அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9213 topics in this forum
-
சென்ற இதழ் கட்டுரை தொடர்பாக நண்பர்கள் அப்புசாமிக்கும் குப்புசாமிக்கும் இடையே ஒரு மோதலே நடந்து முடிந்துவிட்டது. திலீபன் என்கிற ஈடு இணையற்ற போராளியின் உன்னதமான அறப்போர் பற்றி எழுதவேண்டிய நேரத்தில் பொறுப்பும் அர்ப்பணிப்பும் இல்லாத தயிர் சோற்று சிவகாமிகள் பற்றியெல்லாம் எழுதலாமா என்பது குப்புசாமியின் வாதம். போலிகளைப் பற்றி எழுதினால்தான் திலீபனின் தியாகத்தைப் புரிந்துகொள்ள முடியும் என்பது அப்புசாமியின் வாதம். (இந்த மாஜி ஐ.ஏ.எஸ். பற்றித்தான் எழுதச் சொன்னாராம் அவர்.) நீங்கள் அப்புசாமி கட்சியா குப்புசாமி கட்சியா? எனக்குத் தெரியாது. என்றாலும் தயிர்சாதத்துடன் அன்புச் சகோதரி சிவகாமி உண்ணாவிரதப் பந்தலுக்குள் நுழைந்ததையும் தயிர்சாதம் சாப்பிடுவதற்கு முன்பு ஒரு மணி நேரமும் தயிர் சாதம் ச…
-
- 0 replies
- 503 views
-
-
ஒரு விதமாக முன்னாள் நீதிபதி விக்கினேசுவரன் அவர்கள் கூட்டமைப்பின் பொது வேட்பாளராக வந்துள்ளார். இது பற்றி யாழ் களத்தில் பலமுறை பேசியுள்ளோம். பேசிக்கொண்டிருக்கின்றோம். அவர் என்ன சொல்லப்போகின்றார் என்ற கேள்விக்கும் தமிழ் மக்களின் நலன்களுக்காக பாடுபடுவேன் என சொல்லியுள்ளது இன்று வெளி வந்துள்ளது. இந்தநிலையில் தமிழரின் உரிமைப்போராட்டம் பலவாறு வீறு கொண்டு எழுந்து இன்று எதுவும் கைகூடாதநிலையில் ஒவ்வொருவரையும் நம்பி எல்லோராலும் ஏமாற்றப்பட்டு எந்த ஒரு நம்பிக்கையுமற்று படுகுழியில் கிடக்கும் இவ்வேளை இது போன்ற சில முடிவுகளை தமிழர் தரப்பு எடுப்பது முக்கியம் பெறுகிறது. முன்னாள் நீதிபதி என்ன இறைவனே வந்தாலும் மசியாது அடக்கும் சிங்களத்தின் கபட ஆட்சியின் முன்னால் இந…
-
- 9 replies
- 960 views
-
-
யுத்தத்தை அழித்த மஹிந்தவுக்கு அரசியலால் தமிழர்களை வெற்றி கொள்ள முடியவில்லை - -அ.நிக்ஸன்- 23 செப்டம்பர் 2013 "மதுவுக்கும் பணத்திற்கும் வாக்குகளை விற்பணை செய்வது மற்றும் நிவாரண அரசிலுக்கும் பழக்கப்பட்டவர்கள் அல்ல தமிழர்கள்" தமிழ் மக்கள் தமிழ் ஈழம் கேட்கிறார்களா கேட்கவில்லையா என்பதற்கு அப்பால் சுயமரியாதைய இழக்க அவர்கள் விரும்பவில்லை. விடுதலைப் புலிகள் தமிழ் ஈழம் கேட்டு போராடினார்கள். பெரும்பான்மைத் தமிழ் மக்கள் அதற்கு ஆதரவு வழங்கினர். பேரிணவாதத்துக்கு அடிப்பதற்கு புலிகள்தான் சரி என்ற முடிவு தமிழர்களிடம் இருந்தது. ஆனால் சர்வதேசம் புலிகளை பயங்கரவாதிகள் என்று கூறி அவர்களை அழிப்பதற்கு மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்துக்கு உதவியளித்தனர். இந்தியா அதற்கான நகர்வு…
-
- 0 replies
- 930 views
-
-
தமிழ்த் தேசியம் ஒருமுகமூடி by noelnadesan இலங்கையில் தமிழர் அரசியலின் அறுபத்தைந்து வருடகால வரலாறு எக்காலத்திலும் இலங்கைத் தமிழ் சமூகத்தை அறிவார்ந்த முடிவுகளைஎடுப்பவர்களாக காண்பிக்கவில்லை. தனது உணர்ச்சிகளின் கொதிப்பில் வெந்துஅழியும் இனமாகத்தான் நிரூபித்திருக்கிறது. இதற்கு நான் பல உதாரணங்களைச் சொல்ல வேண்டியஅவசியம் இல்லை. வியட்நாமியயுத்தகாலத்தில் மட்டும்தான் புத்தபிக்கு தன்னை எரித்துக் கொண்டதாக அறிந்தோம். ஆனால் ஜெனிவாவிற்கும் சென்று தீக்குளிக்கும் முட்டாள்தனத்தைக் கொண்ட சமூகமாகத்தான் எமது தமிழ் இனம் உருவாகியிருக்கிறது. ஜெனிவாவின் பிரஜைகள் எரிந்து இறந்த உடலை அப்புறப்படுத்தும் பொழுது அந்தக் கோரத்தை இளம் பிள்ளைகள் பார்த்து விடக்கூடாது என்பது பற்றித்தான் ஜெனிவா நகரத்தினர்…
-
- 2 replies
- 906 views
-
-
வரலாற்றில் என்றும் இல்லாதளவிற்கு கடும் அச்சுறுத்தல்களுடனும், எச்சரிக்கைகளுடனும் வடமாகாண சபைக்கு தேர்தல் நடத்தப்படுகின்றது. இந்தத் தேர்தலில் தங்கள் வெற்றிகளை விட, எதிர்த்துப் போட்டியிடும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை தோற்கடிக்க வேண்டும் என்பதையே குறியாகக் கொண்டு சிங்களப் பேரினவாதம் சாம, தான, பேத, தண்டம் என அனைத்து வழிகளையும் கையாண்டு வருகின்றது. இராணுவத்தினரும், புலனாய்வாளர்களும், ஒட்டுக்குழுக்களும் எல்லா வழிகளிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரையும், அவர்களுக்கு ஆதரவாக தேர்தல்ப் பணியாற்றுபவர்களையும் அச்சுறுத்திப் பார்த்துவிட்டனர். ஆனாலும், கூட்டமைப்பிற்கே வெற்றி கிடைக்கும் என சிங்களப் பேரினவாதமே உறுதியாக நம்புகின்றது. இதனால் தேர்தலை வென்றுவிடுவதற்காக மகிந்த ராஜபக்சவே …
-
- 3 replies
- 995 views
-
-
கிளை பலமானது என்று பார்த்து எந்த பறவையும் அமர்வதில்லை. எந்த நேரத்தில் கிளை முறிந்தாலும் பறக்க திடமான சிறகுகள் தன்னிடம் உள்ளன என்பதே பறவையின் பலம். அதுவே எமது பலமாகவும் இருக்கட்டும். கூட்டமைப்புக்கு வாக்களிப்போம். சிங்கள தேசத்தின் தேசிய அரசியலை நாம் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதை காட்டுவதற்காகவேனும் தமிழ் தேசியக்கூட்டமைப்புக்கு வாக்களித்தே ஆகவேண்டும். வேறுவழி எதுவுமே இல்லை. இருப்பதில் இப்போதைக்கு இதுவே சிறந்தது. மகிந்தர் இந்த தேர்தலை நடாத்துவது ஒன்றும் தமிழ் மக்களுக்கான ஜனநாயக உரிமைகளை ஏற்றுக்கொண்டு அல்ல. அவருக்கு இறுகிக்கொண்டே வரும் சர்வதேசத்து அழுத்தங்களில் இருந்து தற்காலிகமாக ஓரளவுக்கு தன்னை சுதாகரித்துக் கொள்ளவே என்பது சிறுகுழந்தைக்கும் தெரிந்த பெரிய உண்மையாகும். மேலும் இ…
-
- 1 reply
- 625 views
-
-
இந்தியாவும் ராஜபக்சேவும் வேறு வேறு அல்ல. இரண்டுபேருமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள். (இந்தியா என்று நான் குறிப்பிடுவதுஇ இந்தியாவை ஆளும் மத்திய அரசை!) இந்தியாவையும் ராஜபக்சேவையும் ஒப்பிட்டுப் பார்ப்பவர்கள் இரண்டு ஒற்றுமைகளைப் பார்த்து வியந்து போவார்கள். 1. இருவருமே வஞ்சகர்களில்லை நயவஞ்சகர்கள். நம்பவைத்துக் கழுத்தறுப்பதில் விற்பன்னர்கள். 2. இரண்டுமே புளுகுப் பூனைகள். சொல் வேறு செயல் வேறு. நான்தான் உனக்குப் பாதுகாப்பு - என்று அவர்கள் சொன்னால் மறுநாள் நாம் பிரியாணி ஆகப்போகிறோம் என்று பொருள். ராஜபக்சேவின் பொய்முகத்தை முழுமையாக அறிந்தவர் சிங்களப் பத்திரிகையாளர் லசந்த விக்கிரமதுங்க. அதனால்தான் லசந்தவை விட்டுவைக்கவில்லை ராஜபக்சே வகையறா. நடுத்தெருவில் சுட்டுக் கொன்றது. கொழும்…
-
- 0 replies
- 751 views
-
-
"இங்கு அபிவிருத்திகள் மேற்கொள்ளப்படுகின்றன. சிறிலங்கா அரசாங்கமானது நாட்டில் 'இறுதியான நிலையான அரசியற் தீர்வொன்றை' முன்வைப்பதற்குப் பதிலாக 'வீதிகளுக்கு தரைவிரிப்புக்களை (carpeting the road)' போடும் பணியில் ஈடுபட்டுள்ளது" என றெக்னோ அடிகளார் குறிப்பிட்டார். இவ்வாறான அதிருப்தியான உணர்வுகளுடன் வடக்கில் மக்கள் வாழ்கின்றனர். இவ்வாறு ucanews.com correspondent, யாழ்ப்பாணத்திலிருந்து தெரிவிக்கின்றார். அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. சிறிலங்காவின் வடக்கில் வாழும் பெரும்பாலான தமிழ் மக்களைப் போன்று, கடந்த நான்கு ஆண்டுகளாக அருட்திரு றெக்னோ பேர்னாட் அடிகளார் நாட்டில் நல்லதொரு சூழல் வருமென்ற எதிர்பார்ப்புடன் பொறுமையாகக் காத்திருக்கிறார். நல்லதொரு சமிக்கையான…
-
- 0 replies
- 714 views
-
-
இலங்கையின் வடமாகாணத் தேர்தல், அபிவிருத்திக்கும் அரசியல் உரிமைக்கும் இடையிலான போட்டியாகத் திகழ்கின்றது. யதார்த்தங்கள் குறைவு, எதிர்பார்ப்புகள் பெரிது இந்த மக்களிடம் இந்தத் தேர்தலில் அபிவிருத்தியை முன்னிறுத்தி ஆளும் கூட்டணியாகிய ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி களத்தில் இறங்கியிருக்கின்றது. அதேநேரம் அரசியல் உரிமையை முதன்மைப்படுத்தி தமிழ்த்தேசிய கூட்டமைப்பு பிரசாரம் செய்து வருகின்றது. வடமாகாண சபை என்பது, 13 ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தின் கீழ் நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டதாகும். இதற்குப் போதிய அதிகாரங்களில்லை.தமிழ் மக்கள் எதிர்நோக்கியிருக்கின்ற இனப்பிரச்சினைக்கு இது தீர்வாகமாட்டாது என்பது தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நிலைப்பாடாகும். பிளவுபட்டுள்ள முஸ்லிம்…
-
- 0 replies
- 522 views
-
-
எதிர்காலத்தில் இலங்கையில் பெரும்பான்மையினராக முஸ்லிம்கள் ! : எம். ரிஷான் ஷெரீப் இலங்கையில் இன்னுமொரு இனக் கலவரத்தைத் தூண்டக் கூடிய, பிரிவினை வாத சக்திகளின் சூழ்ச்சிகள் சிறிது சிறிதாக முன்னெடுக்கப்பட்டுக் கொண்டே வருகின்றன. இந்த இனக் கலவரம், இஸ்லாமியர்களையும் அவர்களது வளர்ச்சியையும் குறி வைத்திருக்கிறது. இலங்கையில் வாழும் முஸ்லிம் மக்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந் நிலை தொடருமானால், இன்னும் சில தசாப்த காலங்களுக்குள் இலங்கையில் பெரும்பான்மையானோராக முஸ்லிம்கள் ஆகிவிடுவார்கள் என்ற அச்சம் இனவாத சக்திகளை பெருமளவில் அச்சுருத்தியிருக்கிறது. இந் நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவும், முஸ்லிம்களை அடக்கி வைக்கவும் பல்வேறு விதமான செயற்பாடுகள் முன்…
-
- 3 replies
- 1.1k views
-
-
தேர்தல் பரப்புரையும் இனமான அரசியலும் - நிலாந்தன் 15 செப்டம்பர் 2013 மாகாணசபை தேர்தல் பரப்புரைக்களத்தில் ஒரு இனமான அலையை தோற்றுவிப்பதில் கூட்டமைப்பு குறிப்பிடத்தக்க அளவிற்கு முன்னேறிவருவதாகவே தோன்றுகின்றது. தனிப்பட்ட முறையில் கடிதங்கள், குறுந்தகவல்கள் என்பன படித்த வாக்காளர்களை நோக்கிப் பறந்து வந்துகொண்டிருக்கின்றன. இணையப்பரப்பில்தான் கூடுதலான வாதப்பிரதிவாதங்கள் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன. ஒப்பீட்டளவில் இணையப்பரப்பில்தான் விவகாரங்கள் அதிகம் வெளிப்படையாக விவாதிக்கப்படுகின்றன. ஆனால் வழமையான கறுப்புவெள்ளை அரசியலின் பிரகாரம் இணையப்பரப்பானது அதிகமதிகம் வசைவெளியாக மாறியிருக்கிறது. ஒப்பீட்டளவில் அதிகபட்ச விமர்சனங்கள் முன்வைக்கப்படுவதால் ஒப்பீட்டளவில் அதிகபட்சம் ஜனநாயகமானதாக இண…
-
- 2 replies
- 521 views
-
-
சிறிலங்காவில் முஸ்லிம்களும் சிங்கள-பௌத்த தேசியவாதிகளும் [ ஞாயிற்றுக்கிழமை, 15 செப்ரெம்பர் 2013, 12:40 GMT ] [ நித்தியபாரதி ] "இது சிங்கள-பௌத்த நாடு. நாங்கள் பௌத்த கோட்பாடுகள், கலாசாரம், நம்பிக்கைகள் மற்றும் வாழ்வு முறைமை போன்றவற்றைப் பாதுகாப்பதற்காக செயற்பட வேண்டும்" என சிங்கள ராவயவைச் சேர்ந்த செயற்பாட்டாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு The Diplomat Magazine என்னும் இணைய ஊடகத்தில் Sudha Ramachandran* எழுதியுள்ள கட்டுரையில் தெரிவித்துள்ளார். அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. சிறிலங்காவைச் சேர்ந்த சிங்கள-பௌத்த தேசியவாதிகள், சிறுபான்மையினருக்கு எதிரான தமது யுத்தத்தின் புதிய வடிவம் ஒன்றை ஆரம்பித்துள்ளனர். சிறிலங்காத் தீவின் சிறுபான்மை மக்…
-
- 1 reply
- 604 views
-
-
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வடக்கு தேர்தலில் கூட்டமைப்பிற்கான வெற்றி வாய்ப்பு - ஓர் இறுதி அவதானம் - யதீந்திரா வடக்குத் தேர்தலில் பெரும்பாலான ஆசனங்களைக் கைப்பற்றக்கூடிய வாய்ப்பு, பிரதான தமிழ் அரசியல் அமைப்பான, தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கே காணப்படுகிறது. அரசதரப்பு வேட்பாளர்களும் தங்களது வெற்றி வாய்ப்பை உறுதிப்படுத்தும் வகையில் பல்வேறு பிரயத்தனங்களை மேற்கொண்டு வருகின்றனர். ஒரு வேட்பாளரது வெற்றி என்பது, அவர் பெறும் விருப்பு வாக்குகளில் தங்கியிருப்பதால், கட்சி, கொள்கை என்பவற்றுக்கெல்லாம் அப்பால், ஒவ்வொரு வேட்பாளரும் தாங்களும் வெற்றியாளர்கள் வரிசையில் இடம்பிடித்துக் கொள்ளவேண்டும் என்பதற்காக கடுமையாக உழைக்க வேண்டியிருக்கின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர்களும…
-
- 2 replies
- 1k views
-
-
சீமான் – அவதூறுகளை அறுத்தெறியும் அறம் - மணி.செந்தில் & பாக்கியராசன் சே உலக மூத்தகுடி தமிழ்த் தேசிய இன மக்களின் பூர்வீக தாய்நிலங்களுள் ஒன்றான ஈழப் பெருநிலத்தின் மீது சிங்களப் பேரினவாதத்தின் கொடும் நிழல் படியத் துவங்கிய 2008க்குப் பின்னான கால கட்டத்தில்தான் இன உணர்வுள்ள இளைஞர்கள் தாயக தமிழகத்தில் கண்கலங்க கைப் பிசந்து நின்று கொண்டிருந்தார்கள். ஈழமும், தமிழகமும் கடலால் பிரிக்கப்பட்ட இரு நிலப்பரப்புகளாய் நின்றனவே ஒழிய உணர்வால்..உறவால்..மரபணு தொடர்ச்சியால் ஒற்றை நிலமாகவே இருக்கின்றன. ஈடு இணையற்ற வீர தீரத்துடன் போர் புரிந்து கொண்டிருந்த விடுதலைப்புலிகளின் தியாகத்தினால் ஈழம் சிவப்பாகிக் கொண்டிருந்த வேளையில்.. தாயகத் தமிழ் இளைஞர்களின் நெஞ்சில் ஆற்றவே முடியாத பெருநெருப்பு…
-
- 1 reply
- 1.5k views
-
-
முடியப்பு றெமிடியஸ் என்ற பெயர் நினைவிருக்கிறதா? இவர் ஒரு சட்டவாதி. யாழ்ப்பாண மாநகர சபை உறுப்பினர். மனித உரிமை வழக்குகளில் நீதிமன்றம் ஏறி வாதாடுபவர். அண்மையில் மாநகர சபை உறுப்பினர் பதவியில் இருந்து விலகிவிட்டார். விலகிய கையோடு ஆளும் அய்க்கிய சுதந்திர மக்கள் முன்னணி என்ற சிங்கள (அவரே சொல்வது) கட்சியோடு சங்கமமாகிவிட்டார். யாழ்ப்பாண மாநகர சபைக்குத் தேர்தல் நடந்த போது ததேகூ சார்பாகப் போட்டியிட்டு றெமிடியஸ் வென்றார். அதிகப்படியான விரும்பு வாக்குகள் பெற்ற காரணத்தால் எதிர்க்கட்சித் தலைவராகவும் கொலுவிருந்தார். அது கொஞ்ச நாட்கள்தான். பின்னர் எதிர்க்கட்சித் தலைவராக இருந்து கொண்டு ஆளும் கட்சியை ஆதரிக்கத் தொடங்கினார். மாநகரசபையில் ஆளும் கட்சி கொண்டு வரும் தீர்மானங்களு…
-
- 0 replies
- 651 views
-
-
நாளுக்கு நாள் சீன - இலங்கை உறவு வலுப்படுவது, இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையப்போகிறது. சீனாவின் அமைச்சர் அல்லது உயர்அதிகாரிகள் அடிக்கடி இலங்கைக்கு வருகை தருகின்றனர். இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையே பல உடன்பாடுகள், ஒப்பந்தங்கள் மாதா மாதம் கையெழுத்தாகிக் கொண்டிருக்கின்றன. இதன் விளைவாக, இந்து மகா சமுத்திரம், வங்கக் கடல், கச்சத்தீவு வரை சீனாவின் ஆதிக்கம் பரவிவிட்டிருக்கிறது. பாகிஸ்தானுடன் சீனா பல உடன்பாடுகள் கண்டு, குஜராத் வரை அரபிக் கடலில் சீனாவின் ஆதிக்கமும் ஆளுமையும் ஏற்பட்டுவிட்டது. அது மட்டுமா? தரை வழியாக சீனாவிலிருந்து பாகிஸ்தானின் தென்பகுதியான அரபிக் கடல் வரை நெடுஞ்சாலைகள் அமைத்து தனது மேற்குப் பகுதிக்கு கடல் வாணிகத் தொடர்பு ஏற்படுத்தும் முயற்சியிலும் சீ…
-
- 0 replies
- 876 views
-
-
ஜேர்மன் ஜனாதிபதி Joachim Gauck இரண்டாம் உலகப்போரின் போது நாசிப்படைகளால் படுகொலை செய்யப்பட்ட பிரான்ஸ் நாட்டின் Oradour-sur-Glane கிராமத்திற்கு அண்மையில் விஜயம் செய்து கொல்லப்பட்ட மக்களுக்கு அஞ்சலி செலுத்தினார். ஜேர்மன் நாட்டின் நாசிப்படைகளால் 1944ஆம் ஆண்டு யூன் 10ஆம் திகதி நடத்தப்பட்ட இந்த படுகொலையில் 247 சிறுவர்கள் உட்பட 642 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டனர். படுகொலை நடந்த பின்னர் இந்த பகுதிக்கு செல்லும் முதலாவது ஜேர்மன் அரசுத்தலைவர் இவராகும். இவருடன் பிரான்ஸ் ஜனாதிபதி பிரான்ஹொய்ஸ் ஹொலண்டே (François Hollande) யும் அந்த இடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார். இந்த படுகொலையிலிருந்து தப்பி இன்றும் வாழும் சிலரையும் அவர்கள் சந்தித்தனர். தனது நாட்டு நாசிப்படைகள் …
-
- 0 replies
- 510 views
-
-
தமிழன் தமிழனாக நிமிர்ந்து நின்று வாழ்ந்த காலத்தில் வன்னியில் பெரியபெரிய கடைக்காரர்கள் இருந்தார்கள் தலைவர் அவர்களின் போராட்டம் இருந்த காலத்தில் நிறைந்த பணக்காரர்கள் இருந்தார்கள் இன்று அனைவரும் ஓட்டாண்டியாகி தூங்கி சாகின்றார்கள் இது திட்டமிட்ட சிங்கள அரசின் செயற்பாடு என்று தமிழ்தேசிய கூட்டமைப்பின் கிளிநொச்சியில் போட்டியிடும் வேட்பாளர் பசுபதிப்பிள்ளை தேர்தல் பரப்புரையின் போது தெரிவித்துள்ளார். உண்மையில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த காலகட்டங்களில் தன்னிறைவான பொருளாதாரத்துடன் மக்கள் வாழ்ந்தார்கள் என்றால் அது பெருமைகொள்ளவேண்டியது இதனை திட்டமிட்டு சிங்கள அரசு அழித்துள்ளது. இன்று கிளிநொச்சியில் மாங்குளம் தொடக்கம் பரந்தன் வரை லீசிங்முறையில் கடனுக்கு ஊர்திகள் வட்டிக…
-
- 0 replies
- 594 views
-
-
https://www.youtube.com/watch?v=-oWSbkG8rF8
-
- 2 replies
- 875 views
-
-
நவிபிள்ளை அம்மையார், விடுதலைப் புலிகள் மீது பகிரங்கமாக விமர்சனங்களை வைத்தாலும், அவரைக் காப்பாற்றுவதற்கென்றே நம்மிடையே ‘இராசதந்திரம்’ பேசும் ராசாக்கள் தோன்றிவிடுவார்கள். வரிக்கு வரி வியாக்கியானங்களும், பொழிப்புரைகளும் கொட்டப்படும். அத்தோடு, ‘மக்களின் எதிர்ப்புணர்வுகளை தனித்துவிட்டோம்’ என்று சுயதிருப்தி கொள்வார்கள். இதுவும் ஒருவகையில், மக்களின் போராடும் உணர்வினை மழுங்கச் செய்யும், ஒடுக்குமுறையாளர்களின் உத்திதான். முள்ளிவாய்க்கால் பேரழிவிற்குப் பின்னர், புலம்பெயர் நாடுகளிலேயே திட்டமிட்ட வகையில் இவை முன்னெடுக்கப்படுகின்றன. உண்மையிலேயே, தலைவரோடு நீண்ட காலமாகக் களத்தில் நின்று போராடியவர்கள், வேறு இயக்கங்களில் இருந்து சிங்களத்தின் ஒடுக்குமுறைக்கெதிராக களமாடியவர்கள் எவரும், போ…
-
- 2 replies
- 956 views
-
-
இந்தமுறை நான் இலங்கை சென்றிருந்தபோதுகல்வி சார்ந்த தொண்டு நிறுவனம் ஒன்றில் பணி செய்து கொண்டுள்ள நண்பர் ஒருவர் இலங்கையின் கல்வித்துறையில் ஏற்பட்டு வரும் ஒரு மாற்றத்தைக் கவனிக்குமாறு அறிவுறுத்தினார். கல்வித்துறையில் இராணுவத் தலையீடு குறித்துத்தான் அவரது கவன ஈர்ப்பு அமைந்தது. ‘தலையீடு’ என்கிற சொல்அதன் முழுமையான பரிமாணத்தை உணர்த்தப் போதுமானதல்ல. இலங்கை அரசமைவும் சமூகமும் பல்வேறுஅம்சங்களில் இராணுவமயப்பட்டு வரும் நிலை கல்வித்துறையில் வெளிப்படும் தன்மை என்றுதான் அதைச் சொல்லவேண்டும். இது குறித்து நான் ஏற்கனவே சற்று வாசித்திருந்தபோதிலும் முழுமையாகஅறிந்திராததால் அவரிடமும் கல்வித்துறை சார்ந்த பிற நண்பர்களிடமும் கேட்டறிந்தபோது சற்றுவியப்பாகவும் கவலையாகவும் இருந்தது. பல்வேறு வகையான அர…
-
- 4 replies
- 1k views
-
-
நாம் போராடியது ஈழத்திற்காக! - தீபச்செல்வன் தமிழக முதல்வர் ஜெயலலிதா 13ஆவது திருத்த சட்டத்தைப் பாதுகாப்பது தொடர்பாக இந்தியப் பிரதமரை வலியுறுத்திக் கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். அதில் 13ஆவது திருத்தத்தை மாற்றம் செய்வது கவலையளிக்கிறது என்று குறிப்பிட்ட ஜெயலலிதா, அந்த சட்டத்தில் இலங்கைத் தமிழர்களுக்குத் தன்னாட்சி அதிகாரம் கொடுக்கும் அதிகாரம் உள்ளது என்றும் தெரிவித்திருக்கிறார். 13ஆவது அரசியல் திருத்தத்தை இலங்கையின் அரசியலில் பிரதான பேசுபொருளாகப் பிரபலப்படுத்தியிருக்கிறார் இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே. ராஜபக்சேவின் இந்த சூழ்ச்சி அரசியல் தமிழக அரசியல் தலைவர்கள் வரை வலை விரித்திருக்கிறது. இப்படித்தான் உலகின் கவனத்தை தான் விரும்பிய பக்கமெல்லாம் திருப்பிக்கொண்டிருக்கிறார் ராஜபக…
-
- 0 replies
- 535 views
-
-
நாங்கள் ஏதோ ஒன்றை இழந்துவிட்டோம்! Gunnar Sørbø - (தமிழாக்கம்: ரூபன் சிவராஜா) 'போருக்குப் பின்னான சிறிலங்கா' எனும் தலைப்பில் மூத்த நோர்வேஜிய ஆய்வாளரும் கிறிஸ்தியான் மிக்கல்சன் ஆய்வு மையத்தின் - Christian Michelsens institutt (CMI) முன்னாள் பணிப்பாளருமான Gunnar Sørbø அவர்கள் அண்மையில் எழுதிய ஆய்வுக் கட்டுரையின் தமிழாக்கம் இதுவாகும். <em>Morgenbladet</em> (The Morning Paper) எனும் நோர்வேஜிய வார இதழில் இவ்வாய்வு வெளிவந்தது. *** இரத்த வெள்ளத்தோடும், தமிழீழ விடுதலைப் புலிகள் முழுமையாகத் தோற்கடிக்கப்பட்ட நிலையிலும் விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா அரசாங்கத்திற்குமிடையிலான நீண்டநெடிய உள்நாட்டுப்போர் முடிவுக்கு வந்து நான்கு ஆண்டுகளுக்கு…
-
- 4 replies
- 620 views
-
-
September 10, 2013 அரசியல் பார்வை 0 8 பின் முள்ளிவாயக்கால் காலத்தில் கூட்டமைப்பின் அரசியல் நிலைப்பாடு அதற்கு அண்மித்த முந்தைய காலத்தின் நிலைபாட்டிலிருந்து மாறுபட்டுள்ளதனை அதன் நடவடிக்கைகளிலிருந்து அறிந்து கொள்ளலாம். இருப்பினும், அதன் தலைவர்கள் வெளியிடும் முரண்பட்ட கருத்துகளிலிருந்து அதன் கொள்கை நிலைப்பாட்டை சரியாக அறிந்து கொள்ளமுடிவதில்லை. ஒரு முறை குறிப்பிட்டதை இன்னொரு இடத்தில் மறுத்தும், ஊடகங்கள் தவறாக செய்தி வெளியிடுவதாகக் கூறியும், இடத்திற்கு ஏற்றமாதிரி கருத்துகள் வெளியிட்டும் கூட்டமைப்பின் தலைவர்கள் தப்பித்துக் கொள்கிறார்கள். 2010ம் ஆண்டு பொதுத்தேர்தலின்போது வெளியிடப்பட்ட விஞ்ஞாபனம், தாயகம், தேசியம், தன்னாட்சி உரிமை என்ற முன்னைய கொள்கை நிலைப்பாட்டை ஒத்ததாக அமைந…
-
- 1 reply
- 620 views
-
-
நவிப்பிள்ளையும் தமிழர்களும் - நிலாந்தன் 08 செப்டம்பர் 2013 விடுதலைப்புலிகள் இயக்கத்தின் வீழ்ச்சிக்குப் பின்னரான தமிழர்களின் கூட்டு உளவியலின் பெரும் போக்கெனப்படுவது ஒருவித கொதி நிலையிலேயே காணப்படுகின்றது. கொதிப்பான இக்கூட்டு உளவியலானது பின்வரும் மூலக் கூறுகளின் சேர்க்கையாகக் காணப்படுகின்றது. 01. பேரழிவுக்கும் பெருந்தோல்விக்கும் பின்னரான கூட்டுக் காயங்களும் கூட்டு மனவடுக்களும். 02. தோல்வியினால் ஏற்பட்ட தாங்க முடியாத அவமானமும் பழிவாங்கும் உணர்ச்சியும் 03. அப்படிப் பழிவாங்க முடியாதபோது ஏற்படும் அதாவது பிரயோகிக்கப்பட்டவியலாத கோபத்தின் பாற்பட்ட சலிப்பு, விரக்தி, சுயபச்சாதாபம், கையாலாகாத்தனம். 04. தோல்விக்குத் தங்களுடைய சுயநலமும் கோழைத்தனமும் ஒரு காரணம் என…
-
- 7 replies
- 1.3k views
-