Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. இந்தோ- பசுபிக் பாதுகாப்பு மாநாட்டில் இலங்கை பங்குபற்றியது ஏன்? — ஜோ பைடன் நிர்வாகத்தின் அணுகுமுறை கோட்டாபய ராஜபக்சவுக்கு ஏற்புடையதாக இருக்குமென்ற நோக்கில், அமெரிக்காவின் மிலேனியம் சவால்கள் கூட்டுத் தாபனத்தின் 480 மில்லியன் டொலர்கள் கடனுதவிக்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்கான எதிர்ப்பை பௌத்த குருமார் கைவிடக்கூடும். —- அ .நிக்ஸன்- இந்தோ- பசுபிக் பிராந்தியத்தில் பதற்றத்தைத் தணிப்பது குறித்த ஏற்பாடுகளிலேயே அமெரிக்க ஜனாதிபதியாகப் புதிதாகப் பதவியேற்கவுள்ள ஜோ பைடன் கவனம் செலுத்துவாரென எதிர்ப்பார்க்கப்படுகின்றது. ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சீனாவுடன் அளவுக்கதிகமான குழப்பங்களையும் முரண்பாடுகளையும் உருவாக்கிவிட்டாரென்ற உணர்வு அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்திற்கு …

  2. ஞான­சார தேரரின் விடுதலை இன நல்லுறவுக்கு எதிரான முடிவா? பொது­பலசேனா அமைப்பின் பொதுச் செய­லாளர் கலகொட அத்தே ஞான­சார தேரர் சர்ச்­சைக்­கு­ரிய ஒரு பிர­முகர். சிறைத் தண்­டனை அனு­ப­வித்து வந்த அவ­ரு­டைய விடு­த­லையும் சர்ச்­சைக்­கு­ரி­ய­தாகி இருக்­கின்­றது. ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன பொது மன்­னிப்பு வழங்கி அவரை விடு­தலை செய்­துள்ளார். நீதி­மன்றத் தீர்ப்­பிற்கு அமைய தண்­ட­னையை அனு­ப­வித்து வந்த ஒரு சிறைக் கைதியை அரச தலை­வ­ரா­கிய ஜனா­தி­பதி பொது மன்­னிப்பின் கீழ் தண்­டனை விலக்­க­ளித்து விடு­தலை செய்­யலாம். அதற்கு அவ­ரு­டைய நிறை­வேற்று அதி­காரம் என்ற அர­சியல் அந்­தஸ்­து­ட­னான அதி­கார பலம், உரிமை அவ­ருக்கு இருக்­கின்­றது. அதனை கேள்­விக்கு உட்­ப­டுத்த முடி­யாது. …

  3. புண்ணை பொன்னாடையால் மூடிமறைக்க முற்படக்கூடாது இந்­திய பிர­தமர் நரேந்­தி­ர­மோடி அடுத்த வாரம் இலங்­கைக்கு வரு­கை­தர உள்ளார். இலங்­கைக்கு வருகை தரும் அவர் சர்­வ­தேச வெசாக் தின விழாவில் கலந்­து­கொள்ள உள்­ள­தோடு எதிர்வரும் 12 ஆம் திகதி மலை­ய­கத்­திற்கும் விஜயம் செய்ய இருக்­கின்றார். பிர­த­மரின் இலங்கை விஜயம் தொடர்பில் பல்­வேறு விமர்­ச­னங்கள் இருந்து வரு­வதும் தெரிந்த விட­ய­மாகும். இதற்­கி­டையில் மலை­ய­கத்­திற்கு விஜயம் செய்­ய­வுள்ள மோடி­ யிடம் மலை­யக மக்­களின் பிரச்­சி­னைகள் உரி­ய­வாறு முன்­வைக்­கப்­பட வேண்டும். நிலை மை­களை திரித்து கூறு­வ­தற்கு முற்­ப­டக்­கூ­டாது என்றும் கருத்­துகள் வெளிப்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றன. உலக நாடுகள் வரி­சையில் இந்­தியா …

  4. மீண்டும் படுகுழிக்குள் விழலாமா? கே. சஞ்சயன் இராணுவத்தினருடன் ஒன்றாக அமர்ந்து பேசுவதால், தமிழர் தரப்பின் அரசியல் உரிமைக்கான போராட்டத்தின் நியாயங்கள் அர்த்தமிழந்து போய் விடுமா? இது, முக்கியமானதொரு கேள்வியாக இப்போது மேலெழுந்திருக்கிறது. இந்தக் கேள்வி எழுந்திருப்பதற்குக் காரணம், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், அண்மையில் வெளியிட்டிருந்த கேள்வி - பதில் வடிவிலான அறிக்கை ஆகும். வடக்கு - கிழக்கு அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணிக் கூட்டத்தில் பங்கேற்பதற்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழு முடிவெடுத்ததும், முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவசர அவசரமாக, தானே, கேள்வியையும் எழுப்பி, தானே பதிலையும் எ…

  5. தினமென் சதுக்க படுகொலைகளை உலகம் மறக்கவிடமாட்டோம் ரோஜினா சியாவோக்கிங் ஹீ கார்டியன்- தமிழில் - ரஜீபன் 1989 இல் தினமென் சதுக்கத்தில் படையினரால் சுடப்பட்ட இளைஞன் ஒருவனின் சகோதரனனை கட்டுப்படுத்துவதற்கு தான் எவ்வளவு முயற்சிகளை மேற்கொண்டார் என்பதை லயனே நினைவுகூறுகின்றார். அவன் சிறியவன் ஆனால் பெரிய மனிதர்களை போன்று கதறினான் என அவர் தெரிவிக்கின்றார். 1989 இல் தினமென் சதுக்கத்தில் ஆர்ப்பாட்டங்கள் ஆரம்பமானவேளை லயனே ஹொங்ஹொங் பல்கலைகழகத்தில் கல்வி பயின்றுகொண்டிருந்தார்.ஆர்ப்பாட்டங்கள் பற்றி அறிந்ததும் அதற்கு ஆதரவு வழங்குவதற்காக அவர் தினமென் சதுக்கத்திற்கு சென்றார். யூன் 3 ம் திகதி சீனா 200,000 லட்சத்திற்கும் மேற்பட்ட ஆயுதமேந்திய படையினரை அப்பாவி பொதுமக்க…

  6. இலங்கை வலியுறுத்திய நிலைப்பாடு ஒன்றுக்காக, ஐக்கியநாடுகள் பொதுச்சபையில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டிருக்கின்றது என்றால், அதை நம்ப முடியுமா? நம்பித்தான் ஆகவேண்டும். ஜனாதிபதி ரணில், மீண்டும் மீண்டும் வலியுறுத்திய சித்தாந்தங்களும் தீர்வுத் திட்டங்களும்தான் ஐ.நா.வில் இன்றைய அரசியலும், பேசுபொருளும், விவாதப் புள்ளியும், எல்லாமும். இஸ்ரேல் மற்றும் பலஸ்தீனத்துக்கு இடையிலான மோதல்கள் முற்றாகமுடிவுக்குக் கொண்டுவரப்பட்டு, அங்கு நிரந்தர அமைதியும் ஆக்கிரமிப்புகளும் தவிர்க்கப்பட வேண்டுமாயின், இஸ்ரேல் மற்றும் பலஸ்தீனம் என்ற இருநாடுகள் மலரவேண்டும் என்று அண்மையில் வலியுறுத்தியிருந்தார் ஜனாதிபதி ரணில். 'சுதந்திர பலஸ்தீனம்' மலர்ந்தால் பலஸ் தீனத்துக்கு என தனி இராணுவம் தோற்றம் பெறும். பலஸ்தீன…

  7. தீர்வை மேலும் மேலும் வலியுறுத்தும் படுகொலைச் சதி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரனைப் படுகொலை செய்வதற்காகச் சதி செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டு, வடக்கில் ஐவர் கைது செய்யப்பட்டனர். இந்தச் செய்தி வெளியானதை அடுத்து, அச்சதிகாரர்களைப் போலவே, இந்நாட்டில் பல அரசியல் கட்சிகளும் ஊடகங்களும் நெருக்கடியை எதிர்நோக்கியிருப்பதாகத் தெரிகிறது. அந்தச் செய்தியைத் தத்தமது அரசியல் சித்தாந்தங்களுடன் பொருந்தும் வகையில் வியாக்கியானம் செய்வதில் உள்ள கஷ்டத்தினாலேயே, அவ்வாறு சிலர் நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கின்றனர். எனவே சிலர், அவ்வாறு ஏதும் நடந்து இருக்க…

  8. அரசாங்கம் பேச்சுவார்த்தைக்குத் தயாராகிறதா? நிலாந்தன்! பசில் ராஜபக்ஷ நிதியமைச்சராக வந்தபின் தொடர்ச்சியாக புதிய நகர்வுகளை முன்னெடுத்து வருகிறார்.ஒரு மாற்றத்தின் அலை ஏற்பட்டிருப்பதாக ஒரு தோற்றம் கட்டியெழுப்பப்படுகிறது. மாற்றத்தின் முகமாக மேற்கின் முன்னும் இந்தியாவின் முன்னும் ஐநாவின் முன்னும் தமிழ் மக்களின் முன்னும் பசில் நிறுத்தத்தப்பட்டிருக்கிறார். அரசாங்கம் எந்தெந்த முனைகளில் நெருக்கடிகளை எதிர்கொள்கிறதோ அல்லது எந்தெந்த முனைகளில் இறங்கி வந்து சுதாரிக்க வேண்டி இருக்கிறதோ அந்தந்த முனைகளில் மாற்றத்தின் முகவராக பசில் இறக்கப்க்கப்பட்டிருக்கிறார். முதலாவதாக மேற்கு நாடுகள்.அவர் ஒரு அமெரிக்கப் பிரஜை. நிதியமைச்சு வழங்கப்பட முன்பு அவர் அமெரிக்காவுக்கு போனார்.அங்கே அவருக்க…

  9. பொன் விழாக் கண்ட திராவிட கட்சிகளின் ஆதிக்கத்துக்குச் சோதனை வந்துள்ளதா? எம்.காசிநாதன் தமிழக சட்டமன்றத்தின் மானியக் கோரிக்கைகள் மீதான கூட்டத் தொடர், எதிர்வரும் 19ஆம் திகதியுடன் நிறைவடைகின்றது. “ஏட்டிக்குப் போட்டி” விவாதங்கள், “பரபரப்பான காட்சிகள்” என்று செயற்பட்டுக் கொண்டிருந்த தமிழக சட்டமன்றத்தில், இப்போது வித்தியாசமான காட்சிகள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. திராவிட முன்னேற்றக் கழகமும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திலுள்ள மூன்று அணிகளும், “இரகசியக் கூட்டணி” வைத்துக் கொண்டு விட்டார்களா என்று கேள்வி எழுப்பும் அளவுக்கான சூழல், தமிழக அரசியலில் உருவாகியிருக்கிறது. “எலியும் பூனையும் போல்” இருக்கும் தி.மு.க- அ.தி.…

  10. கிழக்குப் பல்கலைக்கழகத்தின்மீது அரசியல் அழுத்தம் பிரயோகிக்கப்படுகிறதா? பல்கலைக்கழகம் என்பது அதன் பெயருக்குப் பொருத்தமானதாகவே இருக்கவேண்டும் என்பது எழுதப்படாத விதி. கற்கைநெறிகளைச் சுதந்திரமாக அனுபவித்துக் கற்கின்ற ஓர் ஒழுங்குபடுத்தப்பட்ட நிறுவனம் என்பதும் இதன் ஒரு கருத்தாகும். ஆனால், பகடிவதை என்பது முக்கியமானதொன்றாகப் பல்கலைக்கழகத்தில் மாணவர்களால் பார்க்கப்படுகிறது. இதனால் ஏற்படும் மனப்பிறழ்வுகள், அனர்த்தங்கள், பின்னடைவுகள் மிகவும் மோசமானது. அதனால்தான், தற்போது பல்கலைக்கழகங்களில் பகடிவதை தடை செய்யப்பட்டுள்ளதுடன், அதில் ஈடுபடுபவர்களைப் பல்கலைக்கழகங்களிலிருந்து நீக்கிவிடுவதுடன், அவர்கள் எந்தவொரு ப…

  11. தமிழர்களுக்கு இப்பொழுது தேவைப்படுவது விக்னேஸ்வரன் என்ற குத்துச்சண்டை வீரன்தான் – நிலாந்தன்.. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஓரு பதிலை மிகச் சாதாரணமாக வாராந்தக் கேள்வி பதில் ஒன்றிற்கூடாக ஏன் விக்னேஸ்வரன் சொன்னார்? அவரிடமிருந்து அந்த பதிலை வரவழைப்பதற்காக பலரும் பல மாதங்களாக முயன்று வந்தார்கள். ஒரு மாற்று அணியை உருவாக்க வேண்டுமென்று இதய சுத்தியோடு உழைத்த பலரும் அவரிடம் அந்தக் கேள்வியைக் கேட்டிருக்கிறார்கள். 2009ற்குப் பின்னரான தமிழ் அரசியலை பொருத்தமான ஒரு தடத்தில் ஏற்ற வேண்டுமென்று முயற்சித்த பலரும் அவரிடமிருந்து அந்த பதிலை எதிர்பார்த்தார்கள். இப்படிப்பட்ட தரப்புக்களுக்கெல்லாம் ரஜனிகாந்தைப் போல பதில் கூறிய விக்னேஸ்வரன் அவருடைய மாணவரும் இப்பொழ…

  12. சமூகத்தில் இடைவெளிகளும் வேண்டும்! இதைத்தான் கொரோனா சொல்கிறதோ? கணபதி சர்வானந்த “எனக்கு நோய் தொற்றின் அறிகுறி தென்படுகிறது. எனவே வைத்தியசாலைக்கு வரவேண்டும்” என்று கேட்கும் ஒரு பிரஜையை “இங்கு வராதே. உனக்கு நிவாரமளிக்கும் நிலையில் நாம் இல்லை” என்று சொல்லும் ஒரு அமெரிக்கச் சுகாதாரக் கட்டமைப்பா?, அல்லது “எனக்கு தொண்டை அரிக்கிறது. காய்ச்சல் விடவில்லை” என்று சொல்லும் ஒரு பிரஜையை “ சில நிமிடங்கள் பொறுத்திருங்கள். உடனே அம்புலன்ஸ் கொண்டு வந்துவிடுகிறோம்” என்று சொல்லப்படும் இலங்கை அரசின் சுகதாராக் கட்டமைப்பா? இந்த இரண்டிலும் எது சிறந்தது? எது வலுமிக்கது? இது போன்ற பல விடயங்களைத் தீர்மானித்துக் கொள்ளக்கூடிய சந்தர்ப்பத்தைத் தந்திருக்கிறது கொரோனா. அனைத்துலக நா…

  13. தமிழரசுக் கட்சிக்குள் ஏற்பட்ட பிளவும் சிவில் சமூகங்களும்! நிலாந்தன். தமிழரசுக் கட்சி அதன் 73 ஆண்டுகால நீண்ட வரலாற்றில் உட்கட்சி மோதல் காரணமாக நீதிமன்றம் ஏற வேண்டிய ஒரு நிலை தோன்றியிருக்கின்றது. இந்த வழக்குகளில் சுமந்திரன் தான் நேரடியாக சம்பந்தப்படவில்லை என்று கூறுகிறார்.ஆனால் எல்லாவற்றின் பின்னணிகளும் அவர்தான் இருக்கிறார் என்ற சந்தேகம் பரவலாகக் காணப்படுகின்றது. தமிழரசு கட்சிக்குள் நடந்த தலைவர் தெரிவில் மட்டும் சுமந்திரன் தோற்கவில்லை. அதன் பின் கட்சிக்குள் நடக்கும் எல்லா விடயங்களிலும் அவர் தொடர்ந்தும் தோற்றுக் கொண்டேயிருக்கிறார். சில மாதங்களுக்கு முன்பு வரை அவரைப் போற்றிப் புகழ்ந்தவர் கம்பவாருதி. வெளிநாடுகளோடு உறவாடவும் வெளிவகாரங்களைக் கையாள்வதற்கும் சுமந்திரனைப் …

    • 1 reply
    • 426 views
  14. ஐரோப்பிய ஆதிக்கக் கப்பல் ஆட்டம் காண்கிறதா-பா.உதயன் சீனாவின் பெரும் அலையோடு மோதி மூழ்கிக்கொண்டிருகிறதா இருநூறு வருட கால ஐரோப்பிய அதிகார ஏகாதிபத்தியம். முழித்து விட்டது ஆசியாவில் படுத்திருந்த சிங்கம் ஒன்று. இப்போ வேட்டை ஆட ஆரம்பித்து விட்டது . கொஞ்சம் ஆடித்தான் போய் இருக்கிறார்கள் ஐரோப்பியரும் அமெரிக்கரும். ஆசியாவில் இருந்து புறப்பட்ட றகன் ஒன்று அனைத்து உலக வேலிகளையும் அறுத்துக் கொட்டி கொழுத்து பெருத்து இருக்கிறது பொருளாதார பெருச்சாளி ஒன்று. நெப்போலியன் சீனாவை பார்த்து சொன்னது போலவே ஆசியாவில் சிங்கம் ஒன்று உறங்கிக்கொண்டிருக்கிறது. அது முழிக்கும் போது உலகம் தாங்காது “என்றான் Let China Sleep, for when she wakes, she will shake the world,” அதே போல் கொழுத்த பணக்கா ர…

  15. “இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளில் ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்கு இடமளிக்கப்படாமை மிகப்பாரதூரமான விடயமாகும்” முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகள் இலங்கை சுதந்திரம் பெறுவதற்கு முன்னரே ஆரம்பிக்கப்பட்டாயிற்று. இலங்கையை ஆட்சி செய்த காலணித்துவ ஆட்சியாளர்கள் காலம் முதல் தற்போது வரைக்கும் அந்த நடவடிக்கைகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. முஸ்லிம்களுக்கு எதிரான அனைத்து நடவடிக்கைகளையும் முஸ்லிம் அரசியல், மதத் தலைவர்கள் மிகவும் புத்திசாதுரியமாகவும், அறிவுபூர்வமாகவும் கையாண்டு வெற்றி கொண்டு வந்துள்ளார்கள். பெரும்பாலும் முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகள் அவர்களின் பொருளாதார வளர்ச்சியில் ஏற்பட்ட பொறாமையினாலேயே ஏற்பட்டுள்ளன. அத்தோடு பள்ளிவாசல்…

  16. ஆள்வோரின் ஆசைக்கு இரையாகும் கலையும் கலாசாரமும் - கருணாகரன் ஊரே தோரணங்களினாலும் வாழைகளினாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது. வீதிகளில் அலங்கார வளைவுகள். ஒவ்வொரு வீட்டின் முன்பாகவும் நிறைகுடம் வைத்துக் குழுமியிருக்கும் குடும்பங்கள். தெருவிலே ஆடலும் பாடலுமாகக் கலைஞர்கள். பொம்மலாட்டம், குதிரையாட்டம் பார்க்கும் சிறுவர்களின் குதூகலம், கூத்தும் நடனமும், விருதும், விருந்துமாகக் கொண்டாடிக் கழிந்த இரவுப்பொழுது. ராஜாக்களின் (மன்னராட்சி) காலத்தில்தான் இப்படியெல்லாம் இருந்ததாக அறிந்திருக்கிறோம். அது உண்மையா இல்லை, வெறும் கதைதானா என்று தெரியாது. ஆனால், இப்போது நடந்திருப்பது உண்மை. கிளிநொச்சியில் உள்ள மலையாளபுரம் என்ற ஊரிலேய…

  17. http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2016-10-08#page-15

  18. தமிழ்த் தேசிய அரசியலுக்குச் சோதனை -இலட்சுமணன் விஞ்ஞானத்தில் மாத்திரமல்ல, உலகின் அனைத்து விடயங்களிலும் சோதனை முயற்சிகள் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன. அதேபோன்றுதான், அரசியலிலும் சோதனைகள், சாதனைகள், வெற்றிகள், தோல்விகள் சாதாரணமானவை; இவை தொடர்ந்தும் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. இவை அரசியலில் வெறுமனே, தேர்தல்களுக்கு மட்டுமானவை இல்லை; ஆனால், இப்போதைய காலச்சூழலில் இந்தச் சோதனை முயற்சிகள் தேர்தல்கானவையாகவே மாறியிருக்கின்றன. இதில் நகைச்சுவை என்னவென்றால், இலங்கையில் தமிழர் அரசியல் என்பது, தமிழ்த் தேசியத்துக்கு மாத்திரமே சொந்தமானது என, எல்லோரும் நினைக்கிறார்கள். இலங்கையின் அரசியல் கள நிலைவரம் மிகவும் மோசமாகத்தான் இருக்கிறது. ஒவ்வொருவருக்க…

  19. 83யூலை நினைவுகளின் பின்னணியில் ராஜமகேந்திரனை நினைவு கூர்தல் – நிலாந்தன்! August 1, 2021 மகாராஜா ஊடக குழுமத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர் ஒருவரிடம் சிவராம் பின்வருமாறு கூறியிருக்கிறார் “ உங்களுடைய தலைவர் ராஜமகேந்திரனிடம் நாட்டைக் கொஞ்ச நாளைக்கு ஆளக் குடுத்தால்…வடிவா ஆண்டு காட்டுவாரடா ! “ – என்று. தமிழ் மக்கள் ஜூலை 83ஐ நினைவு கூரும் ஒரு காலகட்டத்தில் ராஜமகேந்திரன் காலமாகியுள்ளார். அவர் ஒரு தமிழ் பெரு முதலாளி. ஒரு ஊடக குழுமத்தில் தலைவர். எல்லாவற்றுக்கும் அப்பால் தமிழ் மக்களைப் பொறுத்தவரையிலும் அவர் ஒரு நம்பிக்கையின் குறியீடு. எப்படியென்றால் 83 ஜூலையில் அவருடைய சொத்துக்கள் அழிக்கப்பட்டன எரிக்கப்பட்டன. எனினும்,தனது சொத்துக்கள் எரிந்த…

  20. பேரினவாத கட்சிகளால் உருவாகின்றது பேராபத்து!! பேரினவாத கட்சிகளால் உருவாகின்றது பேராபத்து!! தமிழ் மக்­களை வளைத்­துப் போடு­கின்ற முயற்­சி­க­ளில் தென்­னி­லங்­கை­யைச் சேர்ந்த கட்­சி­கள் தீவி­ர­மாக ஈடு­பட்­டுள்­ள­ன. ஏற்­க­னவே ஐக்­கிய தேசி­யக்கட்­சி­யும், சிறி­லங்கா சுதந்­தி­ரக்கட்­சி­யும் தமி­ழர்­க­ளி­டையே ஊடு­ரு­வி­யுள்ள நிலை­யில் மக்­கள் விடு­தலை முன்­ன­ணி­யும் அந்த முயற்­சி­யில் ஈடு­பட்டு வரு­வதை அவ­தா­னிக்க முடி­கின்­றது. …

  21. அமெரிக்க ரஷ்யத் தலைவர்களின் உச்சிமாநாடு சதீஷ் கிருஷ்ணபிள்ளை எதிர்பார்க்கப்பட்ட சாதனைகளும், வெளித்தெரிந்த பாசாங்குகளும் இரு நாடு­களின் தலை­வர்கள் சந்­திக்­கி­றார்கள் என்றால், அந்த சந்­திப்பு பல வழி­களில் முக்­கி­யத்­துவம் பெறும். அதுவும் அமெ­ரிக்க ஜனா­தி­ ப­தியும், ரஷ்ய ஜனா­தி­ப­தியும் சந்­திக்­கி­றார்கள் என்றால், அதற்­குள்ள முக்­கி­யத்­து­வத்தைக் கேட்­கவே வேண்டாம். இந்த சந்­திப்பு அமெ­ரிக்­கா­விற்கும், ரஷ்­யா­விற்கும் மாத்­தி­ர­மன்றி, முழு உல­கிற்கும் முக்­கி­யத்­துவம் வாய்ந்­த­தாக இருக்கும். இவ்­விரு நாடு­களும் உலக வல்­ல­ர­சு­க­ளாக இருப்­ப­தற்கு அப்பால், இரு முகாம்­களைப் பிர­தி­நி­தித்­துப்­ப­டுத்­து­வதும், உ…

  22. உள்நாட்டுப்போர் முடிவுக்கு வந்து 15 வருடங்கள் ; தமிழர் அரசியல் எங்கே போகிறது? May 20, 2024 — வீரகத்தி தனபாலசிங்கம் — சுமார் முப்பது வருடங்களாக நீடித்த இலங்கையின் உள்நாட்டுப்போர் முடிவுக்கு வந்து பதினைந்து வருடங்கள் கடந்துவிட்டன. அரசியல் பிரச்சினைகளும் தீரவில்லை. பொருளாதாரத்திலும் நாடு் முன்னேறவில்லை. மாறாக சகல பிரச்சினைகளுமே முன்னரை விடவும் மிகவும் மோசமாக தீவிரமடைந்து நாடு இறுதியில் வங்குரோத்து நிலை அடைந்ததையே நாம் கண்டோம். நாட்டைச் சின்னா பின்னப்படுத்திய போருக்கு காரணமான தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் இணங்கத்தீர்வு ஒன்றைக் காணவேண்டிய தேவை ஒன்று இருக்கிறது என்று தென்னிலங்கை சிங்கள அரசியல் சமுதாயத்தின் பெரும்பகுதியிடம் சிந்தனை இருப்பத…

  23. சிதைக்கப்படும் தமிழரின் பலம் கே. சஞ்சயன் / 2018 ஒக்டோபர் 26 வெள்ளிக்கிழமை, மு.ப. 05:18 தமிழ்த் தேசியத்தை முன்னிறுத்தி, அரசியல் நடத்த வருபவர்களும், அரசியல் நடத்திக் கொண்டிருப்பவர்களும், தமிழ் மக்களின் இன்றைய அடிப்படைத் தேவையைச் சரியாகப் புரிந்து கொண்டிருக்கிறார்களோ என்ற சந்தேகமே இப்போது ஏற்படுகிறது. வடக்கில் புதிது புதிதாக உருவெடுக்கும் கட்சிகள்தான், இந்தச் சந்தேகம் எழுவதற்குக் காரணம். தமிழ் மக்களைப் பொறுத்தவரையில், அவர்களின் இன்றைய முக்கியமான அரசியல் ரீதியான தேவை, உரிமையை உறுதிப்படுத்திக் கொள்வதும், நிலையான அரசியல் தீர்வு ஒன்றை எட்டுவதும் தான். தமிழ் மக்களின் பிரச்சினைக்கு நிலையானதும் நிரந்தரமானதும் தமிழ் மக்கள் எதிர்பார்க்கின்ற, அவர்களின்…

  24. உலக அரங்கில் பெரியார்; ஆக்ஸ்ஃபோர்டு கருத்தரங்கமும், முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்த பெரியாரின் திருவுருவப் படமும் 8 Sep 2025, 7:12 AM ராஜன் குறை தொன்மையான தமிழ் பண்பாடு உலக சிந்தனைக்கு அளித்த எத்தனையோ கொடைகளில் இரண்டினை முதன்மைப்படுத்திச் சொல்ல வேண்டும் என்றால் அது ஐயன் திருவள்ளுவரின் திருக்குறளும், பெரியாரின் சிந்தனைகளும் எனலாம். திருவள்ளுவர் தொடர்ந்து மொழியாக்கம் செய்யப்பட்டு வந்திருக்கிறார். லண்டனில் முதல்வர் ஸ்டாலின், திருக்குறளை 1886-ஆம் ஆண்டே மொழியாக்கம் செய்த ஜி.யு.போப் அவர்களின் கல்லறைக்கு சென்று மரியாதை செலுத்தியுள்ளார். அதனால் திருக்குறள் உலகில் பரவலாக அறியப்பட்டது. பெரியாரைப் பொறுத்தவரை அவர் தன் சிந்தனைகளைத் தொகுத்து நூலாக எழுதவில்லை. ஒரு சில பிரசுரங்கள் அவ…

  25. கல்வி தந்தைகளின் அலப்பறைகள் இந்தியாவில் மட்டுமல்ல, இலங்கையிலும் கல்வித் தந்தைகள் உருவெடுக்கத் தொடங்கியுள்ளார்கள். அயோக்கியர்களின் கடைசிப் புகலிடம் தேசபக்தி என்பதுபோல, கல்வித் தந்தைகளின் கடைசிப் புகலிடம் நாடாளுமன்ற அரசியல். இன்று இலங்கையின் கல்வித்துறை எதிர்நோக்குகின்ற சவால்கள் பல. தனியார் பல்கலைக்கழகங்களை அனுமதிப்பதும் தனியார் கல்வியை ஊக்குவிப்பதும் அதற்கான தீர்வுகள் அல்ல. இலங்கையில் இலவசக் கல்வி, ஆசியாவின் நாடுகள் பலவற்றுக்கும் முன்னரே பல்கலைக்கழகம் வரை விரிவுபடுத்தப்பட்டு விட்டது. அத்துடன், தாய் மொழிக் கல்வியும் சேர, கிராமப்புறத்து நடுத்தர வர்க்கத்தினருக்கும், கீழ் நடுத்தர வர்க்கத்தினரில் ஒரு பகுதியினருக்கும், தொழிலாளர் வர்க்கத்தினரில் சி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.