அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9269 topics in this forum
-
ஏமாற்றத்தை எதிர்பார்த்தல் தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ சில விடயங்கள் நடந்தேறக் கூடியவையல்ல என்று தெரியும்; நடந்தால் நல்லது என்றும் தெரியும். ஆனால், நடப்பதையும், நடவாததையும் தீர்மானிக்கும் வல்லமை பல சமயங்களில் நம்மிடமில்லை. இருந்தாலும் ஏமாற்றத்தை எதிர்பார்க்கும் மனநிலை என்றொன்று உண்டு. அது கையறுநிலையின் வெளிப்பாடா அல்லது மூட நம்பிக்கையா என்று சொல்லவியலாது. உலக அரசியல் அரங்கை நம்பிக்கையீனம் ஆட்கொண்டுள்ளது. எதையும் நம்பியிருக்க இயலாதவாறு அலுவல்கள் அரங்கேறுகின்றன. இதனால் ஏமாற்றத்தை எதிர்பார்ப்பதும் களிப்பூட்டுகிறது. ஞாயிற்றுக் கிழமை இத்தாலியில் நடந்த மக்கள் வாக்கெடுப்பின் மு…
-
- 0 replies
- 324 views
-
-
நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த இந்திய – இலங்கை இடையிலான பாலம் அமைக்கும் திட்டம் – யாருக்கு இதனால் சாதகம்? December 21, 2024 12:56 pm இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் நிலத் தொடர்பை ஏற்படுத்தும் நோக்கில் கடல் மார்கமான பாலமொன்றை அமைக்கும் திட்டம் தொடர்பில் 2015ஆம் ஆண்டுக்குப் பின்னர் பரவலாக பேசப்படுகிறது. 2015ஆம் ஆண்டுமுதல் இந்தப் பாலம் குறித்த பேச்சுகள் இருநாட்டிலும் உள்ள போதிலும் இதற்கான முயற்சிகள் தொடர்ச்சியாக தோல்வியுற்றே வருகின்றன. கடந்த ஆண்டு நடுப்பகுதியில் இந்தியாவுக்குச் சென்றிருந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இந்தியாவுடன் நிலத் தொடர்பை ஏற்படுத்தும் இந்தப் பாலத்தை அமைப்பதற்கான இணக்கப்பாடுகளை வெளிப்படுத்தியிருந்தார். ஆனால், அதற்கு …
-
- 0 replies
- 324 views
-
-
சம்பந்தனின் நகர்வு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவை எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளமை பல்வேறு ஊகங்களை வெளிப்படுத்தியிருக்கிறது. கடந்த புதன்கிழமை மாலை கொழும்பு விஜயராம மாவத்தையில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றிருக்கின்றது. இரண்டு மணி நேரம் வரையில் நடைபெற்ற இந்த சந்திப்பு தொடர்பில் இருதரப்பினருமே இரகசியத்தை பேணி இருந்தபோதிலும் அந்த தகவல் வெளியில் கசிந்ததையடுத்து சந்திப்பு தொடர்பில் இருதரப்பினரும் கருத்துக்களை தெரிவித்துள்ளனர். சந்திப்பின்போது புதிய அரசியலமைப்புக்கு ஆதரவு அளிக்கவேண்டும் என்று தான் க…
-
- 0 replies
- 324 views
-
-
இலங்கையில் தேசியகீதமானது தமிழிலில் பாடக்கூடாது என்று பொதுபலசேனா தெரிவித்திருக்கும் கருத்தானது தமிழ்மக்கள் மத்தியில் அதிகம் கவனத்தை ஈர்த்திருக்கவில்லையாயினும் பொதுபலசேனாவின் இக்கருத்தானது அரசியல் மட்டத்தில் பல்வேறு கருத்துக்களாக நோக்கவேண்டியுள்ளது. தமிழ்மொழி பேசுகின்றவர்களும் இலங்கை தேசத்தின் தேசிய கீதத்தினைப் பாடவேண்டும் என்கின்ற நோக்கத்திலேயே தமிழில் மொழிபெயர்க்கப்பட்டது. இலங்கைதேசம் ஆங்கிலேயர்களின் ஆட்சியின் பிடியில் இருந்த இறுதிக்காலத்தில் பாரததேசத்தில் பல்வேறு அரசியல் போராட்டங்களும், விடுதலை எழுச்சிகளும் ஏற்பட்டன. மக்களை விடுதலையின்பால் திசை திருப்புவதற்கு விடுதலைப்பாடல்கள் அவசியம் தேவைப்பட்டன. இலங்கை பூகோள ரீதியில் இந்திய தேசத்திற்கு அருகில் அமைந்திருப்பதனால் அங்கு…
-
- 0 replies
- 323 views
-
-
பதவி அரசியலும் அரசியல் பாசாங்குகளும் -என்.கே. அஷோக்பரன் யாழ்ப்பாண மாநகர சபையில், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு, ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற விஸ்வலிங்கம் மணிவண்ணன், மேயராகத் தெரிவுசெய்யப்பட்டிருக்கிறார். யாழ். மாநகர சபையின் வரவு- செலவுத்திட்டம், இருமுறை தோற்கடிக்கப்பட்ட நிலையில், முன்னாள் மேயர் ஆர்னோல்ட், மேயர் பதவியை இழந்த நிலையில், மீண்டும் மேயர் பதவிக்காக,இலங்கை தமிழரசுக் கட்சியால் அவர் முன்னிறுத்தப்பட்டு இருந்தார். இலங்கை தமிழரசுக் கட்சியின் 15 உறுப்பினர்கள், ஐக்கிய தேசிய கட்சியின் மூன்று உறுப்பினர்கள், தமிழர் விடுதலைக் கூட்டணியின் ஓர் உறுப்பினர், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஓர் உறுப்பினர் என, 20 மாநகர சபை உறுப்…
-
- 0 replies
- 323 views
-
-
போராட்டங்களின் சாதிப்பு லக்ஸ்மன் உரிமைகளை அடைந்து கொள்வதற்கு போராட்டங்களை நடத்துவது நமது நாட்டில் மாத்திரமல்ல வளர்ச்சியடைந்த நாடுகளிலும் சாதாரணமாகனதாகவே இருக்கிறது. அது தொழிலாளர்களின் தொழில் உரிமைக்கானது. அரசியல் உரிமைகளைப் பெற்றுக்கொள்ள முயல்வது. சமூகங்கள் தங்களது உரிமைக்காக நடத்துவது. தனிப்பட்டவர்கள், நிறுவனம் சார்ந்தவர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள் எனப் பலவகையான போராட்டங்கள் நடந்துவருகின்றன. போராட்டம் என்பது சமூக, அரசியல், இனம், பொருளாதாரம் போன்ற உரிமை மறுப்புகள், வன்முறை, அதிகார கட்டுப்படுத்தல்கள், சுரண்டல்கள் போன்ற அநீதிகளைகளுக்கு எதிராக தனியாகவும் கூட்டாகவும் நடத்தப்படுவது வழமையாகும். தீர்வு ஒன்றைப் பெற்றுக் கொள்வதற்காக போராட்டங்க…
-
- 0 replies
- 323 views
-
-
தமிழ் மக்கள் தங்களைத் தாங்களே பார்த்துச் சிரிக்கும் ஒரு காலம்! நிலாந்தன் "ஓம் ஊசி வென்றால்தானே காமெடி பார்க்கலாம்" adminDecember 15, 2024 கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது கிளிநொச்சி தொண்டமான் நகரில் உள்ள வாக்களிப்பு நிலையத்தில் வரிசையில் நின்ற ஒருவர் தனக்கு முன்னால் நின்ற இளைஞரிடம் கேட்டிருக்கிறார் “யாருக்கு வாக்களிக்கப் போகிறாய்?” “ஊசிக்குத்தான்” என்று இளைஞர் பதில் சொல்லியுள்ளார். “ஊசிக்கா?” இவர் திரும்பக் கேட்க, “ஓம் ஊசி வென்றால்தானே காமெடி பார்க்கலாம்” என்று அவர் சிரித்துக் கொண்டு பதில் சொல்லியுள்ளார். உண்மை. அர்ஜுனா சிரிக்க வைக்கிறார். கடந்த வாரம் யாழ். போதனா வைத்தியசாலைக்குள் நுழைந்து, வைத்தியசாலையின் பணிப்பாளரோடு அவர் வாக்குவாதப்பட்டார். கடந்த …
-
- 0 replies
- 323 views
-
-
இப்தார் அரசியல்: நோன்பு காலத்து கவலைகள் நோன்பு காலம் என்பது இலங்கை முஸ்லிம்களுக்கு மட்டுமன்றி, உலகெங்கும் வாழும் முஸ்லிம்களுக்கே ஒரு புனிதமான காலப்பகுதியாகும். அவர்கள், அக்காலப்பகுதியில் தங்களுடைய மார்க்கக் கடமைகளில் ஈடுபடுவதற்கு ஏதுவான, அமைதியான சூழல் நிலவ வேண்டியது அவசியமாகும். ஆனாலும், கடந்த சில வருடங்களாக அவ்வாறான அமைதியான சூழல் இலங்கையில் இல்லை என்பது மிகுந்த கவலைக்குரியது. நமது அனுபவங்களின்படி, கடந்த சில வருடங்களாக, இலங்கையில் இனவாத செயற்பாடுகள் முனைப்புப் பெற்றிருக்கின்றன. இந்த இனவாதச் செயற்பாடுகள், நோன்பு காலங்களில் தீவிரமடைகின்றன. ‘கிறீஸ் பூதம்’, ‘அபாயா பிரச்சினை’, ‘…
-
- 1 reply
- 323 views
-
-
டைம்ஸ் ஓவ் இந்தியா தமிழில் ரஜீபன் நந்தசேன கோத்தாபய ராஜபக்ச முழுமையான வெள்ளை ஆடையில் நவம்பர் 18 ம் திகதி அனுராபுரத்தில் உள்ள ருவன்வெலிசயவில் உள்ள பௌத்த தூபியில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டவேளை வடக்குகிழக்கில் அச்சம் பதவியேற்பு நிகழ்வு இடம்பெற்ற இடம்போன்று அந்த நிகழ்வில் தெரிவிக்கப்பட்ட சிங்களவர்கள் மாத்திரம் செய்தியும் முக்கியமானது என அதனை தொலைக்காட்சியில் பார்வையிட்ட தமிழர்கள் தெரிவித்தனர். செயற்பாட்டாளர்கள் மிகவும் அமைதியாக உள்ளனர்,அவர்கள் கட்டுரை எழுதுவதையும் அறிக்கைகள் விடுவதையும் நிறுத்திவிட்டனர்,அச்சம் வெளிப்படையாக தெரிகின்றது என யாழ்ப்பாணத்தை சேர்ந்த செயற்பாட்டாளர் ஒருவர் தெரிவித்தார். நல்லாட்சிக்காக பிரச்சாரம் செய…
-
- 0 replies
- 323 views
-
-
தேவை ஒரு புதுப்பாதை – கலாநிதி அமீரலி கலாநிதி அமீரலி எழுபது ஆண்டுகளுக்கும் மேலான சுதந்திர இலங்கையின் அரசியல் வரலாற்றில் தமிழர், முஸ்லிம்கள் ஆகிய சிறுபான்மை இனங்களிரண்டும் இரண்டு பாதைகள் வழியாக நடந்துசென்று இன்று திசைதவறி நடுச்சந்தியில் நிற்கின்றனர். தமிழினம் தனக்கெனத் தனிப்பட்ட கட்சிகளை அமைத்து பெரும்பான்மை இனத்துடன் போராடித் தனது உரிமைகளை வென்று அதன் தனித்துவத்தையும் காப்பாற்றலாமென முயன்றது. அதற்காக ஆயுதமேந்திப் போராடியும் இறுதியில் தோல்வியடைந்து இருந்ததையும் இழந்து, இனியென்ன செய்வதென்று தெரியாத ஒரு குழப்ப நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. முஸ்லிம்களோ தமிழருடன் இணையாது ஆட்சிக்குவரும் கட்சி எதுவாகினும் அதனுடன் சேர்ந்து சலுகைகளைப் பெற்…
-
- 0 replies
- 323 views
-
-
இந்தியாவை நோக்கி முன்வைக்கப்படவிருக்கும் கூட்டுக்கோரிக்கை எது? நிலாந்தன். தமிழ்க் கட்சிகளை ஒருங்கிணைத்து இந்தியாவுக்கு ஒரு கூட்டுக் கோரிக்கையை முன்வைக்கும் நோக்கத்தோடு டெலோ இயக்கத்தால் முன்னெடுக்கப்பட்டுவரும் ஒருங்கிணைப்பு முயற்சிகள் கடந்த செவ்வாய்க்கிழமையோடு புதிய திருப்பத்தை அடைந்திருப்பதாக தெரிகிறது. டெலோ இயக்கம் அந்த நகர்வை முன்னெடுத்த பொழுது 13ஆவது திருத்தத்தை முழுமையாக அமல்படுத்துவது என்பதே பிரதான கோரிக்கையாக காணப்பட்டது. அக்கோரிக்கையை தமிழரசுக் கட்சி ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால் அந்த ஒருங்கிணைப்பு முயற்சிகளில் தமிழரசுக்கட்சி ஈடுபட மறுத்தமைக்கு அது மட்டும்தான் காரணமல்ல. அதைவிட ஆழமான காரணங்கள் உண்டு. சிறிய பங்காளிக் கட்சியான டெலோ அவ்வாறான ஒருங்கிணைப்ப…
-
- 0 replies
- 323 views
-
-
யுவான் வாங் 5: இலங்கை துறைமுகத்தில் சீன கப்பல் - இந்திய பெருங்கடலில் ஆதிக்கத்தை சீனா உறுதிப்படுத்தியதா? 18 நிமிடங்களுக்கு முன்னர் சீனாவிற்கு சொந்தமான விண்வெளி ஆய்வு கப்பலான யுவான் வாங் - 5, இலங்கையின் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ள நடவடிக்கை, தற்போது சர்வதேச கவனத்தை பெற்று வருகிறது. இந்திய பெருங்கடலில் தனது ஆதிக்கத்தை உறுதிப்படுத்தும் வகையில், இலங்கைக்குள் சீனா நுழைந்துள்ளதாகவும் அதன் அங்கமாகவே தனது கப்பலை அந்நாடு ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு அனுப்பியுள்ளதாகவும் அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். பொருளாதார ரீதியில் இலங்கை பாரிய பின்னடைவை சந்தித்துள்ள இந்த தருணத்தில், ஆரம்பம் முதல…
-
- 2 replies
- 323 views
- 1 follower
-
-
இலங்கையில் அதிகாரப்பரவலாக்கலுக்கான வாய்ப்புக்களை மேலும் மங்கச்செய்யும் காஷ்மீர் நிகழ்வுகள் பி.கே.பாலச்சந்திரன் கொழும்பு, ( நியூஸ் இன் ஏசியா ) இந்தியாவில் சமஷ்டிமுறைக்கும் முஸ்லிம்களைப் பெரும்பான்மையினராகக் கொண்ட ஜம்மு -- காஷ்மீர் பிராந்தியத்துக்கான அதிகாரப் பரவலாக்கத்துக்கும் நடந்திருப்பவை இலங்கையின் அரசியலமைப்புக்கான 13 வது திருத்தத்தின் கீழ் வழங்கப்பட்டிருப்பவற்றையும் விட கூடுதலான அதிகாரப்பரவலாக்கலை இலங்கைத் தமிழர்கள் பெறுவதற்கான வாய்ப்புகளை மேலும் மங்கச்செய்யக்கூடும். பலம்பொருந்திய பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான மத்திய அரசாங்கம் ஜம்மு -- காஷ்மீர் மாநிலத்துக்கு பெருமளவு சுயாட்சியை வழங்கியிருந்த இந்திய அரசியலமைப்பின் 370 வது பிரிவையும…
-
- 0 replies
- 323 views
-
-
வெள்ளை வேன் கடத்தல்: நீதியை தாமதப்படுத்தும் திரைமறைவு காய் நகர்த்தல்களும் மிரட்டல்களும் ஐந்து மாணவர்கள் உள்ளிட்ட 11 பேர் வெள்ளை வேனில் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட விவகாரம் இடம்பெற்று இன்றுடன் 10 வருடங்களாகின்றன. எனினும் இத்தனை நாட்களாகியும் இந்த விவகாரத்தில் இன்னும் நீதியும் நியாயமும் மெளனம் காக்கிறது. ஏன், இவ்வளவு நாட்களாகியும் நீதி நிலைநாட்டப்படாமல் இழுத்தடிக்கப்படுகின்றது என எல்லோருக்கும் எழும் கேள்விகளுக்கு பதில் தேடும் போது தான், இந்த கடத்தல் மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட விவகாரத்தில், திரைமறைவில் குற்றவாளிகளைக் காக்கும் காய் நகர்த்தல்களும் நீதியை பெற்றுக்கொடுக்க போராடுகின்றவர்களுக்கு எதிரான அ…
-
- 0 replies
- 323 views
-
-
எரிபொருள் விலைக்குள் அரசியல் மோதல் நாட்டின் பல பகுதிகளிலும் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு, மண்சரிவு உள்ளிட்ட இயற்கை அனர்த்தங்களுக்கு மத்தியிலும், அரசியல் சண்டைகள் மாத்திரம் ஓயவில்லை. குறிப்பாக, எரிபொருள் விலையை அதிகரிப்பதற்கு அரசாங்கம் மேற்கொண்ட முடிவைத் தொடர்ந்து, பல்வேறுபட்ட கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருகின்றன. எரிபொருள் விலை அதிகரிப்பென்பது, சாதாரண மக்களைப் பலமாகப் பாதித்திருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளக்கூடியதாக இருக்கிறது. பஸ் கட்டணத்திலிருந்து சோற்றுப் பொதியின் விலையிலிருந்து, பல பொருட்களினதும் சேவைகளினதும் விலைகள் அதிகரித்திருக்கின்றன. எரிபொருளுக்கான வரியை நீக்கி, எரிபொருளின் விலை நீக்கப்படுமென …
-
- 0 replies
- 323 views
-
-
அநுரகுமாரவின் இந்திய விஜயம்; ஜே.வி.பியின் இந்திய விரோத கடந்த காலத்தை பொருட்படுத்தாத மோடி அரசு Veeragathy Thanabalasingham on March 1, 2024 Photo, X, @DrSJaishankar தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்கவும் அவரது மூன்று தோழர்களும் ஐந்து நாள் விஜயத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பியிருந்தார்கள். தங்களையும் கூட இந்திய அரசாங்கம் அழைத்துப் பேசவேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச கொழும்பில் உள்ள இந்திய தூதரகத்தை அணுகி வேண்டுகோள் விடுத்திருப்பதாக செய்திகள் வருகின்றன. அந்தளவுக்கு தேசிய மக்கள் சக்தி தலைவரின் இந்திய பயணம் அரசியல் அரங்கில் பெரும் பரபரப்புடன் கூடிய கவனத்தை ஈர்த்திருக்கிறது. இந்தியா வ…
-
- 0 replies
- 323 views
-
-
ராஜபக்ஷக்களின் 20ஆவது திருத்தத்தினூடான செய்தி புருஜோத்தமன் தங்கமயில் / 2020 செப்டெம்பர் 10 , பி.ப. 12:24 இலங்கை அரசமைப்பில் 18ஆவது திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டு இன்றோடு சரியாக 10 ஆண்டுகளும் இரண்டு நாள்களும் ஆகின்றன. 2005 ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்த ராஜபக்ஷக்கள் தங்களது அதிகார எல்லையை விஸ்தரிக்க ஆரம்பித்து அதன் அதியுச்ச எல்லையை செப்டெம்பர் 08, 2010இல் 18ஆவது திருத்தச் சட்டத்தை நிறைவேற்றியதன் மூலம் காலாகாலத்துக்குமாக இறுதி செய்ய நினைத்தார்கள். நாடாளுமன்றம் என்ற ஒன்றோ அதற்குள் எதி…
-
- 0 replies
- 322 views
-
-
தேர்தலின் பின்னர் யார்யாரோடு இணைவார்கள்? உள்ளூராட்சி தேர்தல் பிரசாரப்பணிகள் சூடுபிடிக்க ஆரம்பித்துவிட்டன. அரசியல் கட்சிகள், பிரசார வியூகங்களை அமைத்து வருவதுடன் வேட்பாளர்கள் தமது தொகுதியில் வெற்றியை உறுதிப்படுத்தும் நோக் கில் பல்வேறு வியூகங்களை முன்னெடுத்து வருகின்றனர். தேர்தல்கள் ஆணைக்குழு தேர்தலை நியாயமானமுறையில் நடத்துவதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது. தேர்தலை நியாயமான முறையில் நடத்துவது தொடர் பில் கடந்த புதன்கிழமை தேர்தல்கள் ஆணைக்குழுவின் பிரதிநிதிகளுக்கும் அரசியல் கட்சிகளின் செயலாளர்களுக்குமிடையிலான சந்திப்பொன்றும் நடைபெற்றது. அந்தவகையில் நாட்டு…
-
- 0 replies
- 322 views
-
-
முள்ளிவாய்க்கால் ஈழத்தமிழின அழிப்புக்கான நீதி இன்றைய உலக அமைதிக்கான தேவை 111 Views நேற்று, 08.05.2021 கிட்லரின் இன அழிப்பு ஆட்சிக்கு பிரித்தானியாவின் இணைவுடன் நேச நாடுகளின் படையணிகள் அன்றைய யேர்மனியைச் சரணடைய வைத்த, ஐரோப்பா மேலான வெற்றி நாள் (VE Day), 76ஆவது ஆண்டாக மேற்குலகில் கொண்டாடப்பட்டது. ஆயினும் யப்பானின் ஹிரோசிமா மேல் 1945 ஆகஸ்ட் 6ஆம் திகதியும், நாகசாக்கி மேல் ஆகஸ்ட் 9ஆம் திகதியும் அமெரிக்கா அணுக் குண்டுகளை வீசி, யப்பானை 14ஆம் திகதி சரணடைய வைத்ததை ஆகஸ்ட் 15 இல் யப்பான் மேலான வெற்றி நாளாக (VJ Day) மேற்குலகு கொண்டாடுகிறது. இரண்டு நாட்களிலும் இந்த யுத்தங்களில் பங்குபற்றிய போர் வீரர்களையும், உயிரிழந்த மக்களையும் போற்றி வணங்…
-
- 0 replies
- 322 views
-
-
நாடாளுமன்றத்தில் குப்பை விவாதம் வேண்டுமா? பொது எதிரணி என அழைக்கப்படும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையிலான நாடாளுமன்றக் குழுவின் பெயரளவிலான தலைவரும் மக்கள் ஐக்கிய முன்னணியின் தலைவருமான தினேஷ் குணவர்த்தன, கடந்த தமிழ், சிங்களப் புத்தாண்டு தினத்தில் மீதொடமுல்ல குப்பை மேடு சரிந்தமை தொடர்பாக, நாடாளுமன்ற விவாதம் ஒன்றைக் கேட்டு இருக்கிறார். அதற்கு இணங்குவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் கூறியிருக்கிறார். நாட்டில் முக்கியமான விடயங்கள் தொடர்பாகவும் அல்லது பாரதூரமான சம்பவங்கள் இடம்பெற்றாலும் அவற்றைப் பற்றி நாடாளுமன்றத்தில் விவாதிப்பதற்காக அவகாசம் கோருவது எதிர்க்கட்சிகளின் வழக்கமாகும். சில விவாதங்களின்போது, எதிர்…
-
- 0 replies
- 322 views
-
-
நல்லாட்சியும் பிரதான அபிவிருத்தித் திட்டங்களாக மாறும் சிங்களக் குடியேற்றங்களும் பௌத்த மதபரம்பலும் July 6, 2018 102 . Views . நுஜிதன் இலங்கையிலே ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டு வந்து ஒன்பது ஆண்டுகள் கடந்து விட்ட நிலையிலும் வடகிழக்கிலே வாழும் தமிழ் மக்களுக்குச் சொந்தமான ஆயிரக்கணக்கான ஏக்கர் தனியார் காணிகள் இன்னமும் இலங்கை இராணுவத்தினால் அபகரிக்கப்பட்டு ஆக்கிரமிக்கப்பட்ட நிலையே உள்ளது. இவ்விதமாகத் தமக்கென தனியார் காணிகளை அபகரிப்பதும் பல நூற்றுக்கணக்கான விவசாயிகள்,பொதுமக்கள் மற்றும் மீனவர்களின் பாரம்பரிய வாழ்வாதாரத்துக்கு உலைவைத்து அவர்களின் வாழ்வாதாரத்தை சீர்குலைத்து நிரக்கதிக்கு உள்ளாக்குவதும் இலங்கை அரசின் நடைமுடையாக இருந்து வருகிறது. அரசின் நல்ல…
-
- 0 replies
- 322 views
-
-
சுயநிர்ணய உரிமையும்-வைக்கல் பட்டடை மனிதர்களும் ச. வி. கிருபாகரன், பிரான்ஸ் அமெரிக்கா ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன் ஒரு முறை கூறியுள்ளதை எமது வார்த்தையில் இங்கு குறிப்பிட விரும்புகிறேன் – “எல்லா நேரங்களில் சிலரையும், சில நேரங்களில் எல்லாரையும் மடையர் ஆக்க முடியும். ஆனால் எல்லா நேரங்களில் எல்லாரையும் மடையர் ஆக்க முடியாது” இக்கூற்று, இன்றைய மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி)/தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், அவர்களது அங்கத்தவர்கள், விசேடமாக தமிழ் அங்கத்தவர்களிற்கு மிக அருமையாக பொருந்தும் கூற்று. காரணம், உண்மை, நடைமுறைச் சாத்தியங்கள், சரித்திரம் போன்றவற்றை அடிப்படையாக கொண்ட சில ஆய்வையும் ஆலோசனையையும் இங்கு முன்வைக்க விரும்புகிறேன். இலங்கையின் தற்போதைய ஜே.…
-
- 0 replies
- 322 views
-
-
மாகாண சபைகள் தேர்தல் திருத்தச் சட்டமூலம்: அரசாங்கம் கையிலெடுக்கும் இன்னுமொரு ஆயுதம் அரசமைப்பில் 20ஆவது திருத்தத்தை வெற்றிகரமாக மேற்கொள்வதில் கிட்டத்தட்ட தோல்வியைக் கண்டுள்ள அரசாங்கம், மாகாண சபைகள் தேர்தல் திருத்தச் சட்டமூலத்தை பெரும்பான்மைப் பலத்துடன் நிரூபித்திருக்கின்றது. இதனால் ‘விழுந்தும் மீசையில் மண் ஒட்டவில்லை’ என்ற நிலையில் அரசாங்கம் தனது கௌரவத்தைக் காப்பாற்றியிருக்கின்றது. ஆனால், சிறுபான்மை மக்களின் பிரதிநிதித்துவத்தைக் குறைப்பதற்கு இச்சட்டமூலம், ஓர் ஆயுதமாகப் பயன்படுத்தப்படுவதுடன், இதுவிடயத்தில் சிறுபான்மைக் கட்சிகள் மீண்டுமொரு தடவை நம்பவைக்கப்பட்டு, ஏமாற்றப்பட்டு இருப்பதாகவே உணர முடிகின்றது. இப…
-
- 0 replies
- 322 views
-
-
இலங்கை - ஒரு யுகத்தின் முடிவாகிப் போன 2020! - GTN December 19, 2020 விக்டர் ஐவன்… போதுமான அளவு கவனம் செலுத்தப்படாவிட்டாலும் இலங்கையில் 1948 இல் சுதந்திரத்துடன் ஆரம்பித்த யுகம் 2020 உடன் முடிவடைந்ததாகவே நான் கருதுகிறேன். நீண்ட கால காலனித்துவ ஆட்சியின் பின்னரான சுதந்திரத்தின் பின்னர் பிரித்தானியாவிடமிருந்து எங்களுக்கு வாரிசாகக் கிடைத்த அரசும் அதனுடன் தொடர்பான சமூக அரசியல் முறைமைகளும் முற்றாக வீழ்ச்சியடைந்து காலாவதியாகிப் போயுள்ளன என இதனைச் சுருக்கமாக எடுத்துச் சொல்லலாம். எமது எல்லைகள் எமக்குச் சுதந்திரம் தந்து விட்டுச் செல்லும் போது இலங்கைக்கு மரபுரிமையாகக் கிடைத்த முறைமைகளில் குறைபாடுகள் இருந்திருக்கலாம். இருந்தாலும் அதற்கு முன்னர் எம்மிடமிர…
-
- 0 replies
- 322 views
-
-
ஆழிப் பேரலை சுனாமியில் அழிந்த ‘ஆச்சே’ தேசத்தின் சுதந்திர கனவு !– ஐங்கரன் Digital News Team பல ஆண்டுகளாக ஆச்சே தேசம் விடுதலையை மூச்சாக கொண்டு இந்தோனேசியாவிற்கு எதிராக போராடி , ஆழிப் பேரலையின் பாரிய அழிவினால் சர்வதேச மத்தியஸ்த்துடன் சமாதானத்தை 2005 ஏற்றுக் கொண்டது. விடுதலை வேண்டி போராடி அழிந்த மற்றய இனங்களுக்கும் அச்சே மக்களின் போராட்டம் சான்று பகரும் உதாராணமாக அமைகிறது. ஆச்சே மக்கள் சுயநிர்ணய உரிமைக்காகவும் சுதேச அடையாளத்திற்காகவும் சுமார் 29 வருடங்கள் தொடர்ந்து போராடினர். தற்போது இந்தோனேசியாவின் ஆதிக்கத்தில் உள்ள ஆச்சே (Aceh) மாநிலத்தின் வடக்குப் பகுதியிலே சுமத்திரா தீவும் தெற்குப் பகுதியிலே இந்து சமுத்திரமும் அமையப்பெற்றுள்ளன. கொ…
-
- 0 replies
- 322 views
-