அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9213 topics in this forum
-
இலங்கை இனப்பகைமையின் அத்தியாயங்கள்! அகரமுதல்வன்அரஸ் இலங்கை இனப்பகைமை - ஈழ எழுத்தாளர் அகரமுதல்வன் இலங்கைத்தீவின் வாழ்வும் வரலாறும் மிகக் கொடிய இனப்பகைமையில் நூற்றாண்டுக் காலமாய் எரிந்துகொண்டிருக்கிறது. இந்தத் தீயின் கோரத்தில் சாம்பலாக்கப்பட்ட உயிர்கள் லட்சக்கணக் கானவை. ‘இந்து சமுத்திரத்தின் முத்து’ என்று அழைக்கப்பட்ட இலங்கைத்தீவு, இந்த இனப்பகைமையின் காரணமாக ஒரு ரத்த சமுத்திரத்தையே தனக்குள் உருவாக்கிக் கொண்டது. சிங்களப் பெரும்பான்மைவாதமும் தேரவாத பெளத்தவாதச் சிந்தனையும் இந்தத் தீவில் அந்த ரத்த சமுத்திரத்தை உருவாக்கின. எந்தவொரு நிமிடத்தின் ஏதோவொரு விநாடியிலும் தமிழர் ஒருவரின் ரத்தத்தை வாளேந்திய சிங்கம் பருகியபடியிருக்கு…
-
- 0 replies
- 611 views
-
-
இருளில் தேடும் தமிழ்ப்பூனை June 13, 2025 — கருணாகரன் — சில நாட்களுக்கு முன், யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ளுராட்சி சபைகளில் வெற்றியீட்டிய தமிழசுக் கட்சியின் உறுப்பினர்களுக்கான கூட்டமொன்றில் உரையாற்றிய சுமந்திரன், புதிதாக உருவாகியிருக்கும் தமிழ்த்தேசியப் பேரவை – ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணியைக் கடுந்தொனியில் எச்சரித்தார். இதற்குக் காரணம், சபைகளில் ஆட்சி அமைப்பதற்குத் தமிழரசுக் கட்சிக்கு இவை ஆதரவளிக்கவில்லை. தமிழ்த்தேசியக் கட்சிகள் பரஸ்பரம் ஆதரவளித்துக் கொள்வதென்ற பகிரங்க அறிவிப்பை தமிழ்த்தேசியப் பேரவை மீறி விட்டது என்பதாக இருந்தது. அப்பொழுது அவர் பயன்படுத்திய வார்த்தைகளும் வெளிப்படுத்திய உடல்மொழியும் எதிரணியைச் சவாலுக்கு அழைத்த விதமும் சிரிப்பையும் துக்கத்தையும் ஒன்றாக…
-
- 0 replies
- 194 views
-
-
முதல் முதலாக யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற கூட்டமொன்றில் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் மென்சக்தி (Soft Power) என்னும் அரசியல் எண்ணக்கருவைப் பயன்படுத்தியிருந்தார். தமிழர்கள் தங்களின் மென்சக்தி ஆற்றலை பிரயோகிப்பதன் மூலமாகத்தான் எதிர்காலத்தை கையாள முடியும் என்பதே சுமந்திரனின் பேச்சின் சாரமாக இருந்தது. இதன் பின்னர் ஒரு சில அரசியல் ஆய்வாளர்களும் இந்த எண்ணக்கருவை தங்களின் புரிதலில் தொட்டுச் சென்றிருந்தனர். ஒரு சில கட்டுரைகளும் இது தொடர்பில் வெளியாகியிருக்கின்றன. இவ்வாறு தொட்டுக்காட்டப்பட்ட, வெளியாகியிருக்கின்ற எழுத்துக்களை உற்றுநோக்கிய போது ஒரு கேள்வி எழுந்தது – சர்வதேச அரசியல் விவாதங்களில் எடுத்தாளப்படும் மென்சக்தி என்னும் சொற்பதம் நமது அரசியல் சூழலுக்கு ஏற்புடைய ஒன்றுதானா? ஏற்…
-
- 0 replies
- 556 views
-
-
வடக்கு களத்தில் அதிகரிக்கும் குழப்பம் -கபில் கொரோனா பீதிக்கு மத்தியில் தமிழ் அரசியல் கட்சிகள் பொதுத் தேர்தலுக்கான பிரசாரத்தை தீவிரமாக முன்னெடுத்து வருகின்றன. இந்த முறை நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட நேரமோ- தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்ட நேரமோ- அல்லது எல்லா வேட்பாளர்களும் வேட்புமனுத் தாக்கல் செய்த நேரமோ- தேர்தல் நடக்குமா நடக்காதா என்ற குழப்பத்திலேயே பிரசாரங்களை மேற்கொள்ள வேண்டிய நிலையில் வேட்பாளர்கள் இருக்கிறார்கள். கொரோனா தொற்று பீதி மீண்டும் ஏற்பட்டுள்ளதால், தேர்தல் மீண்டும் ஒத்திவைக்கப்படுமா - இல்லையா என்று தெரியாமல் வேட்பாளர்கள் திணறுகிறார்கள். பெருமளவு காசைக் கொட்டி பிரசாரம் செய்யும் அவர்கள், இந்த தேர்தல் ஒத்திவைக்கப்பட்டால் மீண்டும் ஒருமுறை…
-
- 0 replies
- 633 views
-
-
அஷ்ரபும் வடக்கு - கிழக்கு இணைப்பும் ‘எழுக தமிழ்’ பேரணியின் மூலமாக, வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், நாட்டில் சர்ச்சையைக் கிளப்பியிருக்கும் நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை இணைப்பது தொடர்பாக மற்றொரு சர்ச்சையை உருவாக்கியிருக்கின்றார். ‘‘வடக்கு, கிழக்கு இணைப்புக்கு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் காலம்சென்ற எம்.எச்.எம். அஷ்ரப், சம்மதத்தைத் தெரிவித்து இருந்தார்” என்ற சுமந்திரனின் கூற்றே, இந்தச் சர்ச்சையை உருவாக்கியுள்ளது. புலிகள் இயக்கத்தின் முன்னாள் ஊடகப் பேச்சாளரான தயா மாஸ்டருக்கு எதிராக, வவுனியா நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில்,…
-
- 1 reply
- 414 views
-
-
ராஜபக்ஷக்கள் இந்தியாவுக்கும் உலகத்துக்கும் அளித்திருந்த உறுதிமொழிகளுக்கு மதிப்பளிக்க வேண்டும்; சுமந்திரன் நேர்காணல் போருக்குப் பின்னரான தசாப்தத்தில் வடக்கு மற்றும் கிழக்கில் வாழும் தமிழர்களை பிரதானமாக பிரதிநிதித்துவப்படுத்திய தமிழ் தேசிய கூட்டமைப்பு, ஆகஸ்ட் பொதுத் தேர்தலில் பாரிய பின்னடைவைச் சந்தித்துள்ளது. பாராளுமன்றத்தில் ஆறு இடங்களை இழந்திருக்கிறது. பாராளுமன்றில் கூட்டமைப்பின் இருப்பு பலவீனமடைந்து, ராஜபக்ஷக்கள் மீண்டும் மத்தியில் ஆட்சிக்கு வந்துள்ள நிலையில், அதுவும் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை கொண்டுள்ள நிலையில், அரசியல் தீர்வுக்கான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நீண்டகால கோரிக்கைக்கான வாய்ப்புகள் என்ன? கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ்ப்பாண மாவட்ட எம்.பி.யுமான…
-
- 0 replies
- 357 views
-
-
எதற்காக இந்த முஸ்லிம் தனியார் சட்டச் சர்ச்சை? இலங்கைக்கு 2010 ஆம் ஆண்டு வரை வழங்கப்பட்ட ஜி.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகையை மீண்டும் பெற்றுக் கொள்ள இலங்கையில் முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள முஸ்லிம் பெண்களின் திருமணத்துக்கான குறைந்தபட்ச வயதெல்லையை உயர்த்தும் வகையில் அச்சட்டத்தைத் திருத்த வேண்டும் என அமைச்சர் சாகல ரத்னாயக்க கூறியதாகச் சில ஊடகங்கள் கூறியிருக்கின்றன. முஸ்லிம் பெண்களின் திருமணத்துக்கான குறைந்தபட்ச வயதெல்லையை உயர்த்தும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டு வர வேண்டுமா, இல்லையா? என்பது வேறு விடயம். ஆனால், வரிச் சலுகையைப் பெறுவதற்காக இந்தச் சட்டத்தையோ அல்லது நாட்டில் மற்றொரு சட்டத்தையோ திருத்த வேண்டும் எ…
-
- 0 replies
- 522 views
-
-
புதிய அரசியல் யாப்பு தொடர்பான முதலாவது இடைக்கால அறிக்கை வெளிவந்திருக்கின்ற நிலையில், அது தொடர்பான வாதப்பிரதிவாதங்கள் முன்ரைவிடவும் அதிகரித்திருக்கின்றன. அடுத்த மாதம் 10ஆம் திகதி வெளிவரவுள்ள இரண்டாவது இடைக்கால அறிக்கையுடன் புதிய அரசியல் யாப்பில் தமிழ் மக்களுக்கான இடம் என்ன என்பதும் தெட்டத் தெளிவாகிவிடும். கூட்டமைப்பின் சிரேஸ்ட தலைவர்களில் ஒருவரான சித்தார்த்தன் தலைமை வகித்த உப குழுவின் அறிக்கை ஏற்கனவே ஊடகங்களில் வெளியாகியிருக்கின்றது. இந்த அறிக்கையை அடிப்படையாகக் கொண்டே அடுத்த அறிக்கை தயாரிக்கப்படவுள்ளது. குறித்த அறிக்கையில் இலங்கையில் தற்போது நடைமுறையில் இருக்கின்ற ஒற்றையாட்சி முறைமை தொடர்பில் இவ்வாறு குறிப்பிடப்பட்டிருக்கின்றது: “மாகாண சபைகளின் வினைத்திறனான செயற்பாட்டிற்க…
-
- 2 replies
- 441 views
-
-
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாதை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தன்னுடைய ‘தனித்த’ அரசியல் பயணத்தை ஆரம்பித்து சுமார் ஏழு வருடங்களாகின்றன. ஆயுதப் போராட்டத்தின் இறுதிக் கட்டங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமையோடு கொள்கை ரீதியாக முரண்பட்டுக் கொண்டு வந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சில நாடாளுமன்ற உறுப்பினர்களையும் இன்னும் சில முக்கியஸ்தர்களையும் இணைத்துக் கொண்டு, 2010 பொதுத் தேர்தல்க் காலத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை நிறுவினார். இதன் பின்னர், தமிழ்த் தேசிய அரசியல் பற்றிய உரையாடல்களில் விரும்பியோ விரும்பாமலோ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ‘மாற்று’ என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியே அடையாளப்படுத்தப்பட…
-
- 0 replies
- 296 views
-
-
அச்சுறுத்தலாகிவரும் உமாஓயா 7 ஆயிரத்து 37 வீடுகள் வெடிப்புகளுடன் சேதம். 3 ஆயிரத்து 112 கிணறுகள் வற்றியுள்ளன. 400 க்கும் அதிகமான நீர் நிலைகள் பாதிக்கப்பட்டுள்ளது. விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. உயிரினங்கள் பாதிக்கப்பட்டு வருகின்றன. நிலம் தாழிறக்கம், மண் சரிவுகள் ஏற்பட்டு அபாயம். ஒரு நாட்டின் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் அந்த நாடு அடுத்தகட்ட நீண்டகால பயணத்தை முன்னெடுத்து செல்ல ஊன்றுகோலாக அமையவேண்டும். ஒரு பரம்பரை மட்டும் அல்ல…
-
- 0 replies
- 1.4k views
-
-
விபத்தல்ல சீனாவின் சதியாக இருக்கலாம்" சுப்ரமணியசாமி
-
- 1 reply
- 511 views
-
-
தமிழரசுக் கட்சியின் தீர்மானம் – செல்வரட்னம் சிறிதரன் வடமாகாண சபையின் அமைச்சரவை விவகாரம் மீண்டும் விஸ்வரூபமெடுப்பதற்கான நிலைமையை நோக்கி நகர்ந்திருக்கின்றது. அமைச்சர்களை மாற்றி புதிய அமைச்சர்களை நியமிப்பதற்காக முதலமைச்சர் விக்னேஸ்வரன் எடுத்துள்ள தீர்க்கமான முடிவுகளே இதற்குக் காரணம் என தமிழரசுக்கட்சியினர் குற்றம் சுமத்தியிருக்கின்றனர். பிடிவாதப் போக்குடனும், தமிழரசுக் கட்சிக்கு அமைச்சர் பதவியை வழங்குவதில் பழிவாங்கும் நோக்கத்துடன் முதலமைச்சர் நடந்து கொள்வதாகக் குறிப்பிட்ட தமிரசுக் கட்சியின் வடமாகாண சபை உறுப்பினர்கள் அமைச்சரவையில் தாங்கள் எவரும் பதவி ஏற்பதில்லை என ஏகமனதாகத் தீர்மானித்திருக்கின்றனர். …
-
- 0 replies
- 900 views
-
-
போர்க்குற்றவாளிகளை புத்தபெருமானும் மன்னிக்கமாட்டார் ஜெனரல் ஜகத் ஜயசூரிய உட்படப் படையினர் அனைவரையும் போர்க்குற்ற விசாரணை யிலிருந்து பாதுகாப்பேன்’’ என அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளமை தெற்கில் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கும் என்பதில் சிறிதளவும் ஐயமில்லை. தெற்கில் நிலவுகின்ற தற்போதைய சூழ்நிலையில் அவர் அப்படித்தான் கூறியிருக்க வேண்டும். அவ்வாறு கூறியிருக்காது விட்டால், அவரால் ஆட்சியில் தொடரமுடியாத நிலைதான் உருவாகியிருக்கும். முன்னாள் இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரிய மீதான குற்றச்சாட்டுக்கள் தற்போது தீவிரமடைந்துள்ளன. இவர் போர்க்குற்றங்கள் புரிந்…
-
- 0 replies
- 349 views
-
-
கஞ்சா அரக்கனிடம் அகப்படாதிருப்போம் அண்மைக்காலமாக கொழும்பு மற்றும் யாழ்ப்பாணத்தைத் தளமாகக் கொண்டு வெளிவரும் சகல தமிழ்ப் பத்திரிகைகளில் மட்டுமென்றல்லாது, கொழும்பிலிருந்து வெளியாகும் சிங்களப் பத்திரிகைகள் பலவற்றிலும்கூட அடிக்கடி இடம் பிடித்துவரும் முக்கிய செய்தியொன்றாக அமைவது, கஞ்சாக் கடத்தல் முறிய டிப்புச் சம்பவங்களாகும். கேரளக் கஞ்சா என்ற பெயரில் அழைக்கப்படும் இந்தப் போதைப் பொருள், இந்திய மாநிலங்களில் ஒன்றான கேரள மாநிலத்தில் பெரிய அளவில் விளைவிக்கப்பட்டு தமிழ் நாட்டின் கடலோரக் கிராமங்க ளூடாக கடல் வழியாக இலங்கையின் வட பகு…
-
- 1 reply
- 1.4k views
-
-
2020 வரை நீடிக்குமா கூட்டு அரசு? Share அரச தலைவர் தேர்தலில் மகிந்தவின் அரசு கவிழ்க்கப்பட்டு மைத்திரி-– ரணில் தலைமையிலான கூட்டு அரசு உருவானபோது, இந்த நாட்டு மக்கள் மத்தியில் ஒரு புதுவித உற்சாகமும் நம்பிக்கையும் பிறந்தன. இத்தோடு ஊழல்,மோசடிகள் ஒழிந்து விடும்; வாழ்க்கைச் செலவினம் குறைந்துவிடும்; பொருளாதார ரீதியில் நாடு அபிவிருத்தி அடையப் போகிறது என்றெல்லாம் மக்கள் கனவு காணத் தொடங்கினர்.போர் முடி வுக்கு வந்த வேளையில் கண்ட கனவு போன்றதே அதுவும். வீழ்ச்சி காண ஆரம்பித்துள்ள ஐ.தே.கட்சியின் மதிப்பு ஐக்கிய தேசி…
-
- 0 replies
- 956 views
-
-
மைத்திரியின் யாழ். வருகையும் எதிர்வினையும் புறக்கணிப்புகள், சத்தியாக்கிரகங்கள், ஊர்வலங்கள் என்பவற்றை மேற்கொள்வதற்கு என்று சந்தர்ப்பங்கள் உள்ளன. எடுத்ததற்கெல்லாம் அவற்றை செய்யப்போனால், அவற்றுக்குரிய மதிப்பும் பெறுமானமும் குறைந்துவிடும். இந்தப் போராட்டங்கள் அனைத்தும் என்னுடைய ஆட்சியில்தான் நடைபெறுகின்றன. முந்தைய ஆட்சியில் இதுபோன்ற போராட்டங்கள் நடைபெற்றிருந்தால், வெள்ளை வானில் வந்து பிடித்துக் கொண்டு சென்றிருப்பார்கள்”. கடந்த மார்ச் மாதம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ‘ஜனாதிபதியிடம் சொல்லுங்கள்’ நிகழ்வில் கலந்து கொண்டு பேசும் போதே, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார். வடக்கு மாகாண ஆளுநர் …
-
- 0 replies
- 610 views
-
-
தமிழ் – முஸ்லிம் இணைவு அரசியலும், கற்பனாவாதமும் - யதீந்திரா சமீப நாட்களாக தமிழ் எழுத்தாளர்கள் பலர், தங்கள் உளக்கிடக்கைகளை பத்தி எழுத்துக்களாகவும், இணையவெளி உரையாடல்களாகவும் சிதறவிட்டிருந்ததை காணக்கூடியதாக இருந்தது. தெற்கில் முஸ்லிம்கள் தாக்கப்பட்டமையை அடியொற்றியே, இவ்வாறான கருத்துக்கள் வெளிவரத் தொடங்கியிருக்கின்றன. அவ்வாறான எழுத்தாளர்கள், தமிழர்களும் முஸ்லிம்களும் ஒன்றிணைந்து போராடும் காலம் வந்துவிட்டதாக வேறு, சொல்லிவருகின்றனர். அது உண்மைதானா என்று நோக்குவதுதான் இப்பத்தியின் நோக்கம். முதலில் தற்போது எழுந்திருக்கும் சிங்கள – முஸ்லிம் முரண்பாட்டின் தன்மையை புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது. முஸ்லிம்கள் தொடர்பான அதிருப்தியென்பது பலரும் நோக்குவது போன்று ஒரு புதிய விவகாரம் அல…
-
- 0 replies
- 392 views
-
-
மோடியின் இந்தியா என்ன சொல்ல முற்படுகிறது? - யதீந்திரா படம் | ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ Twitter தளம். சில தினங்களுக்கு முன்னர் கொழும்பிற்கு விஜயம் செய்திருந்த பாரதிய ஜனதா கட்சியின் திட்டமிடலாளர்கள் குழுவில் இடம்பெற்றிருந்த சிலர் தெரிவித்திருக்கும் கருத்துக்கள், இந்தியாவின் அணுகுமுறைகள் குறித்து மேலும் சில விடயங்களை தெளிவுபடுத்தியிருக்கின்றது. கொழும்பின் ஆட்சியாளர்களுக்கு நெருக்கமான சுப்பிரமணிய சுவாமியே இக்குழுவினருக்கு தலைமை ஏற்றிருந்தார். சுவாமி, பாரதிய ஜனதாவின் உயர் மட்டத்தினருக்கு நெருக்கமானவர் என்பது இரகசியமல்ல. ஆனால், அவர் பாரதிய ஜனதா கட்சியின் மூலோபாய செயற்பாட்டுக் குழுவின் தலைவராக இருக்கின்றார் என்பது புதிய தகவலாகும். இது கூட்டமைப்பினருக்கு பேரதிர்ச்சியாக…
-
- 0 replies
- 495 views
-
-
முள் படுக்கையில் கூட்டமைப்பு வடக்கில் அறுதிப் பெரும்பான்மை பெறாத சபைகளில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஆட்சியமைக்கும் முயற்சிகளில் வெற்றி பெற்று வருகிறது. ஆனாலும், இது கடுமையான விமர்சனங்களையும் எதிர்கொள்ளும் நிலைக்குத் தள்ளியிருக்கிறது. யாழ்ப்பாண மாநகர சபையில் தொடங்கியது இந்தப் பலப்பரீட்சை. இங்கு, 16 ஆசனங்களைக் கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, மாநகர மேயர் பதவிக்கு ஆர்னோல்ட்டின் பெயரை முன்மொழிய, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, மணிவண்ணனின் பெயரை முன்மொழிய, பதிலுக்கு ஈ.பி.டி.பியும் ரெமீடியசின் பெயரை முன்மொழிந்ததால் திருப்பம் ஏற்பட்டது. மும்முனைப் போட்டி எதிர்பார்க்கப்படாத நிலையில், வாக்கெடுப்பு நடத்தப்பட்டு…
-
- 0 replies
- 444 views
-
-
தமிழ் தேசிய சபைக்கான கொள்கை நிலைப்பாடு என்ன? - யதீந்திரா படம் | Srilankabrief தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுவினர் கூடி சில முடிவுகளில் உடன்பட்டிருக்கின்றனர் எனச் செய்திகள் வெளியாகியிருக்கின்றன. ‘தமிழ் தேசிய சபை’ ஒன்றை ஏற்படுத்துவது தொடர்பிலும் உடன்பாடு காணப்பட்டுள்ளது. கூட்டமைப்பு அவ்வப்போது கூடி, முடிவெடுப்பதும், பின்னர் அந்த முடிவுகளை கிடப்பில் போடுவதும், தமிழ் அரசியல் வாசகர்களுக்கு புதிய விடயமல்ல. ஆனால், இதுவரை முடிவுகள் எடுக்கப்பட்ட போதிருந்த நிலைமைக்கும் தற்போதிருக்கின்ற நிலைமைக்கும் இடையில் ஒரு வேறுபாடு உண்டு. முன்னைய முடிவுகளின் போது, ஜயா சம்பந்தனே தமிழரசு கட்சியின் தலைவராகவும், கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுத் தலைவராகவும் இருந்தார். ஆனால், தற்ப…
-
- 0 replies
- 385 views
-
-
தமிழ்க் கட்சிகள் தமிழ் மக்களைத் தோற்கடிக்கக் கூடாது புருஜோத்தமன் தங்கமயில் அமையும் சந்தர்ப்பங்களை வெற்றிகரமாகக் கையாளும் சமூகமே, அரசியல் வெற்றியை சுவைக்கும்; இலக்குகளை அடையும். மாறாக, அமையும் சந்தர்ப்பங்களை கையாளத் தெரியாமல், தொடர்ச்சியாகப் பின்னடைவைச் சந்திக்கும் சமூகம், பெரும் தோல்வியின் அடையாளமாக மாறும். தமிழ் மக்களும் தமிழ்த் தேசிய அரசியலும், இன்றைக்கு தோல்வியின் அடையாளமாக நோக்கப்படுவதற்கு, சந்தர்ப்பங்களைக் கையாளத் தெரியாத, தூரநோக்கற்ற, குறுகிய சுயநல அரசியலே பிரதான காரணம் எனலாம். இலங்கை, உள்ளூரிலும் சர்வதேச ரீதியிலும் இன்று சந்தித்து நிற்கின்ற பொருளாதார - இராஜதந்திர நெருக்கடிகளில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்வதற்கான அவசரத்தைக் காட்டுகின்றது. அதற…
-
- 0 replies
- 478 views
-
-
அமெரிக்க போர்களும் விளைவுகளும்: கடந்த பத்தாண்டு- ஒரு பார்வை: ராஜன் சடகோபன் உலக வல்லரசான அமெரிக்கா, கடந்த 10 ஆண்டுகளில் தன்னை காப்பாற்றி கொள்ள போர் என்ற ஆயுதத்தை எப்படி எல்லாம் பயன்படுத்தியது, அந்த போரால் ஏற்பட்ட விளைவுகள் என்ன என்பதை சுருக்கமாக விளக்குகிறது இக்கட்டுரை அமெரிக்க வரலாற்றில், போர் என்பது ஒரு தொடர் கதை. அந்த நாடு உருவாகும் முன்பு, அங்கிருந்த செவ்விந்தியர்களை அழித்ததில் துவங்கிய அந்தப் போர், நிலத்துக்காக, அடிமைகளுக்காக, வர்த்தக உரிமைகளுக்காக, துறைமுகப் பகுதிகளுக்காக, இயற்கை வளங்களுக்காக இன்று வரை தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இரண்டாவது உலகப் போருக்கு பின், வல்லரசாக தன்னை நிலைநிறுத்திக் கொண்ட அமெரிக்கா, ரஷ்யா மீதான பனிப்போர், கொரியா, வியட்நாம், …
-
- 5 replies
- 1.8k views
-
-
பத்து ஆண்டுகள் காட்டாட்சி நடாத்திய இராசபக்சா குடும்பத்தைச் சேர்ந்த கோத்தபாயா அடுத்த சனாதிபதியா? இலங்கையில் அடுத்த சனாதிபதி தேர்தல் நடப்பதற்கு ஒன்றரை ஆண்டுகள் இருக்கின்றன. ஆனால் தேர்தல் களத்தில் இறங்க இப்போதே ஆயத்தங்கள் நடைபெறுகின்றன. இதில் மூன்று பேர்களது பெயர்கள் அடிபடுகின்றன. இப்போதுள்ள சனாதிபதி மைத்திரிபால சிறிசேனா மீண்டும் போட்டியிடுவார் என்று அவரது கட்சியில் உள்ள அமைச்சர்கள் சொல்கிறார்கள். அதே போல் ஐக்கிய தேசியக் கட்சி அமைச்சர்கள் சிலர் பிரதமர் இரணில் விக்கிரமசிங்காதான் தங்கள் கட்சியின் சனாதிபதி வேட்பாளர் என உறுதிபடக் கூறுகிறார்கள். இந்த இருவரைத் தவிர மூன்றாவதாக முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரும் முன்னாள் சனாதிபதி மகிந்த இராசபக…
-
- 0 replies
- 396 views
-
-
பிச்சை வேண்டாம் நாயைப் பிடி எம்.எஸ்.எம் ஐயூப் புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் மூலம்: சர்வதேச ரீதியாக விமர்சிக்கப்பட்டு வந்த பயங்கரவாத தடைச் சட்டத்துக்குப் பதிலாக, அரசாங்கம் கொண்டு வரப்போகும் புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் தொடர்பாக, ஏற்கெனவே தெற்கிலும் வடக்கிலும் சர்வதேச ரீதியாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. சிலர், தற்போது அமலில் உள்ள பயங்கரவாத தடைச் சட்டத்தைப் பார்க்கிலும், புதிய சட்டம் மோசமானது எனக் கூறுகின்றனர். ஐ.நா மனித உரிமைகள் பேரவை உள்ளிட்ட சர்வதேச மனித உரிமைகள் அமைப்புகளின் வற்புறுத்தலாலேயே, அரசாங்கம் தற்போது அமலில் உள்ள சட்டத்துக்குப் பதிலாக, புதிய சட்டம் ஒன்றை வரைந்துள்ளது. இலங்கைக்கு தொட…
-
- 0 replies
- 795 views
-
-
மஹிந்தவும் கோத்தாவும் சம்பந்தனுடன் பேசியது என்ன? இவ்வாரம் இலங்கை அரசியலில் அதிகமாக மக்களால் பிரஸ்தாபிக்கப்பட்ட பத்திரிகை செய்திகளில் மிக கவனத்தை ஈர்த்த செய்தியாக பேசப்படுவது. எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவுடன் உரையாடியதாக கூறப்படுகின்ற விடயம் .மற்றொன்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்து ஆற்றிய உரை. இன்னொன்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா அம்மையார் வடக்கு பிரச்சினைக்கு தீர்வின்றேல் அங்கு மீண்டும் பிரச்சினை உருவாகலாம் என்ற கருத்து. பிரதமர் ரணில் யாழ்ப்பாணத்துக்கு விஜயமொன்றை மேற்கொண்டிருந்த வேளை வடக்கு மற்றும் …
-
- 0 replies
- 474 views
-