Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. ரணிலின் தென்னிலங்கை நகர்வுகள்? - யதீந்திரா ரணில் விக்கிரமசிங்க அவரது, நீண்டநாள் இலக்கில் வெற்றிபெற்றிருக்கின்றார். ஆனாலும் இதனை முழுமையான வெற்றியென்று கூறவிடமுடியாது. ஏனெனில் அவர் மக்களால் தெரிவுசெய்யப்பட்டு இந்த இடத்தை அடையவில்லை. ஆனாலும் கிடைத்த இடத்தை கெட்டியாக பற்றிக்கொள்வதும் அதே வேளை, எதிர்காலத்தில் முடிந்தால் மீண்டுமொருமுறை சதுரங்கத்தை ஆடுவதும்தான் அவருக்கு முன்னாலுள்ள தெரிவுகளாக இருக்கின்றன. எனவே அடிப்படையில் ரணில் ஆடப்போவது முற்றிலும் தென்னிலங்கைக்கான அரசியல் ஆட்டம்தான். எனவே இதில் தமிழர்கள் அதிகம் தலையை பிய்த்துக்கொள்ள வேண்டியதில்லை. ஆனால் இந்தத் தென்னிலங்கை ஆட்டத்திற்குள் எந்தளவு தூரம் போகலாம், போகக் கூடாது என்பதில் தமிழ் தேசிய தரப…

  2. ரணிலின் நகர்வுகள்? - யதீந்திரா இலங்கை அரசாங்கம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் வழங்கிய வாக்குறுதிகளை அமுல்படுத்துவதற்கான வீட்டுவேலைகளை ஆரம்பித்திருக்கின்றது. அதன் முதல்கட்டமாக முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவினால் இறுதிக்கட்ட யுத்த மீறல்கள் தொடர்பில் விசாரிப்பதற்கென நியமிக்கப்பட்ட மக்ஸ்வெல் பரணகம ஆணைக்குழு மற்றும் நிசங்க உடலகம ஆணைக்குழு ஆகியவற்றின் அறிக்கைகள் அத்துடன் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் விசாரணை அறிக்கை ஆகியவற்றை ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் சமர்பித்திருக்கின்றார். இங்கு பேசிய ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டிருக்கும் ஒரு விடயம் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியது. மேற்படி அறிக்கைகளை சமர்பித்து பேசுகின்ற போது, முன்னாள் ஜனாதிபதி மகிந…

  3. ரணிலின் நேசக்கரம் குறித்து சந்தேகிக்கும் தமிழ் கட்சிகள் By NANTHINI 18 NOV, 2022 | 04:33 PM (மீரா ஸ்ரீனிவாசன்) இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடந்த வாரம் வியாழக்கிழமை (நவ 10) பாராளுமன்றத்தில் தமிழ் கட்சிகளுக்கு நேசக்கரம் நீட்டி, இவ்வாரம் பேச்சுவார்த்தைக்கு வருமாறு அழைப்புவிடுத்ததுடன், அடுத்த வருடம் நாட்டின் 75ஆவது சுதந்திர தினத்துக்கு (பெப்ரவரி 4) முன்னதாக தீர்க்கப்படாமல் இருக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வினை காணப்போவதாகவும் உறுதியளித்தார். ஆனால், அவரின் அழைப்பு குறித்து தமிழ் அரசியல்வாதிகள் பெருமளவுக்கு ஐயுறவு மனப்பான்மை கொண்டவர்களாகவே இருக்கிறார்கள். பேச்சுவார்த்தைக்கான திகதியும் அறிவிக்கப்படவில்லை.…

  4. ரணிலின் பதவி நீக்கப்பட்டதா, இரத்தாகி விட்டதா? எம்.எஸ்.எம். ஐயூப் / 2018 ஒக்டோபர் 31 புதன்கிழமை, மு.ப. 01:07 Comments - 0 அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் அரசாங்கத்திலிருந்து விலகிய மைத்திரிபால சிறிசேன, 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் எட்டாம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்று, ஜனாதிபதியாக சத்தியப் பிரமானம் செய்து கொண்ட அடுத்த கணமே, அப்போது நாடாளுமன்றத்தில் வெறும் 47 எம்.பிக்களின் ஆதரவைப் பெற்றிருந்த ரணில் விக்கிரமசிங்கவைப் பிரதமராக நியமித்தார். அப்போது, அது சட்டவிரோதமானது என்றும் நாகரிகமற்ற செயலென்றும், மஹிந்த ஆதரவாளர்களான அரசியல்வாதிகளும் பொதுமக்களும் கூறினர். ஏனெனில், ஒருவர் பிரதமராக நியமிக்கப்பட வேண்டுமானால், நாடாளுமன்றத்…

  5. ரணிலின் பதவி பறிபோகுமா? உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகளின் தாக்கம், ஐக்கிய தேசியக் கட்சிக்குள் இன்னமும் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது. இந்தத் தேர்தலில் ஐ.தே.கவுக்கு ஏற்பட்ட பின்னடைவுகள், அதன் தலைமைத்துவத்துக்கான சவாலாகவும் மாறியிருக்கிறது. ஐ.தே.கவில் எப்போதுமே தலைமைத்துவச் சிக்கல்கள் இருந்து வந்தமை வரலாறு. ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் தலைவர்களாக மேலெழும் போது, இந்தச் சிக்கல்கள் ஏற்பட்டு வந்துள்ளன. ஐ.தே.கவின் தலைவராக இருந்த டி.எஸ்.சேனநாயக்கவுக்கும், எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டார நாயக்கவுக்கும் இடையிலான தலைமைத்துவச் சிக்கலே, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உருவாக்கக் காரணமானது. அதற்குப் பின்னர், டட்லி சேனநாயக்க…

  6. ரணிலின் பிரித்தாளும் அரசியலை தாண்டுமா தமிழ்க் கட்சிகள்? புருஜோத்தமன் தங்கமயில் இரண்டாயிரங்களின் ஆரம்பத்தில் ஆயுதப்போர் முனையில் வெற்றி முகத்தோடு இருந்த தமிழீழ விடுதலைப் புலிகளை, சமாதானப் பேச்சுவார்த்தைக்கு அழைத்து வந்து, ஆழ ஊடுருவி அழிப்பதற்கான விதைகளைப் போட்டவர் ரணில் விக்கிரமசிங்க. ‘கருணா அம்மான்’ என்கிற புலிகளின் கிழக்கு தளபதியை பிரித்தெடுத்து, இராணுவ பலத்தை சிதைத்ததுடன், சர்வதேச ரீதியில் புலிகளுக்கு எதிரான தடைகளை வெற்றிகரமாக நடைமுறைக்கு கொண்டு வருவதற்கான வேலைகளையும் செய்திருந்தார். புலிகளை இராணுவ மற்றும் இராஜதந்திர ரீதியில் தோற்கடிப்பதற்காக ரணில் போட்ட பாதையில்தான், அவருக்குப் பின்னர் வந்த ராஜபக்‌ஷர்கள் பயணித்து 2009இல் வென்றார்கள். ரணில் தனக்கு கி…

  7. ரணிலின் மீள்வருகை இலங்கை அரசியலை மாற்றப் போகின்றதா? – அகிலன் 12 Views வேகமாகப் பரவும் கொரோனாவின் பீதியில் இலங்கை மூழ்கிக் கிடக்க, உள்நாட்டு அரசியலிலும் அதிரடியான சில நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன. அதில் முக்கியமானது தான் ரணில் விக்கிரமசிங்கவின் மீள்வருகை. எதிர்வரும் 22 ஆம் திகதி அவர் பாராளுமன்ற உறுப்பினராகப் பதவியேற்றுக் கொள்வார் என்ற செய்தி, கொழும்பு அரசியலைப் பரபரப்பாக்கியிருப்பதற்குப் பல காரணங்கள் உள்ளன. ரணிலின் மீள் வருகையை தமக்குச் சாதகமாக்கிக் கொள்வதற்கான வாய்ப்புக்களை அரச தரப்பு பயன்படுத்த முற்பட்டுள்ளது. மறுபுறம் பிரதான எதிர்க் கட்சியான சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி இதனால் பெரிதும் குழம்பிப் ப…

  8. ரணிலின் மீள்வருகையும் சதியும் புருஜோத்தமன் தங்கமயில் ரணில் விக்கிரமசிங்க மீண்டும் பிரதமராகி இருக்கிறார். கடந்த பொதுத் தேர்தலில், ஐக்கிய தேசிய கட்சி முழுமையாக தோற்கடிக்கப்பட்டது. அந்தக் கட்சி பெற்ற உதிரி வாக்குகளால் கிடைத்த ஒரேயொரு தேசிய பட்டியல் மூலமாக, 2021ஆம் ஆண்டு, ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்துக்கு வந்தார். ஐந்து முறை பிரதமர், நீண்ட காலமாக எதிர்க்கட்சித் தலைவர் போன்ற பதவிகளை வகித்த ரணில், தேசிய பட்டியல் மூலம் பாராளுமன்றத்துக்கு மீண்டும் வந்த போது, அதைப் பலரும் பரிதாபத்தோடு பார்த்தார்கள். ஆனால், ஒற்றைப் பாராளுமன்ற உறுப்பினராக இருந்து கொண்டு, மூன்றில் இரண்டு அறுதிப் பெரும்பான்மைக்கு அண்மித்த வெற்றியைப் பெற்ற ராஜபக்‌ஷர்களின் பொதுஜன பெரமுன அரசாங்கத்…

  9. ரணிலின் வடக்கு விஜயம்! பிராந்தியத்தில் உணர்த்தப்படும் செய்திகள்? கடந்த சனிக்கிழமை ரணில் விக்ரமசிங்க யாழ்ப்பாணத்திற்கும், கிளிநொச்சிக்கும் விஜயம் செய்தார். இங்கு பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களையும் அவர் தொடக்கி வைத்தார். குறிப்பாக யாழ்ப்பாணத்தில் அவர் இந்தியாவின் நிதி உதவியுடனான அவசர அம்புலன்ஸ் சேவையைத் தொடக்கி வைத்தார். இந்நிகழ்வை இந்தியப் பிரதமர் மோடி இந்தியாவிலிருந்தபடி இலத்திரனியல் திரை மூலம் தொடக்கி வைத்தார். நிகழ்வில் இரு நாட்டு தேசிய கீதங்களும் இசைக்கப்பட்டன. மோடி சிங்களத்திலும், தமிழிலும் வணக்கம் சொன்னார். இரு தலைவர்களும் இரு நாடுகளுக்கும் இடையிலான பாசப்பிணைப்பைப் பற்றிப் போற்றிப் பேசினார்கள். அதே நாளில் ரணில் விக்ரமசிங்க யாழ்ப்பாண…

  10. ரணிலின் வார்த்தைகளை மங்கள பேசினாரா? யாரின் தெரிவு சஜித்? புருஜோத்தமன் தங்கமயில் / 2019 ஜூலை 10 புதன்கிழமை, மு.ப. 03:42 Comments - 0 ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக, சஜித் பிரேமதாஸ முன்னிறுத்தப்பட வேண்டும் என்கிற நிலைப்பாட்டின் பக்கத்துக்கு, மங்கள சமரவீர வந்திருக்கிறார். கடந்த ஒரு வருட காலமாக, ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பிலான உரையாடல் ஊடக வெளியில் நடத்தப்பட்டு வருகின்றது. அந்தத் தருணங்களில் எல்லாம் அமைதி காத்த மங்கள, ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் கடந்த வாரமே வாய் திறந்திருக்கிறார். அதுவும், ‘சஜித் ஒரு வெற்றி வேட்பாளர்’ என்பதை, ஆணித்தரமாகவும் சொல்லியிருக்கிறார். இது, ஐ.தே.கவின் தொண்டர்களிடமும் சஜித் ஆதரவாளர்கள் மத்தியிலும் பெரும் ஆர…

  11. ரணிலின் வெற்றியும் எதிர்கால சாவல்களும் நல்­லாட்சி அர­சாங்­கத்தை உலுக்­கிய நம்­பிக்கை இல்லாப் பிரே­ரணை தோற்­க­டிக்­க­ப்பட்­ட­தை­ய­டுத்து ரணில் விக்­கி­ர­ம­சிங்க பிர­தமர் என்ற அர­சியல் அந்­தஸ்தில் மறு­பி­றவி எடுத்­தி­ருக்­கின்றார் என்றே கூற வேண்டும். இப் பிரே­ரணை வெற்­றி­பெற்­றி­ருந்தால் அவர் பிர­தமர் பத­வியைத் துறக்க நேரிட்­டி­ருக்கும். வேறொருவர் பிர­த­ம­ர­ாக நிய­மிக்­கப்­பட்­டி­ருப்பார். அத்­துடன் ஐக்­கிய தேசிய கட்­சியின் தலைமைப் பத­வியும் கூட அவ­ரி­ட­மி­ருந்து சில­வே­ளை பறி­போ­யி­ருக்க நேரிட்­டி­ருக்­கலாம். அது மட்­டு­மல்­லாமல் நாட்டில் ஜன­நா­ய­கத்­தையும் அமைதியையும் சமா­தா­னத்­தையும் நிலை­நாட்­டு­வ­தற்­காக உரு­வாக்­கப்­பட்ட நல்­லாட்சி முழு­மை…

  12. ரணிலுக்கு எதிரான மூன்றாவது உட்கட்சிக் கிளர்ச்சி எம்.எஸ்.எம். ஐயூப் / 2019 செப்டெம்பர் 18 புதன்கிழமை, மு.ப. 11:28 ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பாக, ஐக்கிய தேசிய கட்சிக்குள் உருவாகியிருக்கும் சர்ச்சை, மிகவும் மோசமான நிலையை அடைந்து உள்ளதாகவே தெரிகின்றது. ‘தாமே கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக வேண்டும் என்பதில், ஐ.தே.க பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸ உறுதியாக இருக்கிறார். அதேவேளை, அவருக்கு அதற்கு இடமளிப்பதில்லை என்பதில், கட்சித் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்கவும் உறுதியாக இருக்கிறார். இதற்கு முன்னர் ஒருபோதும் இல்லாதவாறு, சஜித்துக்கு ஆதரவாகக் கட்சித் தலைமையை எதிர்த்துக் குரல் கொடுக்கக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் அமைச்சர்களும் முன்வ…

  13. ரணிலுக்கு, தமிழ் கட்சிகள் எவ்வாறு பதிலளிக்க வேண்டும்?- யதீந்திரா இனப்பிரச்சினைக்கான தீர்வை காண்பதற்கு தமிழ் கட்சிகள் அனைத்தும் ஒன்றாக வரவேண்டுமென்று, ரணில் விக்கிரமசிங்க கூறியிருக்கின்றார். அண்மையில் இங்கிலாந்திற்கு சென்றிருந்த, பாரதிய ஜனதா கட்சியின் தமிழ் நாட்டு தலைவர், அண்ணாமலையும் இவ்வாறானதொரு கருத்தையே அங்கு வலியுறுத்தியிருக்கின்றார். தமிழ் கட்சிகள் அனைத்தும் இந்தியாவிடம் ஒன்றாகச் செல்ல வேண்டுமென்று அவர் தெரிவித்திருக்கின்றார். ரணில் இந்த வேளையில் இவ்வாறு கூறுவதற்கு வேறு காரணங்கள் இருக்கலாம். தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வை காணப் போவதாக குறிப்பிட்ட, ரணில் விக்கிரமசிங்க, இப்போது, தமிழ் கட்சிகள் ஒற்றுமையாக வரவேண்டுமென்…

  14. ரணிலுக்கும் சஜித்துக்கும் இடையிலான சாணக்கிய போட்டி ம்.எஸ்.எம். ஐயூப் / 2020 பெப்ரவரி 19 ஐக்கிய தேசியக் கட்சி, இரண்டாக பிளவு பட்டுள்ளமையே தற்போதைய யதார்த்தம். பிளவுபட்ட இரு குழுக்களும் இப்போதும் ஒன்றாய்க் கூடி, ஐக்கிய தேசியக் கட்சியாகச் சில முடிவுகள் எடுத்த போதிலும், அக் கட்சிக்குள், தேர்தல் ஆணையகத்தால் அங்கிகரிக்கப்பட்ட இரண்டு கட்சிகளின் தலைவர்களும் உறுப்பினர்களும் இருக்கிறார்கள் என்பதை எவராலும் மறுக்க முடியாது. ஐக்கிய தேசியக் கட்சியானது, பழைமையான கட்சி ஆகும். இலங்கையில் தேர்தல் ஆணையகத்தில் பதிவு செய்யப்பட்டு, அவ்வாணையகத்தால் அங்கிகரிக்கப்பட்ட 70 கட்சிகளில், ஐ.தே.கவை விடப் பழைய கட்சிகள் இரண்டு தான் இருக்கின்றன. இதன் தலைவராகத் தற்போது ரணில் விக்கிரமசிங்…

  15. ரணிலுடன் பேசுதல் ? - யதீந்திரா தமிழ் கட்சிகள் ரணில் விக்கிரமசிங்கவுடன் பேசிவருகின்றன. ரணிலுடன் பேசுவது தமிழ் கட்சிகளை பொறுத்தவரையில் புதிய விடயமல்ல. மைத்திரிபால அரசாங்கத்திலும் ரணிலுடன் பல சுற்றுப் பேச்சுக்களில் தமிழ் கட்சிகள் ஈடுபட்டிருந்தன. புதிய அரசியல் யாப்பொன்றை கொண்டுவர முடியுமென்றும் தமிழ் கட்சிகள் – குறிப்பாக இராஜவரோதயம் சம்பந்தன் அப்பாவித்தனமாக நம்பிக் கொண்டிருந்தார். அந்த அடிப்படையில் சம்பந்தன் தலைமையில் பேச்சுக்கள் இடம்பெற்றன. இறுதியில் வழமைபோல் வெறுங்கையுடன் திரும்பினர். ரணில் தந்திரமான அரசியல்வாதியென்று பெயரெடுத்த ஒருவர். ரணில், அவரது மாமனார் ஜே.ஆர்.ஜெயவர்த்தனவிடமிருந்து அரசியலை கற்றுக்கொண்டவர். தமிழ் சூழல…

  16. ரணிலும் மறதியும் மன்னிப்பும் புருஜோத்தமன் தங்கமயில் / 2019 பெப்ரவரி 20 புதன்கிழமை, மு.ப. 12:10 Comments - 0 மறதியும் மன்னிப்பும் மானிட உன்னதங்களில் பிரதானமானவை. வேட்டை விலங்குகளைக் காட்டிலும் வன்மமும் வக்கிரமும் ஆதிக்க வேட்கையும் கொண்ட மானிட ஒழுங்கில், மறதியும் மன்னிப்பும் இருந்திருக்காவிட்டால், டைனோஸர் காலத்துக்கு முன்னரேயே, மனித இனம் அழிந்து போயிருக்கும். மானிட வளர்ச்சி என்பது, அதன் நற்குணவியல்புகள், ஒழுக்கத்தின் விருத்திகள் சார்ந்தது. அது தொடர்பிலான உரையாடல்கள், திறந்த மனதோடு நிகழ்த்தப்பட வேண்டியவை. ஆனால், அந்த உரையாடல்களின் போது, அறம் என்கிற இன்னொரு மானிட உன்னதம், பேணப்பட வேண்டும். கடந்த வாரம் கிளிநொச்சியில் வைத்து, போர்க் குற்றங்கள…

  17. ரணிலும், 13ஆம் திருத்தமும், இனப்பிரச்சினைக்கான தீர்வும் என்.கே அஷோக்பரன் Twitter: @nkashokbharan இனப்பிரச்சினை தீர்வு தொடர்பிலான சர்வகட்சி மாநாட்டின் அடுத்தபடியாக, கடந்த வாரம், ஜனவரி 26ஆம் திகதி, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் சர்வகட்சி மாநாடு கூடியது. இதில் பலவிடயங்களை தனது பேச்சிலும் பதிலளிப்புகளிலும் ஜனாதிபதி குறிப்பிட்டிருந்தார். அவற்றிலிருந்து ஜனாதிபதி ரணிலின் இனப்பிரச்சினை தீர்வு தொடர்பான எண்ணம் பற்றிய மேலதிக தௌிவு புலப்படுகிறது. குறித்த சர்வகட்சி மாநாட்டில், ஜனாதிபதி ரணில், பின்வரும் விடயங்களைக் குறிப்பிட்டிருந்தமை, இங்கு கவனிக்கத்தக்கது: “அரசியலமைப்பின் 13ஆம் திருத்தம் முழுமையாக அமல்படுத்தப்படவேண்டும் அல்லது பாராளுமன்றம் 13ஆம் திர…

  18. போச்சுவார்த்தை என்ற போர்வைக்குள் இருந்து கொண்டு தமிழனை பிரத்தாளும் சூத்திரத்தை அரங்கேற்றிக் கொண்டிருந்த சிங்கள அரசியல்வாதி ரணிலை சந்தித்த தமிழ்நாட்டின் முதலமச்சர் விளக்கம் தருவாரா? ரணிலின் ஆட்சிக்காலத்தில் கருணாவை பிரிக்க முயற்சிகள் ஆரம்பித்தது அதில் ரணிலின் பங்கு என்பது ஒன்று இரகசியம் அல்ல. இந்த நிலையில் கருணாநிதி ரணிலை சந்தித்திருக்கிறார். சந்தித்தவர் இது பற்றி விளக்கங்கள் கேட்டாரா? இன்று மேசமடைந்த சூழ்நிலைக்கு கருணாவின் பிரிவினால் ஊக்குவிக்கப்பட்ட சிங்கள இனவாதத்தின் நிலைப்பாடு ஒரு காரணம் என்பதை உணரமுடியாதவரா கலைஞர் கருணாநிதி?

  19. ரணிலை தக்கவைக்க போராடும் அமெரிக்கா | அரசியல் களம் | போரியல் ஆய்வாளர் அருஸ்

    • 0 replies
    • 481 views
  20. ரணிலை புரிந்துகொள்வது அவசியம் - தெய்வீகன் நல்லாட்சி அரசு ஆட்சி பீடமேறி மகிந்தவின் கறைகளால் பீடிக்கப்பட்டிருக்கும் நாட்டை சீர்திருத்துவதில் கடந்த ஒரு வருடத்துக்கு மேலாக பல முயற்சிகளை மேற்கொண்டுவருவதை தொடர்ந்து காணக்கூடியதாக இருக்கிறது. இந்த முயற்சிகள் பெரும்பான்மை சமூகத்தையும் அவர்கள் சார்ந்த பிரதேசங்களையும் எவ்வளவு தூரம் முன்னேற்றியிருக்கிறது என்பதற்கு பல சான்றுகளை கூறலாம். ஆனால், எதிர்வரும் மே மாதத்துடன் போர் முடிந்த ஏழாவது ஆண்டை எட்டப்போகும் தமிழ்மக்களுக்கு தாம் கொடுக்கப்போவதாக அறிவித்த தீர்வு மற்றும் அபிவிருத்தி ஆகியவற்றில் எவ்வளவு தூரம் சிங்கள தேசம் உண்மையாக நடந்திருக்கிறது என்ற மிகப்பெரிய கேள்வி தொடர்ந்து தொங்கியவண்ணமே உள்ளது. இது விடயத…

  21. ரணிலைக் காப்­பாற்­றுமா கூட்­ட­மைப்பு? என்.கண்ணன் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணையை மஹிந்த ராஜபக் ஷவின் ஆத­ரவு கூட்டு எதி­ரணி சபா­நா­ய­க­ரிடம் சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்­ளதன் மூலம், இன்­னொரு அர­சியல் குழப்­பத்­துக்கு பிள்­ளையார் சுழி போடப்­பட்­டி­ருக்­கி­றது. உள்­ளூ­ராட்சித் தேர்­தலில் மஹிந்த ராஜபக் ஷவின் ஸ்ரீலங்கா பொது­ஜன முன்­னணி வெற்றி பெற்ற பின்னர், ஆட்­சியைக் கவிழ்ப்­ப­தற்­கான ஒரு முயற்சி மேற்­கொள்­ளப்­பட்­டது. முதலில் கூட்டு ஆட்­சியைக் கவிழ்க்க மேற்­கொள்­ளப்­பட்ட முயற்சி தோற்­றுப்­போக, கடை­சியில் அது பிர­த­ம­ருக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணை­யாக மாறி­யது. …

  22. ரணிலைக் காப்பாற்றுவதா கூட்டமைப்பின் வேலை? கடந்த சில நாட்களாக தென்னிலங்கையில் சஜித் பிரேமதாஸவின் படங்களைத் தாங்கிய விளம்பரத் தட்டிகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக முளைப்பதைக் காணக்கூடியதாக இருக்கின்றன. சுமார் 72 ஆண்டுகள் வரலாற்றைக் கொண்ட ஐக்கிய தேசியக் கட்சி, கால்நூற்றாண்டுக்குப் பிறகு, புதிய தலைமைத்துவமொன்றை நோக்கிச் செல்லும் காட்சிகளின் பிரதிபலிப்பாகவே இதைக் கொள்ள முடியும். கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகள், நாடு பூராவுமே பல்வேறு அரசியல் மாற்றங்களை ஏற்படுத்தி விட்டிருக்கின்றன. அதுவே, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நிலைப்பாட்டைத் தேசிய அரசாங்கத்துக்குள்ளும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடமும் எதிர்பார்த்த அளவையும…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.