Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. முதல் ஒட்டு, முதல் தேர்தல். உள்ளாட்சியோ, மாநில தேர்தலோ அல்ல நாட்டின் அதிகார மிக்க தலைவரை தேர்ந்தேடுக்கக் கூடிய தேர்தல். இந்தியாவின் சுதந்திரத்தை பெற்று தந்த கட்சி என்ற பெருமைமிக்க கட்சி, சுதந்தர இந்தியாவை முழுக்க ஆண்ட கட்சி, காஷ்மீர் முதல் கண்ணியாகுமரி வரை பட்டி தொட்டியேல்லாம் வேர் பரப்பிய காங்கிரஸ் கட்சி தன் இத்துணை கால அரசியல் வரலாற்றில் இல்லாத ஒரு பெரும் தோல்வியை இந்த தேர்தலில் எதிர்நோக்கியுள்ளது. நரேந்திர மோடியினது ஆட்சி நிர்வாகத்தினால் கிடைக்கும் ஒட்டுகளை விட காங்கிரஸ் மீண்டும் ஆட்சியமைக்க கூடாது என்ற எண்ணத்தில் கிடைக்கும் ஒட்டுக்களே இந்த முறை பிஜேபியை வெற்றி பெற வைக்கப்போகிறது. காங்கிரஸிற்கு நன்றி கடன்பட்டவர்கள் ஒரு வகையில். இந்திரா காந்தி காலம் தொட்டு யாருக்கு…

    • 17 replies
    • 1.9k views
  2. பல்வேறு அமைப்புக்கள் கூறும் நம்பத் தகுந்த அறிக்கையின் ஊடாக பார்க்கும் போது, இலங்கை யுத்தம் மற்றும் சுனாமி பேரிடர் ( 6000 தமிழர்கள் ) போன்றவற்றால் கிட்டத்தட்ட 100, 000 தமிழ் பொது மக்கள் மற்றும் விடுதலைப் புலிகள், இதர தமிழ் போராளிகள் கொல்லப்பட்டும் காணாமல் போயும் உள்ளனர். -------------------------------------------------- உலகம் முழுவதும் இன்று எவ்வளவு இலங்கைத் தமிழர்கள் வாழ்கின்றார்கள் என்பதை முறையாக யாரும் ஆராயவில்லை என்றே சொல்லலாம். விடுதலைப் புலி ஆதரவு இயக்கங்கள் பெரும்பாலும் இந்த தொகையை அதிகரித்தே சொல்வார்கள். ஆனால் உண்மையான ஆதாரங்கள் கிடைப்பதில்லை. விக்கிபீடியா போன்ற தளங்களிலும் தவறான தொகையை கூறப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகள் இயக்கத்தினர் பொய்களில் ஒன்று கனடா,…

    • 4 replies
    • 8.3k views
  3. தற்போது சிறிலங்காவில் இனப்பிளவுகளால் மட்டும் மோதல்கள் ஏற்படவில்லை. பல்வேறு மதங்களுக்கிடையில் ஏற்பட்டுள்ள பிளவுகளாலும் மோதல்கள் ஏற்படுகின்றன. பௌத்த அடிப்படைவாதக் குழுக்களுக்கும் முஸ்லீம் மற்றும் கத்தோலிக்க மத சமூகங்களுக்கும் இடையில் மோதல்கள் ஏற்பட்டுள்ளன. இவ்வாறு The Platform என்னும் இணையத்தளத்தில் Anupama Ranawana எழுதியுள்ள கட்டுரையில் தெரிவித்துள்ளார். அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அண்மையில் சிறிலங்கா தொடர்பில் அமுல்படுத்தப்பட்ட தீர்மானமானது நாட்டில் அமைதியை ஏற்படுத்துவதில் அதிகம் செல்வாக்குச் செலுத்தும். அமெரிக்காவின் தலைமையில் முன்வைக்கப்பட்ட ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் தீர்மானமானது சிறிலங்காவில் தொடரப்பட்ட…

  4. சிறிலங்கா மீதான ஐ.நா விசாரணையானது வலுமிக்கதாக இருக்காது. ஐ.நா தனது விசாரணையின் இறுதியில் அனைத்துலக குற்றவியல் நீதிமன்றிடம் தீர்வெட்டுமாறு கோரும் போது இந்த விசாரணையை ரஸ்யா மற்றும் சீனா மறுக்கும் என்பது நிச்சயமானதாகும். இவ்வாறு THE HUFFINGTON POST UK என்னும் இணையத்தில் பிபிசி முன்னாள் செய்தியாளர் Frances Harrison* எழுதியுள்ள கட்டுரையில் தெரிவித்துள்ளார். அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. 2009ல் முடிவுக்குக் கொண்டு வரப்பட்ட சிறிலங்காவின் உள்நாட்டுப் போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற பல்வேறு யுத்த மீறல்கள் தொடர்பாக சுயாதீன அனைத்துலக விசாரணை ஆணைக்குழு ஒன்று அமைக்கப்பட வேண்டும் என சிறிலங்காவைச் சேர்ந்த மனித உரிமை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்…

  5. இவர்களை மன்னிக்காதீர் == பா.செயப்பிரகாசம் “ஏலி, ஏலி, லாமா சபக்தானி! இறைவனே, இறைவனே என்னை ஏன் கைவிட்டீர்?'' உயரத்தில் சிலுவையில் அறையப் பட்ட இயேசு கத்தினார். ராஜவிசுவாசம், உருவ வழிபாடுகளில் அடைக்கலமாகி யிருந்தவர்கள் அவரை “இவன் ஏன் கத்துகிறான்'' என்று ஏறிட்டுப் பார்த்தனர். “இந்த அறிவிலி யாரிடம் முறையிடு கிறானோ, அந்த இறைவன் இதியாஸ் இவனைக் காப்பாற்றட்டும்'' என்றனர். “இறைவனே இறைவனே, என்னை ஏன் கைவிட்டீர்''. மறுபடியும் உரத்த குரலில் கத்தி ஏசு உயிரை விட்டார் (மத்தேயு 27 : வசனம் 46,47). நண்பகல் 12 மணிக்கு சிலுவை யிலறையப்பட்ட இயேசு, பிற்பகல் 3 மணிக்கு சிலுவையில் ஏற்றப்பட்ட போது, உதிர்த்த வாசக…

    • 0 replies
    • 1.4k views
  6. கடந்த மார்ச் மாதம் 9ம் திகதி, ஜக்கிய நாடுகள் சபையின், இலங்கைக்கான முன்னைநாள் நிரந்தர வதிவிடப் பிரதிநிதியான தாமரா மணிமேகலை குணநாயகம், அமெரிக்கா இலங்கையின் நல்லிணக்க முயற்சிகளின் மீது உண்மையான ஆர்வம் எதனையும் கொண்டிருக்கவில்லை மாறாக, தங்களது மூலோபாய நோக்கங்களை அடைவதற்கான ஒரு கருவியாகவே மனித உரிமை விவகாரத்தை பயன்படுத்தி வருவதாக குறிப்பிட்டிருந்தார். அமெரிக்காவின் இறுதி இலக்கு மனித உரிமைகளோ அல்லது தமிழ் மக்களுக்கான உரிமைகளோ இல்லை மாறாக, அவர்களது உண்மையான இலக்கு இப்பகுதியில் காலூன்றுவதேயாகும் என்று குறிப்பிட்டிருக்கும் தாமரா மேலும், ஆப்கானிஸ்தானிலிருந்து விரைவில் வெளியேறவிருக்கும் அமெரிக்காவிற்கு பிராந்திய ரீதியான இராணுவ தளங்களின் தேவைப்பாடுள்ளது. இது தொடர்பான அமெரிக்காவின் …

    • 3 replies
    • 1.1k views
  7. யாழில் இந்திய தேர்தலின் முடிவுகளை பற்றி யார் சரியாக கணிக்கின்றார்கள் என்பதுபற்றி ஒரு போட்டி. இந்தியா ,தமிழ்நாடு,பிரபலங்கள் என்று மூன்று பிரிவாக போட்டியை நடத்தினால் நன்றாக இருக்கும் . அடுத்த வாரம் முழு விபரங்கள் .அதற்கிடையில் உங்கள் கருத்துகள் .

    • 35 replies
    • 3.1k views
  8. தமிழீழ விடுதலையையும், தமிழகத்தின் வாழ்வுரிமையையும் மக்கள் மன்றத்தில் முன்னெடுப்போம்! தேசிய இனங்களின் மீதான வன்முறையும், அடக்குமுறையும், சுரண்டலும் மிக அதிகமாக ஏவப்பட்டுக் கொண்டிருக்கின்ற காலத்தில் இந்திய பாராளுமன்றத் தேர்தலை நாம் எதிர்கொண்டுள்ளோம். இச்சமயத்தில் எவற்றினை மையமாக வைத்து இத்தேர்தலை தமிழ்த் தேசிய மக்கள் எதிர்கொள்ளவேண்டும் என்பதை விவாதிப்பது மாற்று அரசியல் இயக்கங்களின் மிக முக்கியமான மற்றும் அவசியமான அரசியல் கடமையாகிறது. தேர்தல் காலங்களில், மக்களிடம் எழும் கேள்விகளுக்கு பதிலளிப்பதும், எழுப்பபடாமல் இருக்கும் கேள்விகளை முன்வைப்பதும் அத்தகைய கடமைகளில் ஒன்றாகிறது. 2009க்குப் பின்பான தமிழகத்தின் அரசியல் சூழல் பல்வேறு மாற்றங்களை உள்ளடக்கியே எழுந்து வருகிறது. தம…

  9. இலங்கையிற் பிரிவினைப்போராட்டம் ஆரம்பித்ததில் இருந்து இலங்கையின்அரசாங்கங்கள் இலங்கையின் சனநாயக விழுமியங்களைச் சிதைக்கக் கூடிய சட்டங்களை இயற்றிக் காலப்போக்கில் நிறைவேற்று அதிகாரம் கொண்டசனாதிபதி ஆட்சி முறையையும் கொண்டு வந்தன. இவற்றின் நோக்கம் அடிப்படையில் சிங்கள பௌத்த பேரினவாத அதிகாரத்தை பேணுவதாகும். ஆனால் இப்பொழுது இலங்கையின் அரசியற்சூழ்நிலை குடும்ப அதிகாரமொன்றைப் பேணுவதற்கானதாகவும் மாறிவிட்டது. 2009 ஆண்டு யுத்தம் நிகழ்ந்த போது சர்வதேசத் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களையும் இந்த அரசாங்கம் தடை செய்திருந்தது. இப்போது புலம் பெயர்தேசத்துத் தமிழர் அமைப்புக்களையும் தடை செய்திருக்கிறது. இந்தத் தடையை இலங்கை அரசு கொண்டு வந்தமைக்கு கீழ்வருவன நோக்கங்களாக இருக்கலாம். · …

  10. காங்கிரசும் முஸ்லிம்களும் 2002இல் குஜராத் மாநிலத்தில் இடம்பெற்ற கலவரத்தில் 1000க்கு மேற்பட்ட முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். அப்போது நரேந்திரமோடி அங்கு முதல்வராக இருந்தார். அதனால் அவரும் பாரதீய ஜனதாக்கட்சியும் முஸ்லிம் களுக்கு எதிரானவர்கள்,சிறுபான்மையின மக்களுக்கு எதிரானவர்கள் என்று காங்கிரசுக்கட்சியினரும்,பிறரும் கூறுகின்றனர்.காங்கிரசுக்கட்சியினர் மட்டும்தான் சிறுபான்மையினமக்களின் பாதுகாவலர்கள் என்கின்றனர். ஆனால் 1984இல் இந்திரா காந்தி கொல்லப்பட்டபோது இடம்பெற்ற கலவரத்தில் டெல்கியில் மட்டும் 3000 வரையிலான சீக்கியர்கள் கொல்லப்பட்டனர்.அதனை முன்னின்று நடத்திய காங்கிரசுக்கட்சியினரில் பலர் இதுவரை தண்டிக்கப்படாமல் சுத‌ந்திரமாக உலாவி வருகின்றனர். பலராலும் அறியப்படாமல் அம…

  11. ஏன் எல்லோரும் ரஷ்யாவை தாக்குகிறார்கள்? - அமெரிக்க ஆவணப்படம் ரஷ்யா : உலகிலேயே மிகப் பெரிய நாடு. "சூரியன் மறையாத சாம்ராஜ்யம்" என்ற பெருமை, இன்றைக்கும் ரஷ்யாவை மட்டுமே சேரும். மேற்கே சென் பீட்டர்ஸ்பேர்க் நகரில் சூரியன் மறையும் நேரம், கிழக்கே விலாடிவாஸ்டொக் நகரில் சூரியன் உதிக்கும். ஐரோப்பா முழுவதையும் வெற்றி கொண்ட நெப்போலியனின் படைகள், ரஷ்யா மீது படையெடுத்து பெரும் நாசம் விளைவித்தன. ஆனால், ரஷ்யர்களின் எதிர்த் தாக்குதலை சமாளிக்க முடியாமல் தோற்றோடின. அதற்குப் பின்னர், ஜெர்மன் சக்கரவர்த்தியின் படைகள், இன்றைய உக்ரைனில் இருக்கும் கிரீமியா பகுதியை ஆக்கிரமித்திருந்தன. ஆமாம், இன்று சர்வதேச அரங்கில் பேசப் படும் அதே கிரீமியா தான். ஆனால், ஐரோப்பிய வரலாற்றில், "கிரீமியா …

  12. • “பிரபாகரன் உயிருடன் இருக்கிறார்” என்று கூறுவது தமிழ் மக்களுக்கு நன்மை பயக்குமா? "கசப்பான உண்மைகளையும் மறைக்காமல் மக்களிடம் கூறுங்கள். அவர்கள் வெற்றியை பெற்று தருவார்கள்"- வியட்நாம் தந்தை கோசிமின் 26 வருடங்கள் அமெரிக்க வல்லரசுக்கு எதிராக போராடி வெற்றி பெற்ற வியட்நாம் தந்தை கோசி மின் அவர்களிடம் உங்கள் வெற்றியின் ரகசியம் என்ன? என்று கேட்டபோது “எந்த உண்மைகளையும் மக்களிடம் மறைக்காதீர்கள். கசப்பான உண்மையாக இருந்தாலும் மக்களிடம் கூறுங்கள். அவர்கள் வெற்றியைப் பெற்றுத் தருவார்கள்” என்றார். ஆனால் இன்று மதிப்பு மிக்க தலைவர்களான வைகோ, நெடுமாறன் போன்றவர்கள் புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என்றும் அவர் மீண்டும் வந்து போராடி தமிழீழத்தை பெற்றுத் தருவார் என்றும் கூற…

  13. "நாங்கள் இந்தியாவின் போரை நடத்தினோம்" மகிந்த ராஜபக்ச‌. [ இந்தப் பதிவை முழுதாக வாசிக்கவும்.அப்போதுதான் விடயங்களைத் தெளிவாக, சரியாக விளங்கிக்கொள்ளமுடியும்.] பிரதமர் மன்மோகன் சிங்கின் முதன்மைச் செயலராக 7 ஆண்டுக்காலம் இருந்த டி.கே.ஏ.நாயர், அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு பிரதமரின் ஆலோசகராக செயலாற்றுவார் என்று பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்புத் தெரிவிக்கிறது. டி.கே.ஏ.நாயர் வகித்துவந்த முதன்மைச் செயலர் பொறுப்பை புலோக் சாட்டர்ஜி என்கிற உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த 1974ஆம் ஆண்டு இந்திய ஆட்சிப் பணியில் இணைந்த அதிகாரி ஏற்கிறார் என்றும் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. புலோக் சாட்டர்ஜி, சோனியாஜிக்கு நெருக்கமானவர் என்றும், அவரை முதன்மைச் செயலராக அமர்த்து…

  14. நாடாளுமன்றத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் நிலைப்பாடு பாக்கியராசன் சே நாம் தமிழர் கட்சியின் பொதுக்குழு கூட்டம் இன்று (29/3/2014) சென்னை வளசரவாக்கத்தில் ஜெஎம்ஜெ திருமண மனடப்பதில் நடைபெற்றது. பொதுக்குழு கூட்டத்திற்கு கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் தலைமை வகித்தார். கூட்டத்தில் மாநில மண்டல மாவட்ட நகர ஒன்றிய பாசறை பொறுப்பாளர்கள் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். காலையில் மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் மண்டல மாநில பொறுப்பாளர்கள் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி எடுக்க வேண்டிய நிலைப்பாடுகள் குறித்து தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர். உணவு இடைவேளைக்கு பிறகு கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் இப்பொதுக்குழு…

    • 32 replies
    • 3.7k views
  15. தமிழ்த் தேசிய அரசியலிலிருந்து கிழக்கு மாகாணம் விலகிச் செல்கின்றதா? முத்துக்குமார் தமிழ்த்தேசிய அரசியலிலிருந்து கிழக்கு மாகாணம் மெல்ல,மெல்ல விலகிச் செல்கின்றதா என்ற சந்தேகம் தமிழ்த் தேசிய ஆர்வலர்களிடையே இன்று எழுந்துள்ளது. வட-கிழக்கு இணைப்பு சாத்தியமில்லை என கிழக்கின் முன்னேறிய பிரிவினர் சிலர் நினைப்பதும், உடனடிப் பிரச்சனையாக முஸ்லிம்களுடனான முரண்பாடு இருப்பதால் அரசாங்கத்தின் ஆதரவுடனேயே அதற்கு முகம் கொடுக்க முடியும் எனக் கருத முற்படுவதும் இச் சந்தேகத்தை கிளப்பியுள்ளது. இந்தப் போக்கு ஆரம்பத்தில் கல்முனையில் தோன்றி இன்று மட்டக்களப்பு, திருகோணமலை என கிழக்கு மாகாணம் முழுவதும் பரவுகின்றது. கல்முனையில் தமிழ் பிரதேச செயலாளர் பிரிவினை மூடப் போகின்றனர் என்ற செய்தி வந்ததும்…

  16. ஒரு சடங்காக மாறிய ஜெனிவா? நிலாந்தன்:- 30 மார்ச் 2014 இம்மாதம் ஒன்பதாம் திகதி யாழ்ப்பாணம் ரெம்பிள் றோட்டில் அமைந்துள்ள சமகாலக் கலை, கட்டடக் கலை மற்றும் வடிவமைப்புக்கான இலங்கை ஆவணக் காப்பகத்தில் ஒரு தனிநபர் ஆற்றுகையும் அதன் பின் கலந்துரையாடலும் இடம்பெற்றன. ''உடலே மொழியாக' (Body as language) என்ற தலைப்பில் இடம்பெற்ற அந்நிகழ்வில் பண்டு மன்னம்பெரியின் (Bandu Manamperi) ஆற்றுகை முதலில் நிகழ்ந்தது. ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்த பின்னர் நாடு எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பான மேற்படி ஆற்றுகையை பண்டு மன்னம் பெரி ''அயர்ண் மான்' (Iron man) என்று பெயரிட்டிருந்தார். அவ்வாற்றுகையை சிறிது விரிவாகப் பார்ப்பது இக்கட்டுரையின் பேசுபொருளை நன்கு விளங்கிக்கொள்ள உதவும். முதலில் …

  17. ஜெனிவா: வாக்கெடுப்பின் அரசியல் உள்குத்து என். சரவணன் அன்றொருநாள் “அன்பாலன்றி, வெறுப்பை வெறுப்பால் துறக்கும் வழியில்லை” தம்மபதம் பௌத்த அறநூலான தம்மபதத்தின் இந்த போதனைக்கும் ஜெனிவா பிரேரணைக்கும் என்ன சம்பந்தம் என்கிறீர்களா…? சரி வரலாற்றை மீள நினைவுக்கு கொண்டு வாருங்கள். 06.09.1952ஆம் ஆண்டு சான் பிரான்சிஸ்கோ நகரில் 52 நாடுகள் சமாதான மாநாட்டில் ஒன்று கூடுகின்றனர். இரண்டாம் உலகயுத்தத்தில் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கான இழப்பீட்டை ஜப்பான் வழங்க வேண்டும் என்கிற தீர்மானத்தை கொண்டு வருகின்றனர். அந்தத் தீர்மானத்தின் மீது உரையாற்றுகிறார் இலங்கை பிரதிநிதியாக கலந்துகொண்ட அன்றைய நிதியமைச்சர் ஜே.ஆர்.ஜெயவர்த்தன. அந்த பிரசித்தி பெற்ற உரையின் உள்ளடக்கம் தான் இந்த தம்மபத மேற்க…

  18. இலங்கையின் மூலோபாய முக்கியத்துவம் அதிகரித்துச் செல்கிறதா? - யதீந்திரா இலங்கையின் மீதான மூன்றாவது பிரேரணைக்கு ஆதரவாகவும் எதிராகவும் கருத்துக்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இலங்கையின் மீதான அமெரிக்க பிரேரணையை அரசாங்கம் எதிர்ப்பதில் ஆச்சரியம் கொள்ள எதுவுமில்லை. ஆனால் குறித்த பிரேரணையை, தமிழ் தரப்பினரில் ஒரு பகுதியினரும் எதிர்ப்பதுதான் ஆச்சரியமானது. அமெரிக்க பிரேரணையை ஒரு தேவையற்ற தலையீடாக அரசாங்கம் கருதுகிறது. இதனை ஒருவர் விளங்கிக் கொள்ளலாம். அவ்வாறாயின் குறிப்பிட்ட புலம்பெயர் தரப்பினரும் தமிழ் நாட்டில் உள்ளவர்களும் ஏன் எதிர்க்கின்றனர். பதில் மிகவும் இலகுவானது. தாங்கள் விரும்பிய விடயங்கள் குறித்த பிரேரணையில் இல்லை என்பதாலேயே அவர்கள் எதிர்க்கின்றனர். இவ்வாறானதொரு பின்புலத…

  19. ஜெனிவா தீர்மானத்தின்போது தமிழகத்தின் உணர்வுகளைப் புறக்கணித்து, சிங்கள ஆட்சியாளர்களுக்குச் சார்பாக நடந்து கொண்டதன்மூலம், காங்கிரஸ் கட்சி தமிழகத்துடன் முழுமையான போர் ஒன்றைத் தொடுத்துள்ளது. சிங்கள ஆட்சியாளர்களுக்கு நிகரான ஆக்கிரமிப்பு ஆட்சியொன்றை தமிழகத்தில் நடாத்தும் முயற்சியை காங்கிரஸ் மேற்கொண்டதன் காரணமாகவே, திராவிடக் கட்சியான தி.மு.க. தமிழகத்தின் இனமான உணர்வைத் தட்டி எழுப்பி, தமிழகத்தின் ஆட்சியைத் தனதாக்கியது. பேரறிஞர் அண்ணா அவர்கள் தமிழகத்தின் முதல்வரானார். அன்றுமுதல், காங்கிரஸ் கட்சி தமிழகத்தைத் தன் எதிரியாகவே பாவித்தது. ஆனாலும், தமிழகத்தில் தன் பிடி முற்றாகத் தளர்ந்துவிடக் கூடாது என்ற சிந்தனையில், நாவில் சிறிது தேனைத் தடவிக்கொண்டது. தமிழகத்தை வீழ்த்தி, அதன்மீத…

  20. மனித உரிமை மீறல் + போர்க்குற்றம் = இன அழிப்பு மனித உரிமை அமைப்புக்கள் +நாடுகள் +தீர்மானங்கள் +ஐநா +பாதுகாப்புச்சபை -வீட்டோ அதிகாரம்... ....................... .................... = இவை எல்லாம் தாண்டி தமிழர் அழிவிலிருந்து பாதுகாக்கப்படக்கூடிய வழிகள் தெரிகிறதா? கொஞ்சம் பேசலாம் வாங்க..........

    • 11 replies
    • 835 views
  21. ஆட்டம்: அமெரிக்கா Vs சிறீலங்கா இடம்: ஐநா மனித உரிமைகள் பேரவை. கோப்பை: சிறீலங்காவில் மனித உரிமைகளை மேம்படுத்துவது.. இனங்களிடையே புரிந்துணர்வை கட்டி எழுப்பி.. பச்ச மண்ணையும் சுட்ட மண்ணையும்.. ஒன்றாக சிறீலங்கன் என்று ஒட்ட வைக்கும் வெற்றிக்கிண்ணம். (ஈழத்தமிழர்.. தமிழினம்.. இனப்படுகொலை.. தமிழின அழிப்பு.. போர்க்குற்றம்.. காணி சுவீகரிப்பை நிறுத்தல்.. சிறீலங்கா படைவிலக்கல்.. சுதந்திர வாக்கெடுப்பு.. வடக்குக் கிழக்கு தமிழர் தாயகம்.. வடக்குக் கிழக்கு இணைவு.. சுயநிர்ணய உரிமை.. 13+.. போராளிகள்.. அரசியல் கைதிகள் விடுவிப்பும்... புனர்வாழ்வும்.. தமிழீழம்.. இதை எல்லாம் தூக்கி நிரந்தரமாவே குப்பையில கடாசியாச்சு.) முடிவு: 23: 12 என்ற அடிப்படையில் அமெரிக்காவுக்கு வெற்றி. கொசுறு: …

  22. சிறிலங்காவின் முன்னாள் போர் வலயமான வடக்கில் உள்ள யாழ்ப்பாணத்தில் தனது கண்முன்னாலேயே கடத்தப்பட்ட தனது மகனை இவரின் தாயாரான 46 வயதான பேரின்பராணி திருநாவுக்கரசு கடந்த ஆறு ஆண்டுகளாகத் தேடிவருகிறார். சிறிலங்கா அரசாங்கப் படைகளுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் தொடரப்பட்ட உள்நாட்டுப் போரின் இறுதிக்கட்டத்தில் காணாமற்போன மற்றும் படுகொலை செய்யப்பட்ட பல ஆயிரக்கணக்கானவர்களின் உறவுகளில் திருநாவுக்கரசுவும் ஒருவராவார். "2008ல் இராணுவச் சீருடை தரித்தவாறு உந்துருளிகளில் வந்த எட்டுப் போல் எனது மகன் கடத்தப்பட்டான்" என திருநாவுக்கரசு, அல்ஜசீரா ஊடகத்திடம் தெரிவித்தார். "எனது மகன் நாட்டின் தென்பகுதியிலுள்ள பூசா தடுப்பு முகாமுக்கு மாற்றப்பட்டதாக என்னிடம் சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவ…

  23. தமிழர்களின் விடுதலைப் போராட்டம் இப்போது இனப்பிரச்சினையில் இருந்து மதப் பிரச்சினையாக மாற்றம் பெற்றுள்ளது. மிகவும் திட்டமிட்ட ரீதியில் மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கையில், தற்போது அதனை உறுதிப்படுத்தும் ஆதாரமாக ஜெனீவா மனித உரிமைகள் சபையில் அமெரிக்கா கொண்டுவரும் சிறீலங்கா மீதான (இதனைச் சிறீலங்காவிற்கு எதிரானது என்று சொல்வதுதவறு) பிரேரணை அமையவுள்ளது. எதிர்வரும் 28ம் திகதி வெள்ளிக்கிழமை இந்தப் பிரேரணை மீதான வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது. இந்த வாக்கெடுப்பில் அமெரிக்கா வெற்றி பெறுவது உறுதியாகியுள்ளது. கடந்த வருடம் கொண்டுவரப்பட்ட பிரேரணைக்கு ஆதரவளித்த 25 நாடுகள் இம்முறையும் இந்தப் பிரேரணைக்கு ஆதரவளிக்குமென அமெரிக்கா உறுதிப்படுத்தியுள்ளது. அதேவேளை, தீர்மானத்திற்கு ஐரோப்பிய ஒன்றியம் …

  24. உலகிலுள்ள 180 நாடுகளின் பத்திரிகை சுதந்திர தரவரிசைப் பட்டியல்:அமெரிக்கா 46 ஆம் இடம்:சிறிலங்கா 165 ஆம் இடம் எல்லைகள் அற்ற நிருபர்கள் என்ற பெயருடன் இயங்கும் அமைப்பினால் (Reporters Without Borders' World Press Freedom Index) இன்று 2014 ஆம் ஆண்டின் உலக நாடுகளுக்கிடையேயான பத்திரிகை சுதந்திர தரவரிசைப் பட்டியல் வெளியிடப் பட்டுள்ளது. இதில் சென்ற வருடத்தை விட 13 படிகள் கீழிறங்கி அமெரிக்கா 46 ஆம் இடத்தையும் சிறிலங்கா 165 ஆவது இடத்தையும் பிடித்துள்ளன. இவ்வருடம் அமெரிக்காவின் பின்னடைவுக்கு இரு முக்கிய காரணங்கள் கூறப்படுகின்றன. இதில் முதலாவதாக சமுக வலைத் தளமான விக்கிலீக்ஸில் அமெரிக்க இராணுவத்தின் மனித உரிமை மீறல்களை வெளிக் கொணர்ந்த முன்னால் இராணுவ வீரருக்கு அமெரிக்க அ…

    • 5 replies
    • 736 views
  25. ஒன்றுபட்ட பங்களிப்பு முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நடைபெற்ற 2009 மே மாதத்தில் இந்தியாவில் ஒரு மக்களவைத் தேர்தல்இடம்பெற்றது.அதற்கு அடுத்த மக்களவைத் தேர்தல் இப்போது இடம்பெறவுள்ளது.நடைபெற்ற ஈழத்தமிழின அழிப்பின் விபரங்கள்,பரிமாணங்கள், மக்களுக்குப் பெருமளவு தெரிந்தபின்பு நடைபெறும் தேர்தல் இதுவாகும். தமிழின அழிப்பை முன்னின்று நடத்திய சோனியா காங்கிரசு, அதற்கு முழு ஒத்துழைப்பு வழங்கிய கருணாநிதி திமுக போன்ற கட்சிகளை சனநாயக வழிமுறையில் தண்டிப்- பதற்கு தமிழக வாக்காளர்களுக்கு கிடைத்துள்ள வாய்ப்பு இது.இந்தியாவில் வேறெவரும் சந்திக்காத இன அழிப்பைச் சந்தித்த தமிழினமக்கள் அதற்குக் காரணமாக இருந்தவர்களை ஒருபோதும் மறக்கவோ, மன்னிக்கவோ முடியாது.ஏனெனில் தமிழ் ஈழப்- பகுதிகளில் இ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.