அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9226 topics in this forum
-
ராஜபக்ஷக்களுடனான சந்திப்பு: சம்பந்தன் யாரை எச்சரிக்கிறார்? புதிய அரசமைப்புக்கான வாய்ப்புகள் அனைத்தும் பொய்த்துப்போன புள்ளியில், இரா.சம்பந்தனுக்கும் ராஜபக்ஷ சகோதரர்களுக்கும் இடையிலான மிக முக்கிய சந்திப்பொன்று, அண்மையில் இடம்பெற்றிருக்கின்றது. இந்தச் சந்திப்பின் ஏற்பாட்டாளராக இலங்கைக்கான சீனத்தூதுவர் செங் ஷியுவான் இருந்திருக்கின்றார் என்பது கவனத்தில் கொள்ளப்பட வேண்டியது. சீன இராணுவத்தின் 91ஆவது ஆண்டு நிறைவையொட்டி, சீனத் தூதரகம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வு, கொழும்பிலுள்ள நட்சத்திர விடுதியொன்றில் கடந்த வாரம் நடைபெற்றது. இந்த நிகழ்வுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவோ, பிரதமர் விக்ரமசிங்கவோ அல்லது மூத்த அமைச்சர்களோ …
-
- 3 replies
- 544 views
-
-
‘முதலில் அவர்கள் கொம்யூனிஷ்டுகளைத் தேடி வந்தார்கள், நான் எதிர்த்துக் கேட்கவில்லை, ஏனெனில் நான் கொம்யூனிஷ்ட் இல்லை. பின், அவர்கள் சோசலிஷ்டுகளைத் தேடி வந்தார்கள், நான் எதிர்த்துக் கேட்கவில்லை, ஏனெனில் நான் சோசலிஷ்ட் இல்லை. பின், அவர்கள் தொழிற்சங்கவாதிகளைத் தேடி வந்தார்கள், நான் எதிர்த்துக் கேட்கவில்லை, ஏனெனில் நான் தொழிற்சங்கவாதியில்லை. பின், அவர்கள் யூதர்களைத் தேடி வந்தார்கள், நான் எதிர்த்துக் கேட்கவில்லை, ஏனெனில் நான் யூதனில்லை. பின், அவர்கள் கத்தோலிக்கர்களைத் தேடி வந்தார்கள், நான் எதிர்த்துக் கேட்கவில்லை, ஏனெனில் நான் கத்தோலிக்கனில்லை. பின், அவர்கள் என்னைத் தேடி வந்தார்கள், அங்கே எனக்காகப் பேசுவதற்கு யாரும் இருக்கவில்லை.’ நாசிக்களின் படுகொலை…
-
- 0 replies
- 544 views
-
-
சீனாவிடமிருந்து... விலகிவரும் இலங்கை, இந்தியாவை நெருங்குகிறது! இலங்கைத்தீவானது, சீனாவிடமிருந்து பெற்றுக்கொண்ட கடன்கள் உட்பட வெளிநாட்டுக் கடன்களைத் திருப்பிச் செலுத்துவதில் பாரிய சிரமங்களை அண்மைய நாட்களில் எதிர்கொண்டுள்ளது. இதனால், பொருளாதார நெருக்கடிகளில் இருந்து மீள்வதற்கான உதவிகளைப் பெற்றுக்கொள்வதற்காக இலங்கை தனது அண்டை நாடான இந்தியாவின் பக்கமாகத் திரும்பியுள்ளது. சீனாவிடமிருந்து பெறப்பட்ட கடன்களை மீளச் செலுத்தும் செயற்பாடுகளில் இலங்கை தோல்விகளைக் கண்டுள்ளதால் ‘கடன் பொறி’ ஏற்படுவதற்கான அதிக சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன. இந்த நிலையில் கடன்பொறியைத் தவிர்ப்பதற்காகவே இந்தியாவை இலங்கை நாடியுள்ளது. இலங்கையானது சீனாவை முழுமையாகச் சார்ந்திர…
-
- 2 replies
- 544 views
-
-
நம்பிக்கை தரும் அமெரிக்கா 57 Views அமெரிக்காவின் இன்றைய அரச அதிபர் மதிப்புக்குரிய பைடன் அவர்கள் “அமெரிக்கா பழைய நிலைக்கு வருகிறது” என்னும் தலைப்பில் அமெரிக்கா மனிதஉரிமைகளைப் பாதுகாக்கும் விடயத்தில் முன்பு போல உலகில் செயற்படும் என உறுதியளித்துள்ளது நம்பிக்கை தரும் உறுதி மொழியாக உள்ளது. இந்நேரத்தில் ஈழத்தமிழர்களின் மனித உரிமைப் பிரச்சினை என்பது அவர்களுடைய தன்னாட்சி உரிமையுடன் தொடர்பானது. ஆகையினால் அதனைக் கவனத்தில் எடுத்து மனித உரிமைகள் பேணல் இலங்கையில் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதை உலகத் தமிழர்கள் அமெரிக்காவிடம் வலியுறுத்த வேண்டும். குடியேற்றவாதத்திலிருந்து ஈழத்தமிழர்கள் சுதந்திரம் பெற்ற 73ஆவது ஆண்டு 04.02.2021இல் நிறை…
-
- 0 replies
- 544 views
-
-
யுத்தமின்றி சத்தமின்றி சீரழிகிறது ஒரு சமூகம் மனுக்குலம் தோற்றம் பெற்ற காலத்திலிருந்தே அந்தந்த கால கட்டத்துக்கு ஏற்றாற் போன்று மனித கலாசாரமும் தொற்றிக்கொண்டு மனித வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்துகொண்டது. ‘மனித நாகரிகம்’ என்றதான வார்த்தை ஒன்று அறிமுகமாவதற்கு முன்பாக மனிதனால் அவ்வப்போது அறியப்பட்ட கலாசாரங்களே அன்று அவரவரது கல்வியாகவும் இருந்து வந்தது எனலாம். மனித நாகரிகம் வெளிப்பட்டதன் பின்னால் கலாசாரம், கல்வித்துறை, தனிமனித சுதந்திரம், அடிப்படை உரிமை என்ற அனைத்து வகையான அம்சங்களும் சருகாய் ஆகிப்போயின என்பதுதான் உண்மை. மொழி உரிமை என்ற பெறுமதி மிக்கதான சொற்பதமானது கலாசாரம் என்ற பதத்துக…
-
- 0 replies
- 544 views
-
-
யானைப் பலம் கொண்டது ராஜபக்சாக்களின் ஆட்சி -- அடி சறுக்கினால் எதிர்காலம் மிக மோசம் அ.வரதராஜா பெருமாள் அதிமேன்மைக்குரிய கோத்தபாயா அவர்கள் இலங்கைக் குடியரசின் ஜனாதிபதியாகி ஒரு வருடம் நிறைவடைகிறது. இலங்கை மக்கள் குறிப்பாக சிங்கள பௌத்தர்கள் அவரின் ஆட்சி மீது பெரும் நம்பிக்கை வைத்து மிகப் பெருமளவில் அவருக்கு வாக்குகளை அளித்ததால் ஜனாதிபதியானார். 2015ம் ஆண்டு ஆட்சிக் கட்டிலேறிய மைத்திரி – ரணில் கூட்டாட்சி 2016ம் ஆண்டே குழப்பமான ஆட்சியாக ஆட்டம் காணத் தொடங்கிவிட்டது. இலங்கையின் ஆட்சியை மாறி மாறிப் பிடி…
-
- 0 replies
- 544 views
-
-
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் - கற்றுத்தரும் பாடம் -கபில் முள்ளிவாய்க்கால் பேரழிவின் இன்னொரு நினைவேந்தல் தமிழ் மக்களைக் கடந்து போயிருக்கிறது. 2009ஆம் ஆண்டு போர் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட பின்னர், முள்ளிவாய்க்கால் என்ற சொல்லும், அதனை நினைவில் கொள்ளும், மே 18 ஆம் திகதியும், தமிழ் மக்களின் ஆன்மாவைப் பிழியும் ஒன்றாக மாறி விட்டது. போர் முடிவுக்கு வந்த அடுத்தடுத்த ஆண்டுகளில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை செய்ய முடியாதளவுக்கு இராணுவ நெருக்குவாரங்கள் காணப்பட்டன. காலப் போக்கில், நினைவேந்தல் நிகழ்வுகள், தடைகளையும் மீறி நடக்க ஆரம்பித்தன. 2015 ஆட்சி மாற்றத்துக்குப் பின்னர், பெரிதாக எந்த எதிர்ப்பும் இல்லாமல், பெருமளவான மக்களின் பங்கேற்புடன் நினைவேந்தல் நிகழ்வுகள…
-
- 0 replies
- 544 views
-
-
‘எழுக தமிழ்’ மூலம் யார் எழவேண்டும்? தெய்வீகன் “மக்கள் புரட்சி வெடிக்கட்டும்; சுதந்திர தமிழீழம் மலரட்டும்” என்று அறைகூவி விட்டு பன்னிருநாள் உண்ணா நோன்பிருந்து தன் உயிரை அர்ப்பணித்த தியாகி திலீபனின் அறப்போராட்ட ஞாபகார்த்த காலப்பகுதியில் ‘எழுக தமிழ்’ என்ற மக்கள் எழுச்சிப் பேரணி ஒன்றை நடத்துவதற்கு ‘தமிழ் மக்கள் பேரவை’ அழைப்பு விடுத்திருக்கிறது. தமிழர் தாயகத்தில் கடந்த காலங்களில் இதுபோன்ற பல எழுச்சிப் பேரணிகளை பல அமைப்புக்கள் நடத்தியிருக்கின்றன. அவற்றில் முக்கியமாக ‘பொங்குதமிழ்’ நிகழ்வு எவ்வளவு உணர்ச்சி பிரவாகமாக - தமிழ்மக்களின் உரிமைக்குரலாக - ஓங்கி ஒலித்தது என்பதை கண்டிருக்கிறோம். உரிமைகள் மறுக்கப்பட்…
-
- 0 replies
- 544 views
-
-
அவுஸ்திரேலியா இமாம் தொவிகிடி - இவர் ஈரானில் பிறந்தவர். - தமது மதம் பல தீவிரவாத போக்குடையவர்களை கொண்டது என்கிறார்
-
- 0 replies
- 544 views
-
-
சட்ட மறுப்பு போராட்டம்! இதைத்தான் அரசியல் சூனியம் என்பதா? தமிழ்த்தேசியத்தை நீக்கம் செய்வதற்குரிய ஏற்பாடுகளுக்கும் இலங்கையின் விருப்பங்களுக்கும் மனதார இடமளித்துவிட்டுத் தற்போது சட்ட மறுப்புப் போராட்டம் என்று அதுவும் இலங்கை ஒற்றையாட்சி நாடாளுமன்றத்திற்குள் நின்று கோசமிடுவது கோமாளி அரசியல் (Clown Politics) அல்லவா? அ.நிக்ஸன்- இலங்கை ஒற்றையாட்சி அரசியல் யாப்புச் சட்டங்கள் மூலமாக ஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலையை (Political Emancipation) அடைய முடியாது என்பதுதான் தமிழ்த்தேசியத்தின் அடிப்படை. அதாவது சட்ட மறுப்புப் போராட்டம். …
-
- 0 replies
- 544 views
-
-
இடைக்கால அறிக்கையும் யதார்த்த நிலைமையும் – பி.மாணிக்கவாசகம்:- பதட்டமும் பரபரப்பும் மிக்க ஒரு சூழலில் ஆரம்பித்துள்ள புதிய அரசியலமைப்புக்கான விவாதம் எந்த வகையில் சென்று முடிவடையும் என்பது குறித்து சந்தேகங்கள் எழுந்திருக்கின்றன. அரசியலமைப்பு என்பது நாட்டின் வருங்கால ஆட்சி நிர்வாகம் மற்றும் அரசியல் செல்நெறியின் முதுகெலும்பாகும். எனவே, மிகுந்த பொறுப்போடும், நிதானமாகவும் நேர்மையாகவும் நாட்டு மக்கள் அனைவருக்கும் விசுவாசமான முறையிலும் அது உருவாக்கப்பட வேண்டும். இத்தகைய பொறுப்புணர்ச்சியுடன், அனைத்துத் தரப்பினராலும் இதற்கான முயற்சி முன்னெடுக்கப்படுவதாகத் தெரியவில்லை. புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான விவாதம் நடத்தப்படக…
-
- 0 replies
- 544 views
-
-
1978 நவம்பர் 23ம் திகதி. ஒரு பெருங்காற்று கிழக்கு மண்ணை துகிலுரித்த நாள். குறிப்பாக மட்டக்களப்பு மண்ணை 'சூறாவளி' என்ற அரக்கன் அரைகுறையாக அழித்த சம்பவம் இன்றைக்கும் பலரால் நினைவுகூறப்பட்டுக்கொண்டிருக்கின்றது. நவம்பர் 23ம் திகதி இரவு முழுவதும் வீசிய அந்த கொடூரமான புயல்காற்றில் அகப்பட்டு சுமார் 1000 இற்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டார்கள். 10 இலட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டார்கள். கிட்டத்தட்ட 250,000 வீடுகள் முற்றாக அழிக்கப்பட்டன அல்லது கடுமையாக சேதமாக்கப்பட்டன. மட்டக்களப்பு மாவட்டத்தின் 20சதவீதமான மீன்பிடிப் படகுகள் அழிக்கப்பட்டன. சுமார் 28 ஆயிரம் தென்னஞ்செய்கையில் 90 வீதமானவை முற்றாகவே அழிவடைந்தன. 240 பாடசாலைகள், 90 நெற்களஞ்சியங்கள் சே…
-
- 0 replies
- 544 views
-
-
உதட்டிலிருக்கும் ‘லிப்ஸ்ரிக்’ போன்றதா தேசிய நல்லிணக்கம்? -அதிரன் பெண்கள் தங்கள் உதட்டில் பூசியிருக்கும் ‘லிப்ஸ்ரிக்’ அழியாமல், கழராமல் உணவு உண்பதைப் போலவும் நளினமாகப் பேசுவதையும் போன்ற கதையாகத்தான் நமது நாட்டின் தேசிய நல்லிணக்கம் என்கிற செயல்பாடு இருக்கிறது. தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அமைச்சர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன், ‘சமாதானப் புறா’ என்று புகழப்பட்ட முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டார நாயக்க குமாரதுங்க (தலைவி: தேசிய ஒருமைப்பாட்டுக்கும் நல்லிணக்கத்துக்குமான அலுவலகம்) எனப் பலர் இலங்கை நாட்டில் நல…
-
- 0 replies
- 544 views
-
-
கோடீஸ்வர ஆளுகையில் ஆபத்தற்ற முதலாளித்துவம் சிவப்புக் குறிப்புகள் இலங்கையின் நிறுவனரீதியான கட்டமைப்பில், இந்தியாவின் பொருளாதார வெற்றிகள் தொடர்பான கதைகள், ஏராளமாகக் காணப்படுகின்றன. மேலதிகமாக, வர்த்தக தாராளமயமாக்கல் மூலமாக - குறிப்பாக பொருளாதாரத்துக்கும் தொழில்நுட்பத்துக்குமான கூட்டுறவு ஒப்பந்தம் (எட்கா) - இலங்கையின் பொருளாதாரத்தையும் அவ்வாறான “ஒளிரும் இந்தியா”உடன் இணைத்துக் கொள்வதற்கான முஸ்தீபுகளும் காணப்படுகின்றன. இந்தப் பின்னணியில், இந்தியாவின் அரசியல் பொருளாதாரத்தை, நாங்கள் எவ்வாறு மதிப்பிட முடியும்? இந்தியாவின் ஊடகங்களும் அறிவியலாளர்களும், இலங்கையைப் பற்றிய தவறான ஒரு புரிதலைக் கொண்டிருக்கின்றனர் என, பல காலம…
-
- 0 replies
- 544 views
-
-
பிரான்சும் வன்முறையும்-பா.உதயன் ஐரோப்பிய நாடான பிரான்சின் தலைநகர் பாரிஸ் அடுத்துள்ள புறநகரான நான்தெரே பகுதியில் கடந்த 27 ம் திகதி போக்குவரத்து விதியை மீறியதாக சில இளைஞர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். பொலிசாரின் கட்டளைக்கு பணியாமல் வண்டியை நிறுத்தாமல் போனதால் இதில் 17 வயதான அல்ஜீரியாவை பூர்வீகமாகக் கொண்ட நாஹெல் என்ற முஸ்லிம் சிறுவன் கொல்லப்பட்டான் இந்தச் சிறுவனை கொல்லப் பட்டது பெரும் துயராக இருந்தாலும் இதை தொடந்து வெடித்த வன்முறையால் பிரான்ஸ் தேசமே பற்றி எரிவது போல் இருந்தது. எவராக இருந்தாலும் வன்முறை மூலம் எந்தப் பிரச்சினைகளையும் தீர்க்க முடியாது. ஜனநாயக வழியில் போராட வேண்டும். பாடுபட்டு வியர்வை சிந்தி எல்லோரும் சேர்ந்து கட்டியதை அவர்களே நாசம் செய்வது நாகரீ…
-
- 1 reply
- 543 views
-
-
விஸ்வரூபம் எடுக்கும் ஜனாதிபதி ரொபட் அன்டனி தேசிய அரசாங்கத்திலிருந்து விலகுவதற்கு திகதியொன்றை குறித்துக்கொள்ளுங்கள் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் நடைபெற்ற சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தின்போது தெரிவித்ததாக சுதந்திரக் கட்சியின் மாற்று அணியினர் குறிப்பிட்டிருந்தனர். எனினும் சுதந்திரக் கட்சி சார்பாக தேசிய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் 23 பேர் கொண்ட அணியினர் ஜனாதிபதி அவ்வாறு கூறவில்லையென தெரிவித்திருந்தனர்.இந்த விடயத்தில் சுதந்திரக் கட்சியின் இரண்டு தரப்பினருக்கும் மத்தியில் கடும் போட்டியும் முரண்பாகளும் நிலவின. இதனால் ஜனாதிபதி அ…
-
- 0 replies
- 543 views
-
-
சிக்கல்களுக்குள் சிக்கும் வடக்கு மாகாணசபை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், தலைமையிலான வடக்கு மாகாணசபையின் அமைச்சர்கள் வாரியம் மீண்டும் மாற்றியமைக்கப்பட்டிருக்கிறது. வடக்கு மாகாணசபையின் ஆயுள்காலம் இன்னமும், சுமார் ஒரு வருடம் வரையே இருக்கின்ற நிலையில், மேற்கொள்ளப்பட்டிருக்கின்ற இந்த மாற்றம், பல்வேறு இழுபறிகளின் பின்னர்தான் நடந்தேறியிருக்கிறது. முதலமைச்சர் விக்னேஸ்வரன் இப்போது, விவசாய மற்றும் கால்நடை அபிவிருத்தி அமைச்சை, சிவநேசனிடம் கையளித்திருக்கிறார். சுகாதார அமைச்சர் பதவி, மருத்துவர் குணசீலனிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மூன்று மாத காலத்துக்கு என தற்காலிகமாக நியமிக்கப்பட்ட அமைச்சர்களான, அனந்தி சசிதரனும், சர்வேஸ்வரனும…
-
- 1 reply
- 543 views
-
-
அரசியல் சூழ்நிலை மாறுகிறதா? மனமாற்றம் ஏற்படுகிறதா? : சிந்தியுங்கள் தேசிய இனப்பிரச்சினை தொடர்பாக ஏற்பட்டுவரும் சூழ்நிலை மாற்றத்தையும் சிங்கள மக்களிடையே ஏற்பட்டுவரும் மனமாற்றத்தையும் நாம் மிகவும் கவனமாக கருத்தில் கொள்ளவேண்டும். அதேவேளை, தமிழ்பேசும் மக்களின் அரசியல் தீர்வை முன்னெடுத்துவரும் த.தே.கூட்டமைப்பு தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா சம்பந்தனுக்கு ஆட்சியாளரும் சிங்கள அரசியல் கட்சித் தலைவர்களும் வரவேற்பளிப்பதும் மற்றுமோர் சாதகமான சூழ்நிலையாகும். தலைவர் சம்பந்தனின் அரசியல் அணுகுமுறை, அரசியல் அனுபவம், இராஜதந்திரம் அவரை தமிழ் மக்களின் பெரும் தலைவராக மதிக…
-
- 0 replies
- 543 views
-
-
வீதிக்கு இறங்காத அரசியல்வாதிகளும் வீதிக்கு இறங்கிய மக்களும் தாயகன் இலங்கையை கொரோனா கொத்தணிகள் ஆக்கிரமித்து வரும் நிலையில் மேல் மாகாணமே மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதுடன் அதிகமான உயிரிழப்புக்களையும் அதிக தொற்றாளர்களையும் கொண்ட ஆபத்து வலய மாவட்டமாக கொழும்பு அடையாளப்படுத்தப்பட்டு பல பகுதிகள் ஒரு மாத காலத்துக்கும் மேலாக தனிமைப்படுத்தப்பட்டு முடக்கப்பட்டுள்ளன கொழும்பு மாவட்டத்தில் மட்டக்குளி, மோதர, வாழைத்தோட்டம் , கொட்டாஞ்சேனை , ஆட்டுப்பட்டித் தெரு ,பொரளை ,புளுமெண்டல் ,கரையோர பொலிஸ் , மாளிகாவத்தை ,தெமட்டகொட ,கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுகள் இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டு முடக்கப்பட்டுள்ளதுடன் மட்டக்குளியின் மெத்…
-
- 0 replies
- 543 views
-
-
சாய்ந்தமருது - கல்முனை விவகாரம்: இயலாமையின் வலி தனித்துவ அடையாளம் என்றும் அபிவிருத்தியோடு சேர்ந்த உரிமை அரசியல் என்றும் பல வருடங்களாகப் பேசி வருகின்ற முஸ்லிம்களின் அரசியல் இயலாமை, கிழக்கில் மீண்டும் ஒரு தடவை நிரூபணமாகி இருக்கின்றது. வரலாற்றில் இருந்து, முஸ்லிம் அரசியல்வாதிகள் பாடம் கற்றுக் கொள்ளவில்லை என்பதையும், அரசியலில் இன்னும் அவர்கள் பக்குவப்படவில்லை என்பதையும், மக்களை உசுப்பேற்றி விடுவதில் கைதேர்ந்த அளவுக்கு காரியம் முடித்துக் காட்டுவதில் அவர்களுக்கு ஆற்றல் கிடையாது என்பதையும், சாய்ந்தமருது உள்ளூராட்சி மன்ற விவகாரம் வெளிக்காட்டியிருக்கின்றது. இங்கே இருக்கின்ற பிரச்சினை, சாய்ந்தமருதுக்கு உள்ளூராட்ச…
-
- 0 replies
- 543 views
-
-
இதுவும் மறந்தே போகும் - கந்தையா இலட்சுமணன் தமிழர் வரலாறு, போராட்டங்களையும் கொலைகளையும் துப்பாக்கிச்சூடுகளையும் வன்முறைகளையும் அழிவுகளையும் சந்தித்து மரத்துப்போன மனோநிலையைக் கொண்டதாகவே வளர்ச்சி பெற்றிருக்கிறது. அத்தோடு, எதனையும் சாதாரணமாகக் கொள்ளும் வேண்டா வெறுப்பான வாழ்க்கைக்கும் பழகிப்போனது. அதனால், எல்லா விதமான மோசமான பிரச்சினைகளையும்கூட மிகச் சாதாரணமாக எண்ணிக்கொள்ளும் மனோநிலைக்கும் பழகிப்போனதாகவே இருக்கிறது. இருந்தாலும், ஆயுதம்சார் விடுதலைப் போராட்டத்தின் முடிவு, 2009 மே மாதத்துக்குப் பின்னர், அமைதியான சூழ்நிலையை ஏற்படுத்தி, நிம்மதிப் பெருமூச்சை விட்டுக்கொள்ள வாய்ப்பை ஏற்படுத்திய போதும், கடந்த நான்கு தசாப்தகால இன விட…
-
- 0 replies
- 543 views
-
-
ஆட்சி மாற்றத்தின் பலிக்கடாக்கள் யார்? கலாநிதி சர்வேந்திரா ஆட்சி மாற்றம் சிறிலங்கா சுதந்திரக்கட்சியையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் நெருக்கடிக்குள் தள்ளிக்கொண்டிருக்கிறது. சுதந்திரக் கட்சியின் நெருக்கடி ஒரு பிளவை நோக்கிக் கட்சியை இட்டுச் செல்கிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நெருக்கடிக்கான அறிகுறிகள் தெரிய ஆரம்பித்து விட்டன. இன்னும் சிறிது காலத்தில் இந் நெருக்கடி தனது இயல்பான வளர்ச்சியை அடையும் நிலைமைகளே தெரிகின்றன. ஆட்சி மாற்றத்தின் பின் சுதந்திரக் கட்சிக்குள் உள்முரண்பாடுகள் வளர்வது ஏன்? கூட்டமைப்புக்குள் நெருக்கடிகள் தோற்றம் பெறுவதற்கான காரணங்கள் எவை? இக் கேள்விகளுக்கு ஒரு பதில் தேடும் முயற்சியாகவே இன்றைய பத்தி அமைகின்றது. இதில் சுவாரசியமான விடயம் என்னவ…
-
- 0 replies
- 543 views
-
-
இது கார்த்திகை 27, வானம் மட்டுமல்ல தமிழர் நெஞ்சமும் கனக்கும் நாள். உறவுகள் – சொந்தங்கள் மட்டுமல்ல மேகமும் கண்ணீர் சிந்தும் நாள். தமிழன் தன்னைத் தானே ஆள்வதற்காகவும் – உரிமைகளுடன் வாழ்வதற்காகவும் நம் அண்ணன்களும் – அக்காக்களும் செங்குருதியை பூமிக்கு தாரை வார்த்து, மண்ணுக்கு விதையானமையை நினைவுகூரும் நாள். ஆம் இன்று மாவீரர் நாள்… தாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய சந்தனப் பேழைகளை உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் மக்கள் நினைவுகூரும் தினம். தாயக விடுதலைக்காக தங்களை ஆகுதியாக்கியர்களை நாம் நினைவுகொள்ளும் புனிதநாள். உலக நாடுகளையே வியப்பிலும் ஆச்சரியத்திலும் தள்ளி வீரச்செயல்களைப் புரிந்த சாதனை மனிதர்களை நினைவில் கொள்ளும் நாள். இனமானம் ஒன்றே வாழ்வு எனக் கொண்டு சுடுகலன் …
-
- 0 replies
- 543 views
-
-
யாரை ஏமாற்றும் முயற்சி? வடக்கில் இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள பொதுமக்களின் காணிகளை விடுவிப்பது தொடர்பாக ஆராய்வதற்கான கூட்டம் ஒன்று கடந்த அண்மையில் பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்றிருந்தது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அரச அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளுக்கும் இடையில் நடத்தப்பட்ட முக்கியமான கூட்டம் இது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்றிருந்த இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் கிரிசாந்த டி சில்வா பொதுமக்களின் காணிகளை சுவீகரித்து வைத்திருப்பதற்கு இராணுவத்துக்கு அதிகாரம் இல்லை என்றும், தாம் அவ்வாறு காணிகளைச் சுவீகரிக்கவுமில்லை என்…
-
- 0 replies
- 543 views
-
-
எல்லை நிர்ணய மீளாய்வுக் குழு: முஸ்லிம்களின் முன்னுள்ள கடப்பாடு மொஹமட் பாதுஷா / 2018 செப்டெம்பர் 28 வெள்ளிக்கிழமை, மு.ப. 07:42 அதிகார எல்லைகளை, விஸ்தரித்துக் கொள்வதற்காக, பன்னெடுங்காலமாக உலகில், நாடுகளுக்கிடையில் நிலம்சார் யுத்தங்கள், நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. தனிமனிதனும் கூட, காணிகளை உரிமையாக்கிக் கொள்வதில், அதீத அக்கறை எடுத்துச் செயற்படுகின்ற காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். ஆனால், இலங்கை முஸ்லிம்கள், மாகாணங்களின் எல்லை மீள்நிர்ணயம் தொடர்பிலும், அதனது மீளாய்வு குறித்தும் முனைப்புக் காட்டாமல் இருப்பதை, நன்றாகவே அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது. ‘விகிதாசாரத்துக்குள் தொகுதி’ எனச் சொல்லப்படும், கலப்புத் தேர்தல் முறையொன்று, நாட்…
-
- 0 replies
- 543 views
-