Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. சிறிலங்கா அரசாங்கமானது தொடர்ந்தும் இவ்வாறான அழுத்தங்களைத் தட்டிக்கழித்தால், வரும் மார்ச்சில் ஜெனீவாவில் நடைபெறவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் மிகக் கடுமையான நிலையை எதிர்நோக்க வேண்டிவரும் என பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். இவ்வாறு IPS Inter Press Service செய்தி நிறுவனத்திற்காக ஆய்வாளர் Amantha Perera எழுதியுள்ள ஆய்வுக் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. அந்த ஆய்வின் முழுவிபரமாவது: கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகமானது டிசம்பர் 20 அன்று, மறைந்த முன்னாள் தென்னாபிரிக்க அதிபர் நெல்சன் மண்டேலாவை நினைவுகூரும் முகமாக சந்திப்பொன்றை ஒழுங்குபடுத்தியிருந்தது. இந்த நினைவு வணக்க நிகழ்வில் மறைந்த நெல்சன் மண்டே…

  2. யாழ்ப்பாணம், கொழும்பில் இருந்து லக்ஸ்மி சுப்ரமணியன் சிறிலங்கன் எயர்லைன்சின் சென்னை-கொழும்பு விமான சேவை தொடக்கம், சிறிலங்காவின் தலைநகரிலுள்ள சனத்தொகை நிரம்பிய தெருக்கள் வரை, தற்போது சிறிலங்காவில் பல்வேறு மாற்றங்களைக் காணமுடியும். 1975ல் தமிழீழ விடுதலைப் புலிகள் தனிநாடு கோரிப் போராடத் தொடங்கிய காலத்திலிருந்து தொடரப்பட்ட உள்நாட்டுப் போரானது முடிவுக்கு வரும்வரை சிறிலங்காவானது பல்வேறு பாதிப்புக்களைச் சந்தித்தது. ஆனால் போர் முடிவுக்குக் கொண்டு வரப்பட்ட பின்னர் தற்போது சிறிலங்காவில் பல்வேறு அபிவிருத்திகள் மேற்கொள்ளப்படுகின்றன. சிறிலங்காவின் நகரங்களைத் தாண்டி அதற்கப்பால் இலங்கையர்கள் அனுபவிக்கும் துன்பங்கள் மற்றும் துயரங்கள் வேறுபட்டவை. 'நாங்கள் எமது சொந்த நாட்டை விட தம…

  3. ஜெனீவாவில் இலங்கை தொடர்பாக இரண்டு தீர்மானங்களை முன்வைக்க ஏற்பாடு? -அ.நிக்ஸன்- 30 டிசம்பர் 2013 சர்வதேச அழுத்தம் என்பது அரசாங்கத்துக்கு அவ்வப்போது சிறிய அச்சத்தை ஏற்படுத்தினாலும் தேர்தல்களில் வெற்றி பெறுவதற்கான கருவியாக அமைந்து விடுகின்றன. சிங்கள பௌத்த தேசியவாத வளர்ச்சிக்கும் வலுச்சேர்க்கின்றன. அதன் காரணமாக சஜித் பிரேமதாசாவும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைச் சபையின் பொறுப்பை பௌத்த தேரர்கள் எற்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனீவாவில் அமெரிக்கா சமர்ப்பிக்கவுள்ள பிரேரணையை எதிர்கொள்ள அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைககள் தீவிரமடைந்து வருகின்றன. வெளியுறவு அமைச்சுக்கும் மனித உரிமைகள் அமைச்சுக்கும் ஜனாதிபதி கடும் உத்தரவுகளை பிறப்ப…

  4. கட்டுப்பாடுகளை மீறுகின்றனரா தமிழ் அகதிகள்.. இலங்கை தமிழர் முகாம் பற்றிய ஆய்வு.... ஈழத்தில் இருந்து இடப்பெயர்வினை மேற்கொண்டு 29 ஆண்டுகளை தொடுகின்றது எம்மினம்.. இன்னும் 100 க்கு மேற்பட்ட தமிழக முகாம்களில் சுமார் ஒரு லட்சம் ஈழத்தமிழ் அகதிகள் வாழ்ந்து வருகின்றனர், 1983, 1990, 2006 என மூன்று பெரிய காலகட்டங்களின் போது இடம் பெயர்ந்த இவர்களில் பெரும்பாலானவர்களுக்கு நாம் ஏன் இங்கு இருக்கின்றோம் என்பதே தெரியாதவர்கள் 25வயதுக்குக்கு உட்பட்ட பலர் சொந்த மண்ணின் வாசனை தெரியாதவர்கள். தமிழகத்தில் அகதியாக வரும் ஈழத் தமிழர்கள் ஈழத்தின் இறுதிக் கட்ட போர் முடிவு வரைக்கும் தாம் தாயகத்துக்கு மீண்டும் செல்வோம் அங்கு சொந்த நிலங்களில் குடியேறுவோம் என்ற நம்பிக்கையினை மனதி…

    • 0 replies
    • 2.5k views
  5. நெல்சன் மண்டெலாவின் அரசியல் வாழ்வும் கற்றுக்கொள்ளவேண்டிய பாடங்களும் முத்துக்குமார் கறுப்பின மக்களின் மாபெரும் ஆளுமையாக விளங்கிய நெல்சன் மண்டெலா அமரராகிவிட்டார். பிறப்பவர் அனைவரும் இறப்பவர்களே என்பது உண்மையாயினும் நெல்சன் மண்டெலாவின் இறப்பு உலகெங்கும் வாழும் அடக்கப்பட்ட மக்களுக்கு பேரிழப்பே. அவர் அடக்கப்பட்ட மக்களுக்குரிய விடுதலையின் ஒரு சின்னமாக இருந்ததே இதற்கு காரணம். அடக்கப்பட்ட மக்கள் மீது அளவில்லாத பற்றுதல், தெளிவான இலக்கு, உறுதியான கொள்கைகள், அர்ப்பணிப்பு, அரசியல் தெளிவு, இராஜதந்திரம், பதவியில் நாட்டமின்மை - இதெல்லாம் இணைந்து மண்டெலாவின் ஆளுமைக்கு மெருகூட்டியுள்ளன. ஈழத் தமிழர்களாகிய நாம் நீண்ட வரலாற்று ரீதியான ஒடுக்கு முறைக்கு உட்பட்டவர்கள். பேரினவாத …

  6. தமிழர் அரசியல், வடக்கின் அரசியலாக சுருங்கிச் செல்கிறதா? - யதீந்திரா இப்படியொரு கட்டுரை எழுதுவது குறித்து யோசித்துக் கொண்டிருந்தபோது, நீண்ட காலத்திற்கு முன்னர் காலம்சென்ற இராணுவ ஆய்வாளரும் நண்பருமான, டி.சிவராம் (தராக்கி) எழுதிய கட்டுரை ஒன்றே நினைவுக்கு வந்தது. அந்தக் கட்டுரை, விடுதலைப்புலிகளின் 'முதலில் யாழ்ப்பாணம்' என்னும் கொள்கை (The LTTE's 'Jaffna First' policy) என்னும் தலைப்பில் வெளிவந்திருந்தது. மேற்படி கட்டுரை, 'புலிகளின் ஆதரவாளர்' என்னும் முத்திரையற்ற காலத்தில் சிவராமால் எழுதப்பட்ட ஒன்றாகும். அது முற்றிலும் இராணுவ தந்திரோபாயத்தை முன்னிறுத்தி எழுதப்பட்ட ஒன்று. ஆனால் இக்கட்டுரை வடக்கு மாகாணசபை கூட்டமைப்பால் வெற்றிகொள்ளப்பட்ட பின்புலத்தில் நிகழ்ந்து வரும் சில விடயங்க…

  7. இரணைமடு நீர்: யாருக்கு யாரால் யாருக்காக? நிலாந்தன்:- 29 டிசம்பர் 2013 கிட்டத்தட்ட இரண்டு மாதங்களிற்கு முன்பு யாழ்ப்பாணத்தின் சில பகுதிகளில் சில இளைஞர்கள் வீடு வீடாகச் சென்று ஒரு கணக்கெடுப்பு நடத்தினார்கள். அதில் இரணைமடுத் தண்ணீர் உங்களுக்கு வேண்டுமா? இல்லையா? என்று கேட்கப்பட்டது. இது நடந்து சில நாட்களுக்குப் பின் ஒரு மூத்த பிரஜை என்னிடம் கேட்டார், ''யாழ்ப்பாணத்தில் யார் இரணைமடு நீரைக் கேட்டது' எங்களைக் கேட்காமலே முடிவுகளை எடுத்துவிட்டு இப்பொழுது ஏன் கணக்கெடுப்பு நடாத்தப்படுகின்றது? யாழ்ப்பாணத்திற்கு நீர் தேவைதான். ஆனால், அது இரணைமடு நீராகத்தான் இருக்கவேண்டும் என்று யார் கேட்டது? என்று... இதையே தான் மறுவளமாக கிளிநொச்சி விவசாயிகளும் கேட்கிறார்கள். ''எங்களைக…

  8. இந்தியாவானது தென்னாசியாவின் மையமாக விளங்குகிறது. இந்தியாவின் உள்ளகப் பாதுகாப்பிற்கு எழும் அச்சுறுத்தலானது இந்திய மாக்கடல் பிராந்தியத்திற்கே அச்சுறுத்தலாக எழும் என்கின்ற நியாயத்தை இந்தியா கவனத்திற் கொள்ள வேண்டும். இவ்வாறு இந்தியாவின் முன்நாள் வெளியுறவுச் செயலரான நிருபமா ராவ் தனது உரையொன்றில் தெரிவித்துள்ளார். 'த இந்து' ஆங்கில நாளேட்டில் வெளிவந்த அந்த உரையை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. பொருளாதார விவகாரங்களைப் பொறுத்தளவில் பூகோள மூலோபாய விவகாரங்களில் ஏற்பட்டுள்ள துரித மாற்றங்கள் இந்தியாவிற்கும் பசுபிக் சமுத்திர நாடுகளுக்கும் முக்கியமானதாக உள்ளன. இந்த மாற்றங்கள் இந்தியாவின் தென்னாசியாவிலுள்ள அயல்நாடுகளும் வளைகுடாப் பிராந்திய நாடுகளும் தமக்கான கொள்…

  9. காமினி பாஸ் தவறு செய்துவிட்டார் சரிநிகர் இதழில் என். சரவணன் எழுதிய பிரேமாவதி மன்னம்பேரி குறித்த கட்டுரையொன்றை பல வருடங்களுக்கு முன்பு நான் படித்திருக்கின்றேன். அந்தக் கட்டுரையின் விபரங்கள் இப்போது எனக்குத் தெளிவாக ஞாபகமில்லை என்றாலும் மன்னம்பேரி மரணிப்பதற்கு முன்பு சொன்ன அவருடைய இறுதிச் சொற்கள் மட்டும் என் நெஞ்சில் இப்போதும் அழியாமலுள்ளன. கதிர்காமத்தைச் சேர்ந்த 22 வயது இளம் பெண்ணான மன்னம்பேரி, ஜே.வி.பியினர் நடந்திய 1971 ஏப்ரல் கிளர்ச்சியில் பங்கெடுத்தவர். கிளர்ச்சி தோற்கடிக்கப்பட்டதன் பின்பாக அரசபடையினரால் கைது செய்யப்பட்டு, வதைக்கப்பட்டு, வல்லாங்கு செய்யப்பட்டு மன்னம்பேரி சுட்டுக் கொல்லப்பட்டபோது மரணத்தறுவாயில் அவர் சொன்ன சொற்கள்: “காமினி பாஸ் தவறு செய்துவிட்டார…

  10. 60 ஆண்டுகளுக்கும் மேலாக ஈழத்தமிழர்கள் மீது நடந்துகொண்டிருக்கும் இன அழிப்பை யேர்மனியில் நடைபெற்ற தீர்பாயத்தில் ஆராய்ந்து உண்மைத்தன்மையுடன் தீர்ப்பு வெளிவந்துள்ளது. இந்நிலையில் தமிழ்நெற் இணையத்துக்கு மே 17 இயக்கத்தின் திருமுருகன் அவர்கள் வழங்கிய செவ்வி. http://www.youtube.com/watch?v=QMxZS7QewyA&feature=player_embedded http://www.sankathi24.com/news/36738/64/17/d,fullart.aspx http://www.youtube.com/watch?v=QMxZS7QewyA&feature=player_embedded

  11. எழுச்சித் தலைவர் யாசர் அரபாத்! எம். தமிமுன் அன்சாரி பாலைவன சிங்கமாய் வலம்வந்த யாசர் அரபாத் ஒரு வரலாற்று நாயகர்! அவர் உலகெங்கும் நடைபெற்று வரும் விடுதலைப் போராட்டங்களின் குறியீடாய் திகழ்பவர்! அகதிகளாய்த் திரிந்த யூதர்கள் குடியேறிகளாய் புகுந்து; பாலஸ்தீனத்தைப் பிளந்து; இஸ்ரேலை உருவாக்கிய போது உலகமே பதறியது. அமெரிக்காவும், இங்கிலாந்தும் செய்த தொலைநோக்கு சதிகளில் ஒன்றுதான் இஸ்ரேல் எனும் ‘டெஸ்ட் ட்யூட் பேபி’. இஸ்ரேலுக்கு எதிராக எகிப்து, சிரியா போன்ற நாடுகள் நடத்திய யுத்தங்கள் தோல்வியிலேயே முடிந்தன. சோதனையான அக்காலகட்டத்தில் அரபுகளின் நம்பிக்கை கீற்றாய், பாலஸ்தீன விடுதலை இயக்கம் (றிலிளி) தோன்றியது. வீரத்தின் விளைநிலத்தில் யாசர் அரபாத் எனும் புரட்சிகரப் போரா…

    • 0 replies
    • 3.2k views
  12. மீண்டும் இலங்கை அரசியலை சர்வதேச பரப்பில் பேசுபொருளாக்கிய கொமன்வெல்த் 2013 - யதீந்திரா இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை இடம்பெற்றுவரும் கொமன்வெல்த் மகாநாடு, இறுதியாக 2011 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவில் இடம்பெற்றிருந்தது. இதனைத் தொடர்ந்து, அடுத்த மகாநாட்டை கொழும்பில் நடத்துவதற்கான யோசனை சில விவாதங்களின் பின்னர் ஏற்றுக் கொள்ளப்பட்டது. ஆனால், இந்த யோசனையை முன்மொழிந்த நாடு இந்தியா என்பதுதான் இங்கு கவனிக்க வேண்டிய விடயம். சர்வதேச பரப்பில், இலங்கையின் மனித உரிமை நிலைமைகள் தொடர்பில் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் எழுந்திருந்த நிலையில்தான், கொமன்வெல்த் மகாநாட்டை இலங்கையில் நடத்துவதற்கான ஆலோசனையை இந்தியா முன்வைத்திருக்கிறது என்பதையும், மேற்படி கூற்றோடு இணைத்து வாசிப்பது அவசியம். அதே இந்தி…

  13. மாற்று அரசியல் இயக்கத்தை கட்டியெழுப்புவதில் உள்ள தடைகளும் வாய்ப்புகளும் முத்துக்குமார் மாற்று அரசியல் இயக்கம் ஒன்று தமிழ் மக்களுக்கு தேவையாக உள்ள போதும் அதனை கட்டி எழுப்புவதில் பல தடைகளும் காணப்படுகின்றன. அதில் முதலாவது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் செயற்பாடுகளாகும். கூட்டமைப்பு - அரசாங்கம், இந்தியா, சர்வதேச சக்திகள் என்பவற்றிற்கு தலையினையும், தமிழ் மக்களுக்கு வாலையும் காட்ட முற்படுகின்றது. தமிழ் மக்கள் மத்தியில் தாயகம், தேசியம், சுயநிர்ணயம் என்கின்ற அடிப்படைக் கோட்பாடுகளை பின்பற்றுகின்ற அமைப்பாக தன்னைக் காட்டுகின்றது. தேர்தல் காலங்களில் இந்த வெளிப்படுத்துகை அதி உச்சநிலைக்குச் சென்று விடுகின்றது. இதனால் தான் 'பிரபாகரன் மாவீரன்' என வடமாகாணசபைத் தேர்தல் காலத்தில் வ…

  14. சம்பந்தனின் தலைமைத்துவத்தின் மீதான நெருக்கடிகள் - யதீந்திரா இன்று ஈழத்தமிழர் அரசியல் என்றால் - அது சம்பந்தன் என்னும் நிலைமை ஏற்பட்டிருக்கின்றது. சமீபத்தில் வாசித்த ஆங்கில கட்டுரை ஒன்றில் தமிழர் அரசியல் திருகோணமலையை மையப்படுத்தியிருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த கட்டுரையாளர் திருகோணமலை என்று குறிப்பிட்டிருப்பது, இரா.சம்பந்தன் திருகோணமலையை சேர்ந்தவர் என்னும் பொருளிலாகும். அந்தளவிற்கு சம்பந்தனின் தலைமைத்துவம் இன்று உற்று நோக்கப்படுகிறது. எனவே இன்றைய அர்த்தத்தில் சம்பந்தனை தவிர்த்து எவராலும் தமிழர் அரசியலை கையாள முடியாது. எவ்வாறு 2009இற்கு முன்னர் பிரபாகரனை தவிர்த்து எவராலும் தமிழர் அரசியலை கையிலெடுக்க முடியவில்லையோ, அத்தகையதொரு நிலைமையே தற்போது சம்பந்தன் விடயத்தில் …

  15. சம்பந்தரின் அறவழிப் போராட்டம் - நிலாந்தன்:- 15 டிசம்பர் 2013 தமிழர் தாயகப் பகுதிகளில் அரசாங்கம் கட்டவிழ்த்துவிட்டுள்ள அடக்குமுறைகள் இன்னும் இரண்டு மூன்று மாதங்களிற்குள் முடிவுக்குக் கொண்டுவரப்படாவிட்டால் தமிழ் மக்களை ஒன்று திரட்டி மிகப்பெரிய அளவிலான அறவழிப் போராட்டத்தை கூட்டமைப்பு முன்னெடுக்கும் என்று எச்சரித்துள்ளார் சம்பந்தர். ஜப்பானின் சிறப்புத்தூதுவர் யசுசி அகாசி அண்மையில் 23ஆவது தடவையாக இலங்கைக்கு வந்தபோது அவரைச் சந்தித்த சம்பந்தர் மேற்கண்டவாறு கூறியிருக்கிறார். இவ் அறவழிப்போராட்டத்தை வேறு எவராலும் தடுத்து நிறுத்த முடியாது என்றும் அவர் அகாசியிடம் கூறியிருக்கிறார். சம்பந்தரோ அல்லது கூட்டமைப்பின் ஏனைய முக்கியஸ்தர்களோ இப்படிக் கூறுவது இது தான் முதற் தடவையல்ல.…

  16. Annonces Google 1918 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 18 ஆம் திகதி தென்னாபிரிக்காவில் உள்ள குலு கிராமத்தில் நெல்சன் மண்டேலா பிறந்தார். 1941 ஆம் ஆண்டு ஜொகனஸ்பேர்க்கிற்கு சென்று பகுதி நேரத்தில் சட்டக்கல்வியை கற்றார். 1958 ஆம் ஆண்டு மண்டேலா வின்னி மடிகி லேனா என்பவரை திருமணம் செய்துகொண்டார். 1939 ஆம் ஆண்டில் தனது 21 ஆவது வயதில் கறுப்பின இளைஞர்களை ஒன்றிணைத்தார். 1948 ஆம் ஆண்டு தென்னாபிரிக்காவின் ஆட்சியைப் பொறுப்பேற்றார். 1956 இல் தென்னாபிரிக்காவில் ஆட்சியில் இருந்த அரசுக்கு எதிராக புரட்சியை மேற்கொண்டார். 1956 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5ஆம் திகதி தேசத்துரோகக் குற்றச்சாட்டுகளுக்காக மண்டேலாவும் அவரின் 150 மேலதிகமான தோழர்களும் தென்னாபிரிக்க அரசால் கைது செய்யப்பட்டனர். 1961 ஆம் ஆ…

  17. கூட்டமைப்பை திருத்துவது என்பது நாய்வாலை நிமிர்த்தும் முயற்சி - மாற்று அரசியல் இயக்கமே இன்றைய தேவை முத்துக்குமார் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிற்கு மாற்றாக ஒரு மாற்று அரசியல் இயக்கம் தேவை என்கின்ற விவாதம் பல தளங்களில் இடம்பெறத் தொடங்கியுள்ளது. அதற்கு பல காரணங்கள் உள்ளன. அதில் பிரதானமானது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தமிழர் அரசியலை முன்நோக்கி நகர்த்துவதற்கு பதிலாக பின் நோக்கி நகர்த்துவதாகும். தமிழர் அரசியல் 1920 தொடக்கம் 1949 வரை சமவாய்ப்புகளை கோருகின்ற அரசியலாக இருந்தது. பின்னர் 1949 தொடக்கம் 1968 வரை தமிழர் தாயகத்தை வரையறைத்து அதற்கு அதிகாரத்தை கோருகின்ற சமஸ்டி தீர்வை முன்வைப்பதாக அமைந்தது. 1968 இற்குப் பின்னர் சமஸ்டி தீர்வும் சரிவராத நிலையில் தனிநாட்டுப் போராட்டமாக ப…

  18. 'சிறிலங்காவில் ஈழத்தமிழர்களின் அரசியல் போராட்டம் தொடர்பறாமல் முன்னெடுக்கப்படுகின்றது' - ஊடக ஆய்வு [ ஞாயிற்றுக்கிழமை, 08 டிசெம்பர் 2013, 10:55 GMT ] [ நித்தியபாரதி ] தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது சமவலுவில் செயற்பட வேண்டும். அனைத்துலக சமூகமானது சிறிலங்கா அரசாங்கம் மீது நாட்டில் மீளிணக்கப்பாட்டை ஏற்படுத்துவது மற்றும் மறுமலர்ச்சியை ஏற்படுத்துவது தொடர்பில் அழுத்தங் கொடுப்பதிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வெற்றியானது தங்கியுள்ளது. இதில் புலம்பெயர் சமூகம் பெரும் பங்காற்ற வேண்டும். இவ்வாறு The Diplomat ஊடகத்தில் ஊடகவியலாளர் Kim Wall* எழுதியுள்ள கட்டுரையில் தெரிவித்துள்ளார். அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. இரண்டு மாதங்களுக்கு முன்னர் சிறிலங…

  19. வடமாகாண சபையை ஒரு அதிகார மையமாகக் கட்டியெழுப்ப முடியுமா? நிலாந்தன்:- 08 டிசம்பர் 2013 இலங்கைத் தீவில் இரண்டு அரசியல் மையங்கள் அல்லது அதிகார மையங்கள் காணப்படுகிறதா? ஐ.நா.வின் சிறப்புத் தூதுவர் கலாநிதி பியானி வடக்கிற்கு வந்தபோது வடமாகாண சபையின் முதலமைச்சரைக் கண்டுவிட்டே சென்றிருக்கிறார். வடமாகாண சபை உருவாக்கப்பட்ட பின் நாட்டுக்கு வரும் சிறப்புத்தூதுவர்கள் அல்லது வெளிநாட்டுப் பிரதிநிதிகள் அல்லது பன்னாட்டுப் பிரதிநிதிகள் அல்லது வெளிநாட்டுத் தலைவர்கள் போன்றோரில் பெரும்பாலானவர்கள் வடக்கிற்கு வந்து முதலமைச்சரைச் சந்தித்துவிட்டே போகிறார்கள். இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கும் இப்படியாக வரக்கூடும் என்று ஒரு செய்தி அண்மையில் வெளிவந்தது. இவற்றையெல்லாம் தொகுத்துப் பார்க்கும…

  20. ஈழத் தமிழர்களின் அரசியல் எதிர்காலம் என்னவாக இருக்கலாம்? - யதீந்திரா விடுதலைப் புலிகள் என்னும் ஆயுத இயக்கம் அழிவுற்று நான்கு வருடங்கள் கடந்துவிட்டன. இந்த நான்கு வருடங்களில் நடைபெற்ற விடயங்களை உற்று நோக்கினால் ஒரு விடயம் தெளிவாகும். கடந்த நான்கு வருடங்களில் நிகழ்ந்த எந்தவொரு விடயமும் தமிழர்களுடன் நேரடியான தொடர்புடையவை அல்ல. அனைத்தும் யுத்த வெற்றிக்குச் சொந்தமான, ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு தொடர்பானவை. உள்ளுக்குள்ளும் வெளியிலும் அரசாங்கம் எதிர்கொண்ட, எதிர்கொண்டு வருகின்ற அனைத்தும் அரசாங்கத்தின் தொடர்சியான இருப்புடன் தொடர்புபட்டவையாகும். முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவின் ஆட்சிக்கவிழ்ப்பு அரசியல் பிரவேசம், மற்றும் யுத்தவெற்றிக்கு உரியவரான ஜனாதிபதி ராஜபக…

  21. விழலுக்கு இறைத்த நீராகும் வடக்கு மக்களின் நம்பிக்கை - செல்வரட்னம் சிறிதரன் 07 டிசம்பர் 2013 அதிகாரப் பரவலாக்கலா அல்லது மனித உரிமை மீறல்களுக்குப் பொறுப்பு கூறுவதா, எது முக்கியத்துவம் மிக்கது என்ற கேள்வி இப்போது எழுந்துள்ளது. வடமாகாண சபையின் மூலம் மக்களுக்கு அவசரமாகத் தேவைப்படுகின்ற சேவைகளைச் செய்ய வேண்டிய தேவை முக்கியத்துவமிக்கதாக இருக்கின்றது. மக்களுடைய வாழ்வாதாரம் உள்ளிட்ட பல முக்கியமான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டிய அவசியத் தேவையும் இருக்கின்றது. அதே நேரம் இறுதி யுத்தத்தின்போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள், சர்வதேச மனிதாபிமான சட்ட மீறல்களுக்கும் குறிப்பாக அரசாங்கம் பொறுப்பு கூற வேண்டியதும், முக்கியமாகும். ஏனெனில், போருக்குப் பின்னரான காலப்பகுதிய…

  22. நெல்சன் மண்டேலா தூக்கிலிடப்பட்டார் : சபா நாவலன் டிசம்பர் மாதம் 5 ஆம்திகதி 2013 அன்று தென்னாபிரிக்க நேரம் இரவு 8 மணி 20 நிமிடமளவில் நெல்சன் மண்டேலா இந்த உலகத்தை விட்டு பிரிந்தார். தென்னாபிரிகாவின் இன்றைய ஜனாதிபதி ஜகோப் சூமா மரணச் செய்தியை உலகிற்கு அறிவித்தார். தென்னாபிரிக்க நிற வெறி அரசுக்கு எதிராகப் போராடிய மண்டேலாவின் வரலாற்றில் ஆயிரம் சுவடுகள் எம்மக்குப் பாடம் சொல்லித் தருகின்றன. அவர் தென்னாபிரிக்க மக்களின் விடுதலைப் போராட்டத்தைத் தலைமை தாங்கினார் என்பதையும் அதனை சரியான திசைவழியில் தான் ஆரம்பித்தார் என்பதையும் அதனால் தான் அது வெற்றிக்கான வழிகளைத் திறந்துவிட்டது என்பதையும் பலர் சாட்சியாகச் சொல்கிறார்கள். அமரிக்க ஜனதிபதி ரொனால்ட் ரீகனும் பிரித்தானியப் பிரதமர் மாக்ரட் …

  23. வரலாற்றுக்காலத்தில் மக்கள் தமது இனங்களிற்குள் போரினால் படும் துன்பங்களைத் தவிற்பதற்காகச் சில அடிப்படைச் சட்டங்களை வகுத்துக் கொண்டார்கள். இந்தப் போர்கள் சிறிய அளவாக நடந்த போது அந்தப் போரில் கலந்து கொண்ட அணிகள் இந்தச் சட்டங்களை ஏற்றுக் கொண்டன. ஆனாலும் நவீனகால யுத்தங்களின் அளவும் சட்ட மீறல்களும் இந்தச் சட்டத்தை மேலும் இறுக்குவதற்கான வழியை வகுத்துக் கொண்டது. சர்வதேசச் செஞ்சிலுவைச் சங்கமும் செம்பிறை இயக்கமும் இணைந்து ஹென்றி டனன்ட் தலைமையில் 1864ம் ஆண்டு முதலாவது மனிதாபிமானச் சட்டத்தினை (Inernational Humanitarian Law) உருவாக்கி அதனைச் சண்டையிடும் அணிகள் பின்பற்ற வேண்டிய அவசியத்தை உருவாக்கினார்கள். 1949ம் ஆண்டிலிருந்து ஜெனிவா உடன்படிக்கையானது. தனது முக்கியமான உடன்படிக்கைகளைத் த…

  24. கிழக்கு மாகாணத்தை மையாகக் கொண்டுதான் பிரச்சினை ஆரம்பித்தது. காணி அபகரிப்பு சிங்கள குடியேற்றங்கள் கிழக்கில் ஆரம்பிக்கப்பட்ட போதுதான் தமிழத்தேசிய கோட்பாடு, தமிழர் தாயம் பற்றிய சிந்தனைகள் எழுந்தன. இறுதிக் கட்ட போர் தொடர்பாகவும் இனப்பிரச்சினை தீர்வு தொடர்பாகவும் பேசப்படுகின்றது. ஆனால் கிழக்கு மாகாணம் என்பதும் வடக்கு கிழக்கு இணைந்த சுயாட்சி என்ற பேச்சும் நலிவடைந்துள்ளன. தற்போது இனப்பிரச்சினை என்ற பேச்சு வடமாகாண பிரச்சினையாக மட்டும் மாறிவிட்டது. தமிழத்தேசிய கூட்டமைப்பு தமிழத்தேசிய மக்கள் முன்னணி மற்றும் சில தமிழ் அமைப்புகளும் இனப்பிரச்சினை வடபகுதி பிரச்சினையாக மாறிவிட்டதை நினைத்து கவலைப்படுவதாகவும் இல்லை. அரசாங்கத்துக்கு எதிரான போராட்டங்கள் வடபகுதியில் தினமும் நடக்கின்றன. ஆனால…

    • 4 replies
    • 945 views
  25. கடந்த வார ஊடகங்களின் தலைப்புச் செய்திகளாக இரண்டு விவகாரங்கள் காணப்பட்டன. ஒன்று முன்னணி ஊடக நிறுவகம் ஒன்றுக்கு எதிராக மங்கள சமரவீர வழக்குத் தொடுத்துள்ளமை. இரண்டாவது ஊடக சுதந்திரம் என்ற பெயரில் தமிழீழ விடுதலைப் புலிகளைப் பெருமைப்படுத்துகின்ற அல்லது அவர்களுக்கு ஆதரவான கருத்துக்களை வெளியிடுகின்ற எவரையும் சிறிலங்கா அரசாங்கமானது தடைசெய்யும் என்கின்ற அறிவிப்பு. சிறிலங்காவில் ஊடக சுதந்திரம் என்பது தவறாகப் பயன்படுத்தப்படுகிறதா என்பது தொடர்பில் கேள்விகள் முன்வைக்கப்படுகின்றன. தனிப்பட்ட முரண்பாட்டின் அடிப்படையில் மங்கள சமரவீர, முன்னணி ஊடக நிறுவகத்திற்கு எதிராக வழக்குத் தொடுத்தமை தொடர்பில் சிலர் தமது அதிருப்திகளை வெளியிட்டுள்ள அதேவேளையில், இந்த ஊடகமானது தொழில்சார் ஒருமைப்பாட்டை ம…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.