அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9217 topics in this forum
-
சுமந்திரனைத் தோற்கடிக்கும் அழைப்பும் அபத்தமும் கே. சஞ்சயன் / 2020 ஜூலை 14 , பி.ப. 01:04 விடுதலைப் புலிகளின் முன்னாள், மூத்த போராளியான பசீர் காக்கா, அண்மையில் யாழ்ப்பாண ஊடக அமையத்தில் நடத்திய ஒரு செய்தியாளர் சந்திப்பு, பலரதும் கவனத்தை ஈர்த்திருக்கிறது. முதல் மாவீரர் தொடக்கம், கடைசி மாவீரரின் மரணம் வரை அவர், விடுதலைப் புலிகளுடன் பயணித்தவர். போர் முடிவுக்கு வந்த பின்னர், அவ்வப்போது மாவீரர் நாள், முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் விடயங்களில் அகமுரண்பாடுகள் ஏற்பட்டபோது, ஊடக அமையத்தில், தமது கருத்துகளை முன்வைத்து, அந்த நி…
-
- 0 replies
- 579 views
-
-
அரசியல் அமைப்பு எனப்படுவது சாதாரண சனங்களைப் பொறுத்தவரை ஒரு கடினமான வறண்ட பாடப்பரப்பு. அரசறிவியல் மாணவர்களால் அல்லது ஆய்வாளர்களால் நுணுகி ஆராயப்படும் இவ் விடயப்பரப்பை சாதாரண வாசகர்கள் விரும்பிப் படிப்பது குறைவு. ஈழத்தமிழர்கள் மத்தியில் அரசியலமைப்பு விவகாரங்களைப் பற்றி இதுவரையிலும் வெளிவந்திருக்கக் கூடிய பெரும்பாலான நூல்கள் ஒன்றில் பரீட்சை மைய நோக்குநிலையிலிருந்து எழுதப்பட்டவை அல்லது ஆய்வு நோக்கு நிலையிலிருந்து எழுதப்பட்டவை. அரசியலமைப்பை சாதாரண சனங்களும் விளங்கத்தக்க விதத்தில் எளிமையாகவும் சுவாரசியமாகவும் எழுதத்தக்க விமர்சகர்கள் தமிழ்த்தேசியப் பரப்பில் மிகச்சிலரே உண்டு. அவர்களில் ஒருவரே மு.திருநாவுக்கரசு. அவருடைய அரசியலமைப்பைப் பற்றிய ஒரு நூல் அண்மையில் வெளியிடப்பட்டது. வவு…
-
- 0 replies
- 555 views
-
-
அரசியலமைப்பால் இத் தீவை ஒரு நாடாக்க முடியுமா? இலங்கைக்கு புதிய அரசியலமைப்பு ஒன்று தேவை என்பது பலராலும் வலியுறுத்தப்படுகின்ற விசயம்தான். ஆனால் அது ‘புதிதாக’ இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புதான் நிறைவேறாமல் இருக்கிறது. ஆட்சிக்கு வரும் அரசாங்கங்கள் தமது இருப்பிற்கும் ஆட்சிக்கும் உகந்த வகையில் அரசியலமைப்பை திருத்தி வருகின்றன. ஆனாலும் பௌத்த சிங்கள பேரினவாத கருத்துருவாக்கம் மாத்திரம் இலங்கை அரசியலமைப்பில் எப்போதும் பாதுகாக்கப்பட்டு வருகின்றது. அத்துடன் தமிழர்கள் உள்ளிட்ட சிறுபான்மை இன மக்களுக்கான சமத்துவ உரிமையும் மறுக்கப்பட்டே வருகின்றது. அரசியலமைப்பு என்பது உண்மையில் ஆட்சிக்கான ஒரு சட்டமாகவும் எழுத்து ஆவணமாகவும் கருதப்படுகின்றது. உலகில் தான்தோன்றித் தனமான ஆட்சிகள் …
-
- 0 replies
- 417 views
-
-
வேண்டும் புதிய பாதை! முற்றிலும் புதிய அணுகுமுறை: ஏ.ஜி.யோகராஜா சயந்தன் என்னிடம் இப்படிக் கேட்டிருந்தார்: இலங்கையின் இன்றைய அரசியல் – குறிப்பாக சாதிய மற்றும் தமிழ்த் தேசிய – பிரச்சனைகள் குறித்த உங்கள் கருத்தியலை, (அதாவது மார்க்ஸியமா, அல்லது பெரியார் மற்றும் அம்பேத்கார் வழியிலா அல்லது வேறு எந்த அடிப்படையில்) கட்டுரையாக எழுதித்தரும்படி. இவ் வருட ஆரம்பத்தில் யாழ்ப்பாணத்தில் வெளியிடப்பட்டிருந்த “எழுவோம்! நிமிர்வோம்! திரள்வோம்! சமூக சமத்துவம்: அடுத்தகட்ட நகர்வு குறித்த முன்வரைவு” எனும் எனது நூலை வாசித்ததன் பிரகாரம் இம் முடிவுக்கு வந்திருப்பார் என்பது எனது எண்ணம். சோவித் யூனியனின் வீழ்ச்சிக்குப் பின் மார்க்ஸிய உலகங்கள் பின்னடைவைச் சந்தித்து வருகின்றன என்பது உலகள…
-
- 0 replies
- 325 views
-
-
ரிஷாட்டின் பாராளுமன்ற உரை: தொனித்த இரு விடயங்கள் மொஹமட் பாதுஷா பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஒருவர், இலங்கை வரலாற்றில் முதன்முதலாக, பாராளுமன்றத்தில் தனது நிலைப்பாட்டையும் கருத்துகளையும் முன்வைத்துள்ளார். அவர், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் ஆவார். கடந்த சில தினங்களுக்கு முன்னர், பாராளுமன்றத்தில் உரையாற்றிய போது முன்வைத்துக் கூறிய விடயங்கள், இரண்டு விதத்தில் முக்கியமானவை. ஒன்று, அவரது வீட்டில் பணிக்கு அமர்த்தப்பட்டிருந்த நிலையில், மரணித்த ஹிசாலினி தொடர்பாக, தன்பக்க நியாயங்களை முன்வைத்திருந்தார். இரண்டாவது, ப…
-
- 0 replies
- 552 views
-
-
அமைச்சரவை மாற்றம்: ஏன் - எதற்கு? கடந்த 2015 ஓகஸ்ட் மாதம் நடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின்னர், ஐ.தே.கவும், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து, அமைத்த கூட்டு அரசாங்கத்தின் அமைச்சரவை முதல்முறையாக மாற்றியமைக்கப்பட்டிருக்கிறது. அமைச்சரவை மாற்றம், இந்த வாரம், அடுத்த வாரம் என்று கடந்த பல மாதங்களாகவே செய்திகள் வெளிவந்து கொண்டிருந்தன. ஜனாதிபதியும் பிரதமரும் கூட அமைச்சரவையில் மாற்றங்களைச் செய்வதற்கு பலமுறை முயற்சிகளை மேற்கொண்டிருந்த போதிலும், அவை வெற்றி பெறவில்லை. அமைச்சரவை மாற்றம் ஒன்றுக்காக இலங்கையின் ஜனாதிபதி ஒருவர் இந்தளவுக்கு நெருக்கடிகளைச் சந்தித்தமை இதுவே முதல் முறை. அமைச்ச…
-
- 0 replies
- 511 views
-
-
நான் தேசபக்தனா என்கிற கேள்வியை அடிக்கடி கேட்க முடிகிறது.. அவர்களுக்கான எனது சிறுபதிலை பதிவு செய்துகொள்ள விரும்புகிறோம்..... இந்திய தேசத்தின் மீதான பக்தி என்பது மக்கள் மீதானதா அல்லது அரசு இயந்திரத்தின் மீதா என்பதான கேள்வி எழுந்த சமயத்தில் தான் இந்தியா என்பது அதன் அதிகார வர்க்கமும், ஆளும் கட்சிகளும், தனிப் பெரும் நிறுவனங்களும் என்று புரிந்தது.. இந்தியா என்கிற கருத்தியலில் நம்மைப் போன்ற சராசரி மக்களுக்கு இடமில்லை.. நம் கருத்துக்களுக்கோ, நேர்மைக்கோ இடமில்லை.. காந்தியோ, அம்பேத்காரோ, பகத்சிங்கோ இன்னபிற தலைவர்களோ கொடுத்துச் சென்ற அறம், மானுடத்தன்மை போன்றவைகளை கட்டிக்காக்கும் தேசமோ இல்லை இது.. இந்த தேசியம் நமக்காக இல்லை... இந்த ஒட்டுமொத்த கும்பலும் தனது சுயநலத்திற்காக கொள்ளையடி…
-
- 0 replies
- 707 views
-
-
தீர்ப்பு: இனப்படுகொலை சேரன் இலங்கைக்கான மக்களின் தீர்ப்பாயம் (Permanent People’s Tribunal on Sri Lanka) தனது இரண்டாவது அமர்வை ஜெர்மனியின் பிரேமன் (Breman) நகரத்தில் ஒழுங்கு செய்திருந்தது. இந்த அமர்வை ஏற்பாடு செய்வதில் முன்னின்று செயற்பட்ட நிறுவனங்கள் அயர்லாந்தைச் சேர்ந்த இலங்கையில் சமாதானத்திற்கான மக்கள் அமைப்பும் பிரேமன் நகரத்தில் இயங்கி வரும் மனித உரிமைகள் அமைப்புமாகும். இந்த இரு அமைப்புகளிலும் தீவிரமாகவும் மிகுந்த அர்ப்பணிப்பு உணர்வோடும் பணியாற்றுபவர்களில் பலர், தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தை ஆதரித்து உணர்வுத் தோழமையுடன் பணியாற்றி வரும் சிங்கள எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் மற்றும் கலைஞர்கள் ஆவர். இவர்களுள் சிலர் புலமையாளர்களாகப…
-
- 0 replies
- 1.3k views
-
-
நடுவுக்கு நகருமா நடுவப் பணிமனை? இலங்கையில் இனங்களுக்கு இடையிலான நெருக்கடி நிலை, பலதசாப்தங்கள் கழிந்தும், தொடர்ச்சியாக அதே கொதிநிலையில் உள்ளது. ஆட்சியாளர்களும் கடந்த கால வரலாற்றை படிப்பினையாகக் கொண்டு, எதிர்கால சந்ததியினருக்காகச் சிறந்த தேசத்தை உருவாக்க, நிகழ்காலத்தில் விருப்பமின்றியே உள்ளனர், என்பதையே நடப்பு நிகழ்வுகள் எடுத்து உரைக்கின்றன. இனப்பிரச்சினைக்குப் பல்வேறு காலங்களிலும் பல தரப்பாலும் பல தீர்வுத் திட்டங்கள் முன் மொழியப்பட்ட போதும், அவை அனைத்தும் தோல்வியைத் தழுவியதே நாம் அனைவரும் கடந்து வந்த கசப்பான வரலாறு ஆகும். இவ்வாறு இருந்த போதிலும், 1987 ஆம் ஆண்டு, இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின் மூலம், ஈழத்தமிழர்களின் ஒட்டு மொத்தமான சம்மதம…
-
- 0 replies
- 293 views
-
-
விகாரைகளுக்குள் தக்க வைக்கப்படும் அரசியல் ‘...நீங்களும் உங்களது குழந்தைகளும் நிம்மதியான சூழலில் வாழ்வதற்காகப் பெரும் தியாகம் செய்த பத்தாயிரம் இளைஞர்கள் (படை வீரர்கள்) இப்போதும் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்களை நினைவு கூருங்கள். அவர்களது தியாகத்தை மனதில் நிறுத்திக்கொண்டு, விகாரைகளுக்குச் செல்லுங்கள். உங்களது ஊரிலுள்ள முக்கிய நபர்களிடம் செல்லுங்கள். அவர்களிடம் சொல்லுங்கள்; அழுத்தம் வழங்குங்கள்; புதிய அரசமைப்புக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை வழங்கக்கூடிய நபர்களிடம் அதை எதிர்க்குமாறு கூறுங்கள். “மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு ஆதரவளிக்கும் யாராவது இருந்தால், அவர்களுக்கு ‘பிரித்நூல்’ கட்டவேண்டாம்; ஆசீர்வாதம் அளிக்கவேண…
-
- 0 replies
- 372 views
-
-
ரணில் வீசிய கொழுக்கி ? - நிலாந்தன் கனடாவில் உள்ள நண்பர் ஒருவர் கேட்டார்….”தாயகத்தில் உள்ள தமிழ்த் தேசிய நிலைப்பாட்டை கொண்ட மூன்று கட்சிகளையே எங்களால் ஒருங்கிணைக்க முடியவில்லை. இந்நிலையில்,புலம்பெயர்ந்த தமிழர் அமைப்புகளையும் நபர்களையும் ஒன்றிணைத்து தாயகத்தில் முதலீடு செய்வது நடக்கக்கூடிய காரியமா ? “என்று. ரணில் விக்ரமசிங்க புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் உள்ள சில அமைப்புக்கள் மற்றும் நபர்களின் மீது தடையை நீக்கியது தொடர்பில் நான் எழுதிய ஒரு கட்டுரை தொடர்பாகவே அவர் அவ்வாறு கேட்டிருந்தார். நியாமான கேள்வி. தாயகத்தில் ஒரு சிறிய நிலப்பரப்புக்குள்,மிகச்சிறிய சனத்தொகையின் மத்தியில் இயங்கிக் கொண்டிருக்கும் மூன்று கட்சிகளை ஒன்றாக்க முடியவில்லை. ஆனால் புலம்பெய…
-
- 0 replies
- 631 views
-
-
மாகாண சபையை வைத்தே உள்ளூராட்சி ஆட்சியமைப்பு - அதிரன் எல்லோரும் அரசியல்வாதிகள். ஆனால், இன்னமும் எதுவும் முடிந்தபாடில்லை. அரசியலில் இலங்கை முழுவதுமே இப்போது பெரும் அமளி துமளியாக இருக்கிறது. யாருக்கு அமைச்சுப்பதவி போகும்; யாருக்கு வரும், பிரதமர் இருப்பாரா இல்லையா. நாடாளுமன்றம் கலையுமா என்பதே அந்த அமளிதுமளி. இதற்கு எப்போது முடிவு கிடைக்கும் என்றே தெரியவில்லை. இலங்கையில் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் நடந்து முடிந்து விட்டது. இன்னும் ஆட்சியமைக்க முடியவில்லை. பல சபைகளில் பெரும்பான்மை உறுப்பினர்களை வென்றுள்ள கட்சிகளுக்குக்கூட வேறு கட்சிகள், நபர்களின் ஆதரவுகள் தேவை என்ற நிலை இருக்கிறது. அதற்கு விட்டுக்கொடுப்புகளுடனும், நிபந்தனைகளுடனும் ஆதரவ…
-
- 0 replies
- 314 views
-
-
தமிழரசுக் கட்சி விதித்திருக்கும் காலக்கெடு... - நிலாந்தன் 14 செப்டம்பர் 2014 இவ்வாண்டு முடிவுக்குள் தனது கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் அஹிம்சை போராட்டங்களில் ஈடுபடப்போவதாக தமிழரசுக் கட்சி அறிவித்திருக்கிறது. கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள் இவ்வாறான அறைகூவல்களை விடுப்பது இது தான் முதற் தடவையல்ல. காலக்கெடு விதித்து ஒரு போராட்டத்தை தொடங்கப் போவதாக அறிவித்திருப்பதும் இது தான் முதற் தடவையல்ல. ரெலோ இயக்கத்தின் தலைவர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சாகும் வரை உண்ணாவிரதம் ஒன்றை தொடங்க போவதாக அறிவித்திருந்ததை இங்கு நினைவுகூரலாம். எனினும் கூட்டமைப்பில் உள்ள கட்சிகளில் மிகப்பெரியதும் பல தசாப்த கால வரலாற்றையும் பாரம்பரியத்தையும்; கொண்டிருப்பதுமாகி…
-
- 0 replies
- 431 views
-
-
ஆசையும் துயரங்களும் “எரிபொருள் மூலம் அரசு அறவிடும் 40,000 மில்லியன் ரூபாய்க்கும் மேற்பட்ட வரியை நீக்கி, எரிபொருள் விலை குறைக்கப்படும். பொதுப் போக்குவரத்துச் சேவைக்கும் ஓட்டோக்களுக்கும், மோட்டார் சைக்கிள்களுக்கும் இதன் மூலம் விசேட சலுகை கிடைக்கும்”. மேலே உள்ளது, தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டபோது, வெளியிட்ட கொள்கைப் பிரகடனத்தில் கூறப்பட்ட விடயமாகும். ‘வலுசக்தியைப் பாதுகாக்கும் இலங்கை’ எனும் தலைப்பில் மேற்படி விடயம் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆயினும், கடந்த 10ஆம் திகதி, எரிபொருள்களுக்கான விலைகள் சடுதியாக அதிகரிக்கப்பட்டன. 117 ரூபாய்க்கு விற்கப்பட்ட ஒரு …
-
- 0 replies
- 403 views
-
-
இனியும் தமிழர்கள் தங்கள் தலைமைகளை நம்புவதில் பலனில்லை-பேராசிரியர் எஸ். எல். றியாஸ் தமிழ் சகோதரர்கள் செறிவாக வாழும் பிரதேசங்களில் அண்மைக்காலமாக தற்கொலைகள் அதிகரித்துள்ளமை பெரும் கவலைக்குரிய விடயமாகும் என்று பேராசிரியர் எஸ். எல். றியாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தேசிய ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் பேராசிரியர் எஸ்.எல். றியாஸ் ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். அதில் தொடர்ந்து குறிப்பிடப்பட்டுள்ளதாவது, வடக்கில் முன்னாள் போராளிகளாக இருந்தவர்கள் வாழ்வாதாரத்துக்கு வழியின்றி தற்கொலை செய்து கொள்ளும் நிலையில் கிழக்கில் நுண்கடன் திட்டங்கள் அப்பாவித் தமிழர்களை தற்கொலை வரை தள்ளிச் செல்லும் அவலம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இதன் சமீபத்திய நிகழ்வ…
-
- 0 replies
- 1k views
-
-
நாடகம் ஆடுவதாக நாடகம் ஆடுதல் காரை துர்க்கா / யாழ்ப்பாணம், நல்லூர்க் கந்தசுவாமி ஆலய வருடாந்த உற்சவம் நடைபெற்று வருகின்றது. மாலைத் திருவிழா முடிந்தவுடன், ஆலயச் சுற்று வீதியில் பரப்பப்பட்டுள்ள மணல் மண்ணில், கச்சான், கடலை கொறித்தவாறு, நல்ல உள்ளங்களுடன் ‘நாலு’ கதை கதைப்பது, மனதுக்கு ஒருவித புதுத் தென்பைத் தரும். தினசரி, வீட்டுக்கும் வேலைக்கும் இடையே, ஓயாது ஓடி ஓடி உழைக்கும் உழைப்பாளிகளுக்கும் ‘படிப்பு படிப்பு’ என ஒரே பரபரப்புக்குள் வாழும் இளவயதினருக்கும், ஓர் இடைக்கால நிவாரணம் இது, என்றால் மிகையல்ல. “என்னதான் வசதிகள், வாய்ப்புகள் கண்முன்னே பல்கிப் பெருகி இருந்தாலும், பதுங்குகுழியின் பக்கத் துணையோடும், குப்பி …
-
- 0 replies
- 954 views
-
-
சிங்கள மேலாதிக்கத்தில் பண்டாரநாயக்கவும் மைத்திரியும் 1956 ஆம் ஆண்டு இடம்பெற்ற பொதுத்தேர்தலில் வெற்றி பெற்ற எஸ்.டபிள்யூ.ஆர் .டி பண்டாரநாயக்க தனது அமைச்சரவையை உருவாக்கிய அடுத்த இரண்டு மாதங்களுக்குள் தனிச்சிங்கள சட்டமூலத்தை கொண்டு வந்தார். 1956 ஆம் ஆண்டின் 33 ஆவது இலக்க அரசகரும மொழிகள் சட்டம் என்ற பெயருடைய அச்சட்டமூலத்தின் மூலம் அதுவரை ஆட்சி மொழியாக இருந்த ஆங்கிலம் அகற்றப்பட்டு சிங்கள மொழி அரச கரும மொழியானது மட்டுமன்றி இந்த சட்ட மூலமே தீவெங்கினும் வாழ்ந்து வந்த சிங்கள –தமிழ் இனங்களிடையே முரண்பாடுகளை உருவாக்கக்காரணமாயிற்று. குறிப்பாக தமிழர்கள் செறிந்து வாழ்ந்து வரும் வடக்கு, கிழக்கு பகுதிகளில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டதுடன் அங்குள்ள அரச நிறுவனங்…
-
- 0 replies
- 601 views
-
-
04/21 தாக்குதல் அன்றும் இன்றும் தேர்தலுக்கான யுக்தி உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்களின் தாக்கம் கடந்த ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தலில் முக்கிய பங்கு வகித்தது. அதாவது, நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு ராஜபக்ஷக்கள் மீண்டும் ஆட்சியில் அமர்வது மாத்திரமே ஒற்றைத் தீர்வு என்கிற விடயம் தென் இலங்கை முழுவதும் பெரும் பிரச்சாரமாக முன்னெடுக்கப்பட்டு, வாக்கு அறுவடை நிகழ்ந்தது. கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு அண்மித்த வெற்றியோடு ராஜபக்ஷக்கள் மீண்டும் ஆட்சியில் அமர்ந்தார்கள். ஆனால், இம்முறை ராஜபக்ஷக்களுக்கு எதிராக உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்கள் விவகாரம் முன்னுக்கு கொண்டு வரப்பட்டிருக்கின்றது. தற்போது, குறித்த தாக்குதல்கள் தொடர்பில் வெளிவரும் தகவல்க…
-
- 0 replies
- 745 views
-
-
2018 – தமிழர்களுக்கான அரசியல் படிப்பினைகள்? யதீந்திரா வரலாற்றிலிருந்து நாம் எதனை கற்றுக் கொள்கின்றோம் என்றால் எதனையுமே அல்ல – என்று ஒரு கூற்றுண்டு. வரலாற்றில் இது எந்ததெந்த சமூகங்களுக்கெல்லாம் பொருந்துமென்று நாம் அறியாது விட்டாலும் கூட, நிச்சயமாக தமிழர்களுக்கு பொருந்துமென்று, அழுத்தம் திருத்தமாக குறிப்பிடலாம். அந்தளவிற்கு தமிழர்கள் எதனையுமே அவர்களின் கடந்தகாலத்திலிருந்து கற்றுக்கொள்ளவதில்லை. நான் இங்கு தமிழர்கள் என்று குறிப்பிடுவது சாமானிய தமிழ் மக்களை அல்ல, மாறாக, அந்த சாமானிய மக்களுக்காக இயங்குவதாகவும் சிந்திப்பதாகவும் கூறிக்கொள்ளும் அரசியல்வாதிகளையும், அரசியல் செயற்பாட்டாளர்களையும் புத்திஜீவிகளையும்தான். 2015இல் பெருமெடுப்பில் ஆரம்பித்த ஜனநாயகத்திற்கான பயணம் அதன…
-
- 0 replies
- 663 views
-
-
சுமந்திரனை ஆதரிக்கும் சிவஞானம். அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் போல தமிழரசுக்கட்சி தேர்தல்.
-
- 0 replies
- 709 views
- 1 follower
-
-
ஈழவிடுதலைப் போராட்டம் பெரும் அழிவுகளைச் சந்தித்து நிற்பதற்கு பல காரணங்கள் இருந்தாலும் அமெரிக்காவின் எதிர்நிலைப்பாடு வலுவான தாக்கத்தினைஏற்படுத்தியிருந்ததை யாரும் மறுத்துவிட முடியாது. சிறிலங்காவின் இன்றைய அரசின் பங்காளியாகவும் தமிழர்களின் இனப்பிரச்சினை விடையத்திற்கு தீர்வுகாணும் குழுவின் தலைவியாகவும் விளங்கும் சந்திசிக்கா பண்டாரநாயக்கா அவர்களின் ஆட்சிக்காலத்தில்தான் தமிழர்களது விடுதலைப் போராட்டத்திற்கு அனைத்துலக அளவில் பயங்கரவாத முத்திரை குத்தப்பட்டது. தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினை பயங்கரவாத இயக்கமாக அமெரிக்கா தடைசெய்வதற்கு சந்திரிக்கா அரசின் வெளிவிவகார அமைச்சராக இருந்த இலக்சுமன் கதிர்காமரின் அதிதீவிர செயற்பாடே காரணமாக அமைந்திருந்தது. சிங்களத்தின் தமிழர் விரோத செ…
-
- 0 replies
- 473 views
-
-
பாதுகாப்பு என்ற பெயரில் இன்று புர்கா, நாளை? Hasanah Cegu isadeen on May 3, 2019 பட மூலம், Lakruwan Wanniarachchi Photo, Los Angeles Times எனது பக்கத்து வீட்டிலிருக்கும் மாயாவினது ஒரு தமிழ் கிறிஸ்தவக் குடும்பம். மாயா அநேகமாக ஒவ்வொரு ஞாயிறும் புனித அந்தோனியார் தேவாலயத்துக்குச் செல்லும் பழக்கமிருப்பவர் (உயிர்த்த ஞாயிறன்று, தனது தம்பி நீண்ட நாளைக்குப் பிறகு வீட்டுக்கு வந்தபடியால் செல்லவில்லை). மாயாவுக்கு ஒரேயொரு மகன். மாயாவின் மகனை தினமும் பாடசாலைக்குக் கூட்டிச் செல்ல தனது ஸ்கூட்டரில் மாயாவின் தோழி வருவதுண்டு. விடுமுறை நாட்களிலும் கொஞ்ச நேரத்துக்கேனும் அந்தத் தோழிகள் சந்தித்துக் கொள்வார்கள். அ…
-
- 0 replies
- 955 views
-
-
கடந்தவருடம், செப்டெம்பர் 2018, , தி பயனியர் எனும் இந்திய ஆங்கில ஊடகம் ஒன்றில் வெளிவந்த கட்டுரை ஒன்றினைப் படிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. அக்கட்டுரையின்படி, இந்திய பி ஜே பி அரசின் அமைச்சரான சுப்ரமணிய சுவாமி காங்கிரஸின் முன்னாள் தலைவி சோனியாவையும், ப சிதம்பரத்தையும் 2009 இறுதிக்கட்டப் போரின்பொழுது புலிகளுடன் நெருங்கிய தொடர்பிலிருந்தார்கள் என்று குற்றஞ்சாட்டியிருக்கிறார். அவரது புளொக்கில் அவர் எழுதிய கருத்துப்படி, இறுதிக்கட்டப் போரின்பொழுது, சிதம்பரம் பிரபாகரனுக்கு அனுப்பிய தகவலில், "இந்திய கடற்படை உங்களைக் காப்பாற்றும், ஆகவே பொறுத்திருங்கள்" என்று கூறியிருந்தாராம். ஆனால், வந்ததோ இலங்கை கடற்படை. வந்திருப்பது இலங்கையின் கடற்படை என்பதைத் தெரிந்திருக்காத பிரபாகரன், …
-
- 0 replies
- 480 views
-
-
ஒரு பொதுத் தேர்தலை முன்னிட்டு ஐ.நா.தீர்மானத்தை எதிர்த்தல் -நிலாந்தன்.. December 28, 2019 நாட்டில் இப்பொழுது பாதுகாப்புச் செயலர் உண்டு. ஒரு பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் உண்டு ஆனால் பாதுகாப்பு அமைச்சர் இல்லை. ஒரு பாதுகாப்பு அமைச்சரை ஏன் நியமிக்க முடியவில்லை? ஏனென்றால் 19ஆவது திருத்தத்தின்படி ஜனாதிபதி அவ்வாறான அமைச்சுப் பதவிகளை வகிக்க முடியாது. எனவே தனக்கு நம்பிக்கையான ஒருவரை ராஜாங்க அமைச்சராக நியமித்து விட்டு மற்றொருவரை அந்த அமைச்சின் செயலாளராக நியமித்து விட்டு மறைமுகமாக அந்த அமைச்சை புதிய ஜனாதிபதி தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறார். அதாவது அது 19 ஆவது திருத்தத்தின் விளைவு தான். 19வது திருத்தம் இருக்கும் வரை ராஜபக்சக்கள் முழு வெற்றி பெற…
-
- 0 replies
- 699 views
-
-
அரசாங்கத்தின் நிலைப்பாடென்ன? மொஹமட் பாதுஷா சிங்களப் பெரும்பான்மையினரின் வாக்குகளாலேயே, இந்த நாட்டின் புதிய ஜனாதிபதி தெரிவு செய்யப்பட்டதாக, அரசாங்கம் அடிக்கடி சொல்லி வருகின்ற போதிலும், முஸ்லிம்களும் தமிழர்களும், தமது அரசாங்கத்தோடு இணைந்து பணியாற்ற வேண்டும் என்ற பொருள்பட, ஜனாதிபதியும் பிரதமரும் கருத்துகளை முன்வைத்து வருகின்றனர். கடந்த தேர்தலில், முஸ்லிம் வாக்குகள் இல்லாவிட்டாலும் பரவாயில்லை என்று, பொதுஜன பெரமுன கருதியிருக்கலாம் என்று கருதுவதற்கு இடமுண்டு. இருந்தாலும் கூட, நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில், நிலைமையில் மாறுதல்கள் ஏற்பட்டிருக்கின்றன. வடக்கு, கிழக்கு உட்பட, நாட்டின் எ…
-
- 0 replies
- 564 views
-