அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9225 topics in this forum
-
சிறிலங்காவின் புதிய ஜனாதிபதித் தேர்தலுக்கான ஏற்பாடுகள் ஆரம்பித்துள்ளன. பெரும்பாலும் அடுத்த ஜனவரியில் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படும் இந்தத் தேர்தலில் தமிழர்கள் தங்கள் இருப்பை நிலைநிறுத்திக் கொள்வதற்கும் கொஞ்சம் நிம்மதியாக மூச்சு விடுவதற்கும் எத்தகைய நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்பது குறித்த ஒரு விவாதத்திற்கான களமாக இதனை ஆரம்பிக்கிறேன். இந்த நிலையில் பல தெரிவுகள் குறித்து பல தரப்புகளிலிருந்தும் கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன. 1. பொது வேட்பாளரை ஆதரிப்பது 2. தேர்தலைப் புறக்கணிப்பது 3. தமிழர் தரப்பில் வேட்பாளர் ஒருவரை நிறுத்தி பலத்தை (?) காட்டுவது 4. தமிழ் முஸ்லிம் தரப்புகள் இணைந்து ஒரு வேட்பாளரை நிறுத்துவது 5. மகிந்தரை ஆதரிப்பது இதைவிட வேறு தெரிவுகளும் உ…
-
- 21 replies
- 1.3k views
-
-
ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் –தேர்தல் விதிகளின் பிரகாரம் பிரதான கட்சிகளின் இரு சிங்கள வேட்பாளர்கள் ஐம்பத்து ஒரு சதவீதத்துக்கும் குறைவான வாக்குகளைப் பெற்றும் நிலை ஏற்பட்டால், விருப்பு வாக்குகளை எண்ணும் நிலை எற்படும். இதனைக் கருத்தில் எடுத்து ஏனைய சிங்கள வேட்பாளர்கள் எவருக்கும் விருப்பு வாக்களிக்கும் முறையை புகுத்தாமல், தமிழ் பொது வேட்பாளருக்கு மாத்திரம் வாக்களியுங்கள் என்று தெளிவான முறையில் தமிழ்த் தேசியக் கட்சிகள் பிரச்சாரம் செய்ய வேண்டும். பேரம் பேசும் பலத்தை இது அதிகரிக்கும்– அ.நிக்ஸன்- 2009 மே மாதம் போர் இல்லாதொழிக்கப்பட்டு பதின் நான்கு ஆண்டுகள் முடிவடைந்துள்ள நிலையில் ச…
-
- 0 replies
- 334 views
-
-
ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் எத்தகைய ஒரு முடிவை எடுப்பார்கள்? நிலாந்தன்:- 02 நவம்பர் 2014 2005 இல் ஜனாதிபதித் தேர்தல் நடந்த போது இக்கட்டூரையாளர் வீரகேசரி வார இதழில் ஒரு கட்டூரை எழுதியிருந்தார். விடுதலைப் புலிகள் இயக்கத்தின் சிந்தனாமுறை பற்றியது அக்கட்டூரை. யார் ஜனாதிபதியாக வருவதை புலிகள் இயக்கம் விரும்பும் என்பதை அந்த இயக்கத்தின் வழக்கமான சிந்தனா முறைக்கூடாக அக்கட்டூரை கணித்திருந்தது. அதன்படி ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக வருவதை விடவும் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக வருதையே அந்த இயக்கம் விரும்பும் என்றும் அந்த கட்டூரை கூறியிருந்தது. மேற்கின் விசுவாசியாகிய ரணில் முன்னெடுக்கும் சமாதானத்தை புலிகள் இயக்கம் ஒரு தர்மர் பொறியாகவே பார்த்தது. எனவே மேற்கிற்கு…
-
- 0 replies
- 471 views
-
-
Published by T. Saranya on 2019-08-28 12:25:26 மிகச் சமீபத்தில் இலங்கை வாழ் மக்களில் வாக்களிக்க தகுதியுடைய வாக்காளர்கள் அனைவரும் தமது நாட்டில் எதிர்கால ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான வாக்குரிமையை பிரயோகிக்கவிருக்கிறார்கள் என்பது நாம் அறிந்ததே. சிலர் இந்த வாக்களிப்பால் எமக்கு என்ன பயன். சிறையில் உள்ள எமது குழந்தைகளுக்கு விடுதலை அளிப்பதாகக் கூறியும் இன்றும் அதற்குரிய ஆயத்தங்கள் நடைபெறவில்லை. நாம் இழந்த எமது காணியை மீளப்பெற முடியவில்லை என்பன போன்ற உண்மையான பிரச்சினைகளைக் கூறி நாங்கள் யாருக்கும் வாக்களிக்காமல் இருந்தால் என்ன? என்று அங்கலாய்த்துக் கொண்டு இருக்கின்றனர். இவர்களது அங்கலாய்ப்புக்கான…
-
- 0 replies
- 386 views
-
-
எதிர்வரும் ஜனவரி மாதம் நடைபெறுமென்று வலுவாக எதிர்பார்க்கப்படும் ஜனாதிபதித் தேர்தலில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவு யாருக்கு என்ற கேள்வி இப்போது முதன்மை பெறத் தொடங்கியுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வடக்கிலும் கிழக்கிலும் கொண்டுள்ள வாக்கு வங்கி, இத்தேர்தலில் மிகவும் முக்கியமானதொரு விடயமாகக் கருதப்படுகிறது. சுமார் நான்கு இலட்சம் தமிழர்களின் வாக்குகளை வைத்துக்கொண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஜனாதிபதித் தேர்தலில் பேரம் பேச முனைவதாக, அண்மையில் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்திருந்தார். இந்தக் கருத்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீதான அமைச்சர் விமல் வீரவன்சவின் காழ்ப்புணர்வை காட்டுவதாக மட்டும் எடுத்துக்கொள்ளக்கூடாது. ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட…
-
- 0 replies
- 498 views
-
-
ஜனாதிபதித் தேர்தலும் சாத்தியங்களின் கலையும் முகம்மது தம்பி மரைக்கார் / 2019 ஓகஸ்ட் 20 செவ்வாய்க்கிழமை, மு.ப. 10:35Comments - 0 உணர்ச்சி அரசியல் ஒன்றுக்கும் உதவாது. அவ்வாறான அரசியல் நிலைப்பாடானது, ஆண்டாண்டு காலமாக, மக்களைப் படுகுழியில் தள்ளியதைத் தவிர, வேறெதையும் செய்யவில்லை. மஹிந்த ராஜபக்ஷவின் காலத்தில், முஸ்லிம்களுக்கு அநீதி இழைக்கப்பட்டது என்பதற்காக, கடந்த தேர்தலில், கண்களை மூடிக்கொண்டு, உணர்ச்சி வேகத்தில் மைத்திரி - ரணில் கூட்டணிக்கு வாக்களித்த முஸ்லிம்கள், தற்சமயம் கைசேதப்பட்டு நிற்பதாகக் கூறிக் கொள்கின்றனர். இப்போது, அடுத்த ஜனாதிபதித் தேர்தல் அண்மித்து விட்டது. மைத்திரி - ரணில் ஆட்சிக் காலத்திலும், முஸ்லிம்களுக்குப் பெரும் அநியாயங்கள் நட…
-
- 0 replies
- 601 views
-
-
ஜனாதிபதித் தேர்தலும் தமிழ் கட்சிகளின் ஒன்றிணைவும் தமிழ்த்தரப்பு நோக்கு நிலையில் நவம்பர் மாத ஜனாதிபதி தேர்தல் மூன்று நிலைகளில் அரசியல் ரீதியான கொள்கை நிலைப்பாட்டைக் கொண்டிருக்கின்றது. இந்த மூன்று நிலைகளும் தேர்தல் களத்தில் தீவிரமாக முட்டி மோதி முடிவுகளை வெளிப்படுத்தக் காத்திருக்கின்றன. அந்த முடிவுகளும் அதன் பின்னரான விளைவுகளும் இலங்கையின் அடுத்த கட்ட அரசியல் நிலைமைகளில் பெரும் தாக்கத்தைச் செலுத்தப் போகின்றன. அதற்கான அறிகுறிகளை தேர்தலுக்கு முன்னரான நிலைமைகள் வெளிப்படுத்தியுள்ளன. இந்தத் தாக்கங்கள் நாட்டின் எதிர்கால நிலைமைகளைப் பிரகாசமாக்கும் என்று கூற முடியாதுள்ளது. ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாள…
-
- 0 replies
- 642 views
-
-
ஜனாதிபதித் தேர்தலும் தமிழ் மக்களின் தெரிவும் Editorial / 2019 ஓகஸ்ட் 01 வியாழக்கிழமை, மு.ப. 03:36 Comments - 0 இலங்கை, இரண்டு தேர்தல்களை எதிர்நோக்கி நிற்கிறது. அதில், இவ்வாண்டின் இறுதிப்பகுதியில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் முதன்மையானது. இந்தத் தேர்தலில், தமிழ் மக்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பது பற்றி, அரசியல் நிபுணர்கள் ஒவ்வொருவராகச் சொல்லத் தொடங்கி இருக்கிறார்கள். இலங்கையில், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை அறிமுகப்படுத்தப்பட்டது முதல், தமிழ் மக்களின் தெரிவுகள் அறம் சார்ந்ததாகவோ, மக்கள் நலன் சார்ந்ததாகவோ இருந்ததில்லை. இம்முறையும், அறம் சார்ந்தும் வேலைத்திட்டம் சார்ந்தும் வாக்களிக்கும் வாய்ப்புக் குறைவாகவே உள்ளது. …
-
- 0 replies
- 766 views
-
-
-
ஜனாதிபதித் தேர்தல் 2015 இல் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஒரு விடயமாக ‘பொதுவேட்பாளர்’ என்ற விடயம் இருந்தது. எதிர்பார்க்கப்பட்டதைப் போலவே, அல்லது எதிர்பார்த்ததற்கும் மேலாக பிரமாண்டமான ஒரு பொதுவேட்பாளராக மைத்திரிபால சிறிசேனா களமிறக்கப்பட்டார். ஆளும் கட்சியிலிருந்தான அவரின் எதிரணித் தாவலுடன் ‘கட்சித்தாவல்’ என்ற ஒரு விடயம் இம்முறை தேர்தலில் முக்கியம் வாய்ந்ததாக மாறியிருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தலை நடத்துவது தொடர்பான உத்தியோகபூர்வ பிரகடனத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கடந்த 20.11.2014 அன்று கைச்சாத்திட்டார். அன்றைய தினமே வசந்த சேனநாயக்க எம்.பி. கட்சி தாவினார். கடந்த 22ஆம் திகதி அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் கட்சி தாவல் வரை அது தொடர்ந்து கொண்டே இருக்கின்றது. ஆளும், எதிர்த்தரப்புகளில…
-
- 0 replies
- 604 views
-
-
ஜனாதிபதித் தேர்தலைத் தமிழ் மக்கள் பகிஷ்கரிக்கலாமா? Editorial / 2019 ஒக்டோபர் 10 வியாழக்கிழமை, பி.ப. 05:06 -இலட்சுமணன் பல்லின சமூகக் கட்டமைப்புக் கொண்ட ஒரு ஜனநாயக நாட்டின் பிரஜைகளின் வாக்குரிமையும் அதன் தேவைப்பாடும் பற்றிச் சிந்திக்க வேண்டிய ஒரு தருணத்தில் தமிழ்ச் சமூகம் தள்ளப்பட்டுள்ளது. அதேபோல், வழிகாட்டலும் அதற்கான வழிபடுதலும் சரியான முறையில் வரையறுத்துச் சொல்லப்பட வேண்டிய ஒரு காலச்சுழலினுள் இன்றைய தமிழ்ச் சமூகம் சிக்கியுள்ளது. கடந்த கால வரலாறுகளும் அவை கற்றுத்தந்த பாடங்களும் நல்லிணக்கமும் அதற்கான தேவைப்பாடுகளும், தற்காலத்தில் பேசுபொருளாக இருந்த போதும், அதனால் ஏற்பட்டிருந்த விளைவுகள், எமக்குப் பல்வேறு கருத்தியல்களை, பதிவுகளை பாடமாகத் தந்…
-
- 5 replies
- 1.1k views
-
-
ஜனாதிபதித் தேர்தல் - தமிழ் மக்கள் பார்வையாளர்களா? - நிலாந்தன்:- 14 டிசம்பர் 2014 ஜனாதிபதித் தேர்தலை நோக்கி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மேலும் உடைவது என்பது மஹிந்த ராஜபக்ஷவுக்கு மட்டும் அச்சுறுத்தலானது அல்ல. அதை அதன் தர்க்கபூர்வ விளைவுகளை கருதிக் கூறின் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் ஒரு விதத்தில் ஆபத்தானது தான். ரணிலைப் பொறுத்த வரை அவருக்கு வெற்றி வேண்டும். அதற்காக அவர் ஒப்பீட்டளவில் நீண்ட காலம் காத்திருந்து விட்டார். கிடைக்கப்போகும் வெற்றியைப் பொறுத்தே அவர் கட்சிக்குள் தன்னுடைய தலைமை ஸ்தானத்தையும் பாதுகாக்க வேண்டியிருக்கும். தனது தலைமைக்கு சவாலாக கட்சிக்குள் எழுச்சி பெற்று வரும் இரண்டாம் நிலை தலைவர்களை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதற்கு அவருக்கு வெற்றி அவசியம். …
-
- 0 replies
- 516 views
-
-
எதிர்வரும் ஜனவரி மாதம் 8ம் திகதி நடைபெற இருக்கும் ஜனாதிபதித் தேர்தல் பலரது பேசுபொருளாகியிருக்கும் இன்றைய நிலையில் இந்தத் தேர்தல் முடிவுகள் எப்படி அமையலாம் என்பதும் பலரது எதிர்பார்ப்பாக மாறியிருக்கிறது. தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதத்தை விடக் குறைவான காலமே இருக்கின்ற இந்த நிலையிலும் தேர்தல் குறித்த திடமான ஒரு முடிவை எதிர்வு கூறுவது மிகவும் கடினமான காரியமாகவே இருக்கிறது. இதற்கு தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கும் கட்சித் தாவல்கள் அரச சொத்துக்களைப் பாவித்தும் சட்டவிரோத பணத்தினைப் பாவித்தும் மக்களிடையே குறிப்பாக கிராமப் புற மக்களிடையே வழங்கப்படும் வரப்பிரசாதங்கள் மக்களிடையே எத்தகைய எதிர்வினையை உருவாக்கும் என்பது குறித்த நிச்சயமற்ற நிலை, இன்னும் மதில் மேல் பூனையாக இருக்…
-
- 1 reply
- 954 views
-
-
சமகால இலங்கை அரசியலில் காத்திரமான அரசியல் அழுத்தக் குழுவென்றால் அது பேரினவாத சக்திகள் தான் என்பது மீண்டும் மீண்டும் நிரூபிக்கப்பட்டுவரும் ஒன்று. பேரம்பேசும் ஆற்றல் கூட தம் வசமே உள்ளது என்று மார்தட்டி பறைசாற்றும் அளவுக்கு அது உண்மை. தீர்மானகரமான அரசியல் சூழல்களில் அவர்கள் தமது பாத்திரத்தை வெற்றிகரமாக ஆற்றியிருக்கிறார்கள். அரசை இனவாத திசையில் வழிநடத்தவும், வழிதவறிப்போனால் எச்சரிக்கவும் அவர்களால் முடிந்தது. குறிப்பாக இதுவரை ஜாதிக ஹெல உறுமய அரசின் பங்காளிக்கட்சியாக தாமும் அதிகாரத்தில் இருந்தபடி தமது பேரினவாத இலக்கில் பாரிய வெற்றிகளை பெற்றார்கள். யுத்தம் முடிவுற்றதன் பின்னர் அவர்கள் இரண்டாம் கட்ட போரை ஆரம்பித்துவிட்டதாக அறிவித்தார்கள். தமிழர்களின் நியாயபூர்வமான அரசியல் கோரிக…
-
- 2 replies
- 644 views
-
-
ஜனாதிபதித் தேர்தல் : தமிழ் நிலைப்பாடு என்ன? - நிலாந்தன். - நாடு ஒரு தேர்தலை நோக்கி போய்க்கொண்டிருக்கும் பொழுது தமிழரசுக் கட்சியானது தொடர்ந்து முடிவெடுக்க முடியாத ஒரு நிலையில் காணப்படுகின்றது. தமிழ்த் தேசியப் பரப்பில் உள்ள பெரிய கட்சி அது. அதன் செயற்பாடுகள் காரணமாக அது படிப்படியாக உடைந்து உடைந்து அதன் ஏகபோகத்தை இழந்து விட்டது என்பது உண்மைதான்.என்றாலும் அதுதான் இப்பொழுது உள்ளத்தில் பெரிய கட்சி. அக்கட்சி ஒரு தேர்தல் ஆண்டில் முடிவெடுக்க முடியாதபடி உடைந்து காணப்படுவது,தென் இலங்கைக்குச் சாதகமானது. நீதிமன்றம் கட்சியை முடக்கவில்லை. ஆனால் அண்மையில் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய தலைவர் செயல்பட முடியாத ஒரு நிலை. அதனால் முன்னைய தலைவராகிய மாவை சேனாதிராஜாவே இப்பொழுத…
-
- 0 replies
- 302 views
-
-
கந்தையா அருந்தவபாலன் ஒன்றுக்கு மேற்பட்ட தேசிய இனங்களைக் கொண்டிருக்கும் நாடொன்றில் அந்தந்த இனங்களின் தனித்துவத்தை ஏற்று அவர்களின் அரசியல் மற்றும் அடிப்படை உரிமைகளை வழங்கும் சமத்துவமான ஆட்சிமுறைமை நிலவும் நாடுகளில் வாழும் மக்களிடையே தமது இன உணர்வை விட தமது நாடு என்ற தேசிய உணர்வு மேலோங்கி நிற்பதைக் காணக்கூடியதாக உள்ளது. இதற்கு மாறாக பெரும்பான்மைத் தேசிய இனம் ஏனைய தேசிய இனங்களின் அரசியல் உரிமைகள் பலவற்றை மறுத்து அவர்களை இரண்டாந்தரக் குடிமக்களாக கருதும் ஆட்சி முறைமையைக் கொண்டிருப்பதுடன், அத்தேசிய இனங்களை ஒடுக்கும் செயற்பாடுகளிலும் ஈடுபட்டு வரும் ஒருநாட்டில் உள்ள சிறுபான்மை தேசிய இனங்களுக்குத் தேசிய உணர்வை விடத் தமது இன உணர்வே மேலோங்கி இருக்கும். இத்தகைய ஒரு நிலையே இலங்கை…
-
- 0 replies
- 354 views
- 1 follower
-
-
ஜனாதிபதித் தேர்தல் உடனடிச் சாத்தியமா? கே. சஞ்சயன் / 2019 ஜனவரி 11 வெள்ளிக்கிழமை, மு.ப. 07:34 இலங்கை அரசியலில், 52 நாள்கள் நீடித்த குழப்பம் முடிவுக்கு வந்த பின்னர், தேர்தல் பரபரப்பு தொற்றிக் கொள்ள ஆரம்பித்திருக்கிறது. முறைப்படி மாகாணசபைத் தேர்தல்கள் தான், முதலில் நடத்தப்பட வேண்டும். வடக்கு, கிழக்கு உள்ளிட்ட ஆறு மாகாணசபைகளின் பதவிக்காலங்கள் ஏற்கெனவே முடிந்து விட்டன. ஆனாலும், உடனடியாக மாகாணசபைத் தேர்தல்களை நடத்தும் திட்டத்தில், அரசாங்கம் இருப்பதாகத் தெரியவில்லை. முன்னர், மாகாணசபைத் தேர்தல்களை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியே இழுத்தடித்தது. இப்போது, மஹிந்தவின் நிழலில் உள்ள பொதுஜன பெரமுனவுடன் கூட்டு வைத்துக் கொண்டுள்ள சுதந்திரக் கட்சி, மாகாணசபைத் தேர…
-
- 0 replies
- 554 views
-
-
2020 ஜனாதிபதித்தேர்தல் ஒரு பொறியாகத் தமிழ் மொழிச் சமூகங்களின் முன்னே நிறுத்தப்பட்டுள்ளது. இந்தத் தேர்தலில் போட்டியிடும் பிரதான வேட்பாளர்கள் எவரும் தமிழ், முஸ்லிம், மலையக மக்களுடைய உரிமைகளுக்கான உத்தரவாதம், பிரச்சினைகளுக்கான தீர்வு, பாதுகாப்பு, சமூக முன்னேற்றம் போன்றவற்றில் துல்லியமான நிலைப்பாடுகள் எதனையும் இதுவரையில் வெளிப்படுத்தவில்லை. இது இதுவரையான வரலாற்றில் நிகழ்ந்திருக்காத ஒரு அபாயகரமான நிலையாகும். கடந்த காலத்தில் நிகழ்ந்த அத்தனை தேர்தல்களின்போதும் தமிழ் பேசும் தேசிய இனங்களின் பிரச்சினைகள் குறித்தும் அதற்கான தீர்வைப்பற்றியும் இந்தக் கட்சிகள் பேசி வந்திருக்கின்றன. அவை பேசியவாறும் உடன்பட்டவாறும் தீர்வுகளை முன்வைக்காது விட்டாலும் அவற்றைப் பற்றிப் பேசியே தீர வேண்டும…
-
- 0 replies
- 343 views
-
-
ஜனாதிபதித் தேர்தல் களம்: திரட்டுவதா சிதறடிப்பதா? - நிலாந்தன் “இம்முறை ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் எதிர்வுகூற முடியாதவை மட்டுமல்ல, ஊகிக்க முடியாதவைகளுந்தான்” என்று ஒரு மேற்கத்திய தூதராக அதிகாரி சொன்னார். இலங்கைதீவின் நவீன வரலாற்றில் குறிப்பாக ஜனாதிபதி முறைமை அமல்படுத்தப்பட்ட பின், ஒரு பிரதான வேட்பாளர் அதுவும் ஜனாதிபதியாக இருப்பவர், சுயேட்சையாக கட்டுப்பணம் செலுத்தியிருப்பது என்பது இதுதான் முதல்தடவை. முன்னெப்பொழுதும் தேர்தல் களத்தில் இந்த அளவுக்கு நிச்சயமின்மைகள் நிலவியதில்லை. இது எதை காட்டுகிறது ? போட்டி அதிகமாக இருப்பதை மட்டும் காட்டவில்லை. பெரும்பான்மையானவர்களால் அங்கீகரிக்கப்பட்ட தலைவர் யாரும் இல்லை என்பதையும் காட்டுகிறது. நாடாளுமன்றத்தில் தாமர…
-
- 0 replies
- 558 views
-
-
ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள்: இன்னோர் அரசமைப்பு நெருக்கடியாக மாறுமா? எம்.எஸ்.எம். ஐயூப் / 2019 ஜூலை 31 புதன்கிழமை, பி.ப. 05:16 Comments - 0 இந்த வருடம் முடிவடைவதற்குள், ஜனாதிபதித் தேர்தல் நடைபெற வேண்டும். ‘ஆட்சியில் இருக்கும், ஜனாதிபதியின் பதவிக் காலம், முடிவடைவதற்கு முன்னரான, இரண்டு மாதத்துக்கும் ஒரு மாதத்துக்கும் இடைப்பட்ட காலத்தில், அடுத்த ஜனாதிபதித் தேர்தல் நடைபெற வேண்டும்’ என்பதே சட்டம். ஜனாதிபதித் தேர்தலே, அடுத்ததாக வரும் என்று இருந்த போதிலும், எப்போதும் சர்ச்சைகளை உருவாக்கி வரும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மாகாண சபைத் தேர்தலை, அதற்கு முன்னர் நடத்த விரும்புவதாகத் தெரிகிறது. அவர் இதற்கு முன்னரும், ஜனாதிபதித் தேர்தலைப் பிற்போடுவதற்குச் ச…
-
- 0 replies
- 551 views
-
-
ஜனாதிபதித் தேர்தல் முஸ்தீபுகள் என்.கே. அஷோக்பரன் / 2019 மே 20 திங்கட்கிழமை, பி.ப. 08:08 Comments - 0 பகுதி -1 மிகக்கோரமான உயிர்த்தெழுந்த ஞாயிறு தாக்குதல்களைத் தொடர்ந்து, அச்சமும் துயரமும் பயங்கரமும் இலங்கை மக்களின் மனதை, மீண்டும் ஆட்டிப்படைக்கத் தொடங்கியுள்ள வேளையில், அரசியல் பரப்பில், முக்கியமான சில காய்நகர்த்தல்கள் இடம்பெற்றுக் கொண்டிருப்பதையும் நாம் அவதானிக்கக் கூடியதாக உள்ளது. இந்தக் காய் நகர்த்தல்கள் எல்லாம், அடுத்த ஜனாதிபதித் தேர்தலை இலக்காகக் கொண்டு, இடம்பெற்று வருவதையும் உணரக் கூடியதாக உள்ளது. 2015ஆம் ஆண்டு ஜனவரி எட்டாம் திகதி, நடைபெற்ற ‘வரலாற்று முக்கியத்துவம் மிக்க’ ஜனாதிபதித் தேர்தலின் ஞாபகங்கள் கூட, இன்னும் இலங்கையர்களின் ம…
-
- 7 replies
- 1.6k views
-
-
இலங்கையைப் பொறுத்த வரையில் தேசிய ரீதியிலான எந்தவொரு தேர்தலிலும் சிறுபான்மையின மக்களின் வாக்குகள் எப்போதும் ஆட்சியை தீர்மானிப்பதாகவே இருந்திருக்கிறது. அதை உணர்ந்த பிரதான அரசியல் கட்சிகளும் சிறுபான்மை கட்சிகளின் ஆதரவைக் கவர்வதில் அதாவது சிறுபான்மை மக்களின் வாக்குகளை கவர்வதற்காக தன்னால் முடிந்த சாத்தியமான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வது இதுவரையான தேர்தல்களில் வழமையாகவே இருந்திருக்கின்றன. அதற்கு பல்வேறு தேர்தல் உறுதிமொழிகள் கருவிகளாகவும் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. சிறுபான்மை மக்களின் வாக்குகளை பெறுவதற்கு சிறுபான்மை அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளை திருப்திப்படுத்தினால் போதுமானது என்பதே இலங்கையில் இதுவரை இருந்துவந்த அரசியல் சமன்பாடாகவும் இருந்து வந்திருக்கிறது. ஆனால்…
-
- 0 replies
- 528 views
-
-
எல்லோரும் ஜனாதிபதித் தேர்தலை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். நடைபெறவுள்ள தேர்தல், இலங்கையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்ற மாயை, ஊடகங்களால் கட்டியெழுப்பபட்டுள்ளது. சுதந்திரத்துக்குப் பிந்தைய இலங்கையின் அரசியல் வரலாற்றில், ஒவ்வொரு ஜனாதிபதித் தேர்தலின் போதும் நாடாளுமன்றத் தேர்தலின் போதும், இவ்வாறான ஆலவட்டங்கள் கட்டப்படுவதுண்டு. இறுதியில், எதிர்பார்ப்புகள் காற்றுப்போன பலூன் போலாவதும் பின்னர், அடுத்த தேர்தலில் நம்பிக்கை வைப்பதுமெனத் தொடர்ச்சியாக நடைபெற்று வந்துள்ளது. நடைபெறவுள்ள தேர்தலும், அதற்கு விலக்கல்ல. இப்போது எல்லோரின் கவனமும் ஜனாதிபதி வேட்பாளர்கள் யார், யார் யாருடன் கூட்டணி வைப்பார்கள், யாருக்கு யார் ஆரவு தருவார்கள் போன்ற கேள்விகளிலேயே குவிந்து…
-
- 0 replies
- 454 views
-
-
ஜனாதிபதித் தேர்தல்; குட்டையில் ஊறும் கட்சி மட்டைகள் Editorial / 2019 ஓகஸ்ட் 22 வியாழக்கிழமை, பி.ப. 01:04 Comments - 0 -இலட்சுணனன் லங்கா ஜனநாயக சோசலிசக் குடியரசின் ஜனாதிபதித் தேர்தலுக்கான கருத்தாடல்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்ற வேளையில், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன, தனது வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ எனப் பெயரிட்டுள்ளது. இச்சூழலில், மக்கள் விடுதலை முன்னணியும் தனது வேட்பாளர் அநுரகுமார எனப் பிரகடனப்படுத்தியுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சிக்குள், தான்தான் வேட்பாளராகப் போட்டியிடப் போவதாக, அக்கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸ அறிவித்துக்கொண்டு, அக்கட்சியின் பின்வரிசை எம்.பிக்களின் ஆதரவுடனும் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களின் கணிசமான ஆதரவுடனும், தன் பாணியின…
-
- 0 replies
- 446 views
-
-
ஜனாதிபதித் தேர்தல்; தமிழ் மக்கள் செய்ய வேண்டியது என்ன? by Jothilingam Sivasubramaniam - on December 16, 2014 படம் | Dinuka Liyanawatte/REUTERS, SRILANKABRIEF ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக தமிழ் மக்கள் என்ன நிலைப்பாட்டினை எடுக்கலாம் என்பது தொடர்பாக இன்று பல தளங்களிலும் விவாதிக்கப்பட்டு வருகின்றது. தமிழ் மக்களுக்குத் தொடர்பில்லாத தேர்தல் பற்றி பெரிய அக்கறையினைக் காட்டத்தேவையில்லை என தமிழ் சிவில் சமூக அமையம் கருத்துத் தெரிவித்துள்ளது. தமிழ் டயஸ் போறாவின் ஒரு பகுதியினர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களின் கருத்துக்கணிப்பினை வெளிப்படுத்தும் வகையில் வேட்பாளர் ஒருவரை நிறுத்த வேண்டும் எனக் கேட்டிருந்தது. ஆனாலும், சம்பந்தன் அதனை நிராகரித்து இருந்தார். ஆரம்பத்தில் …
-
- 0 replies
- 546 views
-