அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9213 topics in this forum
-
தமிழ்த் தேசியமும் விக்னேஸ்வரனின் வருகையும் - யதீந்திரா தெற்கின் கடும்போக்குவாதிகளின் பலமான எதிர்ப்புக்களையும் மீறி, வடக்கு மாகாணசபைக்கான தேர்தல் இடம்பெறவுள்ளது. இதற்கு பின்னால் வலுவான இந்திய அழுத்தம் இருக்கிறது என்பதை விளங்கிக்கொள்வது கடினமான ஒன்றல்ல. வடக்கு தேர்தல் தெற்கில் ஏற்படுத்திய வாதப்பிரதிவாதங்கள், அதன் அரசியல் பின்புலத்தை அடிப்படையாகக் கொண்டிருக்க, நமது சூழலிலோ அது வேட்பாளர்களை அடிப்படையாககக் கொண்டிருந்தது. தெற்கில் இடம்பெற்றது போன்று 13வது திருத்தச் சட்டம் குறித்து வாதப்பிரதிவாதங்கள் எவையும் வடக்கில் இடம்பெறவில்லை. ஆரம்பத்தில் 13வது திருத்தச் சட்டத்தில் ஒன்றுமில்லை என்றவாறு விமர்சித்த சில குழுவினர் கூட, இறுதியில் நீதியரசர் விக்னேஸ்வரன் வருகையுடன் தங்கள் வி…
-
- 4 replies
- 929 views
-
-
உறங்காத விழிகள் விடுதலைப் புலிகள் தீவிரவாதிகளா... இல்லை விடுதலைப் போராளிகளா? விடுதலைப் போராட்டம் ஏன் தொடங்கியது, விடுதலைப் புலிகள் எவ்வாறு உருவாகினார்கள், அவர்கள் எங்கிருந்து உருவாகினார்கள், அவர்களின் போராட்ட வரலாறு என்ன, அவர்கள் எதற்காகப் போராடினார்கள்? என்று தெரிந்தும் சில அடிவருடிகள் சந்தர்ப்பத்திற்கேற்ப பச்சோந்திகளாக மாறி "விடுதலைப் புலிகள் இயக்கம் ஒரு தீவிரவாத இயக்கம்" என சிங்களவர்களுடன் சேர்ந்து அறிக்கைகள் விட்டுக் கொண்டு இருக்கிறார்கள். இறுதி யுத்தத்தில் நிராயுதபாணிகளாக அந்த யுத்த களத்திலே நின்றிருந்த போராளிகளையும், பொதுமக்களையும் இனம் காண முடியாத சிங்கள இராணுவம், அங்கே தலைமுடி கத்தரிக்கப்பட்டிருந்த சில பெண் போராளிகளை இனம் கண்டு கைது செய்துதான் அவர்களூடாக …
-
- 6 replies
- 3.3k views
-
-
எதிர்ப்பு அரசியலின் எதிர்காலம். - நிலாந்தன் 28 ஜூலை 2013 அண்மையில் யாழ்ப்பாணத்தில் யூரோவில் மாநாட்டு மண்டபத்தில் யாழ். முகாமையாளர் அவையின் சந்திப்பு ஒன்று நடந்தது. இதில் உரையாற்றிய தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தர் ஒருவர் பின்வரும் தொனிப்படக் கருத்துத் தெரிவித்திருக்கிறார். ''நாங்கள் அபிவிருத்திக்கோ இணக்கப்பாட்டுக்கோ எதிரானவர்களில்லை. மாகாணசபைத் தேர்தலில் நாங்கள் வெற்றியடையும்போது அபிவிருத்தியை ஆரம்பிப்போம். மக்களுடைய தேவைகளை நாங்கள் மனதில் கொண்டிருக்கிறோம். பலரும் நினைக்கிறார்கள், நாங்கள் நெகடிவ் திங்கிங் உடையவர்கள் என்று. உண்மையில் நாங்கள் அப்படிச்சிந்திக்கவில்லை. பொஸிடிவ் திங்கிங்கில்தான் நாங்கள் பயணிக்க விரும்புகிறோம். நாங்கள் அபிவிருத்தியை எதிர்க்கவில்லை. இப்போது…
-
- 2 replies
- 525 views
-
-
தலைவர்கள் மட்டுமா?! -மொறட்டுவை பல்கலைக்கழக பொறியியல் பீட தமிழ் மாணவர் சமுகம்- 18 ஜூலை 2013 குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு அனுப்பி வைத்த கட்டுரை தமிழ்த் தேசியத்தின் எழுச்சி, அதன் தற்போதய மென்மைப்போக்கு, அதற்கான காரணங்கள்/ தந்திரங்கள், சகோதர இனத்துடனான அதன் உறவு அல்லது அதனுடன் பேசி/ முரண்பட்டு தீர்வைப்பெறும் அதன் இயலுமை, மற்றும் தற்போதைய அரச இயந்திரத்துடன் தமிழர்தரப்பு முரண்படும் விடயங்களான அதிகாரப்பகிர்வு, காணி-பொலிஸ் அதிகாரம் மற்றும் இவற்றை மாகாணசபைகளுக்கு குறித்தொதுக்குதல் போன்றவற்றினைத் தர்க்க ரீதியாக விளங்கிக்கொள்ள ஒரு தளத்தை உருவாக்குதலே இக்கட்டுரையின் நோக்கம். ஆகவே இக்கட்டுரை மேற்படி பிரச்சனைகளுக்கான தீர்வுத்திட்டத்தை பற்றிப்பேசாது, மாறாக (யாதாயினும்?) ஒரு தீர்வ…
-
- 6 replies
- 776 views
-
-
1987ம் ஆண்டு, அக்டோபர் மாதம் 12ம் திகதி, நேரம்: அதிகாலை 1 மணி, திட்டமிட்டபடி இந்தியப் படைகள் விடுதலைப் புலிகளின் தலைவரை குறிவைத்து தமது நகர்வினை ஆரம்பித்திருந்தன. விடுதலைப் புலிகளின் தலைவரைக் குறிவைத்த அந்த அதிரடி இராணுவ நடவடிக்கையில் இந்திய இராணுவத்தின் இரண்டு முக்கிய படை அணிகள் ஈடுபடுத்தப்பட்டன. 1. இந்தியப் படையின் முக்கியமான படை அணியான பராக் கொமாண்டோக்கள் (Para Commandos) 2. 13வது சீக்கிய மெது காலாட் படையணி (13 - Sikh Light Infantry) நான்கு எம்.ஐ.-8 (MI8) ஹெலிக்காப்டர்கள் பராக் கொமாண்டோக்களையும், விஷேட பயிற்சி பெற்ற சீக்கியக் காலாட்படையினரையும் தரையிறக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டன. ஸ்ரீலங்கா வான் படையினரின் வழிகாட்டல்களிலேயே இந்த தரையிறக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்…
-
- 17 replies
- 1.6k views
-
-
77ல் விமான முலமும் 83ல் கப்பல் மூலமும் எம்மை வடக்கு கிழக்கிற்கு அனுப்பிவைத்தது அரசாங்கங்களே(காணொளி இணைப்பு) 77ல் விமான முலமும் 83ல் கப்பல் மூலமும் எம்மை வடக்கு கிழக்கிற்கு அனுப்பிவைத்தது அரசாங்கங்களே அவர்கள்தான் தமிழர் தாயம் வடக்கு கிழக்கு என்பதனை எமக்கு உணர்த்தி இருந்தார்கள். என கறுப்பு யூலையை நினைவு கூர்ந்து பாராளுமன்றில் ஆற்றிய உரை M.A. சுமந்திரன். 1983ல் திருநெல்வேலியில் 13 படையினர் கொல்லப்பட்டதற்கு எதிராகவே 1983 கலவரம் ஏற்பட்டது. இளைஞர்கள் வன்முறைப் பாதையை நாடினார்கள் என்றால், அதற்கு முன் வன்முறைகள் நிகழ்த்தப்படவில்லையா? 56ல், 58ல், 61ல், ஆயதம் ஏந்தாத தமிழர்களுக்கு எதிராக வன்முறைகள் நிகழ்த்தப்பட்டன. அப்போது இளைஞர்கள் வன்முறையை கையில் எடுக்கவில்லை. இன்னும…
-
- 3 replies
- 785 views
-
-
அரசியல் தலைவர்களின் தவறுகளுக்கும், சுயநல நோக்கங்களுக்கும்விலையாக மக்களின் உயிரகளே பலி கொடுக்கப்படுகின்றன. இதற்க்கு இலங்கைத்தீவும் விதிவிலக்கல்ல! பிரிவினைவாத முரண்பாட்டு அரசியல் புதைகுழிக்குள் இலங்கைத்தீவின் மக்களைத் தள்ளிவிட்டு, பிரித்தானியக் காலனித்துவவாதிகள்ஆட்சிப்பொறுப்பை சிங்களப்பெரும்பான்மையிடம ;ஒப்படைத்துவிட்டுச் சென்றார்கள். ஆட்சிப்பொறுப்பை மட்டுமல்ல இலங்கைத்தீவை முழுமையாக அபகரித்துக்கொள்ளும் காலனித்துவப் பேராசையையும் சேர்த்து பிரித்தானியர்களிடமிருந்து சிங்கள ஆட்சியாளர்கள் பெற்றுக்கொண்டார்கள். பிரித்தானிய எஜமானர்களிடம் கற்றுத்தேர்ந்த 'காலனித்துவக்கலையினை" ஏனைய பிற இனமக்களிடம் பிரயோகிக்கத் தொடங்கியது சிங்களத் தலைமை! இலங்கைத்தீவு முற்று முழுதான சிங்ஙள பௌத்த நாடாக மா…
-
- 0 replies
- 579 views
-
-
தாயகப் பகுதியில் அத்துமீறிய குடியேற்றங்கள், நில ஆக்கிரமிப்புக்கள் தொடர்ந்தால் மீண்டும் மண் மீட்புப் போராட்டம் ஏற்படுவதை யாராலும் தடுக்க முடியாது. போர் நடைபெற்ற காலப் பகுதியிலும், போர் முடிவுற்ற பின்னரும் வடக்கு, கிழக்கில் தமிழர்களின் பூர்விக நிலங்கள் சிங்களவர்களினாலும், முஸ்லிம்களினாலும் தொடர்ந்து அபகரிக்கப்படுகின்றன. வியாபாராத்திற்காக வந்தவர்கள் முஸ்லிம்கள் என்று பேச்சில் தெரிவித்தாலும், இன்னும் பத்து அல்லது பதினைந்து ஆண்டுகளில் பூர்விக மக்களே முஸ்லிம்கள்தான் என்ற கருத்தை முஸ்லிம் அரசியல்வாதிகள் முன்வைக்கக் கூடும். கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை மாவட்டம் தொடக்கம் அம்பாறை வரையிலான கரையோரப் பகுதிகளிலுள்ள தமிழர்களின் காணிகள் சிங்கள அரசாங்கத்தினால், இராணுவக் குடியிருப்பு…
-
- 2 replies
- 819 views
-
-
ஜூலை இனப்படுகொலை – வலி சுமந்த வரலாறும் பிழைப்புவாதிகளும் : சபா நாவலன் ஜூலைப் படுகொலை, வெலிக்கடைப் படுகொலை என்றெல்லாம் இனப்படுகொலை அரசின் ஆதரவாளர்களே கூட்டம் போட்டுக் கூக்குரலிடும் பிழைப்புவாதிகளின் காலதில் நாங்கள் வாழ்கிறோம். இலங்கையின் தமிழ்ப் பேசும் தேசிய இனங்களின் மீதான இனப்படுகொலையும் இனச் சுத்திகரிப்பும் இந்தக் கணம் வரை தொடரும் நீண்ட வரலாற்றைக் கொண்டது. ஐயர்லாந்தில் தனது தேசிய இன விடுதலைக்காப் போராடுவது அவசியமானது என்று கார்ல் மார்ஸ் ஒன்ரரை நூற்றாண்டுகளுக்கு முன்னரே சொன்னதை மார்க்சியத்தின் பெயராலேயே அவமானப்படுத்தும் திருடர்களின் கூட்டம் புலம் பெயர் நாடுகளிலிருந்து தனது வேர்களை இலங்கை வரை ஆழப்பதிக்கிறது. தவறுகளே நிறுவனமாகியிருந்த 30 வருடப்போராட்டம் அவல…
-
- 0 replies
- 541 views
-
-
மென் தமிழ்த் தேசியவாதம் - நிலாந்தன் 21 ஜூலை 2013 வடமாகாண சபைக்குரிய கூட்டமைப்பின் வேட்பாளர் தெரிவு செய்யப்பட்டுவிட்டார். இத்தெரிவின் மூலம் கூட்டமைப்பின் தலைமையானது தமிழ் மக்களுக்கும், சிங்கள மக்களுக்கும், பிராந்திய மற்றும் அனைத்துலக சமுகங்களுக்கும் வெளிப்படுத்தியிருக்கும் சமிக்ஞைகள் எவையெவை? முதலில், தமிழ் மக்களுக்கு அதாவது, தனது வாக்காளர்களிற்கு கூட்டமைப்பு வெளிக்காட்டியிருக்கும் சமிக்ஞைகள் எவையென்று பார்;க்கலாம். ஒரு முதன்மை வேட்பாளரை கட்சிக்கு உள்ளேயிருந்து தெரிவு செய்யாமல் கட்சிக்கு வெளியிலிருந்து தெரிவு செய்தது ஏன்? இதை இரண்டு விதமாக விளங்கிக்கொள்ளலாம். முதலாவது, கட்சிக்குள் குறிப்பிட்ட பொறுப்புக்குத் தோதான ஆட்கள் இல்லை என்று விளங்கிக்கொள்ளலாம். இரண்டாவது கட்ச…
-
- 2 replies
- 499 views
-
-
தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் தமிழ் மக்கள் இழக்கக்கூடாத அனைத்தையுமே இழந்துவிட்டனர். தாங்கள் இனியும் என்ன செய்வது என்ற நிலையில் தமிழ் மக்கள் ஏங்கிக்கொண்டிருக்கின்றனர். இவர்களின் காவலர்களும் மீட்பர்களும் எப்போது வரப்போகிறார்கள் என்பது இன்று வரை கேள்விக்குறியாகவே உள்ளது. இந்த நிலையில் வடக்கு மாகாண சபைத் தேர்தல் என்ற அவிப்பொருளை மகிந்த ராஜபக்ச தற்போது தமிழ் மக்களுக்கு பரிசளிப்பதாக தெரிவித்திருக்கின்றார். இந்த தேர்தல் நடைபெற்றால் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீர்ந்துவிடும் என்றும் மகிந்த கூறியிருக்கின்றார். யுத்தம் முடிவடைந்து நான்கு ஆண்டுகள் கழிந்துவிட்டன. ஆனால் தமிழ் மக்களின் பிரச்சினைக்கான காரணங்கள் இதுவரை கண்டறியப்பட்டு நிவர்த்திக்கப்படவில்லை. ஒரு பிரச்சினை தோற்றம் ப…
-
- 0 replies
- 408 views
-
-
' உலகத் தொலைக்காட்சியில் முதன்முறையாக......' என்று அடைத்தகுரலில், திரைப்படம் ஒன்றிக்கு விளம்பரம் செய்யப்படுவதைப் பார்த்திருக்கிறோம். இப்போது நாம் பார்க்கப்போவது திரைப்பட விளம்பரமல்ல. சீனாவின் ஆட்சியாளர்களால் பெரிதும் மதிக்கப்படும் சிந்தனைச் சிற்பிகள், இந்துசமுத்திரப்பிராந்தியம் குறித்து முதன்முறையாக வெளியிட்டுள்ள நீலப் புத்தகம் (Blue Book)பற்றிப் பார்க்கப்போகிறோம். இந்தப் பிராந்தியத்தில்தான் நம் தேசமும் இருப்பதால், சீனா நமது பிராந்தியம் குறித்து என்ன திட்டங்களை வைத்திருக்கிறது என்பது பற்றி அறிவதற்கு, நாம் அக்கறைப்படுவதில் தப்பேதுமில்லை. முள்ளிவாய்க்கால் பேரழிவு எம்முள் விதைத்துவிட்டுச் சென்ற பெருவலி, எம்மினத்தை அழிக்க உதவியோர், எமது நிலத்திலும், ஆகாயத்திலும், கடல் பரப…
-
- 0 replies
- 466 views
-
-
சிறிலங்கா: நாடாளுமன்றத் தெரிவுக் குழுவானது மீளிணக்கத்தை நீர்த்துப்போக செய்யும் முயற்சி [ ஞாயிற்றுக்கிழமை, 21 யூலை 2013, 07:30 GMT ] [ நித்தியபாரதி ] சிறுபான்மை – பெரும்பான்மை என்கின்ற தோற்றத்தின் ஊடாக இனப்பிரச்சினை நோக்கப்படுமாயின் பல்லின நாடுகள் வாழும் சிறிலங்காவின் அரசியல் இயங்குநிலை தொடர்பில் மிகத்தவறான கற்பிதத்தை உருவாக்கும். இவ்வாறு சென்னைப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் தென்னாசியவியல் போராசிரியரான வி.சூரியநாராயணன்* The New Indian Express ஊடகத்தில் எழுதியுள்ள கட்டுரையில் தெரிவித்துள்ளார். அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. மாகாணங்களுக்கு அதிகாரப் பகிர்வுகளை வழங்குதன் மூலம் நாட்டில் இன மீளிணக்கப்பாட்டை ஏற்படுத்துவதற்காக நாடாளுமன்றத் தெரிவ…
-
- 0 replies
- 516 views
-
-
பிரபாகரன் தமிழீழம் கேட்டதில் என்ன தவறு? இலங்கையில் இருந்து - பிரியதர்சன் 20 ஜூலை 2013 விடுதலைப் புலிகளை அழித்துவிட்டு இலங்கை இந்திய ஒப்பந்த்தின்படி இலங்கை அரசியலமைப்பில் மாற்றம் செய்யப்பட்ட 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்தி தமிழ் மக்களுக்கு தீர்வினை வழங்குவேன் என்று சொல்லியே மகிந்த ராஜபக்ஸ போரை தொடங்கி மாபெரும் அழிவுகளை நிகழ்த்தினார். தமிழர்களுக்கு சிங்கள அரச தலைவர்கள் எந்தத் தீர்வையும் வழங்கமாட்டார்கள் என்ற நிலையிலேயே தமிழ் மக்களை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் என்கிற அளவுக்கு ஜனநாயக அரசியலில் ஏற்பட்ட பின்னடைவே ஆயுதப் போராட்டத்திற்குக் காரணமாக அமைந்தது. ஏதுவுமற்;ற 13 ஐ வைத்து மாபெரும் போர் நடத்தப்பட்டதோ அந்தப் 13ஐயும் இல்லாது ஒழித்துக் கட்டுகிற வேலையில் இனவாத அணியி…
-
- 0 replies
- 610 views
-
-
இந்தியாவை எதிர்க்கவில்லை. ராஜீவ் காந்தியென்ற ஆக்கிரமிப்பாளனையே எதிர்த்தேன்.ராஜீவை தாக்கியமை அரச துரோகமானாலும் அது தேசத்துரோகமல்ல. இந்தியாவை திருப்திப்படுத்தவே எனக்கு சிறைத் தண்டனை வழங்கப்பட்டது. தேசப்பற்று இன்று அரசியல் வயிற்றுப் பிழைப்பாக மாறிவிட்டது. நான் இந்தியாவுக்கு எதிரானவன் அல்ல. ஆனால் இலங்கையின் வான் பரப்பில் அத்து மீறி, எமது நாட்டை ஆக்கிரமித்த ராஜீவ் காந்தி பலாத்காரமாக இந்திய - இலங்கை உடன்படிக்கையை மேற்கொண்டு நாட்டைப் பிரிக்கும் 13ஆவது திருத்தத்தையும் மாகாண சபை முறைமையையும் எமது அரசியலமைப்புக்குள் புகுத்தினார். இதனால் ராஜீவ் காந்தியை எதிர்த்தேன். எனவே, எனது நாட்டை பாதுகாப்பதற்காகவே ராஜீவை பழிவாங்கும் எண்ணம் என் மனதுக்குள் உருவானது. இதன் காரணமாகவே கடற்படை அணிவக…
-
- 4 replies
- 678 views
-
-
எனது கடந்த வாரக் கட்டுரை, �மகிந்த முன்னாலுள்ள தெரிவு � 13ஐ திருத்துவதா? ஒழிப்பதா?� என்ற தலைப்பில் வெளியாகியிருந்தது. ஆனால், பத்திரிகையின் முதல் பக்கச் செய்தித் தலைப்பு, 'சர்வஜன வாக்கெடுப்புக்கு மகிந்த அரசு தயாராகின்றது' என்று இடம்பெற்றிருந்தது. அதன் பக்கத்தலைப்பாக, '13ஐ இரத்துச் செய்யுமாறு நீதிமன்றங்களில் வழக்குத் தாக்கல்' என்று பதிவாகியிருந்தது. இவை ஒவ்வொன்றும் ஒன்றுக்கொன்று முரணாகவும், வேறுபட்டதாகவும் இருப்பதை அவதானிக்கலாம். உண்மைதான்! 13வது திருத்தச் சட்டத்தை என்ன செய்வதென்று தெரியாமல் மகிந்த அரசு தடுமாறுவதன் வெளிப்பாடே இந்தச் செய்திகளும், அதன் தலைப்புகளும். அறிவித்தபடி தேர்தல் நடத்தவில்லையானால், பொதுநலவாய நாடுகளின் மாநாட்டுக்கு ஆபத்தாக முட…
-
- 0 replies
- 608 views
-
-
வடமாகாணசபைத் தேர்தல்விவகாரம் முஸ்லிம் தலைமைகள் TNAயிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டியவை 19 ஜூலை 2013 - எழுதுவது இலங்கையன் - ஏதாவது செய்தேயாகவேண்டும் என்கின்ற நிலைப்பாட்டுக்கு தள்ளப்பட்டுள்ள இலங்கை அரசாங்கம் விரும்பியோ விரும்பாமலோ வட மாகாண சபைத் தேர்தலை அறிவித்துள்ளது. இத்தேர்தலைப் பொறுத்தவரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அங்கு தோல்வியுறச் செய்வதானால் அதற்கான ஒரே வழி, தேர்தலை நீதியாக நடக்க விடாமல் செய்வதே. இது தவிர வேறெந்த வியூகமும் அங்கு பலிக்காது என்பது சர்வதேசம் அறிந்த மாபெரும் உண்மை. ஏனனில் தமிழ் மக்கள் யாவரும் தமது உணர்வு வெளிப்பாடாகவே இத்தேர்தலைக் கருதுகின்றனர். இந்த உண்மையானது கடந்த கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் கூட தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு கிடைத்த மக்கள் ஆ…
-
- 3 replies
- 513 views
-
-
அபிவிருத்தி: மனித மேம்பாட்டின் பாதையா அல்லது அடக்குமுறையின் கருவியா? - பேரா. என். சண்முகரத்தினம் [ வெள்ளிக்கிழமை, 19 யூலை 2013, 05:44 GMT ] [ புதினப் பணிமனை ] 01. 2009 ஆண்டு ஐந்தாம் மாதம் விடுதலைப்புலிகளை இராணுவரீதியில் தோற்கடித்து உள்நாட்டுப் போரை முடிவுக்கு கொண்டு வந்த பின்னர் "அபிவிருத்தியே" இன்றைய உடனடித்தேவை என ஆட்சியாளர் பிரகடனப்படுத்தினர். இறுதிக்கட்ட இராணுவ நடவடிக்கையை ஒரு "மனிதாபிமான" நடவடிக்கை எனக் குறிப்பிட்ட அரசாங்கம் மக்கள் வேண்டி நிற்பது அவர்களின் வாழ்வாதாரத் தேவைகளின் பூர்த்தியையே எனக்கூறியபடி "மீள்குடியேற்றம்" "அபிவிருத்தி" எனும் பதாகைகளுடன் திட்டங்களை ஆரம்பித்தது. இத்திட்டங்கள் வெளிநாட்டு நன்கொடை உதவியுடனும் கடனாகப்பெற்ற பெருமளவு நிதியுடனும் அமுலாக…
-
- 0 replies
- 1k views
-
-
இந்திய அரசும், இலங்கை மேன்மைதங்கிய ‘ஹை புரபைல்களும்’ விரும்பியபடி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சராகும் ‘தகுதி படைத்த’ வேட்பாளராக முன்னை நாள் நிதிபதி விக்னேஸ்வரன் இறுதியில் தெரிவுசெய்யப்பட்டார். சுரேஷ் பிரேமச்ச்சந்திரன் குடும்பத்தோடு ‘அண்ணன்’ மாவையும் சென்று குத்தகைக்கு எடுக்கப்பட்ட ரி.என்.ஏ என் முதன்மை வேட்பாளருக்கு வாழ்த்துத் தெரிவித்தனர். ‘ஹை புரபைல்’ கனவான் தான் வேட்பாளர் என்று சாணக்ஸ் சம்பந்தன் முன்னமே முன்மொழிந்த போதே விக்னேஸ்வரனே ‘விடுதலைப் போராளி’ யாவார் என்று பலரும் நம்பியிருந்தனர். தமிழர் விடுதலைக் கூட்டணியின் பாரம்பரியப்படி வழக்குப் பேசுபவர்களே மக்கள் பிரதிநிதிகளாகலாம். அது இன்னொரு படி மேலே போய் தீர்ப்புச் சொல்லும் ‘ஹை புரபைல்’ விடுதலைப் போராட்டத்தை ம…
-
- 13 replies
- 985 views
-
-
இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனனின் இலங்கை விஜயமும், அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவின் புது டெல்லிப் பயணமும், அரசியல் தளத்தில் பல உரையாடல்களை ஏற்படுத்தியுள்ளது. 13 வது திருத்தச் சட்டத்தில் மாற்றங்கள் கொண்டுவரும் வகையில், தென்னிலங்கையில் உருவாகும் கடுமையான நிலைப்பாடு குறித்து இருவரும் விவாதித்துள்ளார்கள். வட மாகாணசபைத் தேர்தலுக்கு முன்பாக , 13 இல் திருத்தங்கள் கொண்டுவரப்படுவதை இந்தியா விரும்பவில்லை என்கிற செய்தி பசிலிடம் கூறப்பட்டுள்ளது. அவ்வாறான நடவடிக்கை, இந்தியத் தரப்பிக்கு சிக்கலை ஏற்படுத்தலாம் என்பதால், இந்த விடயத்தில் இந்தியாவானது கடுமையான நிலைப்பாட்டினைக் கொண்டுள்ளது போலொரு தோற்றப்பாடு காண்பிக்கப்பட்டுள்ளது. இந்தியப்பிரதமர் மன்மோகன் சிங் மற்றும்…
-
- 1 reply
- 395 views
-
-
பயங்கரவாதம்: சுருக்கக் குறிப்புகள் சச்சிதானந்தன் சுகிர்தராஜா பயங்கரவாதம் ஒரு பண்புப் பெயர் அல்ல. நம் வாழ்வில் நாளாந்தம் அனுபவிக்கும் கொசுக் கடி, மின்சார வெட்டுபோல் உயிர்த்தோற்றமுள்ள ஒரு மெய்மை என்றுதான் ஏற்றுக்கொள்ள வேண்டும். நீங்கள் இதைப் படித்துக் கொண்டிருக்கும்போது ஏதாவது ஒரு நகரின் தெருவிலோ அல்லது சந்தையிலோ அரசியல், மத, கருத்தியல் காரணங்களுக்காகக் குண்டுகள் வெடித்துக் கொண்டிருக்கும். ஐந்து வார இடைவெளியில் இரண்டு பயங்கரவாத தாக்குதல்கள். ஒன்று அமெரிக்காவின் பொஸ்டன் நகரம். மற்றது ஐக்கிய ராச்சியத்தின் லண்டன். ஐக்கிய ராச்சியத் தெருக்களுக்குப் பயங்கரவாதம் 9/11க்குப் பிறகு வந்ததல்ல. இஸ்லாமிய குண்டுதாரிகளுக்கு முன்பு 70களிலும் 80களிலும் ஐரிஷ் விடுதலை இயக்கமான ஐ ஆர் ஏ …
-
- 0 replies
- 605 views
-
-
ஐந்து கண்கள்: மானுட யாப்பின் மீறல் சேரன் 2006இல் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எஸ்.ஏ. - 18 வகையைச் சேர்ந்த ஏவுகணைகளையும் வேறு போர்க்கலங்களையும் வாங்க முயற்சித்தார்கள் என்ற குற்றச்சாட்டில் ஈழத் தமிழ் இளைஞர்கள் மூன்று பேரை நியூயோர்க்கில் அமெரிக்காவின் புலனாய்வுத் துறையான எஃப்பிஐ கைதுசெய்தது. ஆயுத விற்பனையாளர்களிடம்தான் போர்க்கலங்களை வாங்குகிறோம் என அவர்கள் எண்ணியிருந்தார்கள். ஆனால் எஃப்பிஐ உளவாளிகள்தான் ஆயுத விற்பனையாளர்கள் போலத் தொழிற்பட்டு அந்த இளைஞர்களைச் சிக்கவைத்துவிட்டார்கள். பிற்பாடு, வேறு இரு ஈழத் தமிழ் இளைஞர்களும் ‘பயங்கரவாதம்’ பரவ உதவிசெய்தார்கள் எனக் கூறியும் கனடிய அரசால் கைதுசெய்யப்பட்டு அமெரிக்காவுக்கு அனுப்பிவைக்கப்பட்டார்கள். எல்லா இளைஞர்களும் கனடியக் குடி…
-
- 0 replies
- 751 views
-
-
விக்கினேஸ்வரனை முதலமைச்சராக்கிப் பார்க்கும் சம்பந்தனின் கனவு யாருடையது? (ஆதாரங்களுடன் சிறப்பாய்வு) ஞாயிற்றுக்கிழமை, ஆடி 14, 2013 1:48 pm வடக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ்க் கூட்டமைப்பு சார்பில் போட்டியிரும் வேட்பாளரைத் தெரிவு செய்யும் முயற்சி கடும் சர்ச்சைகளுக்குள்ளாகியுள்ளது. சட்ட அறிவுடைய ஒருவரே வடக்கு முதல்வராக வரவேண்டும் என்ற தலைவர் சம்பந்தனின் விருப்பமும், வடக்கை சேர்ந்த ஒருவரே முதலமைச்சராக வரவேண்டும் என்று கட்சியிலுள்ள வடபகுதியைச் சேர்ந்தவர்களின் விருப்பமும் மோதி்க் கொள்வதால் இந்தச் சர்ச்சை எழுந்துள்ளது. இதனால் நேற்று வரையில் மூன்று தடவைகள் கூடிய போதும் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளரைக் கட்சி உறுப்பினர்களால் தெரிவுசெய்ய முடியவில்லை. அநேகமாக நாளை அதுபற்றி…
-
- 20 replies
- 2.2k views
-
-
இரண்டேநாளில் வெளுத்தது பசிலின் சாயம். - புகழேந்தி தங்கராஜ் நாலுபேருக்குத் தெரிகிறமாதிரி ஏதாவதொரு துறையில் பிரபலமாகிவிட்டால், தன் சமூகத்தைத் திரும்பிக்கூட பார்க்கமாட்டான் தமிழன். ‘உங்களுக்கு இருக்கிற பாப்புலாரிட்டிக்கு அரசியல் பற்றியெல்லாம் நீங்கள் பேசலாமா’ என்று வேப்பிலை அடித்தே ஊமையாக்கி விடுவார்கள், சுற்றியிருக்கிற பூசாரிகள். இந்தப் பொதுவான விதிக்கு, விதிவிலக்கு மாயா. இசை உலகில் தமிழனின் ஒருமுகம் ஏ.ஆர். ரஹ்மான் என்றால், இன்னொரு முகம் – எம்.ஐ.ஏ. என்கிற பெயரில் பாப் இசை உலகை அதிரவைக்கும் மாயா. ஈழச் சகோதரியான இந்த இளம் பாடகி, ‘எங்கள் மண்ணில் நடந்தது போர் அல்ல… அது ஒரு திட்டமிட்ட இனப்படுகொலை’ என்பதை உலக அரங்கில் உரத்த குரலில் பதிவு செய்து வருபவர். எதிர்த்துக் கு…
-
- 0 replies
- 1.5k views
-
-
புளொட் இயக்கத்தால் தற்போது உமா மகேஸ்வரன் நினைவாக வீரமக்கள் தினம் அனுஸ்டிக்கப்பட்டுவருகிறது.உண்மையில் புளொட் அதற்கு தகுதியுடையதா?தாம் கொலைசெய்து தொலைத்த உமா மகேஸ்வரனுக்கு நினைவுதினம் இன்னமும் தேவைதான?உமா கொலையின் கதை இது, 1989 ஜூலை15 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை கொழும்பு பம்பலப்பிட்டி கடற்கரையில் அநாதரவான நிலையில் சூட்டுக்காயங்களுடன் உமா மகேஸ்வரன் என்று அழைக்கப்பட்டட கதிர்காமர் நல்லைநாதனின் சடலம் பொலிஸாரால் மீட்கப்பட்டு கொழும்பு பெரியாஸ்பத்திரியில் ஒப்படைக்கப்பட்டது.பின்னர் அவர் மனைவி அகிலேஸ்வரி அடையாளம் காட்டினார்.புளொட் இயக்கத்தின் தலைவரான உமா மகேஸ்வரன் உடல் எப்படி கடற்கரைக்கு வந்தது? புளொட் உறுப்பினர்கள் ஏன் தங்கள் தலைவரைத்தேடவில்லை? உமாவின் மெய்க்காப்பாளர்கள் எங்கே போனார…
-
- 0 replies
- 2.9k views
-