அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9225 topics in this forum
-
இனவாதத் தடைச்சட்டம் தமிழர்களை ஒடுக்கும் புதிய சட்டமா? குளோபல் தமிழ் செய்திகளுக்காக அன்பழகன்:- 26 ஏப்ரல் 2015 ஈழத் தமிழ் மக்களை ஒடுக்கவும் பௌத்த சிங்களப் பேரினவாதத்தை வளர்ப்பதற்காகவுமே இலங்கையில் சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. தனிச்சிங்கள சட்டம், பயங்கரவாத தடைச்சட்டம், அவசரகாலச்சட்டம் என பல சட்டங்களை இதற்கு உதாரணமாக குறிப்பிடலாம். பௌத்த சிங்களப் பேரினவாத ஒடுக்குமுறைக்கு எதிரான ஈழத் தமிழர் போராட்டத்தை ஒடுக்கும் இந்தச் சட்டங்கள் தமிழ் மக்களை கடுமையாக ஒடுக்கியுள்ளன. இதனால் தமிழ்மக்களின் இயல்பான வாழ்வு கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. இயல்பான வாழ்வை பாதிக்க வைத்தலின் ஊடாக போராட்டத்தை கைவிடச் செய்வதும் இந்தச் சட்டங்களின் நோக்கங்களாகும். இனவாதம், மதவாதம் ஆகியவற்ற…
-
- 1 reply
- 318 views
-
-
பிரசார ஆயுதமாகும் போர்க்குற்ற விசாரணை கே. சஞ்சயன் / 2019 பெப்ரவரி 15 வெள்ளிக்கிழமை, மு.ப. 01:07 Comments - 0 ஜெனீவாவில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 40ஆவது கூட்டத்தொடர் ஆரம்பிக்கவுள்ள நிலையில், வடக்கு, கிழக்கில் நீதி கோரும் மக்களின் போராட்டங்கள், தீவிரம் பெறத் தொடங்கி விட்டன. காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரும் போராட்டங்கள்; காணிகளைப் பறிகொடுத்து நிற்கிறவர்களின் போராட்டங்கள்; அரசியல் கைதிகளின் விடுதலைக்கான போராட்டங்கள்; இறுதிக்கட்டப் போரின் போது, நடந்தேறிய போர்க்குற்றங்களுக்கும் மனித உரிமை மீறல்களுக்கும் நீதியை வழங்கக் கோரும் போராட்டங்கள், போன்றவை நடக்கின்றன. இத்தகைய போராட்டங்கள், போர் முடிவுக்கு வந்த பின்னர், சுமார் 10 ஆண்டுகளாகத் தொடர்ந…
-
- 0 replies
- 1.1k views
-
-
தமிழரசுக்கட்சியை விமர்சிக்கலாமா? February 26, 2024 — கருணாகரன் — “தமிழரசுக் கட்சியைப் பற்றி தொடர்ந்து எதிர்மறையாகவே எழுதி வருகிறீர்கள். ஆனால் தமிழ் மக்களுடைய பேராதரவைப் பெற்றதாகவும் 75 ஆண்டுகாலப் பாரம்பரியத்தைக் கொண்டதாகவும் தமிழரசுக் கட்சிதானே உள்ளது! அதுமட்டுமல்ல, ஒப்பீட்டளவில் உட்கட்சி ஜனநாயகத்தைக் கொண்டிருக்கும் தமிழ்க்கட்சியும் அதுதான். அண்மையில் நடந்த தலைமைக்கான தேர்தலே இதற்கொரு உதாரணம். இப்படியெல்லாம் இருக்கும்போது எப்படி நீங்கள் அந்தக் கட்சியைக் குறைத்து மதிப்பிட முடியும்?” என்று கேட்கிறார் நண்பர் ஒருவர். கூடவே தமிழரசுக் கட்சியின் புதிய தலைவரான சிவஞானம் சிறிதரனையும் அவருடைய தலைமைத்துவத்தையும் நான் உட்படப் பலரும் அவசரப்பட்டு விமர்…
-
-
- 12 replies
- 1.3k views
-
-
தமிழ்ப் பொது வேட்பாளர்: யாரால்? யாருக்கு? யாருக்காக ? - நிலாந்தன் சில மாதங்களுக்கு முன்பு வடமராட்சி கட்டை வேலி கிராமத்தில் ஒரு மக்கள் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டது. சமகால நிலைமைகள் தொடர்பாக மக்களுக்கு விழிப்பூட்டும் நோக்கிலான அச்சந்திப்பின் போது, வளவாளர் அங்கு வந்திருந்த மக்களை நோக்கி பல்வேறு கேள்விகளையும் கேட்டார். குறிப்பாக ஜனாதிபதித் தேர்தலில் அவர்கள் யாருக்கு வாக்களிக்க விரும்புகிறார்கள்? ஏன் வாக்களிக்க விரும்புகிறார்கள்? என்றும் கேட்டார். கேள்விகளின் போக்கில் அவர் ஒரு கட்டத்தில் கேட்டார், தமிழ்ப் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்தினால் அவருக்கு நீங்கள் வாக்களிப்பீர்களா? என்று. அங்கு கூடியிருந்த பொதுமக்கள் ஏறக்குறைய ஒரே குரலில் ஆம் என்று பதிலளித்தார்கள்…
-
- 0 replies
- 414 views
-
-
Operation Payback : பழைய போர்; புதிய போர்க்களம் பதிவினை முழுமையாக ஒலி வடிவில் கேளுங்கள் : (ஒலிவடிவில் கேட்டுக்கொண்டே பதிவை வாசிப்பது கூடுதல் விளக்கமாகவும் சலிப்பற்ற அனுபவமாகவும் இருக்கும்) http://www.mediafire.com/?8l8t4kew6p3i8ol [ 0 ] சின்னச் சின்னத் துண்டுப்பிரசுரங்களாக அந்த இரகசியச்செய்தி பொதுமக்களின் கைகளுக்கு வந்து சேர்கிறது. வீதிகளில் சுவரொட்டிகளாகப் புரட்சிகர வாசகங்களுடன் அச்செய்தி காணப்படுகிறது. அதிகார அரசின் காவலாளிகள் அவசர அவசரமாகச் சுவரொட்டிகளை அப்புறப்படுத்துகிறார்கள். ஆயிரமா இரண்டாயிரமா? கோடிக்கணக்கான சுவரொட்டிகள். போராளிகள் மறைவாக வந்து சிலர் காதுகளுக்குள் செய்தியைக் கிசுகிசுத்துவிட்டுச்செல்கிறார்கள். துண்…
-
- 0 replies
- 738 views
-
-
கடந்த ஜுன் மாதம் 17ந்திகதி அமெரிக்காவை ஒரு கலக்குகலக்கிய சம்பவம் தென் கரோலைனா மாநிலத்தில் சார்ள்ஸ்டன் என்னும் ஊரில் நிகழ்ந்தது. ஒருகிறிஸ்தவ ஆலயத்தில் விவிலிய நூல் வகுப்பில் கலந்து கொண்டிருந்த ஒன்பது கறுப்பினத்தவர்களை 21 வயதான வெள்ளை இளைஞன் துப்பாக்கியால் கொன்று குவித்தான். பகிடி என்னவென்றால் அவன் தானும் இந்தவிவிலிய நூல் வகுப்பில் ஒருமணி நேரமாகக் கலந்து கொண்டிருந்தவன். திடீரென்று எழுந்துநீஙங்கள் கறுப்பினத்தவர்கள் எங்கள் நாட்டையே ஆக்கிரமிக்கப் பார்க்கிறீர்கள், எஎங்கள் பெண்களை பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்குகிறீகள் எனவே உயிர்வாழத் தகுதி அற்றவர்கள் என பெரிய உரையர்ற்றி விட்டுத்தான் தூப்பாக்கியைத் தூக்கி இருக்கின்றான். அங்குவகுப் பெடுத்துக் கொண்டிருந்த பாதிரியும் எட்டுப் பேரு…
-
- 0 replies
- 904 views
-
-
அரசுத்தலைவர் சிறிசேன ஜெனிவாவில் இருந்து திரும்பி வந்தபொழுது அவருக்கு வழங்கப்பட்ட வரவேற்பும் மரியாதையும் புகழாரமும் நன்கு திட்டமிட்டுச் செய்யப்பட்டவைதான். தமது வெற்றி நாயகர்களை தண்டிக்க முற்படும் வெளிச்சக்திகளை வெற்றிகரமாக தன் வழிக்குக் கொண்டுவந்ததன் மூலம் நாட்டின் இறையாண்மையையும் கௌரவத்தையும் அவர் பாதுகாத்திருப்பதாக ஒரு தோற்றம் கட்டி எழுப்பப்படு;கிறது. அவரும் பிரதமரும் ஜெனிவாவில் இருந்து வந்த பின் ஊடகங்களுக்கும் படைத்துறை பிரதானிகளுக்கும் தெரிவித்துவரும் கருத்துக்களும் அத்தகையவைதான். இதுபோலவே வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஐ.நாவிலும் ஏனைய வெளிநாட்டுத் தலைநகரங்களிலும் தெரிவித்துவரும் கருத்துக்களும் ஏறக்குறைய அத்தகையவைதான். இவை அனைத்தையும் செறிவாக கூராகச் சொன்…
-
- 0 replies
- 897 views
-
-
நிக்கரகுவா புரட்சியின் 40 ஆண்டுகள்: சான்டினிஸ்டாகளின் கதை தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ / 2019 ஜூலை 18 வியாழக்கிழமை, மு.ப. 07:17Comments - 0 சில கதைகள் சொல்லப்படாமல், தூசி மறைத்துக் கிடக்கின்றன. வரலாற்றின் விந்தையும் அதுவே. சில கதைகள் திரும்பத் திரும்பச் சொல்லப்படுகின்றன. சில கதைகள் சொல்லப்படுவதற்காகக் காத்துக் கிடக்கின்றன. சில கதைகள் சொல்லப்படாமல் மறைக்கப்படுகின்றன. இன்றும் சில கதைகள் சொல்லப்பட இயலாமல் அந்தரிக்கின்றன. இவ்வாறு கதைகள் எங்கும் நிறைந்திருக்கின்றன. அவ்வாறு சொல்லப்படுவதற்காய் காத்திருக்கும் கதைகளைச் சொல்வதற்கான காலமும் களமும் முக்கியமானவை. களமும் காலமும் பொருந்திவரும் போது சொல்லப்படும் கதைகள் பெறுமதிமிக்கனவாகின்றன. இன்று சொல்லப்போகும் கதையும் …
-
- 0 replies
- 965 views
-
-
அ. டீனுஜான்சி 64 வயதுடைய மக்கரி ராஜரத்னம், கந்தப்பளையைச் சேர்ந்தவர், தனது இடது கண்ணில் ஏற்பட்ட பார்வைக் குறைபாட்டினை நிவர்த்திப்பதற்காக கடந்த ஆண்டு நுவரெலியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். 2023 ஏப்ரல் 5 ஆம் திகதி கண்புரை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட பின்னர், ஏப்ரல் 6ஆம் திகதி வீடு திரும்பினார். அப்போது வைத்தியசாலையால் வழங்கப்பட்ட பிரட்னிசோலோன் கண்சொட்டு மருந்தைப் பயன்படுத்தினார். அதன் பின்னராக, அதிகமான கண்ணீர் வெளியேறல், கண் வலி, தலைவலி போன்ற கடுமையான நோய் அறிகுறிகளால் பாதிக்கப்பட்டார். இதனால் மே 10 ஆம் திகதி கொழும்பு தேசிய கண் வைத்தியசாலையில் மேலதிக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அப்போது மேற்கொள்ளப்பட்ட பரிசோத…
-
- 0 replies
- 146 views
- 1 follower
-
-
எம்.ஜி.ஆரின் புலிகள் ஆதரவும் கருணாநிதியின் புலிகள் எதிர்ப்பும்; தொண்டர்கள் நிலையும் திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி விடுதலைப்புலிகளின் ஆதரவாளர் அல்ல; ஆனால், விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களில் கணிசமான பேர் திமுக காரர்கள்தான். விடுதலைப் புலிகளை ஆதரிக்கிற ஈழ ஆதரவு போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவிப்பது, நன்கொடை தருவது என்பதை திமுகவின் தமிழ் உணர்வு கொண்ட தொண்டர்களிடம்தான் இன்றும் காண முடிகிறது. தலைமையை மீறிய இந்த அரசியல் உணர்வு மரியாதைக்குரியதாக இருக்கிறது. ஈழப் பிரச்சினையின் காரணமாகவே பல தொண்டர்கள் திமுகவிலிருந்து வெளியேறியும் இருக்கிறார்கள். (வைகோ மற்றும் அவரை ஆதரித்தவர்கள்) இதற்கு நேர் எதிராக, அதிமுகவின் தலைவர் எம்.ஜி.ஆர் தீவிரமான விடுதலைப் புலிகளின் ஆதர…
-
- 6 replies
- 1.2k views
-
-
நல்லாட்சி மீதான விமர்சனங்களுக்கான நேரம் கனகலிங்கம் கோபிகிருஷ்ணா நல்லாட்சி என்ற கோஷத்தை முன்வைத்து, அப்போதைய சுகாதார அமைச்சரான மைத்திரிபால சிறிசேன, தனது கட்சியின் தலைவரும் அப்போதைய ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷவுக்கெதிராக, ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்தபோது, மைத்திரிபால சிறிசேன வெற்றிபெறுவார் என்ற எதிர்பார்ப்புக் காணப்பட்டிருக்கவில்லை. மாறாக, மற்றொரு தேர்தலில் தோல்வியடைவதிலிருந்து, ரணில் விக்கிரமசிங்க தன்னைக் காத்துக் கொண்டார் என்றே கருதப்பட்டது. ஆனால், மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் மீது மக்களுக்குக் காணப்பட்ட விமர்சனம், மைத்திரிபால சிறிசேனவுக்கான வடக்கு, கிழக்கு மக்களின் ஆதரவு, புதிதாக வாக்களிக்கத் …
-
- 0 replies
- 796 views
-
-
புதிய அரசின் பொறுப்புக்கூறல்? லக்ஸ்மன் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவையின் எதிர்வரும் செப்டெம்பர் மாத கூட்டத் தொடர் இலங்கை அரசாங்கத்திற்கு மற்றுமொரு அல்லது புதிய நெருக்கடியாக அமைய வேண்டும் என்பதே தமிழர் தரப்பின் எதிர்பார்ப்பாகும். அது சாத்தியமாவதும் இவ்லாமல் போவதும் கொண்டுவரப்படும் புதிய பிரேரணையிலேயே தங்கியிருக்கிறது. 2022ஆம் ஆண்டு இலங்கை தொடர்பில் ஏற்படுத்தப்பட்ட பிரேரணைத் தீர்மானத்தின் காலம் முடிவடைய இருந்த நிலையில் கடந்த வருடத்தில் அத் தீர்மானம் ஒரு வருடகாலத்திற்கு நீடிக்கப்பட்டது. அது வருகிற செப்ரம்பரில் முடிவுக்கு வருகிறது. இந்த நிலையில், இவ்வருடத்தில் இலங்கை தொடர்பில் புதிய பிரேரணையொன்றினை பிரிட்டன் முன்வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது பிரிட்டன…
-
- 0 replies
- 121 views
-
-
இராணுவத்துக்குள் மகிந்த விசுவாசிகளை களையெடுப்பது எப்படி?- உபுல் ஜோசப் பெர்னான்டோ கடந்த 2012ஆம் ஆண்டு ஜனவரி 31ஆம் நாள் சிறிலங்கா காவற்துறையினரால் கதிர்காமத்தில் உள்ள பாதயாத்திரிகள் தங்குமிடத்திலிருந்து ஆபத்தான வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட தற்கொலை அங்கி ஒன்று மீட்டெடுக்கப்பட்டது. இத்தற்கொலை அங்கி சிறிலங்காவின் வடக்கிலோ அல்லது கிழக்கிலோ கண்டெடுக்கப்படவில்லை. இது ராஜபக்சாக்களின் கோட்டையாக விளங்கும் அம்பாந்தோட்டை மாவட்டத்திலுள்ள கதிர்காமம் என்னும் இடத்திலேயே கண்டெடுக்கப்பட்டது. இது தொடர்பாக 2012 பெப்ரவரி 01 அன்று ‘ஐலண்ட்’ பத்திரிகையில் பின்வருமாறு செய்தி வெளியிடப்பட்டிருந்தது: ‘பாதயாத்திரிகர்கள் தங்குமிடத்தில் பழைய தற்கொலை அங்கி ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. கதிர்க…
-
- 0 replies
- 563 views
-
-
கருநிலம்’ (கருப்பு மண்) மன்னார் மக்கள் மாற்றத்தின் ‘காற்றை’ தொடர்ந்து எதிர்க்கின்றனர். Published By: RAJEEBAN 13 AUG, 2025 | 01:55 PM Kamanthi Wickramasinghe தமிழில் - ரஜீவன் மன்னாரில் கடந்த மூன்றாம் திகதி ஆரம்பமாகி தொடரும் போராட்டத்திற்கான பெயர் கருநிலம். சட்டவிரோத கனியவள - இல்மனைட் அகழ்வு - காற்றாலை மின் திட்டம் - இறால் பண்ணைகள் போன்ற மன்னார் தீவின் இயற்கை சமநிலையை அழித்துக்கொண்டிருக்கின்ற விடயங்களிற்கு எதிராக இந்த ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறுகின்றன. மன்னார் இலங்கையில் அதிகளவு மணல் பரப்பை கொண்ட தீவாக கருதப்படுகின்றது. இந்தியாவிற்கு அருகில் உள்ளது. முன்னைய ஆட்சியாளர்களின் தொலைநோக்கற்ற தீர்மானங்கள் காரணமாக மன்னார் மக்கள் நிலம், நீரை பெறுவதற்கான வழிமுறைகள் உட்பட ஏனைய அடிப்ப…
-
- 0 replies
- 123 views
- 1 follower
-
-
Panama Papers: உலகளாவிய பொருளாதார மோசடிகள் அம்பலம்! - ரூபன் சிவராஜா கடந்த வாரத்திலிருந்து ‘Panama Papers ' எனும் அடையாளப் பெயருடன் உலகளாவிய ரீதியில் வரி ஏய்ப்பு, நிதி மோசடிகள் தொடர்பான பாரிய இரகசிய ஆவணங்கள் கசிந்து வருகின்றன. சர்வதேச ஊடகங்களில் நாளாந்தம் இந்த விவகாரம் சார்ந்த ஏராளமான தகவல்கள் வெளியிடப்பட்டும் வருகின்றன. சமகால அரசியல் பொருளாதார விவகாரங்களில் பெரும் விவாதப் பொருளாக இது ஆகியிருக்கின்றது. புலனாய்வு ஊடகவியலாளர்களினால் மோசடிகள் சார்ந்த 11,5 மில்லியன் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இலத்தீன் அமெரிக்காவின் Panama -பனாமாவைத் தளமாகக் கொண்டுள்ள Mossack Fonseca எனும் சட்ட நிறுவனத்திடமிருந்து (Law firm) இந்த ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்த ந…
-
- 0 replies
- 614 views
-
-
வேட்டிக் கனவில் இருப்பதையும் இழக்கும் நிலை வடக்கு மாகாணத்துக்குரிய அரசியல் சமன்பாடு கிழக்கு மாகாணத்திற்குப் பொருந்த மாட்டாது. இந்த அரசியல் யதார்த்தத்தைக் கணக்கில் எடுத்துத்தான் கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு கிழக்கிற்கான ஒரு தனித்துவமான அடையாள அரசியலை முன்னெடுத்துள்ளது என கிழக்குத் தமிழர் கூட்டமைப்பின் தலைவர் செங்கதிரோன் த.போகாலகிருஸ்ணன் தெரிவித்தார். கிழக்குத் தமிழர் கூட்டமைப்பின் அரசியல் நிலைப்பாடு தொடர்பில் நேற்று (22) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கையில், கிழக்கு மாகாணத் தமிழர்கள் எதிர்நோக்கும் தனித்துவமான பிரச்சினைகளுக்கான தீர்வை நாடும்போது வடக்கு மாகாணத்திற்கும…
-
- 0 replies
- 408 views
-
-
துரோகத்திற்கு துணைபோகும் வால்பிடி அரசியல்.! வீரத்திற்கும் தியாகத்திற்கும் பெயர் பெற்ற ஒரு மகோன்னதமாக விடுதலைப் போராட்டம் முன்னெடுக்கப்பட்ட இடம்தான் கிளிநொச்சி. தமிழீழ விடுதலைப் புலிகளின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த கிளிநொச்சி மண் அன்றைக்கு பலரையும் திரும்பிப் பார்க்க வைத்தது. அந்த மண்ணையும் அந்த மண்ணில் நடந்த விடுதலைப் போராட்டத்தையும் கேவலப்படுத்தும் வால்பிடி அரசியல் இன்று அங்கே நடப்பதுதான் பலருக்கும் வேதனை தருகின்ற விடயம். மற்றவர்களை நம்ப வைத்த கழுத்தறுப்பதும் நம்பிக்கைக்கு எதிராக செயற்படும் மாத்திரம் துரோகம் அல்ல. பெரும் துரோகங்கள் நடக்கின்ற சமயத்தில் எதையும் பேசாமல் கள்ளமாக இருப்பதும் துரோகம்தான். உலகமே முகம் சுழிக்கும் ஒரு விடயத்தை முன்னாள் பாராளும…
-
- 1 reply
- 601 views
-
-
கூட்டமைப்புக்குள் தீவிரமடையும் உள் மோதல்கள்? - யதீந்திரா தேர்தல் தொடர்பில் மக்கள் மத்தியில் எவ்வாறான பார்வை காணப்படுகின்றது என்பதை தற்போதைக்கு ஊகிப்பது கடினம். ஆனால் தேர்தல் போட்டியானது, குறிப்பாக வடக்கு மாகாணத்தில், இம்முறை ஒப்பீட்டடிப்படையில் மக்களுக்கு முன்னால் தெரிவுகள் அதிகரித்திருக்கின்றன. அதே வேளை கூட்டமைப்புக்குள்ளும் இலங்கை தமிழசு கட்சிக்;குள்ளும் உள் முரண்பாடுகள் தீவிரமடைந்திருக்கின்றன. தேர்தலில் வெல்ல வேண்டுமென்பதற்காக கூட்டமைப்புக்குள்ளும் தமிழரசு கட்சிக்குள்ளும் அணிகள் உருவாகியிருக்கின்றன. தமிழரசு கட்சிக்குள் மாவை அணி – சுமந்திரன் அணியென்று இரு அணிகளாக பிரிந்து செயற்பட வேண்டிய நிலைமை ஏற்பட்டிருக்கின்றது. சுமந்திரன் அணியென்பது, உண்மையில் சம்பந்தன் அணியாகும…
-
- 0 replies
- 533 views
-
-
அரசியல் சாசனத்தில் உள்ளடக்கப்படவுள்ள அதிகாரப்பகிர்வு சம்பந்தமாக பல்வேறு ஆய்வுகளையும் கலந்துரையாடல்களையும் முக்கிய சந்திப்புக்களையும் இவ்வாரம் தொடர்ந்து அடுத்த வாரமும் மேற்கொள்ளவுள்ளோம் என்ற தகவலைத் தெரிவித்திருந்தார் எதிர்க்கட்சித் தலைவரான இரா.சம்பந்தன். ஒக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய மூன்று மாதங்களும் இலங்கை அரசியல் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு அரசியல் பருவகாலமாக இருக்கப் போகிறது என்பதை அவர் கூறிய தகவல்களிலிருந்து தெரிந்து கொள்ளக்கூடியதாக இருக்கிறது. 2015 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல் ஆகியவற்றின் முடிவுகளும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட ஆ…
-
- 0 replies
- 371 views
-
-
தெளிவான வரையறையின் அவசியம் – செல்வரட்னம் சிறிதரன் மூன்று முக்கிய விடயங்களை உள்ளடக்கியதாகப் புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன. இது குறித்து பொதுமக்கள் மற்றும் பொது அமைப்புக்கள், அரசியல் கட்சிகள் என்பவற்றின் கருத்துக்கள் கவனத்தில் எடுக்கப்பட்டு வருகின்றன. இருந்தபோதிலும், புதிய அரசியலமைப்பின் முதலாவதும் முக்கிய விடயமுமாகிய நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை இல்லாமல் செய்வது அல்லது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் அதிகாரங்களை வெகுவாகக் குறைப்பது என்ற விடயத்தில் ஆழமாகக் கவனம் செலுத்தப்பட்டிருக்கின்றதா என்பது கேள்விக் குறியாகவே உள்ளது. புதிதாக உருவாக்கப்படவுள்ள அரசி…
-
- 0 replies
- 385 views
-
-
ஜனாஸா எரிப்பு விவகாரம்; வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுதல் மொஹமட் பாதுஷா இலங்கையில் கொரோனாவின் இரண்டாவது அலை மிக வேகமாகவும், வீரியமாகவும் பரவிக் கொண்டிருக்கின்றது. முதலாவது அலைக்கும் இரண்டாவது அலைக்கும் இடைப்பட்ட காலத்தில் அரசியல் காய்நகர்த்தல்களில் முழுக் கவனத்தையும் செலுத்தியிருந்த அரசாங்கம், இப்போது துணுக்குற்று எழுந்து, மீண்டும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதில் மும்முரமாக ஈடுபட்டுள்ளது. இது சமூகப் பரவல் இல்லை என்று சொல்லி, முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் நடவடிக்கைகளும் எடுக்கப்படுகின்றன. இதுவரை கொவிட்-19 தொற்றுக்குள்ளான 21 மரணங்கள் பதிவாகியுள்ளளன. தற்கொலை செய்து இறந்த இளைஞனின் மரணத்தையும் கொவிட் கணக்கில் இருந்து அரசாங்கம் பதிவளிப்பு செய்திருக்கின்றது. இ…
-
- 2 replies
- 928 views
-
-
p2p போராட்டம் சர்வதேசத்தின் கதவுகளைப் பலமாகத் தட்டியுள்ளது – மட்டு.நகரான் 54 Views வடகிழக்கில் தமிழர்கள் எதிர்நோக்கும் நெருக்கடிகள் மற்றும் தமிழ் மக்களின் மனங்களில் உள்ள வடுக்களின் வலிகளை வெளிக்காட்டுவதை தடுத்தல் என பல்வேறு வகையான மனித உரிமை நிலைக்கு எதிரான, ஜனநாயக வரம்புகள் மீறப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. யுத்தம் மௌனிக்கப்பட்டதன் பின்னர் தமிழ் மக்கள் தங்களது உரிமைக்கான போராட்டத்தினை இராஜதந்திரப் போராட்டமாக மாற்றியமைத்ததனர். இதனையடுத்து வடகிழக்கில் செயற்பட்ட பலர் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டனர். பலர் படுகொலை செய்யப்பட்டனர். பலர் நாட்டைவிட்டு துரத்தியடிக்கப்பட்டனர். இந்த நிலையில் தற்போதைய காலத்தில…
-
- 0 replies
- 295 views
-
-
http://content.epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2017-05-28#page-11
-
- 0 replies
- 263 views
-
-
தமிழ் அரசியலில் திட்டமிடல், தூரநோக்குக்கான தேவை என்.கே. அஷோக்பரன் http://www.twitter.com/nkashokbharan உலகத்தையே, ஏறத்தாழ ஒன்றரை வருட காலத்துக்கு மேலாக, ‘கொவிட்-19’ பெருந்தொற்று ஆட்டம் காணச் செய்துகொண்டிருக்கிறது. ‘கொவிட்-19’ இன் கோரமுகத்தை, இலங்கை எதிர்நோக்கியிருக்கும் இந்த நிலையில், இலங்கை வாழ் மக்கள், ஆரோக்கிய ரீதியான சவாலை மட்டுமல்ல, வாழ்வாதார ரீதியான சவாலையும் சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். ‘கொவிட்-19’ வெறும் பெருந்தொற்று நோய் மட்டுமல்ல; அதன் விளைவுகள், இந்நாட்டின் உற்பத்தியையும் பொருளாதாரத்தையும் தள்ளாட்டம் காணச்செய்துள்ளது. பொருளாதார வீழ்ச்சியின் விளிம்பில், இலங்கை நின்று கொண்டிருக்கிறது. உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்டுவிடுமோ என…
-
- 0 replies
- 329 views
-
-
மக்கள் சீனமும், சீன மக்களின் வாழ்க்கையும் ! – இரா. சிந்தன் சீனாவின் தலைநகரம் பெய்ஜிங்கிலிருந்து 100 கிலோ மீட்டர் தொலைவில் ஒரு புதிய நகரத்தையே கட்டியமைத்து வருகிறார்கள். அது மனித வரலாற்றில் இதுவரை கண்டிராத ஒரு முன் மாதிரியாக அமையப்போகிறது. அதன் பெயர் ‘ஜியோங்கன் நியூ ஏரியா’. இந்த நகரம் குறித்த வீடியோக்கள் இணையத்தில் பல லட்சக்கணக்கானவர்களால் பார்க்கப்பட்டுள்ளன. 2017 ஆம் ஆண்டில் இந்த நகரம் குறித்த திட்டத்தை வெளியிட்ட சீன குடியரசின் தலைவர் ஜி ஜின்பிங் ‘வரும் ஆயிரம் ஆண்டுக்கான பெரிய உத்தியாக இது அமையும்’ என்றார். உண்மையிலேயே, முன்னேறிய தொழில்நுட்பங்கள் அனைத்தையும் ஒருங்கே கொண்டதாக அந்த நகரத்தை கட்டமைக்கிறார்கள். மனித நடமாட்டத்திற்காக சாலைகள், சரக்குப் ப…
-
- 5 replies
- 741 views
-