொரு பக்கத்தில், கடந்தவாரம் மட்டக்களப்புச் சிறைச்சாலைக்குச் சென்று, நான்கு ஆண்டுகளுக்கு மேலாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள, பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தனைச் சந்தித்…
-
- 0 replies
- 553 views
-
-
சிறுபான்மையின முதலமைச்சர் மீதான பாய்ச்சல் மொஹமட் பாதுஷா வார்த்தை தவறிவிட்டதால், கிழக்கு மாகாண முதலமைச்சருக்கு வந்த வினை, அவரே எதிர்பாராத விடயமாகும். இது ஒரு பெரிய விவகாரமாக ஆக்கப்பட்டுள்ளமை சிறுபான்மை மக்களுக்கு, குறிப்பாக முஸ்லிம்களுக்கு நல்லதொரு பாடமென்று கூறலாம். முதலமைச்சர் நஸீர், பகிரங்கமாக கடற்படை அதிகாரியொருவரை ஏசியமை, நாகரிகத்தின்படி தவறு என்று இப்பகுதியில் வெளியான கடந்தவார கட்டுரை சுட்டிக்காட்டியிருந்தது. இதில் சம்பந்தப்பட்டுள்ள எல்லாத் தரப்பினரும் விசாரிக்கப்பட்டு, நீதி நிலைநாட்டப்பட வேண்டுமென அதில் குறிப்பிட்டிருந்தோம். ஆனால், ஒவ்வொரு தரப்பினரும், இவ்விடயத்தைத் தங்களுடைய வேறு வேறு காரணங்களுக்காகத் தமது கையில் எடுத்திருக்க…
-
- 0 replies
- 553 views
-
-
கிழக்கில் எழுதல்; காலத்தின் தேவை தமிழ் மக்கள் பேரவை ஏற்பாடு செய்துள்ள ‘எழுக தமிழ்’ பேரணியின் இரண்டாவது கட்டம் வரும் சனிக்கிழமை (ஜனவரி 21) மட்டக்களப்பில் நடைபெறவிருக்கின்றது. கல்லடி மற்றும் ஊறணி பகுதிகளிலிருந்து காலை 09.30 மணிக்கு ஆரம்பிக்கும் பேரணி, பாட்டாளிபுரம் மைதானத்தில் நடைபெறும் கூட்டத்துடன் நிறைவுக்கு வரும். தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவர்களில் ஒருவரான முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் பிரதான உரையை ஆற்றுவார் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. சரியாக 13 வருடங்களுக்கு முன்னர், அதாவது 2004, ஜனவரி 21ஆம் திகதி மட்டக்களப்பில் நடைபெற்ற ‘பொங்கு தமிழ்’ எழுச்சி நிகழ்வில் ஓர் இலட்சத்துக்கும் அதிகமான தமிழ் மக்கள் உணர்வுபூர்வமாகக் கலந்து கொ…
-
- 0 replies
- 552 views
-
-
ஒரு அரசியல்வாதி அடுத்த தேர்தலைப் பற்றி சிந்திக்கிறான். ஆனால் ஒரு தேசத்தின் தலைவரோ அடுத்த தலைமுறையைப் பற்றி சிந்திக்கிறான். இது 1800களில் ஜேம்ஸ் பிறீமான் கிளார்க் (James Freeman Clarke) கூறியது. அமெரிக்க புரட்சி காலத்தில் வாழ்ந்த அவர் இறையியலாளரும் எழுத்தாளரும் மட்டுமல்ல அவர் ஒரு மனிதஉரிமை வாதியும் கூட. அமெரிக்காவின் அப்போதைய அரச தலைவர் ஸ்ரிபன் குரோவர் கிளில்லான்டின் தெரிவுக்குக்கூட அவரது கருத்தியல் தாக்கத்தைச் செலுத்தியிருந்தது. இப்போது ஏன் ஜேம்ஸ் பிறீமான் கிளார்க் குறித்து நினைவுட்டப்படுகின்றது என்பதை நீங்கள் ஓரளவு ஊகித்திருக்கக்கூடும் உங்கள் ஊகம்சரிதான். ஜேம்ஸ் பிறீமான் கிளார்க்கின் கருத்தியல் கூறுவது போல இலங்கைத்தீவில் ஒரு அரசியல்வாதி அல்ல சில அ…
-
- 0 replies
- 552 views
-
-
ஆட்டம் காணுமா கூட்டு ஆட்சி? ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து ஐக்கிய தேசியக் கட்சி அமை த்த கூட்டு அரசாங்கத்தின் ஆயுள்காலம் இன்னமும் எவ்வளவு காலத்துக்கு நீடிக்கப் போகிறது என்ற கேள்வி இப்போது அரசி யல் அரங்கில் எழுந்திருக்கிறது. அதற்குக் காரணம், இந்த இரண்டு பிர தான கட்சிகளுக்கு இடையிலும் காணப்பட்டு வரும் இழுபறிகளும் மோதல்களும் தான். ஒரு பக்கத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ 52 பாராளுமன்ற உறுப்பினர்களை வைத்துக் கொண்டு ஆட்சி யைக் கவிழ்க்கப் போவதாக அவ்வப்போது மிரட்டிக் கொண்டிருக்கிறார். கூட்டு அரசாங்கத்தில் உள்ள ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் கூட தனித்து ஆட்சி அமைப்பது…
-
- 0 replies
- 552 views
-
-
இலங்கை நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் மெஜாரிட்டி - புதிய ஜனாதிபதியால் சட்டமியற்ற முடியுமா? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இலங்கையில் 9-வது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள அநுர குமார திஸாநாயக்க கட்டுரை தகவல் எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத் பதவி, பிபிசி தமிழுக்காக 23 செப்டெம்பர் 2024 புதுப்பிக்கப்பட்டது 57 நிமிடங்களுக்கு முன்னர் இலங்கையில் 9-வது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக அநுர குமார திஸாநாயக்க பதவியேற்றுள்ள நிலையில், எதிர்கால அரசியல் திட்டங்களில் பாரிய மாற்றங்கள் ஏற்படவுள்ளதாக இலங்கை அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். அநுர குமார திஸாநாயக்க த…
-
- 0 replies
- 552 views
- 1 follower
-
-
சனல் நாலு யாருக்கு நன்மை செய்கின்றது? நிலாந்தன். September 10, 2023 சனல் நாலு மீண்டும் ஒரு வீடியோவை வெளியிட்டிருக்கிறது. முன்னைய வீடியோவைப் போலவே, இதுவும் ஜெனீவா கூட்டத்தொடரை முன்னிட்டு வெளியிடப்பட்டிருக்கிறது. அதில் கூறப்பட்ட தகவல்கள் உண்மையாக இருந்தால், இலங்கைத் தீவின் அரச கட்டமைப்பும் அதன் உபகரணங்களும் எந்தளவுக்கு நம்பகத்தன்மையற்றவை என்பதனை அது வெளிப்படுத்தியிருக்கிறது. அசாத் மௌலானா அந்த வீடியோவின் இறுதிப் பகுதியில் கூறுகிறார்… ” அதிகாரத்துக்காக தமது சொந்த மக்களையே கொன்றிருக்கிறார்கள்” என்று. அசாத் மௌலானா பிள்ளையானின் உதவியாளராக இருந்தவர். அவருடைய தகப்பன் ஈ.பி.ஆர்.எல்எப். இயக்கத்தில் இருந்தவர். சொந்தப் பெயர் மிகிலார். இயக்கப் பெயர் கமலன். தமிழகத்தில் …
-
- 1 reply
- 552 views
-
-
மறைக்கப்படுகின்றதா அஷ்ரப் மரண அறிக்கை? ஒவ்வொரு இனக் குழுமத்தையும் அல்லது மக்கள் பிரிவினரையும் அரசியல், சமூக ரீதியாக வழிப்படுத்திய தலைவர்களின் வாழ்வும் மரணமும் அடுத்த தலைமுறைக்கு சில செய்திகளை விட்டுச் சென்றிருக்கின்றன. கி.மு 48ஆம் ஆண்டில், ரோமானியா அரசியல்வாதி பம்பேய் தி கிரேட், படுகொலை செய்யப்பட்டது முதற்கொண்டு, இன்று வரைக்கும் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் எல்லா அரசியல் படுகொலைகளுக்குப் பின்னாலும் ஒரு காரணம் இருந்திருக்கின்றது. அதேபோன்று, 1943ஆம் ஆண்டு, போலாந்தின் பிரதமரும் இராணுவப் பிரதானியுமான வேல்டிஸ்லவ் சிகாரொஸ்கி, விமான விபத்தில் உயிரிழந்தது தொடக்கம், இன்றுவரை விமான விபத்துகளின் ஊடாக இடம்பெறும் படுகொலைகளுக்குப்…
-
- 0 replies
- 552 views
-
-
ஞானசார தேரரின் விடுதலையும் அச்சுறுத்தலும் புருஜோத்தமன் தங்கமயில் / 2019 மே 29 புதன்கிழமை, பி.ப. 06:26 Comments - 0 நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தண்டனை பெற்றுச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பொதுபல சேனாவின் பொதுச்செயலாளரான ஞானசார தேரர், ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் கீழ் கடந்த வாரம் விடுதலையானார். மக்கள் போராட்டங்களை நடத்தி, சிறை சென்று திரும்பும் தலைவர்களை வரவேற்பதற்கு உண்டான வரவேற்பை, ஞானசார தேரருக்கும் வழங்குவதற்காக நூற்றுக்கணக்கான ஆதரவாளர்கள் சிறை வாசலில் கூடியிருந்தார்கள். அதனை நேரடி ஒளிபரப்புச் செய்வதற்காக, தொலைக்காட்சிகள் சிலவும் காத்திருந்தன. பொதுபல சேனா என்கிற பௌத்த அடிப்படைவாத அமைப்பின் உருவாக்கமும் நோக்கமும் முரண்பாடுகளைத் தோற்றுவிக்கும் அடி…
-
- 0 replies
- 552 views
-
-
ஜனாதிபதி தேர்தல்களின் பிரதிபலிப்புகள் - விக்டர் ஐவன் யுத்தம் முடிவுக்குக் கொண்டு வந்ததன் பின்னர் அந்த யுத்தத்தினை முன்னின்று நடாத்திய வீரர்கள் இருவருக்கிடையிலான பாரிய போட்டியொன்றாக 2010 ஆம் ஜனாதிபதி தேர்தலை குறிப்பிடலாம். குறித்த தேர்தலின் ஊடாக யுத்தகளத்தில் நின்று தலைமைத்துவம் வழங்கிய சரத் பொன்சேகா தோற்கடிப்பட்டு யுத்தத்திற்காக அரசியல் தலைமை வழங்கிய மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக தெரிவானார். எனினும் 2015 ஆம் ஆண்டு தேர்தலில் மஹிந்த ராஜபக்ச தனக்கு எந்த விதத்திலும் நிகராக கருத முடியாத பொலன்னறுவப் பிரதேசத்தவர் ஒருவரிடம் தோற்றுப் போனார். பல காலம் இருந்து வந்த உள்நாட்டு யுத்தத்தின் முடிவு, போர் வீரர்கள் மூவரை உருவாக்கியிருந்தது. ம…
-
- 0 replies
- 552 views
-
-
ரிஷாட்டின் பாராளுமன்ற உரை: தொனித்த இரு விடயங்கள் மொஹமட் பாதுஷா பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஒருவர், இலங்கை வரலாற்றில் முதன்முதலாக, பாராளுமன்றத்தில் தனது நிலைப்பாட்டையும் கருத்துகளையும் முன்வைத்துள்ளார். அவர், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் ஆவார். கடந்த சில தினங்களுக்கு முன்னர், பாராளுமன்றத்தில் உரையாற்றிய போது முன்வைத்துக் கூறிய விடயங்கள், இரண்டு விதத்தில் முக்கியமானவை. ஒன்று, அவரது வீட்டில் பணிக்கு அமர்த்தப்பட்டிருந்த நிலையில், மரணித்த ஹிசாலினி தொடர்பாக, தன்பக்க நியாயங்களை முன்வைத்திருந்தார். இரண்டாவது, ப…
-
- 0 replies
- 552 views
-
-
சிவப்பு விளக்குகளின் பின்னால் முகம் மறைக்கும் நாடு பங்களாதேஷில் உள்ள ‘தெளலத்தியா’ விபசாரத்துக்கென்றே ஒதுக்கப்பட்ட ஒரு கிராமம். இந்தக்கிராமத்தின் மொத்த வாழ்க்கையும் இயக்கமும் சந்தையும் பாலியல் தொழிலை மையப்படுத்தியே இருக்கிறது. இங்கே சுமார் 1,600 பெண்கள் விபசாரத்தில் ஈடுபடுகின்றனர். ஒரு நாளைக்கு மட்டும் சுமார் 600 பெண்கள் 3,000 பேர்களை எதிர்கொள்கின்றனர். இங்குள்ளவர்களில் பலர், கடத்தப்பட்டு இங்கே விற்கப்பட்டுள்ளனர். சிலர், தங்களின் சொந்தங்களால் கொண்டு வந்து விடப்பட்டுள்ளனர். ஒரு சிலர், தங்களுடைய கணவர் அல்லது காதலனால் கொண்டுவரப்பட்டவர்கள். இத்தொழிலில் விருப்பம் இல்லாத பெண்கள், இத்தொழிலை விட்டும் கிராமத்திலிருந்தும் வெளியேருவத…
-
- 0 replies
- 552 views
-
-
பெரிய தலைகள் தோற்றுப்போகும் நிலை முருகானந்தன் தவம் இலங்கையின் எம்.பிக்களின் சொத்து பற்றிய அறிக்கைகளை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு கடந்த 30ஆம் திகதி முடிவடைந்த போதிலும், 175 எம்.பிக்களில் 80 பேர் இன்னும் தங்கள் சொத்து மற்றும் பொறுப்பு அறிக்கைகளை சபாநாயகரிடம் சமர்ப்பிக்கவில்லை, அதன்படி, சொத்து மற்றும் பொறுப்பு அறிக்கைகளை சமர்ப்பிக்காத எம்.பி.க்கள் மீது இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு சட்ட நடவடிக்கை எடுக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது . இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு சட்டத்தின்படி, சொத்து மற்றும் பொறுப்பு அறிக்கைகளை சமர்ப்பிக்கத் தவறும் எம்.பிக்களின் சம்பளத்தில் மூன்றில் ஒரு பங்கைக் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் அதிகாரமும் ஆணையத்திற்கு உள்ளது. ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினரும் ஒவ்வொரு ஆண…
-
- 8 replies
- 552 views
-
-
தேர்தல்களை தவிர்த்து சாத்தியமானளவு காலம் அதிகாரத்தில் இருக்க வியூகம் October 17, 2023 — வீ. தனபாலசிங்கம் — தேசிய தேர்தல்கள் ஒத்திவைக்கப்படுமா? அடுத்த ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறை ஒழிக்கப்படுமா? பாராளுமன்ற தேர்தல் முறையில் மாற்றத்தைச் செய்வதற்கு அரசாங்கம் முயற்சிக்கிறது என்ற தலைப்புகளுடன் கடந்த வாரம் வெளியான பத்திரிகைச் செய்திகள் இலங்கை அரசியல் நிலைவரம் எந்தளவுக்கு குழப்பகரமானதாக இருக்கிறது என்பதையும், மக்கள் முன்னால் செல்வதற்கு அஞ்சும் அரசாங்கம் தேர்தல்களைச் சந்திப்பதை தவிர்த்து எவ்வளவு காலத்துக்கு அதிகாரத்தில் இருக்கலாம் என்று தடுமாறிக் கொண்டிருப்பதையும் பிரகாசமாக வெளிக்காட்டுகின்றன. பாராளுமன்ற தேர்தலை…
-
- 0 replies
- 551 views
-
-
வடக்கு கிழக்கு இணைப்பு: நிலைமாற கூடாத நிலைப்பாடுகள் இனப்பிரச்சினைக்கான தீர்வுத் திட்டம் இழுபறியாகிக் கொண்டிருக்கின்ற ஓர் அரசியல் பின்புலத்தில், அதுபோன்ற காரணங்களை அடிப்படையாகக் கொண்டு, அரசியமைப்பு மறுசீரமைப்பை மேற்கொள்ளும் முயற்சியும் பாரிய சவாலை எதிர்நோக்கியிருக்கின்றது. ஆகையால், அதனோடு தொடர்புடைய மற்றைய விடயமான வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் இணைப்பு இன்னும் சாத்திமற்றதாகத் தெரிகின்றது. நிலைமை இவ்வாறிருக்கையில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் செயலாளரும் உத்தேச முஸ்லிம் கூட்டணியின் முக்கியஸ்தருமான எம்.ரி.ஹசன் அலி, இணைந்த வடகிழக்கே முஸ்லிம் கூட்டணியின் இலக்கு எனக் குறிப்பிட்டதாக வெளியான செய்தியும…
-
- 0 replies
- 551 views
-
-
புலி அரசியலும் புலம்பெயர் சுயநலமும் தமிழன் என்றால் திமிர்ப்பிடித்தவன், செயல்வீரன்ஈ வீரத்தின் சின்னமவன் என்றெல்லாம் தமிழனின் பெருமை அன்றுதொட்டு இன்றுவரை பேசப்பட்டு வருகின்றது. இவற்றை உறுதிப்படுத்தும் வகையில் பல்துறைகளிலும் தமிழன் வெற்றிநடைபோட்டு வருகின்றான். தமிழன் ஒரு செயலில் இறங்கிவிட்டால் இலக்கை அடையும்வரை கடுமையாகப் போராடுவான். எத்தகைய சவால்கள் வந்தாலும், அவற்றை சமாளித்து எதிர்நீச்சல் போடவே முயற்சிப்பான். ஆனால், காட்டிக்கொடுப்புகளும், துரோகங்களுமே தமிழனின் வெற்றிப்பயணத்துக்கு வேலிபோடும் காரணிகளாக அமைகின்றன. 21ஆம் நூற்றாண்டிலும் அவை நீடிப்பதுதான் வேதனைக்குரிய விடயமாகும். இந்தியா…
-
- 1 reply
- 551 views
-
-
கூட்டமைப்பின் பின்னடைவுக்கு யார் காரணம்? தொடர் அடக்குமுறைகளுக்கு உள்ளாகும் சமூகமொன்று எப்போதுமே ஓரணியில் திரள்வதற்கே விரும்பும். அதன்மூலம், தம்மைப் பலப்படுத்திப் பாதுகாத்துக் கொள்ள முடியும் என்று நம்பும். சுதந்திரத்துக்குப் பின்னரான இலங்கையில், தமிழ் மக்கள் அதிக தருணங்களில் இந்த நிலையையே எடுத்து வந்திருக்கிறார்கள். இன்னமும் அதன் படிகளிலேயே பெருமளவு நிற்கின்றார்கள். தமிழ்த் தேசியப் போராட்டங்கள் எழுச்சி பெற்ற காலம் முதல், தமிழ் மக்கள் ஏதோவொரு கட்சியின் பின்னாலோ அல்லது இயக்கத்தின் பின்னாலோ திரண்டிருக்கின்றார்கள். அந்தக் காலங்களில் எல்லாம், மாற்றுக் குரல்கள், மாற்றுச் சிந்தனைகள் என்கிற விடயங்களுக்க…
-
- 1 reply
- 551 views
-
-
தமிழர்களுக்கு கரிநாள் || தமிழ் தலைமைகள் விட்ட தவறுகள்
-
- 0 replies
- 551 views
-
-
இலண்டன் சம்பவங்கள் சொன்ன செய்தி இலங்கையின் அநேகமான பகுதிகள், உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் முழுமையான கவனத்தைச் செலுத்திக் கொண்டிருக்க, தமிழ் மக்களின் அரசியல் தீர்வு தொடர்பான பேச்சுகளும், தமிழ் மக்களுக்குள்ளே மாத்திரமே சிக்கிக் கொண்டிருந்தன. ஆனால், இலண்டனில் இடம்பெற்ற சம்பவமொன்று, தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பான பார்வையை, சர்வதேச ரீதியாக ஏற்படுத்தியிருக்கிறது. இலங்கையின் சுதந்திர தினமான பெப்ரவரி 4ஆம் திகதி, இலண்டனிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்துக்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த தமிழ் மக்கள் மீது, உயர்ஸ்தானிகராலயத்தைச் சேர்ந்த இராணுவ அதிகாரியொருவர், மரண அச்சுறுத்த…
-
- 1 reply
- 551 views
-
-
காலத்தின் குரலும் கழுத்து நெரிக்கும் கரங்களும் பா.செயப்பிரகாசம் ஞாயிறு, 05 மே 2013 விடுதலைப் புலிகள் இறுதி வான் தாக்குதலை நடத்திய நாள் பிப்ரவரி 29, 2009 . தாக்குதல் நடத்தப் பயன்பட்டவை இரு மென் ரக விமானங்கள்; வீசிய இரு குண்டுகளின் எடை 56 கிலோ; அதற்கு மேல் அந்த விமானங்களால் எடுத்துச் செல்ல முடியாது. மக்கள் பெருமளவு கூடும் இடங்களில் வீசினாலும் மூன்று பேருக்கு மேல் உயிரிழப்பு நிகழாது. "இராணுவ நெருக்குதல் அதிகமாகிவிட்டது; இனி அவைகளை அங்கு வைத்திருக்க முடியாது" என்று கருதி, விமானங்ளை இல்லாமல் செய்ய வேண்டும் என்பதற்காக தாக்குதலைத் திட்டமிட்டார்கள். பிப்ரவரி 29- நள்ளிரவு. வீதிகளில் மக்கள் நடமாட்டமோ, அலுவலகங்களில் பணியாற்றுபவர்களோ இல்லாத நேரம். கொழும்பின் கொம்பனித் தெ…
-
- 0 replies
- 551 views
-
-
இலங்கை ஜனாதிபதி தேர்தல் | தர்மசங்கடத்தில் தமிழர்கள் சிவதாசன் இன்று நண்பர் ராஜவுடன் பேசிக்கொண்டிருந்த போது ஒரு புதிய விடயமொன்றைத் தெரிந்துகொள்ள முடிந்தது. அது ஒரு அப்பட்டமான விடயம் ஆனால் அவர் தந்தது ஒரு புதிய பார்வை, புதிய சிந்தனை. கோதபாய ராஜபக்ச ராஜபக்ச சகோதரர்கள் கோதபாய ராஜபக்ச அவரது சகோதரர்களைப் போல் ஒரு போதும் கரு ஊதா நிறச் சால்வை அணிவதில்லை, பார்த்திருக்கிறீர்களா? என்றார். தேர்தலில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின்னர்தான் அவர் தேசிய வெள்ளைச் சட்டை அணிந்ததைப் பார்த்திருக்கிறோம். அது வரை அவர் அணிந்து நாம் பார்த்திருப்பது கோட், ரை, சூட், அரைக் கை சேட் போன்றவைதான். அவர் ஒரு அதி தீவிர சிங்களத் தேசீயவாதியானாலும் அவர் தன் ‘சிங்களத்தை’…
-
- 0 replies
- 551 views
-
-
ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள்: இன்னோர் அரசமைப்பு நெருக்கடியாக மாறுமா? எம்.எஸ்.எம். ஐயூப் / 2019 ஜூலை 31 புதன்கிழமை, பி.ப. 05:16 Comments - 0 இந்த வருடம் முடிவடைவதற்குள், ஜனாதிபதித் தேர்தல் நடைபெற வேண்டும். ‘ஆட்சியில் இருக்கும், ஜனாதிபதியின் பதவிக் காலம், முடிவடைவதற்கு முன்னரான, இரண்டு மாதத்துக்கும் ஒரு மாதத்துக்கும் இடைப்பட்ட காலத்தில், அடுத்த ஜனாதிபதித் தேர்தல் நடைபெற வேண்டும்’ என்பதே சட்டம். ஜனாதிபதித் தேர்தலே, அடுத்ததாக வரும் என்று இருந்த போதிலும், எப்போதும் சர்ச்சைகளை உருவாக்கி வரும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மாகாண சபைத் தேர்தலை, அதற்கு முன்னர் நடத்த விரும்புவதாகத் தெரிகிறது. அவர் இதற்கு முன்னரும், ஜனாதிபதித் தேர்தலைப் பிற்போடுவதற்குச் ச…
-
- 0 replies
- 551 views
-
-
தமிழ் தலைமைகளின் ஒற்றுமையின் தேவையும் கொள்கைசார் அடிப்படையற்ற ஒற்றுமை முயற்சிகளும் கலாநிதி.க.சர்வேஸ்வரன் தமிழ்த் தலைமைகள் மத்தியில் ஒற்றுமை வேண்டும்; ஒன்றுபட்டு வந்தால் வாக்களிப்போம் என மக்கள் கூறுகின்றனர்.ஒற்றுமை ஏன் தேவை என்றால், வேகமாக தமிழர் தாயகத்திலேயே அவர்களது அடையாளங்களும் இருப்பும் பறிக்கப்பட்டு கேள்விக்குள்ளாக்கப்பட்டு வருகிறது. 1. இப்போக்கு தடுத்து நிறுத்தப்பட வேண்டும். 2. நிரந்தர தீர்வு நோக்கி ஆக்கபூர்வமான வேலைத் திட்டங்கள் உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்பட வேண்டும். இவ்விடயங்களை ஒன்றுபட்ட கொள்கையின் அடிப்படையில் ஓர் அணியாக செயல்படுவதன் மூலமே சாத்தியமாகும்.பலவாறாக பிரிந்து நின்று தீர்வு தொடர்பில் மாறுபட்ட நிலைப்பாடுகளை தமிழ் க…
-
- 0 replies
- 551 views
-
-
அமெரிக்காவின் வெளிநாடுகளுக்கான ஒதுக்கீட்டில் இலங்கைக்கான நிதி உதவி பொருளாதாரம் சார்ந்த விடயங்களிலானது, சர்வதேச இராணுவ உதவித் திட்டத்தின் கீழானது என்று இரு வகைப்படுத்தப்பட்டுள்ளது. இருந்தாலும் நிதி உதவிகளை வழக்கம் போலக் கண்ணை மூடிக் கொண்டு இலங்கைக்கு வழங்குவதற்கு அமெரிக்கா அரசாங்கம் தயாராக இல்லை. http://cdn.virakesari.lk/uploads/medium/file/142379/ddddd.jpg 2021 ஆம் ஆண்டில் அமெரிக்க அரசின் செலவினங்களுக்காக, 2.3 ட்ரில்லியன் டொலர் கள் நிதியை ஒதுக்கீடு செய்யும் சட்டத்தில் கையெழுத்திட மறுத்து வந்த ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், கடந்த வாரம் அதில் கையெழுத்திட்டுள்ளார். கொரோனா நிவாரணத்துக்கான நிதி ஒதுக்கீட்டை உள்ளடக்கிய இந்த நிதி ஒதுக்கீட்டுச் சட்டத்தில், இலங்கை உள்ளிட்ட ந…
-
- 0 replies
- 551 views
-
-
பெரிய மீன்களின் ‘ சின்ன’ அரசியல் – இதயச்சந்திரன் மீண்டும் தேர்தல்! அதிகாரத்தின் பங்காளியாக மக்களைக் காட்டும் நாடகம்இ மறுபடியும் அரங்கேறப்போகிறது. ‘மக்கள் அதிகாரம்’ என்கிற ஜனநாயக வெள்ளையடிப்போடுஇ சர்வதேசவல்லரசுகளும் பூமழை பொழிய, இனிதே முடிவடையும் இந்த ஓரங்க நாடகம். பொருளாதார சுமைஇ வேலைவாய்ப்பற்ற கையறுநிலைஇ நிலமற்ற அகதிவாழ்வுஇ நில ஆக்கிரமிப்பு போரின் வடுக்கள்இ காணாமல்போகடிக்கப்பட்டோரை தேடும் அவலநிலைஇ இவற்றின் மத்தியில் ‘ தீர்வினைநோக்கிய பயணம்’ என்றவாறு முழக்கமிடும் கூட்டமைப்புஇ என்பவற்றைஎதிர்கொண்டவாறு நகரும் மக்கள் கூட்டம். அதற்குள் ‘ வேலை வேண்டுமா தீர்வு வேண்டுமா?’ என்ற குத்தல் கதை வேறு. பண்டா காலத்தி…
-
- 0 replies
- 551 views
-