Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. "போர் முடிந்துவிட்டதாக இலங்கை அறிவித்த 5 நாள் கழித்து ஐக்கிய நாடுகள் சபையின் செயலர் நாயகம் பான் கீ மூன் வந்தார். அவரது வருகை ஓர் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. தமிழர்கள் நம்பிக்கையுடன் காத்திருந்தனர். ஹெலிகாப்டர் மூலம் பார்வையிட்ட அவர், போர்ப் பகுதிகளுக்குப் போகவேயில்லை. முள்வேலி முகாமுக்குப் போனவர், அங்கே 10, 15 நிமிடமே இருந்தார். முகாமைச் சுற்றிப் பார்க்கவும் இல்லை, மக்களிடம் பேசவுமில்லை. தாம் நேரில் பார்வையிட்டதாக சர்வதேசத்துக்குக் காட்டிக் கொள்ளவே அவர் வந்தார் என்பதும், அவர்கள் நமக்காக எதுவும் செய்யப் போவதில்லை என்பதும் தெளிவாகத் தெரிந்தது"......................... 2009 மே மாதம் பான் கீ மூன் நடத்திய நாடகத்தைப் பற்றிய சகோதரி வாணி குமாரின் நேரடி சாட்சியம் இது. 'அவ…

  2. போர்க்காலத்தில் வன்னியில் ஒரு லட்சத்து நாற்பதாயிரத்துக்கும் அதிகமானோர் காணாமற் போனதாக மன்னார் ஆயர் இராயப்பு யோசப் ஆண்டகை வெளியிட்ட ஆவணம் நவநீதம் பிள்ளையிடம் இருக்கிறது என்பதை கோதபாய ராஜபக்ச மறந்துவிடக் கூடாது. அநேகமான இதிகாச - புராண நாடகங்களிலும் திரைப்படங்களிலும் ஒரு காட்சி தவறாது இடம்பெறும். அங்கு அரசனாக வருபவர் முதல் காட்சியில் வரும்போது, பல அடைமொழிகளுடன் அவர் வரவேற்கப்படுவார். ராஜாதிராஜ ராஜமார்த்தாண்ட, வீராதிவீர வீரமார்த்தாண்ட, சூராதிசூர சூரமார்த்தாண்ட மாமன்னர் வருகிறார்..வருகிறார்..என்ற வாயிலோன் முழக்கமிட, மன்னர் அங்கு எழுந்தருளுவார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை அவர்களின் இலங்கைப் பயணமும் இவ்வாறுதான் அமைந்துள்ளது. இரண்டு வருடங்களுக்கு முன்னர் …

  3. தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம் உலகளாவிய ரீதியில் தெட்டத் தெளிவாக விளங்கிக்கொள்ளபட்டிருக்கின்ற நிலையிலும் இன்றுவரை தமிழ் மக்களின் விடுதலைக்கும் சுதந்திரத்திற்கும் உலக நாடுகள் உதவ முன்வராதது ஏன் என்பதை ஈழத் தமிழர்களின் பிரதிநிதிகள் புரிந்துகொள்ளவேண்டிய காலம் ஏற்பட்டிருக்கிறது. உலகெங்கும் விடுதலைக்காக ஏங்குகின்ற மக்கள் முன்னெடுக்கின்ற போராட்டங்களுக்கு பலம் பொருந்திய வல்லரசு நாடுகள் துணை நின்றன. நிற்கின்றன. ஆனால் தமிழ் மக்களின் தேசிய சுதந்திர விடுதலைப் போராட்டத்திற்கு இன்று வரை எந்தவொரு நாடும் ஆதரவு தரவில்லை. இதனால் சிறீலங்கா அரசாங்கமும் அதன் படைகளும் துணிந்து நின்று இலட்சக்கணக்கான தமிழ் மக்களைத் துடிக்கத் துடிக்கக் கொன்றுவிட்டு போராட்டத்தை அழித்திருக்கின்றன. இனியும் …

  4. “திருமதி. யோகலட்சுமி பொன்னம்பலம் அவர்களே, திரு. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களே, அவையில் கூடியிருக்கும் பெரியோர்களே, தாய்மார்களே, சகோதர, சகோதரிகளே, அனைவருக்கும் எனது இந்நேர வணக்கங்களை உரித்தாக்குவதில் மகிழ்வுறுகிறேன். மாமனிதர் குமார் பொன்னம்பலத்தின் நினைவுப் பேருரையை நிகழ்த்துமாறு எனக்கு அழைப்பு விடுத்த திரு. கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கும் ஞாபாகார்த்த குழுவினருக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன். ஆனால் ‘பாற்கடல் உற்று ஒரு பூசை முற்றவும் நக்கு புக்கென’ - பாற் கடலை நக்கி உண்ணலாம் என நினைத்த பூனையினது செய்கையைப் போன்றது இராமாயணத்தை எழுத நான் விரும்பியது - எனக் கம்பன் அவையடக்கமாகக் கூறியமை எனது சிந்தனையில் மேலோங்கி நிற்கின்றது. மாமனிதர் குமார் பொன்னம்பல…

  5. தமிழீழ விடுதலைப் பாதையில் தமிழ்நாடு? – நிராஜ் டேவிட். ஸ்ரீலங்காவுடன் ஒப்பந்தத்தைச் செய்துவிட்டு, தமிழர்களுக்கு எதிராக ஒரு கொடிய யுத்தத்தை இந்தியா தொடங்கியிருந்த காலம் அது. ================================================ தமிழ் நாட்டின் அதிகாரம் ஒரு உண்மைத் தமிழனின் கரங்களில் இருந்திருக்குமேயானால், ஈழத்தமிழரின் விடுதலைப் போராட்டம் வேறு ஒரு பரிணாமத்தை நிச்சயம் பெற்றிருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. ================================================ ஆதித் தமிழ்க் குடியே!! ஆண்ட பரம்பரையே!!! நீதி நெறி வகுத்து நெடியாட்ச்சி செய்துவிட்டு சாதி வகுத்த சாண்டாளராற் சரிந்து பாதியாகிவிட்ட பைந்தமிழீர்!! உங்களுக்குச் சூடு.. சொரணை… சொந்த ஒரு மூளை சிறிதும் உண்டோ?…

  6. மிகுந்த ஆர்ப்பாட்டத்துடன் தேர்தல் பிரச்சார ரதம் புறப்படத் தொடங்கிவிட்டது. தமிழர் பிரச்சனைகளுக்கு மாகாண சபைகள் தீர்வல்ல என்ற கூட்டமைப்பு அணியினரும் ரத பவனியில் தங்களை இணைத்து மக்கள் முன்னால் வரத்தொடங்கி விட்டனர். முதன்மை வேட்பாளர் பிரச்சனைகளும், அவரின் முன், பின்புலங்கள் தொடர்பான அலசல்களும் ஓரளவு குறைவடைந்து, மக்கள் மத்தியில் இருந்த எதிர்வினை அதிர்வுகள் மெல்ல மெல்ல அகன்று வருகின்றன. எப்படியும் தேர்தல் தினத்துக்கிடையில் அந்த அதிர்வுகள் இல்லாமல் போய்விடும். அவ்வளவு உக்கிரமான வகையில் பிரச்சாரங்கள் இனி அமையும். இதற்குக் கட்டியம் கூறும் வகையில் சம்மந்தரும் சுமந்திரனும் இணைந்து மேற்கொண்ட வெளிநாட்டு பயணத்தில் சில அறிக்கைளை மென்மையாக கசிய விட்டுள்ளனர். அதில் புலம்பெயர் தமி…

  7. சிங்கள மக்கள் மத்தியில் அதிகம் பிழையாகப் புரிந்துகொள்ளப்பட்ட ஒரு வார்த்தை சமஷ்டி எனலாம். அதுபோலவே தமிழர்கள் மத்தியில் சரியாகப் புரிந்துகொள்ளப்படாத ஒரு வார்த்தை தேசியம் எனலாம். ஈழத் தமிழர்கள் மத்தியில் இரண்டு கட்சிகளின் பெயர்களில் தேசியம் என்ற வார்த்தை உண்டு. இப்பொழுது மாகாண சபைத் தேர்தலுக்கான பிரசாரத்தின் போதும் தேசியம் என்ற வார்த்தை அடிக்கடி பிரயோகிக்கப்படுகின்றது. இதில் கூட்டமைப்பில் உள்ள தீவிரமானவர்கள் போலத் தோன்றுபவர்களும் தேசியம் பற்றிக் கதைக்கிறார்கள். மிதமானவர்கள் போலத் தோன்றுபவர்களும் தேசியம் கதைக்கின்றார்கள்.குறிப்பாக இணையத் தளப் பிரசாரங்களில் ''தேசியம் வெல்ல வாக்களிப்போம்' என்றெல்லாம் சுலோகங்கள் வருகின்றன. சில மாதங்களிற்கு முன்பு எஸ்.ஜே.வி. செல்வநாயகத்தின் நினை…

  8. இந்திய அமெரிக்க உறவும் சீன மிரட்டலும் இலங்கை மீதான பூரண ஆதிக்கத்துக்கான போட்டி யாருக்கிடையிலானது? இன்று தென்னாசியாவின் மீது பூரண ஆதிக்கம் செலுத்துவது யார் என்ற போட்டி வலுப்படுகிறது. அதில் பூகோள மற்றும் மூலோபாய ரீதயில் இலங்கை மீதான ப+ரண ஆதிக்கத்துக்கான போட்டி முக்கிய இடத்தில் உள்ளது. இப் பின்னணியில் ஒருபுறம் சீன மிரட்டல் பற்றிய எச்சரிக்கைகள் விடப்படுகிறன. மறுபுறம் அமெரிக்காவைத் தமிழருக்காகப் பயன்படுத்துவது பற்றியும் இந்தியாவை நம்ப வேண்டியதன் அவசியம் பற்றியும் பேசப்படுகிறது. இன்று, இலங்கை மீதான பூரண கட்டுப்பாட்டுக்கான போட்டி அடிப்படையில் இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலானதே. சீன மிரட்டல் அதற்கு வசதியாகப் பாவிக்கப்படுகிறது. தமிழ்ப் பத்திரிகைகளில் அரசியல் கட்டுர…

    • 0 replies
    • 1.9k views
  9. இலங்கை சிறைகளும் தமிழ் அரசியல் கைதிகளும் பல வருடங்களாக எந்த நீதி விசாரணைகளுமின்றி அடைத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை, பேரினவாத அரசும், தமிழ் தேசியமும் கண்டுகொள்வது கிடையாது. இன்று குறைந்தபட்சம் 17 சிறைகளில், 954 பேர் தடுத்து வைக்கப்பட்டு இருக்கின்றனர். இதில் 40 பேர் மட்டுமே தண்டனை பெற்றவர்கள். மிகுதி அனைவரும் நீண்ட பல வருடமாக விசாரணைகள் எதுவுமின்றி அடைத்து வைக்கப்பட்டிருக்கின்றனர். இனப்பிரச்சனைக்கான தீர்வு போல் தான், கைதிகள் விவகாரமும். பேரினவாத அரச நிர்வாகத்தின் கீழ் சட்டவிரோதமாக சிறைகளில் அடைத்து வைத்திருக்கும் அதே நேரம், இவர்களை தீண்டத்தகாதவராகவே தமிழ் தேசியம் அணுகுகின்றது. தமிழ் கைதிகள் தமிழ் தேசிய பிழைப்புவாத அரசியலுக்கு பயன்படாதவர்களாகிவிட்…

    • 0 replies
    • 543 views
  10. இலங்கை இந்திய வம்சாவளி மலையக மக்கள் : ஒரு மீளாய்வு - மல்லியப்பு சந்தி திலகர் தோட்டத் தொழிலாளர்களாக இந்தியாவிலிருந்து இலங்கைக்கு அழைத்துவரப்பட்ட இந்திய வம்சாவளி மலையக மக்கள் தமது சமூக நிலைமாற்றத்தளத்தை மீளாய்வு செய்து தம்மை புதுப்பித்துக் கொள்ள வேண்டிய காலகட்டம் இப்போது ஏற்பட்டுள்ளது. இதற்கான கலந்துரையாடல்களை இந்திய வம்சாவளி மலையகத் தமிழர்கள் ஆரம்பித்தல் வேண்டும். இலங்கை வாழ் இந்திய வம்சாவளி மக்கள் பலத்த போராட்டங்கள் விட்டுக்கொடுப்புகள் இழப்புகளுக்கு மத்தியில் தம்மை ‘மலையக மக்கள்’ எனும் பொது அங்கீகாரத்துக்குள் கொண்டு வந்துள்ளனர். இலங்கைத்தமிழர்கள் தமது பேராட்ட வியாபகத்தின் ஊடாக சர்தேச ரீதியாக தம்மை இலங்கைத் தமிழர்களாக உறுதிபட வெளிக்கொணர்ந்திருக்கும் நில…

  11. எதிரியின் கையில் இருக்கும் ஆயுதங்களை விட, ஆதரவாளர்களின் மௌனம் தான் கொடுமையானது - என்கிற மார்டின் லூதர் கிங்கின் வார்த்தைகளை, உலகின் எந்த மூலையில் எவர் நினைவில் வைத்திருக்கிறார்களோ இல்லையோ, ஒட்டுமொத்தத் தமிழகமும் நினைவில் வைத்திருக்க வேண்டும். ஈடு இணையற்ற அந்தக் கறுப்பினத் தலைவன், நமக்கே நமக்காகச் சொன்னதைப் போலவே இருக்கிறது அந்த வார்த்தைகள். அமைதிப்படை என்கிற பெயரில் தமிழ் ஈழ மண்ணில் தரையிறங்கிய ராஜீவின் படைகள், விடுதலைப் புலிகளை அழிக்கும் பணியையும், நிராயுதபாணிகளான அப்பாவித் தமிழர்களை நசுக்கும் பணியையும் ஈவிரக்கமின்றி மேற்கொண்டபோது, 26வது மைலில் மைல்கல் போன்று அசைவே இல்லாமல் கிடந்தது யார்? 2008 - 2009ல், ஈழத்தில் ஒரு திட்டமிட்ட இனப்படுகொலை நடந்த சமயத்தில், 26வது மைலில்…

    • 1 reply
    • 941 views
  12. லெனின் இறக்கவில்லை நம்முடன் வாழ்கிறார் 1924-ஆம் ஆண்டு ஜனவரி 27-ம் நாள் மாலை நேரம். அமெரிக்காவின் பெரிய நகரங்களில் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்து வீதிகளில் ஊர்வலமாக வருகின்றனர். அவர்களின் கையில் சிவப்பு நிறக் கொடி ஒரு மனிதரின் உருவப்படத்தையும் சுமந்தபடி சோகமாக செல்கின்றனர். லண்டன் மாநகரில் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் செய்கின்றனர். பிரான்சிலும், ஜெர்மனியிலும் கூடி இது போன்ற ஊர்வலங்கள் நடக்கின்றன. அந்த தொழிலாளர்கள் கண்ணீர் சிந்துகின்றனர். இந்தியாவிலும் சீனாவிலும் கூட சில இடங்களில் இந்தக் காட்சிகள் நடக்கின்றன. அந்த 1924-ஆம் ஆண்டு ஜனவரி 27-ம் நாள், உலகம் முழுவதும் உள்ள உழைக்கும் மக்கள் கண்ணீர் சிந்திய நாள். அவர்கள் அனைவரின் கவனமும் சோவியத் ரசியாவை நோக்கி இருந்தது. ச…

    • 4 replies
    • 650 views
  13. ஸ்நோவ்டென் வேட்டை - 6 மொஸ்கோவின் ஸெரமெட்டியோவோ விமான நிலையத்தில் தொடர்ச்சியாக ஒலித்துக் கொண்டிருந்த ரஷ்யக் காவற்துறையினரின் அபாயச்சங்கொலி ஒருவாறாக நின்றுள்ளது. கிட்டத்தட்ட ஆறு கிழமைகளின் பின்னர் கடந்த வியாழக்கிழமை (01.08.2013) அமெரிக்காவின் கோரிக்கைளையும் கெஞ்சல்களையும் நிராகரித்து ஸ்நோவ்டென்னிற்கு ரஷ்யா தற்காலிகத் தஞ்சத்தினை ஒரு வருடத்திற்கு வழங்கி உள்ளது. விமான நிலையக் கட்டடத்தை விட்டு வெளியேறிய ஸ்நோவ்டென்னை விபரங்கள் எதுவும் தெரிவிக்கப்படாத இடத்திற்கு ரஷ்ய அரசு கொண்டு சென்றுள்ளது. விமான நிலையச் சரித்திரம் முடிவடைந்தாலும் வெளியே சென்ற ஸ்நோவ்டென் சரித்திரம் இன்னமும் அதிகமாகத் தொடர்கின்றது. அமெரிக்கக் கொங்கிரஸ் சபை உறுப்பினர்கள் ஸ்நோவ்டென்னிற்குத் தஞ்சம் வழங்கியதால் வரு…

  14. ஒன்று பட்ட இலங்கைக்குள் தீர்வு என தமிழர்கள் மீது இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் 13வது சட்டத் திருத்தத்தினை திணிக்கும் இந்திய அரசின் சதியை முறியடிப்போம். ஒன்று திரள்வோம். 13வது சட்டத்திருத்தம் இலங்கையின் இறையாண்மையை காக்கும் தீர்மானமே. இனியொருவரதராஜப்பெருமாளை தமிழீழம் ஏற்காது எனச் சொல்வோம். இந்திய இலங்கை ஒப்பந்தம் ஊடாக தமிழர்களை சிங்களத்தின் அடிமையாக மாற்றத் துடித்த சதியை தமிழீழ விடுதலைப் போராளிகள் தங்கள் இன்னுயிரைக் கொடுத்து வென்றார்கள். மாவீரன் திலீபன் தியாகம் செய்து அம்பலப்படுத்திய இந்தியச் சதியை மீண்டும் நிறைவேற்ற இந்தியா துடிக்கிறது. இந்த துரோகத்தினை இனிமேலும் பார்க்க முடியுமா?. அன்று அவர்கள் சொல்லிய சென்ற சமரசமற்ற அரசியல் புரிதலோடு போராட்டத்தினை தமிழகத்தில் முன்னெடு…

  15. வெலிவேரியா! சிங்களவர்கள் மேற்கொண்ட தமிழின அழிப்பை வெளிப்படுத்தியதில் முன்னணிக் கிராமமாக மாறியிருக்கின்றது. சிறீலங்காவின் மிக முக்கியமான பேசு பொருளாகவும் இந்தக் கிராமம் மாறியிருக்கின்றது. இந்தக் கிராமத்தை உலகத்தின் பார்வைக்கு கொண்டு செல்வதற்கு சிங்களக் கட்சிகள் கடும் பிரயத்தனங்களில் ஈடுபட்டு வருகின்றன. ஆட்சிக் கட்டிலில் அமரத் துடித்து நீண்ட நாட்களாக எந்தவொரு இரையும் கிடைக்காத எதிராக்கட்சிகளுக்கு வெலிவேரியா ஒரு முக்கியமான இரையாகக் கிடைத்திருக்கின்றது. இனிச் சிறிது காலத்திற்கு இதனையே வைத்து அரசியல் நடத்த முடியும். எதிக்கட்சிகள் என்பவை திறமையாக இருக்கின்ற ஒரு நாட்டில்தான் நேர்சீரான ஆட்சி நடைபெறும். அதுவும் ஜனநாயக நாடொன்றில் எதிர்க்கட்சிகள் தான் ஆட்சியை நகர்த்திச் செல்கின்…

    • 2 replies
    • 695 views
  16. இந்திய சுதந்திரம்: ஜனநாயகத்தின் படுதோல்வி! இந்திய நாடு விடுதலை அடைந்து 67 ஆம் ஆண்டில் நுழைந்துள்ளது. உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு என்று தன்னைத்தானே புகழ்ந்துகொள்ளும் ஒரு தேசம், ‘சாரே ஜகான்சே அச்சா ஹிந்துஸ்தான் ஹமாரா’ (உலகின் எல்லா நாடுகளிலும் உயர்ந்தது எங்கள் இந்துஸ்தான்) என்று தனக்குத்தானே பெருமிதம் கொள்ளும் ஒரு நாடு – உலகநாடுகளின் மத்தியில் இன்று என்ன நிலையில் இருக்கிறது என்று பார்த்தால் கண்ணீரும் பெருமூச்சும்தான் பதிலாகக் கிடைக்கும். கேடுகெட்ட நிலையில் இந்திய நாடு அடிப்படை சுகாதாரம், அடிப்படைக் கல்வி, கழிப்பிட வசதி, குழந்தைகள் எடை, சிசு மரணம், வாழ்நாள் என எல்லா அளவீடுகளிலும் உலகிலேயே மிகவும் கேடுகெட்ட நிலையில் இருக்கிறது இந்தியா. உலகிலேயே மிகமோசமான நிலையில் மக்…

  17. யாழில் சிறீலங்காப் படையினரால் வளங்கள் திட்டமிட்டு அழிக்கப்படுவது தொடர்பாக இப்பகுதியில் பல தடவைகள் வெளியாகியிருந்தன. கடந்தவாரமும் இப்பகுதியில் சிறீலங்காப் படையினரின் ஏற்பாட்டில் வலி வடக்கில் சட்டவிரோத சுண்ணாம்புக்கல் அகழ்வது தொடர்பிலான தகவல்களைத் தந்திருந்தோம். இந்நிலையில் யாழ்குடாவுக்கே தனித்துவம் மிக்க பனை வளமும் சிறீலங்கா படையினரின் பாராமுகத்துடன் தொடர்ந்து அழிக்கப்படுவதாக பனை அபிவிருத்திச் சபையினர் குற்றம் சாட்டியுள்ளனர். சட்டவிரோதமான முறையில் பனை மரங்கள் தறிக்கப்படுவதற்கு எதிராக சிறீலங்கா காவல்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை என பனை அபிவிருத்திச் சபையினர் கவலை வெளியிட்டுள்ளனர். நாடளாவிய ரீதியில் பனை மரங்கள் சட்டவிரோதமான முறையில் அழிக்கப்படுவது தொடர்பில் க…

  18. ‘முதலில் அவர்கள் கொம்யூனிஷ்டுகளைத் தேடி வந்தார்கள், நான் எதிர்த்துக் கேட்கவில்லை, ஏனெனில் நான் கொம்யூனிஷ்ட் இல்லை. பின், அவர்கள் சோசலிஷ்டுகளைத் தேடி வந்தார்கள், நான் எதிர்த்துக் கேட்கவில்லை, ஏனெனில் நான் சோசலிஷ்ட் இல்லை. பின், அவர்கள் தொழிற்சங்கவாதிகளைத் தேடி வந்தார்கள், நான் எதிர்த்துக் கேட்கவில்லை, ஏனெனில் நான் தொழிற்சங்கவாதியில்லை. பின், அவர்கள் யூதர்களைத் தேடி வந்தார்கள், நான் எதிர்த்துக் கேட்கவில்லை, ஏனெனில் நான் யூதனில்லை. பின், அவர்கள் கத்தோலிக்கர்களைத் தேடி வந்தார்கள், நான் எதிர்த்துக் கேட்கவில்லை, ஏனெனில் நான் கத்தோலிக்கனில்லை. பின், அவர்கள் என்னைத் தேடி வந்தார்கள், அங்கே எனக்காகப் பேசுவதற்கு யாரும் இருக்கவில்லை.’ நாசிக்களின் படுகொலை…

  19. மீண்டும் கலர் கலராய் தோரணங்கள் வடக்கு வீதியில் சின்ன மேளம் கிழக்கே மேளச் சமா தெற்கே காவடி மேற்கே கச்சான் கடைகளென தேர்தல் திருவிழா அரிதாரம் பூசியவர்களின் அணிவகுப்பு வானத்தை வில்லாய் வளைப்பவர்களாகவும் விடுதலையை வென்று தருபவராகவும் சிலர் ஒருபடி மேலே போய் தாயகத்தை தோண்டி பெருவாழ்வு பெற்றுத் தருவதாகவும் ஆளுக்கொரு மூடையுடன் அவர்கள் மூடைகளின் அளவுகளில் வேறுபாடிருந்தாலும் எல்லாம் புளுகுமூடைகள்தான் தொடுத்த வில்லிற்கும் கொடுத்த விலைக்கும் ஈடுதான் என்ன மாகாண சபைதானா ஆளுனர் தலையசைத்தால்தான் மூத்திரமே பெய்யலாம் கோவணம் இறுக்குவதற்கும் கொழும்பில்தான் அனுமதியாம் போக்கறுந்த சபைக்கு பொலீஸ் அதிகாரமும் இல்லை கந்தறுந்த ஆட்சியால் காணியும் இல்லை நீதிமான் சொல்கிறார் மாகாண சபை மூன்ற…

  20. ஐ.நா மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை அடுத்த வார இறுதியில் இலங்கைக்குப் பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளார். எதிர்வரும் 25ம் திகதி தொடக்கம், 31ம் திகதி வரையில் ஒரு வாரகாலம் இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளதாக ஐ,நா தகவல்கள் வெளிவந்தபோதும், தனது பயணத்தை அவர் முற்கூட்டியே மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளதாகவும் இவ்வார இறுதியில் அவர் இலங்கை வரவுள்ளதாகவும் கொழும்பில் இருந்து வெளியாகும் சிறீலங்கா அரச சார்பு ஆங்கில வார இதழான ‘சண்டே ஒப்சேவர்’ தெரிவித்திருக்கின்றது. எனினும், இந்த வார இறுதியில் அவர் இலங்கை செல்வது தொடர்பாக ஐ.நா தரப்பில் இருந்து எந்தத் தகவலும் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதேவேளை, இலங்கை செல்லும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை …

  21. தமிழ்நாட்டில் மட்டுமே சுமார் 750 லட்சம் தமிழர்கள் இருக்கிறோம். இதுமட்டுமின்றி, இலங்கையில் நாம் பூர்வ குடியினர். 35 லட்சத்துக்கு மேல் இருக்கும் அங்குள்ள தமிழரின் எண்ணிக்கை. இதுபோதாதென்று இந்தியாவெங்கும், உலகமெங்கும் சிதறிக் கிடக்கிறோம். ஆகப் பெரிய எண்ணிக்கை இது. அப்படியிருந்தும், ருவாண்டா என்கிற குட்டி நாட்டில் நடந்த இனப்படுகொலைக்குக் கிடைத்த நீதி, ஈழத்தில் நடந்த தமிழினப் படுகொலைக்காக இன்னும் கிடைத்த பாடில்லை. இதற்குக் காரணம் 3 பேர். இந்த மூவரில் முதலிடத்தில் இருப்பது யார் என்பதைப் பிறகு சொல்கிறேன். இரண்டாமிடத்தில் இருப்பது - இந்தியா. மூன்றாமிடத்தில் இருப்பது, சர்வதேசம் மற்றும் சர்வதேச அமைப்புகள். நடப்பது இனப்படுகொலை என்பதைச் சில நாடுகள் காலதாமதமாகத் தான் தெரிந்துகொண்டன…

  22. உப்புப் போட்டு கஞ்சி குடிக்கிற , உணர்வுள்ளவர்கள் ! ஊழலுக்கே திரண்ட லட்சக்கணக்கான கேரளா மக்கள் ,,,,, இவர்கள் இனத்தை அழிக்க முற்பட்டிருந்தால் சிங்களவன் என்னும் இனமே இல்லாமல் ஆக்கி இருப்பார்கள் ,,,,, கூடங்குளத்தை அங்கு ஒரு வேலை நிறுவி இருந்தால் கூடங்குளம் ஏதாவது குளத்தில் மிதந்து கொண்டுஇருந்திருக்கும் ,,,,,, உனக்கு கொஞ்சமாவது சுரணை இருக்குதா தமிழா ,,,, உன் இனமே அழிந்த பிறகு கூட ,,,, இந்திய பிரதமர் தமிழ்நாட்டிற்குள் வரமுடிகிறது ,,,,, இனியாவது விழிப்போம் அருகிலிருந்து கற்றுகொள்வோம் போராடும் குணத்தை ,,,,,,, உங்களை போராட வரவைப்பதற்கு கெஞ்சுவதே வெட்கமாக இருக்கிறது ,,,,,, Kerala people Siege Kerala assembly ,,,,,, Salute to the Rebells ,,,,,, Historical Siege of 1 lakh people…

  23. லிங்கேஸ்வரன் விஸ்வா இராஜதந்திர உறவின் விரிவாக்கம் என்ற போர்வையில் ஆபிரிக்காவில் புலிகளைத் தேடும் சிறிலங்கா!! அலசுகின்றது ஈழதேசம்!!! சோழியன் குடும்பி சும்மா ஆடாது என்ற முதுமொழியை மெய்பிப்பதாக ஆபிரிக்க தேசத்தின் மீது சிறிலங்காவிற்கு ஏற்பட்டுள்ள தீடிர் பாசம் அமைந்துள்ளது. அரசியல் ரீதியாகவோ பொருளாதார ரீதியாகவோ சொல்லிக் கொள்ளும்படியான ஆதாயங்கள் ஏதுமற்ற நிலையில் ஆபிரிக்க தேசத்தின் மீது சிறிலங்கா கவனம் செலுத்தியுள்ளமை புலிகளை தேடியே என்பதை அறிய முடிகின்றது. சிறிலங்கா அதிபர் ராஜபக்சே முதற்கொண்டு அறிவிக்கப்படாத சிறிலங்காவின் அதிபரான கோத்தபாய ராஜபக்சே வரை பயணங்களை மேற்கொண்டு உறவை புதுப்பிப்பதற்கு வலுவான காரணமாக மறைவாகியுள்ள புலிகளின் முக்கிய தலைவர்களைத் தேடியே என்பத…

  24. Parani Krishnarajani அம்பாறை வீரமுனையில் முஸ்லிம் காடையர்கள் சிங்கள இராணுவத்தின் துணையுடன் நூற்றுக்கணக்கான தமிழர்களை உயிருடன் வெட்டியும் எரித்தும் படுகொலை செய்த நினைவு நாள் இன்று. கீழே முஸ்லிம்கள் தமிழர்களை சிங்களத்துடன் சேர்ந்து இன அழிப்பு செய்த ஒரு தொகுதி பட்டியல் உள்ளது. தவறு இருபக்கமும் நிகழ்நதன. புலிகiளினதை மட்டும் முன்னிறுத்தி செய்யும் விவாதம் கண்டிக்கத்தக்கது. தற்போது முஸ்லிம்கனை குத்திக்காட்ட இதை பதிவு செய்யவில்லை. அடுத்த இன அழிப்பு இலக்கு தாம்தான் என்பதை உணராமல் சிங்களத்துடன் துணைக்கு நின்றதன் விளைவை இன்று முஸ்லிம்கள் அனுபவித்து வருகிறார்கள். தூர நோக்கற்ற பார்வையும் முஸ்லிம் அரசியல்வாதிகளின் குறுகிய பார்வைகளுமே இதற்கு காரணம். இருபக்க பகையை மறந்து ம…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.