அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9213 topics in this forum
-
அடுத்த ஜனாதிபதி: அதிகாரமும் வகிபாகமும் என்.கே. அஷோக்பரன் / 2019 நவம்பர் 11 அத்துடன், தன்னுடைய அமைச்சரவையில் ஊழல் மோசடியில் ஈடுபட்டவர்கள் இணைத்துக்கொள்ளப்பட மாட்டார்கள் எனவும் இயன்றவரைவில் விரைவாகப் பொதுத்தேர்தலை நடத்தி, ஸ்திரமான புதிய அரசாங்கம் ஒன்றை ஸ்தாபிப்பதற்கு, நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்திருந்தமை, பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. குறிப்பாக, இது ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், தற்போதைய பிரதமருமான ரணில் விக்கிரமசிங்கவைக் குறிவைத்துத் தெரிவிக்கப்பட்ட கருத்து என்ற பேச்சுப் பரவலாக உணரப்பட்டது. சஜித் பிரேமதாஸ வெற்றி பெற்றால், ரணில் விக்கிரமசிங்க பிரதமராகத் தொடர்வது தொடர்பில், தற்போது நிச்சயமற்றநிலை உருவாகியுள்ளது. ஒருபுறத்தில், ரணில…
-
- 0 replies
- 459 views
-
-
அடுத்த தேர்தலில் தமிழர்கள் என்.கே. அஷோக்பரன் / 2020 பெப்ரவரி 24 இன்னொரு நாடாளுமன்றத்தின் பதவிக்காலம், நிறைவுக்கு வருகின்றது என்று எதிர்பார்க்கலாம். ஆளும் அரசாங்கத்துக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லாத நிலையில், ஜனாதிபதிக்கு நாடாளுமன்றத்தைத் தனது விருப்பின்படி கலைக்கக்கூடிய அதிகாரம், நாடாளுமன்றத்தின் பதவிகாலத்தில், நான்கரை வருடங்கள் பூர்த்தியானதன் பின்னரே வரும் என்ற அடிப்படையில், மார்ச் மாதத்தில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவால் இந்த நாடாளுமன்றத்தைக் கலைக்க முடியும். அதன் மூலம், பொதுத் தேர்தலைச் சந்தித்து, நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை, முடிந்தால் மூன்றிலிரண்டு பெரும்பான்மையைப் பெற்றுக்கொள்வதே, ராஜபக்ஷக்களின் நிச்சயமான திட்டம் என்பதில் ஐயமேது…
-
- 3 replies
- 675 views
-
-
அடுத்த பிறவியில் நான் ஒரு சிங்களவராக பிறக்க விரும்புகிறேன் இந்த பிறந்த நாளில், இதற்கு முன் நான் கடந்து வந்த பிறந்த நாட்களில் தோன்றாத ஒரு விருப்பம் எனக்குள் தோன்றுகிறது. அடுத்த பிறவியில் நான் ஒரு இலங்கையிலே ஒரு சிங்களவராக பிறக்க வேண்டும். தென் மாகாணத்தில், சிங்களம் மட்டுமே பேசும் ஒரு கடும் சிங்கள குக்கிராமத்து குடும்பத்தில் பிறக்க வேண்டும் என விரும்புகிறேன். இதற்கான காரணங்களை நான் பகிரங்கமாக கூற விருபவில்லை. ஆனால், இதன் அர்த்தம் எனக்கு தமிழ் மீது வெறுப்பு என்பதல்ல. என் தாய் தமிழ் மீது எனக்கு தீராத பற்று இருக்கிறது. நான், மாணவ பருவத்தில் இருந்து தமிழ் மொழியில் கையெழுத்திடும் தமிழன். தமிழ் திமிர் கொண்ட எனக்கு ஒரு போதும் உடல் களைப்பு ஏற்படுவதில்லை. ஒவ…
-
- 0 replies
- 480 views
-
-
அடுத்த மாதத்திற்குள் எரிபொருள் பிரச்சினையை நிச்சயமாக எம்மால் சமாளிக்கமுடியும் -பிரதமர் ரணில் கூறுகிறார் “நான் சவாலொன்றை எடுத்துக் கொண்டுள் ளேன் , அது எங்கு முடிவடைகின்றது என்று பார்ப்போம். ஆனால் நான் கட்சியில் ஒருவராக இருப்பது பலமென்றும் , பலவீனம் அல்ல என்றும் எப்போதும், நினைத்தேன். எதிர்க்கட்சி அல்லது அரசாங்கத்தில் உள்ள எவருடனும் சமாளிக்கலாம். எவருக்கும் அச்சுறுத்தலாக இல்லை, தொடரமுடியும் .”- பிரதமர் ரணில் விக்கிரமசிங்க 0000000000000 நெருக்கடி தொடர்பாக இடைவிடாத அரசாங்…
-
- 0 replies
- 411 views
-
-
அடுத்த முதலமைச்சராகவும் விக்னேஸ்வரன் வரவேண்டுமா? ‘வடக்கு மாகாண சபைக்கான முதலமைச்சருக்கான விண்ணப்பம் மக்களினால் கோரப்பட்டுள்ளது. அடிப்படைத் தகுதி: அரச உயர் பதவி ஒன்றில் இருந்து ஓய்வு பெற்றவர் விரும்பத்தக்கது. தமது பதவிக்காலத்தில் மக்களின் உணர்வுகளை மதிக்காதவர்கள், அரச இயந்திரத்திற்கு ஒத்து ஊதியவர்கள் விரும்பத்தக்கது. இவர்கள் பிறந்தது, கல்வி கற்றது மற்றும் நிரந்தர வசிப்பிடம் வடக்கு மாகாணத்தின் எப்பகுதியிலாயினும் இருத்தல் ஆகாது. இவரிற்கு கடந்த காலங்களில் பங்கர் வெட்டுதல், ஊர்வலங்கள், இடப் பெயர்வுகள், பாண், அரிசி என்பவற்றிற்கு வரிசையில் நின்றிருத்தல், சைக்கிளில் பயணம் செய்திருத்தல், மண்ணெண்ணெய் மற்றும் செக்கில் ஊற்றிய தேங்காய் எண்ணெயில் கல்வி …
-
- 0 replies
- 601 views
-
-
அடுத்த முதல்வரும் விக்னேஸ்வரன்தானா? யதீந்திரா சில தினங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் இந்தியத் துணைத் தூதுவர் நடராஜனின் பிரியாவிடை விருந்துபசாரம் இடம்பெற்றிருந்தது. இதில் வழமைபோல் அரசியல் தலைவர்களும் ஏனைய பிரமுகர்களும் பங்குகொண்டிருந்தனர். இதன்போது நடராஜன் தெரிவித்திருந்த ஒரு அபிப்பிராயம் அங்கிருந்த கூட்டமைப்பின் தலைவர்கள் உட்பட ஏனையவர்கள் மத்தியிலும் முணுமுணுப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்தியாவின் உதவியுடன் நிர்மாணிக்கப்பட்டுவரும் கலாசார மண்டபம் அடுத்த ஆண்டு நிறைவடையும், அதன் திறப்பு விழாவின் போது பார்வையாளர் வரிசையில் நானும் இருப்பேன். அப்போதும் வடக்கு மாகாண முதலமைச்சராக விக்னேஸ்வரன் அவர்களே அதனை திறந்து வைப்பார் என்று நடராஜன் கூறிய விடயம்தான் மேற்படி முணுமுணுப்ப…
-
- 0 replies
- 426 views
-
-
அடுத்த வருடம் பெப்ரவரிக்குள் இனப்பிரச்சினைக்கான தீர்வு? என்.கே அஷோக்பரன் Twitter: @nkashokbharan நவம்பர் மாதம் 10ஆம் திகதி, பாராளுமன்றத்தில் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, “இலங்கையின் உள்விவகாரங்களில், வெளியார் தலையீடு தேவையில்லை. நாட்டின் தமிழ் சிறுபான்மையினர் எதிர்நோக்கும் நிலுவையில் உள்ள சில பிரச்சினைகளைத் தீர்ப்பது தொடர்பில், அடுத்த வாரம் பேச்சுவார்த்தை நடத்த, சிறுபான்மையின கட்சியினருக்கு அழைப்பு விடுத்துள்ளேன்” எனத் தெரிவித்திருந்தார். “அடுத்த வாரம் பேச்சுவார்த்தை நடத்தி, 75ஆவது சுதந்திர தினத்துக்கு முன்னர் நிலுவையில் உள்ள அனைத்துப் பிரச்சினைகளையும் தீர்த்து வைப்பதற்கு, நான் உங்கள் அனைவரையும் அழைக்கிறேன்” என்று நாடாளுமன்றத்தில் உரையாற்றி…
-
- 1 reply
- 792 views
-
-
-
அடுத்து என்ன செய்யப் போகிறார் இலங்கை ஜனாதிபதி சிறிசேன? பகிர்க படத்தின் காப்புரிமைISHARA S. KODIKARA இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனக்கு எதிராக ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களால் முன்வைக்கப்படுகின்ற கடுமையான விமர்சனங்கள் குறித்து கோபமடைந்திருக்கும் நிலையில், கடந்த வாரம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்த சம்பவம் தேசிய ஐக்கிய அரசாங்கத்தின் பிரதான பங்காளிக் கட்சிகளிடையே கூர்மையடைந்து வருகின்ற முரண்பாடுகளை வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறது. அமைச்சரவைக்கு தலைமை தாங்குகிற ஜனாதிபதி வெளியில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களின் பேச்சுக்களை ஆட்சேபித்து கூட்டத்தில் இ…
-
- 0 replies
- 332 views
-
-
அடுத்து ஜனாதிபதித் தேர்தல்? என்.கே.அஷோக்பரன் Twitter: @nkashokbharan உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடாத்து நடாத்து என்று கதறிக்கொண்டிருந்த எதிர்க்கட்சிகளெல்லாம், சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கான நீட்டிக்கப்பட்ட நிதி வசதியை அங்கீகரித்ததன் பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பற்றிப் பேசுவதைக் குறைத்துக்கொண்டன. இலங்கையின் பெற்றோலியச் சந்தைக்குள் போட்டியை ஊக்குவிப்பதற்காக ஏனைய போட்டியாளர்களை உள்ளீர்க்க அமைச்சரவை எடுத்துக்கொண்ட தீர்மானத்தினை எதிர்த்து, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபன ஊழியர்கள் முன்னெடுத்த வேலைநிறுத்தமும் படுதோல்வியில் முடிந்திருக்கிறது. எரிபொருள் விலை கணிசமாகக் குறைக்கப்பட்டது. எரிவாயு விலையும் ஆயிரம் ரூபாயால் குறைக்கப்பட்டது. த…
-
- 1 reply
- 919 views
-
-
அடுத்து நடக்கப்போவது என்ன? சில மாதங்களாக அரசியல் ரீதியாகப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த உள்ளூராட்சித் தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது. இந்தப் பத்தி வெளிவரும் போது, பெரும்பாலும் யாருக்கு வெற்றி -யாருக்குத் தோல்வி என்பது தெரியவந்திருக்கும். பலமுனைப் போட்டி நிலவிய உள்ளூராட்சித் தேர்தலில், வடக்கிலும், கிழக்கிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே பிரதான போட்டியாளராக எல்லாக் கட்சிகளுக்கும் இருந்தது. ஏற்கனவே நடந்த பாராளுமன்ற, மாகாணசபைத் தேர்தல்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில், உள்ளூராட்சித் தேர்தலிலும் பலமான தரப்பாகவும், பிரதான அரசியல் சக்திய…
-
- 1 reply
- 514 views
-
-
அடுப்படியில் தேடப்படும் ’யானை’ முகம்மது தம்பி மரைக்கார் 'யானை காணாமல் போனால், அடுப்படியில் தேடக் கூடாது' என்கிற பழமொழியொன்றுஉள்ளது. ஆனால், முஸ்லிம் சமூகம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைக்கையாள்வதில், முஸ்லிம் அரசியல் தலைவர்களில் அதிகமானோரின் செயற்பாடுகளைக்காணும்போது, அவர்கள், 'அடுப்படியில்தான் யானையைத் தேடுகிறார்களோ'என்றுதான் எண்ணத் தோன்றுகிறது. ஆண்டாண்டு காலமாக, ஆட்சியாளர்களுக்கு எதிரான அரசியல் செயற்பாடுகளைமுன்னெடுத்து வந்த, தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் கூட, கோட்டாப…
-
- 0 replies
- 779 views
-
-
அடை காத்த முட்டை- கூழ் காரை துர்க்கா / 2018 ஒக்டோபர் 30 செவ்வாய்க்கிழமை, மு.ப. 07:18 Comments - 0 தமிழ் மக்களால் கொண்டாடப்படும் பண்டிகைகளில், தீபாவளிக்குத் தனி இடம் உண்டு. இருள் நீங்(க்)கி, ஒளி ஏற்றும் நாளாக தீபாவளி கொண்டாடப்படுகின்றது. இவ்வாறான நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், இலங்கையின் இனப் பிரச்சினைக்கான தீர்வு, 2016 தீபாவளிக்குள் வரும் என்றும், பின்னர் 2017 தீபாவளிக்குள் வரும் எனக் காலக்கெடுக்களை, தமிழ் மக்களுக்கு வழங்கியிருந்தார். அவர் ஏன், தீபாவளியை மய்யப்படுத்தி காலக்கெடுக்களை வழங்கினாரோ தெரியவில்லை. ஆனால், இவ்வாறாகத் தீர்வுகளைத் தரும் என, சம்பந்தன் நம்பியிருந்த நல்லாட்சி, 2018 தீபாவளிக்க…
-
- 0 replies
- 912 views
-
-
அடையாளங்களும் அரசியலும் அர்த்தங்களும் என்.கே. அஷோக்பரன் / 2019 டிசெம்பர் 02 அடையாளங்கள் என்பவை, ஒழுங்கமைக்கப்பட்ட மனித வாழ்க்கையின் மிக முக்கிய மய்ய அம்சங்கள் எனலாம். ஒழுங்கமைக்கப்பட்ட மதம், அரசாங்கம், நாடு, அமைப்பு ஆகியவற்றின் சின்னங்கள், கொடிகள், துதிப்பாடல்கள், நிறங்கள், ஸ்தலங்கள் போன்றவை மேலோட்டமாகப் பார்ப்பின், வெறும் சம்பிரதாயபூர்வமானவையாகத் தெரிந்தாலும், மேலோட்டமாக உணரமுடியாத ஆழமான முக்கியத்துவம் அவற்றுக்கு உண்டு. சிக்கலான நிகழ்வுகளை, எளிமையாகவும் தெளிவாகவும் காண்பிப்பதில், அவை ஓர் அத்தியாவசிய சேவையைச் செய்வதே, இதற்குக் காரணமாகும். அவை, எளிமையான வடிவத்தில், சிக்கலான எண்ணக்கருக்களைக் குறித்து நிற்கின்றன. மிகவும் சிக்கலானதோர் எண்ணக்க…
-
- 0 replies
- 416 views
-
-
அட்சய பாத்திரம் எப்படிப் பிச்சைப் பாத்திரமானது? அண்மையில், வவுனியாவில் வசிக்கும் நண்பர் வீட்டுக்குச் செல்ல வேண்டிய தேவை எழுந்தது. அங்கு சென்றபோது, தரம் ஒன்றில் கல்வி கற்கும் தனது மகனுக்கு, அவர் படிப்பித்துக் கொண்டு இருந்தார். மகன், பாடசாலையில் ‘எங்கள் வீடு’ பற்றி மனப்பாடம் செய்து ஒப்புவிக்க வேண்டும். அதையே அவர் சொல்லிக் கொடுத்துக்கொண்டிருந்தார். “எங்கள் வீடு, பண்டாரிக்குளம் வவுனியாவில் அமைந்து உள்ளது. எங்கள் வீடு அழகானது. எங்கள் வீட்டுக்கு வருவோரை நாங்கள் அன்புடன் வரவேற்போம். எங்கள் வீட்டில் நாங்கள் ஒற்றுமையாக வாழ்கின்றோம். எனது வீட்டை நான் விரும்புகின்றேன்” என்றவாறாக இருந்தன. இவ்வாறான உய…
-
- 0 replies
- 437 views
-
-
[size=4]நேற்று சண்டே ரைம்ஸ் எழுதியிருந்த ஆசிரிய தலையங்கம் தமிழில் தரப்படுகின்றது. இரண்டு மாதங்களுக்கு முன்னர் பிரிட்டிஷ் மகாராணியின் வைரவிழாவில் கலந்துகொண்டு தமது நல்லெண்ணத்தை வெளிப்படுத்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ லண்டனுக்குச் சென்றிருந்தார். அதையடுத்து அவர் முகத்தில் அறைந்தது போல் பிரிட்டிஷ் பிரஜைகளை இலங்கைக்குச் செல்ல வேண்டாம் என்று அந்த அரசு ஆலோசனை வழங்கும் அறிவித்தல் வந்தது.[/size] [size=2] [size=4]அணி சேரா நாடுகள் (நாம்) அமைப்பானது உச்சி மாநாடுகள் நடக்கும் காலங்களைத் தவிர மற்றைய காலங்களில் எதுவித சலசலப்பையும் காட்டிக் கொள்வதைக் காணமுடிவதில்லை. [/size][/size] [size=2] [size=4]அவ்வாறுதான் ஈரானிய தலைநகர் தெஹ்ரானில் இப்பொழுது அதன் பிந்திய உச்சிமாநாடு நடந்…
-
- 0 replies
- 932 views
-
-
அணிசேரா இயக்கம் புதிய திசையை நோக்கி பயணிக்குமா? உலக வல்லரசுகளான ஐக்கிய அமெரிக்காவும் சோவியத் ரஷ்யாவும் அரசியல், இராணுவ, பொருளாதார, விஞ்ஞான துறைகளில் ஜாம்பவான்களாக விளங்கிய காலகட்டத்தில் அபிவிருத்தியடைந்துவரும் மூன்றாம் உலக நாடுகள் குறிப்பாக ஆசிய, ஆபிரிக்க, இலத்தீன் அமெரிக்க நாடுகள் வல்லரசுகளின் ஆதிக்கத்தினால் ஏற்பட்ட பாதக நிலைமைகளைக் கருத்திற்கொண்டன. நேரடியாக இரு வல்லரசுகளின் நிகழ்ச்சி நிரலுடன் இணையாமல் மூன்றாவது அணியாக சர்வதேச மேடைகளில் பல நாடுகளினைக் கொண்ட ஒரு அணி உருவாக வேண்டுமென்ற வேட்கையில் இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு, இந்தோனேசிய ஜனாதிபதி சுகர்ணோ, எகிப்திய ஜன…
-
- 0 replies
- 4.5k views
-
-
அணில் கட்டிய பாலமும் ரணில் கட்டாத பாலமும் ? - நிலாந்தன்! adminJuly 30, 2023 ரணில் விக்கிரமசிங்கவின் இந்திய விஜயத்தைத் தொடர்ந்து இரண்டு நாடுகளுக்கும் இடையிலான பிணைப்பு திட்டங்கள் மேலும் விரிவுபடுத்தப்பட்டிருக்கின்றன. ஏற்கனவே பலாலியிலிருந்து மீனம்பாக்கத்திற்கும், காங்கேசன்துறையில் இருந்து தமிழ்நாட்டுக்கும், மன்னாரியிலிருந்து தமிழ்நாட்டுக்கும் என மூன்று திட்டங்கள் யோசிக்கப்பட்டன. இந்தக் கடல் வழிப்பிணைப்பு, வான்வழிப் பிணைப்பு, என்பவற்றோடு, தரை வழியாக ஒரு பாலத்தை கட்டுவது குறித்தும் பரிசீலிக்கப்படுகிறது. இவைதவிர ரணிலின் விஜயத்தின் பின்னணியில் இந்திய வெளியுறவுச் செயலர் தெரிவித்த கருத்துக்களின்படி கடல் வழி, வான்வழி, தரைவழிப் பிணைப்புகளோடு வர்த்தகப் பிணைப்பு, எரிசக்த…
-
- 0 replies
- 470 views
-
-
அணுகுமுறையில் மாற்றம் அவசியம்! http://www.virakesari.lk/
-
- 0 replies
- 321 views
-
-
அணையா விளக்கு: யுரியூப்பர்களும் தமிழ் அரசியல்வாதிகளும் – நிலாந்தன். செம்மணியில் ஏற்பாடு செய்யப்பட்ட அணையா விளக்கு போராட்டமானது ஐநா மனித உரிமைகள் ஆணையாளரின் கவனத்தை ஈர்ப்பதில் வெற்றியைப் பெற்றிருக்கிறது.ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் சித்துப்பாத்தி மயானத்துக்குத்தான் வருகைதர இருந்தார். அவரை அணையா விளக்கை நோக்கி வர வைத்தது கட்சி சாராத மக்கள் திரட்சிதான். சிவில் சமூகங்கள் தான். ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் அணையா விளக்கை வணங்கியதும், அங்கே மக்கள் தங்களுடைய கோரிக்கைகளை முன் வைத்ததும் அடிப்படை வெற்றிகள்தான். அதேசமயம் கட்சி கடந்த அந்தப் போராட்டத்தில் எல்லாக் கட்சிகளையும் ஒரு மையத்தில் குவித்ததும் வெற்றிதான்.அதைவிட முக்கியமாக,அந்தப் போராட்டத்தை நோக்கி தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற …
-
-
- 4 replies
- 413 views
- 1 follower
-
-
அண்ணனின் குசினியும் தம்பியின் குப்பையும் வெற்றுக் கடதாசியும் அண்ணனின் குசினியும் தம்பியின் குப்பையும் வெற்றுக் கடதாசியும் நாடோடி புத்தாண்டுக்குப் பின்னர், ஜனவரி 18ஆம் திகதியன்று இடம்பெற்ற இரண்டு சம்பவங்கள், கொழும்பு அரசியலில் பேசும் பொருளாகியது. ஒன்று, ஒன்பதாவது பாராளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத்தொடரை ஆரம்பித்து வைத்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆற்றிய அக்கிராசன உரை. மற்றொன்று, தமிழ்பேசும் கட்சிகளால் நீண்ட இழுபறிக்குப் பின்னர் தயாரிக்கப்பட்டு கையொப்பமிடப்பட்டு, இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்பவதற்காக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேயிடம் கையளிக்கப்பட்ட கடிதமாகும். இலங்கை அரசியலமைப்பில் உள்ள 13ஆவது திருத்தச் சட்டத்த…
-
- 0 replies
- 362 views
-
-
அண்ணா பல்கலைக்கழகத்தில் நால்வருணசாதியை வலியுறுத்தும் பகவத்கீதையைப் பாடமாக வைத்தது தவறு என்று கட்சித்தலைவர்கள் சொல்வது சரியா? பேராசிரியர் ந. கிருஷ்ணன், ம.சு.பல்கலைக்கழகம், திருநெல்வேலி. "பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால் சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு!" - பாவேந்தர் பாரதிதாசன் அண்ணா பல்கலைக்கழகம், பொறியியல் படிக்கும் மாணவர்களுக்கு இந்தாண்டு முதல் தத்துவவியல் படிப்பும், அதில் பகவத் கீதை பாடமும், சமஸ்கிருதமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக வெளியான செய்திகளுக்குத் தமிழக தலைவர்களும், சமூக வலைத்தளங்களில் மக்கள் பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். "சம்ஸ்கிருதம் மற்றும் பகவத்கீதையை கட்டாயப் பாடமாக இல்லாமல், விருப்பப் பாடமாக மாற்ற…
-
- 0 replies
- 1k views
-
-
அண்ணா ஹசாரே ஒரு தேசத் துரோகி என்றால்..? ஈழதேசம் பார்வையில்..! [size=3] ஆளும் கட்சியின் ஊழல் குறித்து யார் பேசினாலும் அவர்கள் தேசத் துரோகிகள் தான் என்கிறது காங்கிரஸ் பெருச்சாளிகள் கும்பல். காங்கிரஸ் கட்சியின் புதிய கொளகைப்படி, ஊழலுக்கு எதிராக யார் குரல் கொடுக்கிறார்களோ, யார் பேசுகிறார்களோ, ஊழலுக்கு எதிராக யார் போராடுகிறார்களோ..? அவர்கள் எல்லாம் தேசத் துரோகிகள் என்கிறார்கள். கூடங்குளம் அணு உலையை எதிர்த்து போராடிய உதயகுமார் தலைமையில் ஆன போராட்டக் குழுவை மட்டுமின்றி கிட்டத்தட்ட நூற்றுக்கும் மேற்பட்ட பொது மக்கள் மீது இது போன்றே தேசத் துரோக வழக்குகளை போட்டார்கள் காங்கிரஸ் ஆட்சியாளர்கள். அரசுக்கு எதிராக முற்றுகை, அரசின் கொள்கையை எதிர்த்தல் என்றெல்லாம் நேரடியாகவே…
-
- 0 replies
- 544 views
-
-
[size=4]"கருணாநிதி, ஜெயலலிதா அல்ல... வைகோ தான் என் சாய்ஸ்!" - குல்தீப் நய்யார்[/size] [size=4]ஆக்கம்: இரா.வினோத்[/size] [size=4]மகாத்மா காந்தி, முகமது அலி ஜின்னா, மவுன்ட் பேட்டன், மன்மோகன் சிங்... பத்திரிகையாளர் குல்தீப் நய்யாரின் கேள்விகளுக்குப் பதில் சொல்லாத தலைவர்களே இல்லை. இந்தியாவின் மிக மூத்த பத்திரிகையாளர். நேருவின் காதல் கடிதங்கள், லால்பகதூர் சாஸ்திரியின் மர்ம மரணம், இந்திரா காந்தியின் எமர்ஜென்சி ரகசியங்கள்... இந்தியாவைப் பரபரக்கவைத்த குல்தீப் நய்யாரின் சாம்பிள் 'ஸ்கூப்’கள் இவை. சமீபத்தில் பெங்களூரு வந்திருந்தவரிடம் பேட்டிக்கு நேரம் கேட்டபோது இரவு 9 மணிக்கு வரச் சொன்னார். ஓபராய் ஹோட்டலின் அறையில் 'பிரிட்டிஷ் இந்தியா’வில் துவங்கி 'ராகுல் இந்தியா’ வரை பேசி…
-
- 1 reply
- 1.9k views
-
-
அதாவுல்லாஹ்வுக்கு விழுந்த அடிமேல் அடி முகம்மது தம்பி மரைக்கார் வீடுகளுக்குள் அடைபட்டுக் கிடக்கிறது உலகம். அனைத்து ஒழுங்குகளையும் கொரோனா புரட்டிப் போட்டிருக்கிறது. நாடாளுமன்றத் தேர்தலொன்று, ஒத்தி வைக்கப்பட்டிருக்கும் புதியதோர் அனுபவத்தை, நாடு எதிர்கொண்டிருக்கிறது. உயிர் பற்றிய அச்சம், மக்களிடம் தொற்றிக் கொண்டுள்ளதால், அரசியல் பற்றிய பேச்சுகள் அமுங்கிப் போய் கிடக்கின்றன. ஆனாலும், ‘இதுவும் கடந்து போகும்’ என்கிற நம்பிக்கை, மக்களுக்கு இருக்கிறது. இப்போது ஏற்பட்டுள்ள கொரோனா தாக்கத்தை விடவும், பெரிய அழிவுகளையெல்…
-
- 0 replies
- 1k views
-