அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9226 topics in this forum
-
தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வும் இந்திய, அமெரிக்க ஆர்வங்களும் - யதீந்திரா தமிழ் மக்களின் பிரச்சனைகளுக்கான அரசியல் தீர்வு தொடர்பில் ஒவ்வொரு தரப்பினரும் தங்களின் விரும்பங்களுக்கேற்ப கருத்துக்களை வெளிப்படுத்தி வருகின்றனர். ஒரு தரப்பினர் இவ்வாறு கூறுகின்றனர் – தமிழ் மக்களுக்கான எந்தவொரு அரசியல் தீர்வும் 'திம்பு' கோட்பாடுகளின் அடிப்படையில் அமைந்திருக்க வேண்டும். திம்பு கோட்பாடுகள் என்றால் என்ன? ஒரு சில அரசியல் விமர்சகர்கள் மற்றும் அரசியல்வாதிகள் இதனை உச்சரித்துக் கொண்டாலும் கூட, இது தொடர்பில் ஏதேனும் புரிதல் தமிழ் சமூகத்தில் இருப்பதாக தெரியவில்லை. குறிப்பாக இன்றைய இளைய தலைமுறையினர் மத்தியில் இது தொடர்பில் ஏதும் தேடல்கள் இருப்பதாகவும் இப்பத்தி கற்பனை செய்…
-
- 0 replies
- 442 views
-
-
புதிய அரசமைப்பின் கனவும் அரசியல் தீர்வில் கபடமும் Editorial / 2019 ஓகஸ்ட் 08 வியாழக்கிழமை, பி.ப. 07:24 Comments - 0 2015ஆம் ஆண்டு, ஆட்சிமாற்றம் உருவாக்கிய மிகப்பெரிய நம்பிக்கைகளில் ஒன்று, தமிழ் மக்களுக்குத் தீர்வைத் தரக்கூடிய புதிய அரசமைப்பு ஆகும். ‘நல்லாட்சி அரசாங்கம்’ நல்லாட்சியைத் தராவிட்டாலும், தமிழர்களுக்கு நல்வாழ்வைத் தருவார்கள் என்று, தமிழ் அரசியல் தலைவர்கள் தொடர்ந்து கூறிவந்தார்கள். ‘தீபாவளிக்குள் தீர்வு, ‘பொங்கலுக்குள் புதிய அரசமைப்பு’ என்று ‘புலுடா’க்கள் தொடர்ந்தன. இன்று, புதிய அரசமைப்புக்கான வாய்ப்பு, முழுமையாக இல்லாது போய்விட்டது. புதிய அரசமைப்பின் சாத்தியமின்மையை, இலங்கை அரசியலைப் புரிந்தவர்கள், இலகுவாக அறிந்து கொள்வர். நல்ல…
-
- 0 replies
- 442 views
-
-
குண்டுச் சட்டிக்குள் ஓடும் தமிழ் அரசியல் குதிரைகள் நீங்கள் ‘விஐபி’யாக வேண்டுமா? யோசிக்காமல் அரசியலில் ஈடுபடுங்கள். அதிலும் போராட்டம், புரட்சி, காந்தி, காந்தியம், சேகுவேரா, பிடல், பிரபாகரன், புலிகள், தமிழ்த்தேசியம், சுயாட்சி, தனிநாடு, தமிழீழம், மாவீரர்கள், எரித்திரியா, தீபெத், கொசோவா என்று சில பெயர்ச் சொற்களைச் சொல்லத் தெரிந்து விட்டால்போதும்; உங்களுடைய காட்டில் மழைதான்....” என்று சொல்லிச் சிரிக்கிறார் நண்பர் ஒருவர். இந்த நண்பர், 28 ஆண்டுகள் போராளியாக இருந்தவர். அதிலும் விடுதலைப்புலிகள் அமைப்பில் 1980 களின் நடுப்பகுதியில் இணைந்து, 28 ஆண்டுகள் தொடர்ச்சியாகச் செயற்பட்டவர். போராட்டத்தின்போது, ஒரு காலை இழந்திருப்பவர். போரின் …
-
- 0 replies
- 442 views
-
-
"இலங்கை தமிழ் தலைமையின் கூத்து" [முரண்படும் தமிழ்த் தலைமைகள்] விவிலியத்தின் படி, வெள்ளப் பெருக்கிற்குப் பின் உலகம் முழுவதிலும் ஒரே மொழியும் ஒரே விதமான சொற்களும் இருந்தன. மனிதர்கள் கிழக்கிலிருந்து வந்து, சினயார் [Shinar] சமவெளியில் குடியேறினர். அப்பொழுது அவர்கள், ″வாருங்கள், உலகம் முழுவதும் நாம் சிதறுண்டு போகாத படி வானளாவிய கோபுரம் கொண்ட நகர் ஒன்றை நமக்காகக் கட்டி எழுப்பி [build a city and a tower tall enough to reach heaven], நமது பெயரை நிலை நாட்டுவோம்″ என்றனர். மானிடர் கட்டிக் கொண்டிருந்த நகரையும் கோபுரத்தையும் காண்பதற்கு ஆண்டவர் கீழே இறங்கி வந்தார். அப்பொழுது ஆண்டவர், ″இதோ! மக்கள் ஒன்றாக இருக்கின்றனர். அவர்கள் எ…
-
- 0 replies
- 442 views
-
-
பிள்ளையான் கைது ஏனைய தமிழ்க்கட்சிகளுக்கான எச்சரிக்கையா? April 22, 2025 — கருணாகரன் — “புலியைப் பிடிப்பதற்குப் பதிலாக எலியையா பிடித்து வீரம் பேசுகிறது NPP?” என்று கேட்கிறார்கள் பலரும். அவர்களுடைய கேள்வி நியாயமானதே! ஏனென்றால், தங்களிடம் “400 கோவைகள் உண்டு. நாட்டுக்குத் துரோகமிழைத்தவர்களும் ஊழல்வாதிகளும் குற்றவாளிகளும் தப்பவே முடியாது. அத்தனை குற்றச்சாட்டுகளுக்கும் தவறுகளுக்கும் ஆதாரம் உண்டு. நிச்சயமாக தவறிழைத்த அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். அத்தனைபேரும் தண்டிக்கப்படுவார்கள்..” என்று முழங்கியவர்கள் NPP யினர். அப்படி முழக்கமிட்டுத்தான் (நம்பிக்கையூட்டித்தான்) ஆட்சியைக் கைப்பற்றியது NPP. ஆனால், அதற்குப் பிறகு அவர்கள் சொன்னமாதிரி எதுவுமே நடக்கவில்லை. அத்தனை பெருச்சாள…
-
- 1 reply
- 442 views
-
-
அரசியலை ஆட்டிப்படைக்கும் ஜோதிடம் - கே.சஞ்சயன் இலங்கை அரசியலில் ஜோதிடத்தின் செல்வாக்கு அதிகமாகவே இருந்து வந்திருக்கிறது. அரசியல் மாற்றங்கள் நிகழும் போதும், தேர்தல்கள் நடத்தப்படும் காலங்களிலும் ஜோதிடர்களின் கணிப்புகள், குறிப்பாக சிங்கள ஊடகங்களில் அதிகளவில் இடம்பெறுவது வழக்கம். மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில், அவரது எல்லா நடவடிக்கைகளுமே ஜோதிட ஆலோசனைப்படிதான் செயற்படுத்தப்பட்டன. அந்த ஜோதிடக் கணிப்புதான் அவரது காலையும் வாரிவிட்டது. இப்போது, எதிர்காலத்தைச் சரியாகக் கணிக்கும் ஜோதிடர் என்று தன்னை தானே கூறிக்கொள்ளும், ஒருவர், சமூக வலைத்தளங்களில் பதிவேற்றியுள்ள ஜோதிடக் கணிப்பு வீடியோ ஒன்று, பரபரப்பை ஏற்ப…
-
- 0 replies
- 442 views
-
-
சவாலை எதிர்கொள்வதற்கு தயாராகும் அரசாங்கம் புதிய அரசியலமைப்பு பூர்வாங்க வரைவு நவம்பரில் வரவு- – செலவுத் திட்டம் மீதான விவாதம் நடைபெறுவதற்கு முன்னதாக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று அரசாங்கத்தலைவர்கள் கூறிக்கொண்டிருக்கிறார்கள். புதிய அரசியலமைப்பை நடைமுறைப்படுத்த வேண்டுமானால் சர்வஜன வாக்கெடுப்பொன்றில் மக்களின் அங்கீகாரத்தை அரசாங்கம் பெறவேண்டும். அத்தகைய வாக்கெடுப்பில் மக்கள் புதிய அரசியலமைப்பு வரைவை நிராகரிப்பார்களாக இருந்தால், அதுவே அரசாங்கத்தின் வாட்டர்லூவாக இருக்கலாம். புதிய அரசியலமைப்பின் பல்வேறு அம்சங்கள் குறித்தும்…
-
- 0 replies
- 442 views
-
-
அமித்ஷாவின் கூற்று – புரிந்துகொள்ளப்பட்டதும், புரிந்துகொள்ளப்படாததும். யதீந்திரா பாரதிய ஜனதா கட்சியின் இரண்டாம் நிலை தலைவரும், உள்துறை அமைச்சருமான, அமித்ஷா, தெரிவித்திருந்த கருத்துக்கள் பலரது கவனத்தை பெற்றிருந்தது. கடந்த மாதம் 27ம் திகதி, இராமேஸ்வரத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டமொன்றில், ஈழத் தமிழ் மக்கள் பெருந்தொகையில் கொல்லப்பட்டதாக, அமித்ஷா கூறியிருந்தார். பாரதிய ஜனதா கட்சி, ஈழத் தமிழ் மக்கள் மீது இனப்படுகொலை இடம்பெற்றதை ஏற்றுக்கொண்டிருப்பதாக, சிலர் இதற்கு விளக்கமளிக்க முற்பட்டனர். சிலரோ, இந்தியாவின் அணுகுமுறையில் மாற்றங்கள் ஏற்பட்டிருப்பதாக கூறமுற்பட்ட…
-
- 0 replies
- 442 views
-
-
தமிழ் மக்கள் பேரவையின் தோற்றமும் இருப்பும் : மறைக்கப்படும் உண்மைகள்! 11/23/2016 இனியொரு... தமிழ் மக்கள் பேரவையின் பத்திரிகையாளர் மாநாடு கொழும்பில் நேற்று 22/11/16 அன்று நடைபெற்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றவாத அரசியல் தலைமை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ள வெற்றிடத்தைப் பிரதியிடுவதற்கு முனைந்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தோல்வியடைந்த போது அதற்கு மாற்றாகத் தோற்றுவிக்கப்பட்டதே தமிழ் மக்கள் பேரவை. ஜேர்மனியில் புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புக்கள், தமது அரசியல் பினாமிகளை உருவாக்கும் நோக்கத்துடன் 2015 ஆம் ஆண்டு மாவை சேனாதிராசாவை அழைத்துப் பேச்சுக்கள் நடத்தின. அப் பேச்சுக்களின் அடிப்படையில் புலம்பெயர் அமைப்புக்கள் தாம் சுட்டுவிரலை நீட்டும் சிலரை கூட்டமைப…
-
- 0 replies
- 442 views
-
-
புஸ்வாணமாகப் போகின்றனவா ஜெனிவா அழுத்தங்கள்? ரொபட் அன்டனி பொறுப்புக்கூறல் பொறிமுறை கொண்டுவரப்பட்டு காணாமல் போனவர்களுக்கு என்ன நடந்தது என்பதை கண்டறிவது அவசியமாகும். இலங்கை அரசாங்கம், சர்வதேச தரப்பு மற்றும் ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் இதனை புரிந்துகொள்ளவேண்டும். எனவே இந்த விடயத்தில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் அடுத்தகட்ட நகர்வுகள் எவ்வாறு அமையும் என்பது தெளிவற்றதாக உள்ளன. ஆனால் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 34 ஆவது கூட்டத் தொடரானது பல்வேறு கேள்விகளுக்கு பதிலளிப்பதாக அமையப்போகின்றது என்பது மட்டும் திண்ணமாகும் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 27 …
-
- 0 replies
- 442 views
-
-
இலங்கைத்தீவின் தலைவிதி என்றுதான் மாறப்போகிறது? களுத்துறைப் பிரதேசத்தில் பெருமளவில் கறுவாவைப் பயிரிட்டு, அவற்றை வௌிநாடுகளுக்கு அனுப்பித் தேடிக்கொண்ட பணத்தைக்கொண்டே பராக்கிரம சமுத்திரம் உருவாக்கப்பட்டது. மேற்கண்ட விதத்தில் கடந்தவாரம் அரசதரப்பு பிரபல அரசியல்வாதி ஒருவர் வௌியிட்ட கருத்து இந்த நாள்களில் பலரது முகப்புத்தகங்களில் பல்வேறு விதத்தில் விமர்சிக்கப்படும் ஒரு விடயமாக ஆகியுள்ளது. பொலநறுவை யுகத்தில…
-
- 0 replies
- 442 views
-
-
போலியான அரசியலமைப்பை தோற்கடித்தல் -விக்டர் ஐவன் ஜனாதிபதிகோத்தாபய ரா ஜபக்சவினால் நியமிக்கப்பட்ட விசேட குழுவொன்றின் ஊடாக புதிய அரசியலமைப்பை தயாரிப்பதற்கு அவர் மேற்கொண்ட முயற்சியானது அரசியலமைப்பு உருவாக்கத்தில் பொதுமக்களின் பங்களிப்பு தொடர்பில் ஏற்றுக்கொள்ளப்பட்ட விதிகள் மற்றும் மரபுகளுக்கு முரணானது ம் மீறுவதுமாகும். அரசியலமைப்பு என்பது பிரஜைகளின் மக்களின் வாழ்க்கை, சுதந்திரம் மற்றும் சொத்துக்கான உரிமைகளை நிர்ணயிக்கும் மிக உயர்ந்த சட்டமாகவும், அரச ஆட்சியின் கட்டமைப்பு மற்றும் செயற் பாடுகளை நிறுவும் மிகவும் புனிதமான சட்ட ஆவணமாகவும் கருதப்படலாம். மத்தியகால கால உலகத்தை நவீன உலகிற்கு மாற்றி…
-
- 2 replies
- 442 views
-
-
வல்லரசுகளின் நலன்களுக்காக பலிக்கடாவாக்கப்படும் தமிழ் மக்கள் ஈழ விடுதலைப் போராட்ட இயக்கங்களுக்கு பலஸ்தீனம் ஆயுதப் பயிற்சி வழங்கிய ஓர் அரசியல் அன்று இருந்தது. முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்குப் பின்னர் அதே பலஸ்தீனம் மஹிந்த ராஜபக்சவுக்கு உயரிய விருதினை வழங்கியது. இத்தகைய அரசியல் மாற்றத்துக்கு என்ன காரணம்? எனும் கேள்விக்கு பதிலளித்தார் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம்.இன்று இருக்கிற தமிழ் அரசியல் தரப்பில் எத்தனை பேர் அமெரிக்கா விரும்பாத பலஸ்தீனத்தோடு அடையாளப்படுத்த தயாராக இருக்கினம். மேற்கு நாடுகள் விரும்பாத எதையுமே வாய்திறந்து கதைக்க எம் ஏனைய அரசியல் தரப்புகள் தயாராக இல்லை. இந்த யதார்த்தத்தைய…
-
- 0 replies
- 442 views
-
-
புதிய அரசியல் யாப்பு தொடர்பான முதலாவது இடைக்கால அறிக்கை வெளிவந்திருக்கின்ற நிலையில், அது தொடர்பான வாதப்பிரதிவாதங்கள் முன்ரைவிடவும் அதிகரித்திருக்கின்றன. அடுத்த மாதம் 10ஆம் திகதி வெளிவரவுள்ள இரண்டாவது இடைக்கால அறிக்கையுடன் புதிய அரசியல் யாப்பில் தமிழ் மக்களுக்கான இடம் என்ன என்பதும் தெட்டத் தெளிவாகிவிடும். கூட்டமைப்பின் சிரேஸ்ட தலைவர்களில் ஒருவரான சித்தார்த்தன் தலைமை வகித்த உப குழுவின் அறிக்கை ஏற்கனவே ஊடகங்களில் வெளியாகியிருக்கின்றது. இந்த அறிக்கையை அடிப்படையாகக் கொண்டே அடுத்த அறிக்கை தயாரிக்கப்படவுள்ளது. குறித்த அறிக்கையில் இலங்கையில் தற்போது நடைமுறையில் இருக்கின்ற ஒற்றையாட்சி முறைமை தொடர்பில் இவ்வாறு குறிப்பிடப்பட்டிருக்கின்றது: “மாகாண சபைகளின் வினைத்திறனான செயற்பாட்டிற்க…
-
- 2 replies
- 442 views
-
-
இலங்கைக்கு வருகை தந்த இந்திய எம்.பி.க்களுடன் 13 ஆவது திருத்தம் குறித்து கலந்துரையாடப்படவில்லையா? என்ற கேள்வியை சென்னையிலிருந்து வெளியிடப்படும் “இந்து’ பத்திரிகை செவ்வாய்க்கிழமை எழுப்பியுள்ளது. 2012 ஏப்ரல் 21 இல் கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டின் போது இந்திய நாடாளுமன்றக் குழுவுக்கு தலைமை தாங்கிய எதிர்க்கட்சித் தலைவி சுஷ்மா ஸ்வராஜ் 13+ குறித்து ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கதைத்திருந்ததாகத் தெரிவித்திருந்தார். முன்னர் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, இப்போது இந்தியாவின் எதிர்க்கட்சித் தலைவி சுஷ்மா ஸ்வராஜ் என்று ஆட்டப்பந்தய நிகழ்வுகள் மீண்டும் இடம்பெறுவதாகத் தென்படுகிறது என்று இந்து குறிப்பிட்டுள்ளது. இது தொடர்பாக அப்பத்திரிகையில் மேலும் தெரிவிக்கப்பட்டி…
-
- 0 replies
- 442 views
-
-
கோத்தா-கூட்டமைப்புப் பேர்ச்சுவார்த்தை. தரகர்களின் காலில் வீழ்வதை விடவும் எதிரியிடமே பேசுவது என்னமோ பெட்டர்தான். அதிலும் அரைகுறைகளிடம் அல்லாது அசல் "சிங்களத் தலைவனிடமே" பேசிவிடுவது சாலச்சிறந்தது. ஆட்சி மாற்றம், ஊழல் ஒழிப்பு என்று சிங்கள தேசத்தை அதன் அழிவில் இருந்து காப்பாற்றும் முயற்சி எதுவும் எடுக்காது, மொள்ளைமாரிகள், போலி ஜனநாயகவாதிகளுடன் கைகோர்க்காது நேரே "பாசிஸ்ட்டுகள்" இடமே பேசத் தொடங்கியிருப்பது வரவேற்கத்தக்கது. இதுதான் "புலிவழி" "பலம்தான் உலக ஒழுங்கைத் தீர்மானிக்கிறது" என்பது நந்திக்கடலோன் வாக்கு. சிங்களதேசம் அந்நிய செலவாணிக்கு வழியின்றி பாதாளம் நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கிறது. அதைத் தடுத்து சிங்கள தேசத்தைக் காப்பாற்றும் வல்லம…
-
- 0 replies
- 442 views
-
-
ஒன்றுபட்ட பங்களிப்பு முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நடைபெற்ற 2009 மே மாதத்தில் இந்தியாவில் ஒரு மக்களவைத் தேர்தல்இடம்பெற்றது.அதற்கு அடுத்த மக்களவைத் தேர்தல் இப்போது இடம்பெறவுள்ளது.நடைபெற்ற ஈழத்தமிழின அழிப்பின் விபரங்கள்,பரிமாணங்கள், மக்களுக்குப் பெருமளவு தெரிந்தபின்பு நடைபெறும் தேர்தல் இதுவாகும். தமிழின அழிப்பை முன்னின்று நடத்திய சோனியா காங்கிரசு, அதற்கு முழு ஒத்துழைப்பு வழங்கிய கருணாநிதி திமுக போன்ற கட்சிகளை சனநாயக வழிமுறையில் தண்டிப்- பதற்கு தமிழக வாக்காளர்களுக்கு கிடைத்துள்ள வாய்ப்பு இது.இந்தியாவில் வேறெவரும் சந்திக்காத இன அழிப்பைச் சந்தித்த தமிழினமக்கள் அதற்குக் காரணமாக இருந்தவர்களை ஒருபோதும் மறக்கவோ, மன்னிக்கவோ முடியாது.ஏனெனில் தமிழ் ஈழப்- பகுதிகளில் இ…
-
- 0 replies
- 442 views
-
-
மைத்திரியின் அரசும் மாவீரர் தினமும் – செல்வரட்னம் சிறிதரன் சுமார் எட்டு வருடங்களின் பின்னர், வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் உணர்வுபூர்வமாக மாவீரர் தினம் அனுசரிக்கப்பட்டிருக்கின்றது. இது பலருக்கும் ஆறுதல் அளித்திருக்கின்ற ஒரு முக்கியமான சம்பவமாகப் பதிவாகியிருக்கின்றது. விடுதலைப்புலிகளினால் பிரகடனப்படுத்தப்பட்டு, மிகவும் முக்கியமான ஒரு தினமாகப் பின்பற்றப்பட்டு வந்த மாவீரர் தினத்தை, அனுட்டிக்கக் கூடாது. கொல்லப்பட்ட விடுதலைப்புலிகளை நினைவுகூரக் கூடாது என்று முன்னைய அரசாங்கம் விடாப்பிடியாக இருந்து வந்தது. இதனால் மாவீரர் தினம் அனுட்டிக்கப்படக்கூடாது என்ற கடு…
-
- 0 replies
- 442 views
-
-
மூன்றாவது தொற்றலையை அரசாங்கம் முறியடிக்குமா? நிலாந்தன்! டெல்டா திரிபு வைரஸ் அண்மை நாட்களாக நாளொன்றுக்கு நூற்றுக்கும் அதிகமானவர்களை பலியெடுக்கத் தொடங்கிவிட்டது.இது இப்படியே போனால் வரும் ஒக்டோபர் மாத தொடக்கமளவில் நாளொன்றுக்கு 220 பேர்களாவது இறக்கும் ஒரு நிலைமை வரலாம் என்று உலக சுகாதார ஸ்தாபனத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட சுயாதீன நிபுணர் குழுவின் அவதானிப்பில் தெரிவிக்கப்பட்டிருருக்கிறது. நாளொன்றுக்கு 100க்கும் குறைவானவர்களை கொல்லக் கொடுப்பது என்பது இச்சிறிய தீவுக்கு ஒரு புதிய அனுபவம் அல்ல. 2009ஆம் ஆண்டு ஈழப் போரின் இறுதிக் கட்டத்தில் நாளொன்றுக்கு கிட்டத்தட்ட 100 – 150 உயிர்களை கொல்லக்கொடுத்த ஒரு நாடு இது.யுத்த வெற்றிக்காக எத்தனை உயிர்களையும் கொல்லக் கொடுக்கலாம் என்ற ஒரு கெட்…
-
- 0 replies
- 441 views
-
-
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் : ஜனநாயகத்துக்கு தலைகுனிவு என்ன நடக்குமென்று எதிர்பார்க்கப்பட்டதோ அதுவே தற்போது தமிழகத்தில் நடந்திருக்கிறது. சென்னை ஆர்.கே.நகர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு நடைபெறவிருந்த இடைத்தேர்தல் இரத்துச் செய்யப்பட்டுவிட்டது. வாக்காளர்களுக்கு அதிகளவிலான பணம் விநியோகம் செய்யப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து, இறுதி நேரத்தில் தேர்தல் ஆணையம் தேர்தலை இரத்துச் செய்துவிட்டது. இந்த விடயத்தைப் பற்றி கடந்த வாரம் இந்தப் பந்தியில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. ஆர்.கே. (ராதாகிருஷ்ணன்) நகர் தொகுதிக்கான இடைத்தேர்தல் வாக்களிப்பு கடந்த 12 ஆம் திகதி (புதனன்…
-
- 0 replies
- 441 views
-
-
இலங்கைக்கான சர்வதேச பொருளாதார நலன்களில் தமிழர் நிலைப்பாடு? நிருபா குணசேகரலிங்கம்:- நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நிலைமைகளை கையாளுவதற்கு விரைவான நல்லிணக்க முயற்சிகள் தேவையாகவுள்ளன. அதாவது, இந்த ஆண்டிற்குள் ஜி.எஸ்.பி. பிளஸ் (விருப்பத்தேர்வுகளின் பொதுமைப்படுத்தப்பட்ட முறைமை) வரிச்சலுகையினை பெற்றுக் கொள்ள வேண்டிய தேவை அரசாங்கத்திற்கு ஏற்பட்டு இருக்கின்றது. இவ் ஆண்டுக்குள் ஜி.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகை கிடைக்கப் பெறும் என்ற நம்பிக்கையையும் விருப்பத்தையும் கூட அரசாங்கம் பகிரங்கமாகவே வெளிப்படுத்தியுள்ளது. அதேபோன்று மீன்பிடி ஏற்றுமதி ரீதியான நடவடிக்கைகளிலும் முன்னேற்றம் காண வேண்டிய தேவை பொருளாதார ரீதியில் அரசாங்கத்திற்கு எழுந்து…
-
- 0 replies
- 441 views
-
-
தமிழ் அரசியல் கைதிகளின் விவகாரம் மீண்டும் உண்ணாவிரதப் போராட்டத்துடன் பலருடைய கவனத்தையும் ஈர்த்துள்ளது. அனுராதபுரம் சிறைச்சாலையில் 21 அரசியல் கைதிகள் கடந்த ஒரு வார காலத்திற்கு மேலாக உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகின்றார்கள். தங்களுக்கு எதிராக வழக்கு விசாரணைகளைத் துரிதப்படுத்த வேண்டும். சிங்களப் பிரதேச நீதிமன்றங்களில் உள்ள தமது வழக்குகளை வவுனியா அல்லது யாழ்ப்பாணத்திற்கு மாற்ற வேண்டும் என்பது அவர்களுடைய கோரிக்கையாகும். தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து, அதற்காக உண்ணாவிரதமிருந்து நடத்தப்படுகின்ற போராட்டம் 29 வருடங்களுக்கு முன்னரே மிகவும் வலுவான முறையில…
-
- 0 replies
- 441 views
-
-
மாற்று தமிழ்த் தேசிய தரப்பினரது வெற்றியும் அதன் அரசியல் முக்கியத்துவமும்? - யதீந்திரா இம்முறை தேர்தலில் மாற்றம் ஏற்படலாம் என்பது பலருடைய எதிர்பார்ப்பு. இதுவரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே தமிழ் மக்களின் ஒரோயோரு தமிழ்த் தேசிய தலைமையாக இருந்தது. கூட்டமைப்பு ஒரணியாக நிற்க வேண்டும் – அதுதான் தமிழ் மக்களுக்கு நல்லதென்பது, பலரதும் கருத்தாக இருந்தது. அதே போன்று, தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகள் அணைத்தும் கூட்டமைப்பிற்குள் ஓரணியாக நிற்க வேண்டும் என்னும் அபிப்பிராயமும் பலரிடம் இருந்தது. ஆனால் நிலைமைகள் எதிர்பார்த்தது போன்று இருக்கவில்லை. அனைவரையும் அரவைணத்து, கூடுத் தலைமையொன்றை, வழங்கக் கூடிய ஆற்றல் கூட்டமைப்பிடம் இருந்திருக்கவில்லை. அனைவரும் ஓரணில் நிற்க வேண்டுமென்னும் எதிர…
-
- 0 replies
- 441 views
-
-
14 JUL, 2025 | 03:59 PM டி.பி.எஸ். ஜெயராஜ் இலங்கையில் முக்கியமான அரசியல் தலைவர் ஒருவர் கொலை செய்யப்பட்ட முதல் சம்பவம் 1959 செப்டெம்பரில் இடம்பெற்றது. பதவியில் இருந்த பிரதமர் எஸ்.டபிள்யூ. ஆர்.டி. பண்டாரநாயக்க, தல்துவ சோமராம தேரோ என்ற பௌத்த பிக்குவினால் சுட்டுக்கொலை செய்யப்பட்டபோது நாடு அதிர்ச்சியில் உறைந்தது. அதையடுத்து வந்த வருடங்களில் இனப்பிளவின் இருமருங்கிலும் மேலும் பல அரசியல் படுகொலைகள் இடம்பெற்றதை காணக்கூடியதாக இருந்தது. தமிழீழ விடுதலை புலிகள் உட்பட பல்வேறு தமிழப் போராளிக் குழுக்களினால் கட்டவிழ்த்துவிடப்பட்ட அரசியல் வன்முறை, ஜனதா விமுக்தி பெரமுனவின் ( ஜே.வி.பி.) வன்முறை மற்றும் அரசினாலும் அதன் அமைப்புக்களினாலும் மேற்கொள்ளப்பட்ட எதிர் வன்முறைகளில் பல வருடங்களாக பெர…
-
-
- 2 replies
- 441 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,SLPP படக்குறிப்பு, மஹிந்த ராஜபக்ச, கோட்டாபய ராஜபக்ச குடும்பத்தினர் உள்ளிட்டோர். கட்டுரை தகவல் எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத் பதவி, பிபிசி தமிழுக்காக 5 மணி நேரங்களுக்கு முன்னர் இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 21ம் தேதி நடக்கிறது. ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணைக்குழு ஆரம்பித்துள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இந்த நிலையில், தேர்தலை நடத்துவதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகள் துவங்கப்பட்டுள்ளன. சுதந்திர இலங்கையின் தேர்தல் வரலாறு பட மூலாதாரம்,GETTY IMAGES …
-
- 1 reply
- 441 views
- 1 follower
-