அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9213 topics in this forum
-
முன்னணியின் அழைப்பை நிராகரித்த தமிழரசுக் கட்சி- நிலாந்தன்! தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அழைப்புக்கு தமிழரசுக் கட்சி பதில் கூறியிருக்கிறது. அதன்படி ஒரு புதிய யாப்பை நோக்கித் தமிழ்த் தேசிய கட்சிகளை ஒன்றிணைக்கும் நோக்கத்தோடு முன்னணியால் முன்னெடுக்கப்பட்ட ஒருங்கிணைப்பு முயற்சிகளுக்கான அழைப்பை தமிழரசுக் கட்சி நிராகரித்து விட்டது என்று கூடச் சொல்லலாம். “உரிய நேரம் வரும்போது இந்த விடயம் பற்றி நாம் கலந்துரையாடலாம்” என்ற பதில் எதைக் குறிக்கிறது? இது அதற்குரிய நேரம் இல்லை என்றுதானே பொருள்? கட்சித் தலைமையின் நிலைப்பாடு இதுவென்றால் கட்சிக்குள் சிறீதரனின் நிலைப்பாடு என்ன? கஜேந்திரக்குமாரின் அழைப்பை ஏற்றுக்கொண்டு அவரோடு தொடர்ச்சியாக சந்திப்புகளை மேற்கொண்டவர் அவர். கட்சித் தலைமையின்…
-
- 2 replies
- 361 views
-
-
முன்னணியின் முக்கியமான மாற்றம் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஸ்தாபிக்கப்பட்டு சுமார் எட்டு ஆண்டுகளாகின்றன. இந்த எட்டு ஆண்டுகளுக்குள் முன்னணி இரண்டு பொதுத் தேர்தல்களில் மாத்திரம் போட்டியிட்டிருக்கின்றது. ஓர் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் மற்றும் இரண்டு மாகாண சபைத் தேர்தல்களைப் புறக்கணித்திருக்கின்றது. 2011ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலைப் புறக்கணிக்கவில்லை. மாறாக, வேட்பாளர்களைத் தேடுவதில் ஏற்பட்ட சிக்கல்களினால் போட்டியிடவில்லை என்று முன்னணி தற்போது கூறிவருகின்றது. ஆக, மாகாண சபைத் தேர்தல்களை மாத்திரம் முன்னணி புறக்கணித்ததாகக் கொண்டு இந்தப் பத்தி மேலே செல்கின்றது. 2010 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கான ஆசனப்பங்கீட…
-
- 0 replies
- 272 views
-
-
முன்னாள் போராளிகளை மலினப்படுத்தும் தமிழ் கூட்டமைப்பு ஆதரவுப் ”புலிகள்” தாயகன் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனால் உருவாக்கப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கே இம்முறையும் தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டுமென முன்னாள் விடுதலைப்புலிப் போராளிகள் என்ற பெயரில் விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோள் தமிழ் மக்களையும் தமிழின உணர்வாளர்களையும் மாவீரர்,போராளிகள் குடும்பங்களையும் கடும் விசனமடைய வைத்துள்ளதுடன் விடுதலைப்புலிகளின் முன்னாள் போராளிகள் சார்பான கட்சிகள் மீது சந்தேகங்களையும் ஏற்படுத்தியுள்ளது. 2015 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலின் போது இவ்வாறானதொரு வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தால் கூட அது வரவேற்கப்பட்டிருக்கும். ஆனால் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ,அதன்…
-
- 0 replies
- 470 views
-
-
முன்னாள் போராளிகள் குறித்த தமிழரசுக் கட்சியின் முடிவு முன்னாள் போராளிகளை இணைத்துக் கொண்டு அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு இலங்கைத் தமிழரசுக் கட்சி தீர்மானித்துள்ளதாக அந்தக் கட்சியின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்திருக்கின்றார். தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் மட்டக்களப்பில் கடந்த சனிக்கிழமை (ஏப்ரல் 29) நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் முன்னாள் போராளிகள் தொடர்பிலான தீர்மானம் கீழ்கண்டவாறு கூறுகின்றது. “தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து இறுதி மோதல்களின் போது, அரச படைகளிடம் சரணடைந்து, புனர்வாழ்வு பெற்ற போராளிகளின் வாழ்க்கை முறை, சரி…
-
- 0 replies
- 564 views
-
-
முன்னாள் போராளிகள்: தமிழ் தரப்புகள் மறந்துவிட்ட கடப்பாடு நூற்றுக்கு மேற்பட்ட முன்னாள் போராளிகள் கடந்த ஜனவரி மாதம் இரண்டாம் திகதி, கிளிநொச்சி, இரணைமடுவிலுள்ள சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் பிராந்திய அலுவலகத்தினை வேலை கோரி முற்றுகையிட்டனர். கொளுத்தும் வெயிலில் கைக்குழந்தைகளோடு வந்திருந்த முன்னாள் பெண் போராளிகளையும் மனதுருகி வேலை கோரிய அங்கவீனமுற்ற முன்னாள் போராளிகளையும் அங்கு காண முடிந்தது. ஊடகங்களும் அவர்களைப் பிரதானப்படுத்தி செய்தி வெளியிட்டன. சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தினால் வேலைக்காகப் புதிதாக ஆட்கள் உள்வாங்கப்படுகிறார்கள் என்கிற தகவல் பரவியதை அடுத்தே, முன்னாள் போராளிகள் அங்கு கூடினர். அரசாங்கத்தின் புனர்வாழ்வுக் காலத்த…
-
- 0 replies
- 533 views
-
-
முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் நேர்காணல் சமகால அரசியல் பற்றியது! thanks cmr.fm
-
- 0 replies
- 388 views
-
-
முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் திரு பா.டென்னிஸ்வரன் அவர்களின் நேர்காணல்
-
- 0 replies
- 373 views
-
-
முன்னுதாரணம்மிக்க தமிழீழ மக்களும் கேள்விக்குறியாயுள்ள விடுதலைப் போராட்டமும்! சண்முகவடிவேல் ஈழத்தமிழரின் எதிர்காலம் என்ன என்ற மிக எளிமையானதும் மிக அடிப்படையானதுமான இந்த வினாவை எழுப்பி இதற்கு விடைகாண முனைவார் யாருமில்லை. மேற்படி வினாவை எழுப்பி அதற்குப் பொருத்தமான பதிலைத் தேடாமல் சிலர் மனம்போனபடி பேசுகிறார்கள். சிலர் வெறும் விருப்பத்தின் அடிப்படையிற் பேசுகிறார்கள். சிலர் விரக்தியடைந்து ஏதோவெல்லாம் பேசுகிறார்கள். சிலர் எல்லாம் முடிந்துவிட்டது இனி ஆகப்போவது ஒன்றுமில்லை என்று கைவிரிக்கின்றார்கள். சிலர் தம் மன உளைச்சலைத் தீர்க்கும் வகையில் பழிகூறலையும் திட்டித்தீர்த்தலையும் மேற்கொள்கிறார்கள். சிலர் தொடங்கிய இடத்திற்கே திரும்பிச் சென்றுவிடுகிறார்கள் அல்லது எதிர்மறையாய் …
-
- 3 replies
- 682 views
-
-
முன்னைய தேர்தல்களில் இருந்து முற்றிலும் வேறுபட்ட அரசியல் கோலங்களுடன் 2024 ஜனாதிபதி தேர்தல் August 19, 2024 — வீரகத்தி தனபாலசிங்கம் — இலங்கையின் ஜனாதிபதி தேர்தல் வரலாற்றில் இந்த தடவையே மிகவும் அதிக எண்ணிக்கையில் 39 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். இதுகாலவரையில் ஜனாதிபதி தேர்தல் பிரதான இரு அரசியல் கட்சிகளின் அல்லது அவற்றின் தலைமையிலான கூட்டணிகளின் வேட்பாளர்களுக்கு இடையிலான நேரடிப் போட்டியாகவே இருந்து வந்தது. ஆனால் இந்த தடவை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரா குமார திசாநாயக்க ஆகியோருக்கு இடையிலான மும்முனைப் போட்டியாகவே தேர்தல் அமையப்போகிறது. இறுத…
-
- 0 replies
- 332 views
-
-
முன்னோடி பலப்பரீட்சை http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-01-10#page-18
-
- 0 replies
- 300 views
-
-
முன்மொழியப்பட்டுள்ள ‘புனர்வாழ்வுப் பணிமனை’ சட்டமூலத்தின் ஆபத்து Ambika Satkunanathan on October 12, 2022 Photo, Selvaraja Rajasegar நாட்டில் மக்கள் பொருளாதார நெருக்கடியினால் அவதியுறும் நிலையைக் கூட பொருட்படுத்தாமல் ஒடுக்கும் வகையில் அமைந்த மற்றும் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் சட்டங்களை இயற்றும் முயற்சிகளை அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது, புனர்வாழ்வுப் பணிமனைச் சட்டமூலம் இதற்கான மிகவும் அண்மைய உதாரமாக அமைகின்றது. சட்ட வரைவிலக்கணங்கள் அற்ற நிலை முன்மொழியப்பட்டுள்ள சட்டத்தின் பிரயோகம் மிக்க நபர்களில் முன்னாள் போராளிகள், அழிவை ஏற்படுத்தும் தீவிரமான நாச வேலைகளில் ஈடுபடும் …
-
- 0 replies
- 313 views
-
-
மும்பாய்: செங்கடலை போர்த்திய விவசாயிகள் அரசாங்கங்கள் மக்கள் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்காத போது, மக்கள் அடுத்த தேர்தல்கள் வரை பொறுத்திருப்பதில்லை. உழைக்கும் மக்களின் கோரிக்கைகள், அவர்களது ‘வாழ்வா சாவா’ என்கிற பிரச்சினை. அடுத்தவேளை உணவுக்கு வழியில்லாதவர்கள், அடுத்த தேர்தல் வரை பொறுத்திருக்க இயலாது. போராடுவதே ஒரேவழி என்று மக்கள் நன்கறிவர். அவ்வாறு, அவர்கள் போராடும் போது, அரசாங்கம் ஸ்தம்பிக்கும்; நிலை தடுமாறும்; அவதூறு பரப்பும்; தேசத் துரோகிகள் எனப் பட்டம் சூட்டும். இவற்றால் போராடுவோர் துவண்டுவிடுவதில்லை. கடந்த திங்கட்கிழமை (12) இந்தியாவின் மும்பாய் நகரையே விவசாயிகளின் போராட்டம் உலுக்கியது. இந்தப் போராட்டம் சொல்லு…
-
- 0 replies
- 623 views
-
-
மும்முனைப் போட்டிக் களம் என்றைக்கும் இல்லாதளவுக்குக் கடந்த சில நாட்களாக உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான பிரசாரக் கூட்டங்கள், நாடு பூராகவும் சூடு பிடித்திருக்கின்றன. தெற்கின் பெருந்தலைகளான மைத்திரியும் ரணிலும் மஹிந்தவும் மும்முனைப் போட்டிக் களத்தில் மோதிக் கொண்டிருக்கிறார்கள். தெற்கின் அரசியல் என்பது, கட்சி அரசியலாகச் சுருங்கி, நீண்ட நாட்களாகின்றன. எப்போதாவது, ஆட்சிகளுக்கு எதிரான பொதுமனநிலை எழுச்சி கொண்டு, தேர்தல்களில் பிரதிபலிப்பதுண்டு. கட்சி அரசியலைப் பலப்படுத்துவதனூடு அல்லது கட்சி அரசியலில் பலம் பெறுவதனூடு ஆட்சியைப் பிடிக்கலாம் என்பதே, தெற்கின் அரசியல் அடிப்படை. …
-
- 0 replies
- 313 views
-
-
மும்முனைப் போட்டியா? நான்கு முனைப் போட்டி? – நிலாந்தன். ரணில் விக்கிரமசிங்க ராஜபக்சக்களின் பொது வேட்பாளராகக் களம் இறக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் ராஜபக்சக்களின் வேட்பாளராக களமிறங்குவதை விடவும் ராஜபக்சக்களின் ஆட்களுக்கு தான் தலைமை தாங்குவது என்று முடிவெடுத்து விட்டது போல் தெரிகிறது.ரணில் ராஜபக்சக்களின் கட்சியைச் சாப்பிடத் தொடங்கி விட்டார். கட்சியைக் காப்பாற்றவும் ரணிலுடன் தமது பேரத்தைப் பலப்படுத்தவும் இளைய ராஜபக்சவாகிய நாமல் களமிறக்கப்படுகிறாரா? அவர் இக்கட்டுரை எழுதப்படும் வரையிலும் கட்டுப் பணம் செலுத்திதியிருக்கவில்லை. ராஜபக்சக்களின் வேட்பாளராக களம் இறங்கினால் தனக்கு பின்வரும் பிரதிகூலங்கள் உண்டு என்பது ரணிலுக்கு நன்றி தெரியும். முதலாவத…
-
- 2 replies
- 434 views
-
-
மும்மொழிக் கொள்கை அரசியல் பிரச்சனைகளை தீர்த்துவைக்குமா? இலங்கை சென்றுள்ள இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் இலங்கை அரசின் மும்மொழி செயற்திட்டத்தை சனிக்கிழமை ஆரம்பித்துவைத்தார். இலங்கையில் தமிழ் சிங்கள மொழிகளையும் ஆங்கிலத்தையும் பள்ளிக்கூட மட்டத்திலிருந்தே அனைவருக்கும் கற்பிப்பதன் மூலம் இனங்களுக்கிடையில் நல்லுறவை ஏற்படுத்தமுடியும் என்று அரசாங்கம் கூறுகின்றது. ஆனால், இனங்களுக்கிடையில் புரிந்துணர்வை ஏற்படுத்துவதில் அரசு இந்த மொழிக்கொள்கையை ஒரு வழிமுறையாக பயன்படுத்தமுடியும் என்கின்ற போதிலும் அதன்மூலம் சிறுபான்மை மக்களின் அரசியல் பிரச்சனைகளைத் தீர்த்துவிடமுடியாது என்று தமிழோசையிடம் கருத்து தெரிவித்த இலங்கை அரசகரும மொழிகள் ஆணைக்…
-
- 0 replies
- 462 views
-
-
மும்மொழிக் கொள்கையை அமல்படுத்தல் என்.கே அஷோக்பரன் Twitter: @nkashokbharan தனது தாயார் சிறிமாவோவின் கொள்கைகள் தொடர்ந்து நடைமுறையில் இருந்திருந்தால் நாடு வங்குரோத்து அடைந்திருக்காது என்று அண்மையில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குறிப்பிட்டிருந்தமை நகைப்பை வரவழைப்பதாக இருந்தது. இந்த நாடு சுதந்திரமடைந்த 75 ஆண்டுகளில், 26 ஆண்டுகள் இந்நாட்டின் ஆட்சித் தலைமை பண்டாரநாயக்க குடும்பத்திடம் இருந்திருக்கிறது. முதலில் எஸ்.டபிள்யு.ஆர்.டீ.பண்டாரநாயக்க, அதன் பின்னர் சிறிமாவோ பண்டாரநாயக்க, அதன் பின்னர் சந்திரிகா பண்டாரநாயக்க என சுதந்திர இலங்கையின் வாழ்நாளில் மூன்றிலொன்றைவிட அதிககாலம் நாட்டை ஆண்டவர்கள் இவர்கள். பொருளாதாரக் கொள்கை என்பதை தனி…
-
- 0 replies
- 742 views
-
-
× முரண்படும் தமிழ் தலைமைகள்! மாகாண சபை தேர்தலை இலக்குவைத்து மாற்று அணியொன்றை உருவாக்க வடமாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரன் தலைமையிலான குழுவொன்று இரகசிய நகர்வுகளை மேற்கொண்டு வருவதாக ஆச்சரியப்படும் தகவலொன்று கசிந்துள்ளது. வட,கிழக்கின் அரசியல்போக்கு பற்றி அக்கறைகொள்கின்றவர்கள் கவனம் செலுத்தும் விவகாரங்களில் இவ்வாரம் முக்கியம் பெற்ற செய்தியாகக் காணப்படுகின்றது. வடக்கு முதலமைச்சர் இவ்வாறானதொரு முயற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றாரா? இல்லையா? இச்செய்தியில் உண்மையுள்ளதா? இல்லையா என்பது பற்றி கர…
-
- 0 replies
- 717 views
-
-
முரண்பாடான நிலைப்பாடு இலங்கையில் ஆயுத மோதல்கள் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு விட்டது. ஆனால், சிறுபான்மையினராகிய தமிழ் மக்களின் தேசியத்துக்கான போராட்டங்கள் ஓயவில்லை. இந்தப் போராட்டங்களை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு ஆளுந்தரப்பினரோ அல்லது இந்த நாட்டின் முன்னணி அரசியல் தலைவர்களாக வர்ணிக்கப்படுபவர்களோ ஆக்கபூர்வமான முறையில் முயற்சிகளை மேற்கொள்வதாகத் தெரியவில்லை. முப்பது வருட கால மோசமான யுத்தத்தின் பின்னர், இனங்களுக்கிடையில் ஏற்பட்டுள்ள மனக்கசப்புக்களை, அரசியல் ரீதியான அதிருப்திகளை வெறுமனே பெயருக்காக மேற்கொள்ளப்படுகின்ற நல்லிணக்க நடவடிக்கைகளின் மூலம் போக்கிவிட முடியாது என்ற யதார்த்த…
-
- 0 replies
- 428 views
-
-
http://content.epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2017-01-29#page-5
-
- 0 replies
- 314 views
-
-
முரண்பாடுகளும் குழப்பங்களும் கூட்டமைப்பினுள் புதியவையல்ல! "தொடர்ந்தும் அரசிய லில் ஈடுபடுவதற்கான முகாந்திரங்களை விக்னேஸ்வரன் கொண்டிருக்கிறாரா” என்ற கேள்வி இன்று எழுப்பப்பட்டே ஆக வேண்டும். விக்னேஸ்வரனின் அபிமானிகளும் அவரை ஆதரிப்போரும் எத்தகைய கேள்விகளுக்கும் அப்பால் வைத்தே விக்னேஸ்வரனை நோக்குகின்றனர்.இதனால்தான் “சரியோ பிழையோ அவர்தான் எங்களுக்கு வேண்டும். அவரால்தான் தற்போதைய சூழலில் தமிழ் மக்களின் உரிமைக்கான அரசியலை முன்னெடுத…
-
- 0 replies
- 279 views
-
-
முரண்பாடுகளை அதிகரித்த மோடியின் வருகை தற்போதைய ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான ஜே.வி.பி. அதன் ஆரம்பத்தில் இருந்தே இந்திய எதிர்ப்புணர்வில் உறுதியாகவிருந்ததுடன் சீனாவுக்கு ஆதரவான ஒரு அரசியல் கட்சியாகவே செயற்பட்டது. அது இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை எதிர்த்ததுடன், அதன் அப்போதைய தலைவர் ரோஹன விஜேவீர தலைமையில் இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை எதிர்த்து தென்னிலங்கையில் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டது. அனுரகுமார திசாநாயக்க உட்பட ஜே.வி.பியின் இன்றைய முன்னணி தலைவர்களில் பலர் இந்திய எதிர்ப்பு போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில் ஜே.வி.பியில் இணைந்தவர்களாகவேயுள்ளனர். இலங்கையின் வடக்குக்கு ‘அமைதி காக்கும் படையை’ அனுப்பி வைக்க கைச்சாத்திடப்பட்ட 1987 இந்திய-இலங்கை ஒப்பந்தத்த…
-
- 0 replies
- 286 views
-
-
முரளியின் 801 வது விக்கற்-பா.உதயன் முரளியின் முதல் பந்து வீச்சில் விஜய் சேதுபதி வெளியே. 801 வது விக்கற்றை வீழ்த்தி விளையாட்டு அரசியலில் தனியான ஒரு இடம் தனக்காக தேடி விட்டார் முரளி.அரசியல் தெரியாத முரளி என்கிறார்கள் ஆட்டம் தொடங்கி முடியும் வரை அவரே கீரோ.அவர் ஆடி முடித்த ஸ்டயிலே வேற. இவர் நகர்த்திய காய்கள் இவர் விழுத்திய விக்கற்றுகள் போலே. இவரின் இந்த காய் நகர்த்தல்கள் விளையாட்டோடு கூடியதோர் அரசியல் அடையாளம் என்றே கூறலாம். தென் ஆபிரிக்காவின் நிற வெறிக்கொள்கையானது அந்த நாட்டின் கலை, கலாச்சார, விளையாட்டு என்பனவோடு தன்னை அடையாளப் படுத்திக் கொண்டது. இந்த அடிப்படையில் துடுப்பாட்டம் கூடவே இவர்களின் ஓர் நிறவெறி அடையாள சக்தியாக மாறியது.(Sports become a kind of symbolic power …
-
- 2 replies
- 849 views
-
-
ஜெனிவாத் திருவிழாவுக்கான ஏற்பாடுகள் களைகட்டத் தொடங்கியுள்ளன. திருவிழாவின் பிரதான உபயகாரர் தன்னுடைய திக்குப் பாலகர்களை இலங்கைக்கு அனுப்பத் தொடங்கிவிட்டார். ஏற்கனவே சொன்னபடி திருவிழாவுக்கு ஏற்ற ஆயத்தங்களை இலங்கை செய்து முடித்திருக்கிறதா அல்லது முருங்கை மரத்திலிருந்து இன்னமும் இறங்காமல் ஒட்டிக்கொண்டிருக்கிறதா என்பதை அறியவேண்டியது உபயகாரரின் கடமை. இல்லாவிட்டால் திருவிழா நடத்தியும் பயனில்லை. ஒருவேளை இன்னமும் முருங்கை மரமே தஞ்சமென்று இலங்கை வேதாளக் குணங்களோடு இருந்தால், திருவிழா மங்கலகரமாக இருக்காது. மாறாக பேயோட்டும் சடங்காக மாறிவிடும். திக்குப் பாலகர்களின் கவனத்தை வேறு பக்கம் திருப்பி, தாம் குடிகொண்டிருக்கும் முருங்கை மரம் பற்றிய கணிப்புகளைக் கலைக்க இலங்கையில் மணிமுட…
-
- 1 reply
- 684 views
-
-
முறையற்ற செயற்பாட்டை நியாயப்படுத்திய நடவடிக்கை சட்டம் எல்லோருக்கும் பொதுவானது என்று கூறுகின்றார்கள். ஆனால், எந்தவொரு சட்டமும், இனவாதத்தையும் மதவாதத்தையும் கிளப்பி மக்கள் மத்தியில் அமைதியின்மையை ஏற்படுத்தியுள்ள பௌத்த மத குருக்களுக்கு எதிராகப் பாய்வதில்லை. அவர்களையும், அவர்களுடைய செயற்பாடுகளையும் அந்தச் சட்டங்கள் கைகட்டி வாய்பொத்தி பார்த்துக் கொண்டிருப்பதையே காண முடிகின்றது. நாட்டில் பௌத்த மதத் தலைவர்கள் அரசியல் மதம் பிடித்து மனம் போன போக்கில் போய்க் கொண்டிருக்கின்றார்கள். பல சந்தர்ப்பங்களில் மதம் பிடித்த யானையைப் போன்று வெறியோடு நடந்து கொள்வதை மக்கள் காணக்கூடியதாக உள்ளத…
-
- 0 replies
- 244 views
-
-
1, அதிகார பரவலாக்கல் விடயத்திலும்; இந்தியாவின் பிடி எதிர்காலத்தில் இருகக் கூடிய வாய்ப்புக்கள் அதிகம் என்று ஊகிக்க கூடியதாக இருக்கிறது. 2.அதிகார பரவலாக்கமானது ஒரு வகையில் இந்தியாவுக்கு இலங்கையை கட்டுப்படுத்தும் ஆயுதமாகவும் இருக்கிறது. 3. அதிகார பரவலாக்கல் தொடர்பாக இந்தியா இலங்கையுடன் 1987ஆம் ஆண்டு ஒப்பந்தம் ஒன்றையும் செய்து கொண்டு இருக்கிறது. தேவையெனில் இலங்கைக்கு நெருக்குதலை கொடுக்க இந்தியாவுக்கு அதையும்பாவிக்க முடியும். முறையான அதிகார பரவலாக்கலை எந்தளவிற்கு தட்டிக்கழிக்கலாம்? அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்டு ஐ.நா. மனித எரிமை பேரவையில் நிரைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான பிரேரணையின்படி இலங்கை அரசாங்கம் நடந்து கொள்ளுமா என்பது இன்னமும் தெளிவில்…
-
- 1 reply
- 793 views
-