Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. ஆசியா பிராந்திய பூகோள அரசியலில் சிறீலங்காவின் நடுநிலைத்தன்மை நிலைக்குமா? – வேல்ஸ்சில் இருந்து அருஸ் தமது அதிகாரங்களை மையமாகக்கொண்டும், சிங்கள மக்களின் நலன்களை முன்நிறுத்தியும் காலம் காலமாக கொண்டுவரப்படும் அரசியல் திருத்தங்களின் பட்டியலில் 20 ஆவது திருத்தச்சட்டமும் இணைந்துள்ளது. 1978 களில் ஜே.ஆர் ஜெயவர்த்தனாவினால் கொண்டுவரப்பட்ட நிறைவேற்று அதிகாரம் கொண்ட அரச தலைவர் பதவிக்கான அத்தனை சலுகைகளையும் தற்போதைய புதிய சட்டம் மீண்டும் வழங்கியுள்ளது. ஜே.வி.பியின் அழுத்தம் காரணமாக கொண்டுவரப்பட்ட 17 ஆவது திருத்தச்சட்டத்தின் சரத்துக்களையும், ரணிலின் பதவிக்கான அதிகாரத்தை குவிப்பதற்கு அனுசரணை வழங்கிய 19 ஆவது திருத்தச்சட்டத்தையும் தற்போதைய புதிய சட்டம் இல்லாத…

  2. 'செயற்பாட்டு மூலோபாயம்' என்கிற சொல்லாடல் , மேற்குலக புவிசார் அரசியல் நோக்கர்களால் தற்போது பரவலாகப் பயன்படுத்தப் படுவதனை அவதானிக்கலாம். அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா , ஆசிய-பசிபிக் பிராந்தியம் தொடர்பாக முன்வைத்த நீண்ட கால மூலோபாயத்திட்டம் குறித்து, தமது விமர்சனங்களையும் ,ஆலோசனைகளையும் தெரிவிக்கும் பல அரசறிவியலாளர்கள் , இந்த மூலோபாய திட்டத்திற்கான செயல்வடிவங்கள் எவ்வாறு வடிவமைக்கப்பட வேண்டுமென்பதில் முரண்பட்டுக் கொள்வதைக் காணலாம். ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் விவகாரங்களில் இருந்து விலகி, ஆசிய-பசிபிக் பிராந்தியம் நோக்கி நகரும் அமெரிக்கா, அவுஸ்திரேலியா சிங்கப்பூர் போன்ற நாடுகளில் தமது படைவலுவினை அதிகரிக்கும் அதேவேளை, ஏனைய தென்னாசிய மற்றும் கிழக்கு ஆசிய வளர்முக நாடுகளுடன் …

    • 0 replies
    • 658 views
  3. தாய்லாந்து: முடியாட்சிகளின் எதிர்காலம் தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ முடியாட்சிகள் என்றென்றைக்கும் உரியனவல்ல; அவை காலம்கடந்து நிலைப்பதில்லை. அவற்றின் பெறுமதி அப்பதவிகளின் அலங்கார நோக்கத்துக்காகவன்றி அதிகாரத்தின் பாற்பட்டதன்று. காலம் அதன் போக்கில் எழுதிச் செல்லும் கதையில் இறந்த காலத்துக்குரியதாய் முடியாட்சிகளை மெதுமெதுவாய் நகர்த்திக் கொண்டிருக்கிறது. உலகின் மிக நீண்டகாலம் ஆட்சி செய்த அரசர் என்ற பெருமையைத் தன்வசம் வைத்திருந்த தாய்லாந்து நாட்டின் மன்னர் பூமிபோல் அடுல்யடேஜ் கடந்தவாரம் மரணமடைந்தார். 70 ஆண்டுகளாகத் தாய்லாந்தின் மன்னராக இருந்த இவரின் ஆட்சிக்காலத்தில் அந்நாடு பாரிய மாற்றங்களைக் கண்டது. அம்மாற்றங்களின் விளைவால் தாய்லாந்து மக்களின் …

  4. Started by nunavilan,

    அரசியல் தகனம் -எம்.எஸ்.எம். ஐயூப் கொவிட்-19 நோயால் மரணிக்கும், முஸ்லிம்களின் உடல்களைத் தகனம் செய்வது தொடர்பான விவாதம், மீண்டும் சூடு பிடித்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம், முதன் முறையாக இந்த விவாதம் ஆரம்பித்தது. அதன் பின்னர், கொரோனா வைரஸின் தொற்று, படிப்படியாகக் குறைந்து வந்ததை அடுத்து, மரணங்களும் குறைந்தன. இதனால், தகனம் தொடர்பான விவாதமும் தணிந்துவிட்டது. கொரோனா வைரஸின் தொற்றுப் பரவல், மீண்டும் கடந்த ஒக்டோபர் மாதம் ஆரம்பமாகும் போது, பொது மக்களைப் போலவே அரசாங்கமும் அதிகாரிகளும் கொவிட்-19 நோய், இனி நாட்டைத் தாக்காது என்பதைப் போன்றதோர் அலட்சியப் போக்கில் தான், செயற்பட்டு வந்தனர். ஆளும் கட்சி அரசியல்வாதிகள், கொவிட்-19 நோயைக் கட்டுப்பட…

  5. நல்லிணக்கம் கதைக்கும் நாக்குகள் - காரை துர்க்கா “நல்லிணக்கம் தெற்கில் இருந்து மாத்திரம் ஏற்படாது, வடக்கில் இருந்தும் நல்லிணக்கத்துக்கான பயணம் ஆரம்பிக்கப்பட வேண்டும். அதனைத் தடுக்கும் வகையில் வடக்கு மாகாண முதலமைச்சர் கருத்து வெளியிட்டு வருகின்றார். மேலும், தான் முன்வைக்கும் கருத்துக்கள் தொடர்பில் முதலமைச்சர் கூடிய கவனம் எடுக்க வேண்டும், கருத்தின் தாக்கம் பற்றி அறிந்து தெரிவிக்க வேண்டும்” எனவும் அண்மையில் கொழும்பு, ராஐகிரியவில் அமைந்துள்ள வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் மத்தியில் வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்திருந்தார். நல்லிணக்கம் என்ற சொல், நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர், அ…

  6. இலங்கை முன்னிருக்கும் வரலாற்று வாய்ப்பு! ஆட்சி மாற்றம் வேண்டி வாக்களித்து, இலங்கையின் அதிபராக மைத்ரிபால சிறிசேனாவையும், பிரதமராக ரணில் விக்ரமசிங்கேயும் இலங்கை மக்கள் தேர்ந்தெடுத்து இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, அரசியல் நெருக்கடியில் சிக்கிக்கொண்டிருக்கிறது தேசியக் கூட்டணி அரசு. பத்தாண்டு காலமாக, கடும் கண்காணிப்பு, அச்சுறுத்தல்கள், ஊடகத்தின் மீதான அடக்குமுறை, ஜனநாயக அமைப்புகளைப் பலவீனப்படுத்துதல் என்று மகிந்த ராஜபக்ச நடத்திய சர்வாதிகார ஆட்சி, 2015 ஜனவரி 9-ல் முடிவுக்கு வந்தது. அவரது ஆட்சியில், வளர்ச்சித் திட்டங்களை விடவும் ஊழல்கள், ஒருதலைப்பட்ச நடவடிக்கைகள் போன்றவைதான் பிரதானமாக இருந்தன. போர் வெற்றி மூலம், இலங்கையின் பெரு…

  7. காலம் கடத்தும் செயற்பாடு -செல்வரட்னம் சிறிதரன் இனியும் காலம் கடத்த முடியாது. இது நடவடிக்கைகளுக்கான காலம். எனவே, வார்த்தைகள் போதும். செயற்பட வேண்டும். நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று இலங்கை அரசாங்கத்தை நோக்கி சர்வதேச மன்னிப்புச் சபை இடித்துரைத்திருக்கின்றது. வடபகுதிக்கான மூன்று நாள் விஜயத்தை மேற்கொண்டிருந்த சர்வதேச மன்னிப்புச்சபையின் பொதுச் செயலாளர் சாளில் ஷெட்டியின் தலைமையிலான குழுவினர், பாதிக்கப்பட்ட மக்களை, அவர்கள் போராட்டம் நடத்தும் இடங்களில் நேரடியாகச் சந்தித்து நிலைமைகளைக் கேட்டறிந்தனர். மன்னார் முள்ளிக்குளம், மறிச்சுக்கட்டி, மன்னார் நகரம், கிளிநொச்…

  8. உள்ளுராட்சி தேர்தல் நடத்தப்படுமா? ஜன­நா­யக வழிப்­பா­தையில் செல்­வ­தாக தம்­பட்­ட­ம­டிக்கும் எந்­த­வொரு நாடும் உரிய காலத்தில் தேர்­தலை நடத்தி முடிக்க வேண்­டி­யது ஜன­நா­யக கட­மை­யாகும். 2015 ஆம் ஆண்­டுடன் காலா­வ­தி­யாகிப் போன உள்­ளூ­ராட்சி மன்றங்களுக்கான தேர்­தலை இன்னும் நடத்­தாமல், பல்­வேறு கார­ணங்­களைக் காட்டி அர­சாங்கம் இழுத்­த­டிப்பு செய்­து­வ­ரு­கின்­றது என எதிர்த்­த­ரப்­பினர் கூறும் குற்­றச்­சாட்­டுக்­களில் உண்­மை­யி­ருக்­கத்தான் செய்­கி­றது. உள்­ளூ­ராட்சி மன்ற தேர்­தல்­களை நடத்­தும்­படி அர­சாங்­கத்தை வலி­யு­றுத்தி ஒன்­றி­ணைந்த எதிர்க்­கட்­சி­யினர் இம்­மாதம் 31 ஆம் திகதி முதல் நாடு­த­ழு­விய போராட்­டத்தில் ஈடு­ப­டப்­போ­வ­தா…

  9. பொங்கல் பொதியோடு வந்தீரோ தம்பி ? நிலாந்தன்! January 16, 2022 கடந்த செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணத்தில் சஜித் பிரேமதாச ஒரு சந்திப்பை ஒழுங்குபடுத்தியிருந்தார். ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணிக்கு ஆதரவான தொழில்சார் வல்லுநர்களுக்கான தேசிய அமைப்பும் புத்திஜீவிகள் மன்றமும் மேற்படி சந்திப்பை ஒழுங்குபடுத்தியிருந்தன. யாழ்ப்பாணத்தில் உள்ள டில்கோ உல்லாச விடுதியில் இரவு உணவுடன் நடந்த அச்சந்திப்பில் புத்திஜீவிகள் மன்றத்தைச் சேர்ந்த பேராதனை பல்கலைக் கழகத்துப் புலமையாளர்கள் பங்குபற்றினார்கள். அவர்களுடைய நண்பர்களான யாழ் பல்கலைக்கழகத்தின் அரசறிவியல் துறையைச் சேர்ந்த புலமையாளர்களும் அதில் பங்குபற்றினார்கள் சஜித் பிரேமதாச தற்போதுள்ள பொருளாதா…

  10. சுட்ட மண்ணும் பச்சை மண்ணும் - செல்வரட்னம் சிறிதரன்:- 25 ஜனவரி 2014 சர்வதேச மற்றும் உள்ளுர் அரசியல் நெருக்கடிகளையும் பயன்படுத்தி அரசாங்கம் தனது ஆட்சியதிகாரத்தை நிரந்தரமாக்குகின்ற துணிச்சலான அரசியல் தந்திரத்தைப் பரிசோதிக்க முனைந்திருக்கின்றது. உள்நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிகள் மற்றும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐநாவின் மனித உரிமைப் பேரவையில் கொண்டு வரப்பட்வுள்ள அரசுக்கு எதிரான பிரேரணை என்பவற்றுக்கிடையில் இந்தப் பரிசோதனை முயற்சி மேற்கொள்ளப்படவுள்ளதைக் காண முடிகின்றது. முப்பது வருடங்களாகத் தொடர்ந்த மோசமான யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு ஐந்து வருடங்களாகப் போகின்றன. யுத்தம் காரணமாக அழிவுக்கு உள்ளாகிய நாட்டின் வடக்கு கிழக்கு உட்பட முழு நாட்டையும் முன்ன…

  11. அரசை வழிபடும் அறிவுஜீவி க. திருநாவுக்கரசு ஏறக்குறைய இருபது ஆண்டுகளுக்கு முன்னர் புதிய பொருளாதாரக் கொள்கைகள் பற்றி விவாதிப்பதற்கான கூட்டத்தைச் சென்னைப் பத்திரிகையாளர்கள் சங்கம் ஏற்பாடு செய்திருந்தது. நரசிம்ம ராவ், மன்மோகன் சிங் தரப்பை சுப்பிரமணியன் சுவாமியும் ஆர்.எஸ்.எஸ். தரப்பை (பாஜக தரப்பை அல்ல) எஸ். குருமூர்த்தியும் பேசினர். (இடதுசாரிகளின் தரப்பைப் பேச வேண்டிய என். ராம் அவசர வேலை காரணமாக வெளியூர் சென்றுவிட்டதால் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை) விவாதத்தை நெறிப்படுத்துபவராக இருந்தவர் துக்ளக் பத்திரிகை ஆசிரியர் சோ ராமசுவாமி. விவாதத்திற்குப் பின்னர் கேள்வி நேரத்தில் நடுத்தர வயதுப் பெண் ஒருவர் விவாதிக்கப்பட்ட கருத்து என்ன, தான் என்ன கேள்வி கேட்கிறோம் என்ற தெளிவு …

  12. வாக்குறுதி நிறைவேற்றப்படுமா நல்­லாட்சி அர­சாங்­கத்தின் மீதான நெருக்­க­டிகள் பல்­வேறு வடி­வங்­களில் அழுத்­தங்­களைப் பிர­யோ­கிக்கத் தொடங்­கி­யி­ருக்­கின்­றன. இந்த அழுத்­தங்­களைச் சமா­ளித்து, பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு கண்டு, நாட்டு மக்­களின் நம்­பிக்­கையை இந்த அரசு வெற்­றி­கொள்ள முடி­யுமா என்­பது இப்­போது முக்­கிய கேள்­வி­யாக எழுந்­தி­ருக்­கின்­றது. அர­சியல் ரீதி­யான ஊழல்­க­ளுக்கும், மோச­டி­க­ளுக்கும் முடிவு கட்டி, ஜன­நா­ய­கத்­தையும் இனங்­க­ளுக்­கி­டை­யி­லான நல்­லி­ணக்­கத்­தையும் கட்­டி­யெ­ழுப்பி, ஐக்­கி­யத்தை உரு­வாக்கி நாட்டை முன்­னேற்றிச் செல்வோம் என்­பதே நல்­லாட்சி அர­சாங்­கத்தின் 2015 ஆம் ஆண்டு தேர்தல் வாக்­கு­று­தி­யாகும். ஆயினும…

  13. முஸ்லிம் - தமிழ் உறவின் எதிர்காலம் நகமும் சதையும் போன்ற தொடர்பைக் கொண்டிருந்த முஸ்லிம்களுக்கும் தமிழர்களுக்கும் இடையிலான உறவு, இப்போது பின்னோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறதோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. அபாயா விவகாரம் உள்ளடங்கலாக, இரண்டு இனங்களுடனும் தொடர்புபட்ட பல விடயங்களை, வெளிப்புறச் சக்திகள் தங்களுடைய நலனுக்காக அரசியலாக்கி, பூதாகரமாக்கி விடுகின்றமையாலும், தமிழ், முஸ்லிம் அரசியல்வாதிகளின் செயற்பாடுகளாலும் இந்த உறவில், கீறல் விழத் தொடங்கியுள்ளதோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இன நல்லிணக்கம் பற்றிப் பேசிப்பேசியே உள்ளுக்குள் பகைமைத் தீயை வளர்த்துக் கொண்டிருக்கும் சமூகங்களாக, சிறுபான்மையினர் மாறி…

  14. பஞ்சாப் மாநிலமே இப்போது அதிகபட்ச கொதிநிலையில் இருக்கிறது. உறையில் இருந்து உருவப்பட்ட வாளைக் கையில் ஏந்தியபடிஇ முகத்தில் கோபம் கொப்புளிக்க தெருவில் சீக்கியர்கள் ஒருவருக்கொருவர் ஆவேசமாக மோதிக்கொண்டிருந்தால்இ ஏன் அனல் பறக்காது? எங்கு பார்த்தாலும் சாலை மறியல்இ கடை உடைப்புஇ கல்வீச்சு என்று பஞ்சாப் மாநிலமே அல்லோலகல்லோலப் பட்டுக்கொண்டிருக்கிறது. சீக்கியர்களின் புண்ணிய பூமியான பஞ்சாப்இ திடீரென கலவர பூமியாக அவதாரம் எடுத்திருப்பதற்கு என்னதான் காரணம்? குர்மித்சிங் ராம் ரஹீம் என்பவரது புகைப்படம்தான் இத்தனை காரியங்களுக்கும் பிள்ளையார்சுழி போட்டிருக்கிறது. ‘தேரா சச்சா சவுதா’ என்பது சீக்கிய மதத்தின் உட்பிரிவுகளுள் ஒன்று. இதன் தலைவராக செயல்பட்டுக் கொண்டிருப்பவர் ராம் ரஹீம். இ…

  15. அடிப்படை உரிமை மீறல் மனுவை விசாரணை செய்ய ஏழு நீதியரசா்கள் நியமிக்கப்பட்டமை எந்த அடிப்படையில்? இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றத்தைக் கலைத்தமை தொடர்பான இலங்கை வர்த்தமானி அறிவிப்புக்கு எதிரான வழக்கை விசாரணை செய்ய இலங்கை ஒற்றையாட்சி அரசின் உயர் நீதிமன்ற பிரதம நீதியரசர் நளின் பெரேரா தலைமையிலான ஏழு நீதியரசர் குழு நியமிக்கப்பட்டுள்ளது. இந்த நியமனங்களை பிரதம நீதியரசர் நளின் பெரேரா வழங்கியுள்ளார். நாடாளுமன்றத்தைக் கலைத்தமைக்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சி உட்பட ஏனைய அரசியல் கட்சிகள், பொது அமைப்புகள் அனைத்தும் உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுவாகவே தாக்கல் செய்திருந்தன. ஆனால் அரசியல் நெருக்கடி விவகாரமாகக் கருதி …

  16. சயனைட் குப்பி போராளிகளின் கழுத்தில் தொங்குவதற்கு வழிகோலிய நாள் ஜூன் 5 ஜூன் 5 ஈழத்தமிழினத்தின் அரசியல் போராட்ட வரலாற்றில் பல பதிவுகளைக் கொண்ட நாளாகும். ஜூன் 5 தான் பல திருப்பு முனைகளை ஏற்படுத்திய நாளாகும். ஆயுதப் போராட்ட காலத்திலும் பல சாதனைகளை வெற்றிச் சமர்களைக் கண்ட நாளாக ஜூன் 5 திகழ்கின்றது. ஆயுதப் போராட்டம் எழுச்சி பெறவும் சயனைட் என்கின்ற கொடிய நஞ்சு போராளிகளின் கழுத்தில் தொங்குவதற்கும் இந்த நாள் தான் வழிகோலியது என்பதில் மிகையில்லை. மலையகத்தில் வாழ்ந்த மக்களின் குடியுரிமையையும் வாக்குரிமையையும் ஜக்கிய தேசியக் கட்சி 1948 ல் பறித்து மக்களை நாடற்றவர்களாக்கியதுடன் நாடாளுமன்றத்தில் தமிழ் மக்களின் உறுப்பினர் எண்ணிக்கையையும் குறைத்தது. இந் நேரத்தில் தான் தந்தை செல்வா '…

  17. பதினைந்தாவது மே 18 – நிலாந்தன். மே 18 வருகிறது. 2009இலிருந்து இன்றுவரையிலுமாக 15 ஆண்டுகள் கழிந்து விட்டன. இது கிட்டத்தட்ட ஆயுதப் போராட்டம் நடந்த காலகட்டத்தில் அரைவாசிக் காலத்துக்கு கிட்ட வரும். ஆயுதப் போராட்டம் மொத்தம் 38 ஆண்டுகள். இதன் அரைவாசிக்காலம் 19 ஆண்டுகள்.எனவே கடந்த 15 ஆண்டுகளிலும் ஈழத் தமிழர்கள் எதை பெற்றார்கள்? எதைப் பெறவில்லை? என்ற தொகுக்கப்பட்ட அறிவு அவசியம். கடந்த 15 ஆண்டுகளிலும் தாயகத்தில் கட்சி அரசியல்தான் பெருமளவுக்கு மேலோங்கிக் காணப்படுகின்றது.மக்கள் இயக்கமோ அல்லது போராட்ட இயக்கமோ அங்கு கிடையாது. கட்சிகள்தான் போராடுகின்றன. கட்சிகள்தான் பேச்சுவார்த்தைக்குப் போகின்றன.கட்சிகள்தான் தென்னிலங்கைக் கட்சிகளோடு டீல் செய்கின்றன. இக்கட்சி அரசியலைத் தொகுத்து…

  18. இலங்கையில் இஸ்லாமியவாத தீவிரவாதம்: எங்கே செல்லும் இந்தப் பாதை? பேராசிரியர் எஸ்.ஐ.கீதபொன்கலன் பாதுகாப்பு பகுப்பாய்வாளர் Getty Images கோப்புப்படம் (இந்தக் கட்டுரையில் வரும் கருத்துகள் அனைத்தும் கட்டுரையாளரின் சொந்தக் கருத்துகளே. இவை பிபிசியின் கருத்துகள் அல்ல. - ஆசிரியர்) இலங்கையில், உயிர்ப்பு ஞாயிறு தாக்குதலில் 250-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டமை உள்ளூர் ரீதியாகவும், சர்வதேச ரீதியாகவும் பாரிய எதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது. இத்தாக்குதலில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது, தாக்குதலின் பிரமாண்டமும், கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கையுமே அன்றி தாக்குதல்கள் அல்ல. இதுவரை வந்துள்ள தகவல்களின் அடிப்படையில், தாக்குதலாளிகள் அனைவரும் இலங்கையின் இரண்டா…

  19. கந்தையா அருந்தவபாலன் ஒன்றுக்கு மேற்பட்ட தேசிய இனங்களைக் கொண்டிருக்கும் நாடொன்றில் அந்தந்த இனங்களின் தனித்துவத்தை ஏற்று அவர்களின் அரசியல் மற்றும் அடிப்படை உரிமைகளை வழங்கும் சமத்துவமான ஆட்சிமுறைமை நிலவும் நாடுகளில் வாழும் மக்களிடையே தமது இன உணர்வை விட தமது நாடு என்ற தேசிய உணர்வு மேலோங்கி நிற்பதைக் காணக்கூடியதாக உள்ளது. இதற்கு மாறாக பெரும்பான்மைத் தேசிய இனம் ஏனைய தேசிய இனங்களின் அரசியல் உரிமைகள் பலவற்றை மறுத்து அவர்களை இரண்டாந்தரக் குடிமக்களாக கருதும் ஆட்சி முறைமையைக் கொண்டிருப்பதுடன், அத்தேசிய இனங்களை ஒடுக்கும் செயற்பாடுகளிலும் ஈடுபட்டு வரும் ஒருநாட்டில் உள்ள சிறுபான்மை தேசிய இனங்களுக்குத் தேசிய உணர்வை விடத் தமது இன உணர்வே மேலோங்கி இருக்கும். இத்தகைய ஒரு நிலையே இலங்கை…

  20. இப்படியொரு அரசியல் தலைவன் நமக்கும் வேண்டும்... இளைய தலைமுறைகள் வளர வேண்டும்.

  21. தமிழர் ஜனாதிபதியாக முடியுமா? என்.கே. அஷோக்பரன் / 2019 ஓகஸ்ட் 05 திங்கட்கிழமை, மு.ப. 02:12 Comments - 0 ஒவ்வொரு முறை ஜனாதிபதித் தேர்தல் நெருங்கும் போது, தமிழ் மக்களிடையே ஏதோ ஒரு வகையில், ஒரு கேள்வி, மீண்டும் மீண்டும் மீண்டெழுந்து விடுகிறது. இலங்கையில் தமிழரொருவர் ஜனாதிபதியாக முடியாதா? ‘சிங்களப் பௌத்தர்’ ஒருவரே ஜனாதிபதியாக முடியும் என்ற தொனியிலான இந்தக் கருத்து, என்ன காரணத்தாலோ, மிக ஆழமாகப் பல தமிழர்களின் மனங்களில் பதிந்திருக்கிறது. சட்ட ரீதியாகத் தமிழர் ஒருவர், ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கோ, ஜனாதிபதி ஆவதற்கோ வௌிப்படையாகச் சட்டத்தில், இலங்கையின் அரசமைப்பின் படி, தடைகள் எதுவுமில்லை. இந்த விடயம், எத்தனை தடவை மீள எடுத்துரைக்கப்பட்டாலும், ‘த…

  22. உள்ளதை உள்ளபடி சொன்ன பிரதமர் Bharati May 6, 2020 உள்ளதை உள்ளபடி சொன்ன பிரதமர்2020-05-06T06:27:33+00:00Breaking news, அரசியல் களம் ‘கனடியர்கள் இயல்பு நிலைக்குத் திரும்ப நீண்டகாலமெடுக்கும்’ என்று உண்மை நிலை எதையும் மறைக்காது, சூழ்நிலையின் யதார்த்தத்தை ஊடகவியலாளர்களுக்கு எடுத்துச் சொன்னார் கனடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ. ‘உலகெங்கும் பரவியிருக்கும் இந்தக் கொரோனா தொற்று நோய்பற்றி நாம் இதுவரை படித்த பாடங்களில் இருந்து எம்மால் இதை புரிந்து கொள்ள முடிகின்றது.’ சென்ற திங்கட்கிழமை ஊடகவியலாளர் சந்திப்பின் போது வெறும் போலி வார்த்தைகளை எதையும் எடுத்து வீசாது, உண்மையான நிலவரத்தை எடுத்து விளங்கப்படுத்தியதைக் கனடியர்கள் பலரும் பாராட்டினார்கள். கொரோனா வைரஸின…

  23. வெனிசூலாவை ஆக்கிரமித்த அமெரிக்கா.. - எஸ்.வி.ராஜதுரை 4 Jan 2026, 11:48 AM 1823இல், அப்போது அமெரிக்கக் குடியரசுத் தலைவராக இருந்த ஜேம்ஸ் மன்றோவின் அரசாங்கத்தில் வெளியுறவு அமைச்சராக இருந்த க்வென்ஸி என்பவரால் எழுதப்பட்டதும் அன்று முதல் இன்று வரை அந்த நாட்டின் வெளியுறவுக் கொள்கையின் முக்கியக் கூறாக உள்ளதும்தான் ‘மன்றோ கொள்கை’ (Monroe Doctrine) எனக் கூறப்பட்டு வருகிறது. அக்காலத்தில் ஐரோப்பிய ஏகாதிபத்திய நாடுகளின் காலனிகளாக இருந்த தென்னமெரிக்க நாடுகளில் நடந்த புரட்சிகரக் கொந்தளிப்புகளின் காரணமாக அவை தேசிய விடுதலை பெறும் நிலையில் இருந்தன. இருந்தபோதிலும் அமெரிக்காவின் மன்றோ கொள்கை இனி ‘புதிய உலகம்’ எனச் சொல்லப்படும் அமெரிக்கக் கண்டங்களில், குறிப்பாக இலத்தின் அமெரிக்கா எனச் சொல்லப்…

  24. ஒரு வழக்கறிஞர் என்ற ரீதியில் நீதிமன்றத்தின் கௌரவம் குறித்தும் நாட்டின் தலைவர் என்ற ரீதியில் சட்டத்தின் ஆதிபத்தியம் குறித்தும் தமது மனச்சாட்சிக்குத் தாம் பொறுப்புக் கூற வேண்டியுள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அண்மையில் தெரிவித்திருந்தார். பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றவியல் பிரேரணை குறித்து விசாரணை மேற்கொண்ட நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் முடிவை மறுபரிசீலனைக்கு உட்படுத்த அவர் முடிவு செய்தமை இதனாலேயே ஆகும். ஒரு நாட்டின் தலைவரது செயற்பாடுகள் மட்டுமே அவரது கருணையை வெளிப்படுத்துவதாக அமைய வேண்டுமேயல்லாது, அவர் வெளிப்படுத்தும் கருத்துக்கள் அல்ல என்பது சொல்லித் தெரிய வேண்டிய ஒன்றல்ல. அதேசமயம் ஒரு சாதாரண பொதுமகனது மனதில் உருவாகும் கருணை போன்றல்லாது, ஓர் அரச தலைவரது நெஞ்சத்த…

    • 0 replies
    • 724 views
  25. வடக்கு – கிழக்கு: தொல்பொருளியல் வன்முறையும் மாற்று அரசியற் பார்வையின் முக்கியத்துவமும் Mahendran Thiruvarangan on July 12, 2020 பட மூலம், president.gov.lk கடந்த ஆண்டு காணி உரிமைகளுக்கான மக்கள் கூட்டணியினால் அமைக்கப்பட்ட ஒரு காணிக் கமிசன் நாட்டின் பல பகுதிகளிலும் வாழும் சமூகங்களினது, காணி தொடர்பான பிரச்சினைகளைக் கேட்டறியும் முயற்சிகளில் ஈடுபட்டது. இந்தக் கமிசனின் அமர்வு ஒன்று முல்லைத்தீவிலே இடம்பெற்ற போது, அங்கு பேசிய ஒருவர் பின்வரும் கருத்தினை வெளியிட்டார்: “தொல்பொருளியல் திணைக்களத்தினைச் சேர்ந்தோர் இரவு வேளைகளில் வருவார்கள். அப்போது எதையாவது புதைத்து விட்டுச் செல்வார்கள். அடுத்த நாள் அதனை…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.