Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. இலங்கை தமிழர் பிரச்சினை தமிழகத்தில் "உணர்ச்சி பிழம்பாக" மாறியிருக்கிறது. விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் கொல்லப்பட்ட காட்சிகள் வெளியாக, தமிழகத்தில் உள்ள கட்சிகள் எல்லாமே போராட்டக் களத்தில் வந்து நிற்கின்றன. தமிழக முதல்வர் ஜெயலலிதா, "இது மனிதாபிமானமற்ற செயல்" என்று பாதயாத்திரையில் வைகோவை சந்தித்த மறுநாளே பரபரப்பு பேட்டி கொடுத்தார். இந்த பேட்டி அ.தி.மு.க.வின் பக்கமாகபோக நினைக்கும் கட்சிகள் மனதில் உற்சாகத்தை ஏற்படுத்தியது. "கருணாநிதி நாடகமாடுகிறார். இலங்கை தமிழர் பிரச்சினையில் முதல்வர் உண்மையாகவே போராடுகிறார்" என்று வைகோவே ஒரு வார இதழுக்கு பேட்டி கொடுத்தார். "காங்கிரஸ் எதிர்ப்பு" என்ற களத்தை உருவாக்கும் தீவிர முயற்சியில் ஈடுபட்டிருக்கும் ஆளும் அ.தி.மு…

    • 0 replies
    • 1.1k views
  2. Started by akootha,

    பிரிட்டிஷ் வரலாற்றிலேயே நடந்த மிக மோசமான சம்பவம் இதுதான். இதைப்பற்றி அப்போதே வின்ஸ்டன் சர்ச்சில் மிகச்சரியாக ‘அசுரத்தனமான செயல்’ என்று கண்டித்திருந்தார். இங்கே நடந்ததை நாம் எப்போதும் மறக்கக்கூடாது. அமைதிப் போராட்டங்களுக்கான உரிமையை பிரிட்டன் எப்போதும் காக்கக்கூடிய நிலைக்கு நாமெல்லாம் உறுதி ஏற்க வேண்டும். - ஜாலியன் வாலாபாக் நினைவிடத்தில் வைக்கப்பட்டிருக்கும் வருகையாளர் பதிவேட்டில் இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரான், பிப். 20, 2013 அன்று எழுதியது... “அமிர்தசரஸ் நகரம் அன்று இருந்த நிலையை உணர்ந்த பலர் நான் செய்தது சரியென்று சொல்கிறார்கள். நிறைய பேர் நான் மாபெரும் தவறு இழைத்து விட்டதாகவும் கூறுகிறார்கள். நான் இப்போது சாக விரும்புகிறேன். மேலுலகம் சென்று என்னை படைத…

  3. பல்வேறு தளங்களிலும் பல்வேறு முனைப்புக்களும் எதிர்பார்ப்புக்களும் நிலவி வரும் ஒரு பரபரப்பான சூழ்நிலையில், ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடர் ஜெனிவாவில் ஆரம்பமாகியுள்ளது. அதில் இலங்கையில் போரின் இறுதிக்கட்டத்தில் இலங்கைப் படையினரால் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாகவும், இலங்கையில் நீதித்துறை, ஊடகத்துறை என்பவற்றின் மீதான அச்சுறுத்தல் தொடர்பாகவும், பிரதான கவனம் செலுத்தப்படும் எனக் கருதப்படுகிறது. அதன் காரணமாக, அக்கூட்டத்தொடரிலும் அடுத்த காலப்பகுதியிலும் இலங்கை பெரும் நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்க வேண்டிய இக்கட்டான நிலை தோன்றக் கூடும். ஏற்கனவே கடந்த கூட்டத்தொடரில் கற்றுக் கொண்ட பாடங்கள் மற்று…

    • 0 replies
    • 586 views
  4. முற்றுகை நிலம் 1 மக்கள் ஓடத் தொடங்கியிருந்தார்கள். அவர்களை விடவும் போரின் கால்களுக்கு வலு அதிகம். அது உசைன் போல்ட்டை விடவும் வேகத்தோடு பின்னாலேயே துரத்திக் கொண்டு வந்தது. அதன் நாக்குகளில் இரை கவ்வும் ஆர்வம், வீணீராய் நிலமெங்கும் வழிந்துகொண்டிருந்தது. எங்கும் கந்தகத்தின் நெடி. மூச்செடுக்கும் ஒவ்வொரு கணத்திலும் கந்தகக் காற்று சுவாசப் பையை முத்தமிட்டு வெளியேறிக் கொண்டிருந்தது. வெடிச்சத்தம் கேட்டவுடன், என்ன செய்கிறோம்? ஏது செய்கிறோம்? என்ற யோசிப்புகளுக்கு கால்களும் கைகளும் இடங்கொடுப்பதில்லை. கால்கள் ஓடுவதற்கு பழக்கப்பட்டுப் போனவை. எது தேவை? என்றறிந்து கைகள் தம்பாட்டுக்கு உரப் பைக்குள் பொருள்களை அடைந்துகொள்ளும். இலக்கேதுமின்றி ஓட்டம் தொடரும். பாதுகாப்பான இடம் என்று …

    • 0 replies
    • 784 views
  5. ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை அமெரிக்கா இன்னும் சில தினங்களில் சமர்ப்பிக்கவுள்ள நிலையில் அத்தீர்மானம் தொடர்பான நிலைப்பாட்டை பகிரங்கப்படுத்துவதில் இந்தியா மௌனம் சாதித்து வருகின்றது. 2012 மார்ச்சில் அமெரிக்காவின் அனுசரணையுடன் இலங்கை தொடர்பாக சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்களில் இன்னமும் நிறைவேற்றப்படாததை செய்து முடிக்குமாறு முன் தள்ளிவிடுவதற்கான தீர்மானமாகவே உத்தேச தீர்மானமும் அமையுமெனவும் அதற்கு அப்பால் வேறு எதுவும் இருக்காது என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஆயினும் கடந்த வருடம் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தைப் போன்று இது அமையாது என்றும் யுத்தத்துக்குப் பின்னரான நல்லிணக்கம், சட்ட ஆட்சி மற்றும் ச…

    • 0 replies
    • 758 views
  6. அரசியல் தர்க்கபூர்வ விதி ஈழத்திற்கான வழியைத் திறந்துவிட்டுள்ளது தத்தர் தமிழகத்தை முள்ளிவாய்க்கால் பெருநெருப்பு பெரிதும் கொதிநிலையடையச் செய்துள்ளது. உலகப் பெரு வல்லரசுகளுக்கும் பிராந்திய வல்லரசுகளுக்கும் இடையேயான முரண்பாடுகளினால் அவை ஒன்றுடன் ஒன்று உரசுண்டு அல்லது மோதுண்டு ஏற்படுத்தும் தீப்பொறிகள் அவ்வப்போது தமிழக அரசியலைப் பற்றி எரிய வைக்கின்றன. இராஜபட்சேக்கள் முள்ளிவாய்க்கால் பெருநெருப்பில் குளிர்காய்ந்து பெருவெற்றி ஈட்டியுள்ளார்களே ஆயினும் அந்தப் பெருவெற்றியின் பாதையில் அவர்கள் தமது பாதையில் தோல்விக்கான குழிகளைத் தோண்டவும் அதற்கான விதைகளை விதைக்கவும் தவறவில்லை. எனவே அவர்கள் உருவாக்கிய வெற்றிப் பாதையில் தோல்விக்கான குழிகளைத் தோண்டத் தவறவில்லை. இதனை அரசியல் வர…

  7. மகிந்த - அலோக் ஜோசி சந்திப்பின் பின்னணியில் மீண்டும் 'றோ' பற்றிய சர்ச்சைகள் யதீந்திரா இந்திய வெளியக உளவுத்துறையான ஆய்வு மற்றும் பகுப்பாய்வுகளுக்கான அமைப்பின் (Research and Analysis Wing (RAW or R&AW)) இயக்குனர் அலோக் ஜோசி (Alok Joshi) சில தினங்களுக்கு முன்னர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சந்தித்திருந்தார். இதனை இந்து பத்திரிகை உறுதிப்படுத்தியிருந்தது. மகிந்த ராஜபக்ச, ஆலய வழிப்பாட்டுக்காக இருநாள் விஜயமொன்றை மேற்கொண்டு, இந்தியாவிற்கு சென்றிருந்த வேளையிலேயே மேற்படி சந்திப்பு இடம்பெற்றுள்ளது. கடந்த வருடமும் மகிந்த ராஜபக்ச இதுபோன்றதொரு ஆலயதரிசன விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார். அதன்போது, இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் உட்பட பலரையும் அவரால் சந்திக்க முடிந்திருந்தது. ஆனால் …

    • 2 replies
    • 794 views
  8. தேசிய அடையாளமின்றி அரசியல் விபரீதங்களை சந்திக்கும் “இந்தியத் தமிழர்கள்” - மு.சிவலிங்கம் இந்திய வம்சாவளித் தமிழ் மக்களின் 2011 ம் ஆண்டு குடிசனத் தொகை மதிப்பீடு பற்றி விமர்சிக்கப்பட்ட இரண்டு ஆய்வு கட்டுரைகளை கடந்த சில வாரங்களில் வெளியான தேசிய பத்திரிக்கைகளில் வாசிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. அவை பற்றிய எனது கருத்துக்கள் சிலவற்றைப் பகிர்ந்து கொள்வதற்கு இக் கட்டுரையை எழுதுகின்றேன். ஓன்று, ஜனவரி மாதம் 13 ம் திகதி வெளிவந்த “சன்டே லீடர் பத்திரிக்கையில் “Up country Tamils, The Vanishing people?” என்ற கட்டுரையாகும். இந்த கட்டுரை புது டெல்லியில் செயற்படும் Observer Research Foundation (ORF) என்ற நிறுவனத்தின் பணிப்பாளர் என்.சத்தியமூர்த்தி அவர்களால் எழுதப்பட்டுள்ளது. இக் கட்டு…

  9. தற்போது ஜெனிவா நகரில் நடைபெற்றுவரும் ஐ.நா மனித உரிமை பேரவையின் 22ஆவது அமர்வு - தமிழ் ஊடகங்களுக்கு செய்தி ஊற்றாகியுள்ளது. ஆனால் சிங்கள ஊடகங்கள் அதனை அவ்வளவாக பொருட்படுத்தியதாக தெரியவில்லை. சில தமிழ் பத்திரிகைகளில் இந்தக் கூட்டத் தொடரைப் பற்றி ஒரே நாளில் பத்துக்கு மேற்பட்ட செய்திகளும் முழுப்பக்க கட்டுரைகள் உட்பட பல கட்டுரைகளும் பிரசுரிக்கப்படுகின்றன. குறிப்பாக சகல தமிழ் பத்திரிகைகளிலும் முன் பக்கத்தில் அநேகமாக அரைவாசி அல்லது அதற்கு மேல் மனித உரிமை பேரவையின் கூட்டத் தொடரைப் பற்றிய செய்திகளாகத் தான் காணப்படுகின்றன. ஆனால், சிங்கள் பத்திரிகைகளில் நாளொன்றுக்கு இந்தக் கூட்டத் தொடரைப் பற்றி ஒரு செய்தி அல்லது இரண்டு தான் பிரசுரிக்கப்படுகின்றன. கட்டுரைகளைப் பொறுத்தவரை சிங…

    • 1 reply
    • 545 views
  10. பன்றித்தொழுவத்தில் கொல்லப்பட்டவர்களின் இரத்தவாடையும் வரலாற்றுத் துரோகமும் இலங்கையில் இனப்படுகொலைக்கும் இனச் சுத்திகரிப்பிற்கும் யார்யாரெல்லாம் உதவினார்கள் என்று பட்டியல் போட்டால் அவர்களில் பெரும்பாலனவர்கள் ஒன்று கூடியதை இன்று பிரித்தானியப் பாராளுமன்றத்தில் பார்த்திருக்கலாம். பாராளுமன்றம் பன்றித்தொழுவம் என்பார்கள். பன்றித்தொழுவத்தில் கொல்லப்பட்ட ஈழத்தமிழர்களின் இரத்தவாடை வீசியது. உலகத் தமிழர் பேரவை என்று அழைக்கப்படும் அன்னிய நிதியில் இயங்கும் முன்னைநாள் புலிகளின் நேரடி ஆளுமைக்கு உட்பட்ட அமைப்பு ஒழுங்கு செய்திருந்த கூட்டம் பிரித்தானிய பாராளுமன்ற கட்டடத்துள் நடைபெற்றது. இன்று(27.02.2013) காலை பத்துமணிக்கு ஆரம்பமன இந்தக் கூட்டத்தில், இலங்கை அரசிற்கு இன அழி…

    • 2 replies
    • 727 views
  11. ஜெனிவாவில் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் 22ஆவது கூட்டத்தொடர் நடந்து கொண்டிருக்கும் நிலையில், இலங்கை அரசபடைகள் மீதான போர்க்குற்ற, மனிதஉரிமை மீறல் குற்றச்சாட்டுகள் தொடர்ச்சியாக வெளிவந்து கொண்டிருக்கின்றன. விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரனின் ஒளிப்படச் சர்ச்சை ஓய்வதற்குள், புலிகளின் தகவல்களை அறிவதற்கு பாலியல் வல்லுறவை அரசபடைகள் ஓர் ஆயுதமாகப் பயன்படுத்தியதாக குற்றம்சாட்டும் அறிக்கை ஒன்றை மனிதஉரிமைகள் கண்காணிப்பகம் வெளியிட்டுள்ளது. 141 பக்கங்களைக் கொண்ட இந்த அறிக்கையில், பாலியல் ரீதியாகத் துன்புறுத்தப்பட்ட 75 பேரின் சாட்சியங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த இரண்டு குற்றச்சாட்டுகளையும் இலங்கை இராணுவம் நிராகரித்துள்ள போதிலும், அது பெரிதாக எடுப்படவில்லை. …

    • 2 replies
    • 902 views
  12. பிரிட்டனின் திட்டம்.-யூதர்களின் நம்பிக்கை துரோகம். பிரிட்டனின் திட்டம். நிலமெல்லாம். ரத்தம் - பா. ராகவன். பாலஸ்தீன் யாருடையது? யூதர்களுக்கும் அரேபிய முஸ்லிம்களுக்கும் சொந்தமான பூமி அது. நல்லது. பாலஸ்தீனில் யார் பெரும்பான்மையானோர்? இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் யூதர்கள் பெரும்பான்மையானோராகவும் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் கிட்டத்தட்ட இரு தரப்பினரும் சம அளவினராகவும், நவீன காலத்தில் முஸ்லிம்கள் பெரும்பான்மையானோராகவும் அங்கே இருந்திருக்கிறார்கள். இதனை இந்தத் தொடரின் பல்வேறு அத்தியாயங்களில் இடையிடையே பார்த்திருக்கிறோம். இப்போது மீண்டும் நினைவுபடுத்திக்கொள்ளவேண்டியது அவசியமாகிறது. காரணம், இந்தக் குழப்பத்தால்தான் பாலஸ்தீனை எப்படிப் பிரிப்பது என்று பிரிட…

    • 0 replies
    • 1.1k views
  13. http://www.naanmuslim.com நன்றி : NELLAI POPULAR FRONT 1 நன்றி :http://asiananban.blogspot.sg/2013/01/exclusive-report.html http://vanjoor-vanjoor.blogspot.ca/2013/02/exclusive-report.html

    • 0 replies
    • 1.7k views
  14. 911 இன் இரகசிய வரலாறு http://www.youtube.com/watch?v=mhtzWcaZx5A http://www.youtube.com/watch?v=s1ZHUl_PT2M

  15. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தகைசார் பெரியவர்களுக்கு அன்பு வணக்கம். கடந்த முறை ஜெனிவாவில் இலங்கைக்கு எதிராகத் தீர்மானம் கொண்டுவந்தவேளை, ஜெனிவாவுக்குத் தாம் செல்வதில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்திருந்தது. இத்தீர்மானத்தின் சொந்தக்காரராக இரா. சம்பந்தன் ஐயா இருந்தார். சம்பந்தனின் தீர்மா னத்தை கூட்டமைப்பில் இருக்கக்கூடிய யாதார்த்த நிலை உணர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர், எதிர்த்தனராயினும் அந்த எதிர்ப்புகள் பலிதமாகவில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஜெனிவாவுக் குச் சென்று தமிழ் மக்களின் நிலைமைகளை வெளிநாட்டுப் பிரதிநிதிகளுக்கு எடுத்தியம்ப வேண்டும் என பல தடவைகள் வலம்புரி இவ் விடத்தில் கருத்தியம்பியது. என்னசெய்வது! ஒளியைக் கண்டு பயம் கொள்கின்ற பெர…

    • 0 replies
    • 631 views
  16. ஜெனிவாவும் இலங்கைத்தீவின் வெளியுறவுக் கொள்கையும் - நிலாந்தன் 25 பெப்ரவரி 2013 சேர். ஐவர் ஜென்னிஸ் ஒரு முறை இலங்கை மக்களைப் பற்றி பின்வரும் தொனிப்படக் கூறியிருந்தார். ''இலங்கை மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்வானது. எழுத்தறிவு உயர்வானது. சமூகச் சூழல் ரம்மியமானது. ஆனால், எப்பொழுதும் இந்தியா பொறுத்து ஒரு பனிப் பாறை உருகி தங்கள் மீது கவீழ்ந்துவிடுமோ என்ற அச்சத்துடன் வாழ்கின்றார்கள்' அவர் இலங்கையர்கள் என்று குறிப்பாகக் கருதியது சிங்கள மக்களைத்தான். பனிப்பாறை பற்றிய அச்சத்தின் மீது கட்டியெழுப்பட்டதே இலங்கைத் தீவின் நவீன வெளியுறவுக் கொள்கையாகும். அதாவது, வெளி அச்சுறுத்தல்களுக்கு எதிராகத் தன்னை வெற்றிகரமாக நிலை நிறுத்திக் கொள்ள முற்படும் அல்லது தகவமைத்துக்கொள்ள முற்படும் ஒரு…

  17. கிழக்கிலங்கை சமுதாய முரண்பாடுகளும் மூலகாரணங்களும் சுல்பிகா இஸ்மாயில் ஆயுதசார் இயக்கங்களின் எழுச்சிக்குப்பின், இக்கசப்புநிலைகள் பல இனமோதல்களுக்கும், பழிவாங்கல்களுக்கும், பல்லாயிரக்கணக்கான சொத்துக்கள், உடமைகள், உயிர்ச்சேதங்களுக்கும் காரணமாயின. இரு தரப்பினரும் ஒருவரை ஒருவரை அழிப்பதற்கும் அழிவதற்கும் காரணமாயினர். அடிப்படை சமுதாய சமாதானத்; தீர்வுக்கான முன்னெடுப்புக்கள், இக்காரணங்களை இனங்கண்டு அதற்கு பரிகாரமளிப்பதிலிருந்து ஆரம்பிக்கப்பட வேண்டியுள்ளது. இதன் முதற்படியாக, இரு சமூகமும், ‘பக்கச்சார்பற்று, நேர்மையாக விடயங்களை வெளிப்படுத்துதல்’ இணக்கப்பாட்டுக்கான எந்த முன்னெடுப்புக்குமுரிய வித்தாக அமையும். கிழக்கிலங்கையின் இனத்துவ முரண்பாடுகள் பற்றிய ஒரு முக்கியமமான கட்டு…

  18. விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரன் பங்கரில் பிடித்து வைக்கப்பட்டுப் பின் கொல்லப்பட்டது தொடர்பாகச் சமீபத்தில் "சனல் 4' வெளியிட்டுள்ள புகைப்படங்கள் தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளன. அனைத்துத் தரப்பினரும் இதைக் கண்டித்துள்ளனர். ஹிட்லரின் நாசி அழித்தொழிப்புகளுடன் இதை ஒப்பிட்ட முதலமைச்சர் ஜெயலலிதா, இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்கப்பட வேண்டும் என்கிற சட்ட மன்றத் தீர்மானத்தை மீண்டும் வலியுறுத்தியுள்ளார்."சனல் 4' வெளியிட்டுள்ள இப்படங்கள் குறித்து மத்திய அரசு மௌனம் காப்பதைக் கருணாநிதி கண்டித்துள்ளார். இந்தியாவின் முக்கிய நாளிதழான"இந்து' வில் என்.ராம் ஆசிரியராக இருந்தவரை ராஜபக்ஷக்களின் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு…

    • 0 replies
    • 965 views
  19. சர்வதேசப் பெருந்தெருவில் தமிழீழத்திற்கான குறுக்குத்தெரு தத்தர் 'சர்வதேச நியமனங்களின்படி இலங்கையின் உள்நாட்டுப் பிரச்சனையில் இந்தியா தலையிட முடியாது' என்று ஒரு தரப்புக் கூறுகின்றது. 'இலங்கையின் இனப்பிரச்சினை ஓர் உள்நாட்டுப் பிரச்சனையே. அதில் வேறெந்தொரு நாடும் தலையிடக்கூடாது. அதை இலங்கை அரசே தீர்த்துக் கொள்ளட்டும்' என்று இன்னொரு தரப்பினரும் கூறுகின்றனர். 'இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு அதிகாரப்பகிர்வு வழங்கப்பட வேண்டும் என்றும், இலங்கை அரசின் மீதும் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும்' என்று மேலும் இன்னொரு தரப்பினரும் கூறிவருகின்றனர். இங்கு ஒவ்வொரு அரசினதும் அல்லது அரசு சார்ந்த நிறுவனங்களினதும் அரச நலன்சார் கொள்கைகளின் கீழ் மேற்படி கருத்துக்கள் முன்வைக்க…

  20. தமிழர் தாயகத்திற்கு ஐக்கிய தேசியக் கட்சியை அழைத்துவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முத்துக்குமார் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு மீண்டும் தமிழர் தாயகத்திற்கு ஐக்கிய தேசியக் கட்சியை அழைத்துச் சென்றுள்ளது. சென்ற தடவை சிங்கக் கொடியேற்றி சிங்கள அரசியலுக்குள் தமிழ்த் தேசிய அரசியலைக் கரைக்கத் தயார் என்பதை பகிரங்கமாக வெளிப்படுத்த அழைத்துச் சென்றனர். சம்பந்தன் ரணிலுடன் சேர்ந்து சிங்கக்கொடியேற்றி கரைக்கும் கைங்கரியத்தை வெளிப்படுத்தினார். இந்தத் தடவை தமிழ் மக்களின் துயரங்களுக்கெல்லாம் ஒரு மீட்பராக ஐக்கிய தேசியக் கட்சியை அழைத்துச் சென்றனர். இங்கு ஐக்கிய தேசியக் கட்சி தானாகச் செல்லவில்லை. கூட்டமைப்பின் அழைப்பின் பேரிலேயே சென்றது. சம்பந்தன் எதிர்க்கட்சிகளின் கூட்டில் கையொப்பமி…

  21. போர் நடந்தபோது ஏழு நாட்டு இராணுவமும் இலங்கைக்கு உதவி செய்தது. இதில் அமெரிக்கா கடந்த ஆண்டு ஐ.நா.வில் தீர்மானம் நிறைவேற்றியது. இந்தியாவும் பல் பிடுங்கப்பட்ட தீர்மானத்தை ஆதரித்தது. கொலைக்காரனே போர்குற்றத்தை விசாரித்து தண்டனை கொடுக்கவேண்டும் என்று உலகத்திலேயே ஒரு வினோதமான அறிவுரையை ஐ.நா.வும் உலக நாடுகளும் இலங்கைக்கு வழங்கியது. "இனப்படுகொலை" என்று சொல்லாமல் "போர்குற்றம்" என்று சொல்கிறது. "சுதந்திர ஈழத்தை" பற்றி பேசாமல் "சரிகட்டுதல்"-ஐ பற்றி பேசுகிறார்கள். ஐ.நா.வில் தீர்மானம் நிறைவேற்றியவுடன் நாமெல்லாம் அப்பாடா என்று மகிழ்ச்சியடைந்தோம். இந்தியா ஆதரித்தவுடன் நமது மக்கள் ஏதோ இனி அவர்கள் வாழ்வில் விடியல் ஏற்பட்டுவிடும் என்று சிந்தனை இழந்தோம். நடக்கும் அரசியலை, இராஜதந்திரத்…

  22. இந்தியாவின் மானம், காற்றில் பறக்கிறது என்று சொன்னால் அது உண்மை, முழு உண்மை, உண்மையைத் தவிர வேறில்லை. அன்று பீரங்கி, இன்று ஹெலிகாப்டர். அன்று பிரதமருக்குப் பின்னால் இத்தாலி; இன்று பிரதமருக்கு மேலே இத்தாலி. முக்கியப் பிரமுகர்களுக்கு ஹெலிகாப்டர்கள் வாங்குவது, மத்திய அரசின் வேலை. அது சரிதான். அதற்கான தொழில் நுட்பக் கூறுகளை நிர்ணயிப்பதும், விலை பேரம் பேசுவதும், விமானப்படைத் துறை சம்பந்தப்பட்டது; அதுவும் சரிதான். ஆனால், இவற்றில் அன்றும் இத்தாலி, இன்றும் இத்தாலி என்றால்... அந்த நாட்டுக்கு உதவுவது யார்? இந்த ஊழல் விவகாரங்கள் வெளிப்பட்டது, இந்திய நிறுவனங்கள் மூலம் அல்ல. அன்று, ஸ்வீடன், போபர்ஸ் பீரங்கி விவகார ஊழலை வெளிப்படுத்தியது; இத்தாலி இன்று, ஹெலிகாப்டர், விவகார ஊழலைக் கிளற…

  23. பாலச்சந்திரன் படுகொலை இந்தியாவில் ஏற்படுத்திவரும் அதிர்வுகள் எஸ். கோபாலகிருஷ்ணன் இலண்டனில் இயங்கும் சானல் 4 என்ற தொலைக்காட்சி நிறுவனம் 2009இல் நடந்த இலங்கை இறுதிப் போரில் சிங்கள் இராணுவத்தால் நிகழ்த்தப்பட்ட மனித உரிமை மீறல்களையும் இன்ன பிற அட்டூழியங்களையும் அம்பலப்படுத்தி வருகிறது. அந்தத் தொலைக்காட்சியில் இது தொடர்பாக கால்லும் மெக்கரே என்பவர் இயக்கிய 'இலங்கையில் கொலைக்களம்' என்ற ஆவணப்படத்தின் முதல் இரண்டு பகுதிகள் சானல் 4ஆல் கடந்த ஆண்டு ஒளிபரப்பப்பட்டன. அந்தப் படத்தின் மூன்றாவது பகுதி விரைவில் வெளியாவதற்கு முன்னோட்டமாக ஒரு சில புகைப்படங்கள் வெளியிடப்பட்டன. அந்தப் புகைப்படங்களைப் பார்த்த உலகத் தமிழர்களும் மனித உரிமை ஆர்வலர்களும் உருக்குலைந்து போயிருக்கின்றனர். விடு…

    • 6 replies
    • 1.2k views
  24. அனர்த்தத்தின் அடையாளமும், ஜெனிவா யோசனையும் - குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக சுனந்த தேசப்பிரிய 23 பெப்ரவரி 2013 மனித உரிமை பேரவையின் யோசனைக்கு பதிலளிப்பதற்கு பதில் அரசாங்கம் மண்பாணை கடைக்குள் புகுந்த மாடு போல் நாலாபுறமும் முட்டி மோதியது. நல்லிணக்கம் என்பது ராஜபக்ஷ நிர்வாகத்திற்கு பாம்புக்கு நாகதாளி போன்றது. கடந்த ஆகஸ்ட் மாதம் ஜெனிவாவுக்கான இலங்கையின் புதிய தூதுவர் ஒருவர் நியமிக்கப்பட்டார். ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பெல்ஜியத்திற்கான இலங்கையின் தூதுவராக பணியாற்றிய ரவிநாத ஆரியசிங்க, ஜெனிவாவுக்கான இலங்கையின் புதிய தூதுவராக நியமிக்கப்பட்டார். ஜெனிவாவுக்கான இலங்கையின் தூதுவராக நியமிக்கப்பட்ட ஆரியசிங்க, ஏகாதிபத்தியவாதிகளின் கைபாவைகள் என இலங்கை அரசாங்…

  25. ஆரிய பவுத்த சிங்கள பேரின வாதமும் தீர்வும் ராஜசங்கர் வெகு நாட்களாக என் மனதை அரித்த கேள்விகளான ஏன் ஒரு சாதாரண மனிதர்கள் கொடும் கொடூரச்செயலில் ஈடுபடவேண்டும் என்பதற்கான விடையை இக்கட்டுரை மூலம் தேடுகின்றேன். இலங்கையின் போர்க்குற்ற காணொளிகள் காட்டும் கொடூர காட்சிகள் மனதை பதற வைக்கும் இந்நேரத்தில் ஏன் அந்த சாதாரண சிங்கள் சிப்பாய்கள் இந்த கொடூரங்களில் ஈடுபடவேண்டும்? அவர்கள் வெறுமனே உத்தரவுகளை நிறைவேற்றினார்களா? அப்படி கொன்று சுகம் காண ஏது காரணம்? வெறுமனே சிங்களவர்கள் அனைவரும் காடையர்கள், இனவெறி கொண்ட மிருகங்கள் என்று ஒரு வரியில் பதில் சொல்லி தாண்டிப்போக என்னால் முடியவில்லை. மூன்றுவேளை உணவுக்கு உழைக்கும் சிப்பாய்களிடம் என்ன காரணம் இருந்துவிட முடியும்? அந்த காரணம் ஆரிய பவுத்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.