அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9226 topics in this forum
-
மீண்டுமொரு கறுப்பு ஜூலைக்கு வழிவகுக்க திட்டமா? மற்றுமொரு கறுப்பு ஜூலை நாட்டில் உருவாகியுள்ளதா என்று பீதி கொள்ளும் அளவுக்கு கடந்த செவ்வாய்க்கிழமை (13.05.2019) குருநாகல், கம்பஹா மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் வாழும் முஸ்லிம் குடிமக்களுக்கெதிராக கட்டவிழ்த்துவிடப்பட்ட கொடூர வன்முறைச் சம்பவங்கள் அரங்கேற்றப்பட்டுள்ளன. அப்பாவி பொதுமக்கள் ஒருவர் கொல்லப்பட்டிருக்கிறார்கள், பள்ளிவாசல்கள் தாக்கப்பட்டுள்ளன, தீ வைக்கப்பட்டுள்ளன, வர்த்தக நிலையங்கள் நாசமாக்கப்பட்டுள்ளன, கொடுமையாளிகளின் தாக்குதல்களுக்கு அஞ்சி வீடு வாசல்களை விட்டோடி வயல்வெளிகளில் அப்பாவி கிராம மக்கள் அடைக்கலம் கோரியுள்ளனர். படைத்த…
-
- 0 replies
- 519 views
-
-
தேர்தல் காய்ச்சல் மொஹமட் பாதுஷா மீண்டும், தேர்தல் காய்ச்சல் தொற்றியிருக்கின்றது. இலங்கை அரசியலில், பெப்ரவரி மாதம் இருந்த நிலைமைகள் சட்டென மாறி, ஒரு புதுவித பரபரப்புமிக்க களச்சூழல், உருவாகி இருக்கின்றது. அரசமைப்பின்படி, தனக்குள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி, நாடாளுமன்றத்தை மார்ச் இரண்டாம் திகதி நள்ளிரவு முதல் கலைத்து, நாடாளுமன்றத் தேர்தலுக்கான அறிவிப்பை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, வெளியிட்டமையால், அரசியலில் இந்தப் பரபரப்பு ஏற்பட்டிருக்கின்றது. அரசமைப்பின் 19ஆவது திருத்தத்தின் பிரகாரம், ஒரு நாடாளுமன்றம் ஸ்தாபிக்கப்பட்டு, நான்கரை வருடங்களுக்கு முன்னதாக, அதைக் கலைக்க முடியாது என்ற நிபந்தனை காணப்படுகின்றது. …
-
- 2 replies
- 519 views
-
-
சிறிலங்கா இராணுவத்தின் நில அபகரிப்பும் - தமிழ்மக்களின் சொத்துரிமையும் [ சனிக்கிழமை, 13 யூலை 2013, 07:22 GMT ] [ நித்தியபாரதி ] சொத்து உரிமை என்பது பலவீனமாகவும், வினைத்திறனற்றதாகவும் இருப்பதால் போருக்குப் பின்னான சூழலில் பல்வேறு பிரச்சினைகள் தோற்றம் பெறுகின்றன. இரத்தம் சிந்தப்பட்ட நீண்ட கால யுத்தமானது முடிவுக்கு கொண்டு வரப்பட்ட பின்னர் பொருளாதாரத்திற்கு மீளவும் புத்துணர்வு வழங்குவதில் மிகப் பாதுகாப்பான சொத்து உரிமைகள் என்பது தேவைப்பாடானதாகும். இவ்வாறான சூழலில் வாழும் பல்வேறு தரப்பட்ட தொழிலாளர்களுக்கு குறிப்பாக விவசாயிகள் மற்றும் மீனவர்களின் வாழ்வாதாரமானது சொத்துப் பாதுகாத்தல் உரிமையிலும், தமது நிலங்களைப் பயன்படுத்தும் உரிமையிலுமே தங்கியுள்ளது. இதற்கும் மேலாக, நம்பகம…
-
- 0 replies
- 519 views
-
-
சோறா? சுதந்திரமா? - கலாநிதி சர்வேந்திரா அண்மையில் அம்பாறை மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன் (ரொபின்) நோர்வேயின் தலைநகர் ஒஸ்லோவில் பொதுமக்கள் சந்திப்பொன்றை நடாத்தியிருந்தார். இச் சந்திப்பு ஏனைய அரசியல் சந்திப்புக்களை விட வேறுபட்டதாக இருந்தது. இச் சந்திப்பில் ரொபின் அரசியல் விடயங்கள் பற்றிப் பேசவில்லை. மக்கள் மற்றும் பிரதேசங்களின் மேம்பாடு சார்ந்து முன்னெடுக்கப்பட வேண்டிய கல்வி வளர்ச்சித் திட்டங்கள், தொழிற்துறை வளர்ச்சித் திட்டங்கள் பற்றியே கூடுதலாகப் பேசினார். சந்திப்பில் கலந்து கொண்டவர்களின் கேள்விகளுக்கும் பதில் வழங்கினார். மேம்பாடு பற்றியே கூடுதலாகப் பேசப்பட்டதனால் அரசியல் முரண்பாடுகளைக் கடந்த ஒர் ஒருமைப்பாட்டை இச் சந்திப்பில் கா…
-
- 0 replies
- 519 views
-
-
கட்சி மாநாடுகளும் தமிழர் அரசியலும் 2018 ஒக்டோபர் 02 செவ்வாய்க்கிழமை -அதிரன் அரசியல் என்பது நாடு, அரசு, சமூகம், குடிமக்கள், ஆட்சிமுறை, சட்டம் போன்ற அமைப்புகள் மற்றும் அவை சார்ந்த வழக்குப் பொருள்கள் என அனைத்தையும் உள்ளடக்கியதாகும். இன்றைய காலத்தில் அரசியலை ஒதுக்கி வைத்துவிட்டு அன்றாடச் சாப்பாட்டைக்கூட நினைக்க முடியாத அளவுக்கு, அரசியலின் ஆதிக்கம் வியாபித்திருக்கிறது. திருக்குறளில் பல தலைப்புகளில் அரசியல் விவரிக்கப்பட்டுள்ளது. பொருட்பாலில் அமைச்சியல், அரணியல், கூழியல், படையியல், நட்பியல், குடியியல் என ஆறு இயல்களில் இயற்றப்பட்டுள்ள நாற்பத்தைந்து தலைப்புகளில் 450 குறள்கள் கூறுவதும் அரசியல் பற்றியதாகத்தான் இருக்கிறது. சாணக்கியர், தொல்காப்ப…
-
- 0 replies
- 519 views
-
-
தனிமைப்பட்டுள்ள முஸ்லிம் கட்சிகள்: ஆபத்தான அரசியல் முகம்மது தம்பி மரைக்கார் அநேகமாக இந்தப் பத்தியை, நீங்கள் படித்துக் கொண்டிருக்கும் போது, நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, பொதுத் தேர்தலொன்றுக்கான தினத்தை அறிவிக்கும் வர்த்தமானி வெளியாகி இருக்கக்கூடும். இல்லா விட்டாலும், அடுத்து வரும் நாள்களில் அது நடக்கும். ‘ஜனாதிபதித் தேர்தல் ஒன்றில் வெற்றிபெறும் அணிதான், அடுத்து அமையும் நாடாளுமன்றத்தையும் கைப்பற்றும்’ என்கிற பொதுவான நம்பிக்கையொன்று இருக்கத்தக்கதாக, ‘பொதுத்தேர்தல்’ எனும் போட்டியில் களமிறங்குவதற்கு, அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. “எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில்…
-
- 0 replies
- 518 views
-
-
‘கோட்டா கோ ஹோம்’ மக்கள் எழுச்சியில் வடக்கும் கிழக்கும் இணைய வேண்டுமா? என்.கே. அஷோக்பரன் Twitter: @nkashokbharan வரலாறு காணாத மக்கள் எழுச்சியொன்றை இலங்கை சந்தித்து நிற்கிறது என்று சொன்னால் அது மிகையல்ல. காலிமுகத்திடல் பகுதியில் மக்கள், 24 மணிநேரமுமாக பல நாள்களாகத் தொடர்ந்து அமைதியான வழியிலான போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இங்கு சிங்களம், தமிழ், முஸ்லிம் மக்கள் எல்லோரும் ஒன்றாக ஒருமித்த குரலில் “கோட்டா கோ ஹோம்” (கோட்டா வீட்டுக்குப் போ), “ராஜபக்ஷ கோ ஹோம்” (ராஜபக்ஷர்கள் வீட்டுக்கு போ) என பலமான கோஷத்தை எழுப்பி வருகிறார்கள். கோட்டா அரசாங்கமும், ராஜபக்ஷர்களும் திணறிப்போய் நிற்கிறார்கள் என்றால் அது மிகையல்ல. வெற்றி வீரர்களாக தம்மைக் கொண்டாடிய அதே …
-
- 6 replies
- 518 views
-
-
யாழ்ப்பாணம்: பிழையான கேள்வியும் சரியான பதிலும்….! February 5, 2025 — அழகு குணசீலன் — 28 அமைப்புக்களின் கூட்டணியான என்.பி.பி.யும் அதன் பிரதான பங்காளியான ஜே.வி.பி.யும், அதன் தலைவர்களும், ஜனாதிபதியும் அள்ளி வீசிய தேர்தல் வாக்குறுதிகளை -கொள்கைகளை நடைமுறைப்படுத்த முடியாமல் திண்டாடுகிறார்கள். “இந்த வாக்குறுதிகளை உங்களால் நிறைவேற்ற முடியாது அப்படியானால் அவற்றை எப்படிச் செய்யப் போகிறீர்கள்? என்பதை விவாதிப்பதற்கு ஒரு பொருளாதார விவாதத்திற்கு வாருங்கள்” என்று எதிரணியினர் எழுப்பிய கேள்விகளுக்கு ஒரு சரியான பதில் அளிக்கப்படவில்லை. அரசியல் செயற்பாடுகளுக்கான வீதிவரைபடம் அவர்களிடம் இருக்க வில்லை என்பதால் விவாதத்திற்கும் செல்லவில்லை. மாறாக மெயின் ரோட்டில் ப…
-
- 0 replies
- 518 views
-
-
பொன்சேகாவின் எழுச்சியும் வீழ்ச்சியும் இலங்கை இராணுவம் 2008 ஆம் ஆண்டு ஜூலை 16 ஆம் திகதி, மன்னார் மாட்டத்தில் விடத்தல்தீவில் அமைந்திருந்த, விடுதலைப் புலிகளின் போர் தந்திரோபாய ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த, கடற்புலித் தளத்தைக் கைப்பற்றிக் கொண்டது. இது, இராணுவத்தினர் பெற்ற முக்கிய வெற்றி என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. அதுவரை இராணுவத்தினர், குறிப்பிட்டதோர் இடத்தில், எவ்வளவு பாரிய வெற்றியை அடைந்தாலும், அவர்கள் மீண்டும் கோட்டைவிட்டு விடுவார்கள், புலிகள் மீண்டும் இராணுவத்தினர் கைப்பற்றிய இடத்தைக் கைப்பற்றிக் கொள்வார்கள் என்றதோர் சந்தேகக் கண்கொண்டே, சிங்கள மக்கள் முன்னைய, அந்த வெற்றிகளை நோக்கினார்கள். ஆ…
-
- 0 replies
- 518 views
-
-
மரபுரிமை ஆக்கிரமிப்பும் தமிழ் அறிஞர்களின் பொறுப்பும் - நிலாந்தன் உருத்திரபுரம் சிவன் ஆலயத்துக்கும் ஆபத்தா? தொல்லியல் திணைக்களம் அவ்வாலயச் சூழலில் அகழ்வாராய்ச்சிகளைச் செய்ய முயற்சிப்பதாக செய்திகள் வருகின்றன. கடந்த வாரத்துக்கு முதல் வாரம் தையிட்டியில் ஒரு பிரமாண்டமான விகாரைக்கு ராணுவத் தளபதி அடிக்கல் நாட்டியிருக்கிறார். எனது கடந்தவாரக் கட்டுரை ஒன்றில் எழுதியது போல கிழமைக்கு ஒரு பிரச்சினையைக் கிளப்பி தமிழ் அரசியல்வாதிகள்; செயற்பாட்டாளர்கள் மற்றும் குடிமக்கள் சமூகங்களின் கவனத்தை அரசாங்கம் திசைதிருப்பி வருகிறது.இக்கட்டுரை எழுதப்பட்டுக் கொண்டிருக்கையில்கூட எங்காவது ஒரு மரபுரிமை சின்னம் அல்லது சைவ ஆலயம் தொல்லியல் திணைக்களத்தின் பார்வைக்குள…
-
- 0 replies
- 518 views
-
-
'டம்மியை' நிறுத்துவாரா : மஹிந்த? -சத்ரியன் முதலில் கோத்தாபய ராஜபக் ஷ, பசில் ராஜபக் ஷ, சமல் ராஜபக் ஷ ஆகியோரின் பெயர்கள் தான் அடிபட்டன. இவர்களுக்கு எதிரான விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டன. அதேவேளை இப்போது ராஜபக் ஷ சகோதரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படாது, நிச்சயம் நாமல் தான் வேட்பாளர், பொறுத்திருந்து பாருங்கள் என்று ஊவா முதலமைச்சர் சாமர தசநாயக்க புதிய குண்டு ஒன்றைத் தூக்கிப் போட்டிருக்கிறார். ஜனாதிபதி தேர்தலில் டம்மியாக ஒருவரை நிறுத்தி வெற்றி பெற வைத்த பின்னர், அவரைப் பதவி விலகச் செய்து, ஜனாதிபதி ஆசனத்தில் மஹிந்தவினால் அமர முடியும் என்ற வாதங்களும் முன்வைக்கப்படுகின்றன. …
-
- 0 replies
- 518 views
-
-
புவிசார் அரசியலும் தமிழர்களும் புவிசார் அரசியல் என்பது பரவலாகப் பாவிக்கப்படும் சொற்பதமாகும். இதற்கான வரைவிலக்கணத்தை அறிய கடந்த ஐந்து ஆண்டுகளாக முயற்ச்சிசெய்து கொண்டிருக்கின்றேன். அது தொடர்ச்சியாக மாறிக்கொண்டே இருக்கின்றது. சிலர் இது ஒரு நாட்டின் பூகோள அமைவால் உருவாகும் அரசியல் என மிகவும் குறுகலான வரைவிலக்கணத்தைக் கொடுக்கின்றனர். அண்மைக் காலங்களாக நாம் கண்ணுக்குத் தெரியாத நச்சுக்கிருமி உலக அரசியலையும் பொருளாதாரத்தையும் ஆட்டிப்படைப்பதைப் பார்த்துக்கொண்டிருக்கின்றோம். அதனால் நச்சுக்கிருமிகள் புவிசார் அரசியலில் ஒரு காரணி எனச் சொல்வதை விட முடியாது. பெருந்தொற்று நோய்கள் பரவுவது அதிகரித்து வரும் நிலையில் நாடுகளுக்கிடையில் உள்ள மருத்துவ மற்றும் சுகாதார ஒத்துழைப்பு புவிசார் அர…
-
- 0 replies
- 518 views
-
-
நன்றி - யூரூப்
-
- 1 reply
- 517 views
-
-
http://content.epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2016-12-25#page-6
-
- 0 replies
- 517 views
-
-
இனத்துவக் கண்ணாடி மொஹமட் பாதுஷா / 2018 ஜூன் 15 வெள்ளிக்கிழமை, மு.ப. 06:50 Comments - 0 “நாங்கள் ஒருகாலத்தில் அப்படி இருந்தோம்; தமிழர்களும் முஸ்லிம்களும் ஒன்றாய் உடுத்துப் படுத்துறங்கி, ஒருதாய்ப் பிள்ளைகளாக இருந்தோம். ஆனால் இன்று எல்லாம் மாறிவிட்டன” என்று..... நமது பெற்றோரும் பாட்டிமாரும் ஒரு பெருமூச்சுடன் கதைசொல்லக் கேட்டிருக்கின்றோம். ஆனால், இப்போதெல்லாம் இனத்துவ உறவைப் புதுப்பித்தல் பற்றித் திரும்பத்திரும்பப் பேசுகின்ற தமிழ்-முஸ்லிம் சமூகங்கள், அரசியலால் தூண்டப்பட்ட இன, மத காரணங்களுக்காக, நல்லிணக்கம் பேசிப் பேசிப்பேசியே பகைப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள் என்பதே கசப்பாயினும் உண்மையும் நிகழ்கால அனுபவமுமாக இருக்கின்றது. இப்போது, நாடாளுமன்ற…
-
- 0 replies
- 517 views
-
-
40 வருடங்களாக உரிமை மறுக்கப்படும் பிரதேச செயலகம் லக்ஸ்மன் கிழக்கு மாகாணத்தில் சுமார் நான்கு தசாப்தங்களாக இயங்கி வரும் உப பிரதேச செயலகத்தை முழுமையான பிரதேச செயலகமாக மாற்றி அப்பகுதியில் பரம்பரையாக வாழும் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் நெருக்கடிகளில் இருந்து விடுவிக்குமாறு கோரி போராட்டம் ஒன்று மார்ச் 25ஆம் திகதி முதல் முன்னெடுக்கப்படுகின்றது. இதற்கு முன்னரும் பல தடவைகளில் போராட்டங்கள் நடைபெற்றிருக்கின்றன. அதனால் இதுவொன்றும் புதிதல்ல. அம்பாறை மாவட்டத்தின் கல்முனை வடக்கு உப பிரதேச செயலகம், முழுமையான பிரதேச செயலகமாக தரமுயர்த்தப்படாத காரணத்தினால், அப்பிரதேசத்தில் வாழும் தமிழர்கள் பல பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றனர். கல்முனை வடக்கு (தமிழ் பிரிவு) பிரதேச …
-
- 0 replies
- 517 views
-
-
விக்னேஸ்வரனை ஏன் பலப்படுத்த வேண்டும்? நிலாந்தன் கடந்த வாரம் நடந்து முடிந்த கம்பன் விழாவில் வடக்கிலுள்ள கணிசமான அரசியல்வாதிகளையும் துறைசார் படிப்பாளிகளையும் காணமுடிந்தது. மாகாணசபைக்குள் கீரியும் பாம்புமாகக் காணப்படும் அரசியல்வாதிகள் பலரும் கம்பன் விழாவில் முன்வரிசையில் காணப்பட்டார்கள் . அவர்கள் மட்டுமல்ல விக்னேஸ்வரனின் தலையைச் சுற்றி ஒளிவட்டத்தை வரையும் ஒரு பத்திரிகாதிபரும் விக்னேஸ்வரன் எங்கே பிழைவிடுவார் என்று கண்டுபிடிக்க காத்திருக்கும் மற்றொரு பத்திரிகாதிபரும் கூட கம்பன் விழாவில் காணப்பட்டார்கள். விழாவின் இறுதிநாள் உரைநிகழ்த்திய கம்பன் கழக நிறுவுனர் ஜெயராஜ் பின்வரும் தொனிப்பட உரையாற்றியிருந்தார் ‘இங்கே மாகாணசபை உறுப்பினர்களைக் கண்டபோது இ…
-
- 0 replies
- 517 views
-
-
கட்சிப் பெயர்களும் இனவாதமும் -என்.கே. அஷோக்பரன் இனம், மதம் ஆகியவற்றின் பெயர்களைத் தன்னகத்தே கொண்ட அரசியல் கட்சிகளை, இனிப் பதிவுசெய்ய மாட்டோம் என்று, இலங்கையின் தேர்தல் ஆணைக்குழு, அண்மையில் அறிவித்திருந்ததாகச் செய்திக் குறிப்புகள் தெரிவிக்கின்றன. இவ்வாறு செய்வதற்குத் தேர்தல் ஆணைக்குழுவுக்குச் சட்ட அதிகாரம் இருக்கிறதா என்ற கேள்வி ஒருபுறமிருக்க, இனவாதம் அல்லது மதவாதம் அல்லது இன-மைய அரசியலை மாற்றியமைக்க, கட்சியின் பெயரில் குறித்த இன, அல்லது மதப் பெயரை இல்லாதொழிப்பதுதான் முதற்படி என்ற சிந்தனை ஒன்றில், அறியாமையின் விளைவு; அல்லது, அது வேறுகாரணங்களுக்காக முன்னெடுக்கப்பட்ட ஒன்றாகத்தான் பார்க்க வேண்டியுள்ளது. இலங்கையில் பேரினவாதத்தைத் தோற்றுவித்த பெருந்தேசி…
-
- 0 replies
- 517 views
-
-
EPRLF: கற்றுக் கொள்ளவும் பெற்றுக் கொள்ளவும் June 5, 2024 — கருணாகரன் — சாகஸப்பயணம் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ள கட்சிகளையும் அவற்றின் வேட்பாளர்களையும் விட உச்சப் பரபரப்பில் (கிறுகிறுப்பில்) ஈடுபட்டிருப்பது தமிழ்த்தரப்பேயாகும். தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி தேர்தலைப் புறக்கணிக்கும்படி தன்னுடைய பரப்புரையை ஆரம்பித்து விட்டது. இதற்கான தலைமையில் துண்டுப் பிரசுரங்களை அதனுடைய செயலாளர் செல்வராஜா கஜேந்திரனின் அணி விநியோகிக்கத் தொடங்கி விட்டது. இதற்கு மாறாகத் தமிழ்ப்பொது வேட்பாளரை நிறுத்தவேண்டும் என்ற முன்மொழிவைச் செய்த EPRLF, பசி தூக்கமெல்லாவற்றையும் தூக்கியெறிந்து விட்டுத் தானெடுத்த தடியை எப்படியாவது நட்டு விட வேண்டும் என்று தவித்துக் கொண்…
-
- 0 replies
- 517 views
-
-
இரண்டு மே-18களும், மக்கள் ஆணையும் -- வளவன் 25 செப்டம்பர் 2013 (மிதவாதத்திலிருந்து தீவிரவாதத்திற்கும் தீவிரவாதத்திலிருந்து மிதவாதத்திற்கும்) தமிழர் தேசிய விடுதலைக்கான முப்பது வருட கால சாத்வீகப்போராட்டத்தின் நிறைவுக்கட்டத்தில் 1976 மே 14 ம் திகதி வட்டுக்கோட்டையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு 1977 தேர்தலில் ' ஈழத்தமிழர்களின் அரசியல் இலக்கு தனிவேறான தமிழீழ அரசு ' என்பதை ஆணித்தரமாக எடுத்தியம்பும் மக்களாணை பெறப்பட்டது. இலங்கைத் தீவின் வடக்கு, கிழக்கு மாகாணங்களை உள்ளடக்கிய பாரம்பரிய, சுதந்திரம் மற்றும் இறையாண்மை கொண்ட தமிழர் தாயகம் வேண்டும். அதில் ஒரு தேசிய இனமாக தமிழரின் அரசியல் இலக்கை அவர்களே தீர்மானித்துக் கொள்ளும் தன்னாட்சி உரிமை வேண்டும் என்ற தீர்மானத்தின் சாரம் …
-
- 0 replies
- 517 views
-
-
இருண்ட சூனியவெளிக்குள் அரசாங்கம் நீதி மற்றும் புத்தசாசன அமைச்சராக பதவி வகித்து வந்த விஜயதாச ராஜபக்ஷ, கடந்த வாரம் பதவி விலகியிருக்கின்றார். அமைச்சரவைக் கூட்டுப் பொறுப்புகளை அவர் தொடர்ந்தும் மீறி வருகின்றார் என்கிற குற்றச்சாட்டுகளை முன்வைத்தே, அவரை பதவி விலக்குமாறு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் ஐக்கிய தேசியக் கட்சி பரிந்துரைத்தது. தான் அங்கம் வகிக்கும் கட்சியே, தன்னை பதவி நீக்குமாறு பரிந்துரைத்தமை தொடர்பில், விஜயதாச ராஜபக்ஷ ஊடகங்களிடம் பெரும் சங்கடங்களை எதிர்கொள்ள வேண்டி ஏற்பட்டது. மற்றப்படி, தான் தனி ஆவர்த்தனம் செய்து வந்தமை தொடர்பில் அவர் வெளிப்படையாகவே இருந்தார். மறைமுகமாக பெருமையாகவும் உணர்ந்தார். மஹ…
-
- 0 replies
- 517 views
-
-
DEAR Mr RANIL PRISE OF THE SUPPORT IS JUSTICE. திரு ரணில் அவர்களே ஆதரவின் விலை நீதி . OPEN LATTER TO RANIL WICKREMESINGHE FOR REQUEST HIM TO STOP BLOCKING THE RELEASE OF THE TAMIL POLITICAL PRISSINESS. 2. STOP BLOCKING THE RELEASE OF THE LANDS BELONG TO TAMILS AND MUSLIMS UNDER THE OCCUPATIONS OF THE STATE MACHINERY INCLUDING MILITARY. 3. STOP HIDING THE INFORMATION ABOUT MISSING THE TAMIL AND SINHALESE PEOPLE. PLEASE DO THE JUSTICE BEFORE ASKING SUPPORT. தமிழரின் ஆதரவை கோரும் திரு ரணில் விக்கிரமசிங்கவுக்கு பின்வரும் கோரிக்கைகளை வலியுறுத்தி திறந்த கடிதம். . கோரிக்கைகள். 1.தமிழ் அரசியல் கைதிகள் வி…
-
- 0 replies
- 517 views
-
-
“இலவச கல்வி தருகிறார்கள். மகா பொல புலமை பரிசில் பணம் தருகிறார்கள். தின்னும் நிவாரண அரிசியிலிருந்து அனைத்தையும் இலவசமாக தரும் சிறிங்கா அரசாங்கத்தினை எதிர்க்கவும் புறக்கணிக்கவும் பிரசாரம் செய்துகொண்டு வெளிநாட்டிலிருக்கும் உங்களுக்கு தாயத்திலுள்ள மக்களின் யதார்த்தநிலை பற்றி என்ன தெரியும்” தாயகத்தின் நிலமை குறித்தும் தாயகத்தின் விடுதலை குறித்தும் இறுக்கமாக நடக்கும்; விவாதங்களின் நீட்சியில் புலம்பெயர்ந்துவாழும் தமிழ்மக்களின் வாயை அடைப்பதற்காக எதிர்தரப்பினால் முன்வைக்கப்படும் ஒற்றை வாக்கியம் இதுவாகும். இந்த ‘எதிர்த்தரப்பு’ அநேக தருணங்களில் தாயகத்திலிருந்து பேசும் குரலாக இருப்பதே இல்லை. மாறாக, தாயக மக்களுக்காக கரிசனைப்படுவதுபோன்ற போர்வையில் புலம்பெயர்ந்த மண்ணிலேயே இருந்துகொ…
-
- 5 replies
- 517 views
-
-
இனக்கலப்பு நல்லிணக்கத்திற்கான உத்தியா? நிருபா குணசேகரலிங்கம்:- 28 பெப்ரவரி 2016 இனக் கலப்புத் திருமணங்கள் நல்லிணக்கத்திற்கான வழிமுறை என வடக்கிற்கான புதிய ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார். அவர், தனது பதவியேற்பின் பின் ஆற்றிய கன்னிப் பேச்சு ஒன்றில் இவ்வாறு தெரிவித்திருக்கின்றமை பலரது கவனத்தினையும் ஈர்த்துள்ளது. இது தமிழ் மக்களிடத்தில் ஓருவகை சலனத்தினை ஏற்படுத்தியுள்ளது. ஆளுநரின் இவ் உரைக்கான பதிலளிப்புக்கள்; அரசியல் மட்டத்திலும் சமூக மட்டத்திலும் கிளம்பியிருந்ததனை அவதானிக்க முடிகின்றது. இவ்வாறானதோர் சூழ்நிலையில் இன நல்லிணக்கமும் கலப்புத் திருமணமும் என்ற சிந்தனை ஓர் அரசியல் தீர்வை எதிர்பார்த்து பயணிக்கும் இலங்…
-
- 0 replies
- 517 views
-
-
ஐ.நா வரைபு: ‘ஆப்பிழுத்த குரங்கு’கள் தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ இப்போது ஜெனீவாவில் நடைபெற்று வருகின்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46ஆவது அமர்வுகளில், இலங்கையும் பேசுபொருளாக உள்ளது. இதை மையப்படுத்தி நடக்கும் ஆர்ப்பரிப்புகள், ‘ஆப்பிழுத்த குரங்கு’களை நினைவூட்டுகின்றன. குறிப்பாக, ஈழத்தமிழ் அரசியலைத் தங்கள் சட்டைப்பைக்குள் வைத்திருக்கிறோம் என்று நினைத்துக் கொண்டிருக்கும் ‘புலம்பெயர் புத்திசாலி’களை நினைக்கும் போது, சிரிக்காமல் இருக்க முடியவில்லை. இலங்கை அரசாங்கம், மேற்குலக நாடுகளுடனும் இந்தியாவுடனும் மோதல் போக்கைக் கடைப்பிடிக்கிறது. ஏற்கெனவே, இலங்கை அரசாங்கம் ஏற்று அனுசரணை வழங்கிய ஐ.நா தீர்மானத்தை நடைமுறைப்படுத்தவில்லை. எனவே இம்முறை, இலங்கைக்கு எத…
-
- 0 replies
- 517 views
-