அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9213 topics in this forum
-
மஹிந்தவின் பலவீனத்தின் வெளிப்பாடு? கே. சஞ்சயன் / 2019 மார்ச் 31 ஞாயிற்றுக்கிழமை, பி.ப. 09:17 Comments - 0 கோட்டாபய ராஜபக்ஷவை, ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்துவதற்கு ராஜபக்ஷ குடும்பம் முடிவு செய்து விட்டது என்றும், அமெரிக்கக் குடியுரிமையை விலக்கிக் கொள்வதற்கான ஆவணங்களை, கோட்டாபய ராஜபக்ஷ அமெரிக்கத் தூதரகத்தில் கையளித்து விட்டார் என்றும் பரபரப்பான செய்திகள், ஊடகங்களில் அடிப்பட்டுக் கொண்டிருந்த நிலையில், “அப்படியான முடிவு எதையும் எடுக்கவில்லை” என்று, குண்டைத் தூக்கிப் போட்டிருக்கிறார் மஹிந்த ராஜபக்ஷ. ஊடகங்களின் ஆசிரியர்கள், நிர்வாகிகளுடன் கடந்த செவ்வாய்க்கிழமை ஒரு சந்திப்பை மேற்கொண்டிருந்த போதே அவர், கோட்டாபய ராஜபக்ஷவை வேட்பாளராக நிறுத்துவதென்று முடிவு எட…
-
- 0 replies
- 570 views
-
-
மஹிந்தவின் பிரதமர் கனவை கண்டுகொள்ளாத ரணில் புருஜோத்தமன் தங்கமயில் மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் பிரதமராகப் பதவி ஏற்கப்போகிறார் எனும் தகவல், அண்மைக்காலமாக அடிக்கடி பரவி வருகின்றது. கடந்த வாரத்தில், பதவி ஏற்பதற்காக அவர் தன்னுடைய வீட்டிலிருந்து, ஜனாதிபதி செயலகம் நோக்கி புறப்பட்டுவிட்டார் என்பது வரையில் வதந்தி பரவியது. இந்த வதந்தி பரவிக் கொண்டிருந்த போது, அவர் மாத்தறையில் ஒரு குடும்ப நிகழ்வில் பங்குபற்றிக் கொண்டிருந்தார். ஆனால், மஹிந்த மீண்டும் பிரதமராக பதவி ஏற்கப்போகிறார் என்ற தகவல்கள் அடிக்கடி வெளியாவதன் பின்னால், வதந்தியைப் பரப்புவர்களைக் காட்டிலும், மஹிந்த வாதிகளே அதிகம் இருப்பதாக குற்றஞ்சாட்டப்படுகின்றது. மூன்றில் இரண்டு பெரும்பான்மையை அண்மித்த தேர்தல் வெற்றிக…
-
- 0 replies
- 527 views
-
-
மஹிந்தவின் மறு எழுச்சியா? 'ஜன சட்டன’ என்ற பெயரில், கண்டியில் இருந்து கொழும்பு நோக்கி நேற்றுத் தொடங்கப்பட்டுள்ள கூட்டு எதிரணியின் பாதயாத்திரைக்கு ஊடகங்கள் அதிகளவு முக்கியத்துவத்தைக் கொடுத்திருக்கின்றன. அரசியல் வட்டாரங்களிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்தப் பாதயாத்திரையின் விளைவுகள் எத்தகையதாக இருக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு அதிகமாகவே காணப்படுகிறது. ஏனென்றால், மஹிந்த ராஜபக்ஷ ஆட்சி அதிகாரத்தை இழந்த பின்னர், நடத்துகின்ற மிகப்பெரிய அரசியல் நடவடிக்கையாக இது காணப்படுகிறது. கடந்த ஆண்டு ஜனவரி மாதம் நடந்த ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியைப் பறிகொடுத்த பின்னர், அரசியல் ரீதியாகத் தன்னை நிலைப்படுத்திக் கொள்வதற்காக கடுமையாகப…
-
- 0 replies
- 353 views
-
-
மஹிந்தவின் மீள்வருகையை தடுக்க மைத்திரி எடுக்கும் முயற்சி தேசிய அரசாங்கம் என்ற பெயரில், ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சில நாடாளுமன்ற உறுப்பினர்களும் இணைந்து அமைத்துக் கொண்டிருக்கும் அரசாங்கத்துக்கான ஒப்பந்தம் காலாவதியாகும் நாள், நெருங்கி வரும் நிலையில், இந்த அரசாங்கம் நிலைத்திருக்குமா என்ற சந்தேகத்தைப் பலர் எழுப்புகின்றனர். ஒப்பந்தம் காலாவதியாகிய உடன், தாம் அரசாங்கத்திலிருந்து பிரிந்து செல்வதாக ஸ்ரீ ல.சு.க எம்.பிக்கள் சிலர் அண்மையில் கூறியிருந்தனர். டிசெம்பர் மாதம் 31 ஆம் திகதி வரை பொறுத்திருக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களுக்கு ஆலோசனை வழங்கிய…
-
- 1 reply
- 347 views
-
-
[size=4]வீர புருஷர்கள் இரு ஓரங்களும் கூரான வாளொன்றை ஒத்தவர்கள், புத்திசாலித்தனம் வாய்த்த இனத்தவர்கள். இத்தகைய வீரபுருஷர்கள் விடயத்தில் அவதானத்துடனேயே செயற்படுவர்.[/size] [size=4]தமிழில் : வியெஸ்ரி[/size] [size=4]மூலம்: ராவய[/size] [size=4] இத்தகைய வீர புருஷர்களூடாகத் தமது தேவையை நிறைவு செய்து கொண்ட பின்னர் அவர்களுக்கு கௌரவமாக ஓய்வு வழங்கிவிடுவர். வீர புருஷரொருவருக்கு காலக்கட்டுப்பாடின்றித் தொடர்ந்து செயற்பட இடமளிக்கும் இனங்கள் தமது நிகழ் காலத்தைப் போன்றே, எதிர்காலத்தையும் ஆபத்துக்கு உள்ளாக்கிக் கொள்கின்றன. [/size] [size=4]கறுப்பு ஜூலை கலவரத்தால் பெரும் பாதிப்புக்கு உள்ளான இந்த நாட்டின் தமிழ் மக்கள், தலை நிமிர்ந்து மீண்டும் தமது வாழ்க்கையைத் தொடர வாய்ப்பு …
-
- 0 replies
- 758 views
-
-
மஹிந்தவின் வேட்பாளர் கோத்தபய ராஜபக்ஷ ஜனாதிபதி தேர்தல் பரப்பு அதிகரித்து வருகின்ற சூழலில் நாளை 11ஆம் திகதி வெளியாகவுள்ள முக்கிய அறிவிப்பானது நாட்டின் தேசிய அரசியலில் ஒரு முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாளைய தினம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தரப்பில் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிக்கப்படவுள்ளதாக மிகப்பரவலாக அந்தத் தரப்புப் பாராளுமன்ற உறுப்பினர்களால் தெரிவிக்கப்பட்டு வருகின்றது. இந்த சூழலிலேயே நாளை வெளியாக இருக்கின்ற இந்த அறிவிப்பானது மிக முக்கியமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. தற்போதைய அரசியல் சூழலில் இரண்டு பிரதான முகாம்களிலிருந்த…
-
- 0 replies
- 1k views
-
-
மஹிந்தவுக்கு எதிரான பௌத்த மகாசங்கத்தின் அறிவிப்பு எதை உணர்த்துகிறது? புருஜோத்தமன் தங்கமயில் தேசிய இணக்க இடைக்கால அரசாங்கமொன்று அமைக்கப்படும் வரையில், ராஜபக்ஷர்களுக்கு ஆசீர்வாதம் அளிக்க மாட்டோம் என்று, பௌத்த மகாசங்கம் வெளிப்படையாக அறிவித்துவிட்டது. இலங்கையில் அரசியல் தலைவர்களுக்கும் கட்சிகளுக்கும் எதிராக, பௌத்த மகாசங்கம் இவ்வாறான அறிவிப்புகளை விடுப்பது புதிதில்லை. ஆனால், அந்த அறிவிப்புகள் அதிக தருணங்களில் மறைமுகமானவையாக இருந்திருக்கின்றன. இம்முறை விடுக்கப்பட்டிருக்கின்ற அறிவிப்பு, வெளிப்படையானதா…
-
- 0 replies
- 401 views
-
-
மஹிந்தவுக்கு முளைத்திருக்கும் சிக்கல் -சத்ரியன் ஒன்றுமட்டும் உறுதியாகத் தெரிகிறது, கூட்டு எதிரணி மஹிந்த ராஜபக் ஷ என்ற ஒரே தலைமையின் கீழ் ஒன்றிணைந்திருந்தாலும், கோத்தா விசுவாசிகள், பசில் விசுவாசிகள், என்று மாத்திரமன்றி, ராஜ பக்ஷ குடும்ப அரசியலுக்கு எதிரானவர்களும் கூட அதனுள் அடங்கியிருக்கிறார்கள். அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் கூட்டு எதிரணி அல்லது ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் வேட்பாளர் யார் என்ற விவகாரம் இப்போது முன்னையதை விடவும் சிக்கலானதாக மாறியிருக்கிறது. மஹிந்த ராஜபக் ஷ தனது சகோதரர்களில் ஒருவரை போட்டியில் நிறுத்தக் கூடும் என்ற எதிர்பார்ப்பு நீண்டகாலமாகவே இருந்து வருகிறது. குறிப்…
-
- 0 replies
- 775 views
-
-
மஹிந்தவுக்கு வந்துள்ள சோதனை கே. சஞ்சயன் / 2018 டிசெம்பர் 21 வெள்ளிக்கிழமை, மு.ப. 02:34 அங்குமிங்குமாகச் சுற்றிய பிரச்சினை இப்போது, மீண்டும் மஹிந்த ராஜபக்ஷவிலேயே வந்து நிற்கிறது. ஒக்டோபர் 26ஆம் திகதிக்கும், டிசெம்பர் 15ஆம் திகதிக்கும் இடையில் அவர், பிரதமரா, இல்லையா என்ற கேள்வி இருந்தது. இப்போது அவர், எதிர்க்கட்சித் தலைவரா, இல்லையா என்ற கேள்வி எழுந்திருக்கிறது. இத்தோடு மட்டும் நின்று விட்டால் அவருக்கு அதிர்ஷ்டம் தான். ஏனென்றால், அடுத்து இன்னொரு கேள்வியும் எழுப்பப்பட்டிருக்கிறது. அது, அவர் நாடாளுமன்ற உறுப்பினரா, இல்லையா என்பது. பிரதமர் பதவிச் சர்ச்சை, நீதிமன்றப் படிகளில் ஏறித்தீர்க்கப்பட்டது போன்ற நிலைமை ஏற்பட்டால், மஹிந்த ராஜபக்ஷவுக்குப…
-
- 1 reply
- 561 views
-
-
மஹிந்தவுடன் கூட்டு வைப்பாரா சம்பந்தன்? மஹிந்த ராஜபக் ஷவுடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறேன் என்ற- தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் கருத்து பல்வேறு விதமாகவும் வியாக்கியானப்படுத்தப்பட்டு வருகிறது. மஹிந்தவுடன் இணைந்து ஆட்சி புரிய வேண்டும் என்று சம்பந்தன் அழைப்பு விடுத்துள்ளது போலவும், செய்திகள் வெளியாகியிருக்கின்றன. மஹிந்த ராஜபக் ஷவுடன் இணைந்து செயற்பட வேண்டும் என்று கூறியதாகவும் செய்திகள் வெளியாகியிருக்கின்றன. எவ்வாறாயினும், மஹிந்த ராஜபக் ஷவை மீண்டும் ஆட்சியில் அமர்த்துவதற்கோ, அவருடன் இணைந்து ஆட்சியில் பங்கெடு ப்பதற்கோ சம்பந்தன் விரும்புவார் என்று தோன்றவில…
-
- 1 reply
- 516 views
-
-
மஹிந்தவுடன் சேர்ந்தியங்க சம்பந்தன் ஆர்வமா? இலங்கையில் தமிழ்த்தரப்பின் எதிர்கால அரசியல் போக்கு நாட்டின் நலனுக்காகவும் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை எட்டுவதற்காகவும் மஹிந்த ராஜபக்ஷவுடன் இணைந்து, செயற்படத் தயாராக இருப்பதாக, சம்பந்தன் தெரிவித்திருக்கிறார். ஜூலம்பிட்டியே மங்களதேரர் எழுதிய ஒரு நூல் வெளியீட்டில், கடந்த வாரம் கலந்து கொண்டு உரையாற்றும்போதே, சம்பந்தன் இவ்வாறு தெரிவித்துள்ளார். இந்த நிகழ்வில் மஹிந்த ராஜபக்ஷவும் கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. மிக நீண்டகாலத்துக்குப் பிறகு, சம்பந்தனும் மஹிந்த ராஜபக்ஷவும் ஒரு நிகழ்வில் இணைந்து கலந்து கொண்டிருப்பது, முக்கியத்துவம் வாய்ந்ததாகக் …
-
- 0 replies
- 332 views
-
-
மஹிந்தவும் 13 பிளஸூம் எம்.எஸ்.எம். ஐயூப் / 2019 ஓகஸ்ட் 14 புதன்கிழமை, மு.ப. 03:29 Comments - 0 “இரண்டு வருடங்களில் இனப்பிரச்சினைக்குத் தீர்வு வழங்கப்படும்” என, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, கடந்த மாதம் வடக்கில், கந்தரோடையில் நடைபெற்ற பாடசாலை வைபவமொன்றின் போது கூறியிருந்தார். தமது அரசாங்கத்துக்கு, நாடாளுமன்றத்தில் போதிய பெரும்பான்மை பலம் இல்லாதிருந்தமையே, கடந்த காலத்தில் இனப் பிரச்சினைக்குத் தீர்வு வழங்க முடியாமல் போனதற்குக் காரணம் எனவும் பிரதமர் அக்கூட்டத்தில் கூறினார். அதேபோல், எதிர்க்கட்சிக் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷ, தாம் தலைமை தாங்கப் போகும் பொதுஜன பெரமுன பதவிக்கு வந்தால், இனப்பிரச்சினைக்குத் தீர்வாக, தமது ஆட்சிக்காலத்தில், தாம் வ…
-
- 0 replies
- 939 views
-
-
http://content.epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2017-01-15#page-10
-
- 0 replies
- 347 views
-
-
மஹிந்தவும் கோத்தாவும் சம்பந்தனுடன் பேசியது என்ன? இவ்வாரம் இலங்கை அரசியலில் அதிகமாக மக்களால் பிரஸ்தாபிக்கப்பட்ட பத்திரிகை செய்திகளில் மிக கவனத்தை ஈர்த்த செய்தியாக பேசப்படுவது. எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவுடன் உரையாடியதாக கூறப்படுகின்ற விடயம் .மற்றொன்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்து ஆற்றிய உரை. இன்னொன்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா அம்மையார் வடக்கு பிரச்சினைக்கு தீர்வின்றேல் அங்கு மீண்டும் பிரச்சினை உருவாகலாம் என்ற கருத்து. பிரதமர் ரணில் யாழ்ப்பாணத்துக்கு விஜயமொன்றை மேற்கொண்டிருந்த வேளை வடக்கு மற்றும் …
-
- 0 replies
- 474 views
-
-
மஹிந்தவும் சம்பந்தனும் – நிக்ஸன்:- புதிய யாப்பு நடைமுறைக்கு வருதில் சிக்கல் ஏற்படலாம் என்ற எதிவு கூறலின் அடிப்படையில் 20ஆவது திருத்தச்சட்டத்தை கொண்டு வந்து மாகாண சபைகளை இலகுவாக கலைக்கும் அதிகாரத்தை நல்லாட்சி அரசாங்;கம்உருவாக்குகின்றதா? -அ.நிக்ஸன்- இனப்பிரச்சினை என்ற ஒன்றே இல்லை அது பயங்கரவாத செயற்பாடுகள்தான் என்று அடித்துக் கூறிய முன்னாள் மஹிந்த ராஜபக்ச தொடர்ச்சியாக அந்த நிலைப்பாட்டில் இருக்கின்றார் என்பதை அவருடைய பேச்சுக்கள் காண்பிக்கின்றன. ஜனாதிபதி பதவியில் இருந்து விலகிய காலம் முதல் இன்று வரை இனப்பிரச்சினை தீர்வுபற்றி எந்தவொரு இடத்திலும் எவுதும் பேசியதில்லை. இந்த நிலையில் அரசியல் தீர்வுக்கு மஹிந்த ராஜபக்ச ஒத்துழைப்பு வ…
-
- 2 replies
- 644 views
-
-
மஹிந்தவும் மைத்திரிபாலவும் ஒன்றுதானா? திருச்சிற்றம்பலம் பரந்தாமன் படம் | ALJAZEERA மஹிந்த ராஜபக்ஷவுக்கு வாக்களிக்குமாறு கேட்டால், அனேக தமிழர்கள் புண்படக்கூடும். அவ்வாறு கேட்கின்றவர் மீது ஐயமுறக்கூடும். அதே நேரத்தில் – அதே அனேக தமிழர்களிடம் எழுந்திருக்கின்ற கேள்வி – மைத்திரிபாலவுக்கு வாக்களிப்பதால் ஆகப்போகின்ற பயன்தான் என்ன…? மைத்திரிபாலவின் வரவோடு – ரணில், சந்திரிகா, பொன்சேகாவுக்கு வரக்கூடிய தனிப்பட்ட நலன்களுக்கு அப்பால் – ஒட்டுமொத்தமான இலங்கையில் குடும்ப ஆட்சி ஒன்றின் வீழ்ச்சியும், ஜனநாயகத்தின் எழுச்சியும், நீதித்துறையின் உயர்ச்சியும் எதிர்பார்க்கப்பட்டாலும், குறிப்பாகத் தழிழர்களுக்கு என்று கிடைக்கப்போகின்ற அரசியற் செழிப்பு என்ன…? போர் நிகழ்ந்த காலத்தின…
-
- 1 reply
- 714 views
-
-
மஹிந்தவை அரியணையேற்ற முனைகிறதா சீனா? சீனத் தூதுவர் யி ஷியாங் லியாங் அண்மையில் கொழும்பில் நடத்திய ஊடகவியலாளர்கள் சந்திப்பு ஒன்றில், இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக, குறிப்பாக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவின் பெயரை விழித்து வெளியிட்ட கருத்துக்கள் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியிருக்கின்றன. சீனத் தூதுவரின் கருத்து, அண்மையில் கோத்தாபய ராஜபக்ஷ சீனாவுக்கு மேற்கொண்ட பயணம், மகிந்த ராஜபக்ஷ இந்த மாதம் சீனாவுக்கு மேற்கொள்ளவுள்ள பயணம் எல்லாவற்றையும் ஒருங்கிணைத்துப் பார்க்கும் போது, ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்டவையாகவே தோன்றுகின்றது. மஹிந்த ராஜபக்ஷவை மீண்டும் ஆட்சி அதிகாரத்துக்குக் கொண்டு வருவதற்கான முயற்சிகளில் சீனா இறங்கியிருக்கிறதா என்ற…
-
- 0 replies
- 292 views
-
-
மஹிந்தவை நம்பவில்லையா சீனா? 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடந்த ஜனாதிபதி தேர்தலில், மஹிந்த ராஜபக் ஷவை ஆட்சியில் இருந்து அகற்றுவதில் தீர்க்கமான பங்கை வகித்திருந்த சர்வதேச சமூகம், தற்போதைய கூட்டு அரசாங்கத்தைக் காப்பாற்றுவதிலும் குறிப்பிடத்தக்க பங்கை ஆற்றியிருக்கிறது. உள்ளூராட்சித் தேர்தலில் கூட்டு அரசாங்கத்தில் இடம்பெற்றிருந்த இரண்டு பிரதான கட்சிகளுக்கும் ஏற்பட்ட பெரும் பின்னடைவு, இலங்கையின் அரசியல் தலைவிதியையே மாற்றி விடக் கூடிய நிலை ஒன்றுக்கு இட்டுச் சென்றிருந்தது. உள்ளூராட்சித் தேர்தல் என்ன, குப்பைகளை அகற்றுவதற்கும் வீதிகளைச் செப்பனிடுவதற்கும் தானே என்ற ஏளனமான கருத்…
-
- 0 replies
- 392 views
-
-
மஹிந்த்தவின் காவடியாட்டம் மஹிந்த ராஜபக் ஷவின் ஆதரவு அணியான அரசாங்கத்துக்கு எதிராக செயற்படும் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினால் கண்டியிலிருந்து கொழும்பை நோக்கி மேற்கொள்ளப்பட்ட பாதயாத்திரை ஒருவாறு முடிவடைந்து விட்டது. பொது எதிரணியைப் பொறுத்தவரை இந்த பாதயாத்திரை மாபெரும் வெற்றி என்று கூறிக் கொண்டிருப்பதுடன். ஆளும் அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பிவைக்கும் சுபநேரம் ஆரம்பமாகி விட்டது எனவும் அந்த அணியினர் சூளுரைத்துக் கொண்டிருக்கிறார்கள். மறுபுறம் கால்வீக்கம் ஏற்படும் வரை பாதயாத்திரை செய்வதனால், எந்தப்பயனும் ஏற்படப் போவதில்லை. இனவாதத்தை பொங்கியெழ மீளவும் மேற்கொள்ளப்படும் முயற்சி என ஜனாதிபதி உட்பட, அரசாங்கத்தைச் சேர்ந்த உயர்மட்டத் தலைவர்கள் கூறிக் கொண்டிருக்கிறா…
-
- 0 replies
- 665 views
-
-
மாகாண அதிகாரத்தை கைப்பற்றுவதற்கான வியூகங்கள் அதிகாரத்துக்கான போட்டி என்பது மிகவும் முக்கியமானது. அதிலும், அரசியல் அதிகாரம் மற்றும் அதன் வழிவந்த பதவிகள் மீதான வேட்கை, பல சூட்சுமங்களைக் கொண்டது. ஏனெனில், ஆட்சியதிகாரமும் பதவியும் ஒருவிதமான போதை. ‘அது’ இல்லாமல் பயணித்தால், சம்பந்தப்பட்டோருக்கு தள்ளாடுவது போலிருக்கும். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அரசமைப்பில் 18ஆவது திருத்தத்தைக் கொண்டு வந்ததும், உரிய காலத்துக்கு முன்னர், தேர்தலை நடத்தியதும், இப்போது நல்லாட்சி அரசாங்கம் தேர்தல்களை நடத்துவதற்கு பின்னிற்பதும், ஏன் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், “படைக்குத் திருநங்கைகளையும் ஆட்சேர்ப்பு செய்யத் தடை” போன்ற அரசியல் சார்பற்ற விடயங்களைக் கூற…
-
- 0 replies
- 500 views
-
-
மாகாண எல்லை மீள்நிர்ணயம்: கை உயர்த்துமா ‘கறுப்பு ஆடுகள்’? ஏ.எல்.நிப்றாஸ் சிரியாவில், பலஸ்தீனத்தில் தம்மைத் தாக்குவதற்கு வருகின்ற கவச வாகனங்களுக்கு முன்னால் நெஞ்சை நிமிர்த்தி நிற்கின்ற வயதான பெண்களின் தைரியமும் துணிச்சலும் கூட, இலங்கை முஸ்லிம் அரசியல்வாதிகள் பலருக்கு இல்லை என்பதைத்தான் நெடுங்காலமாக கண்டும் உணர்ந்தும் வருகின்றோம். முஸ்லிம்களுக்கு எதிராக சட்டவாக்க, யாப்பு ரீதியான அநியாயங்கள், கொள்கை வகுத்தல்கள், மேற்கொள்ளப்படுகின்ற சந்தர்ப்பங்களில் ‘நக்குண்டார் நாவிழந்தார்’ என்பது போல எல்லாவற்றுக்கும் ஆதரவளிக்கின்ற முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்…
-
- 0 replies
- 557 views
-
-
மாகாண சபை தேர்தலுக்கான வழி தேடல் லக்ஸ்மன் பாலஸ்தீனத்தில் பரவும் ‘நமது காலத்தில் அமைதி’ என்ற வாசகம் இலங்கையிலும் எதிர்பார்க்கப்பட்டதே. ஆனால், சொந்த நாட்டு மக்கள் மீதே ஒரு அரசு யுத்தத்தை நடத்தி முள்ளிவாய்க்காலில் அமைதியைப் புதைத்தது. ஆனால், இலங்கையின் அமைதி பெரும்பான்மை மக்களுக்கு மட்டுமானது என்றளவிலேயே இருந்து வருகிறது. வடக்கு கிழக்கிலுள்ள தமிழ் மக்கள் தங்களுடைய கோரிக்கையாக சுயநிர்ணய உரிமையை முன்வைத்திருந்தனர். இப்போதும் அதனுடனேயே இருக்கின்றனர். ஆனால், இப்போது யுத்தத்தில் தோற்ற சமூகம் தங்கள் கோரிக்கையையும் கைவிட்டாக வேண்டும் என்ற நிலைமையே நீடித்துவருகிறது. இது கவலையானதாகும். இந்த வரிசையில் தான் தமிழர்களுடைய இனப்பிரச்சினைக்கான தீர்வாக இந்தியாவின் அணுகலோடு முன் வைக்கப்பட்ட …
-
- 0 replies
- 132 views
-
-
மாகாண சபை தேர்தலை இலக்கு வைத்து நகரும் அரசியல்….! நரேன்- கிழக்கு மாகாண சபையின் ஆயுட்காலம் முடிவடைந்து சில மாதங்கள் கடந்து விட்டது. வடக்கு மாகாண சபையின் காலம் முடிவதற்கு நாட்களை எண்ணிக் கொண்டிருக்கின்றது. இந்த நிலையில் இவ்வருட இறுதியில் அல்லது அடுத்த வருட முற்பகுதியில மகாணசபைத் தேர்தல் நடைபெறும் என்ற நிலையே உள்ளது. இந்த தேர்தலுக்கான நகர்வுகளில் அரசியல் கட்சிகள் இறங்கியுள்ளன. இதனையே அண்மைய சம்பவங்கள் வெளிப்படுத்தி நிற்கின்றன. தென்னிலங்கையின் பிரதான இரு கட்சிகளும் தமது வாக்கு வங்கியை அதிகரிக்கும் நோக்கில் வடக்கு நோக்கி தனது கவனத்தை திருப்பியுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சி வன்னியில் அமைச்சர் றிசாட் பதியுதீன் ஊடாகவும், யாழில் அமைச்சர…
-
- 0 replies
- 399 views
-
-
மாகாண சபைகளால் ஏன் நிராகரிக்கப்பட்டது அபிவிருத்தி சட்டமூலம்? அரசாங்கத்தால், விரைவில் நிறைவேற்றப்படவிருக்கும் அபிவிருத்தி (விசேட விதிமுறைகள்) சட்டமூலம், நாட்டில் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. அது, மாகாண சபைகளின் அதிகாரங்களுடன் சம்பந்தப்படுவதனால், அச்சபைகளின் அங்கிகாரத்துக்கு அது விடப்பட்டுள்ளது. ஆனால், வட மாகாண சபை உள்ளிட்ட, இதுவரை அதனை ஆராய்ந்த சகல மாகாண சபைகளும் நிராகரித்துள்ளன. அதிகாரப் பரவலாக்கலைப் பலப்படுத்துவதற்குப் பதிலாக, மாகாண சபைகளின் அதிகாரங்களையும் பறித்து, நாட்டை மேலும் மையப்படுத்துவதாகவும் மாகாண சபைகளின் அபிவிருத்திப் பணிகள் அனைத்தையும் இந்தச் சட்டத்தின் மூலம் நிறுவப்படும் நிறுவனங்கள் தமதாக்கிக்…
-
- 0 replies
- 434 views
-
-
மாகாண சபைகளுக்காகக் குரல் கொடுத்த ஒன்றிணைந்த எதிரணி கடந்த வாரம் அரசாங்கத்தினால் கைவிடப்பட்ட 20 ஆவது அரசமைப்புத் திருத்தத்தையும் அதேவாரத்தில் நிறைவேற்றப்பட்ட மாகாண சபைத் தேர்தல்கள் திருத்தச் சட்டத்தையும் பார்க்கும்போது, இந்த அரசாங்கத்துக்கு, நல்லதொரு விடயத்தையாவது சர்ச்சைகள் இல்லாமல் செய்ய முடியாதா என்ற கேள்வி எழுகிறது. அந்த இரு சட்ட மூலங்களையும் சர்ச்சைகளுக்கு வழிவகுக்காமல் இதைவிட இலகுவாக நிறைவேற்றிக் கொள்ளக் கூடியதாக இருந்தது. ஆனால், அரசாங்கமே சர்ச்சைகளை உருவாக்கி, அவற்றில் சிக்கிக் கொள்ள நேரிட்டது. சுருக்கமாகக் கூறுவதாயின், அரசாங்கம் 20 ஆவது அரசமைப்புத் திருத்தத்தில் அநாவசியமான சில வாசகங்களைப் புகுத்தி,…
-
- 0 replies
- 301 views
-