அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9207 topics in this forum
-
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையும் சமஷ்டியும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை இல்லாமலாக்கும் ஒரு பிரேரணையை மக்கள் விடுதலை முன்னணி வெகுவிரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. எனினும் இச்செயற்பாட்டை ஆட்சேபித்து முன்னாள் எம்.பி.யும் கூட்டு எதிரணியின் முக்கியஸ்தருமான கெஹெலிய ரம்புக்வெல்ல மாகாண சபைகளை இரத்துச் செய்தாலன்றி நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை நீக்குவது சாத்தியமல்ல என்கிறார். இதற்கான காரணத்தை அவர் தெரிவிக்கையில் யாப்பின் 13 ஆம் ஷரத்தை நீக்காமல்அதைச் செய்வது ஆபத்து என்கிறார். இதை 20 ஆம் ஷரத்தாக மக்கள் விடுதலை முன்னணி கொண்டு வருவது பற்றி கூட்டு எத…
-
- 0 replies
- 584 views
-
-
13 படும்பாடு January 25, 2023 ♦️வீரகத்தி தனபாலசிங்கம் இலங்கை அரசாங்கத் தலைவர்கள் வழமையாக கூறுகின்ற ஆனால், தவறாமல் மீறி வந்திருக்கின்ற ஒரு உறுதிமொழியை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் யாழ்ப்பாணத்தில் கடந்தவாரம் தைப்பொங்கல் விழாவில் வழங்கியிருந்தார். “அரசியலமைப்புக்கான 13 வது திருத்தத்தை ஒரிரு வருடங்களில் கட்டங்கட்டமாக அரசாங்கம் முழுமையாக நடைமுறைப்படுத்தும். வடக்கில் மாத்திரமல்ல, தெற்கிலும் முதலமைச்சர்கள் அது நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்று கோரினார்கள்” என்று அவர் கூறினார். தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வொன்றைக் காண்பதற்கு கடந்த மாதம் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் மகாநாட்டைக் கூட்டிய விக்கிரமசிங்க அதன் முதற்சுற்றையடுத…
-
- 1 reply
- 471 views
-
-
பொருளாதார நெருக்கடியை இனப்பிரச்சினையால் மூடிமறைத்தல் எம்.எஸ்.எம் ஐயூப் இலங்கையின் இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விதித்த காலக்கெடு இன்னும் மூன்று நாள்களில் முடிந்து விடும். அதற்கு, தமிழ்க் கட்சிகள் விதித்த காலக்கெடு நேற்றுடன் (31) முடிவடைந்தது. ஆனால், இனப்பிரச்சினை தீரவில்லை. மாறாக, அரசியல்வாதிகள் இனப்பிரச்சினையை தமது அரசியலுக்காக பாவிக்கிறார்கள் என்பது இந்தக் காலக்கெடுக்களால் மீண்டும் நிரூபிக்கப்பட்டது. எதிர்வரும் நான்காம் திகதி நடைபெறவிருக்கும் 75ஆவது சுதந்திர தினத்துக்கு முன்னர் இனப்பிரச்சினையை தீர்ப்பதாக, ஜனாதிபதி கடந்த நவம்பர் மாதம் வரவு செலவு திட்ட விவாதத்தின் போது கூறினார். அவ்விவாதம் முடிவடைந்ததன் பின்னர், இப்பிரச்சின…
-
- 0 replies
- 552 views
-
-
கூட்டமைப்பின் கிழக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளர் யார் ? யதீந்திரா வடக்கு மாகாண சபை கலைக்கப்படுவதற்கு முன்பதாகவே அடுத்த முதலமைச்சர் யார் என்னும் கேள்வி எழுந்துவிட்டது. கேள்வி எழுந்தது மட்டுமல்ல, அது வடக்கில் தேனீர் கடையிலிருந்து வெற்றிலைக் கடைவரையில் பேசு பொருளாகவும் இருக்கிறது. தமிழரசு கட்சியின் தலைவராக கருதப்படும் மாவை சேனாதிராஜா தொடக்கம் பாதர் இம்மானுவல்வரையில், பலரது பெயர்கள் அடிபடுகின்றன. ஆனால் கிழக்கு மாகாண சபைக்கான முதலமைச்சர் வேட்பாளர் யார் – அவர் எந்தக் கட்சியைச் சேர்ந்தவர் அல்லது எந்தவொரு கட்சிiயும் சாராதவரா? தமிழ் அரசியல் அரங்கில் மன்னிக்க வேண்டும் தற்போதுள்ள தமிழ் தேசிய அரசியல் அரங்கில் இவ்வாறான கேள்விகளையோ அல்லது அதனை அடியொற்றிய உரையாட…
-
- 0 replies
- 504 views
-
-
பாகிஸ்தானின் பிரதமராகும் இம்ரான் கான் பற்றிய ஒரு அலசல் பாகிஸ்தானில் புதன்கிழமை நடந்த தேசிய மற்றும் மாகாண தேர்தல்களின் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் தாமதமாக வெளியாகிவரும் நிலையில் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான்கான் கட்சி முன்னிலை வகித்துவருகிறது. பாகிஸ்தானில் அதிகாரம் மிக்கதாக இருக்கும் ராணுவத்துக்கு விருப்பமான வேட்பாளரான இம்ரான்கான் பிரதமராகும் வாய்ப்பு அதிகம் என்று தேர்தலுக்கு முன்பிருந்தே அரசியல் நோக்கர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர். பாகிஸ்தானுக்கு கிரிக்கெட் உலகக் கோப்பை வென்று தந்தவரான இம்ரான்கான், தற்போது நாட்டின் ஆட்சியைக் கைப்பற்றும் நிலையில் இருக்கிறார். நீதித்துறையும், நாட்டின் சக்திவாய்ந்த பாதுகாப்ப…
-
- 10 replies
- 1.8k views
-
-
வவுனியா இன விகிதாசாரத்தைத் தாக்கும் திட்டமிட்ட குடியேற்றங்கள் -க. அகரன் பனையால் விழுந்தவனை மாடேறி மிதித்தால் போல், என்ற பழமொழியொன்றின் அர்த்தத்தை மீள் நினைவுக்கு கொண்டு வருவதாக, வடபகுதியில் சிறுபான்மையினரின் நிலைமை காணப்படுகின்றது. அரசியல் தீர்வு என்ற செயற்பாட்டை, தமிழ் அரசியல்வாதிகள் முன்கொண்டு செல்லும் போது, அது தமிழர்களின் வாழ்வியல் நிலைபேற்றையும் அதனுடன் சார்ந்த நிலத்தொடர்பையும் காரணமாக வைத்து, அழுத்தங்களைப் பிரயோகிக்க கூடியதாகவே அமைய வேண்டும். எனினும் வடக்கு, கிழக்கு என்பதைத் தமிழர்களின் தாயகமாகச் சுயநிர்ணயக் கோட்பாட்டின் அடிப்படையில் வரையறுக்கப்பட்ட நிலத்தைக் கொண்டமைந்த ச…
-
- 0 replies
- 1.1k views
-
-
இலங்கையின் சக்தித்துறைக்குள் சீனா !!! இலங்கையின் ஒட்டுமொத்த வெளிநாட்டுக் கடனான 51 பில்லியன் டொலர்களுக்கும் அதிகாமான தொகையில் சீனாவுக்கு 12சதவீதம் நிலுவை காணப்பட்டுக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் தான், இலங்கையில் சக்திவளத்துறைக்குள் சீனா பிரவேசித்திருக்கின்றது. இந்த நிலைமையானது, இலங்கை ஒட்டுமொத்தமாக சீனாவின் பிடிக்குள் சென்றுவிடும் என்ற அச்சமான சூழலை தோற்றுவித்திருக்கின்றது. இதனால் இறைமையுள்ள இலங்கையின் எதிர்காலம் எவ்வாறு அமையப்போகின்றது என்பது தொடர்பில் பல்வேறு வாதப்பிரதிவாதங்கள் நடைபெற்று வருகின்றன. முன்னதாக கடந்த மாதம், மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சின் செயலாளர் எம்.பி.டி. யூ.கே. மாபா பதிரனவும் சினோபெக் நிறுவன எரிபொருள் உற்பத்தி …
-
- 2 replies
- 732 views
-
-
சமஸ்டி, தனிநாடு பின்னர் மீண்டும் சமஸ்டி, தற்போது 13வது திருத்தமாவது காப்பற்றப்படுமா? - யதீந்திரா இன்று 13வது திருத்தச்சட்டத்திலும் வெட்டிக் குறைப்புக்கள் செய்வது தொடர்பில் உரையாடப்படுகின்றது. 13வது திருத்தச்சட்டம் தொடர்பில் தமிழர் தரப்புக்களின் நிலைப்பாடுகள் என்னவாகவும் இருக்கலாம் ஆனால் 13வது திருத்தச்சட்டத்தையாவது பாதுகாக்க முடியுமா அல்லது அதனையும் வெட்டிக் குறைப்பதை அமைதியாக பார்த்துக் கொண்டிருப்பதா – என்னும் நிலையிலேயே தமிழ் தேசிய அரசியல், அதன் இயலாமைய பறைசாற்றிக் கொண்டிருக்கின்றது. விடுலைப் புலிகளுக்கு பின்னரான கடந்த, ஒரு தசாப்தத்திற்கும் மேலான அரசியல் நகர்வானது, நமது தமிழ் தேசிய தரப்புக்களின் இயலாமைக்கான சான்…
-
- 0 replies
- 464 views
-
-
இலங்கையில் தேசியகீதமானது தமிழிலில் பாடக்கூடாது என்று பொதுபலசேனா தெரிவித்திருக்கும் கருத்தானது தமிழ்மக்கள் மத்தியில் அதிகம் கவனத்தை ஈர்த்திருக்கவில்லையாயினும் பொதுபலசேனாவின் இக்கருத்தானது அரசியல் மட்டத்தில் பல்வேறு கருத்துக்களாக நோக்கவேண்டியுள்ளது. தமிழ்மொழி பேசுகின்றவர்களும் இலங்கை தேசத்தின் தேசிய கீதத்தினைப் பாடவேண்டும் என்கின்ற நோக்கத்திலேயே தமிழில் மொழிபெயர்க்கப்பட்டது. இலங்கைதேசம் ஆங்கிலேயர்களின் ஆட்சியின் பிடியில் இருந்த இறுதிக்காலத்தில் பாரததேசத்தில் பல்வேறு அரசியல் போராட்டங்களும், விடுதலை எழுச்சிகளும் ஏற்பட்டன. மக்களை விடுதலையின்பால் திசை திருப்புவதற்கு விடுதலைப்பாடல்கள் அவசியம் தேவைப்பட்டன. இலங்கை பூகோள ரீதியில் இந்திய தேசத்திற்கு அருகில் அமைந்திருப்பதனால் அங்கு…
-
- 0 replies
- 318 views
-
-
பிரதமராக ஐந்தாவது தடவை ; ரணிலுக்கான ஒரு நிகழ்ச்சித் திட்டம் ஹரிம் பீரிஸ் இலங்கையின் பிரதமராக ஐந்தாவது தடவையாக கடந்த ஞாயிற்றுக்கிழமை பதவியேற்றிருக்கும் ஐக்கிய தேசிய கட்சியின் நீண்டகாலத் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் சாதனையை நாட்டின் வேறு எந்தவொரு அரசியல்வாதியும் அண்மைய எதிர்காலத்தில் முறியடிப்பது சாத்தியமில்லை. சில தடவைகள் பிரதமர் என்ற வகையில் அவரது பதவிக்காலம் மிகக்குறுகியதாக இருந்திருக்கிறது. 2015 ஜனவரி தொடக்கம் ஆகஸ்ட் வரையான 7 மாதங்களே அவர் பிரதமர் பதவியை குறுகிய காலகட்டமாகும்.அது அவர் மூன்றாவது தடவையாக அப்பதவியை வகித்த சந்தர்ப்பமாகும். ஆனால், இலங்கையில் மிகமிக குறுகிய காலத்துக்கு பிரதமர் பதவியில் இருந்த " சாதனையாளர் "என்றால் அது நிச்ச…
-
- 0 replies
- 521 views
-
-
சுயம் இழந்து, புலிகளின் ஒளியில் குளிர்காயும் தமிழ்க்கட்சிகள்! January 31, 2024 — கருணாகரன் — ஈழத்தமிழர்களின் விடுதலை மட்டும் கேள்விக்குறியாகவில்லை. விடுதலைப் போராட்டம் முறியடிக்கப்பட்டதற்குப் பின்னான (Post – War Politics) அரசியலும் கேள்விக்குறியின் முன்னேதான் நிற்கிறது. காரணம், போருக்குப் பின்னரான அரசியலைத் தமிழ்த்தரப்பு முன்னெடுக்கவில்லை என்பதேயாகும். போருக்குப் பிறகான அரசியல் எது? எப்படியானது? அதை எப்படி முன்னெடுப்பது என்ற தெளிவில்லாமல் அதை முன்னெடுக்கவே முடியாது. இந்தத் தெளிவைக் கொள்வது மிக முக்கியமானது. அதை விட அந்தத் தெளிவின் அடிப்படையில் துணிந்து அதைப் பின்பற்ற வேண்டியது அவசியமானது. ஏனென்றால் இன்னும் தமிழ் அரசியல் வெளியானது 1960, 1970, 1…
-
- 0 replies
- 636 views
-
-
நாடாளுமன்றத் தேர்தல்: தமிழ் மக்களின் தெரிவு யார்? முத்துக்குமார் பாராளுமன்றத் தேர்தலுக்குத் திகதி குறித்தாகிவிட்டது. வருமா? வராதா? எனப் பல்வேறு விவாதங்களும் இடம்பெற்ற சூழலில் தேர்தல் வந்துவிட்டது. மைத்திரி அரசாங்கத்திற்குப் பாராளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லாத நிலையில், தேர்தல் நடத்துவதைத் தவிர வேறு தெரிவு மைத்திரிக்கு இருக்கவில்லை. மகிந்தரின் மீள் எழுச்சியை பலவீனப்படுத்துவதற்காகத்தான் மைத்திரி தேர்தலைத் தொடர்ச்சியாகத் தள்ளிப் போட்டார். ஆனால் அவர் நினைத்ததற்கு மாறாக மகிந்தர் ஒவ்வொரு நாளும் பலம்பெற்று வருகையில் மேலும் தாமதிப்பது பயன்தராது எனத் தெரிந்து கொண்டார். தென் இலங்கையில் மும்முனைப் போட்டி என்பது உறுதியாகிவிட்டது. மகிந்தர் அணி எவ்வளவோ முயன்றும் பிரதமர் வேட்பா…
-
- 0 replies
- 278 views
-
-
தமிழ்ப் பொது வேட்பாளரை எதிர்ப்பவர்களிடம் சில கேள்விகள் - நிலாந்தன் தமிழ்ப் பொது வேட்பாளர் என்ற விடயம் தமிழரசியலில் ஒரு உத்வேகத்தை-momentum-தோற்றுவித்திருக்கிறது என்று கொழும்புமைய ஊடகம் ஒன்றில் ஆசிரியராக இருந்த ஒரு மூத்த ஊடகவியலாளர் தெரிவித்துள்ளார். அதனால்தான் பொது வேட்பாளருக்கு எதிராக கருத்துக்களைத் திரட்டுபவர்கள் அதிகம் ஆவேசமாகவும் உணர்ச்சிகரமாகவும் காணப்படுகிறார்கள். அதில் பல கருத்துக்கள் தர்க்கபூர்வமானவை அல்ல. தமிழ்ப் பொது வேட்பாளர் என்ற தெரிவு அதை எதிர்ப்பவர்களை எந்த அளவுக்கு தற்காப்பு நிலைக்குத் தூண்டியிருக்கிறது என்பதற்கு கடந்த வாரம் வெளிவந்த ஒரு செய்தி நல்ல எடுத்துக்காட்டு. அச்செய்தியில் சம்பந்தர் ஒஸ்லோ பிரகடனம் என்று அழைக்கப்படும் ஆவணத்தை முன்வைத்த…
-
-
- 3 replies
- 560 views
-
-
உலக வரலாற்றில் அரசியல், இராணுவத் தலைவர்கள் உயிரோடு இருக்கும் பொழுதோ அல்லது அவர்களின் மரணத்தின் பின்னரோ அவர்களுடைய பட்டங்கள், பதவிகள், கேடயங்கள், பரிசு பொருட்கள் என்பவை தண்டனையாக பறிக்கப்படுவது நிகழ்ந்துகொண்டே இருக்கிறன. இத்தகைய தண்டனை என்பது மக்களின் விருப்புக்கும் வெறுப்புக்கும் அப்பாற்பட்டு வரலாற்றில் நிகழ்ந்திருக்கிறது. எனினும் பெரும்பாலும் மக்களின் விருப்புக்கு உட்பட்டதாகவே இத்தகைய தண்டனைகள் நிகழ்ந்ததை வரலாறு எங்கிலும் காணமுடியும். அத்தகைய ஒரு தண்டனையாகவே தமிழரசு கட்சியின் மூத்த தலைவரும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவருமாய் இருந்த இரா. சம்பந்தனின் மரணக்கிரியை மக்கள் புறக்கணித்ததை எடுத்துக்கொள்ள வேண்டும். உலக வரலாற்றில் மரணத்தின் பின் தண்டனையாக பதவி, ப…
-
-
- 2 replies
- 379 views
-
-
கைவிடப்பட்ட கதை? - வீ.தனபாலசிங்கம் ஜனாதிபதி தேர்தலுக்கு பிரதான அரசியல் கட்சிகள் தயாராகிக்கொண்டிருக்கின்றன. வேட்பாளர்களாக களமிறங்கக்கூடியவர்கள் குறித்து அறிகுறிகள் காட்டப்படுகின்றனவே தவிர, திட்டவட்டமான அறிவிப்புகள் இதுவரையில் இல்லை. ஆனால், தேர்தலுக்கு இன்னமும் ஐந்து மாதங்களே இருக்கும் நிலையில், பிரதான கட்சிகள் அல்லது கூட்டணிகள் அவற்றின் வேட்பாளர்களை அறிவிப்பதில் நீண்ட தாமதத்தைக் காட்டமுடியாதநிலை நெருங்கிக்கொண்டிருக்கிறது. இத்தடவை ஜனாதிபதி தேர்தலில் கட்சிகளினால் முன்வைக்கப்படக்கூடிய பிரதான பிரச்சினை எதுவாக இருக்கும் என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது. கடந்த கால்நூற்றாண்டு காலத்தில் ஜனாதிபதி தேர்தல்களில் பிரதான பிரசாரப்பொருளாக இருந்த ' நிறைவேற்று அதிகார ஜனாத…
-
- 0 replies
- 998 views
-
-
மஹிந்த ராஜபக்ஷவுக்குப் புரிந்ததா? கே. சஞ்சயன் / 2019 ஜூலை 14 ஞாயிற்றுக்கிழமை, பி.ப. 07:06 Comments - 0 சுகவீனமடைந்திருந்த பிள்ளையைப் பார்க்கச் சென்ற தந்தையை, சுட்டுக் கொல்வது தான், இராணுவம் நாட்டு மக்களைப் பாதுகாக்கும் முறையா?” என்று சில நாள்களுக்கு முன்னர், ஆவேசமாகக் கேள்வி எழுப்பியிருந்தார் மஹிந்த ராஜபக்ஷ. ‘அக்மீமன உபானந்த வித்தியாலய’ என்ற பாடசாலையில் நடந்த துப்பாக்கிச் சூட்டில், உதய பிரதீப்குமார என்பவர் பலியானதை அடுத்தே, மஹிந்த ராஜபக்ஷ இந்தக் கேள்வியை எழுப்பியிருந்தார். முன்னாள் கடற்படை சிப்பாயான பிரதீப்குமாரவின் பிள்ளை, அந்தப் பாடசாலையில் கல்வி கற்று வருகின்றார். அந்தப் பிள்ளைக்குச் சுகவீனம் ஏற்பட்டுள்ளதாகப் பாடசாலையில் இருந்து கிடைத்த தொலை…
-
- 0 replies
- 632 views
-
-
26 SEP, 2024 | 12:24 PM பிரசாத் வெலிக்கும்புர தென்னிலங்கையின் பிராந்தியங்களில் இருந்து குறிப்பாக, சிங்கள பௌத்தர்கள் அதிக பெரும்பான்மையாக வாழும் பாகங்களில் இருந்து பெரும்பான்மையானவர்களின் ஆதரவைப் பெற்று தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க இலங்கையின் ஜனாதிபதியாகத் தெரிவாகியிருக்கிறார். இதற்கு மாறாக, சிறுபான்மைச் சமூகங்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளின் குறிப்பாக, வடக்கு, கிழக்கு மாகாணங்கள் மற்றும் மலையகத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவும் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் கூடுதலான ஆதரவைப் பெற்றிருக்கிறார்கள். அதன் விளைவாக, திசாநாயக்கவுக்கு வாக்களிக்கவில்ல…
-
- 0 replies
- 187 views
- 1 follower
-
-
”அல்லல்பட்டு ஆற்றாது அழுத கண்ணீர் அன்றோ செல்வத்தை தேய்க்கும் படை” - வள்ளுவர் . . இன்று (21.08.2019) ஏனோ 2009ல் இலங்கையில் இடம்பெற்ற தமிழ் இனக்கொலையில் பலியானவர்களின் சாபங்கள் பலிக்க ஆரம்பிக்கிறது என்கிற உணர்வு திடீரென என்னை ஆட்கொள்ளுகிறது. . . இலங்கையில் இருந்து மகிந்த இராசபக்சவின் அரசியல் குடும்பம் எதிர் நோக்கும் நெருக்கடி பற்றிய சேதிகள் கிடைத்தது. ஏனைய நாடுகளில் இருந்தும் அதே போன்ற சேதிகள் கிட்டுகின்றன. . தர்மம் வெல்லும் என்கிறதை தவிர அதிஸ்ட்டத்தால் இனக்கொலைக்கு தப்பித்து வாழும் எம்மிடம் வேறு சொற்கள் இல்லை.
-
- 0 replies
- 861 views
-
-
ஜனாதிபதியின் உரை : கொட்டை நீக்கப்பட்ட கோது……..! November 27, 2024 — அழகு குணசீலன் — ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பத்தாவது பாராளுமன்றத்தின் முதல் அமர்வை ஆரம்பித்து வைத்து கொள்கை விளக்க பிரசங்கத்தை செய்திருக்கிறார். இலங்கையின் இன்றைய நிலையில் என்.பி.பி.என்ற போர்வையில், ஜே.வி.பி யின் முழுமையான கட்சி கட்டுப்பாட்டு ஆட்சி அவரது தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆட்சியில் சிறுபான்மை தேசிய இனங்களின் அடிப்படை ஜனநாயக உரிமைகளுக்கான அதிகாரப்பகிர்வு, மற்றும் பொருளாதார மந்தம் ஏற்படுத்தியுள்ள நெருக்கடியில் இருந்து விடுபடுவதற்கான பொருளாதாரதீர்வு திட்டங்கள் குறித்து கனத்த எதிர்பார்ப்பு தேசிய, பிராந்திய, சர்வதேச மட்டத்தில் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அநுர…
-
- 0 replies
- 241 views
-
-
வடக்கு- கிழக்கில் உள்ளூராட்சித் தேர்தல் முடிவு கூறும் செய்தியும் தமிழ்த் தேசிய அரசியலின் எதிர்காலமும் தமிழ் மக்களின் இன்றைய நிலை – ஆட்சியாளரின் நிகழ்ச்சி நிரல் – எமது பலம் – சர்வதேச சக்திகளின் நிலைப்பாடும் – தீர்வுநோக்கி முன்னேறவுள்ள சாத்தியப்பாடுகள் – போன்றவற்றை மனம்விட்டு வெளிப்படையாகப் பேசி கூட்டு முடிவை எடுக்க தமிழரசும் காங்கிரசும் தயாராக வேண்டும். எனவே புதிய கூட்டிணைவு என்பது வெறுமனே சபைகளை கைப்பற்றுவதோடு நிற்க முடியாது. மாறாக தீர்வு நோக்கி ஒன்றுபட்டு செயற்படுவதற்கான பேச்சுவார்த்தைகளும் இடம்பெற வேண்டும் – தொடர வேண்டும். கலாநிதி க.சர்வேஸ்வரன் நடைபெற்று முடிந்த உள்ளூராட்சித் தேர்தலானது வெறுமனே உள்ளூராட்சிக்கான வினைத்திறன் மிக்க நிர்வாகத்தை நடத்தவல்ல வேட்பாளர்களைத் தெரி…
-
- 0 replies
- 374 views
-
-
புதிய அரசியலமைப்பும் மக்கள் அபிலாசைகளும் : சட்டத்தரணி எஸ். மோகனராஜன் இலங்கையில் 1995, 1997, 2000ம் எனும் மூன்று சந்தர்ப்பங்களில் அரசியலமைப்பு வரைபுகள் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன. 1995 ம் ஆண்டு சந்திரிக்கா அம்மையாரால் அமைச்சரவையில் சமர்ப்பித்ததன் பின்பு எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியோடு கதைத்து நாட்டில் நிலவும் பிரச்சினைகளுக்கும் அரசியலமைப்பினை புதுப்பித்து மாற்றம் கொண்டுவரவும் சுதந்திரக் கட்சி முன்வந்தபோதும் ஐ.தே.க எவ்வித ஒத்துழைப்பையும் வழங்கவில்லை. அவ்வரைவு பின் LTTE யினருக்கு முன்வைக்கப்பட்டதன் பின் அவர்களும் எவ்வித ஒருமைப்பாடும் ஏற்படாதநிலையில் 1995ம் ஆண்டு ஆகஸ்ட் 3 ம் திகதி அரசியலமைப்பு சட்ட மூலம் சமர்ப்ப…
-
- 0 replies
- 775 views
-
-
அமெரிக்கா உருவாக்கும் இலங்கையின் அடுத்த ஹீரோ -விரான்ஸ்கி ஜனாதிபதியாகப் பதவியேற்றுக்கொண்ட நாளிலிருந்து, நாட்டில் அதிரடி அறிவிப்புகளை விடுத்துக்கொண்டிருந்த கோட்டாபய ராஜபக்ஷவின் நடவடிக்கைகளால், பலரும் அதிர்ச்சியடைந்து இருந்தார்கள். நாட்டின் நிர்வாகத்தைச் சீர்தூக்கி வைப்பதற்கும் களைகளைப் பிடுங்கி எறிவதற்கும், உரியவர் வந்துவிட்டார் என்று உச்சிமோந்து கொண்டார்கள். அறிவிப்புகளைத் தாண்டி, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, களத்தில் அதிரடி விஜயங்களை மேற்கொண்டு, அரச நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கு, அவர்களது பணிதொடர்ப…
-
- 0 replies
- 1k views
-
-
மீண்டும் ஐநாவுக்கு ஒரு கடிதம்? - நிலாந்தன் கடந்த இருபதாம் தேதி ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் “டில்கோ” விருந்தினர் விடுதியில் ஒரு சந்திப்பு ஒழுங்கு செய்யப்பட்டது. சந்திப்புக்கான அழைப்பை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் கஜேந்திரன் எடுத்திருந்தார். குறிப்பாக கருத்துருவாக்கிகளை அழைக்கும் பொழுது அவர் அனைத்துலகை விசாரணைப் பொறிமுறை தொடர்பாகக் கதைக்கப் போகின்றோம் வாருங்கள் என்று அழைத்திருந்தார். அதோடு கடந்த 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 15 ஆம் தேதி ஐநாவுக்கு அனுப்பப்பட்ட கூட்டுக்கடிதத்தின் தொடர்ச்சியாகவும் கதைக்க வேண்டும் என்று கேட்டிருந்தார். எண்பதுக்கும் குறையாதவர்கள் வந்திருந்தார்கள்.தமிழ்த்தேசியப் பேரவையைச்சேர்ந்த கட்சித்தலைவர்கள்,பிரமுகர்கள், குடிமக்கள் அமைப்புகளைச் சேர்…
-
- 0 replies
- 157 views
-
-
“ஜனாதிபதி தமிழர் முகங்களில் கரிபூசியுள்ளார்” முருகானந்தன் தவம் கடந்த 1ஆம் திகதி ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க வடக்கிற்கு இரு நாள் விஜயம் செய்து யாழ்ப்பாணம் மயிலிட்டி மீன்பிடி துறைமுகத்தின் 3ஆவது கட்டத்தின் பணிகள், குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் யாழ். பிரதேச அலுவலகத் திறப்பு ,யாழ்ப்பாணம், மண்டை தீவு பகுதியில் நிர்மாணிப்பதற்கு முன்மொழியப்பட்டுள்ள நவீன கிரிக்கெட் மைதானத்தின் பணிகள் ,உலக தென்னை தினத்தை முன்னிட்டு புதுகுடியிருப்பில் ‘கப்துரு சவிய’ தேசிய வேலைத்திட்டம், முல்லைத்தீவு, வட்டுவாகல் பாலத்தின் நிர்மாணப் பணிகள் போன்ற அபிவிருத்தி திட்டங்களை ஆரம்பித்து வைத்துள்ளதுடன் சர்ச்சைக்குரிய கச்சத்தீவுக்கும் அதிரடி விஜயம் செய்து அங்குச் சென்ற முதல் ஜனாதிபதி என்ற…
-
- 0 replies
- 170 views
-
-
தீர்வுக்கு வழி ? கடந்த ஞாயிற்றுக்கிழமை டில்கோவில் நடந்த ஒரு நிகழ்வு - நிலாந்தன் கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தில் டில்கோ விருந்தினர் விடுதியில் ஒரு நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டது. கலாநிதி குருபரனை பணிப்பாளராகக் கொண்ட சட்டத்துக்கும் கொள்கைகளுக்குமான யாழ்ப்பாண கற்கை நிலை யத்தால் அந்த நிகழ்வு ஒழுங்குசெய்யப்பட்டது. இலங்கையில் உள்ள சுவிட்சர்லாந்து தூதரகத்தின் நிதி அனுசரணையோடு நடத்தப்பட்ட அந்த நிகழ்வில் 230க்கும் குறையாதவர்கள் பங்குபற்றினார்கள். பொதுவாக அது போன்ற நிகழ்வுகளில் அவ்வளவு தொகையினர் பங்குபற்றுவது குறைவு. ஆனால் அன்று மண்டபம் நிறைந்திருந்தது. மூன்றரை மணித்தியாலங்களுக்கு மேல் நடந்த அந்த நிகழ்வில், நான்கு அம்சங்கள் இருந்தன. முதலாவது மேற்சொன்ன சட்டத்துக்கும் கொள்கைகள…
-
-
- 1 reply
- 202 views
-