அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9224 topics in this forum
-
நாளைக்கும் நிலவு வரும்…. றமணன் சந்திரசேகரமூர்த்தி:- 14 மே 2014 நம்பிக்கைகளுக்கும் நம்பிக்கையீனங்களுக்கும் இடையில் அகப்பட்டு நிற்கின்றது தமிழ் தேசிய விடுதலைப் போராட்டம். தமிழர்களின் அரசியல் இலக்குகளை வெற்றி கொள்ளக் கூடிய தளமாக விளங்கும் புலத்தின் மீதான கவனத்தை இலங்கை அரசாங்கம் கூர்மைப்படுத்தியுள்ளதை அண்மைய நகர்வுகள் மூலம் தெளிவாக உணர முடிகின்றது. புலத்தில் செயல்படும் முக்கிய தமிழ் அமைப்புகளையும் தமிழ் பிரதிநிதிகளையும் தடை செய்வதான அறிவிப்பின் பின்னால் உள்ள அரசியல் மிகவும் நுட்பமானது. இது புலத்தில் வாழும் சாதாரண தமிழ் மக்களை குழப்பிவிடும் ஒரு உத்தியாகவே நோக்கப்பட வேண்டும். தற்போது தீவிரமாக அரசியல் செயல்பாடுகளை மேற்கொண்டுள்ள முக்கியமானவர்களின் பெயர்களை கொண்ட…
-
- 0 replies
- 655 views
-
-
நாளொன்றுக்கு ஐந்து பேர்: இலங்கை தாங்குமா?. இலங்கையில் நாள் ஒன்றுக்கு ஐந்து பேர் கடத்தல்கள், காணாமல் போதல்கள் மற்றும் படுகொலைகளுக்கு உள்ளாக்கப்படுவதாக மூன்று மனித உரிமை அமைப்புக்கள் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையின் பிரகாரம் யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பில் நாளொன்றுக்கு குறைந்தது இருவர் இந்த நிலைக்கு உள்ளாகின்றனர். மக்கள் கண்காணிப்புக் குழு, சுதந்திர ஊடக இயக்கம் மற்றும் சட்டத்துக்கும் சமூகத்துக்குமான அறநிலையம் ஆகிய அமைப்புக்கள் கூட்டாக இணைந்து வெளியிட்டுள்ள இந்த அறிக்கையில், கடந்த ஜனவரி 1 முதல் ஒகஸ்ட் 31 வரையான காலப்பகுதியில், 662 படுகொலைச் சம்பவங்களும், 540 கடத்தல் சம்பவங்களும் இலங்கையில் இடம்பெற்றிருப்பதாகக் குறிப்பிட…
-
- 0 replies
- 1.1k views
-
-
நிகழ வேண்டிய வழி June 17, 2024 — கருணாகரன் — ‘இலங்கையில் உள்நாட்டு யுத்தம் முடிந்து 15 ஆண்டுகளாகி விட்டது. அங்கே இப்போது மக்கள் அமைதியாக வாழ்கிறார்கள் அல்லது அமைதியாக வாழக்கூடியதாக இருக்கும்’ என்ற எண்ணமே பொதுவாக உலகப் பரப்பில் உண்டு. யுத்தம் முடிந்தது உண்மைதான். ஆனால், யுத்தத்திற்குக் காரணமான இனமுரணும் இனப்பிரச்சினையும் முடிவுக்கு வரவில்லை. அது இன்னும் கொதிநிலையிலேயே உள்ளது. அதை மேலும் தீவிரப்படுத்தியிருக்கிறது அரசு. ஏனென்றால், இனவாதத்தில்தான் அரசுக் கட்டமைப்பே நிறுவப்பட்டுள்ளது. இரண்டு மொழிகளைப் பேசும் நான்கு இன மக்களைக் கொண்ட சின்னஞ்சிறிய நாட்டில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக உள்நாட்டு யுத்தம் நிகழ்ந்திருக்கிறது என்றால் இதை எப்படி விளங்கிக் கொள…
-
- 1 reply
- 793 views
-
-
நிகழக் காத்திருக்கும் அதிசயம் தேசியப்பட்டியல் என்கிற ‘வஸ்து'வுக்கு முஸ்லிம் அரசியலில் கொஞ்சம் காரமும் பாரமும் அதிகமாகும். சிலவேளைகளில், முஸ்லிம் அரசியலில் கேலிக்குரியதொரு சொல்லாகவும் அது பேசப்பட்டிருக்கிறது. புத்தி ஜீவிகளையும் சமூகத்துக்காகத் தொண்டாற்றுகின்றவர்களையும் நாடாளுமன்ற உறுப்பினர்களாக்குவதற்காக உருவாக்கப்பட்ட தேசியப்பட்டியல் முறைமையானது, அநேகமான தருணங்களில் அந்த இலக்கை நிறைவேற்றவில்லை என்பது, வேறு கதையாகும். தொடங்கிய கதை முஸ்லிம் அரசியலரங்கில், தேசியப்பட்டியல் என்பது துரும்பாகவும் வியாபாரப் பண்டமாகவும் பயன்படுத்தப்பட்ட வரலாறுகள் அதிகமாகும். 1989ஆம் ஆண்டு, என்.எம்.…
-
- 0 replies
- 579 views
-
-
நிகழ்கால அரசியலுக்குத் தேவைப்படும் தனித்துவ தலைவர் மர்ஹும்அஷ்ரப்- நினைவைநோக்கி- எஸ். எம். சஹாப்தீன் 12 செப்டம்பர் 2012 முஸ்லீம் காங்கிரசின் ஸ்தாபக தலைவர் அஷ்ரபின் 12ஆம் ஆண்டு நினைவுதினம் - 16.09.2012 முஸ்லீம் காங்கிரசின் ஸ்தாபக தலைவர் அஷ்ரபின் 12ஆம் ஆண்டு நினைவுதினம் - 16.09.2012 அன்று நினைவு கூரப்படுகிறது. எனினும் காலத்தின் தேவை கருதி கலாபூஷணம் எஸ். எம். சஹாப்தீன் அனுப்பி வைத்த இந்த கட்டுரை முன்கூட்டியே பிரசுரமாகிறது:- கலாபூஷணம் எஸ். எம். சஹாப்தீன் முன்னாள் தேசிய அமைப்பாளர் - ஸ்ரீ ல.மு.கா நிகழ்கால அரசியல் நடவடிக்கைகள் மக்களுக்கு அவநம்பிக்கையை அன்றாடம் ஏற்படுத்திக் கொண்டேயிருக்கின்றன. அரசியற் தலைமைத்துவங்கள் நம்பிக்கையை ஏற்படுத்துவன…
-
- 1 reply
- 1.2k views
-
-
நிகழ்நிலை காப்புச் சட்டம்? – நிலாந்தன். “சமூக ஊடகங்களை தணிக்கை செய்யக்கூடாது. விமர்சனம் செய்யும் உரிமை அனைவருக்கும் உள்ளது. என்னை பற்றி எதனையும் கூறட்டும். எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை” என்று மகிந்த ராஜபக்ச கூறியுள்ளார். நிகழ்நிலை காப்புச் சட்டம் தொடர்பாக ஊடகவியலாளர்கள் அவரிடம் கேள்வி கேட்டபோது மஹிந்த மேற்கண்டவாறு கூறியுள்ளார். ஆனால் அவருடைய கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரான எஸ்.எம்.சந்திரசேன,கட்சியின் தலைமையகத்தில் அண்மையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போது சமூக ஊடகங்களுக்கு ஒரு கட்டுப்பாடு விதிக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளார். சமூக ஊடகங்களையும் கைபேசிச் செயலிகள் வழியாகப் பகிரப்படும் விடயங்களையும் கட்டுப்படுத்த வேண்டிய தேவை…
-
- 0 replies
- 817 views
-
-
நிகழ்ந்திருக்கவே கூடாத பயங்கரம் மொஹமட் பாதுஷா / 2019 ஏப்ரல் 28 ஞாயிற்றுக்கிழமை, பி.ப. 09:17 Comments - 0 இலங்கையின் பல பாகங்களிலும், இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களின் அதிர்ச்சிகளில் இருந்து, நாடும் நாட்டு மக்களும் இன்னும் முழுமையாக மீளவில்லை. கிறிஸ்தவர்கள், கத்தோலிக்கர்களின் புனித நாளான உயிர்த்த ஞாயிறு தினத்தில், தேவாலயங்கள், நட்சத்திர ஹோட்டல்களை இலக்குவைத்து, மேற்கொள்ளப்பட்ட இந்தத் திட்டமிட்ட குண்டுத்தாக்குதல்கள், வரலாற்றில் மிக மோசமான இழப்பையும் துயரஅனுபவத்தையும் தந்திருக்கின்றது. இந்த நாட்டில், இனசெளஜன்யத்தோடு வாழ்ந்து வருகின்ற முஸ்லிம்களுக்கும் கத்தோலிக்கர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் இடையிலான உறவை, இத்தாக்குதல்கள் சிதைத்திருப்ப…
-
- 0 replies
- 814 views
-
-
நிக்கரகுவா புரட்சியின் 40 ஆண்டுகள்: சான்டினிஸ்டாகளின் கதை தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ / 2019 ஜூலை 18 வியாழக்கிழமை, மு.ப. 07:17Comments - 0 சில கதைகள் சொல்லப்படாமல், தூசி மறைத்துக் கிடக்கின்றன. வரலாற்றின் விந்தையும் அதுவே. சில கதைகள் திரும்பத் திரும்பச் சொல்லப்படுகின்றன. சில கதைகள் சொல்லப்படுவதற்காகக் காத்துக் கிடக்கின்றன. சில கதைகள் சொல்லப்படாமல் மறைக்கப்படுகின்றன. இன்றும் சில கதைகள் சொல்லப்பட இயலாமல் அந்தரிக்கின்றன. இவ்வாறு கதைகள் எங்கும் நிறைந்திருக்கின்றன. அவ்வாறு சொல்லப்படுவதற்காய் காத்திருக்கும் கதைகளைச் சொல்வதற்கான காலமும் களமும் முக்கியமானவை. களமும் காலமும் பொருந்திவரும் போது சொல்லப்படும் கதைகள் பெறுமதிமிக்கனவாகின்றன. இன்று சொல்லப்போகும் கதையும் …
-
- 0 replies
- 965 views
-
-
நிச்சயமற்ற நிலையில் மாகாண சபை தேர்தல்கள் வடமாகாண சபையின் பதவிக் காலம், இன்னும் இரண்டு மாதங்களில், அதாவது எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முடிவடைகிறது. இந்த நிலையில், சில சட்டப் பிரச்சினைகள் காரணமாகவும் தமிழ் அரசியலில் நிலவி வரும் குழப்பமான நிலைமை காரணமாகவும் வடமாகாண சபையின் எதிர்காலம் தொடர்பாகப் பல பிரச்சினைகளும் சந்தேகங்களும் எழுவது இயல்பே. கடந்த வருடம் செப்டெம்பர் மாதம், அரசாங்கம் சர்ச்சைக்குரிய முறையில் நிறைவேற்றிக் கொண்ட மாகாண சபைத் தேர்தல்கள் சட்டத் திருத்தத்தின் காரணமாக, ஏற்கெனவே பதவிக்காலம் முடிவடைந்து, கலைந்திருக்கும் மாகாண சபைகளுக்கும், இந்த வருடம் பதவிக் காலம் முடிவடையும் மாகாண சபைகளுக்கும் உடனடியாகத…
-
- 0 replies
- 391 views
-
-
நிதானத்துடனும் அதேநேரம் அவதானமாகவும் செயற்படவேண்டியது அவசியமாகும் நாட்டின் அரசியல் சூழலில் தற்போதைய நிலைமையில் புதிய அரசியலமைப்பு உருவாக்கம் மற்றும் அதனூடாக அறிமுகப்படுத்தப்படவுள்ள தமிழ் பேசும் மக்களின் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு திட்டம் என்பன தொடர்பிலேயே பாரிய வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்று வருகின்றன. விசேடமாக அரசியலமைப்பு வரைபில் வடக்கு, கிழக்குப் பிரச்சினைக்கு தீர்வைக் காணும் நோக்கில் எவ்வாறான திட்டங்கள் முன்வைக்கப்படும் என்பதில் அனைத்துத் தரப்பினரும் அவதானம் செலுத்தியுள்ளனர். இந்த அரசியல் தீர்வு என்று வரும்போது அது மிகவும் ஒரு உணர்வுபூர்வமான விடயமாகவே காணப…
-
- 0 replies
- 306 views
-
-
நிதானத்தை இழக்கிறாரா மைத்திரி? “ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அதிகம் பதற்றமடையத் தொடங்கியிருக்கிறார். உள்ளூராட்சித் தேர்தல் தோல்வி பற்றிய பயம், அவரை ஆட்டிப் படைக்கிறது. அதனால்தான், அவர் கண்டதையெல்லாம் பேசத் தொடங்கியிருக்கிறார்.” இவ்வாறு கூறியிருப்பவர் வேறு யாருமல்ல, மைத்திரிபால சிறிசேனவின் இன்றைய முதல்நிலை அரசியல் எதிரியான மஹிந்த ராஜபக்ஷதான். மஹிந்த ராஜபக்ஷவின் இந்தக் கணிப்பை அவ்வளவாக யாரும், குறைத்து மதிப்பிட முடியாது. இதில் நிறையவே உண்மைகள் உள்ளன. தான் தலைமை தாங்கும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு, உள்ளூராட்சித் தேர்தலில் ஏற்படக் கூடிய தோல்வியைத் தவிர்க்க- தடுக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உச்சக்கட்ட…
-
- 0 replies
- 268 views
-
-
நிதானம் இழக்கும் அரசியல் லக்ஸ்மன் மக்கள் கிளர்ச்சி ஒன்றே தீர்வுக்கான வழி என்ற நிலை தோன்றியிருப்பதாகவே உணரமுடிகிறது. ஆனால் ஆட்சி மாற்றம் நிச்சயமான தீர்வலல்ல என்பது மாத்திரம் உண்மை. இதனை மக்கள் உணரத் தலைப்படவேண்டும். இப்போது நாட்டுக்கும் மக்களுக்கும் தேவையானது, நிதானமும் அதனுடன் இணைந்த தீர்மானமுமேயாகும். போராட்டங்கள் வெடிக்கின்றன. அவற்றினை அடக்குவதற்கான வழிகளும் கண்டுபிடிக்கப்படுகின்றன. இந்த வழிமுறைகள் புதியவையல்ல. தமிழர்களின் உணர்வுகளையும் போராட்டங்களையும் எதிர்ப்புகளையும் அடக்குவதற்காக கண்டுபிடிக்கப்பட்ட முறைகளே அவை. அவை இப்போது சிங்கள முஸ்லிம் மக்களையும் அடையாளப்படுத்துகின்றன. அதனால்தான், மக்கள் கிளர்ச்சியை அடிப்படைவாதத்தின் பெயரை கொண்டு அடக்க அரசா…
-
- 0 replies
- 347 views
-
-
நினைத்ததும் நடந்ததும் உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகள், மாற்றுத்தலைமை மீதான மக்களுடைய ஆர்வத்தையும் அக்கறையையும் தெளிவாக உணர்த்தியிருக்கின்றன. வேறு வேறு அரசியல் தளத்தைக் கொண்டிருக்கின்ற போதிலும், சிங்கள மக்களும், தமிழ் பேசும் மக்களும் மாற்றுத் தலைமைக்கே இந்தத் தேர்தலில் ஆணை வழங்கியிருக்கின்றார்கள். இருப்பினும் வடக்கு–கிழக்குப் பிரதேசங்களைப் பொறுத்தமட்டில் தமிழ் அரசியலின் செல்நெறியில் எழுந்துள்ள பாதகமான ஒரு நிலைமை குறித்து இந்தத் தேர்தல் அபாய அறிவிப்பை அமைதியாகச் செய்திருக்கின்றது. இந்த அறிவித்தல் குறித்து தமிழ் அரசியல் தளத்தில் பொறுப்புள்ளவர்கள் உரிய முறையில் கவனம் செலுத்தத் தவறியுள்ள நிலைமையையே காண முடிகின்றது. தென்பகுதிகளில் உள்ள மக்கள…
-
- 0 replies
- 393 views
-
-
நினைவழிப்புக்கு எதிரான வெளிப்பாடே மாவீரர் நாள் நிகழ்வுகள்! குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்:- November 29, 2017 2017 நவம்பர் 27, மாவீரர் தினம், தெளிவான செய்தியை இலங்கை அரசுக்கும் உலகிற்கும் அமைதியாகவும் மௌனமாகவும் உணர்வோடும் எழுச்சியோடும் சொல்லியிருக்கிறது. எங்கள் உணர்வுகள் புதைந்த மாவீரர் துயிலும் இல்லம் என்பது எமக்கு வல்லமையும் நம்பிக்கையும் ஊட்டும் உறுதி நிலம் என்பதை தமிழ் மக்கள் மீண்டும் உணர்த்தியுள்ளனர். புதிய அரசாங்கத்தின் அறிவிக்கப்படாத தடையையும் அனுமதியையும் தாண்டி துயிலும் இல்லங்கள் தோறும் பல்லாயிரக்கணக்காக மக்கள் ஒன்றுதிரண்டு, வடக்கு கிழக்கில் லட்சக்கணக்கான மக்கள் ஒன்று திரண…
-
- 0 replies
- 382 views
-
-
நினைவாக மாறிய ஒரு நினைவுச்சின்னம் நிலாந்தன் யாழ்.பல்கலைக்கழகத்தில் நிறுவப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னம் உடைக்கப்பட்டமைக்கு எதிரான போராட்டம் என்பது முதலாவதாக பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு எதிரானது. அதைவிட ஆழமான பொருளில் அது பல்கலைக்கழகத்தின் சுயாதீனம் குறித்த கேள்விகளை எழுப்புவது. அதையும் விட ஆழமான பொருளில் அது நினைவு கூர்தலுக்கான தமிழ் மக்களின் உரிமைகளோடு சம்பந்தப்பட்டது. முதலாவதாக துணைவேந்தர்.அவர் ஒரு கருவி. எந்த வாயால் போராடும் தரப்புக்களை ஆர்வக்கோளாறுகள் என்று சொன்னாரோ அதே வாயால் தேவாரம் பாடியபடி அடிக்கல் நாட்டுகிறார். நீளக் காற்சட்டையை உயர்த்தி மடித்துவிட்டு சுலோகங்களை உச்சரித்தபடி நீர்நிறைந்த குழிக…
-
- 0 replies
- 529 views
-
-
(விசேட ஆய்வு ஜெரா) இனப்படுகொலை தொடர்பான பேச்சுக்கள் மறுபடியும் முதன்மையிடத்துக்கு வருகின்றன. வடக்கு மாகாண சபை கொண்டு வந்த தீர்மானமும், ஐ.நா நிலவரங்களும் அதனைக் கிளறிவிட்டிருக்கின்றது. போர்க்குற்றங்கள் தொடர்பான ஐ.நாவின் விசாரணை அறிக்கை பிற்போடப்பட்டிருக்கிறது. இதனால் உண்மைகள் மறைக்கப்படுவதற்கும், பாதிக்கப்பட்டோரிற்கான நீதி, நியாயங்கள் முற்றாக மறுக்கப்படுவதற்கும் வாய்ப்புக்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே சர்வதேச மனித உரிமை அமைப்புக்களும், ஊடகங்களும் பல்வேறு வடிவிலான ஆவணப்படுத்தல்களை இந்த விடயம் தொடர்பில் தயாரித்து வைத்திருக்கின்றன. ஆனால் அவை தமிழ் இன அழிப்பின் இறுதிக் கட்டத்தில் சேமிக்கப்பட்டவை. இந்த இன அழிப்புக்கு திரட்சித் தன்மைமிக்க ஒரு வரலாற்றுத் தொடர்ச்சி இருப்ப…
-
- 1 reply
- 801 views
-
-
ஜேர்மன் ஜனாதிபதி Joachim Gauck இரண்டாம் உலகப்போரின் போது நாசிப்படைகளால் படுகொலை செய்யப்பட்ட பிரான்ஸ் நாட்டின் Oradour-sur-Glane கிராமத்திற்கு அண்மையில் விஜயம் செய்து கொல்லப்பட்ட மக்களுக்கு அஞ்சலி செலுத்தினார். ஜேர்மன் நாட்டின் நாசிப்படைகளால் 1944ஆம் ஆண்டு யூன் 10ஆம் திகதி நடத்தப்பட்ட இந்த படுகொலையில் 247 சிறுவர்கள் உட்பட 642 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டனர். படுகொலை நடந்த பின்னர் இந்த பகுதிக்கு செல்லும் முதலாவது ஜேர்மன் அரசுத்தலைவர் இவராகும். இவருடன் பிரான்ஸ் ஜனாதிபதி பிரான்ஹொய்ஸ் ஹொலண்டே (François Hollande) யும் அந்த இடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார். இந்த படுகொலையிலிருந்து தப்பி இன்றும் வாழும் சிலரையும் அவர்கள் சந்தித்தனர். தனது நாட்டு நாசிப்படைகள் …
-
- 0 replies
- 511 views
-
-
நினைவு கூரல்களுக்கான தடை என்ற ஜனநாயக மீறல் லக்ஸ்மன் நினைவுகூரல்களுக்கும் நீதி கோரல்களுக்கும் விதிக்கப்பட்டு வருகின்ற தடையானது மிக மோசமானதொரு ஜனநாயக மீறல் என்பதை அறியாதவர்களாகவே இலங்கையின் அரசாங்கமும் அதன் படைகளும் பாதுகாப்புத் தரப்பினரும் இருந்து வருகின்றனர். அதற்குரிய மாற்று நடவடிக்கையினை யார் முன்னெடுப்பது என்பதே இப்போதைக்கு எல்லோரிடமும் உள்ள கேள்வி. ஆனால் ஏதோ நடப்பதெல்லாம் நடக்கட்டும் நமக்கென்ன என்றிருப்பவர்கள் அதிகமாகிக்கொண்டே வருகின்றனர் என்பதே கவலை. முக்கியமாக போராட்டம் நடைபெற்று அப்போராட்டம் மௌனிக்கப்பட்ட இலங்கையில், அதிகமாகவே படுகொலைகள், கொலைகளுக்கான நினைவு கூரல்களைக் கூட யாரும் செய்துவிடமுடியாதளவுக்கான அடக்குமுறைகள் நடைபெறுகின்றன. அதே நேரத்தில் நடை…
-
- 0 replies
- 499 views
-
-
நினைவு கூர்தலில் பல்வகைமை – நிலாந்தன். “ஈழ விடுதலை இலட்சியத்திற்கான போரில் இன்னுயிர் நீத்த அனைத்து இயக்கங்களைச் சேர்ந்த போராளிகளுக்கும் பொதுமக்களுக்கும் அகவணக்கம்” என்று நோர்வையில் வசிக்கும் ஒரு நண்பர் முகநூலில் பதிவிட்டிருந்தார். அதற்குப் பலமான எதிர்ப்புக் கிளம்பியது. மாவீரர்களின் நினைவுகளையும் ஏனைய இயக்கங்களின் தியாகிகளின் நினைவுகளையும் ஒன்றாகப் போட்டுக் குழப்பக்கூடாது என்று ஒரு தரப்பினர் வாதாடுகிறார்கள். மாவீரர் நாள் எனப்படுவது விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தியாகிகளை நினைவு நாள். அதேசமயம் விடுதலைப் புலிகள் அல்லாத ஏனைய இயக்கங்கள் தங்களுக்கென்று தியாகிகள் தினங்களை வைத்திருக்கின்றன. எனவே அவரவர் தங்கள் தங்கள் தியாகிகள் தினத்தைக் கொண்டாடுவதுதான் சரி. இதில் மாவீரர்…
-
- 0 replies
- 389 views
-
-
நினைவு கூர்தலுக்கான ஒரு பொது உடன்படிக்கை – நிலாந்தன்… திலீபனின் நினைவிடத்தில் ஏற்பட்ட குழப்பங்களும் அதன்பின் யாழ்.மாநகரசபை வெளியிட்ட அறிக்கையும் இக்கட்டுரையை எழுதத்தூண்டின. நினைவிடம் அமைந்திருப்பது மாநகர சபை எல்லை என்பதால் அந்த இடத்திற்கும் நிகழ்வுக்கும் மாநகரசபை உரிமைகோருகிறது. முள்ளிவாய்க்கால் நினைவு கூர்தலின் போது மாகாணசபையும் அப்படி உரிமைகோரியது. முள்ளிவாய்க்கால் நிலத்துண்டு பிரதேசசபை எல்லைக்குள் அமைந்திருப்பதால் பிரதேசசபை அதை அனுஷ்டிக்கும் என்றும்பிரதேச சபை நிர்வாகம் மாகாணசபையின் உள்ளுராட்சி அமைச்சின் கீழ் வருவதால் நினைவு கூர்தலை மாகாணசபை நடத்தும் என்று ஒருவிளக்கம் தரப்பட்டது. அதுபோலவே கிளிநொச்சியில் மாவீரர் துயிலுமில்லத்தை கரைச்சி பிரதேசசபை பொற…
-
- 0 replies
- 1.2k views
-
-
நினைவு கூர்தலுக்கான வெளி-2021 ? நிலாந்தன்! May 1, 2021 கடந்த வாரம் கத்தோலிக்க திருச்சபையின் யாழ் மறை மாவட்ட குருமுதல்வர் ஒரு வேண்டுகோள் விடுத்திருந்தார். தமிழ்மக்கள் இறந்தவர்களை நினைவு கூர்வதற்கு அரசாங்கம் அனுமதிக்க வேண்டும் என்பதே அது. கத்தோலிக்க திருச்சபையின் உயர்நிலைக் குருவானவர் ஒருவர் அவ்வாறு தெரிவித்திருப்பது முக்கியமானது. அதுவும் மே பதினெட்டை நினைவு கூர்வதற்கு சில கிழமைகளுக்கு முன் அவர் அதைக் கூறியிருந்தார். ஈஸ்டர் குண்டுவெடிப்பை நினைவு கூர்ந்த ஒரு காலகட்டத்தில் அவர் அதைக் கூறியிருந்தார். எனவே அது கூறப்பட்ட காலம் கூறியது யார் என்பவற்றை தொகுத்துப் பார்த்தால் அக்கூற்றுக்கு முக்கியத்துவம் உண்டு. ஏனெனில் கடந்த ஆண்டும் நினைவு கூர்தலை எப்படி ம…
-
- 0 replies
- 706 views
-
-
நினைவு கூர்தல் – 2020 நிலாந்தன் கிட்டத்தட்ட 7 ஆண்டுகளுக்கு மேலாக இதே தலைப்பில் நினைவுகூர்தல் தொடர்பாக எழுதிவருகிறேன். ஆனால் தாயகத்தில் நினைவு கூர்தல் தொடர்பில் கடந்த 11 ஆண்டுகளாக குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய பெரிய திருப்திகரமான மாற்றங்கள் ஏதும் ஏற்பட்டிருப்பதாக தெரியவில்லை. நினைவுகூர்தலை அதன் கோட்பாட்டு அர்த்தத்தில் அதன் ஆழமான பொருளில் விளங்கி முன்னெடுப்பதற்கான ஏற்பாடுகள் கடந்த 11 ஆண்டுகளாக குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய ஒரு வளர்ச்சியை அடைந்திருப்பதாக தெரியவில்லை. முதலாவதாக நினைவுகூர்தல் என்றால் என்ன ? அது தனிய கொல்லப்பட்ட மக்களை நினைவு கூர்வது மட்டும் அல்ல. கொல்லப்பட்ட மக்களுக்கு நீதியைப் பெறுவதற்கான ஒரு போராட்டத்திலிருந்து பிரிக்கப்படவியலாத ஒரு பகுதியே ந…
-
- 0 replies
- 470 views
-
-
நினைவு கூர்தல் 2017 – குளோபல் தமிழ்ச் செய்திகளுக்காக நிலாந்தன் கனடாவில் வசிக்கும் ஒரு தமிழ்ச் செயற்பாட்டாளர் ஒரு முறை சொன்னார் எமது டயஸ்பொறாச் சமூகம் எனப்படுவது ‘நஎநவெ டியளநன’ ஆனது அவ்வப்பொழுது ஏதாவது ஒரு நஎநவெ- நிகழ்வு- வரும்பொழுது அதற்கு எதிர்வினையாற்றும். அந்த நிகழ்வு முடிந்ததும் அதை அப்படியே மறந்துவிடும். தாயகத்திலிருந்து யாராவது வந்தால் அவரைச் சுற்றி நின்று அவர் சொல்வதைக் கேட்டும். உடனடியாக உணர்ச்சிவசப்பட்டு உதவிகளையும், வாக்குறுதிகளையும் வழங்கும். ஆனால் அவர் நாடு திரும்பிய பின் நாங்கள் வழமைபோல எமது அன்றாடக் காரியங்களுக்குள் எந்திரமாக மூழ்கி விடுவோம்’ என்று. அவர் கூறியது டயஸ்பொறாச் சமூகங்களுக்கு மட்டுமல்ல தாயக்தில் வாழும் தமிழர்களு…
-
- 0 replies
- 421 views
-
-
நினைவு கூர்தல் 2021 – நிலாந்தன்… May 22, 2021 கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் வைரஸ் தொற்று இருந்தது. கடந்த ஆண்டு நினைவு கூர்தலை தனிமைப்படுத்தல் சட்டங்களை முன்வைத்து அரசாங்கம் நெருக்கடிக்கு உள்ளாக்கியது. இந்த ஆண்டும் அவ்வாறான நிலைமைகள் உண்டு என்பதை ஊகிப்பதற்கு அதிகம் அரசியல் அறிவு தேவையில்லை. அரசாங்கம் ஒன்றில் பயங்கரவாதத் தடைச்சட்டம் அல்லது தனிமைப்படுத்தல் சட்டத்தினூடாக நிலைமைகளைக் கையாளும் என்பது கடந்த ஆண்டே தெளிவாகத் தெரிந்தது. எனவே நினைவு கூர்தலை அனுஷ்டிக்க இரண்டு வழிகள்தான்இருந்தன. ஒன்று அதை மக்கள் மயப்படுத்துவது. இரண்டு மெய்நிகர் வெளியில் செய்வது. இதை குறித்தும் கடந்த ஆண்டிலும் நான் எழுதினேன் இந்த ஆண்டும் எழுதினேன். இது தொடர்பில் சம்பந்தப்பட…
-
- 0 replies
- 459 views
-
-
நினைவு கூர்தல்: யாரை யாரால் யாருக்காக? நிலாந்தன்… புனர்வாழ்வின் பின் விடுவிக்கப்பட்ட ஒரு மூத்த புலிகள் இயக்க உறுப்பினர் சொன்னார்…….. ‘நினைவு கூர்தல் தொடர்பாக நடக்கும் இழுபறிகளைப் பார்க்கும் போது முன்பு சிரித்திரன் சஞ்சிகையில் வந்த ஒரு கேலிச்சித்திரம் ஞாபகத்திற்கு வருகிறது’ என்று. அந்த கேலிச் சித்திரத்தில் ஒரு கூட்டம் எதற்காகவோ ஆளுக்காள் பிச்சுப்பிடுங்கிக் கொண்டு நிற்பார்கள். ஒரு பிச்சைக்காரர் தூரத்திலிருந்து அதைப் பார்த்துக் கொண்டிருப்பார். அவரிடம் ஒருவர் கேட்பார் அவர்கள் எதற்காகச் சண்டை போடுகிறார்கள் என்று. அதற்கவர் சொல்வார் எங்களுக்கு யார் தலைமை தாங்குவது என்பதற்காக அவர்கள் வாக்குவாதப்படுகிறார்கள் என்று. இக்கேலிச்ச…
-
- 1 reply
- 950 views
-